Divya Prabhandam Tamilischer Text Teil 1

Aus Yogawiki

Der erste Teil des Divya Prabhandam in tamilischer Schrift umfasst die Haupttextnummern 1–2031. Er beginnt mit Periyalvars Segensruf, führt durch die Lieder Andals und weiterer Alvars und enthält die vollständige Periya Tirumoli des Tirumangai Alvar. Mütterliche Zärtlichkeit, Sehnsucht und Lobpreis lassen viele Gestalten der Hingabe hörbar werden.

Für tamilische Hindus in Deutschland kann das gemeinsame Lesen eine lebendige Verbindung zwischen Sprache, Familie und religiöser Praxis schaffen. Wer die Schrift lernt, darf mit einzelnen Zeilen beginnen und die Umschrift oder deutsche Lesefassung hinzunehmen. Entscheidend ist die aufmerksame Begegnung mit den Liedern, nicht die Geschwindigkeit.

Die verschiedenen Namen und Tempelgestalten des verehrten Herrn gehören zum religiösen Erfahrungsraum der Hymnen. Beim Lesen können Fragen und Erinnerungen miteinander geteilt werden. So bleibt die Dichtung offen für die Stimmen verschiedener Generationen.

Der tamilische Wortlaut bewahrt die sprachliche Heimat dieser Lieder. In einer Familie können ältere und jüngere Menschen einander beim Lesen helfen, Erinnerungen erzählen und gemeinsam fragen, was ein Bild der Hymnen bedeutet. Die deutsche Übersetzung im Hauptartikel und die Umschrift begleiten diese Begegnung.

Vishnu: Die Hymnen verbinden göttliche Größe mit persönlicher Nähe.

Die Artikel dieser Ausgabe

Tiruppallandu (1–12)

(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (1)

(2)
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே         (1)

(3)
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே         (2)

(4)
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே         (3)

(5)
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
லாயிரத்தாண்டு என்மினே         (4)

(6)
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே         (5)

(7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே         (6)

(8)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே         (7)

(9)
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே         (8)

(10)
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே         (9)

(11)
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே         (10)

(12)
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே         (11)

Periyalvar Tirumoli (13–473)

Lesebereich 13–112

(13)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே (1)

(14)
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே (2)

(15)
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே (3)

(16)
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே (4)

(17)
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார் (5)

(18)
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே (6)

(19)
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே (7)

(20)
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே (8)

(21)
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய (9)

(22)
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே (10)

(23)
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே (1)

(24)
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்து காணீரே (2)

(25)
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே (3)

(26)
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகிழ்முலையீர் வந்து காணீரே (4)

(27)
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே (5)

(28)
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
முகிழ்நகையீர் வந்து காணீரே (6)

(29)
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
வாணுதலீர் வந்து காணீரே (7)

(30)
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
ஒளியிழையீர் வந்து காணீரே (8)

(31)
அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்து காணீரே (9)

(32)
பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே (10)

(33)
நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள் கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே
சுரிகுழலீர் வந்து காணீரே (11)

(34)
மைத் தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே
கனங்குழையீர் வந்து காணீரே (12)

(35)
வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே (13)

(36)
எம் தொண்டை வாய்ச் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அந் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர்
தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகும் இச்
செந் தொண்டை வாய் வந்து காணீரே
சேயிழையீர் வந்து காணீரே (14)

(37)
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
மொய்குழலீர் வந்து காணீரே (15)

(38)
விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர்தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே
கனவளையீர் வந்து காணீரே (16)

(39)
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்யத்
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணிவண்ணன்
புருவம் இருந்தவா காணீரே
பூண்முலையீர் வந்து காணீரே (17)

(40)
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில்கொள் மகரக்குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே
சேயிழையீர் வந்து காணீரே (18)

(41)
முற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும்
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களைப்
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவா காணீரே
நேரிழையீர் வந்து காணீரே (19)

(42)
அழகிய பைம்பொன்னின் கோல் அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே (20)

(43)
சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாதகேசத்தைத் தென்புதுவைப் பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (21)

(44)
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ (1)

(45)
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடும்
விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ
உலகம் அளந்தானே தாலேலோ (2)

(46)
என்தம்பிரானார் எழிற் திருமார்வற்குச்
சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு
இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக் கண்ணனே தாலேலோ (3)

(47)
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ (4)

(48)
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ
தூமணி வண்ணனே தாலேலோ (5)

(49)
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மா தக்க என்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ
சுந்தரத் தோளனே தாலேலோ (6)

(50)
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல் அழேல் தாலேலோ
குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)

(51)
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்
நச்சுமுலை உண்டாய் தாலேலோ
நாராயணா அழேல் தாலேலோ (8)

(52)
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா அழேல் அழேல் தாலேலோ
அரங்கத்து அணையானே தாலேலோ (9)

(53)
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே (10)

(54)
தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ (1)

(55)
என் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா (2)

(56)
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா (3)

(57)
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலைமேல் இருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் (4)

(58)
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற
மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூகின்றான்
குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்
புழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ (5)

(59)
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்
கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில்
விண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா (6)

(60)
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா (7)

(61)
சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்
நிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான் (8)

(62)
தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்
ஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா (9)

(63)
மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே (10)

(64)
உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (1)

(65)
கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்
குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி
மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்
காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்
கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (2)

(66)
நம்முடை நாயகனே நான்மறையின் பொருளே
நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்
தம்மனை ஆனவனே தரணி தலமுழுதும்
தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (3)

(67)
வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள
வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்
கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (4)

(68)
மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை
ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்
முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்
முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (5)

(69)
காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா
கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே
தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா
துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (6)

(70)
துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய
நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய
நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே         (7)

(71)
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி
உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர
கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ்
சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே         (8)

(72)
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே         (9)

(73)
செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்
சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்
மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே         (10)

(74)
அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்
ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு
ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்
இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார் உலகில்
எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே (11)

(75)
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப் பொன்னாற் செய்த ஆய்பொன் உடை மணி
பேணி பவளவாய் முத்துஇலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழற் குட்டனே சப்பாணி (1)

(76)
பொன் அரைநாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன் அரை ஆட தனிச் சுட்டி தாழ்ந்து ஆட
என் அரை மேல்நின்று இழிந்து உங்கள் ஆயர்தம்
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி
மாயவனே கொட்டாய் சப்பாணி (2)

(77)
பல் மணி முத்து இன்பவளம் பதித்தன்ன
என் மணிவண்ணன் இலங்கு பொற் தோட்டின் மேல்
நின் மணிவாய் முத்து இலங்க நின் அம்மைதன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி
ஆழியங் கையனே சப்பாணி (3)

(78)
தூ நிலாமுற்றத்தே போந்து விளையாட
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நிற் புகழாநின்ற ஆயர்தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி
குடந்தைக் கிடந்தானே சப்பாணி (4)

(79)
புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
பற்பநாபா கொட்டாய் சப்பாணி (5)

(80)
தாரித்து நூற்றுவர் தந்தை சொற் கொள்ளாது
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி
தேவகி சிங்கமே சப்பாணி (6)

(81)
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரை மோதக்
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச்
சரந் தொட்ட கைகளால் சப்பாணி
சார்ங்க விற்கையனே சப்பாணி (7)

(82)
குரக்கு இனத்தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங் கையனே சப்பாணி (8)

(83)
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய் முலை உண்டானே சப்பாணி (9)

(84)
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறு ஆகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே சப்பாணி (10)

(85)
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தம் கோவினை
நாட்கமழ் பூம்பொழில் வில்லிபுத்தூர்ப் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போதுமே (11)

(86)
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ (1)

(87)
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்
சிறுபிறை முளைப் போல
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே
நளிர் வெண்பல் முளை இலக
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி
பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
தளர்நடை நடவானோ (2)

(88)
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்
சூழ் பரிவேடமுமாய்ப்
பின்னற் துலங்கும் அரசிலையும்
பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்
கழுத்தினிற் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடிகேசன்
தளர்நடை நடவானோ (3)

(89)
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கணகண சிரித்து உவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் என்
முகில்வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்
தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர்நடை நடவானோ (4)

(90)
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்
மொடுமொடு விரைந்து ஓடப்
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்
பெயர்ந்து அடியிடுவது போல்
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்
பலதேவன் என்னும்
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்
தளர்நடை நடவானோ (5)

(91)
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்
உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்
பின்னையும் பெய்து பெய்து
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை
தளர்நடை நடவானோ (6)

(92)
படர் பங்கைய மலர்வாய் நெகிழப்
பனி படு சிறுதுளி போல்
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி
இற்று இற்று வீழநின்று
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்
உடை மணி கணகணென
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி
தளர்நடை நடவானோ (7)

(93)
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே
அருவிகள் பகர்ந்தனைய
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ
அணி அல்குல் புடை பெயர
மக்கள் உலகினிற் பெய்து அறியா
மணிக் குழவி உருவின்
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்
தளர்நடை நடவானோ (8)

(94)
வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்
வேழத்தின் கருங்கன்று போல்
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்
சிறு புகர்பட வியர்த்து
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால் உறைத்து
ஒன்றும் நோவாமே
தண் போது கொண்ட தவிசின் மீதே
தளர்நடை நடவானோ (9)

(95)
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்
செங்கண்மால் கேசவன் தன்
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி
திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்
பெரியதோர் தீர்த்த பலம்
தரு நீர்ச் சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்
தளர்நடை நடவானோ (10)

(96)
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
அஞ்சனவண்ணன் தன்னைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே (11)

(97)
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறங் கட்டித்
தன் இயல் ஓசை சலன்-சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர் வந்தாற்போல்
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ
எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (1)

(98)
செங்கமலப் பூவிற் தேன் உண்ணும் வண்டே போல்
பங்கிகள் வந்து உன் பவளவாய் மொய்ப்ப
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ (2)

(99)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோ அச்சோ
ஆயர் பெருமானே அச்சோ அச்சோ (3)

(100)
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத்
தேறி அவளும் திருவுடம்பிற் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோ அச்சோ
எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ (4)

(101)
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும்
சுழலை பெரிது உடைத் துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோ அச்சோ
ஆழி அங் கையனே அச்சோ அச்சோ (5)

(102)
போர் ஒக்கப் பண்ணி இப் பூமிப்பொறை தீர்ப்பான்
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
கார் ஒக்கு மேனிக் கரும் பெருங் கண்ணனே
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ
ஆயர்கள் போரேறே அச்சோ அச்சோ (6)

(103)
மிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியிற்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற் கிளறிய
சக்கரக் கையனே அச்சோ அச்சோ
சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ (7)

(104)
என் இது மாயம்? என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானிற் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ அச்சோ
வேங்கடவாணனே அச்சோ அச்சோ (8)

(105)
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
முண்டத்துக்கு ஆற்றா முகில்வண்ணா ஓ என்று
இண்டைச் சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோ அச்சோ
மார்வில் மறுவனே அச்சோ அச்சோ (9)

(106)
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திடப்
பின் இவ் உலகினில் பேரிருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே அச்சோ அச்சோ
அருமறை தந்தானே அச்சோ அச்சோ (10)

(107)
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன
மச்சு அணி மாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே (11)

(108)
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க-
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான் (1)

(109)
கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினிற்
கங்கணம் இட்டுக் கழுத்திற் தொடர் கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (2)

(110)
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் (3)

(111)
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (4)

(112)
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடிக்
கண் பல பெய்த கருந்தழைக் காவின் கீழ்ப்
பண் பல பாடிப் பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான்
வாமனன் என்னைப் புறம்புல்குவான் (5)

Lesebereich 113–212

(113)
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனைக்
கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான்
பார் அளந்தான் என் புறம்புல்குவான் (6)

(114)
பொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்
ஆழியான் என்னைப் புறம்புல்குவான் (7)

(115)
மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் (8)

(116)
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள்
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் (9)

(117)
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான் புறம்புல்கிய
வேய்த் தடந்தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நன்மக்களைப் பெற்று மகிழ்வரே (10)

(118)
மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
பொய்ச் சூதிற் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1)

(119)
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (2)

(120)
காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்
தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3)

(121)
இருட்டிற் பிறந்து போய் ஏழை வல் ஆயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப்
புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (4)

(122)
சேப் பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (5)

(123)
செப்பு இள மென்முலைத் தேவகி நங்கைக்குச்
சொப்படத் தோன்றி தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6)

(124)
தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்
கொத்து ஆர் கருங்குழற் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7)

(125)
கொங்கை வன் கூனிசொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன்கான் அடை
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (8)

(126)
பதக முதலைவாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவப் புள் ஊர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9)

(127)
வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல் ஆர்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே (10)

(128)
அரவு அணையாய் ஆயர் ஏறே
அம்மம் உண்ணத் துயிலெழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய்
இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்
வன முலைகள் சோர்ந்து பாயத்
திரு உடைய வாய்மடுத்துத்
திளைத்து உதைத்துப் பருகிடாயே (1)

(129)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
வடி தயிரும் நறு வெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன்
எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய்;
ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து
மூக்கு உறிஞ்சி முலை உணாயே (2)

(130)
தந்தம் மக்கள் அழுது சென்றால்
தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேற் பூசல் செய்ய
வாழ வல்ல வாசுதேவா
உந்தையார் உன்திறத்தர் அல்லர்
உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்
நந்தகோபன் அணி சிறுவா
நான் சுரந்த முலை உணாயே (3)

(131)
கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
கள்ளச் சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல்லடியால்
பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர் கோவே
ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால்
வலைப்படுத்தாய் முலை உணாயே (4)

(132)
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்
சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயந்தன்னால் வலைப்படுக்கில்
வாழகில்லேன் வாசுதேவா
தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்
சாற்றிச் சொன்னேன் போகவேண்டா
ஆயர் பாடிக்கு அணிவிளக்கே
அமர்ந்து வந்து என் முலை உணாயே (5)

(133)
மின் அனைய நுண் இடையார்
விரி குழல்மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர்
இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த
இருடிகேசா முலை உணாயே (6)

(134)
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்
பெறுதும் என்னும் ஆசையாலே
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்
கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டு உலாம் பூங்குழலினார் உன்
வாயமுதம் உண்ண வேண்டிக்
கொண்டு போவான் வந்து நின்றார்
கோவிந்தா நீ முலை உணாயே (7)

(135)
இரு மலை போல் எதிர்ந்த மல்லர்
இருவர் அங்கம் எரிசெய்தாய் உன்
திரு மலிந்து திகழு மார்வு
தேக்க வந்து என் அல்குல் ஏறி
ஒரு முலையை வாய்மடுத்து
ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறை முறையாய்
ஏங்கி ஏங்கி இருந்து உணாயே (8)

(136)
அங் கமலப் போதகத்தில்
அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்
செங் கமல முகம் வியர்ப்ப
தீமை செய்து இம் முற்றத்தூடே
அங்கம் எல்லாம் புழுதியாக
அளைய வேண்டா அம்ம விம்ம
அங்கு அமரர்க்கு அமுது அளித்த
அமரர் கோவே முலை உணாயே (9)

(137)
ஓட ஓடக் கிண்கிணிகள்
ஒலிக்கும் ஓசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப்
பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு
அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி
ஓடி ஒடிப் போய்விடாதே
உத்தமா நீ முலை உணாயே (10)

(138)
வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி
மாதவா உண் என்ற மாற்றம்
நீர் அணிந்த குவளை வாசம்
நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்
பார் அணிந்த தொல் புகழான்
பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல்
சென்ற சிந்தை பெறுவர் தாமே (11)

(139)
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்
பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (1)

(140)
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத
நாராயணா இங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை
எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய
கனகக் கடிப்பும் இவையாம் (2)

(141)
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
மகரக்குழை கொண்டுவைத்தேன்
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ
வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய
ஒண்சுடர் ஆயர்கொழுந்தே
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து
மாதவனே இங்கே வாராய் (3)

(142)
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
வார்காது தாழப் பெருக்கிக்
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்
கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்
இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்
சோத்தம் பிரான் இங்கே வாராய் (4)

(143)
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய்
சுரிகுழலாரொடு நீ போய்க்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்
குணங்கொண்டு இடுவனோ? நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
பிரானே திரியிட ஒட்டில்
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்
விட்டுவே நீ இங்கே வாராய் (5)

(144)
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில்
விரும்பி அதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி
மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன்காது மறியும்
பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா
காவலனே முலை உணாயே (6)

(145)
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி
காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா
திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)

(146)
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்
என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்
அனைவர்க்கும் காட்டிற்றிலையே?
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன
நம்பீ உன்காதுகள் தூரும்
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8)

(147)
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்
காணவே கட்டிற்றிலையே?
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
சிரீதரா உன்காது தூரும்
கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற
காரிகையார் சிரியாமே (9)

(148)
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
காதுகள் வீங்கி எரியில்?
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று
விட்டிட்டேன் குற்றமே அன்றே?
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
இருடிகேசா என்தன் கண்ணே <10>

(149)
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்
பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும்
நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
பற்பநாபா இங்கே வாராய் (11)

(150)
வா என்று சொல்லி என்கையைப் பிடித்து
வலியவே காதிற் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?
காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டுவைத்தேன் இவை காணாய்
நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட
தாமோதரா இங்கே வாராய் (12)

(151)
வார் காது தாழப் பெருக்கி அமைத்து
மகரக்குழை இட வேண்டிச்
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்
சிந்தையுள் நின்று திகழப்
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்
பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்
அச்சுதனுக்கு அடியாரே (13)

(152)
வெண்ணெய் அளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
நாரணா நீராட வாராய் (1)

(153)
கன்றுகள் ஓடச் செவியிற்
கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்
நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்
எம்பிரான் ஓடாதே வாராய் (2)

(154)
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி
கடாரத்திற் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா
மஞ்சனம் ஆட நீ வாராய் (3)

(155)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
அழகனே நீராட வாராய் (4)

(156)
அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல் நம்பி
செப்பு இள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
சோத்தம் பிரான் இங்கே வாராய் (5)

(157)
எண்ணெய்க் குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடல் ஓதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
மஞ்சனம் ஆட நீ வாராய் (6)

(158)
கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய் (7)

(159)
கன்றினை வால் ஓலை கட்டி
கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
நாரணா ஓடாதே வாராய் (8)

(160)
பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
மஞ்சனம் ஆட நீ வாராய் (9)

(161)
கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே (10)

(162)
பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை
முன்னை அமரர் முதற் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (1)

(163)
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்
தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (2)

(164)
திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் (3)

(165)
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்
பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்         (4)

(166)
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்
ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் (5)

(167)
கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழிஅதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்
கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய் (6)

(168)
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்
மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய் (7)

(169)
உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்
சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்
தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய் (8)

(170)
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப்
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்
பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் (9)

(171)
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே (10)

(172)
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா
கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (1)

(173)
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2)

(174)
கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (3)

(175)
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக்
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா
கடல்-நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா (4)

(176)
சீர் ஒன்று தூதாய்த் திரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா (5)

(177)
ஆலத்து இலையான் அரவின் அணை மேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (6)

(178)
பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா (7)

(179)
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன் வீழத்
தன் நிகர் ஒன்று இல்லாச் சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா
வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா (8)

(180)
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கும் நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா
வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா (9)

(181)
அக்காக்காய் நம்பிக்குக் கோல் கொண்டு வா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர்ப் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே (10)

(182)
ஆனிரை மேய்க்க நீ போதி
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன்
கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே
செண்பகப் பூச் சூட்ட வாராய் (1)

(183)
கரு உடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்
உரு உடையாய் உலகு ஏழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா
திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச் சூட்ட வாராய் (2)

(184)
மச்சொடு மாளிகை ஏறி
மாதர்கள்தம் இடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்து
காம்பு துகில் அவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய்
நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு
பாதிரிப் பூச் சூட்ட வாராய் (3)

(185)
தெருவின்கண் நின்று இள ஆய்ச்சி
மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர்
மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்-கன்று போலே
உருவம் அழகிய நம்பீ
உகந்து இவை சூட்ட நீ வாராய் (4)

(186)
புள்ளினை வாய் பிளந்திட்டாய்
பொரு கரியின் கொம்பு ஒசித்தாய்
கள்ள அரக்கியை மூக்கொடு
காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க
அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரில் எழுந்த
செங்கழுநீர் சூட்ட வாராய் (5)

(187)
எருதுகளோடு பொருதி
ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)

(188)
குடங்கள் எடுத்து ஏற விட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதிமுகத்தாரை
மால்செய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை
இரு பிளவு ஆக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே
குருக்கத்திப் பூச் சூட்ட வாராய் (7)

(189)
சீமாலிகன் அவனோடு
தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச்
சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே
அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்
இருவாட்சிப் பூச் சூட்ட வாராய் (8)

(190)
அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும்
ஓர் ஆலிலையிற் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்கக்
கருமுகைப் பூச் சூட்ட வாராய் (9)

(191)
செண்பக மல்லிகையோடு
செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி
மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன்
பட்டர்பிரான் சொன்ன பத்தே (10)

(192)
இந்திரனோடு பிரமன்
ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு
மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும்
சதுரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும்
அழகனே காப்பிட வாராய் (1)

(193)
கன்றுகள் இல்லம் புகுந்து
கதறுகின்ற பசு எல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி
நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது
மதிற் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு
நான் உன்னைக் காப்பிட வாராய் (2)

(194)
செப்பு ஓது மென்முலையார்கள்
சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய்
அடிசிலும் உண்டிலை ஆள்வாய்
முப் போதும் வானவர் ஏத்தும்
முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
எம்பிரான் காப்பிட வாராய் (3)

(195)
கண்ணில் மணல்கொடு தூவிக்
காலினால் பாய்ந்தனை என்று என்று
எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு
-இவர் ஆர்?- முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய்
கண்டாரொடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்
வள்ளலே காப்பிட வாராய் (4)

(196)
பல்லாயிரவர் இவ் ஊரில்
பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது
எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்
ஞானச் சுடரே உன்மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்
சொப்படக் காப்பிட வாராய் (5)

(197)
கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
கரு நிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான்
என்பது ஓர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட
மதிற் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
அழகனே காப்பிட வாராய் 6

(198)
கள்ளச் சகடும் மருதும்
கலக்கு அழிய உதைசெய்த
பிள்ளையரசே நீ பேயைப்
பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன்
ஒளியுடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும்
பரமனே காப்பிட வாராய் (7)

(199)
இன்பம் அதனை உயர்த்தாய்
இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறு அட்ட கோவே
கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம்பொன் மதில் வெள்ளறையாய்
செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்கு
கடிது ஓடிக் காப்பிட வாராய் (8)

(200)
இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு
எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று
தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த
தேசு உடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று
ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் (9)

(201)
போது அமர் செல்வக்கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே (10)

(202)
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற
அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (1)

(203)
வருக வருக வருக இங்கே
வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம்
காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய்
அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே (2)

(204)
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்
உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை அநியாயம்
செய்வதுதான் வழக்கோ? அசோதாய்
வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய்
வாழ ஒட்டான் மதுசூதனனே (3)

(205)
கொண்டல்வண்ணா இங்கே போதராயே
கோயிற் பிள்ளாய் இங்கே போதராயே
தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த
திருநாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி
ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான் கற்ற கல்வி தானே (4)

(206)
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டிச்
சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக் கரும்பின் மொழி அனைய
அசோதை நங்காய் உன்மகனைக் கூவாய் (5)

(207)
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்
போதரேன் என்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசலகத்தார்
ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன்
கோதுகலம் உடைக்குட்டனேயோ
குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா
வேதப் பொருளே என் வேங்கடவா
வித்தகனே இங்கே போதராயே 6

(208)
செந்நெல் அரிசி சிறு பருப்புச்
செய்த அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பண்டும் இப் பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (7)

(209)
கேசவனே இங்கே போதராயே
கில்லேன் என்னாது இங்கே போதராயே
நேசம் இலாதார் அகத்து இருந்து
நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்
தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்
தாமோதரா இங்கே போதராயே (8)

(210)
கன்னல் இலட்டுவத்தோடு சீடை
காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன்
இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப்
பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை அசோதை நங்காய்
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (9)

(211)
சொல்லில் அரசிப் படுதி நங்காய்
சூழல் உடையன் உன்பிள்ளை தானே
இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
கையில் வளையைக் கழற்றிக்கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கு ஒருத்திக்கு அவ் வளை கொடுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு
நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே (10)

(212)
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணையடி என்தலை மேலனவே (11)

Lesebereich 213–312

(213)
ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச்
சேற்றால் எறிந்து வளை துகிற் கைக்கொண்டு
காற்றிற் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும்
வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (1)

(214)
குண்டலம் தாழ குழல் தாழ நாண் தாழ
எண் திசையோரும் இறைஞ்சித் தொழுது ஏத்த
வண்டு அமர் பூங்குழலார் துகிற் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்
வேண்டவும் தாரானால் இன்று முற்றும் (2)

(215)
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும் (3)

(216)
தேனுகன் ஆவி செகுத்துப் பனங்கனி
தான் எறிந்திட்ட தடம் பெருந்தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும்
அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும் (4)

(217)
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் (5)

(218)
தள்ளித் தளர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கிக
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் (6)

(219)
மாவலி வேள்வியில் மாண் உருவாய்ச் சென்று
மூவடி தா என்று இரந்த இம் மண்ணினை
ஒரடி இட்டு இரண்டாம் அடிதன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் (7)

(220)
தாழை தண்-ஆம்பற் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் (8)

(221)
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத்து உருவாய் இடந்த இம் மண்ணினைத்
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி இடந்தானால் இன்று முற்றும் (9)

(222)
அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே (10)

(223)
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
தளர்நடைஇட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு
புள்ளுவன் பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (1)

(224)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப்
போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (2)

(225)
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ உன்னை
என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (3)

(226)
மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
புத்தகத்துக்கு உள கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (4)

(227)
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயி
னோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
விம்மி விம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (5)

(228)
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி
வீழ எறிந்த பிரானே
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6)

(229)
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
சுற்றும் தொழ நின்ற சோதி
பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப்
பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (7)

(230)
வாளா ஆகிலும் காணகில்லார் பிறர்
மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ
சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (8)

(231)
தாய்மார் மோர் விற்கப் போவர் தமப்பன்மார்
கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
கண்டார் கழறத் திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (9)

(232)
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை
உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு
அஞ்சுவன் அம்மம் தரவே (10)

(233)
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்
அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்
இருடிகேசன் அடியாரே (11)

(234)
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை
மஞ்சனம் ஆட்டி மனைகள்தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின்பின்
என்செயப் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (1)

(235)
பற்றுமஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்? எல்லே பாவமே (2)

(236)
நன்மணி மேகலை நங்கைமாரொடு நாள்தொறும்
பொன்மணி மேனி புழுதியாடித் திரியாமே
கல்மணி நின்று அதிர் கான்- அதரிடைக் கன்றின்பின்
என் மணிவண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே (3)

(237)
வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
பண்ணிப் பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானைக் கான் -அதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கு அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே (4)

(238)
அவ்வவ் இடம் புக்கு அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வும் சிலை உடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (5)

(239)
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய்ப்
படிறு பல செய்து இப் பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கான் -அதரிடைக் கன்றின் பின்
இடற என்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே (6)

(240)
வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே (7)

(241)
பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானிற் கன்றின் பின்
என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே (8)

(242)
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான்
உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடைக்
கடிய வெங் கானிடைக் கால்- அடி நோவக் கன்றின் பின்
கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்:எல்லே பாவமே (9)

(243)
என்றும் எனக்கு இனியானை என் மணிவண்ணனைக்
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய
பொன் திகழ் மாடப் புதுவையர்கோன் பட்டன் சொல்
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே (10)

(244)
சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது
செந்நிற மேற் தோன்றிப்பூ
கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்
குளிர் முத்தின் கோடாலமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன்
வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்
நானே மற்று ஆரும் இல்லை (1)

(245)
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற்
காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா
பாவியேன் வாழ்வு உகந்து
உன்னை இளங்கன்று மேய்க்கச் சிறுகாலே
ஊட்டி ஒருப்படுத்தேன்
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை
என்குட்டனே முத்தம் தா (2)

(246)
காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
உன்னோடு உடனே உண்பான் (3)

(247)
கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும்
போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்
கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன
சிறுக்குட்டச் செங் கமல-
அடியும் வெதும்பி உன்கண்கள் சிவந்தாய்
அசைந்திட்டாய் நீ எம்பிரான் (4)

(248)
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை
வாய்வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
சிறுக்குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை
கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
கலந்து உடன் வந்தாய் போலும் (5)

(249)
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும்
அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
நான் உயிர் வாழ்ந்திருந்தேன்
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?
ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்
காயாம்பூ வண்ணம் கொண்டாய் (6)

(250)
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய
பாற்கடல் வண்ணா உன்மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த
கள்ள அசுரர் தம்மைச்
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்
அங்ஙனம் ஆவர்களே (7)

(251)
கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா
கோவலர் இந்திரற்குக்
காட்டிய சோறும் கறியும் தயிரும்
கலந்து உடன் உண்டாய் போலும்
ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு
ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா உன்னை
அஞ்சுவன் இன்று தொட்டும் (8)

(252)
திண் ஆர் வெண்சங்கு உடையாய் திருநாள் திரு
வோணம் இன்று எழு நாள்;முன்
பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தது
அரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்
கோலம் செய்து இங்கே இரு (9)

(253)
புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன்
புத்திரன் கோவிந்தனைக்
கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து அவள்
கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென்புது
வை விட்டுசித்தன் சொல்
கற்று இவை பாட வல்லார் கடல்வண்ணன்
கழலிணை காண்பர்களே (10)

(254)
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்
தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமும் ஆகி எங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்றது என்று சொல்லி
மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்
உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே (1)

(255)
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
வசை அறத் திருவரை விரித்து உடுத்து
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி
பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே
முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே (2)

(256)
சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்
மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட
ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்
அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே (3)

(257)
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்
கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு
என்றும் இவனை ஒப்பாரை நங்காய்
கண்டறியேன் ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில்லா வளை கழன்று துகில்
ஏந்து இள முலையும் என் வசம் அலவே (4)

(258)
சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்
சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே
பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப் பின்
மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே (5)

(259)
சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்
திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்
வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச
அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை
அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்
பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6)

(260)
சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்
தன் திருமேனிநின்று ஒளி திகழ
நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால்
அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே
கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்
குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே (7)

(261)
சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்
திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்
அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை
அழகிய நேத்திரத்தால் அணிந்து
இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை
எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்
துகிலொடு சரிவளை கழல்கின்றதே (8)

(262)
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
மல்லிகை வனமாலை மௌவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி
அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை
அழகு கண்டு என்மகள்
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்
வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே (9)

(263)
விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ
மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக்
கண்டு இளஆய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே (10)

(264)
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (1)

(265)
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்
வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப
மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி
இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2)

(266)
அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப
இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்
புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3)

(267)
கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (4)

(268)
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல்
அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை
இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களி-யானை தன் கொம்பு இழந்து
கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (5)

(269)
செப்பாடு உடைய திருமால் அவன் தன்
செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி
இலங்கு மணி முத்துவடம் பிறழக்
குப்பாயம் என நின்று காட்சிதரும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (6)

(270)
படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7)

(271)
சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8)

(272)
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்
தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (9)

(273)
கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்
கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல
மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்
முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10)

(274)
அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
அரவப்-பகை ஊர்தி அவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்
திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே (11)

(275)
நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால்
தூய வாயிற் குழல்-ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை
குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறுமாலை
ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே (1)

(276)
இட அணரை இடத் தோளொடு சாய்த்து
இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்
குடவயிறு பட வாய் கடைகூடக்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
மட மயில்களொடு மான்பிணை போலே
மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி
ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே (2)

(277)
வான் இளவரசு வைகுந்தக்
குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி
மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்
தேன் அளவு செறி கூந்தல் அவிழச்
சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3)

(278)
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்
தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்
கானகம் படி உலாவி உலாவிக்
கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை
உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி
ஆடல் பாடல் இவை மாறினர் தாமே (4)

(279)
முன் நரசிங்கமது ஆகி அவுணன்
முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்
குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு
நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம் தொடுகிலோம் என்றனரே (5)

(280)
செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்
கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே (6)

(281)
புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத
அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்
செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே (7)

(282)
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்
கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே (8)

(283)
திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்
செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழல்-ஓசை வழியே
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே (9)

(284)
கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதின போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே (10)

(285)
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே (11)

(286)
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள்
பேச்சும் அலந்தலையாய்ச்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன்
உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறுதூதை யோடு இவள்
முற்றில் பிரிந்தும் இலள்
பை அரவணைப் பள்ளியானொடு
கைவைத்து இவள்வருமே (1)

(287)
வாயிற் பல்லும் எழுந்தில மயி
ரும் முடி கூடிற்றில
சாய்வு இலாத குறுந்தலைச் சில
பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே (2)

(288)
பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்
முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்
அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
தட்டுளுப்பு ஆகின்றதே (3)

(289)
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்
பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த
சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழ மோழையில்
பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும்
மூதுரையும் இலளே (4)

(290)
நாடும் ஊரும் அறியவே போய்
நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
சோதித்து உழிதர்கின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
கேசவனோடு இவளைப்
பாடிகாவல் இடுமின் என்று என்று
பார் தடுமாறினதே (5)

(291)
பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
பாடகமும் சிலம்பும்
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
பூவைப் பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
மால் உறுகின்றாளே (6)

(292)
பேசவும் தரியாத பெண்மையின்
பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்
கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும்
கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார்குழல் மங்கைமீர் இவள்
மால் உறுகின்றாளே 7

(293)
காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கையில் வளை குலுக்கும்
கூறை உடுக்கும் அயர்க்கும் தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே (8)

(294)
கைத்தலத்து உள்ள மாடு அழியக்
கண்ணாலங்கள் செய்து இவளை-
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்?
நம்மை வடுப்படுத்தும்-
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்
செய்வன செய்துகொள்ள
மைத் தடமுகில் வண்ணன் பக்கல்
வளர விடுமின்களே (9)

(295)
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க
இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இடுமின் இவளை
உலகளந்தான் இடைக்கே (10)

(296)
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்
நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று
தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்
விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு
இல்லை வரு துயரே (11)

(297)
நல்லது ஓர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல் பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தால் ஒத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரை அட்டவன் பின்போய்
மதுரைப் புறம் புக்காள் கொல்லோ? (1)

(298)
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே
கன்னி இருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான்
நாராயணன் செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்கு ஓர்
ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ? (2)

(299)
குமரி மணம் செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோதரற்கு என்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொல்லோ? (3)

(300)
ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண் மால் தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து
மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ? (4)

(301)
தம் மாமன் நந்தகோபாலன்
தழீஇக் கொண்டு என் மகள் தன்னைச்
செம்மாந்திரே என்று சொல்லி
செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம் மகளைப் பெற்ற தாயர்
இனித் தரியார் என்னுங் கொல்லோ? (5)

(302)
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்து என்மகளைக்
கூடிய கூட்டமே யாகக்
கொண்டு குடி வாழுங் கொல்லோ?
நாடும் நகரும் அறிய
நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இறப் பாய்ந்த பெருமான்
தக்கவா கைப்பற்றுங் கொல்லோ? (6)

(303)
அண்டத்து அமரர் பெருமான்
ஆழியான் இன்று என்மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகாவல் வைக்குங் கொல்லோ? (7)

(304)
குடியிற் பிறந்தவர் செய்யும்
குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
கடைகயிறே பற்றி வாங்கிக்
கை தழும்பு ஏறிடுங் கொல்லோ? (8)

(305)
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
வெள்வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து
கடையவும் தான்வல்லள் கொல்லோ?
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந்தான் என்மகளைப்
பண் அறையாப் பணிகொண்டு
பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ? (9)

(306)
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைப் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணிவண்ணனுக்கு ஆளரே (10)

(307)
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1)

(308)
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)

(309)
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)

(310)
மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற (4)

(311)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)

(312)
முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)

Lesebereich 313–412

(313)
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம்செய்து
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்-வலி வீரமே பாடிப் பற
தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)

(314)
தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு- இடைச்
சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)

(315)
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9)

(316)
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன்தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)

(317)
நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று
உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்குஅல்லல் இல்லையே (11)

(318)
நெறிந்த கருங்குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது
அறிந்து அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் (1)

(319)
அல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் (2)

(320)
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழியக்
குலக்குமரா காடு உறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் (3)

(321)
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேர் அணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கைதன்னிற்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் (4)

(322)
மான் அமரும் மென்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கான் அமரும் கல்-அதர் போய்க் காடு உறைந்த காலத்துத்
தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்பப்
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் (5)

(323)
சித்திரகூடத்து இருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் (6)

(324)
மின் ஒத்த நுண்- இடையாய் மெய்- அடியேன் விண்ணப்பம்
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் (7)

(325)
மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக்கோன் உடன் இருந்து நினைத் தேட
அத்தகு சீர் அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே (8)

(326)
திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள்
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே (9)

(327)
வார் ஆரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பார் ஆரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10)

(328)
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழற் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் (1)

(329)
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரற் சீதைக்கு ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியிற் கண்டார் உளர் (2)

(330)
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருது அழியச்
சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டார் உளர் (3)

(331)
தோயம் பரந்த நடுவு சூழலிற் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில் வம்மின் சுவடு உரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் (4)

(332)
நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டார் உளர் (5)

(333)
பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க
வல்லானை மா மணிவண்ணனை மருவும் இடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு பௌவம் எறி துவரை
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர் (6)

(334)
வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணை ஆகிப் பாரதம் கைசெய்யக் கண்டார் உளர் (7)

(335)
நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற அரசர்கள்தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப்
பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் (8)

(336)
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இருநிலம் புக்கு இடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் உளர் (9)

(337)
கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடு உரைத்துப்
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனிப் புதுவைத்
திருவிற் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே (10)

(338)
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக்
குலம் பாழ் படுத்துக் குலவிளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ- மகளிர்கள் ஆடும் சீர்ச்
சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (1)

(339)
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி
செல்லா நிற்கும் சீர்த் தென் திருமாலிருஞ் சோலையே (2)

(340)
தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத்
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை
அக் கான் நெறியை மாற்றும் தண் மாலிருஞ் சோலையே (3)

(341)
ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை
வான் நாட்டினின்று மாமலர்க் கற்பகத் தொத்து இழி
தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையே (4)

(342)
ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன்தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓடக் கடல்வண்ணன்
திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே (5)

(343)
ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச்
சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்-தனம் என்று அமரர்களும் நன் முனிவரும்
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (6)

(344)
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின்மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர்வேற் கோன் நெடுமாறன் தென்கூடற் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ் சோலையே (7)

(345)
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங் கானிடைச்
சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன்மலை
அறுகால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லிச்
சிறுகாலைப் பாடும் தென் திருமாலிருஞ் சோலையே (8)

(346)
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலி கொடுத்து ஆவத்-தனம் செய் அப்பன் மலை
இந்திர-கோபங்கள் எம்பெருமான் கனி- வாய் ஒப்பான்
சிந்தும் புறவிற் தென் திருமாலிருஞ் சோலையே (9)

(347)
எட்டுத் திசையும் எண்- இறந்த பெருந் தேவிமார்
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டிப் பிடிகள் பகடு உரிஞ்சிச் சென்று மாலைவாய்த்
தெட்டித் திளைக்கும் தென் திருமாலிருஞ் சோலையே (10)

(348)
மருதப் பொழில் அணி மாலிருஞ் சோலை மலைதன்னைக்
கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான்தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல்
கருதி உரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பரே (11)

(349)
உருப்பிணி நங்கைதன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற
உருப்பனை ஓட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ் சோலையதே (1)

(350)
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியைச்
செஞ்சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ் சோலையதே (2)

(351)
மன்னு நரகன்தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்அரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ் சோலையதே (3)

(352)
மாவலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண் குறிஞ்சிப்
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ் சோலையதே (4)

(353)
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன்தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ் சோலையதே (5)

(354)
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே (6)

(355)
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த ஏழிற் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ் சோலையதே (7)

(356)
எரி சிதறும் சரத்தால் இலங்கையினைத் தன்னுடைய
வரி சிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து உகந்த
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரிசுடர் சூழும் மலை திரு மாலிருஞ் சோலையதே (8)

(357)
கோட்டுமண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ் சோலையதே (9)

(358)
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ் சோலையதே (10)

(359)
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால் வேதக்-கடல் அமுதை
மேல் இருங் கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே (11)

(360)
நா அகாரியம் சொல் இலாதவர்
நாள்தொறும் விருந்து ஓம்புவார்
தேவ காரியம் செய்து வேதம்
பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர்காரியமும் திருத்தும்
முதல்வனைச் சிந்தியாத அப்
பாவகாரிகளைப் படைத்தவன்
எங்ஙனம் படைத்தான் கொலோ (1)

(361)
குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக்
குருக்களுக்கு அனுகூலராய்ச்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்த்
துற்றி ஏழ் உலகு உண்ட தூ மணி
வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு
நோய்செய்வான் பிறந்தார்களே (2)

(362)
வண்ண நல் மணியும் மரகதமும்
அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திரு
மாலவன் திருநாமங்கள்
எண்ணக் கண்ட விரல்களால் இறைப்
போதும் எண்ணகிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக்
கவளம் உந்துகின்றார்களே (3)

(363)
உரக மெல் அணையான் கையில் உறை
சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
கமல வயற் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டு அழை
யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்குங் கூறையும்
பாவம் செய்தன தாம் கொலோ (4)

(364)
ஆமையின் முதுகத்திடைக் குதி
கொண்டு தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
யாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை
வாங்கிப் புல்லைத் திணிமினே (5)

(365)
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
புலன்கள் ஐந்து பொறிகளால்
ஏதம் ஒன்றும் இலாத வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாத தூளி படுதலால் இவ்
உலகம் பாக்கியம் செய்ததே (6)

(366)
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று
கூடி ஆடி விழாச் செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல்
ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்க்
கருந் தடமுகில் வண்ணனைக் கடைக்
கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர்
எத்தவங்கள் செய்தார் கொலோ (7)

(367)
நளிர்ந்த சீலன் நயாசலன் அபி
மான துங்கனை நாள்தொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட
செங்கண் மால் திருக்கோட்டியூர்க்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம்
பாடுவார் உள்ள நாட்டினுள்
விளைந்த தானியமும் இராக்கதர்
மீது கொள்ளகிலார்களே (8)

(368)
கொம்பின் ஆர் பொழில்வாய்க் குயிலினம்
கோவிந்தன் குணம் பாடு சீர்ச்
செம்பொன் ஆர் மதில் சூழ் செழுங் கழ
னி உடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று
ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன சின்னங்கள் இவர்
இவர் என்று ஆசைகள் தீர்வனே (9)

(369)
காசின் வாய்க் கரம் விற்கிலும் கர
வாது மாற்று இலி சோறு இட்டுத்
தேச வார்த்தை படைக்கும் வண்கையி
னார்கள் வாழ் திருக்கோட்டியூர்க்
கேசவா புருடோத்தமா கிளர்
சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்தம்மை
விற்கவும் பெறுவார்களே (10)

(370)
சீத நீர் புடை சூழ் செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும்
கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்
ஏதம் இன்றி உரைப்பவர் இருடீகேசனுக்கு ஆளரே (11)

(371)
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர் ஆகி
அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாள் என்று மயங்கி
மாளும் எல்லைக்கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும்
கேழல் ஆகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை
பேசுவான் புகில் நம் பரம் அன்றே (1)

(372)
சீயினால் செறிந்து ஏறிய புண்மேல்
செற்றல் ஏறிக் குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்பு உண்டு மயங்கி
எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்
வாயினால் நமோ நாரணா என்று
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை இத் திசைக்கு என்றும்
பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே (2)

(373)
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்
சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே
அந்த காலம் அடைவதன் முன்னம்
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (3)

(374)
மேல் எழுந்தது ஓர் வாயுக் கிளர்ந்து
மேல் மிடற்றினை உள் எழ வாங்கிக்
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக்
கண் உறக்கமது ஆவதன் முன்னம்
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள் எழ வாங்கி
வேலை வண்ணனை மேவுதிர் ஆகில்
விண்ணகத்தினில் மேவலும் ஆமே (4)

(375)
மடி வழி வந்து நீர் புலன்சோர
வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே
கடைவழி வாரக் கண்டம் அடைப்பக்
கண் உறக்கமது ஆவதன் முன்னம்
தொடை வழி உம்மை நாய்கள் கவரா
சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்
இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே (5)

(376)
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி
ஆவி மூக்கினிற் சோதித்த பின்னைச்
சங்கம் விட்டு அவர் கையை மறித்துப்
பையவே தலை சாய்ப்பதன் முன்னம்
வங்கம் விட்டு உலவும் கடற் பள்ளி
மாயனை மதுசூதனை மார்பில்
தங்க விட்டுவைத்து ஆவது ஓர் கருமம்
சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே (6)

(377)
தென்னவன் தமர் செப்பம் இலாதார்
சே அதக்குவார் போலப் புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றிப்
பின் முன் ஆக இழுப்பதன் முன்னம்
இன்னவன் இனையான் என்று சொல்லி
எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி
மன்னவன் மதுசூதனன் என்பார்
வானகத்து மன்றாடிகள் தாமே (7)

(378)
கூடிக் கூடி உற்றார்கள் இருந்து
குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு
நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே
கோடி மூடி எடுப்பதன் முன்னம்
கௌத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி ஆடிய உள்ளத்தர் ஆனால்
குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே (8)

(379)
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப
வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம்
தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்
செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றம்
ஆய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே (9)

(380)
செத்துப் போவதோர் போது நினைந்து
செய்யும் செய்கைகள் தேவபிரான்மேல்
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்
பாழித் தோள் விட்டுசித்தன் புத்தூர்க்கோன்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமாலைச்
செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கித் திருமால் மேல்
சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே (10)

(381)
காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
ஆசையினால் அங்கு அவத்தப் பேர் இடும் ஆதர்காள்
கேசவன் பேர் இட்டு நீங்கள் தேனித்து இருமினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (1)

(382)
அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால்
மங்கிய மானிட சாதியின் பேர் இடும் ஆதர்காள்
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (2)

(383)
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர்?
பிச்சை புக்கு ஆகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (3)

(384)
மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை
மானிட சாதியின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (4)

(385)
மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை
மலம் உடை ஊத்தையின் பேர் இட்டால் மறுமைக்கு இல்லை
குலம் உடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (5)

(386)
நாடும் நகரும் அறிய மானிடப் பேர் இட்டுக்
கூடி அழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே
சாடு இறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (6)

(387)
மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (7)

(388)
நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (8)

(389)
ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்
மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேர் இட்டு
கோத்துக் குழைத்துக் குணாலம் ஆடித் திரிமினோ
நாத் தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் (9)

(390)
சீர் அணி மால் திருநாமமே இடத் தேற்றிய
வீர் அணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த சொல்
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே (10)

(391)
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்
தடிந்த எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட
எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடு வினை களைந்திடுகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே (1)

(392)
சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்
சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவும் மணிவண்ண உருவின்
மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (2)

(393)
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி
அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடறும்
எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்
சங்கரன் சடையினிற் தங்கிக்
கதிர் முகம் மணிகொண்டு இழி புனற் கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (3)

(394)
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள
ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்
நம் புருடோத்தமன் நகர்தான்
இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்
இரு கரை உலகு இரைத்து ஆடக்
கமை உடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே (4)

(395)
உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்
ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய
மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்
பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே (5)

(396)
தலைபெய்து குமுறிச் சலம் பொதி மேகம்
சலசல பொழிந்திடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை
மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்
அவபிரதம் குடைந்து ஆடக்
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே (6)

(397)
விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி
மேல் இருந்தவன் தலை சாடி
மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த
மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும்
அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (7)

(398)
திரை பொரு கடல் சூழ் திண்மதிற் துவரை
வேந்து தன் மைத்துனன்மார்க்காய்
அரசினை அவிய அரசினை அருளும்
அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம்
நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (8)

(399)
வட திசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரை மரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே (9)

(400)
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்
மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை
ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினிற் தோன்றி
மூன்றினில் மூன்று உரு ஆனான்
கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரைமேல்
கண்டம் என்னும் கடிநகரே (10)

(401)
பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து
உறை புருடோத்தமன் அடிமேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்
விட்டுசித்தன் விருப்பு உற்றுத்
தங்கிய அன்பால் செய் தமிழ்- மாலை
தங்கிய நா உடையார்க்குக்
கங்கையிற் திருமால் கழலிணைக் கீழே
குளித்திருந்த கணக்கு ஆமே (11)
------------------
திருவரங்கம் (1)

(402)
மா தவத்தோன் புத்திரன் போய்
மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா
உருவுருவே கொடுத்தான் ஊர்
தோதவத்தித் தூய் மறையோர்
துறைபடியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும்
புனல் அரங்கம் என்பதுவே (1)

(403)
பிறப்பு அகத்தே மாண்டு ஒழிந்த
பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து
ஒருப்படுத்த உறைப்பன் ஊர்
மறைப் பெருந் தீ வளர்த்திருப்பார்
வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ்
திருவரங்கம் என்பதுவே (2)

(404)
மருமகன் தன் சந்ததியை
உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தே வீழாமே
குருமுகமாய்க் காத்தான் ஊர்
திருமுகமாய்ச் செங்கமலம்
திருநிறமாய்க் கருங்குவளை
பொரு முகமாய் நின்று அலரும்
புனல் அரங்கம் என்பதுவே (3)

(405)
கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்
கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு
ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய
கான் தொடுத்த நெறி போகிக்
கண்டகரைக் களைந்தான் ஊர்
தேன்தொடுத்த மலர்ச் சோலைத்
திருவரங்கம் என்பதுவே (4)

(406)
பெருவரங்கள் அவைபற்றிப்
பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்கப் பொருது அழித்து இவ்
உலகினைக் கண்பெறுத்தான் ஊர்
குரவு அரும்பக் கோங்கு அலரக்
குயில் கூவும் குளிர் பொழில் சூழ்
திருவரங்கம் என்பதுவே
என் திருமால் சேர்விடமே (5)

(407)
கீழ் உலகில் அசுரர்களைக்
கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய
கரு அழித்த அழிப்பன் ஊர்
தாழை- மடல் ஊடு உரிஞ்சித்
தவள வண்ணப் பொடி அணிந்து
யாழின் இசை வண்டினங்கள்
ஆளம் வைக்கும் அரங்கமே (6)

(408)
கொழுப்பு உடைய செழுங்குருதி
கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்
பிழக்கு உடைய அசுரர்களைப்
பிணம் படுத்த பெருமான் ஊர்
தழுப்பு அரிய சந்தனங்கள்
தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்பு உடைய காவிரி வந்து
அடிதொழும் சீர் அரங்கமே (7)

(409)
வல் எயிற்றுக் கேழலுமாய்
வாள்எயிற்றுச் சீயமுமாய்
எல்லை இல்லாத் தரணியையும்
அவுணனையும் இடந்தான் ஊர்
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு
எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண்சங்கு ஊதும்
மதில் அரங்கம் என்பதுவே (8)

(410)
குன்று ஆடு கொழு முகில் போல்
குவளைகள் போல் குரைகடல் போல்
நின்று ஆடு கணமயில் போல்
நிறம் உடைய நெடுமால் ஊர்
குன்று ஊடு பொழில் நுழைந்து
கொடி இடையார் முலை அணவி
மன்று ஊடு தென்றல் உலாம்
மதில் அரங்கம் என்பதுவே (9)

(411)
பரு வரங்கள் அவைபற்றிப் படை ஆலித்து எழுந்தானைச்
செரு அரங்கப் பொருது அழித்த திருவாளன் திருப்பதிமேல்
திருவரங்கத் தமிழ்-மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே (10)
--------------
திருவரங்கம் (2)

(412)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்
வானோர் வாழச்
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட
திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை மலர்க்கண்ணும்
காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஒலிசலிக்கும்
ஒளி அரங்கமே (1)

Lesebereich 413–473

(413)
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும்
சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்
என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசைநோக்கி
மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு
ஆள் ஆவரே? (2)

(414)
கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும்
கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டு
ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து
ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர்
அணி அரங்கமே (3)

(415)
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணிசெய்யத்
துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர்
மன்னு கோயில்
புது நாள்மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றிற்
பூவே போல்வான்
பொது-நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும்
புனல் அரங்கமே (4)

(416)
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய்
அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த்
தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக்
கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும்
புனல் அரங்கமே (5)

(417)
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே
மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன்
உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும்
பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை-விளக்காய் நிற்கின்ற
திருவரங்கமே (6)

(418)
குறள் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பு அதக்கி
அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த
எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்
அரவு-அணையின்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டு
எறிக்கும் திருவரங்கமே (7)

(419)
உரம் பற்றி இரணியனை உகிர்-நுதியால் ஒள்ளிய மார்வு
உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க வாய் அலறத்
தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல்
உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத் தலைவணக்கும்
தண் அரங்கமே (8)

(420)
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி
குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய்
முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி
ஊசல் ஆடிப்
பூ-அணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும்
புனல் அரங்கமே (9)

(421)
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செருச்செயும்
நாந்தம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்
விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் எனையாளன் ஏழு உலகப்
பெரும் பேராளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற
திருவரங்கமே (10)

(422)
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
இருப்பர் தாமே (11)

(423)
துப்புடையாரை அடைவது எல்லாம்
சோர்விடத்துத் துணை ஆவர் என்றே
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு
ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (1)

(424)
சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்
சங்கொடு சக்கரம் ஏந்தினானே
நா மடித்து என்னை அனேக தண்டம்
செய்வதா நிற்பர் நமன்தமர்கள்
போம் இடத்து உன்திறத்து எத்தனையும்
புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (2)

(425)
எல்லையில் வாசல் குறுகச் சென்றால்
எற்றி நமன்-தமர் பற்றும்போது
நில்லுமின் என்னும் உபாயம் இல்லை
நேமியும் சங்கமும் ஏந்தினானே
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்
சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (3)

(426)
ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னை அறியாப் பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி
மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி
அஞ்ச நமன்தமர் பற்றல் உற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (4)

(427)
பை அரவின் அணைப் பாற்கடலுள்
பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி
உந்தியிற் தோற்றினாய் நான்முகனை
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்
காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (5)

(428)
தண்ணனவு இல்லை நமன்தமர்கள்
சாலக் கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும்
மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்
எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (6)

(429)
செஞ்சொல் மறைப்பொருள் ஆகி நின்ற
தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே
ஏழ் உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன்தமர்கள்
வலிந்து நலிந்து என்னைப் பற்றும்போது
அஞ்சலை என்று என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (7)

(430)
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்
நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்போது அங்கு
உன்னை நான் ஒன்றும் நினைக்கமாட்டேன்
வான் ஏய வானவர் தங்கள் ஈசா
மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (8)

(431)
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா
கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியாக ஆதி அஞ் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன்தமர்கள்
நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது
அன்று அங்கு நீ என்னைக் காக்கவேண்டும்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே (9)

(432)
மாயவனை மதுசூதனனை
மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
அரங்கத்து அரவணைப் பள்ளியானை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தினர் ஆகி வல்லார்
தூ மணிவண்ணனுக்கு ஆளர் தாமே (10)

(433)
வாக்குத் தூய்மை இலாமையினாலே
மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்
நாக்கு நின்னை அல்லால் அறியாது
நான் அது அஞ்சுவன் என்வசம் அன்று
மூர்க்குப் பேசுகின்றான் இவன் என்று
முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன்
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்
காரணா கருளக் கொடியானே (1)

(434)
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்
சங்கு சக்கரம் ஏந்து கையானே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல்
பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்
வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்
ஊழி ஏழ் உலகு உண்டு உமிழ்ந்தானே (2)

(435)
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை ஆவது உன் கோயிலில் வாழும்
வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே (3)

(436)
நெடுமையால் உலகேழும் அளந்தாய்
நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
கூறை சோறு இவை வேண்டுவதில்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே
அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
கோத்த வன் தளை கோள் விடுத்தானே (4)

(437)
தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை
துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே
வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே (5)

(438)
கண்ணா நான்முகனைப் படைத்தானே
காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே (6)

(439)
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை
மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
காணலாங்கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே (7)

(440)
வண்ண மால் வரையே குடையாக
மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே
காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரைக் களைவானே
ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே
நண்ணி நான் உன்னை நாள்தொறும் ஏத்தும்
நன்மையே அருள்செய் எம்பிரானே (8)

(441)
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள்
நாதனே நரசிங்கமது ஆனாய்
உம்பர்கோன் உலகு ஏழும் அளந்தாய்
ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்திக்
கம்ப மா கரி கோள் விடுத்தானே
காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை ஆள் உடைத் தேனே
ஏழையேன் இடரைக் களையாயே (9)

(442)
காமர் தாதை கருதலர் சிங்கம்
காண இனிய கருங்குழற் குட்டன்
வாமனன் என் மரகத வண்ணன்
மாதவன் மதுசூதனன் தன்னைச்
சேம நன்கு அமரும் புதுவையர் கோன்
விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (10)

(443)
நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்
எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள்
காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து
வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பு- அணையோடும்
பண்டு அன்று பட்டினம் காப்பே (1)

(444)
சித்திரகுத்தன் எழுத்தால்
தென்புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றித்
தூதுவர் ஓடி ஒளித்தார்
முத்துத் திரைக் கடற் சேர்ப்பன்
மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன்
பண்டு அன்று பட்டினம் காப்பே (2)

(445)
வயிற்றிற் தொழுவைப் பிரித்து
வன்புலச் சேவை அதக்கிக்
கயிற்றும் அக்கு ஆணி கழித்துக்
காலிடைப் பாசம் கழற்றி
எயிற்றிடை மண்கொண்ட எந்தை
இராப்பகல் ஓதுவித்து என்னைப்
பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்
பண்டு அன்று பட்டினம் காப்பே (3)

(446)
மங்கிய வல்வினை நோய்காள்
உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்
எளிது அன்று கண்டீர் புகேன்மின்
சிங்கப் பிரான் அவன் எம்மான்
சேரும் திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப் போமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (4)

(447)
மாணிக் குறள் உரு ஆய
மாயனை என் மனத்துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத
வைத்துக் கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர்
வலி வன் குறும்பர்கள் உள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (5)

(448)
உற்ற உறுபிணி நோய்காள்
உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்றம் உரைக்கின்றேன் இன்னம்
ஆழ்வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின்
பண்டு அன்று பட்டினம் காப்பே (6)

(449)
கொங்கைச் சிறு வரை என்னும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு
அழுந்திக் கிடந்து உழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான்
வல்வினை ஆயின மாற்றிப்
பங்கப் படாவண்ணம் செய்தான்
பண்டு அன்று பட்டினம் காப்பே (7)

(450)
ஏதங்கள் ஆயின எல்லாம்
இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரனார்
பிரம குருவாகி வந்து
போதில் கமல வன் நெஞ்சம்
புகுந்து என் சென்னித் திடரிற்
பாத இலச்சினை வைத்தார்
பண்டு அன்று பட்டினம் காப்பே (8)

(451)
உறகல் உறகல் உறகல்
ஒண்சுடர் ஆழியே சங்கே
அற எறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தண்டே
இறவு படாமல் இருந்த
எண்மர் உலோகபாலீர்காள்
பறவை அரையா உறகல்
பள்ளியறை குறிக்கொண்மின் (9)

(452)
அரவத்து அமளியினோடும்
அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப்
பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான் விட்டுசித்தன்
பட்டினம் காவற் பொருட்டே (10)

(453)
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த
வலையை அறப் பறித்துப்
புக்கினிற் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்
போக விடுவதுண்டே?
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத
இழந்தவள் தன்வயிற்றிற்
சிக்கென வந்து பிறந்து நின்றாய்!திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (1)

(454)
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன்
இந்திர-ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ
ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத்
தீவினை தீர்க்கல் உற்றுத்
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (2)

(455)
உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடை
யேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன்
பொன்னடி வாழ்க என்று
இனத்துக் குறவர் புதியது உண்ணும் எழில்
மாலிருஞ் சோலை எந்தாய் (3)

(456)
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர்
நிழல் இல்லை நீர் இல்லை உன்
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர்
பொய்ச்சுற்றம் பேசிச் சென்று
பேதம் செய்து எங்கும் பிணம்படுத்தாய் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (4)

(457)
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
சோர்ந்து நடுங்கிக் குரல்
மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா என
தோள்களும் வீழ்வு ஒழியா
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை
வாழத் தலைப்பெய்திட்டேன்
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (5)

(458)
எருத்துக் கொடி உடையானும் பிரமனும்
இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு
மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா
மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயிற் கடைப் புகப் பெய் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (6)

(459)
அக்கரை என்னும் அனத்தக் கடலுள்
அழுந்தி உன் பேர் அருளால்
இக்கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்
சேல் என்று கை கவியாய்
சக்கரமும் தடக்கைகளும் கண்களும்
பீதக ஆடையொடும்
செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (7)

(460)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்
இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்
இனி உன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர்
நூற்றுவரைக் கெடுத்தாய்
சித்தம் நின்பாலது அறிதி அன்றே திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (8)

(461)
அன்று வயிற்றிற் கிடந்திருந்தே அடி
மை செய்யல் உற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் இனிப்
போக விடுவதுண்டே?
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும்
திருச் சக்கரம் அதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திரு
மாலிருஞ் சோலை எந்தாய் (9)

(462)
சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் திரு
மாலிருஞ் சோலை தன்னுள்
நின்ற பிரான் அடிமேல் அடிமைத் திறம்
நேர்பட விண்ணப்பஞ் செய்
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புது
வைக்கோன் விட்டுசித்தன்
ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் உல
கம் அளந்தான் தமரே (10)

(463)
சென்னி ஓங்கு தண் திருவேங்
கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ
தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையையும் உன்
சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே? (1)

(464)
பறவை ஏறு பரமபுருடா
நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்
பெரும்பதம் ஆகின்றதால்
இறவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவை என்னும் அமுத-ஆறு
தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)

(465)
எம்மனா என் குலதெய்வமே
என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்
உலகினில் ஆர் பெறுவார்?
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடித்
தூறுகள் பாய்ந்தனவே (3)

(466)
கடல் கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைத்தாற்போல்
உடல் உருகி வாய் திறந்து
மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என்
கோல்-ஆடி குறுகப் பெறா
தட வரைத் தோள் சக்கரபாணீ
சார்ங்க விற் சேவகனே (4)

(467)
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா
என் உயிர்க் காவலனே (5)

(468)
உன்னுடைய விக்கிரமம்
ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால்
சுவர்வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கைக்
கொண்ட இராம நம்பீ
என்னிடை வந்து எம்பெருமான்
இனி எங்குப் போகின்றதே? (6) 6

(469)
பருப்பதத்துக் கயல் பொறித்த
பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் பொறித்தாய்
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய்
என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை
உனக்கு உரித்து ஆக்கினையே (7)

(470)
அனந்தன்பாலும் கருடன்பாலும்
ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி
வாழச் செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக்
கண்கள் அசும்பு ஒழுக
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன்
நேமி நெடியவனே (8)

(471)
பனிக் கடலில் பள்ளி- கோளைப்
பழகவிட்டு ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல
மாய மணாள நம்பீ
தனிக் கடலே தனிச் சுடரே
தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை
உனக்கு உரித்து ஆக்கினையே (9)

(472)
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும்
தவள நெடுங்கொடி போல்
சுடர்- ஒளியாய் நெஞ்சின் உள்ளே
தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும்
மதிற் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால்
இடவகை கொண்டனையே (10)

(473)
வேயர் தங்கள் குலத்து உதித்த
விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனைக்
கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயர்-ஏற்றை அமரர் கோவை
அந்தணர்தம் அமுதத்தினைச்
சாயை போலப் பாட வல்லார்
தாமும் அணுக்கர்களே (11)

Tiruppavai (474–503)

(474)
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (1)

(475)
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய் (2)

(476)
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (3)

(477)
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (4

(478)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய் (5)

(479)
புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய் (6)

(480)
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய் (7)

(481)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய் (8)

(482)
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் (9)

(483)
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய் (10)

(484)
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய் (11)

(485)
கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய் (12)

(486)
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய் (13)

(487)
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்
தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய் (14)

(488)
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய் (15)

(489)
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய் (16)

(490)
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய் (17)

(491)
உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (18)

(492)
குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு-ஏலோர் எம்பாவாய் (19)

(493)
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய் (20)

(494)
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (21)

(495)
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய் (22)

(496)
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய் (23)

(497)
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய் (24)

(498)
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய் (25)

(499)
மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள்-ஏலோர் எம்பாவாய் (26)

(500)
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய் (27)

(501)
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய் (28)

(502)
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய் (29)

(503)
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் (30)

Nachiyar Tirumoli (504–646)

Lesebereich 504–603

(504)
தை ஒரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே (1)

(505)
வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர்
இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே (2)

(506)
மத்த நன் நறுமலர் முருக்க மலர்
கொண்டு முப்போதும் உன் அடி வணங்கித்
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து
வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே (3)

(507)
சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே (4)

(508)
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே (5)

(509)
உருவு உடையார் இளையார்கள் நல்லார்
ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்
திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் (6)

(510)
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும்
தரணியில்-தலைப்புகழ் தரக்கிற்றியே (7)

(511)
மாசு உடை உடம்பொடு தலை உலறி
வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள்
என்னும் இப் பேறு எனக்கு அருளு கண்டாய் (8)

(512)
தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்
தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து
ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே (9)

(513)
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே (10)

(514)
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்
குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (1)

(515)
இன்று முற்றும் முதுகு நோவ
இருந்து இழைத்த இச் சிற்றிலை
நன்றும் கண் உற நோக்கி நாம் கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகன் ஆகி ஆலிலை
மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள்மேல் இரக்
கம் எழாதது எம் பாவமே (2)

(516)
குண்டு நீர் உறை கோளரீ மத
யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் கடைக்
கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்
கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக்கடற் பள்ளியாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (3)

(517)
பெய்யு மா முகில்போல் வண்ணா உன்தன்
பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம்
மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை
நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (4)

(518)
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்
விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
அழித்தி யாகிலும் உன் தன் மேல்
உள்ளம் ஓடி உருகலல்லால்
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
முகத்தன கண்கள் அல்லவே (5)

(519)
முற்று இலாத பிள்ளைகளோம் முலை
போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது
உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
சேவகா எம்மை வாதியேல் (6)

(520)
பேதம் நன்கு அறிவார்களோடு இவை
பேசினால் பெரிது இன் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக
ளோமை நீ நலிந்து என் பயன்?
ஓத மா கடல்வண்ணா உன் மண
வாட்டிமாரொடு சூளறும்
சேது-பந்தம் திருத்தினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேலே (7)

(521)
வட்ட வாய்ச் சிறுதூதையோடு
சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
அறிதியே கடல்வண்ணனே (8)

(522)
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்
கக் கடவையோ? கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண் உற
நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் இந்தப்
பக்கம் நின்றவர் என் சொல்லார்? (9)

(523)
சீதை வாயமுதம் உண்டாய் எங்கள்
சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர்
சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி
புத்தூர் மன் விட்டு சித்தன்தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவு
இன்றி வைகுந்தம் சேர்வரே (10)

(524)
கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான்
அரவு-அணைமேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம்
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தருளாயே (1)

(525)
இது என் புகுந்தது இங்கு? அந்தோ
இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே
மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்
குருந்திடைக் கூறை பணியாய் (2)

(526)
எல்லே ஈது என்ன இளமை?
எம் அனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய்
பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்
வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தருளாயே (3)

(527)
பரக்க விழித்து எங்கும் நோக்கிப்
பலர் குடைந்து ஆடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்
அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்
இலங்கை அழித்த பிரானே
குரக்கு-அரசு ஆவது அறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய் 4

(528)
காலைக் கதுவிடுகின்ற
கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்கள்
ஓட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும்
கொண்டு நீ ஏறியிராதே
கோலம் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய் (5)

(529)
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்கள் எம் காலைக் கதுவ
விடத் தேள் எறிந்தாலே போல
வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக்
கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள்
பட்டைப் பணித்தருளாயே (6)

(530)
நீரிலே நின்று அயர்க்கின்றோம்
நீதி-அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே உடையோம்
அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப்
பூங்குருந்து ஏறியிராதே (7)

(531)
மாமிமார் மக்களே அல்லோம்
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லை இராத் துயில்வானே
சேமமேல் அன்று இது சால
சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய் (8)

(532)
கஞ்சன் வலைவைத்த அன்று
காரிருள் எல்லிற் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்
நின்ற இக் கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட
மசிமையிலீ கூறை தாராய் (9)

(533)
கன்னியரோடு எங்கள் நம்பி
கரிய பிரான் விளையாட்டைப்
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர்கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு
வைகுந்தம் புக்கு இருப்பாரே (10)

(534)
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1)

(535)
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றித் தன்னொடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே (2)

(536)
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மா மகன் மிகு சீர் வசுதேவர்தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே (3)

(537)
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன்மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே (4)

(538)
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே (5)

(539)
அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப் பதிக்
கொற்றவன் வரில் கூடிடு கூடலே (6)

(540)
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல்-கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே (7)

(541)
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே (8)

(542)
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலிதன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே (9)

(543)
பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே (10)

(544)
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே (11)

(545)
மன்னு பெரும்புகழ் மாதவன் மா மணி
வண்ணன் மணி-முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என்
சங்கு இழக்கும் வழக்கு உண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
பவள-வாயன் வரக் கூவாய் (1)

(546)
வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்
களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
வேங்கடவன் வரக் கூவாய் (2)

(547)
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சர-மாரி
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன்
போது அலர் காவிற் புதுமணம் நாறப்
பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என்
கருமாணிக்கம் வரக் கூவாய் (3)

(548)
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள்
இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன்
அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே
பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப்
புண்ணியனை வரக் கூவாய் (4)

(549)
மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
பொரு கயற் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால்-அமுது ஊட்டி
எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே
உலகு அளந்தான் வரக் கூவாய் (5)

(550)
எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும்
இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும்
முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளும் இளங் குயிலே என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில்
தலை அல்லால் கைம்மாறு இலேனே (6)

(551)
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு?
ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ
சாலத் தருமம் பெறுதி (7)

(552)
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம்
நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும்
சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில்
அவனை நான் செய்வன காணே (8)

(553)
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர்
பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயி
லே குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்கு உள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9)

(554)
அன்று உலகம் அளந்தானை உகந்து
அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை
நலியும் முறைமை அறியேன்
என்றும் இக் காவில் இருந்திருந்து என்னைத்
ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன் (10)

(555)
விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பிக்
கண்ணுற என் கடல்-வண்ணனைக் கூவு
கருங்குயிலே என்ற மாற்றம்
பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன்
பட்டர்பிரான் கோதை சொன்ன
நண் உறு வாசக மாலை வல்லார் நமோ
நாராயணாய என்பாரே (11)

(556)
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (1)

(557)
நாளை வதுவை-மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2)

(558)
இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண-மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3)

(559)
நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4)

(560)
கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (5)

(561)
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6)

(562)
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7)

(563)
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் (8)

(564)
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (9)

(565)
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (10)

(566)
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே (11)

(567)
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி-வெண்சங்கே (1)

(568)
கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரிற் குடியேறி தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே (2)

(569)
தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வட மதுரையார்-மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே (3)

(570)
சந்திர-மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே (4)

(571)
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன் ஆகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே (5)

(572)
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே (6)

(573)
செங்கமல நாள்-மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன-வசஞ் செய்யும்
சங்கு-அரையா உன் செல்வம் சால அழகியதே (7)

(574)
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே (8)

(575)
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே (9)

(576)
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே (10)

(577)
விண் நீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என்
திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
துளி சோரச் சோர்வேனைப்
பெண் நீர்மை ஈடழிக்கும்
இது தமக்கு ஓர் பெருமையே? (1)

(578)
மா முத்தநிதி சொரியும்
மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
இங்கு இலக்காய் நான் இருப்பேனே? (2)

(579)
ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை
ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என்
கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்
ஆவி காத்து இருப்பேனே? (3)

(580)
மின் ஆகத்து எழுகின்ற
மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
புரிவுடைமை செப்புமினே (4)

(581)
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
தருமாகிற் சாற்றுமினே (5)

(582)
சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த
தண் முகில்காள் மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே
நிரந்து ஏறிப் பொழிவீர்காள்
உலங்கு உண்ட விளங்கனி போல்
உள் மெலியப் புகுந்து என்னை
நலங் கொண்ட நாரணற்கு என்
நடலை-நோய் செப்புமினே (6)

(583)
சங்க மா கடல் கடைந்தான்
தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ்
அடி-வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின்
குழம்பு அழியப் புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி
தங்கும் என்று உரையீரே (7)

(584)
கார் காலத்து எழுகின்ற
கார்முகில்காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப்
பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத்து எருக்கின் அம்
பழ இலை போல் வீழ்வேனை
வார் காலத்து ஒருநாள் தம்
வாசகம் தந்தருளாரே (8)

(585)
மத யானை போல் எழுந்த
மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பு-அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான்
கருதாது ஓர் பெண்-கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே? (9)

(586)
நாகத்தின் அணையானை
நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக்கோன்
விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்து உரைப்பார்
அவர் அடியார் ஆகுவரே (10)

(587)
சிந்துரச் செம்பொடிப் போல்
திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
சுழலையினின்று உய்துங் கொலோ? (1)

(588)
போர்க்களிறு பொரும்
மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
அவன் தார் செய்த பூசலையே (2)

(589)
கருவிளை ஒண்மலர்காள்
காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
வந்திபற்றும் வழக்கு உளதே? (3)

(590)
பைம்பொழில் வாழ் குயில்காள்
மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
நிறம் உங்களுக்கு என் செய்வதே? (4)

(591)
துங்க மலர்ப் பொழில் சூழ்
திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)

(592)
நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)

(593)
இன்று வந்து இத்தனையும்
அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
மனத்தே வந்து நேர்படிலே (7)

(594)
காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)

(595)
கோங்கு அலரும் பொழில்
மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)

(596)
சந்தொடு காரகிலும்
சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
திருமாலடி சேர்வர்களே (10)

(597)
கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான்?
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது? அணி துழாய்த்
தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ (1)

(598)
மேல்-தோன்றிப் பூக்காள் மேல்-உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே? (2)

(599)
கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பு-அணையார்க்கும் தம் பாம்புபோல்
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே (3)

(600)
முல்லைப் பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே? (4)

(601)
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல்? நல் வேங்கட-
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5)

(602)
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன்
பணம் ஆடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்மினே (6)

(603)
நடம் ஆடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடம்-ஆட்டம் காணப் பாவியேன் நான் ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ-மிறை செய்து எம்மை
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7)

Lesebereich 604–646

(604)
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற
அழகப்பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்படத்
தழுவ நின்று என்னைத் ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே? (8)

(605)
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கு-உறுத்து
உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே? (9)

(606)
நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வதென்?
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே (10)

(607)
தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே (1)

(608)
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)

(609)
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்-உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே? (3)

(610)
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளை மேல்
இச்சை உடையரேல் இத் தெருவே போதாரே? (4)

(611)
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே (5)

(612)
கைப் பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்
செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான் மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)

(613)
உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப்
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
திண்ணார் மதில் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே (7)

(614)
பாசி தூர்த்தக் கிடந்த பார்-மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்
தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (8)

(615)
கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே (9)

(616)
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே? (10)

(617)
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா
மாதவன் என்பது ஓர் அன்புதன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்
பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமற் களம் அடைந்த
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின். (1)

(618)
நாணி இனி ஓர் கருமம் இல்லை
நால்-அயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து
பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகு அளந்த
மாயனைக் காணிற் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின். (2)

(619)
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பு அரிது
மாயவன் வந்து உருக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக்
குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே
நள்-இருட்கண் என்னை உய்த்திடுமின் (3)

(620)
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
அவன்முகத்து அன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்
சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (4)

(621)
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது
அம்மனைமீர் துழதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்
கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின். (5)

(622)
கார்த் தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்
பத்தவிலோசனத்து உய்த்திடுமின் (6)

(623)
வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
மானம் இலாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையும் உள்மெலிவும்
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின் (7)

(624)
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்
பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
காலிகள் உய்ய மழை தடுத்துக்
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் (8)

(625)
கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகு-அளந்தான் என்று உயரக் கூவு1ம்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (9)

(626)
மன்னு மதுரை தொடக்கமாக
வண் துவராபதிதன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (10)

(627)
கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனைப்
புண்ணிற் புளிப் பெய்தாற் போலப்
புறம் நின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அரையிற் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே (1)

(628)
பால்-ஆலிலையில் துயில் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற் போல்
வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
குடந்தைக் கிடந்த குடம்-ஆடி
நீலார் தண்ணந் துழாய் கொண்டு என்
நெறி மென் குழல்மேல் சூட்டிரே (2)

(629)
கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
மார்விற் கொணர்ந்து புரட்டீரே (3)

(630)
ஆரே உலகத்து ஆற்றுவார்?
ஆயர்-பாடி கவர்ந்து உண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன்
அமுத வாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே (4)

(631)
அழிலும் தொழிலும் உருக் காட்டான்
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுசிப் புகுந்து என்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப் பின்னே
நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு
குளிர முகத்துத் தடவீரே (5)

(632)
நடை ஒன்று இல்லா உலகத்து
நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக்கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா உயிர் என் உடம்பையே (6)

(633)
வெற்றிக் கருளக் கொடியான்தன்
மீமீது ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய்
வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்றம் அவை தீர
அணைய அமுக்கிக் கட்டீரே (7)

(634)
உள்ளே உருகி நைவேனை
உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்
எறிந்து என் அழலைத் தீர்வேனே (8)

(635)
கொம்மை முலைகள் இடர் தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம்தான் என்?
செம்மை உடைய திருமார்வில்
சேர்த்தானேனும் ஒரு ஞான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி
விடைதான் தருமேல் மிக நன்றே (9)

(636)
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர்பாடிக்கு அணி-விளக்கை
வில்லி புதுவைநகர் நம்பி
விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை உற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே (10)

(637)
பட்டி மேய்ந்து ஓர் காரேறு
பலதேவற்கு ஓர் கீழ்க்-கன்றாய்
இட்டீறு இட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
இனிது மறித்து நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே (1)

(638)
அனுங்க என்னைப் பிரிவு செய்து
ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த்தனனைக் கண்டீரே?
கணங்களோடு மின் மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே (2)

(639)
மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை-சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே (3)

(640)
கார்த் தண் கமலக் கண் என்னும்
நெடுங்கயிறு படுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன்தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே (4)

(641)
மாதவன் என் மணியினை
வலையிற் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா
ஈசன்தன்னைக் கண்டீரே?
பீதக-ஆடை உடை தாழ
பெருங் கார்மேகக் கன்றே போல்
வீதி ஆர வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே (5)

(642)
தருமம் அறியாக் குறும்பனைத்
தன் கைச் சார்ங்கம் அதுவே போல்
புருவ வட்டம் அழகிய
பொருத்தம் இலியைக் கண்டீரே?
உருவு கரிதாய் முகம் சேய்தாய்
உதயப் பருப்பதத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தாவனத்தே கண்டோமே (6)

(643)
பொருத்தம் உடைய நம்பியைப்
புறம்போல் உள்ளும் கரியானைக்
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா-கணங்களால்
ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே (7)

(644)
வெளிய சங்கு ஒன்று உடையானைப்
பீதக-ஆடை உடையானை
அளி நன்கு உடைய திருமாலை
ஆழியானைக் கண்டீரே?
களி வண்டு எங்கும் கலந்தாற்போல்
கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே (8)

(645)
நாட்டைப் படை என்று அயன் முதலாத்
தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன்தன்னைக் கண்டீரே?
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே (9)

(646)
பருந்தாள்-களிற்றுக்கு அருள்செய்த
பரமன்தன்னைப் பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை
விட்டுசித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்
பிரியாது என்றும் இருப்பாரே (10)

Vishnu und Lakshmi auf Shesha: ein Bild göttlicher Geborgenheit.

Begleitender Vortrag von Yoga Vidya zu Vishnu; keine fortlaufende Auslegung der Hymnen:

Perumal Tirumoli (647–751)

Lesebereich 647–746

(647)
இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித்
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)

(648)
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை
கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2)

(649)
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்-
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற
அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)

(650)
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
பாவினை அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்
பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்
கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே (4)

(651)
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்
தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என்
மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே (5)

(652)
அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்
திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்
கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என்
உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6)

(653)
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (7)

(654)
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே (8)

(655)
தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்
பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9)

(656)
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண்-உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச்
சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு யானும்
இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (10)

(657)
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்
கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (11)

(658)
தேட்டு அருந் திறல்-தேனினைத் தென்
அரங்கனைத் திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை
வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு-
எய்தும் மெய்யடியார்கள்தம்
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது
காணும் கண் பயன் ஆவதே (1)

(659)
தோடு உலா மலர்-மங்கை தோளிணை
தோய்ந்ததும் சுடர்-வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை
மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடிப் பாடி அரங்க ஓ என்று
அழைக்கும் தொண்டர் அடிப்-பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து
ஆடும் வேட்கை என் ஆவதே? (2)

(660)
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம்
கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்
சொல்லிப் பாடி வண் பொன்னிப் பேர்-
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு
அரங்கன் கோயில்-திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடிச் செழுஞ்
சேறு என் சென்னிக்கு அணிவனே (3)

(661)
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன்
உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா என்று
அழைத்து மெய் தழும்பத் தொழுது
ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே (4)

(662)
பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம்
இறுத்தப் போர்-அரவு ஈர்த்த கோன்
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் திண்ண
மா மதில்-தென் அரங்கனாம்
மெய் சிலைக் கருமேகம் ஒன்று தம்
நெஞ்சில் நின்று திகழப் போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து
என் மனம் மெய் சிலிர்க்குமே (5)

(663)
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம்
ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி
இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும்
திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்
காதல் செய்யும் என் நெஞ்சமே (6)

(664)
கார்-இனம் புரை மேனி நற் கதிர்
முத்த வெண்ணகைச் செய்ய வாய்
ஆர-மார்வன் அரங்கன் என்னும்
அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து
கசிந்து இழிந்த கண்ணீர்களால்
வார நிற்பவர் தாளிணைக்கு ஒரு
வாரம் ஆகும் என் நெஞ்சமே (7)

(665)
மாலை உற்ற கடற் கிடந்தவன்
வண்டு கிண்டு நறுந்துழாய்
மாலை உற்ற வரைப் பெருந் திரு
மார்வனை மலர்க் கண்ணனை
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்
திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு
மாலை உற்றது என் நெஞ்சமே (8)

(666)
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள்
சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து
ஆடிப் பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி
யார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்
மற்றையார் முற்றும் பித்தரே (9)

(667)
அல்லி மா மலர்-மங்கை நாதன்
அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லை இல் அடிமைத் திறத்தினில்
என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்
கோழிக்கோன் குலசேகரன்
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்கள் ஆவரே (10)

(668)
மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ்
வையம்தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டொழிந்தேன் என்தன் மாலுக்கே (1)

(669)
நூலின் நேர்-இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் எழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே (2)

(670)
மாரனார் வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்
பாரினாரொடும் கூடுவது இல்லை யான்
ஆர-மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே (3)

(671)
உண்டியே உடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்
அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை
உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே (4)

(672)
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான்
ஆதி ஆயன் அரங்கன் அந் தாமரைப்
பேதை மா மணவாளன்தன் பித்தனே (5)

(673)
எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வை ஒன்றாகக் கருதலன்
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே (6)

(674)
எத் திறத்திலும் யாரொடும் கூடும் அச்
சித்தந்தன்னைத் தவிர்த்தனன் செங்கண் மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (7)

(675)
பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே (8)

(676)
அங்கை-ஆழி அரங்கன் அடியிணை
தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க்
கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல்
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே (9)

(677)
ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (1)

(678)
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வான் ஆளும் செல்வமும் மண்-அரசும் யான் வேண்டேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே (2)

(679)
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல்
மின் வட்டச் சுடர்-ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்-வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே (3)

(680)
ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துச்
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே (4)

(681)
கம்ப மத யானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே (5)

(682)
மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன்
தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவேனே (6)

(683)
வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர்தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன்
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே (7)

(684)
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே (8)

(685)
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே (9)

(686)
உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம் பவள-வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே (10)

(687)
மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக்
கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன
பன்னிய நூற் தமிழ்-வல்லார் பாங்காய பத்தர்களே (11)

(688)
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே (1)

(689)
கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ
கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே (2)

(690)
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்-
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே (3)

(691)
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே (4)

(692)
வெங்கண்-திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்
வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே (5)

(693)
செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே (6)

(694)
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்
மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே (7)

(695)
தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து ஓடித் தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல்
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே (8)

(696)
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே (9)

(697)
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்து
கொற்ற வேல்-தானைக் குலசேகரன் சொன்ன
நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே (10)

(698)
ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்
எனைப் பலர் உள்ள இவ் ஊரில் உன்தன்
மார்வு தழுவுதற்கு ஆசையின்மை
அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்
கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்
வாசுதேவா உன் வரவு பார்த்தே (1)

(699)
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று
கள்ள-விழியை விழித்துப் புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ
வாள்முகம் வேர்ப்ப செவ்வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்
தாமோதரா மெய் அறிவன் நானே (2)

(700)
கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
கடைக்கணித்து ஆங்கே ஒருத்திதன்பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு
உரைத்து ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்திதன்னைப்
புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே
வளர்கின்றதால் உன்தன் மாயை தானே. (3)

(701)
தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்
தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று
பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு
பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப
யான் விட வந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்
அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே. (4)

(702)
மின்னொத்த நுண்ணிடையாளைக் கொண்டு
வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே
பொன்னொத்த ஆடை குக்கூடலிட்டுப்
போகின்ற போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டுக்
கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய்?
இன்னம் அங்கே நட நம்பி நீயே. (5)

(703)
மற் பொரு தோள் உடை வாசுதேவா
வல்வினையேன் துயில் கொண்டவாறே
இற்றை இரவிடை ஏமத்து என்னை
இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?
எம்பெருமான் நீ எழுந்தருளே (6)

(704)
பையரவின் அணைப் பள்ளியினாய்
பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும்
மையரி ஒண் கண்ணினாரும் அல்லோம்
வைகி எம் சேரி வரவு ஒழி நீ
செய்ய உடையும் திருமுகமும்
செங்கனிவாயும் குழலும் கண்டு
பொய் ஒரு நாள் பட்டதே அமையும்
புள்ளுவம் பேசாதே போகு நம்பீ (7)

(705)
என்னை வருக எனக் குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர்-நீழல்
மன்னி அவளைப் புணரப் புக்கு
மற்று என்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையிற் தாங்கிப்
பொய்-அச்சம் காட்டி நீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள்
வருதியேல் என் சினம் தீர்வன் நானே (8)

(706)
மங்கல நல் வனமாலை மார்வில்
இலங்க மயில்-தழைப் பீலி சூடி
பொங்கு இள ஆடை அரையிற் சாத்தி
பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து
கொங்கு நறுங் குழலார்களோடு
குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத
உன் குழலின் இசை போதராதே? (9)

(707)
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி
எள்கி உரைத்த உரையதனைக்
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்
குலசேகரன் இன்னிசையில் மேவிச்
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்
சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (10)

(708)
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ
வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏல வார் குழல் என்மகன் தாலோ
என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்
தாயரிற் கடை ஆயின தாயே (1)

(709)
வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள்
பொலியும் நீர்-முகிற் குழவியே போல
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும்
அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ
கேசவா கெடுவேன் கெடுவேனே (2)

(710)
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர்
முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே
எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ்
விரலினும் கடைக்கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே. (3)

(711)
களி நிலா எழில் மதிபுரை முகமும்
கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும்
தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும்
தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த
இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால்
பருகுவேற்கு இவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த
பாவியேன் எனது ஆவி நில்லாதே (4)

(712)
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (5)

(713)
தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன்
மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில்
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே (6)

(714)
குழகனே என்தன் கோமளப் பிள்ளாய்
கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல்
ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா
மழலை மென்னகை இடையிடை அருளா
வாயிலே முலை இருக்க என் முகத்தே
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந்
தன்னையும் இழந்தேன் இழந்தேனே! (7)

(715)
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும்
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே (8)

(716)
குன்றினால் குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே. (9)

(717)
வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ
சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய்
கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன்
தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே (10)

(718)
மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (11)

(719)
மன்னு புகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (1)

(720)
புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகைதன் உரம் உருவச் சிலை வளைத்தாய்
கண்டவர்தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ (2)

(721)
கொங்கு மலி கருங்குழலாள் கௌசலைதன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ்ச்சனகன் திரு மருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ (3)

(722)
தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே தயரதன்தன்
மா மதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கருமணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ (4)

(723)
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே
சீர் ஆளும் வரை மார்பா திருக் கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ (5)

(724)
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே
அற்றவர்கட்கு அருமருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே
கற்றவர்கள்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா தாலேலோ (6)

(725)
ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (7)

(726)
மலையதனால் அணை கட்டி மதில்-இலங்கை அழித்தவனே
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே
கலை வலவர்தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ (8)

(727)
தளை அவிழும் நறுங் குஞ்சித் தயரதன்தன் குல மதலாய்
வளைய ஒரு சிலையதனால் மதில்-இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கருமணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ (9)

(728)
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கருமணியே
ஏ வரி வெஞ்சிலை வலவா இராகவனே தாலேலோ (10)

(729)
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன்
தன் அடிமேல் தாலேலோ என்று உரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே (11)

(730)
வன் தாளின் இணை வணங்கி வளநகரம்
தொழுது ஏத்த மன்னன் ஆவான்
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை
நெடுங் கானம் படரப் போகு
என்றாள் எம் இராமாவோ உனைப் பயந்த
கைகேசி தன் சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன்மகனே உன்னை நானே (1)

(731)
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இருநிலத்தை
வேண்டாதே, விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ
எம்பெருமான் என் செய்கேனே (2)

(732)
கொல் அணை வேல் வரி நெடுங் கண் கௌசலைதன்
குல மதலாய் குனி வில் ஏந்தும்
மல் அணைந்த வரைத் தோளா வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்
வியன் கான மரத்தின் நீழற்
கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ?
காகுத்தா கரிய கோவே (3)

(733)
வா போகு வா இன்னம் வந்து ஒருகாற்
கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா
விடையோன்தன் வில்லைச் செற்றாய்
மா போகு நெடுங் கானம் வல்வினையேன்
மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்குமாறே (4)

(734)
பொருந்தார் கை வேல்-நுதிபோல் பரல் பாய
மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசிநோய் கூர இன்று
பெரும்பாவியேன் மகனே போகின்றாய்
கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற் கேட்ட அருவினையேன்
என் செய்கேன் அந்தோ யானே (5)

(735)
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழிதகையேன் இருக்கின்றேனே (6)

(736)
பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப்
புனைந்து பூந் துகில் சேர் அல்குற்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செலத்தக்க வனம் தான் சேர்தல்
தூ மறையீர் இது தகவோ? சுமந்திரனே
வசிட்டனே சொல்லீர் நீரே (7)

(737)
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்திற் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே (8)

(738)
முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி
அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின்
வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக்
கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! (9)

(739)
தேன் நகு மா மலர்க் கூந்தற் கௌசலையும்
சுமித்திரையும் சிந்தை நோவ
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
மனு-குலத்தார் தங்கள் கோவே (10)

(740)
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்
வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல்தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்கோன்
குடைக் குல சேகரன் சொற் செய்த
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்
தீ நெறிக்கண் செல்லார் தாமே (11)

(741)
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1)

(742)
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே (2)

(743)
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே. (3)

(744)
தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்
தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே (4)

(745)
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று
வண் தமிழ் மா முனி கொடுத்த வரி-வில் வாங்கி
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன்தன் உயிரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய எய்தான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே (5)

(746)
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே. (6)

Lesebereich 747–751

(747)
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்
அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7)

(748)
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே (8)

(749)
செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை
உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே (9)

(750)
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்
இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10)

(751)
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்
கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)

Tirucchanda Viruttam (752–871)

Lesebereich 752–851

(752)
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே? (1)

(753)
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே (2)

(754)
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே? (3)

(755)
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே (4)

(756)
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே? (5)

(757)
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே (6)

(758)
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே? (7)

(759)
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே (8)

(760)
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (9)

(761)
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (10)

(762)
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)

(763)
உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே? (12)

(764)
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே? (13)

(765)
தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே? (14)

(766)
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே? (15)

(767)
தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே (16)

(768)
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே (17)

(769)
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப்
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே (18)

(770)
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே? (19)

(771)
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே (20)

(772)
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூரர் என் செய்தார்?
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே (21)

(773)
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே (22)

(774)
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே? (23)

(775)
கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்-
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே (24)

(776)
வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே (25)

(777)
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே (26)

(778)
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே? (27)

(779)
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே (28)

(780)
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே? (29)

(781)
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே? (30)

(782)
காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே (31)

(783)
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே? (32)

(784)
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே? (33)

(785)
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே? (34)

(786)
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே (35)

(787)
ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ? (36)

(788)
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா (37)

(789)
கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண தண்துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே (38)

(790)
வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே? (39)

(791)
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே (40)

(792)
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே (41)

(793)
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை
ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே (42)

(794)
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே? (43)

(795)
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே? (44)

(796)
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே (45)

(797)
தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே (46)

(798)
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அராவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே (47)

(799)
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடற் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே? (48)

(800)
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந் தண் நீர் அரங்கமே (49)

(801)
வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே (50)

(802)
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே (51)

(803)
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே (52)

(804)
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே (53)

(805)
இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே (54)

(806)
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே? (55)

(807)
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே? (56)

(808)
சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே (57)

(809)
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே? (58)

(810)
சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே (59)

(811)
செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே? (60)

(812)
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே (61)

(813)
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்கொடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே (62)

(814)
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே? (63)

(815)
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே (64)

(816)
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே (65)

(817)
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே? (66)

(818)
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ (67)

(819)
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ (68)

(820)
காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதிபாற்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே (69)

(821)
குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே (70)

(822)
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே (71)

(823)
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே (72)

(824)
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த உம்பர்-ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே (73)

(825)
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே (74)

(826)
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்ச்
சென்று சென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே? (75)

(827)
புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர்கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே? (76)

(828)
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே (77)

(829)
சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே (78)

(830)
பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே? (79)

(831)
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே? (80)

(832)
கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ (81)

(833)
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே (82)

(834)
மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல்
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே (83)

(835)
பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான்?
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்
என் திறத்தில் என்கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே? (84)

(836)
நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே (85)

(837)
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே (86)

(838)
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே (87)

(839)
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலாக் கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே? (88)

(840)
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே? (89)

(841)
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே (90)

(842)
பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண் இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே (91)

(843)
விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை-நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே (92)

(844)
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்கவாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே (93)

(845)
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே (94)

(846)
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே (95)

(847)
வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்
வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்
பொந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே (96)

(848)
வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
ஐயில் ஆய ஆக்கை-நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே (97)

(849)
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின்கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர்ச் சுழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே (98)

(850)
காட்டி நான் செய் வல்வினைப் பயன்தனால் மனந்தனை
நாட்டி வைத்து நல்ல-அல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே (99)

(851)
பிறப்பினோடு பேர் இடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றுமா
பெறற்கு அரிய நின்ன பாத-பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே (100)

Lesebereich 852–871

(852)
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே (101)

(853)
விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்ப்
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால்
துள்ளுநீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே (102)

(854)
திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கருக் கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே (103)

(855)
கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொற்கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே (104)

(856)
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே (105)

(857)
கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே (106)

(858)
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மாசினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன்
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே (107)

(859)
கேடு இல் சீர் வரத்தினாய்க் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம்-ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே? (108)

(860)
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்க மெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் (109)

(861)
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்
நீயும் நின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை-நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே (110)

(862)
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால-நாதனே (111)

(863)
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே (112)

(864)
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே (113)

(865)
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே (114)

(866)
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே? (115)

(867)
மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே? (116)

(868)
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனைக் கிடந்த நாதன் வேத கீதனே (117)

(869)
சொல்லினும் தொழிற்கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்
அல்லி நாள்-மலர்க் கிழத்தி நாத பாத-போதினைப்
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே (118)

(870)
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)

(871)
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே (120)

Tirumalai (872–916)

(872)
காவலிற் புலனை வைத்து
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்க மா நகருளானே (1)

(873)
பச்சை மா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே (2)

(874)
வேத நூற் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகருளானே (3)

(875)
மொய்த்த வல்வினையுள் நின்று
மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே
பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு
இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும் அந்தோ
பிறவியுள் பிணங்குமாறே (4)

(876)
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
தொழும்பர்சோறு உகக்குமாறே (5)

(877)
மறம் சுவர் மதில் எடுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
புள் கௌவக் கிடக்கின்றீரே (6)

(878)
புலை-அறம் ஆகி நின்ற
புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
தேவனே தேவன் ஆவான் (7)

(879)
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்க மா நகருளானே (8)

(880)
மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
கழலிணை பணிமின் நீரே (9)

(881)
நாட்டினான் தெய்வம் எங்கும்
நல்லது ஓர் அருள்தன்னாலே
காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்
கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச்
செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)

(882)
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச்
செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்
மதில்-திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர்
காலத்தைக் கழிக்கின்றீரே (11)

(883)
நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
அதனுக்கே கவல்கின்றேனே (12)

(884)
எறியும் நீர் வெறிகொள் வேலை
மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
புல் எழுந்து ஒழியும் அன்றே (13)

(885)
வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமின் நீரே (14)

(886)
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)

(887)
சூதனாய்க் கள்வனாகித்
தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)

(888)
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்
கண்ணினை களிக்குமாறே (17)

(889)
இனி திரைத் திவலை மோத
எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும்
தாமரைக்கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க்
கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ
என் செய்கேன் பாவியேனே? (18)

(890)
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே? (19)

(891)
பாயும் நீர் அரங்கந் தன்னுள்
பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)

(892)
பணிவினால் மனமது ஒன்றிப்
பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)

(893)
பேசிற்றே பேசல் அல்லால்
பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)

(894)
கங்கையிற் புனிதம் ஆய
காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
ஏழையேன் ஏழையேனே (23)

(895)
வெள்ள-நீர் பரந்து பாயும்
விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
கள்ளத்தே கழிக்கின்றாயே (24)

(896)
குளித்து மூன்று அனலை ஓம்பும்
குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என்கண் இல்லை
நின்கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு? நம்பீ
கடல்வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
அரங்க மா நகருளானே (25)

(897)
போதெல்லாம் போது கொண்டு உன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
என் செய்வான் தோன்றினேனே? (26)

(898)
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)

(899)
உம்பரால் அறியல் ஆகா
ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
என் செய்வான் தோன்றினேனே (28)

(900)
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
அரங்க மா நகருளானே (29)

(901)
மனத்தில் ஓர் தூய்மை இல்லை
வாயில் ஓர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
என்னை ஆளுடைய கோவே (30)

(902)
தவத்துளார் தம்மில் அல்லேன்
தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
அரங்க மா நகருளானே (31)

(903)
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை
அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக்
கண்ணனே உன்னைக் காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா
மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
மூர்க்கனேன் மூர்க்கனேனே (32)

(904)
மெய் எல்லாம் போக விட்டு
விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன்
அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்யனேனே (33)

(905)
உள்ளத்தே உறையும் மாலை
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
விலவு அறச் சிரித்திட்டேனே (34)

(906)
தாவி அன்று உலகம் எல்லாம்
தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
பாவியேன் பாவியேனே (35)

(907)
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும்
மைந்தனே மதுர ஆறே
உழைக் கன்றே போல நோக்கம்
உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
ஒழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
அரங்கமா நகருளானே (36)

(908)
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
அம்மவோ கொடியவாறே (37)

(909)
மேம் பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு
ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து உன்
கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்
சூழ் புனல் அரங்கத்தானே (38)

(910)
அடிமையிற் குடிமை இல்லா
அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
அரங்க மா நகருளானே 39

(911)
திருமறுமார்வ நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தர் ஆகில்
மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவு உறக் கொன்று சுட்டிட்டு
ஈட்டிய வினையரேலும்
அருவினைப் பயன துய்யார்
அரங்க மா நகருளானே (40)

(912)
வானுளார் அறியல் ஆகா
வானவா என்பர் ஆகில்
தேனுலாம் துளப மாலைச்
சென்னியாய் என்பர் ஆகில்
ஊனம் ஆயினகள் செய்யும்
ஊனகாரகர்களேலும்
போனகம் செய்த சேடம்
தருவரேல் புனிதம் அன்றே (41)

(913)
பழுது இலா ஒழுகல்-ஆற்றுப்
பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேலும்
எம் அடியார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொண்மின்
என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போல்
மதில்-திருவரங்கத்தானே (42)

(914)
அமர ஓர் அங்கம் ஆறும்
வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களிற் தலைவராய
சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில்
நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்க மா நகருளானே (43)

(915)
பெண் உலாம் சடையினானும்
பிரமனும் உன்னைக் காண்பான்
எண் இலா ஊழி ஊழி
தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து
ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணறா உன்னை என்னோ?
களைகணாக் கருதுமாறே (44)

(916)
வள எழும் தவள மாட
மதுரை மா நகரந் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்க-மாலைத்
துளவத் தொண்டு ஆய தொல் சீர்த்
தொண்டரடிப் பொடி சொல்
இளைய புன் கவிதையேலும்
எம்பிராற்கு இனியவாறே (45)

Tiruppalli Elucchi (917–926)

(917)
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)

(918)
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)

(919)
சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)

(920)
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (4)

(921)
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)

(922)
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)

(923)
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)

(924)
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)

(925)
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)

(926)
கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே (10)

Gemeinsames Singen als Zugang zu Bhakti Yoga. Das Bild zeigt allgemeine Mantrapraxis.

Amalan Adipiran (927–936)

(927)
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன்
நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)

(928)
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்
பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே (2)

(929)
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்
மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)

(930)
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில்
ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)

(931)
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்?
அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே (5)

(932)
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு
மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே (6)

(933)
கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அர
வின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)

(934)
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து
மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே (8)

(935)
ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி-ஆரமும் முத்துத்
தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)

(936)
கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே (10)

Kanninun Siruttambu (937–947)

(937)
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)

(938)
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)

(939)
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)

(940)
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)

(941)
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)

(942)
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)

(943)
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)

(944)
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)

(945)
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்-
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)

(946)
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)

(947)
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)

Periya Tirumoli (948–2031)

Lesebereich 948–1047

(948)
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (1)

(949)
ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (2)

(950)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (3)

(951)
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (4)

(952)
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
- நாராயணா என்னும் நாமம் (5)

(953)
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (6)

(954)
இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
- நாராயணா என்னும் நாமம் (7)

(955)
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
- நாராயணா என்னும் நாமம் (8)

(956)
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)

(957)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
- நாராயணா என்னும் நாமம் (10)

(958)
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட
வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற
இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை
அகடு உற முகடு ஏறி
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே (1)

(959)
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய
அரு வரை அணை கட்டி
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம்
இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன
வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (2)

(960)
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று
இளங்கொடிதிறத்து ஆயர்
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்
இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்
மணி அறைமிசை வேழம்
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (3)

(961)
மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர
ஒருவனது அகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணிதர
இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்
கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (4)

(962)
கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல்
அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும்
அமர்ந்த நல் இமயத்து
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை
அளை மிகு தேன் தோய்த்துப்
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (5)

(963)
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப்
பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர
இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற
நிமிர்ந்து அவை முகில் பற்றிப்
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (6)

(964)
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய
கறி வளர் கொடி துன்னிப்
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய
பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர்
எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்
பிரிதி சென்று அடை நெஞ்சே (7)

(965)
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை
இரும் பசி-அது கூர
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய
அருவரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று
எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்
பிரிதி சென்று அடை நெஞ்சே (8)

(966)
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு
உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை
இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற
தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு
பிரிதி சென்று அடை நெஞ்சே (9)

(967)
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு
பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்
கலியனது ஒலி மாலை
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு
அரு வினை அடையாவே (10)

(968)
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே (1)

(969)
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (2)

(970)
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன்
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (3)

(971)
பீளை சோரக் கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவத் தம்மில் முட்டி தள்ளி நடவாமுன்
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே (4)

(972)
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே (5)

(973)
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன்
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே (6)

(974)
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே (7)

(975)
ஈசி போமின் ஈங்கு இரேல்மின் இருமி இளைத்தீர் உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில்
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே (8)

(976)
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றாமுன்
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு ஆயிரம் நாமம் சொலி
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே (9)

(977)
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக்
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே (10)

(978)
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று
இணை-அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரளத்
தடஞ் சிலை குனித்த என் தலைவன்-
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த
தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (1)

(979)
கானிடை உருவை சுடு சரம் துரந்து
கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப
உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்-
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்
சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (2)

(980)
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த
கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்
வெண் துகில் கொடி என விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (3)

(981)
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே
தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப்
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்
பேர் அருளாளன் எம் பெருமான்-
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்
ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4)

(982)
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன்
பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று
தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்-
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த
செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (5)

(983)
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி
திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த
பனி முகில் வண்ணன் எம் பெருமான்-
காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த
கரு வரை பிளவு எழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (6)

(984)
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்
விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்
எந்தை எம் அடிகள் எம் பெருமான்-
அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க
ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (7)

(985)
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த
மன்னவன் பொன் நிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா
உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம்
தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (8)

(986)
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்
குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த
உம்பரும் ஊழியும் ஆனான்-
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு
அவனியாள் அலமரப் பெருகும்
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானே (9)

(987)
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வதரி ஆச்சிரமத்து உள்ளானை
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்
வானவர் உலகு உடன் மருவி
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்
இமையவர் ஆகுவர் தாமே (10)

(988)
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்துபோய்
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி
மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (1)

(989)
கடம் சூழ் கரியும் பரிமாவும்
ஒலி மாத் தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை
பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்-
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்
இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (2)

(990)
உலவு திரையும் குல வரையும்
ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளும் ஆய்
நின்றான் வென்றி விறல் ஆழி
வலவன் வானோர்-தம் பெருமான்
மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (3)

(991)
ஊரான் குடந்தை உத்தமன்
ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே (4)

(992)
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு
அலற அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி
விண்ணோர் பெருமான் நண்ணார்முன்
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்
கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத்
தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய
சாளக்கிராமம் அடை நெஞ்சே (5)

(993)
தாய் ஆய் வந்த பேய் உயிரும்
தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி உருவின்
குறளாய்ச் சென்று மாவலியை
ஏயான் இரப்ப மூவடி மண்
இன்றே தா என்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன்-
சாளக்கிராமம் அடை நெஞ்சே (6)

(994)
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்
அரி ஆய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த
ஒருவன் தானே இரு சுடர் ஆய்
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்
மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் தானும் ஆனான்-தன்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (7)

(995)
வெந்தார் என்பும் சுடு நீறும்
மெய்யில் பூசி கையகத்து ஓர்
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும்
திரியும் பெரியோன்-தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன
இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த
சாளக்கிராமம் அடை நெஞ்சே (8)

(996)
தொண்டு ஆம் இனமும் இமையோரும்
துணை நூல் மார்வின் அந்தணரும்
அண்டா எமக்கே அருளாய் என்று
அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து
வயலின் அயலே கயல் பாயத்
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்
சாளக்கிராமம் அடை நெஞ்சே (9)

(997)
தாரா ஆரும் வயல் சூழ்ந்த
சாளக்கிராமத்து அடிகளை
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்
கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்
அமரர் நல் நாட்டு அரசு ஆளப்
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்
அன்றி இவையே பிதற்றுமினே (10)

(998)
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்
மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி
பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி
இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (1)

(999)
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்-
திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி
போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை ஆயனே மாயா
வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (2)

(1000)
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து
சுரி குழல் மடந்தையர்திறத்துக்
காதலே மிகுத்து கண்டவா திரிந்த
தொண்டனேன் நமன்-தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை
வெண் திரை அலமரக் கடைந்த
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (3)

(1001)
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி
எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ
தழுவு என மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (4)

(1002)
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று
இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ
நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்
படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (5)

(1003)
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து
திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்
உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்
பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்
-நைமிசாரணியத்துள் எந்தாய் (6)

(1004)
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே
துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா
வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (7)

(1005)
ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்-
எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
குறுங்குடி நெடுங் கடல் வண்ணா
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன்
பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்
-நைமிசாரணியத்துள் எந்தாய் (8)

(1006)
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்-
தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன்
சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே
திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்-
நைமிசாரணியத்துள் எந்தாய் (9)

(1007)
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்-
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து
எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்
மாலை-தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்
உம்பரும் ஆகுவர் தாமே (10)

(1008)
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே (1)

(1009)
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்-
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே (2)

(1010)
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் -
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே (3)

(1011)
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்-
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (4)

(1012)
மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்-
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே (5)

(1013)
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்-
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே (6)

(1014)
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய்
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (7)

(1015)
நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால்
ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்-
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த்
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே (8)

(1016)
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்-
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய்
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே (9)

(1017)
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய
எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன்
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே (10)
------
8. திருவேங்கடம் - 1

(1018)
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல் துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த
புராணர்-தம் இடம்-பொங்கு நீர்
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு-
வேங்கடம் அடை நெஞ்சமே (1)

(1019)
பள்ளி ஆவது பாற்கடல் அரங்
கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (2)

(1020)
நின்ற மா மருது இற்று வீழ
நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்
தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது
ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (3)

(1021)
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்
திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை
பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட-
வெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (4)

(1022)
வண் கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (5)

(1023)
எண் திசைகளும் ஏழ் உலகமும்
வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (6)

(1024)
பாரும் நீர் எரி காற்றினோடு
ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (7)

(1025)
அம்பரம் அனல் கால் நிலம் சலம்
ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே 8

(1026)
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (9)

(1027)
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
ஆகி வான்-உலகு ஆள்வரே (10)

(1028)
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே (1)

(1029)
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (2)

(1030)
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்-
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (3)

(1031)
குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்-
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!-
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (4)

(1032)
எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன்
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்-
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (5)

(1033)
மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்
புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்-
விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!-
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (6)

(1034)
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்-
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!-
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (7)

(1035)
நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (8)

(1036)
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!-
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (9)

(1037)
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன்
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே (10)
-------
9. திருவேங்கடம்- 3

(1038)
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)

(1039)
இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய்
விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே (2)

(1040)
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே (3)

(1041)
உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக
கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே (4)

(1042)
தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே (5)

(1043)
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே (6)

(1044)
மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே (7)

(1045)
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே (8)

(1046)
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே (9)

(1047)
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக்
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே (10)

Lesebereich 1048–1147

(1048)
வானவர்-தங்கள் சிந்தை போல என்
நெஞ்சமே இனிது உவந்து மா தவ
மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில்-புகை
ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள்
ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (1)

(1049)
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன்
உகந்தவர்-தம்மை மண்மிசைப்
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு
குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (2)

(1050)
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள்
ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கட மலை
கோயில் கொண்டு அதனோடும் மீமிசை-
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (3)

(1051)
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே
பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்
வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (4)

(1052)
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்
புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து
ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (5)

(1053)
துவரி ஆடையர் மட்டையர் சமண்
தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (6)

(1054)
தருக்கினால் சமண் செய்து சோறு தண்
தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டு அதனோடும் வானிடை
அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (7)

(1055)
சேயன் அணியன் சிறியன் பெரியன்
என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்-
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி
வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (8)

(1056)
கூடி ஆடி உரைத்ததே உரைத்
தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலார்
ஆடு தாமரையோனும் ஈசனும்
அமரர்-கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (9)

(1057)
மின்னு மா முகில் மேவு தண் திரு
வேங்கட மலை கோயில் மேவிய
அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்
கன்னி மா மதிள் மங்கையர் கலி
கன்றி இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே (10)

(1058)
காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (1)

(1059)
தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள
எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (2)

(1060)
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே (3)

(1061)
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (4)

(1062)
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே (5)

(1063)
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (6)

(1064)
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (7)

(1065)
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்-கோன்
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (8)

(1066)
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (9)

(1067)
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே (10)

(1068)
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழச்
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த
சிவன் உறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு
பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே (1)

(1069)
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை
அப்பனை-ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (2)

(1070)
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட
நாதனை தானவர் கூற்றை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்
வியந்துதி செய்ய பெண் உரு ஆகி
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (3)

(1071)
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழை பொழிந்திட தளர்ந்து ஆயர்
எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல்
எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)

(1072)
இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும்
இன்பன் நல் புவி-தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை
-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (5)

(1073)
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு
இளையவன் அணி இழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய் என தரியாது
எம் பெருமான் அருள் என்ன
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை-
திருவல்லிக்கேணிக் கண்டேனே (6)

(1074)
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணாந்தகனை எம்மானை-
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்று ஆல
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)

(1075)
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை
-திருவல்லிக்கேணிக் கண்டேனே (8)

(1076)
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து
சென்று நின்று ஆழிதொட்டானை-
தேன் அமர் சோலை மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே (9)

(1077)
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்
மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத்
திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார்
சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே (10)

(1078)
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா
மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு
உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி
குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (1)

(1079)
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
அரையன்னது கண்டு அவன் நிற்க முனே
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும்
அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம்
உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (2)

(1080)
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து
அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்
பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினைப்
பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்
நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (3)

(1081)
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்-
தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து
அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி
பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (4)

(1082)
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு
அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட
படை தொட்டு ஒருகால் அமரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால்
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (5)

(1083)
பார் ஆர் உலகும் பனி மால் வரையும்
கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான்
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப்
பேரானை முனிந்த முனிக்கு அரையன்
பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (6)

(1084)
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து
அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிப்
பணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (7)

(1085)
பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில்
பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்
அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்
நச்சி நமனார் அடையாமை நமக்கு
அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு
இடம் மா மலை ஆவது- நீர்மலையே (8)

(1086)
பேசும் அளவு அன்று இது வம்மின் நமர்
பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்
அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்-
மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல்
நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு
இடம் மா மலை ஆவது-நீர்மலையே (9)

(1087)
நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன்
ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும்
எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்
குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே (10)

(1088)
பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை
படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்-தங்கள்
சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை
புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (1)

(1089)
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை
என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை
நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக்
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (2)

(1090)
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரைமீ கானில்
தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (3)

(1091)
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை
பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின்
ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை
அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை
கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (4)

(1092)
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ
பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன
ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப்
பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (5)

(1093)
கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவி
கிளர் பொறிய மறி திரிய அதனின்பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு
பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (6)

(1094)
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று
பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப்
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை
பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக்
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்-
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (7)

(1095)
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை
பிரை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்
தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண் இறந்த புகழினானை
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானைக் கண் ஆரக் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (8)

(1096)
தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை
படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல்
விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை
-விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து
வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன்
-கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (9)

(1097)
பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப்
பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித்
தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக்
கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க்
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
தீவினையை முதல் அரிய வல்லார் தாமே (10)
------------
16. திருக்கடல்மல்லை - 2

(1098)
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே (1)

(1099)
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே (2)

(1100)
ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான்
வானத்தில்-அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள
கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே (3)

(1101)
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக்
கொண்டாடும் நெஞ்சு உடையார்-அவர் எங்கள் குலதெய்வமே (4)

(1102)
பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல் நெஞ்சே (5)

(1103)
புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார்-அவரை வலங்கொள் என் மட நெஞ்சே (6)

(1104)
பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா
கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (7)

(1105)
செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (8)

(1106)
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு என்-தன் மட நெஞ்சே (9)

(1107)
கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர்-தம் முதல்வர் ஆவாரே (10)

(1108)
திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை
செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்
ஆகிலும் ஆசை விடாளால்
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை
-சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (1)

(1109)
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள்
துணை முலை சாந்து கொண்டு அணியாள்
குளம் படு குவளைக் கண்-இணை எழுதாள்
கோல நல் மலர் குழற்கு அணியாள்
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த
மால் என்னும் மால் இன மொழியாள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (2)

(1110)
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
தட முலைக்கு அணியிலும் தழல் ஆம்
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்
பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்
வளைகளும் இறை நில்லா என்-தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (3)

(1111)
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும்
ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா
தென்றலும் தீயினில் கொடிது ஆம்
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும்
சொல்லுமின் என் செய்கேன்? என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (4)

(1112)
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள்
உருகும் நின் திரு உரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள்
கயல் நெடுங் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (5)

(1113)
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்
தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த
வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (6)

(1114)
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளங் கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
மாயனே என்று வாய்வெருவும்
களங் கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?-
இடவெந்தை எந்தை பிரானே (7)

(1115)
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு
அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி
கொடி இடை நெடு மழைக் கண்ணி
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே (8)

(1116)
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்
பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ்
அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி
வீங்கிய வன முலையாளுக்கு
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்?
-இடவெந்தை எந்தை பிரானே 9

(1117)
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்
இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்று அறுப்பாரே (10)

(1118)
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை
மலர்மிசைமேல் அயனும் வியப்ப
முரி திரை மா கடல் போல் முழங்கி
மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு
இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (1)

(1119)
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார்
வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும்
தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (2)

(1120)
செம் பொன் இலங்கு வலங்கை வாளி
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு
கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ
வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (3)

(1121)
மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி
மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும்
ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (4)

(1122)
கலைகளும் வேதமும் நீதி நூலும்
கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள்செய்து நீண்ட
மலைகளும் மா மணியும் மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (5)

(1123)
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்
ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம்
தம்மன ஆகப் புகுந்து தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா
போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (6)

(1124)
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின்
மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும்
எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார்
எழுதிய தாமரை அன்ன கண்ணும்
ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும்
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (7)

(1125)
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க
வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால்
சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்
கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தே என்றாரே (8)

(1126)
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி
வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்
நான் இவர்-தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன-
அட்டபுயகரத்தேன் என்றாரே (9)

(1127)
மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும்
நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி
அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே (10)

(1128)
சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய்
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
பல்லவன் வில்லவன் என்று உலகில்
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1)

(1129)
கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்-
தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேர் மன்னு தென்னவனை முனையில்
செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2)

(1130)
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்
ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்
வரம் தரு மா மணிவண்ணன் இடம்
-மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்
நெடு வாயில் உக செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3)

(1131)
அண்டமும் எண் திசையும் நிலனும்
அலை நீரொடு வான் எரி கால் முதலா
உண்டவன் எந்தை பிரானது இடம்
-ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே
விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4)

(1132)
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்
துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்
திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5)

(1133)
திண் படைக் கோளரியின் உரு ஆய்
திறலோன் அகலம் செருவில் முன நாள்
புண் படப் போழ்ந்த பிரானது இடம்-
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப
விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (6)

(1134)
இலகிய நீள் முடி மாவலி-தன்
பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
உலகு உடை மன்னவன் தென்னவனைக்
கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7)

(1135)
குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால்
குரங்கைப் படையா மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்-
அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்
வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8)

(1136)
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து
முன்னே ஒருகால் செருவில் உருமின்
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி
கறை உடை வாள் மற மன்னர் கெட
கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9)

(1137)
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்
தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்
திரு மா மகள்-தன் அருளால் உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்
செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே (10)

(1138)
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்
இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை-
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூய நான்மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (1)

(1139)
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை-
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (2)

(1140)
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக்
கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை-
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட
செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (3)

(1141)
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை-
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்
குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (4)

(1142)
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்
பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை-
மறை வளர புகழ் வளர மாடம்தோறும்
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (5)

(1143)
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு
உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று
தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை-
வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு
வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (6)

(1144)
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு
வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை-
கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று
காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (7)

(1145)
பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு
பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை-
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (8)

(1146)
தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு
சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை
செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை-
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு
திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (9)

(1147)
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல
மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச்
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே (10)

Lesebereich 1148–1247

(1148)
இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் வளை
மருப்பினில் அகத்து ஒடுக்கி
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்-
கமல நல் மலர்த் தேறல்
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம்
பொதுளி அம் பொழிலூடே
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு
திருவயிந்திரபுரமே (1)

(1149)
மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள்
உறை தரு திரு மார்பன்
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய
பரன் இடம்-வரைச் சாரல்
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர
பிணி அவிழ் கமலத்துத்
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு
திருவயிந்திரபுரமே (2)

(1150)
வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்-
மெய்தகு வரைச் சாரல்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லை அம் கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு
திருவயிந்திரபுரமே (3)

(1151)
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன்
மார்பு-அகம் இரு பிளவாக்
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள்
கொடுத்தவன் இடம்-மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை
விசும்பு உற மணி நீழல்
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்
திருவயிந்திரபுரமே (4)

(1152)
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகல் இடம் அளந்து ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்
-பொன் மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு
திருவயிந்திரபுரமே (5)

(1153)
கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின்
திறத்து இளங் கொடியோடும்
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
இடம்-கவின் ஆரும்
வான் உலாவிய மதி தவழ் மால் வரை
மா மதிள் புடை சூழ
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய
திருவயிந்திரபுரமே (6)

(1154)
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்
விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது
இடம்-மணி வரை நீழல்
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்
பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண்
திருவயிந்திரபுரமே (7)

(1155)
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்
வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்
நிலவிய இடம்-தடம் ஆர்
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு
மலை வளர் அகில் உந்தித்
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு
திருவயிந்திரபுரமே (8)

(1156)
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்
விசயனுக்கு ஆய் மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்-
குலவு தண் வரைச் சாரல்
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம்
பாளைகள் கமழ் சாரல்
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு
திருவயிந்திரபுரமே (9)

(1157)
மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு
உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச தண்
திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலி
கன்றி விரித்து உரைத்த
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்
பாவங்கள் பயிலாவே (10)

(1158)
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்
தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (1)

(1159)
காயோடு நீடு கனி உண்டு வீசு
கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா
-திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (2)

(1160)
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (3)

(1161)
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்
பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து
கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (4)

(1162)
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்
பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி
புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)

(1163)
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்
துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்
மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்
அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்
அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (6)

(1164)
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (7)

(1165)
மா வாயின் அங்கம் மதியாது கீறி
மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (8)

(1166)
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர்
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்
வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (9)

(1167)
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்
திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப
அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா
ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்
பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே (10)
---------
23. தில்லைத் திருச்சித்திரகூடம் 2

(1168)
வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்-
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (1)

(1169)
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண்
பூ-மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடித்
தே மலர் தூவ வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (2)

(1170)
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு
அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு
திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (3)

(1171)
வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத்
திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (4)

(1172)
பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து
அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை ஒத்து
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து இன மால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (5)

(1173)
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல
தெய்வப் புள் ஏறி வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (6)

(1174)
ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகு ஆய
காவி மலர் நெடுங் கண்ணார் கை தொழ வீதி வருவான்-
தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (7)

(1175)
பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட
பைங் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்
சிங்க உருவின் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (8)

(1176)
கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ ஏழ் உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமகளோடும் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (9)

(1177)
தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்
தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே (10)

(1178)
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி
உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள்-அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (1)

(1179)
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை
நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை
ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்
தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (2)

(1180)
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்
மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்
நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்
மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்
செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (3)

(1181)
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்
பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட
நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே
தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால்
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (4)

(1182)
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு
திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட
விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட
அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (5)

(1183)
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள
படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த
விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்
துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (6)

(1184)
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி
வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (7)

(1185)
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்
பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்
மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (8)

(1186)
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்
கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (9)

(1187)
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்
சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார்
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே (10)

(1188)
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
புகுந்ததன்பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந்
தளிர்கள் கலந்து அவை எங்கும்
செந் தழல் புரையும் திருவாலி அம்மானே (1)

(1189)
நீலத் தட வரை மா மணி நிகழக்
கிடந்ததுபோல் அரவு அணை
வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்-
சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட
மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே (2)

(1190)
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி
இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார்
முகத்து எழு வாளை போய் கரும்பு
அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே (3)

(1191)
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார்-தம்
சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்-
புன்னை மன்னு செருந்தி வண் பொழில்
வாய்-அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே (4)

(1192)
நீடு பல் மலர் மாலை இட்டு நின்
இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை
பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே (5)

(1193)
கந்த மா மலர் எட்டும் இட்டு நின்
காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்-
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே (6)

(1194)
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து
உன் அடியேன் மனம் புகுந்த அப்
புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்-
நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண்
தாமரை மலரின்மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே (7)

(1195)
சங்கு தங்கு தடங் கடல் கடல்
மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!-
கொங்கு செண்பகம் மல்லிகை மலர்
புல்கி இன் இள வண்டு போய் இளந்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே (8)

(1196)
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து
ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம்-எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனி
யாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதி ஆய் இருந்தாய் அணி ஆலி அம்மானே (9)

(1197)
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்
தென் ஆலி இருந்த மாயனை
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர்
ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன்
வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10)
----------
26. திருவாலி - 2

(1198)
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே (1)

(1199)
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்
அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே (2)

(1200)
நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும்
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே (3)

(1201)
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ?
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும்
ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4)

(1202)
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே (5)

(1203)
தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும்
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ? (6)

(1204)
கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல்
பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? (7)

(1205)
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி
துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ?
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே? (8)

(1206)
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே (9)

(1207)
மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி
நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே (10)
----------
27. திருவாலி – 3

(1208)
கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ? (1)

(1209)
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ? (2)

(1210)
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே
பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (3)

(1211)
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ? (4)

(1212)
தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ? (5)

(1213)
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும்
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ? (6)

(1214)
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ? (7)

(1215)
முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப்
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து
மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ? (8)

(1216)
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (9)

(1217)
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே (10)

(1218)
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
நர நாரணனே கரு மா முகில்போல்
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-எத் திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1)

(1219)
முதலைத் தனி மா முரண் தீர அன்று
முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்
பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (2)

(1220)
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று
கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு
அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்
அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி
மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (3)

(1221)
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று
திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (4)

(1222)
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே
குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (5)

(1223)
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்
பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்
உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி
கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (6)

(1224)
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்
அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்
வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (7)

(1225)
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்
விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (8)

(1226)
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று
இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்
பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்
மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (9)

(1227)
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கண்டார் வணங்கக் களி யானை மீதே
கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே (10)

(1228)
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)1

(1229)
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க
தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2)

(1230)
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும்
முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)

(1231)
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம்
செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம்
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)

(1232)
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை
வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை
செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)

(1233)
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும்
தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள்
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)

(1234)
விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய்
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்-
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல்
ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே <7>

(1235)
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த
அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும்
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர்
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)

(1236)
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும்
ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்-
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)

(1237)
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும்
தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர்
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ்
மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன
சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள்
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே (10)

(1238)
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்-
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)

(1239)
வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும்
விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்
குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்-
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (2)

(1240)
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக்
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன்
குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)

(1241)
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று
உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு
அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)

(1242)
கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக்
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்
அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)

(1243)
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை
மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத்
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன்
தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர்
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)

(1244)
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்
கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து
வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (7)

(1245)
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்
குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)

(1246)
வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த
தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க
கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை
கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)

(1247)
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை
செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான்
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து
உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே (10)

Lesebereich 1248–1347

(1248)
போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல்
மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு
தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே (1)

(1249)
யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில் வேதப் பொருள்களும் ஆய்
மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை-
தேவரும் சென்று இறைஞ்சு பொழில்-திருத்தேவனார்தொகையே (2)

(1250)
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும்
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெருஞ் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்__
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே 3

(1251)
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை-
சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே (4)

(1252)
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (5)

(1253)
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரைமேல்
சேல் உகளும் வயல்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (6)

(1254)
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சேடு ஏறு பொழில் தழுவு-திருத்தேவனார்தொகையே (7)

(1255)
வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்-
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே (8)

(1256)
கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ
கொம்பு-அதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்-
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்-திருத்தேவனார்தொகையே (9)

(1257)
கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல்
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10)

(1258)
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்
கதிர் முடி-அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு
அளித்தவன் உறை கோயில்-
செம் பலா நிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள் சூழ்
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர
்-வண்புருடோத்தமமே (1)

(1259)
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக்
காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த
உம்பர்-கோன் உறை கோயில்-
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ
வேள்வியோடு ஆறு அங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்
-வண்புருடோத்தமமே (2)

(1260)
அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று
அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன்
உகந்து இனிது உறை கோயில்-
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்
குல மயில் நடம் ஆட
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர்
-வண்புருடோத்தமமே (3)

(1261)
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன்
பாகனைச் சாடிப் புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை
உதைத்தவன் உறை கோயில்-
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்
-வண்புருடோத்தமமே (4)

(1262)
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன்
படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும்
துணித்தவன் உறை கோயில்-
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்
பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்-
வண்புருடோத்தமமே (5)

(1263)
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன்
அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய
கண்ணன் வந்து உறை கோயில்-
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள்
காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்-
வண்புருடோத்தமமே (6)

(1264)
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது
உரம் பிளந்து உதிரத்தை
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய
அப்பன் வந்து உறை கோயில்-
இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு
எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்-
வண்புருடோத்தமமே (7)

(1265)
வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன்
சாபம் மற்று அது நீங்க
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம்
முகில் வண்ணன் உறை கோயில்-
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண்
பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்-
வண்புருடோத்தமமே (8)

(1266)
இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான்
முகனைத் தன் எழில் ஆரும்
உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்
உகந்து இனிது உறை கோயில்-
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன்
குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்-
வண்புருடோத்தமமே (9)

(1267)
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்
வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்
ஆலி மன் அருள் மாரி
பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப்
பத்தும் வல்லார் உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ
ரோடும் கூடுவரே (10)

(1268)
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்
பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர்-மகளோடு
மண்-மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை-
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (1)

(1269)
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை
பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை
ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை-
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2)

(1270)
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை
பங்கயத்து அயன்-அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன்
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (3)

(1271)
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க
அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானை-
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (4)

(1272)
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
என்று சென்று அடைந்தவர்-தமக்குத்
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையை சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன்
கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5)

(1273)
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
கலங்க ஓர் வாளி தொட்டானை-
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன்
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6)

(1274)
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை
கரு முகில் திரு நிறத்தவனை
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை-
கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (7)

(1275)
அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேத நல் விளக்கை
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை-
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (8)

(1276)
களங்கனி வண்ணா கண்ணனே என்-தன்
கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள்
உள்ளத்துள் ஊறிய தேனை
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை-
வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9)

(1277)
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே
வானவர்-கோனைக் கண்டமை சொல்லும்
மங்கையார் வாள் கலிகன்றி
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்
ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு
வானவர் ஆகுவர் மகிழ்ந்தே (10)

(1278)
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்-
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1)

(1279)
பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்-
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம்
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (2)

(1280)
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு
பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்-
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ
மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3)

(1281)
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்-
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (4)

(1282)
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்-
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி
ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (5)

(1283)
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்-
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (6)

(1284)
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்
பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (7)

(1285)
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம்
குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்-
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (8)

(1286)
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி
எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்-
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (9)

(1287)
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்
கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (10)

(1288)
தூம்பு உடைப் பனைக் கை வேழம்
துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடைக் குன்றம் ஏந்திக்
கடு மழை காத்த எந்தை-
பூம் புனல் பொன்னி முற்றும்
புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (1)

(1289)
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க்
கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீரக்
கடுங் கணை துரந்த எந்தை-
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக்
குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர் கமழும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (2)

(1290)
மாத் தொழில் மடங்கச் செற்று
மருது இற நடந்து வன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை
செவ்வித் தோள் புணர்ந்த எந்தை-
நாத் தொழில் மறை வல்லார்கள்
நயந்து அறம் பயந்த வண் கைத்
தீத் தொழில் பயிலும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (3)

(1291)
தாங்கு-அரும் சினத்து வன் தாள்
தடக் கை மா மருப்பு வாங்கி
பூங் குருந்து ஒசித்து புள் வாய்
பிளந்து எருது அடர்த்த எந்தை-
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்து வண்டு இரிய வாழைத்
தீங் கனி நுகரும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (4)

(1292)
கரு மகள் இலங்கையாட்டி
பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
வரும்-அவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை-
பெரு மகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (5)

(1293)
கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா
ஆற்றலும் ஆய எந்தை-
ஒண் திறல் தென்னன் ஓட
வட அரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (6)

(1294)
குன்றமும் வானும் மண்ணும்
குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா
நிலைகளும் ஆய எந்தை-
மன்றமும் வயலும் காவும்
மாடமும் மணங் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (7)

(1295)
சங்கையும் துணிவும் பொய்யும்
மெய்யும் இத் தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப்
பொருள்களும் ஆய எந்தை-
பங்கயம் உகுத்த தேறல்
பருகிய வாளை பாய
செங் கயல் உகளும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (8)

(1296)
பாவமும் அறமும் வீடும்
இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லாக்
குணங்களும் ஆய எந்தை-
மூவரில் எங்கள் மூர்த்தி
இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானே (9)

(1297)
திங்கள் தோய் மாட நாங்கூர்த்
திருமணிக்கூடத்தானை
மங்கையர் தலைவன் வண் தார்க்
கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு
பொன்-உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
ஊடு போய் விளங்குவாரே (10)

(1298)
தா அளந்து உலகம் முற்றும்
தட மலர்ப் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே (1)

(1299)
மண் இடந்து ஏனம் ஆகி
மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று
வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார்-தம்மைத்
தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (2)

(1300)
உருத்து எழு வாலி மார்வில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்து உடைத் தம்பிக்கு இன்பக்
கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும்
பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்
கருத்தனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (3)

(1301)
முனைமுகத்து அரக்கன் மாள
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே
அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்
சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்
கனை கழல் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (4)

(1302)
பட அரவு உச்சி-தன்மேல்
பாய்ந்து பல் நடங்கள்செய்து
மடவரல் மங்கை-தன்னை
மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாடத்
தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (5)

(1303)
மல்லரை அட்டு மாள
கஞ்சனை மலைந்து கொன்று
பல் அரசு அவிந்து வீழப்
பாரதப் போர் முடித்தாய்
நல் அரண் காவின் நீழல்
நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (6)

(1304)
மூத்தவற்கு அரசு வேண்டி
முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ
மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்து அமர் சோலை ஓங்கி
புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்
காத்தனே காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (7)

(1305)
ஏவு இளங் கன்னிக்கு ஆகி
இமையவர்-கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக்
கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த
புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனே களைகண் நீயே (8)

(1306)
சந்தம் ஆய் சமயம் ஆகி
சமய ஐம் பூதம் ஆகி
அந்தம் ஆய் ஆதி ஆகி
அரு மறை-அவையும் ஆனாய்
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்
மட மயில் ஆலும் நாங்கைக்
கந்தம் ஆர் காவளம் தண்
பாடியாய் களைகண் நீயே (9)

(1307)
மா வளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய
கண்ணனைக் கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார்
பார்மிசை அரசர் ஆகிக்
கோ இள மன்னர் தாழக்
குடை நிழல் பொலிவர்-தாமே (10)

(1308)
கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)

(1309)
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே (2)

(1310)
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே (3)

(1311)
கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த்
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே (4)

(1312)
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடாவருவேன் வினை ஆயின பாற்றே (5)

(1313)
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (6)

(1314)
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச்
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல் வினை தீர்த்தருளாயே (7)

(1315)
வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே (8)

(1316)
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே
ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே (9)

(1317)
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் என வல்லவர் வானவர்-தாமே (10)

(1318)
கவள யானைக் கொம்பு ஒசித்த
கண்ணன் என்றும் காமரு சீர்
குவளை மேகம் அன்ன மேனி
கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கைத்
தாமரையாள் கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (1)

(1319)
கஞ்சன் விட்ட வெம் சினத்த
களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின்
உயிரை உண்ட மாயன் என்றும்
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பஞ்சி அன்ன மெல் அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (2)

(1320)
அண்டர்-கோன் என் ஆனை என்றும்
ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள்
தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை
மன்னும் மாயன் என்று என்று ஓதி-
பண்டுபோல் அன்று-என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (3)

(1321)
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்-
கோல் வளையார்-தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டு இலங்கை
கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பல் வளையாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (4)

(1322)
அரக்கர் ஆவி மாள அன்று
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல
வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை
நின்மலன்-தான் என்று என்று ஓதி
பரக்கழிந்தாள் என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (5)

(1323)
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை அன்ன கோல மேனி
வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பாலின் நல்ல மென்-மொழியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (6)

(1324)
நாடி என்-தன் உள்ளம் கொண்ட
நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச்
செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி
பாடகம் சேர் மெல்-அடியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (7)

(1325)
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையன் என்றும்
நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பலரும் ஏச என் மடந்தை
பார்த்தன்பள்ளி பாடுவாளே (8)

(1326)
கண்ணன் என்றும் வானவர்கள்
காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும்
ஏழ் உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கைத்
தேவ-தேவன் என்று என்று ஓதி
பண்ணின் அன்ன மென்-மொழியாள்
பார்த்தன்பள்ளி பாடுவாளே (9)

(1327)
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்
பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள்
பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன்
கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்
இன்பம் நாளும் எய்துவாரே (10)

(1328)
நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே? (1)

(1329)
சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே (2)

(1330)
பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே (3)

(1331)
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே (4)

(1332)
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்-
கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே (5)

(1333)
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு-இவ் உலகத்தில்
எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் இந்தளூரீரே (6)

(1334)
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே? (7)

(1335)
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (8)

(1336)
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (9)

(1337)
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த
சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில்
ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (10)

(1338)
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து
பெரு நிலம் அளந்தவன் கோயில்-
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்-
திருவெள்ளியங்குடி-அதுவே (1)

(1339)
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு
அரக்கர்-தம் சிரங்களை உருட்டி
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்
கண்ணனார் கருதிய கோயில்-
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி
பொதும்பிடை வரி வண்டு மிண்டி
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (2)

(1340)
கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில்-
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள்
பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (3)

(1341)
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
காளமேகத் திரு உருவன்
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற
பரமனார் பள்ளிகொள் கோயில்-
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்
தொகு திரை மண்ணியின் தென்பால்
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்-
திருவெள்ளியங்குடி-அதுவே (4)

(1342)
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து
பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த
செங் கண் மால் சென்று உறை கோயில்-
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற-
திருவெள்ளியங்குடி-அதுவே (5)

(1343)
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
உற கடல் அரக்கர்-தம் சேனை
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த
கோல வில் இராமன்-தன் கோயில்-
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்-
திருவெள்ளியங்குடி-அதுவே (6)

(1344)
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு
திக்கு உற வளர்ந்தவன் கோயில்-
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்
அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்-
திருவெள்ளியங்குடி-அதுவே (7)

(1345)
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-
தம் பெருமானை அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட
மாயனார் மன்னிய கோயில்-
படியிடை மாடத்து அடியிடைத் தூணில்
பதித்த பல் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய-
திருவெள்ளியங்குடி-அதுவே (8)

(1346)
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர்
குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற
ஆழியான் அமர்ந்து உறை கோயில்-
கடி உடைக் கமலம் அடியிடை மலர
கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும்
வயல்-வெள்ளியங்குடி-அதுவே (9)

(1347)
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்
பார் இடந்து எயிற்றினில் கொண்டு
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற
திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10)

Lesebereich 1348–1447

(1348)
அறிவது அறியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்-
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்-
புள்ளம்பூதங்குடி-தானே (1)

(1349)
கள்ளக் குறள் ஆய் மாவலியை
வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளைக் கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதன் இடம்-
பள்ளச் செறுவில் கயல் உகள
பழனக் கழனி-அதனுள் போய
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்-
புள்ளம்பூதங்குடி-தானே (2)

(1350)
மேவா அரக்கர் தென் இலங்கை
வேந்தன் வீயச் சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து
மருதம் சாய்த்த மாலது இடம்-
கா ஆர் தெங்கின் பழம் வீழ
கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (3)

(1351)
வெற்பால் மாரி பழுது ஆக்கி
விறல் வாள் அரக்கர் தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்
துணித்த வல் வில் இராமன் இடம்-
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்
கவின் ஆர் கூடம் மாளிகைகள்
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (4)

(1352)
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய் ஆர் பாலோடு அமுது செய்த
நேமி அங் கை மாயன் இடம்-
செய் ஆர் ஆரல் இரை கருதிச்
செங் கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவின் மறையாளர்-
புள்ளம்பூதங்குடி-தானே (5)

(1353)
மின்னின் அன்ன நுண் மருங்குல்
வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழ விடைகள்
ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்-
மன்னும் முது நீர் அரவிந்த
மலர்மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்-
புள்ளம்பூதங்குடி-தானே (6)

(1354)
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி
மாரி பழுதா நிரை காத்து
சடையான் ஓட அடல் வாணன்
தடந் தோள் துணித்த தலைவன் இடம்-
குடியா வண்டு கள் உண்ண
கோல நீலம் மட்டு உகுக்கும
புடை ஆர் கழனி எழில் ஆரும்-
புள்ளம்பூதங்குடி-தானே (7)

(1355)
கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த எந்தை இடம்-
மறையால் முத்தீ-அவை வளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ்-
புள்ளம்பூதங்குடி-தானே (8)

(1356)
துன்னி மண்ணும் விண் நாடும்
தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்
அன்னம் ஆகி அரு மறைகள்
அருளிச்செய்த அமலன் இடம்-
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்-
புள்ளம்பூதங்குடி-தானே (9)

(1357)
கற்றா மறித்து காளியன்-தன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொன் தாமரையாள்-தன் கேள்வன்
புள்ளம்பூதங்குடி-தன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்-கோன்
கார் ஆர் புயல்கைக் கலிகன்றி
சொல்- தான் ஈர் ஐந்து இவை பாட
சோர நில்லா-துயர்-தாமே (10)

(1358)
தாம் தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்-
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
கூந்தல் கமழும்-கூடலூரே (1)

(1359)
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்-
நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
குறிஞ்சி பாடும்-கூடலூரே (2)

(1360)
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்-
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும்-கூடலூரே (3)

(1361)
கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர்
ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்-
சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண்
கோல் தேன் முரலும்-கூடலூரே (4)

(1362)
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்-
வண்டல் அலையுள் கெண்டை மிளிர
கொண்டல் அதிரும்-கூடலூரே (5)

(1363)
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்-
எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ்-கூடலூரே (6)

(1364)
கருந் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமரும் ஊர்போல-்
பெருந் தண் முல்லைப்பிள்ளை ஓடிக்
குருந்தம் தழுவும்-கூடலூரே (7)

(1365)
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்-
மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்-
இலை தாழ் தெங்கின் மேல்நின்று இளநீர்க்
குலை தாழ் கிடங்கின்-கூடலூரே (8)

(1366)
பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்-
அருகு கைதை மலர கெண்டை
குருகு என்று அஞ்சும்-கூடலூரே (9)

(1367)
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர்மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாட பாவம் போமே (10)

(1368)
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர்
வகை எனக்கு அருள்புரியே-
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு
வெள்ளறை நின்றானே (1)

(1369)
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய
மாருதம் வீதியின்வாய
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு
வெள்ளறை நின்றானே (2)

(1370)
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்
உடலகம் இரு பிளவாக்
கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண்
தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு
வெள்ளறை நின்றானே (3)

(1371)
வாம் பரி உக மன்னர்-தம் உயிர் செக
ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!-நின்
காதலை அருள் எனக்கு-
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்
வாய்-அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனித் தேன்-அது நுகர் திரு
வெள்ளறை நின்றானே (4)

(1372)
மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள்
அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண்
முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு
வெள்ளறை நின்றானே (5)

(1373)
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்
அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின்
அடிமையை அருள் எனக்கு-
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்
தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு
வெள்ளறை நின்றானே (6)

(1374)
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி
அரக்கன்-தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்-அது வளைத்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்
தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு
வெள்ளறை நின்றானே (7)

(1375)
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக
உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ
னே!-எனக்கு அருள்புரியே-
மன்னு கேதகை சூதகம் என்று இவை
வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு
வெள்ளறை நின்றானே (8)

(1376)
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று
அகல்-இடம் முழுதினையும்
பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு
வேன் எனக்கு அருள்புரியே-
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு
உழிதர மா ஏறித்
தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு
வெள்ளறை நின்றானே (9)

(1377)
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு
வெள்ளறை-அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை
ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி
கன்றி சொல் ஐஇரண்டும்
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை
யோர்க்கு அரசு ஆவர்களே (10)
---------
44. திருவரங்கம்: 1

(1378)
உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்-
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே (1)

(1379)
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி
பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்-
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே (2)

(1380)
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்-
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (3)

(1381)
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்-
துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன
்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (4)

(1382)
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்-
உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல
்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (5)

(1383)
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்-
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (6)

(1384)
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்-
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே (7)

(1385)
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய்
தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்-
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்தேனும்
பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே (8)

(1386)
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையன் ஆய இம்
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்-
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிர
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (9)

(1387)
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்நல்
இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே (10)
----
45. திருவரங்கம்: 2

(1388)
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண்
துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல்
உருவாளன் வானவர்-தம் உயிராளன்
ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (1)

(1389)
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும்
கை ஆளா-என் செய்கேன் நான்?
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ?
வேண்டாயோ? என்னும்-மெய்ய
மலையாளன் வானவர்-தம் தலையாளன்
மராமரம் ஏழ் எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (2)

(1390)
மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண்
நீர் மல்கும் வளையும் சோரும்
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்
திறம் பேசி உறங்காள் காண்மின்-
கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு
நெய் பருக நந்தன் பெற்ற
ஆன்-ஆயன் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (3)

(1391)
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
மங்கைமீர் மதிக்கிலேனே (4)

(1392)
பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
மை எழுதாள் பூவை பேணாள் ஏண்
அறியாள் எத்தனையும் எம் பெருமான்
திருவரங்கம் எங்கே? என்னும்-
நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் (5)

(1393)
தாது ஆடு வன மாலை தாரானோ?
என்று என்றே தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான்
திருவரங்கம் என்னும்-பூமேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்
மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் சொல்லுகேனே? (6)

(1394)
வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு
ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இப்
பெண் பெற்றேன் என் செய்கேன் நான்?
தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன்
ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த
தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள்
எங்ஙனம் நான் செப்புகேனே? (7)

(1395)
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது
பலர் ஏசும் அலர் ஆயிற்றால்
மறவாதே எப்பொழுதும் மாயவனே
மாதவனே என்கின்றாளால்-
பிறவாத பேராளன் பெண் ஆளன்
மண் ஆளன் விண்ணோர்-தங்கள்
அறவாளன் என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (8)

(1396)
பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும்
பால் ஊட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன்? வாரானோ?
என்று என்றே வளையும் சோரும்-
சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு
தைத்திரியன் சாமவேதி
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்
அம்மனைமீர் அறிகிலேனே (9)

(1397)
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து
அம்மானைச் சிந்தைசெய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்
தாய் மொழிந்த-அதனை நேரார்
கால வேல் பரகாலன் கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்
பொன்-உலகில் வாழ்வர்-தாமே (10)
----------
46. திருவரங்கம்: 3

(1398)
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (1)

(1399)
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்\"த (2)

(1400)
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும்தான்
ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்
ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே (3)

(1401)
வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம்
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப்
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள்
அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (4)

(1402)
நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்-
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே (5)

(1403)
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த
அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே (6)

(1404)
சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (7)

(1405)
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே (8)

(1406)
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே (9)

(1407)
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக்
காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே (10)
--------
47. திருவரங்கம்: 4

(1408)
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்
பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்
ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (1)

(1409)
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்
எண் இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (2)

(1410)
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவர் உலகும்
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி
தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்
-அரங்க மா நகர் அமர்ந்தானே (3)

(1411)
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக
மாசுணம் அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற
படு திரை விசும்பிடைப் படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (4)

(1412)
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்?
-இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்
விண் உறக் கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (5)

(1413)
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி
மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
அறிதுயில் அலை கடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (6)

(1414)
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த
கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து
மறி கடல் நெறிபட மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (7)

(1415)
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால்
உடைய தேர் ஒருவன் ஆய் உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை
மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி
பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்-
அரங்க மா நகர் அமர்ந்தானே (8)

(1416)
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால்
பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
மணி முடி வானவர்-தமக்குச
சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என்
சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்
-அரங்க மா நகர் அமர்ந்தானே (9)

(1417)
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து
பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த
அரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்று அறுப்பாரே (10)
-----------
48. திருவரங்கம்: 5

(1418)
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது
இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி உன் தோழி
உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற
சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (1)

(1419)
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு
மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது இல் வாய்மையினாயொடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும
ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (2)

(1420)
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை
பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்
கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன
அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (3)

(1421)
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்
வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர்
கொடிய செய்வன உள அதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன்
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (4)

(1422)
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்
மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம்
துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே
போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும
ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (5)

(1423)
மன்னு நான்மறை மா முனி பெற்ற
மைந்தனை மதியாத வெம் கூற்றம்-
தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்
தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா
பின்னை என்றும் நின் திருவடி பிரியா
வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (6)

(1424)
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகல் இடம் காணேன்
கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய
குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்-
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்-
அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (7)

(1425)
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்
எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்
செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (8)

(1426)
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு
ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்
செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
-அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (9)

(1427)
மாட மாளிகை சூழ் திருமங்கை
-மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும்
ஆடல்மா வலவன் கலிகன்றி
அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை
எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10)

(1428)
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே (1)

(1429)
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே (2)

(1430)
ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல்கரு
வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே (3)

(1431)
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன்
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான்
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே (4)

(1432)
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே (5)

(1433)
விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே (6)

(1434)
வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி
கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே (7)

(1435)
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே (8)

(1436)
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம்
சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே (9)

(1437)
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத்
திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே (10)

(1438)
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு
விசும்பும் அவை ஆய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை
ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட
மார்வர் தகைசேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (1)

(1439)
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி
யாமை முன நாள்
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன்
மேவும் நகர்-தான்-
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர்
கிண்டி அதன்மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (2)

(1440)
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி
யாமை முன நாள்
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட
மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி
கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (3)

(1441)
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என
வந்த அசுரர்
இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல
நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல
அடிகொள் நெடு மா
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (4)

(1442)
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என
வந்த அசுரர்
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி
ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை
அம்கை உடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (5)

(1443)
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை
ஆக முன நாள்
வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது
மேவும் நகர்-தான்-
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில்
ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (6)

(1444)
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல்
நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ
நின்ற நகர்-தான்-
மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள்
ஆடு பொழில் சூழ்
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (7)

(1445)
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி
யாளர் திரு ஆர்
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு
கூட எழில் ஆர்
மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள்
தாம் மலர்கள் தூய்
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்
-நண்ணு மனமே (8)

(1446)
வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார்
அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி
எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்-
நண்ணு மனமே (9)

(1447)
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்
நண்ணி உறையும்
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை
யானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை
ஐந்தும் ஐந்தும்
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள்
முழுது அகலுமே (10)

Lesebereich 1448–1547

(1448)
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
பண்டை நம் வினை கெட என்று அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு
அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (1)

(1449)
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (2)

(1450)
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு
அழல் நிற அம்பு-அதுஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (3)

(1451)
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்
கலை தரு குழவியின் உருவினை ஆய்
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (4)

(1452)
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (5)

(1453)
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முத
லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய்
சீர் கெழு நான்மறை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (6)

(1454)
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்
இருக்கினில் இன் இசை ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (7)

(1455)
காதல் செய்து இளையவர் கலவி தரும்
வேதனை வினை அது வெருவுதல் ஆம்
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (8)

(1456)
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (9)

(1457)
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலிகன்றி சொன்ன
பா மரு தமிழ்-இவை பாட வல்லார்
வாமனன் அடி-இணை மருவுவரே (10)

(1458)
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி
அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (1)

(1459)
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (2

(1460)
மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து-
வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த
தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (3)

(1461)
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (4)

(1462)
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை
வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (5)

(1463)
கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (6)

(1464)
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி
கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத்
தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (7)

(1465)
தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல்
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (8)

(1466)
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (9)

(1467)
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்
கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே (10)

(1468)
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம்
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே (1)

(1469)
துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே
திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே (2)

(1470)
மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும்
ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்-
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே (3)

(1471)
சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே (4)

(1472)
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச்
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே (5)

(1473)
மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே (6)

(1474)
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே (7)

(1475)
முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால்
விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம்
தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே (8)

(1476)
சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில்
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே (9)

(1477)
தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக்
கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை
ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே (10)

(1478)
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (1)

(1479)
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
இங்கு என் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
திங்கள் எரி கால் செஞ் சுடர் ஆயவன் தேசு உடை
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (2)

(1480)
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது? என்னாதமுன்
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்-
நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே (3)

(1481)
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாதமுன்
செம் பொன் கமுகு-இனம்-தான் கனியும் செழும் சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (4)

(1482)
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண்
சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (5)

(1483)
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து
என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன்
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான்
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (6)

(1484)
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன்
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (7)

(1485)
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக்
கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர்
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (8)

(1486)
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாதமுன்
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (9)

(1487)
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன்
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறை ஆர் நெடு வேல் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே (10)

(1488)
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்-
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும்-நறையூரே (1)

(1489)
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்-
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய-நறையூரே (2)

(1490)
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்-
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும்-நறையூரே (3)

(1491)
உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறி ஆர் கூந்தல் பின்னை-பொருட்டு ஆன் வென்றான் ஊர்-
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடம் ஆட
நறு நாள்மலர்மேல் வண்டு இசை பாடும்-நறையூரே (4)

(1492)
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்-
பெடையோடு அன்னம் பெய்வளையார்-தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும்-நறையூரே (5)

(1493)
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்-
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகு வாய் மலர்மேல் அன்னம் உறங்கும்-நறையூரே (6)

(1494)
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்-
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி
நந்து வாரும் பைம் புனல் வாவி-நறையூரே (7)

(1495)
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் விறல் வியூகம்
விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்-
கொள்ளைக் கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ளக் கமலத் தேறல் உகுக்கும்-நறையூரே (8)

(1496)
பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்-
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த-நறையூரே (9)

(1497)
தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்
காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை-
சேமத் துணை ஆம் செப்பும்-அவர்க்கு திருமாலே (10)

(1498)
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடகிற்பீர்
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு
மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1)

(1499)
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்
குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை
இணை-அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (2)

(1500)
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி
பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம்
திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத்
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (3)

(1501)
பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கி
பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்
அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற
விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (4)

(1502)
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர்
அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு
விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (5)

(1503)
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்
தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6)

(1504)
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி
முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (7)

(1505)
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்
மன் எல்லாம் முன் அவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (8)

(1506)
தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல்
தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன்
பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர்
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (9)

(1507)
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே (10)
---------
57. திருநறையூர்: 4

(1508)
ஆளும் பணியும் அடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரைத்
தோளும் தலையும் துணிவு எய்தச்
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்-
வேளும் சேயும் அனையாரும்
வேல்-கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா
நறையூர் நின்ற நம்பியே (1)

(1509)
முனி ஆய் வந்து மூவெழுகால்
முடி சேர் மன்னர் உடல் துணிய
தனி வாய் மழுவின் படை ஆண்ட
தார் ஆர் தோளான்-வார் புறவில்
பனி சேர் முல்லை பல் அரும்ப
பானல் ஒருபால் கண் காட்ட
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும்
நறையூர் நின்ற நம்பியே (2)

(1510)
தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி
துரந்தான் இரந்தான் மாவலி மண்-
புள் ஆர் புறவில் பூங் காவி
பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (3)

(1511)
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி அழுதான்-மென் மலர்மேல்
களியா வண்டு கள் உண்ண
காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே (4)

(1512)
வில் ஆர் விழவில் வட மதுரை
விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்-
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே (5)

(1513)
வள்ளி கொழுநன் முதலாய
மக்களோடு முக்கணான்
வெள்கி ஓட விறல் வாணன்
வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்-
பள்ளி கமலத்திடைப் பட்ட
பகு வாய் அலவன் முகம் நோக்கி
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6)

(1514)
மிடையா வந்த வேல் மன்னர்
வீய விசயன் தேர் கடவி
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர்
-கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்
படையான்-வேதம் நான்கு ஐந்து
வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ்
நடையா வல்ல அந்தணர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (7)

(1515)
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர்
கலங்க சங்கம் வாய் வைத்தான்-
செந்தாமரைமேல் அயனோடு
சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (8)

(1516)
ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்
இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர்
வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
நறையூர் நின்ற நம்பியே (9)

(1517)
நன்மை உடைய மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியைக்
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்
கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
பன்னி உலகில் பாடுவார்
பாடு சாரா பழ வினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய்
வானோர் வணங்க வாழ்வாரே (10)
-----------
58. திருநறையூர்: 5

(1518)
மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (1)

(1519)
முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள்
அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே (2)

(1520)
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை
நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (3)

(1521)
ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர்த் துழாய் மாலை முடியானை
நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே (4)

(1522)
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே (5)

(1523)
உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6)

(1524)
கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (7)

(1525)
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே (8)

(1526)
பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும்
சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை
கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே (9)

(1527)
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார்
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே (10)
---------
59. திருநறையூர்: 6

(1528)
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்-
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை-அடியே அடை நெஞ்சே (1)

(1529)
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்-
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே (2)

(1530)
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின்
திளை கொண்ட பழம் கெழுமித் திகழ் சோலைத் திருநறையூர்-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு
அளை வெண்ணெய் உண்டான்-தன்-அடி-இணையே அடை நெஞ்சே (3)

(1531)
துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே (4)

(1532)
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும்
மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும்
புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே (5)

(1533)
பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும்
மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்-
மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே (6)

(1534)
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில்
பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்-
கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன்
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே (7)

(1535)
குலை ஆர்ந்த பழுக் காயும் பசுங் காயும் பாளை முத்தும்
தலை ஆர்ந்த இளங் கமுகின் தடஞ் சோலைத் திருநறையூர்-
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே (8)

(1536)
மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்-
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த
இறை ஆகி நின்றான் தன் இணை-அடியே அடை நெஞ்சே (9)

(1537)
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே (10)
----------
60. திருநறையூர்: 7

(1538)
கிடந்த நம்பி குடந்தை மேவி கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (1)

(1539)
விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன்
தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன்
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால்
நடந்தானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (2)

(1540)
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பைப்
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய்
நாணாது உண்டான் நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (3)

(1541)
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (4)

(1542)
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை-தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம்
நடையா உண்ணக் கண்டான் நாமம்-நமோ நாராயணமே (5)

(1543)
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்-
நானும் சொன்னேன் நமரும் உரைமின்-நமோ நாராயணமே (6)

(1544)
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்-
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்-நமோ நாராயணமே (7)

(1545)
கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்-நமோ நாராயணமே (8)

(1546)
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்-
நங்கள் வினைகள் தவிர உரைமின்-நமோ நாராயணமே (9)

(1547)
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை
காவித் தடங் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே (10)
----------
61. திருநறையூர்: 8

Lesebereich 1548–1647

(1548)
கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை எனைப் பணி-எந்தை பிரானே (1)

(1549)
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும்
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு-என் எந்தை பிரானே (2)

(1550)
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்-
கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே (3)

(1551)
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல்மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே? (4)

(1552)
வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும்
கல் ஆர் கடுங் கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய்-உன்னை யான் வணங்கித் தொழும் ஆறே (5)

(1553)
பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய
கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (6)

(1554)
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (7)

(1555)
அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே (8)

(1556)
தூயாய் சுடர் மா மதிபோல் உயிர்க்கு எல்லாம்
தாய் ஆய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே (9)

(1557)
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே (10)
----------
62. திருநறையூர்: 9

(1558)
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால்
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (1)

(1559)
ஓடா ஆள் அரியின் உரு ஆய் மருவி என்-தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா
பாடேன் தொண்டர்-தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (2)

(1560)
எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன்
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே (3)

(1561)
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான்
அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ (4)

(1562)
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்
நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ (5)

(1563)
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்
அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ (6)

(1564)
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்-
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ (7)

(1565)
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள்
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்-
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ (8)

(1566)
ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால்
யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ (9)

(1567)
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன்
சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே (10)
----------
63. திருநறையூர்: 10

(1568)
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்
செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம்
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும்
மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை
நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என்
கண்-இணைகள் களிப்பக் களித்தேனே (1)

(1569)
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும்
தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை
அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட
வாயனை மகரக் குழைக் காதனை
மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என்
அன்பனை அன்றி ஆதரியேனே (2)

(1570)
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச்
சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச்
சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்
கோவினை குடம் ஆடிய கூத்தனை
எந்தையை எந்தை தந்தை தம்மானை
எம்பிரானை-எத்தால் மறக்கேனே? (3)

(1571)
உரங்களால் இயன்ற மன்னர் மாள
பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்
எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு
அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே (4)

(1572)
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது
அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி
எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை
வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட
தீங் கரும்பினை தேனை நன் பாலினை
அன்றி என் மனம் சிந்தை செய்யாதே (5)

(1573)
எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும்
என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்
தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை
காதலால் மறை நான்கும் முன் ஓதிய
பட்டனை பரவைத் துயில் ஏற்றை என்
பண்பனை அன்றி பாடல் செய்யேனே (6)

(1574)
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற
பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்
கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்
விண் உளார் பெருமானை எம்மானை
வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல்
வண்ணமே அன்றி வாய் உரையாதே (7)

(1575)
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு-
இம்மையே அருள்பெற்றமையால் அடும்
துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்
தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும்
முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர்
கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட
கள்வனை-இன்று கண்டுகொண்டேனே (8)

(1576)
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த்
தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
அன்றி என் மனம் போற்றி என்னாதே (9)

(1577)
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்
தோன்றல் வாள் கலியன் திரு ஆலி
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன்
நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்
தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப்
பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர்
பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10)

(1578)
கண் சோர வெம் குருதி வந்து இழிய
வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்
வானவர்-தம் கோவே என்று
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு
மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்
காண்மின்-என் தலைமேலாரே (1)

(1579)
அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை
வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று
கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை
வான் உந்து கோயில் மேய
எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும்
என் மனத்தே இருக்கின்றாரே (2)

(1580)
மீது ஓடி வாள் எயிறு மின் இலக
முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த
கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை
எம் பெருமான் தாளை ஏத்தி
போதோடு புனல் தூவும் புண்ணியரே
விண்ணவரின் பொலிகின்றாரே (3)

(1581)
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை
வெம் சமத்துப் பொன்றி வீழ
போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள்
போக்குவித்தாய் என்று நாளும்
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை
எம் பெருமான் உம்பர் ஆளும்
பேராளன் பேர் ஓதும் பெரியோரை
ஒருகாலும் பிரிகிலேனே (4)

(1582)
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின்
வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை
முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்-
சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை
எம் பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி
எப்பொழுதும் தித்திக்குமே (5)

(1583)
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த
பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்
துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை
எம் பெருமான் அடியார்-தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும்
கண் இணையும் களிக்கும் ஆறே (6)

(1584)
பை விரியும் வரி அரவில் படு கடலுள்
துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரைபோல் மாயவனே
என்று என்றும் வண்டு ஆர் நீலம்
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்
திரு வடிவைச் சிந்தித்தேற்கு என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு
ஆள் ஆம்-என் அன்பு-தானே (7)

(1585)
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத
பாவங்கள் சேரா-மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்
மென் தளிர்போல் அடியினானை
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ்
தண் சேறை அம்மான்-தன்னை
கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத்
தொழுவாரைக் கருதுங்காலே (8)

(1586)
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்
போது ஒருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்கொலோ?-விளை வயலுள்
கரு நீலம் களைஞர் தாளால்
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை
எம் பெருமான் தாளை நாளும்
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்-
என் உள்ளம் உருகும் ஆறே (9)

(1587)
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து
வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்
தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி
ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும்
துணைக் கையால் தொழுது நின்றே (10)
----------
65. திருவழுந்தூர்: 1

(1588)
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்-
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே (1)

(1589)
பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்-
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (2)

(1590)
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும்
உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர்போலும்-
கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள்
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே (3)

(1591)
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர்போலும்-
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (4)

(1592)
பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய்
நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர்போலும்-
துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே (5)

(1593)
ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர்போலும்-
நீடு மாடத் தனிச் சூலம் போழக் கொண்டல் துளி தூவ
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (6)

(1594)
மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்-
வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே (7)

(1595)
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்-
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (8)

(1596)
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (9)

(1597)
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட
அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே 10
--------
66. திருவழுந்தூர்: 2

(1598)
சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே (1)

(1599)
கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே (2)

(1600)
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (3)

(1601)
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை-அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே (4)

(1602)
கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
வஞ்சனப் பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை
செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சனக் குன்றம்-தன்னை-அடியேன் கண்டுகொண்டேனே (5)

(1603)
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரி யானை உகந்தான்-அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
கரியானை-அடியேன் கண்டுகொண்டு களித்தேனே (6)

(1604)
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா
உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே (7)

(1605)
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதிதொறும்
அலை ஆர் கடல்போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
கலை ஆர் சொற்பொருளை-கண்டுகொண்டு களித்தேனே (8)

(1606)
பேரானை குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர்
வார் ஆர் வனமுலையாள் மலர்-மங்கை நாயகனை
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கார் ஆர் கரு முகிலை-கண்டுகொண்டு களித்தேனே (9)
----------
67. திருவழுந்தூர்: 3

(1607)
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும்
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே (10)

(1608)
திருவுக்கும் திரு ஆகிய செல்வா
தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே
உலகு உண்ட ஒருவா திரு மார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால்
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (1)

(1609)
பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி
பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய்
மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா
சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்-
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (2)

(1610)
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும்
நீண்ட தோள் உடையாய் அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய்
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப்
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்-
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (3)

(1611)
பரனே பஞ்சவன் பூழியன் சோழன்
பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மதுசூதா
மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண்
நரனே நாரணனே திருநறையூர்
நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதிவராகம் முன் ஆனாய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (4)

(1612)
விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய்
பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (5)

(1613)
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண
சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும்
தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேத துவாபர
கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய்
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (6)

(1614)
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்
கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்
எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய்
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே
நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (7)

(1615)
நெடியானே கடி ஆர்கலி நம்பீ
நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து
காவல் செய்த அக் காவலைப் பிழைத்து
குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (8)

(1616)
கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி
கூறை சோறு இவை தா என்று குமைத்து
போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன்
புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாகணையில் துயில்வானே
திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய்
-அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (9)
------------
68. திருவழுந்தூர்: 4

(1617)
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி
ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன்
சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை
தூய மாலை இவை-பத்தும் வல்லார்
மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு
மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே (10)

(1618)
செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன்
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும்
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்-
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (1)

(1619)
முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண
முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்-
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம்
-அவை முரல செங் கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (2)

(1620)
குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்-
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (3)

(1621)
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம்
திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்-
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (4)

(1622)
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்-
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல்
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (5)

(1623)
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித்
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்-
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6)

(1624)
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன்
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்-
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7)

(1625)
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்-
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (8)

(1626)
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்-
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும்
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (9)

(1627)
பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப்
படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும்
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன்
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார்
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே (10)

(1628)
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே (1)

(1629)
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி
மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்-
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே (2)

(1630)
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே (3)

(1631)
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால்
தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம்
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே (4)

(1632)
நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும்
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச்
செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே (5)

(1633)
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக்
கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம்
தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே (6)

(1634)
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா எனக்கு உரையாய் இது-மறை நான்கின் உளாயோ?
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே (7)

(1635)
மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே (8)

(1636)
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே (9)

(1637)
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை இமையோர் பெருமானை
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை
பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே (10)

(1638)
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை
பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து
ஆசையை அமுதம் பொதி இன் சுவைக்
கரும்பினை கனியை-சென்று நாடி
-கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (1)

(1639)
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை
மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலை பகலை இற்றை நாளினை
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடைத் தேறலை-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (2)

(1640)
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை
வாச வார் குழலாள் மலை-மங்கை-தன்
பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை
பான்மையை பனி மா மதியம் தவழ்
மங்குலை சுடரை வட மா மலை
உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை-சென்று நாடி
-கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (3)

(1641)
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை
மாயனை மதிள் கோவல் இடைகழி
மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை
எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை
காசினை மணியை-சென்று நாடி-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (4)

(1642)
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்
ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய
கூற்றினை குரு மா மணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினை புனலை-சென்று நாடி-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (5)

(1643)
துப்பனை துரங்கம் படச் சீறிய
தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர்
செப்பினை திருமங்கை மணாளனை
தேவனை திகழும் பவளத்து ஒளி
ஒப்பனை உலகு ஏழினை ஊழியை
ஆழி ஏந்திய கையனை அந்தணர்
கற்பினை-கழுநீர் மலரும் வயல்
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (6)

(1644)
திருத்தனை திசை நான்முகன் தந்தையை
தேவ-தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை
விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
அருத்தனை அரியை பரி கீறிய
அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற
கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (7)

(1645)
வெம் சினக் களிற்றை விளங்காய் விழக்
கன்று வீசிய ஈசனை பேய் மகள்
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய
நஞ்சினை அமுதத்தினை நாதனை
நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (8)

(1646)
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை
மாலை மா மதியை மறையோர்-தங்கள்
கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று-
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (9)
----------
71. திருக்கண்ணபுரம்: 1

(1647)
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
காதலால் கலிகன்றி உரைசெய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில்
கற்கலாம் கவியின் பொருள்-தானே (10)

Lesebereich 1648–1747

(1648)
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம்
என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண்
என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி
இருக்கின்றாளால்-
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (1)

(1649)
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது?
என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை
என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா
என்கின்றாளால்-
கரு வரைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (2)

(1650)
துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால்
என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும்
என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால்
என்கின்றாளால்-
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (3)

(1651)
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன்
என்கின்றாளால்
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான்
என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு
என்கின்றாளால்-
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (4)

(1652)
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா
என்கின்றாளால்
வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்?
என்கின்றாளால்-
கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (5)

(1653)
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன்
என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன்
என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால்
என்கின்றாளால்-
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (6)

(1654)
செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
என்கின்றாளால்
அவ் அரத்த அடி-இணையும் அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ?
என்கின்றாளால்-
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (7)

(1655)
கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான்
என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால்
என்கின்றாளால்
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ?
என்கின்றாளால்-
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (8)

(1656)
வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? (9)
-----------
72.திருக்கண்ணபுரம்: 2

(1657)
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
கலியன் சொன்ன
பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
புகழ் தக்கோரே (10)

(1658)
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே? (1)

(1659)
நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே (2)

(1660)
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்-
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)

(1661)
உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ? (4)

(1662)
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே (5)

(1663)
வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6)

(1664)
தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே (7)

(1665)
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே? (8)

(1666)
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? (9)
----------
73. திருக்கண்ணபுரம்: 3

(1667)
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப்
பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல்
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே (10)

(1668)
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் வரி வளையே (1)

(1669)
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே (2)

(1670)
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த
செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே (3)

(1671)
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும்
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே (4)

(1672)
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே (5)

(1673)
மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (6)

(1674)
வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும்
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (7)

(1675)
கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள்
செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும்
வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமலநாபனுக்கு இழந்தேன்-என் செறி வளையே (8)

(1676)
வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே (9)

(1677)
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே (10)
---------
74. திருக்கண்ணபுரம்: 4

(1678)
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1)

(1679)
வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான்
தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2)

(1680)
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான்
வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3)

(1681)
நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய்
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4)

(1682)
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி?
பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5)

(1683)
மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6)

(1684)
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன்
காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (7)

(1685)
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8)

(1686)
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9)
--------
75. திருக்கண்ணபுரம்: 5

(1687)
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ (10)

(1688)
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய
தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப்
பெறும் அளவு இருந்தேனை
அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர்
அவை சுட அதனோடும்
மந்தமாருதம் வன முலை தடவந்து
வலிசெய்வது ஒழியாதே (1)

(1689)
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன்
வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்
தாழ்ந்தது ஓர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது
ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
செய்வது ஒன்று அறியேனே (2)

(1690)
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்
வளைகளும் இறை நில்லா
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம்
பெண் உயிர்க்கு இரங்குமோ?
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை
இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்
அஞ்சேல் என்பார் இலையே (3)

(1691)
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்
கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும்
வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும்
தழல் முகந்து இள முலைமேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை
எனக்கு எனப் பெறலாமே (4)

(1692)
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து
இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும்
பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை
சுடர் படு முதுநீரில்
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர்
அந்தி வந்து அடைகின்றதே (5)

(1693)
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட
முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்
வந்திலன் என் செய்கேன்?
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன்
இணை நெடுங் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன
கழியும் ஆறு அறியேனே (6)

(1694)
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
கோனது வரை ஆகம்
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம்
அடிகளும் வாரானால்
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும்
விடை மணி அடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி
விளைவது ஒன்று அறியேனே (7)

(1695)
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும்
முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய
மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை
அடங்க அம் சிறை கோலித்
தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர்
கொடு வினை அறியேனே (8)

(1696)
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்
கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என்
வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என்
சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன்
ஆவியை அடுகின்றதே (9)
------------
76. திருக்கண்ணபுரம்: 6

(1697)
வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே! (10)

(1698)
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. (1)

(1699)
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து
பெருந் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை
இருந்தார்-தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப
கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே 2

(1700)
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்
வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி-தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (3)

(1701)
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (4)

(1702)
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (5)

(1703)
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள்
பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன்
கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (6)

(1704)
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை-தன்னால் அடர்ப்புண்டு
கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (7)

(1705)
மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும்
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (8)

(1706)
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (9)

(1707)
கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை
திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன்
மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே (10)
---------
77. திருக்கண்ணபுரம்: 7

(1708)
வியம் உடை விடை இனம் உடைதர மட மகள்
குயம் மிடை தட வரை அகலம்-அது உடையவர்-
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம்-அடிகள்-தம் இடமே (1)

(1709)
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்-
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே (2)

(1710)
புயல் உறு வரை-மழை பொழிதர மணி நிரை
மயல் உற வரை குடை எடுவிய நெடியவர்-
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம்-அடிகள்-தம் இடமே (3)

(1711)
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய்
போது செய்து அமரிய புனிதர்-நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்-மகள்
காதல்செய் கணபுரம்-அடிகள்-தம் இடமே (4)

(1712)
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல்-இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக்
கண்டவர் கணபுரம்-அடிகள்-தம் இடமே (5)

(1713)
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில்
தழுவிய உருவினர்-திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (6)

(1714)
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்-
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர்
கருதிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (7)

(1715)
படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு தட வரை அகலம்-அது உடையவர்-
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம்-அடிகள்-தம் இடமே (8)

(1716)
புலம் மனும் மலர்மிசை மலர்-மகள் புணரிய
நிலமகள் என இன மகளிர்கள் இவரொடும்
வலம் மனு படையுடை மணி வணர்-நிதி குவைக்
கலம் மனு கணபுரம்-அடிகள்-தம் இடமே (9)

(1717)
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே (10)
---------
78. திருக்கண்ணபுரம்: 8

(1718)
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின்
மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா உருவில் ஆன் ஆயன்-அவனை-அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (1)

(1719)
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய்
விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை-
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (2)

(1720)
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை-
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (3)

(1721)
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப்
பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (4)

(1722)
தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை-
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (5)

(1723)
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை-
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும்
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (6)

(1724)
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்துச்
செய்த வெம்போர் நம்பரனை-செழுந் தண் கானல் மணம் நாறும்
கைதை வேலிக் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (7)

(1725)
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்துச்
செற்ற கொற்றத் தொழிலானை-செந்தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (8)

(1726)
துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை-
உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (9)

(1727)
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய்
தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும்
ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த
தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே (10)
-----
79. திருக்கண்ணபுரம்: 9

(1728)
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (1)

(1729)
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார்
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே (2)

(1730)
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப்
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? (3)

(1731)
மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
அக்காரக் கனியை-அடைந்து உய்ந்துபோனேனே (4)

(1732)
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?-
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே (5)

(1733)
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை-
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்-
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே (6)

(1734)
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-
எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (7)

(1735)
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே (8)

(1736)
கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை-
கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ? (9)

(1737)
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன்
கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே (10)
--------
80. திருக்கண்ணபுரம்: 10

(1738)
வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம்
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே (1)

(1739)
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (2)

(1740)
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும்
கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (3)

(1741)
பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல்
உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்-
மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே (4)

(1742)
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்-
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே (5)

(1743)
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப்
பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ
காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே (6)

(1744)
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு-அணைமேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர்
கள்ளர்போல்-கண்ணபுரத்து உறை அம்மானே (7)

(1745)
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (8)

(1746)
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே (9)

(1747)
கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே (10)

Lesebereich 1748–1847

(1748)
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
வாள் அரவின் அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி
சாம மா மேனி என் தலைவன்-
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம்
அருங் கலை பயின்று எரி மூன்றும்
செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (1)

(1749)
கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக்
கராம் கொளக் கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை
துணிபட-சுடு படை துரந்தோன்-
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர்
கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (2)

(1750)
வாதை வந்து அடர வானமும் நிலனும்
மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி
விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்-
போது அலர் புன்னை மல்லிகை மௌவல்
புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (3)

(1751)
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி
வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை
தீர்த்தவன் பஞ்சவர் பாகன்-
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து
உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (4)

(1752)
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய்
மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து
அலை புனல் இலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (5)

(1753)
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்
மணி முடி பொடிபடுத்து உதிரக்
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம்
தவிர்ந்தவன்-குலை மலி கதலிக்
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும்
குளிர் தரு சூதம் மாதவியும்
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (6)

(1754)
வான் உளார்-அவரை வலிமையால் நலியும்
மறி கடல் இலங்கையார்-கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப்
பரு முடி உதிர வில் வளைத்தோன்-
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட
கண முகில் முரசம் நின்று அதிர
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (7)

(1755)
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை
அஞ்சிடாதே இட அதற்கு
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ
பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்-
வரையின் மா மணியும் மரகதத் திரளும்
வயிரமும் வெதிர் உதிர் முத்தும்
திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (8)

(1756)
பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய
பாரத மா பெரும் போரில்
மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர்
மைத்துனற்கு உய்த்த மா மாயன்-
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்
சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானே (9)

(1757)
கலை உலா அல்குல் காரிகைதிறத்து
கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற
திருக்கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலாம் மாட மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல்-மாலை ஒன்பதோடு ஒன்றும்
வல்லவர்க்கு இல்லை-நல்குரவே (10)

(1758)
பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-
அச்சோ ஒருவர் அழகியவா (1)

(1759)
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்
சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்
செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல் அடியார் வணங்க
பல் மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-
அச்சோ ஒருவர் அழகியவா (2)

(1760)
வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்
செவ்விய ஆகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-
அச்சோ ஒருவர் அழகியவா (3)

(1761)
வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்
நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவர் இவரது உருவம் சொலலில்
அம் பவளத் திரளேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (4)

(1762)
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-
அச்சோ ஒருவர் அழகியவா (5)

(1763)
வெம் சின வேழ மருப்பு ஒசித்த
வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்
தாமரைக் கண்கள் இருந்த ஆறு
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த
காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (6)

(1764)
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ
பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்
அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-
அச்சோ ஒருவர் அழகியவா (7)

(1765)
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட
மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த
மா முகில் போன்று உளர் வந்து காணீர்
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-
அச்சோ ஒருவர் அழகியவா (8)

(1766)
எண் திசையும் எறி நீர்க் கடலும்
ஏழ் உலகும் உடனே விழுங்கி
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்
கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்
அண்டத்து அமரர் பணிய நின்றார்-
அச்சோ ஒருவர் அழகியவா (9)

(1767)
அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலிகன்றி குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்
வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10)
-------
83. திருப்புல்லாணி: 1

(1768)
தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு-
பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே (1)

(1769)
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள்
பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (2)

(1770)
ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு-
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே (3)

(1771)
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர்
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (4)

(1772)
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு-
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே (5)

(1773)
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு-
வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே (6)

(1774)
பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய்
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்?
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே (7)

(1775)
அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய்
சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு-
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே (8)

(1776)
ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப்
போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே (9)

(1777)
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள்
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10)
-------------
84. திருப்புல்லாணி: 2

(1778)
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே? (1)

(1779)
முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே (2)

(1780)
வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள்
பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை-நோய் செப்புமினே (3)

(1781)
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால்
அரி உரு ஆய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன்
அரி மலர்க் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே (4)

(1782)
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்-தன்னை ஏசிலும் பேசிடினும்
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே (5)

(1783)
சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால்
செழுந் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தேன்-என்-தன் எழில் நிறமும் சங்குமே (6)

(1784)
கனை ஆர் இடி-குரலின் கார் மணியின் நா ஆடல்
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனை ஆர் மணி மாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெம் தழலே வீசுமே (7)

(1785)
தூம்பு உடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த
பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு
பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்-தனக்கு ஓர் வெம் தழலே (8)

(1786)
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே (9)

(1787)
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார்
மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே (10)
-------------
85. திருக்குறுங்குடி: 1

(1788)
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி
துவள என் நெஞ்சகம் சோர ஈரும்
சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்
என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (1)

(1789)
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த
தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண
ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதைமையால் இருந்து
பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)

(1790)
காலையும் மாலை ஒத்துண்டு கங்குல்
நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம்
மற்றும் உள அவை வந்திடாமுன்
கோல மயில் பயிலும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3)

(1791)
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
ஓர் இரவும் உறங்காதிருப்பேன்-
பெரு மணி வானவர் உச்சி வைத்த
பேர் அருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (4)

(1792)
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன்
தீம் குழல் ஒசையும் தென்றலோடு
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
கோல இளம்பிறையோடு கூடி
பண்டைய அல்ல இவை நமக்கு
பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (5)

(1793)
எல்லியும் நன் பகலும் இருந்தே
ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம்
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும்
மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (6)

(1794)
செங் கண் நெடிய கரிய மேனித்
தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல
ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு
ஆடும்-அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (7)

(1795)
கேவலம் அன்று கடலின் ஓசை
கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும்
அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு
ஏ வலம் காட்டி இவன் ஒருவன்
இப்படியே புகுந்து எய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (8)

(1796)
சோத்து என நின்று தொழ இரங்கான்
தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும்
போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான்
போயின ஊர் அறியேன் என் கொங்கை
மூத்திடுகின்றன மற்று அவன்-தன்
மொய் அகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர்-கோன் விரும்பும்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (9)

(1797)
செற்றவன் தென் இலங்கை மலங்க
தேவர் பிரான் திரு மா மகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
பேர்-அருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன்
கண் அகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (10)
--------------
86. திருக்குறுங்குடி: 2

(1798)
அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்-
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே 1

(1799)
துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்-
செங் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே 2

(1800)
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்!-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவும் ஊர்-
ஏழைச் செங்கால் இன் துணை நாரைக்கு இரை தேடி
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே 3

(1801)
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர்போலும்-
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே-தான் மணம் நாறும் குறுங்குடியே 4

(1802)
கவ்வைக் களிற்று மன்னர் மாள கலி மாத் தேர்
ஐவர்க்கு ஆய் அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும்-
மை வைத்து இலங்கு கண்ணார்-தங்கள் மொழி ஒப்பான்
கொவ்வைக் கனி வாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே 5

(1803)
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!-
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில்
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே 6

(1804)
வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்!-
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7

(1805)
நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள்
ஆரா அன்போடு எம்பெருமான் ஊர்-அடைமின்கள்-
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே 8

(1806)
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே 9

(1807)
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம்
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலை ஆர் பாடல் பாடப் பாவம் நில்லாவே 10

(1808)
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 1

(1809)
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும்
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 2

(1810)
பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று
பேணுவார் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீள் நிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3

(1811)
பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம்-அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல்
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 4

(1812)
மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 5

(1813)
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர்-தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 6

(1814)
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா
பேயர்-தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 7

(1815)
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 8

(1816)
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல்
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 9

(1817)
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச்
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன்
கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே 10
-----------------
88. திருமாலிருஞ்சோலை: 1

(1818)
முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார்
கலவியை விடு தடுமாறல்
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
ஆய எம் அடிகள்-தம் கோயில்-
சந்தொடு மணியும் அணி மயில் தழையும்
தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (1)

(1819)
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்-
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில்
விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன்
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (2)

(1820)
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த
பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும்
அளந்த எம் அடிகள்-தம் கோயில்-
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில்
குறவர்-தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (3)

(1821)
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து
சுடு சரம் அடு சிலைத் துரந்து
நீர்மை இலாத தாடகை மாள
நினைந்தவர் மனம் கொண்ட கோயில்-
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில்
கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (4)

(1822)
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
மணி முடி ஒருபதும் புரள
அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட
அமர்செய்த அடிகள்-தம் கோயில்-
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப
பிரசம் வந்து இழிதர பெருந் தேன்
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (5)

(1823)
விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று
விளங்கனிக்கு இளங் கன்று விசிறி
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த
கூத்த எம் அடிகள்-தம் கோயில்-
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற
தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (6)

(1824)
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர்
செழுந் திரள் பனங்கனி உதிர
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
வானகச் சோலை மரகதச் சாயல்
மா மணிக் கல் அதர் நுழைந்து
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (7)

(1825)
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ
பொரு கடல் அரவணைத் துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த
பனி முகில் வண்ணர்-தம் கோயில்-
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின்
கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (8)

(1826)
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
ஒத்தன பேசவும் உவந்திட்டு
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்
எண்ணி முன் இடம் கொண்ட கோயில்-
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும்
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை-
வணங்குதும் வா மட நெஞ்சே (9)

(1827)
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல்
சூழ் வயல் ஆலி நல் நாடன்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன்
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்
ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10)
-------------
89. திருமாலிருஞ்சோலை: 2

(1828)
மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ? (1)

(1829)
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்கொலோ-கயல் கண்ணி எம் காரிகையே? (2)

(1830)
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல்
கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே? (3)

(1831)
சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே? (4)

(1832)
தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ? (5)

(1833)
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ? (6)

(1834)
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ? (7)

(1835)
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே? (8)

(1836)
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும் கொல்-என் நல் நுதலே? (9)

(1837)
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே (10)

(1838)
எங்கள் எம் இறை எம் பிரான்
இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்-
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்-
பொங்கு தண் அருவி புதம் செய்ய
பொன்களே சிதற இலங்கு ஒளி
செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே (1)

(1839)
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை
இன் நகைத் துவர் வாய் நில-மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்-
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை
மாலையொடும் அணைந்த மாருதம்
தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே (2)

(1840)
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
விண்ணவர்-தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை
சந்தனம் உந்தி வந்து அசை
தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே (3)

(1841)
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு
இசைந்து உடம்பில் ஓர்
கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்-
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி
இன் இள வண்டு நல் நறும்
தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே (4)

(1842)
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன்
விண்ணவர்-கோன் மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்-
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி
மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர்
திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே (5)

(1843)
காவலன் இலங்கைக்கு இறை கலங்க
சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்-
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால்
உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே (6)

(1844)
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு
அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்
மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே (7)

(1845)
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச்
செகுத்து அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்-
தூங்கு தண் பலவின் கனி தொகு
வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே (8)

(1846)
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார்
தட மா மலர்மிசை
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி
ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே (9)

(1847)
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்
தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை
இன் தமிழால் நினைந்த இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10)

Lesebereich 1848–1947

(1848)
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே (1)

(1849)
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே (2)

(1850)
வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆர் அமுதத்தினை பைந் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும்-நாங்கூரிலே (3)

(1851)
துளக்கம் இல் சுடரை அவுணன் உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே (4)

(1852)
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண்
விடலையைச் சென்று காண்டும்-மெய்யத்துள்ளே (5)

(1853)
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே (6)

(1854)
கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே (7)

(1855)
பத்தர் ஆவியை பால் மதியை அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே (8)

(1856)
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை
கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே (9)

(1857)
பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த
சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே (10)

(1858)
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன்
பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்?
குரக்கு-நாயகர்காள் இளங்கோவே
கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (1)

(1859)
பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப்
பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான்
செய்வது ஒன்று அறியா அடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்
ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (2)

(1860)
தண்டகாரணியம் புகுந்து அன்று
தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர்
குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே
பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப்
பேசுகின்றது என்? தாசரதீ உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (3)

(1861)
எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன்
தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே
நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று
நங்கையை அவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின்
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (4)

(1862)
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன்
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து
வம்பு உலாம் கடி காவில் சிறையா
வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர்
கும்பனோடு நிகும்பனும் பட்டான்
கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (5)

(1863)
ஓத மா கடலைக் கடந்து ஏறி
உயர்கொள் மாக் கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள்
தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (6)

(1864)
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று
தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு
வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை
எங்களை ஒழியக் கொலையவனை
சூழுமா நினை மா மணி வண்ணா
சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (7)

(1865)
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா
அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து
தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு
அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (8)

(1866)
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில்
பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிது ஆய் அடுகின்ற
சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே
இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல்
கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9)

(1867)
அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர
அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி
புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்
இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின்
சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (10)

(1868)
ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (1)

(1869)
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே (2)

(1870)
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்குக்
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில்போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று
கோலம் ஆக ஆடுகின்றோம்-குழமணிதூரமே (3)

(1871)
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப்
புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (4)

(1872)
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக
இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள்
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே
குன்று போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (5)

(1873)
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே (6)

(1874)
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே (7)

(1875)
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (8)

(1876)
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின்
கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (9)

(1877)
வென்ற தொல் சீர்த் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தைக்
கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடிநின்று ஆடுமினே (10)

(1878)
சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே
வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (1)

(1879)
வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா
கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன்
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே? (2)

(1880)
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் (3)

(1881)
மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன்
ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் (4)

(1882)
மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் (5)

(1883)
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளிக் குறிப்புச் செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் (6)

(1884)
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க
வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ
நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (7)

(1885)
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள்-தம் ஆ-நிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் (8)

(1886)
பெற்றத் தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங் கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்று இனம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே (9)

(1887)
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே (10)

(1888)
பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி
ஒளி மணி வண்ணனே சப்பாணி (1)

(1889)
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி
மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2

(1890)
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி
தாமரைக் கண்ணனே சப்பாணி (3)

(1891)
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சு உண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி
கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி (4)

(1892)
சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி
தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி (5)

(1893)
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே
கோவலனே கொட்டாய் சப்பாணி
குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி (6)

(1894)
புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி
பேய் முலை உண்டானே சப்பாணி (7)

(1895)
யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாய வலவைப் பெண் வந்து முலை தர
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி
மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி (8)

(1896)
கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத்
தள்ளி உதைத்திட்டு தாய் ஆய் வருவாளை
மெள்ளத் தொடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி
மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி (9)

(1897)
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி
தட மார்வா கொட்டாய் சப்பாணி (10)

(1898)
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?
-நர நாரணன் ஆய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான்
அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும்
நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது
அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1)

(1899)
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி
குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால்
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர
நினைந்த பெருமான் அது அன்றியும் முன்
நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ்
உலகு ஏழ் ஒழியாமை நம்பி
அன்று உண்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (2)

(1900)
உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள்
உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ
அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள்
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று
மலை போல் அவுணன் உடல் வள் உகிரால்
அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (3)

(1901)
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான்
சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால்
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த
பெருமான் திருமால் விரி நீர் உலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை
மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய்
அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (4)

(1902)
நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும்
அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்
செல வைத்த பிரான் அது அன்றியும் முன்
வேண்டாமை நமன்-தமர் என் தமரை
வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ்
ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (5)

(1903)
பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப்
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல
பெருமான் திருமால் அது அன்றியும் முன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன்
சினத்தோள்-அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (6)

(1904)
படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள்
பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத்
தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (7)

(1905)
நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு
உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர்
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்
செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (8)

(1906)
சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா
தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய்
இரு கூறு செய்த பெருமான் முன நாள்
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து
மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு
அரிந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால்
அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (9)

(1907)
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு
ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்
கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி
இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10)

(1908)
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம்
அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்பகில்லேன்
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்
நங்கைகாள் நான் என் செய்கேன்?
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத்
தயிர் கடைகின்றான் போலும் (1)

(1909)
காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
போகின்றேன் கண்டே போனேன்
மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள்
வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன்
என் செய்கேன்? என் செய்கேனோ? (2)

(1910)
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ? (3)

(1911)
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற
வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது
அவன் இவை செய்தறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை
போகின்றவா தவழ்ந்திட்டு
இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை
என் செய்கேன்? என் செய்கேனோ? (4)

(1912)
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்
தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர்க் குழலாள் தனியே
விளையாடும் இடம் குறுகி
பந்து பறித்து துகில் பற்றிக் கீறி
படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய்
என் செய்கேன்? என் செய்கேனோ? (5)

(1913)
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்
நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே
அல்லில்-தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி
கமலச் செவ்வாய் வெளுப்ப
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய்
என் செய்கேன்? என் செய்கேனோ? (6)

(1914)
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு
அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புகப்
பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு
உன் மகன் இன்று நங்காய்
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி
வளைத்து உண்டு இருந்தான் போலும் (7)

(1915)
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும்
ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு
எள்கி இவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று
இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலை உண்ட பின்னை இப்
பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே (8)

(1916)
ஈடும் வலியும் உடைய இந் நம்பி
பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி
யமுனை நீராடப் போனேன்
சேடன் திரு மறு மார்வன் கிடந்து
திருவடியால் மலைபோல்
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
உரப்புவது அஞ்சுவனே (9)

(1917)
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்
ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்று
பாகம்-தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என்
கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ
என் செய்கேன்? என் செய்கேனோ? (10)

(1918)
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ-
நம்பீ ஆயர் மட மக்களை?
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள்
பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு
அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று
மரம் ஏறி இருந்தாய் போலும் (11)

(1919)
அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு
ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு
உரைத்திலன் தான் இன்று போய்
பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு
பாய்ந்து புக்கு ஆயிர வாய்
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு
பிணங்கி நீ வந்தாய் போலும் (12)

(1920)
தம்பரம் அல்லன ஆண்மைகளைத்
தனியே நின்று தாம் செய்வரோ?
எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன்
இனி யான் என் செய்கேன்?
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல்
அங்கு அனல் செங் கண் உடை
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு
பிணங்கி நீ வந்தாய் போலும் (13)

(1921)
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து
அஞ்ச அரு வரைபோல்
மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய
மைந்தனை மா கடல் சூழ்
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன்
காமரு சீர்க் கலிகன்றி
இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு
ஏதும் இடர் இல்லையே (14)

(1922)
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர்-
ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (1)

(1923)
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவர் ஆக முடித்து கலிக் கச்சுக் கட்டி
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்-
இவர் ஆர்? இது என்? இது என்? இது என்னோ? (2)

(1924)
கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடம்-அது உறுக்கி நிமிர்த்தீர்
மருளைக்கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என்? இது என்? இது என்னோ? (3)

(1925)
நாமம் பலவும் உடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ? (4)

(1926)
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்-
எற்றுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (5)

(1927)
ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்-
ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ? 6

(1928)
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்-
எல்லே இது என்? இது என்? இது என்னோ? (7)

(1929)
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக் காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்-
எக்கே இது என்? இது என்? இது என்னோ? (8)

(1930)
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப-
ஏடி இது என்? இது என்? இது என்னோ? (9)

(1931)
அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி
எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார்-அவர் துக்கம் இலரே (10)

(1932)
புள் உரு ஆகி நள் இருள் வந்த
பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த
ஊக்கம்-அதனை நினைந்தோ-
கள் அவிழ் கோதை காதலும் எங்கள்
காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப்
பேசுவது? எந்தை பிரானே (1)

(1933)
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி
மால் விடை ஏழும் அடர்த்து ஆயர்
அன்று நடுங்க ஆ-நிரை காத்த
ஆண்மை கொலோ? அறியேன் நான்-
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா
நீ இவள்-தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா
முன் கை வளை கவர்ந்தாயே (2)

(1934)
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி
ஆற்றலை ஆற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம்
கடந்த நின் கடுந் திறல் தானோ-
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை
நெடுங் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம்
இவள் எனக் கருதுகின்றாயே? (3)

(1935)
மல்கிய தோளும் மான் உரி அதளும்
உடையவர்-தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த
கரதலத்து அமைதியின் கருத்தோ?
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி என்-நம்பி இவளை நீ உங்கள்
தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? (4)

(1936)
செரு அழியாத மன்னர்கள் மாள
தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்படக் கண்ட
ஆண்மை கொலோ? அறியேன் நான்-
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை
சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள்
இவள் எனப் பேசுகின்றாயே (5)

(1937)
அரக்கியர் ஆகம் புல் என வில்லால்
அணி மதிள் இலங்கையார்-கோனைச்
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற
சேவகமோ செய்தது இன்று?-
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம்
கொண்டு முன்னே நின்று போகாய்
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல்
என் செய்வது? எந்தை பிரானே (6)

(1938)
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச
அலை கடல் உலகம் முன் ஆண்ட
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ
படை மழுப் பற்றிய வலியோ-
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
வந்து முன்னே நின்று போகாய்?
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது-எந்தாய்!-
குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா (7)

(1939)
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற
வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த
பெருமைகொலோ செய்தது இன்று?-
பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை
பெருமையை நினைந்திலை பேசில்
கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம்
இவள் எனக் கருதுகின்றாயே (8)

(1940)
நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய்
நின்ற நின் நீர்மையை நினைந்தோ-
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று
அன்னது ஓர் தேற்றன்மை தானோ-
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய
பாவையைப் பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
ஆக நின் மனத்து வைத்தாயே? (9)

(1941)
வேட்டத்தைக் கருதாது அடி-இணை வணங்கி
மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன்
மான வேல் கலியன் வாய் ஒலிகள்
தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப்
பழமொழியால் பணிந்து உரைத்த
பாட்டு இவை பாட பத்திமை பெருகிச்
சித்தமும் திருவொடு மிகுமே (10)

(1942)
திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள்-தன் கணவன்
மருத் தார் தொல் புகழ் மாதவனை வர-
திருத்தாய் செம்போத்தே (1)

(1943)
கரையாய் காக்கைப் பிள்ளாய்
கரு மா முகில் போல் நிறத்தன்
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர-
கரையாய் காக்கைப் பிள்ளாய் (2)

(1944)
கூவாய் பூங் குயிலே
குளிர் மாரி தடுத்து உகந்த
மா வாய் கீண்ட மணி வண்ணனை வர-
கூவாய் பூங் குயிலே (3)

(1945)
கொட்டாய் பல்லிக் குட்டி
குடம் ஆடி உலகு அளந்த
மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர-
கொட்டாய் பல்லிக் குட்டி (4)

(1946)
சொல்லாய் பைங் கிளியே
சுடர் ஆழி வலன் உயர்த்த
மல் ஆர் தோள் வட வேங்கடவனை வர-
சொல்லாய் பைங் கிளியே (5)

(1947)
கோழி கூ என்னுமால்
தோழி நான் என் செய்கேன்?
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று-
கோழி கூ என்னுமால் (6)

Lesebereich 1948–2031

(1948)
காமற்கு என் கடவேன்?
கரு மா முகில் வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய-
காமற்கு என் கடவேன்? (7)

(1949)
இங்கே போதும்கொலோ-
இன வேல் நெடுங் கண் களிப்ப?
கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால்
இங்கே போதும்கொலோ? (8)

(1950)
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை-
இன்னார் என்று அறியேன் (9)

(1951)
தொண்டீர் பாடுமினோ
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்-கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள்
தொண்டீர் பாடுமினோ (10)

(1952)
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன் 1

(1953)
காரும் வார் பனிக் கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ-
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2

(1954)
சங்கும் மாமையும் தளரும் மேனிமேல்
திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?-
பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3

(1955)
அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ-
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4

(1956)
அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே கொலோ-
பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5

(1957)
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ-
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6

(1958)
பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ-
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7

(1959)
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள்புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர்
ஆலி வந்ததால்-அரிது காவலே 8

(1960)
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9

(1961)
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனை செங் கண் மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி-
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10

(1962)
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான்
முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் கிடந்து ஈர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ? 1

(1963)
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை
வாங்கி உண்ட அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய்
ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளமையே 2

(1964)
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்
அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே 3

(1965)
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்? 4

(1966)
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்-
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்-
பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே 5

(1967)
ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6

(1968)
காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார்
மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில்
யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள்
மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே 7

(1969)
மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே 8

(1970)
காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ? 9

(1971)
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர்-தங்கள்மேல்
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே 10

(1972)
மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப்
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ்
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்-
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே 1

(1973)
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர்
பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண்
பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே 2

(1974)
அன்னே இவரை அறிவன் மறை நான்கும்
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே 3

(1975)
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு-
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார்-தம்மையே? 4

(1976)
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத்
தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால்
தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே 5

(1977)
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6

(1978)
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்?
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே? 7

(1979)
பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து
சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம்
கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே 8

(1980)
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன்
பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே 9

(1981)
பெற்று ஆரார்-ஆயிரம் பேரானைப் பேர் பாட
பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல்
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே 10

(1982)
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர்
வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன
அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி
அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை
மறவாது இறைஞ்சு என் மனனே 1

(1983)
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி
திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப
இமையோர்கள் நின்று கடைய
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து
சுழலக் கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன
திருமால் நமக்கு ஓர் அரணே 2

(1984)
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர்
உம்பர்-உலகு ஏழினோடும் உடனே
மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற
மலை ஆறும் ஏழு கடலும்
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின்
ஒருபால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி
அது நம்மை ஆளும் அரசே 3

(1985)
தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க
எரி கான்று இரண்டு தறு கண்
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று
பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம்
மதியாது சென்று ஓர் உகிரால்
பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு
பெரு நீரில் மும்மை பெரிதே 4

(1986)
வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு
ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர
செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம்
அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச
மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்-
அது நம்மை ஆளும் அரசே 5

(1987)
இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும்
ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க
மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர்
புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி
யவர் நம்மை ஆள்வர் பெரிதே 6

(1988)
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன
இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு
ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை
பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமால் நமக்கு ஓர் அரணே 7

(1989)
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண
முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ
அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த
அது நம்மை ஆளும் அரசே 8

(1990)
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது
தொழுமின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி
உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட
அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல்
வினைப் பற்று அறுக்கும் விதியே 9

(1991)
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று
கொடியோன் இலங்கை பொடியா
சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள்
திருமாலை வேலை புடை சூழ்
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு
கலிகன்றி சொன்ன பனுவல்
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்
அவர் ஆள்வர் உம்பர் உலகே 10

(1992)
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!-
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள்
வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே 1

(1993)
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!-
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே 2

(1994)
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ்
ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே 3

(1995)
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகிப் போய் ஆய்ப்பாடி
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ!-
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே 4

(1996)
வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ-
கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே (5)

(1997)
கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!-
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே (6)

(1998)
கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!-
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும்
ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே (7)

(1999)
பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத்
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!-
தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும்
தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே (8)

(2000)
கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே (9)

(2001)
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!-
வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி
உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே (10)

(2002)
மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி
வானவரும் யாமும் எல்லாம்
நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
நெடுங் காலம் கிடந்தது ஓரீர்
எந் நன்றி செய்தாரா ஏதிலோர்
தெய்வத்தை ஏத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்
அண்டனைய ஏத்தீர்களே (1)

(2003)
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது
ஓடி நிமிர்ந்த காலம்
மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம்
அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ? எம் பெருமான்
உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே
உலகு ஆவது அறியீர்களே? (2)

(2004)
நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய்
நான்முகனும் நீண்ட நால் வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும்
உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட
கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச்
சிறுதொண்டர் கொடிய ஆறே (3)

(2005)
பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம்
நெடுங் கடலே ஆன காலம்
இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி
முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
கழல் தொழுமா கல்லீர்களே (4)

(2006)
பார் ஆரும் காணாமே பரவை மா
நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
ஆயிரங்களுமே பேசீர்களே (5)

(2007)
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது
ஓடிப் பெருகு காலம்
தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன்
வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம்
கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ-
மாட்டாத தகவு அற்றீரே? 6

(2008)
மண் நாடும் விண் நாடும் வானவரும்
தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
தான் விழுங்கி உய்யக்கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல் சூடி அவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத
போது எல்லாம் இனிய ஆறே 7

(2009)
மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து
பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம்
ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை
நினையாதார் நீசர்-தாமே 8

(2010)
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த்
திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
வைத்து உம்மை உய்யக்கொண்ட
கொண்டல் கை மணி வண்ணன் தண்
குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9

(2011)
தேவரையும் அசுரரையும் திசைகளையும்
கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம் பெருமான்
உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி
ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப்
பொன்-உலகில் பொலிவர்-தாமே 10

(2012)
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப்
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை-
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே 1

(2013)
நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை-
கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே 2

(2014)
தூயானை தூய மறையானை தென் ஆலி
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட
வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே 3

(2015)
கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை
தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை-ஆர்வத்தால்
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே 4

(2016)
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும்
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும்
கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே 5

(2017)
கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று-
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே 6

(2018)
கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7

(2019)
வெறி ஆர் கருங் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட
சிறியானை செங் கண் நெடியானை-சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே 8

(2020)
தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய்
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே 9

(2021)
மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக்
கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக்
கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை
ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே 10

(2022)
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ (1)

(2023)
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி-
காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்-
ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா (2)

(2024)
தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி-
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்-
தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா (3)

(2025)
உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி-
இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்-
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா (4)

(2026)
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்
தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி-
வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே-
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா (5)

(2027)
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம்
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே-
அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே (6)

(2028)
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன்
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (7)

(2029)
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!-
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ (8)

(2030)
நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்-
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!-
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே (9)

(2031)
குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல்
என்றும் வினை ஆயின சாரகில்லாவே (10)

Nachklang

Im zweiten Teil des tamilischen Textes führt der Weg weiter zu den Antati-Dichtungen, den Madal-Langgedichten und der Tiruvaymoli. Nimm aus diesem ersten Teil einen Segenswunsch oder ein Bild mit in den Tag. Im Hören, Erinnern und Weitergeben kann die Verbindung von Sprache, Familie und Bhakti lebendig wachsen.

Die neun Formen des Bhakti Yoga, erläutert bei Yoga Vidya:

Die Artikel dieser Ausgabe

Textgrundlage und Hinweise zur Ausgabe

Die Ausgabe übernimmt den redigierten Gesamtbestand der Project-Madurai-Reihe 621–624: 3.998 Haupttextblöcke in der Zählung 1–4000 sowie 44 ergänzende Taniyans und Begleitverse. Die Nummern 2711–2712 bezeichnen in dieser Textgliederung keine selbstständigen Blöcke. Die Langgedichte werden vollständig in den vorhandenen Abschnitten wiedergegeben. Auch die zusätzliche Ortszeile nach 2707 ist enthalten. Der Schluss umfasst die 108 Ramanuja-Hymnen des Tiruvarangattu Amutanar.

Die deutsche Fassung ist eine vollständige vorläufige Prosa-Arbeitsübersetzung. Kursiv gesetzte Deutungshinweise sind Erläuterungen, keine Worte der Hymnen. Die Umschrift bildet die tamilische Schreibung ab. Einzelne Quellenstörungen und lokale Nummerierungsfehler sind im Editionsbericht dokumentiert; eine neue philologische Gesamtprüfung ist mit dieser Einrichtung als Lesetext nicht verbunden.

Siehe auch

Alvar · Andal · Nammalvar · Periyalvar · Tirumangai Alvar · Tiruppavai · Nachiyar Tirumoli · Tiruvaymoli · Tiruppallandu · Kamba Ramayanam · Tiruvasagam · Tirumantiram · Bhakti Yoga · Ramanuja · Prapatti · Vishishtadvaita · Meditation · Pancharatra

Yoga: Grundlagen und Praxis · Meditation bei Yoga Vidya

Seminare bei Yoga Vidya

Bhakti Yoga

01.11.2026 - 06.11.2026 Themenwoche: Bhakti Yoga / Mantra Singen mit Shankara

Bhakti-Yoga ist das Yoga der Hingabe und der Liebe. Bhakti bezeichnet dabei die Sehnsucht nach Wahrheit, Erkenntnis, Erfahrung, das Göttliche, wie auch…
Shankara Stefan Maune
03.11.2026 - 03.11.2026 Mantra-Konzert mit Gruppe Mudita

Herzöffnung pur
21:10 - 22:00 Uhr
Gruppe Mudita

Mantras und Musik

01.11.2026 - 06.11.2026 Themenwoche: Bhakti Yoga / Mantra Singen mit Shankara

Bhakti-Yoga ist das Yoga der Hingabe und der Liebe. Bhakti bezeichnet dabei die Sehnsucht nach Wahrheit, Erkenntnis, Erfahrung, das Göttliche, wie auch…
Shankara Stefan Maune
03.11.2026 - 03.11.2026 Mantra-Konzert mit Gruppe Mudita

Herzöffnung pur
21:10 - 22:00 Uhr
Gruppe Mudita

Indische Schriften

26.12.2026 - 02.01.2027 Indische Rituale Ausbildung

Du interessierst dich für indische Rituale? Du hast die einzigartige Gelegenheit, in dieser Rituale Ausbildung bei Yoga Vidya die kleine Puja, große P…
Sukadev Bretz, Shankari Winkelbauer
01.01.2027 - 10.01.2027 Yogalehrer Weiterbildung Intensiv A1 - Jnana Yoga und Vedanta

Kompakte, vielseitige Weiterbildung für Yogalehrer rund um Jnana Yoga und Vedanta.
Tauche tief ein ins Jnana Yoga und Vedanta, studiere die indischen S…
Vedamurti Dr Olaf Schönert

Die folgenden Angebote ergänzen das allgemeine Yoga-Studium; sie sind keine speziellen Lehrgänge zur Prabandham-Rezitation.

Kundalini Yoga

06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen
13.11.2026 - 15.11.2026 Kundalini Yoga Mittelstufe

Intensives Kundalini Yoga Seminar zur Erweckung der inneren Kundalini Energie, Erweiterung des Bewusstseins und Entfaltung des vollen Potentials. Yoga A…
Manuel Hirning

Chakras

20.11.2026 - 22.11.2026 Heilreise durch die Chakren

Tauche ein in eine transformative Reise durch die sieben Hauptchakren und erfahre, wie du deine Energiezentren aktivieren, ausbalancieren und für dein …
Nese Niekrens, Gajendra Sebastian Niekrens
26.12.2026 - 01.01.2027 Kundalini Yoga Intensiv Praxis - Live Online

Intensives Praktizieren der im Mittelstufen-Seminar gelernten Übungen für noch tiefere Erfahrung und Erweiterung des Bewusstseins ohne viel Theorie. L…
Sukadev Bretz, Shaktipriya Vogt, Radharani Birkner

Energiearbeit

04.11.2026 - 04.11.2026 Einführung in die Chakratherapie - Online Workshop

Uhrzeit: 18 - 21 Uhr
Ein Chakra ist ein feinstoffliches Kraftzentrum des Körpers, welches wichtige Körperfunktionen steuert und bestimmten Organen zug…
Beate Menkarski
06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen