Kamba Ramayanam Tamilischer Text Teil 2

Aus Yogawiki


Kamba Ramayanam Tamilischer Text Teil 2 enthält den fortlaufenden Text der Kapitel 3.3 bis 5.5 des Kamba Ramayanam. Dieser Abschnitt gibt den tamilischen Originaltext in seiner eigenen Schrift wieder. Das Lesen und Hören der Verse lässt den Klang, die Bildsprache und die Hingabe dieser großen tamilischen Dichtung hervortreten.

Hanuman trägt Rama und Lakshmana. Tatkraft und Hingabe gehören für ihn zusammen.

Dieser Teil führt durch Aranya Kandam, Kishkindha Kandam, Sundara Kandam. Der Wald ist ein Ort der Begegnung, der Askese und der Gefahr. Sitas Entführung verändert die Richtung der Erzählung. Zwischen Schutz, Verletzung und Suche erhalten Mitgefühl und Treue ihr besonderes Gewicht.

Zu allen Fassungen:

Aranya Kandam – Das Waldbuch

3.3 – Textabschnitt

3.3 . அகத்தியப் படலம் (2722- 2780)

2722
இராமன் முதலியோர் சரபங்கன் தவக்குடிலினின்று போதல் (2722-2723)
அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர் ,
இனியவர் , இன்னலின் இரங்கும் நெஞ்சினர் ,
குனிவரு திண்சிலைக் குமரர் , கொம்பொடும்
புனிதனது உறையுள் நின்று அரிதில் போயினார் .
3.3.1

2723
மலைகளும் , மரங்களும் , மணிக் கற் பாறையும்
அலை புனல் நதிகளும் , அருவிச் சாரலும் ,
இலை செறி பழுவமும் , இனிய சூழலும் ,
நிலை மிகு தடங்களும் , இனிது நீங்கினார் .
3.3.2

2724
தண்டக வனத்து முனிவர் இராமனைக் காண்டல்
பண்டைய அயன் தரு பாலகில்லரும் ,
முண்டரும் , மோனரும் , முதலினோர்கள் , அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனைக் களிக்கும் சிந்தையார் .
3.3.3

2725
தண்டகவனத்து முனிவர்நிலை (2725-2729)
கனை வரு கடுஞ்சினத்து அரக்கர் காய , ஓர்
வினை பிறிது இன்மையின் , வெதும்புகின்றனர் ;
அனல் வரு கானகத்து , அமுது அளாவிய
புனல் வர , உயிர் வரும் உலவை போல்கின்றார் .
3.3.4

2726
ஆய் வரும் பெருவலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் ;
தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்
தாய்வர , நோக்கிய கன்றின் தன்மையார் .
3.3.5

2727
கரக்க (அ)ருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர் ,
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் , ஒரு
மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார் .
3.3.6

2728
தெரிஞ்சு உற நோக்கினர் ; செய்த செய்தவம்
அருஞ் சிறப்பு உதவ , நல் அறிவு கைதர ,
விரிஞ்சு உறப் பற்றிய பிறவி வெம் துயர்ப்
பெருஞ்சிறை வீடு பெற்றனைய பெற்றியார் .
3.3.7

2729
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும் , பொறையின் ஆற்றலால் ,
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் ;
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ .
3.3.8

2730
இராமன் தொழ , முனிவர் வாழ்த்தல்
எழுந்தனர் , எய்தினர் , இருண்ட மேகத்தின்
கொழுந்தென நின்ற அக் குரிசில் வீரனைப்
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் ; அவன்
தொழுந்தொறும் தொழுந்தொறும் , ஆசி சொல்லுவார் .
3.3.9

2731
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி ,'இவ்வயின்
நனி உறை 'என்று அவற்கு அமைய நல்கித் தாம்
தனி இடம் சார்ந்தனர் தங்கி , மாதவர் ,
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் .
3.3.10

2732
முனிவர் இராமனுக்குத் தம் அல்லலைச் சொல்லுதல் (2732-2737)
எய்திய முனிவரை இறைஞ்சி , ஏத்து உவந்து ,
ஐயனும் இருந்தனன் ;'அருள் என் ? 'என்றலும் ,
'வையகம் காவலன் மைந்த ! வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந்தொழில் விளைவு கேள் 'எனா .
3.3.11

2733
'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் ,
அரக்கர் என்று உளர் சிலர் , அறத்தின் நீங்கினார் ,
நெருக்கவும் , யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும் , அருந்தவத் துறையுள் நீங்கினேம் . '
3.3.12

2734
வல்லியம் பல திரி வனத்து மான் என ,
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் ;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம் ;
வில் இயல் மொய்ம்பினாய் ! வீடு காண்குமோ ?

3.3.13

2735
'மா தவத்து ஒழுகலெம் ; மறைகள் யாவையும்
ஓதலெம் ; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் ;
மூது எரி வளர்க்கிலெம் ; முறையின் நீங்கினேம் ;
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் ! '
3.3.14

2736
'இந்திரன் எனின் , அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் , சென்னியில் , கொள்ளும் செய்கையான் ;
எந்தை ! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் ?
வந்தனை , யாம் செய்த தவத்தின் மாட்சியால் '.
3.3.15

2737
'உருள் உடை நேமியால் உலகை ஓம்பிய
பொருள் உடை மன்னவன் புதல்வ ! போக்கிலா
இருள் உடை வைகலேம் ; இரவி தோன்றினாய் !
அருள் உடை வீர ! நின் அபயம் யாம் 'என்றார் .
3.3.16

2738
இராமன் அபயம் அளித்தல் (2738-2746)
'புகல் புகுந்திலரேல் , புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் , என் அம்பொடு வீழ்வரால் ;
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் 'எனப்
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் .
3.3.17

2739
'வேந்தன் வீயவும் , யாய் துயர் மேவவும் ,
ஏந்தல் எம்பி வருந்தவும் , என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் , யான் வனம்
போந்தது , என்னுடைப் புண்ணியத்தால் 'என்றான் .
3.3.18

2740
'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் ,
இறந்து போகினும் நன்று ; இது அல்லது ,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ ? '
3.3.19

2741
'நிவந்த வேதியர் நீவிரும் , தீயவர்
கவந்த பந்தக் களி நடம் கண்டிட ,
அமைந்த வில்லும் அருங்கணைத் தூணியும்
சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால் .
3.3.20

2742
'ஆவுக்கு ஆயினும் , அந்தணர்க்கு ஆயினும் ,
யாவர்க்கு ஆயினும் , எளியவர்க்கு ஆயினும் ,
சாவப் பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் '.
3.3.21

2743
'சூர் அறுத்தவனும் , சுடர் நேமியும் ,
ஊர் அறுத்த ஒருவனும் , ஓம்பினும் ,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் ; வெருவன்மின் நீர் 'என்றான் .
3.3.22

2744
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட
இரைத்த காதலர் , ஏகிய இன்னலர் ,
திரித்த கோலினர் , தேம் மறை பாடினர் ;
நிருத்தம் ஆடினர் ; நின்று விளம்புவார் .
3.3.23

2745
தோன்றல் ! நீ முனியின் , புவனத் தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் , எதிர் அல ; என்றலின்
சான்று அரோ எம் , தவப் பெரு ஞானமே .
3.3.24

2746
'அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் ,
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் 'எனச்
சொன்ன மாதவர் பாதம் தொழுது , உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் .
3.3.25

2747
பத்தாண்டுகள் தண்டகவனத்திருந்த இராமன்
அகத்தியன் குடிலுக்குப் புறப்படுதல்

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு , அவண் ,
மைந்தர் , தீது இலர் வைகினர் ; மாதவர்
சிந்தை எண்ணி ,'அகத்தியற் சேர்க 'என ,
இந்து நல் நுதல் தன்னொடும் ஏகினார் .
3.3.26

2748
இடைவழியில் சுதீக்கணன் இராமனை உபசரித்து உரையாடல் (2748-2755) விடரகங்களும் , வேய் செறி கானமும் ,
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் ;
சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் .
3.3.27

2749
அருக்கன் அன்ன முனிவனை அவ் வழிச்
செருக்கு இல் சிந்தையர் , சேவடி தாழ்தலும் ,
'இருக்க ஈண்டு 'என்று , இனியன கூறினான் ;
மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார் .
3.3.28

2750
வைகும் வைகலின் , மாதவன் , மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து ,'இவண் , செல்வ ! நீ
எய்த யான் செய்தது எத்தவம் ? 'என்றனன் ;
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் .
3.3.29

2751
'சொன்ன நான்முகன் தன் வழித் தோன்றினர்
முன்னையோருள் உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர் ? உன் அருள் எய்திய
என்னின் யார் உளர் இற் பிறந்தார் ? 'என்றான் .
3.3.30

2752
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் ,
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான் ;
'அவம் இலா விருந்து ஆகி , என்னால் அமை
தவம் எலாம் கொள்க தக்கணையா 'என்றான் .
3.3.31

2753
மறைவலான் எதிர் , வள்ளலும் கூறுவான் ,
'இறைவ ! நின் அருள் எத்தவத்திற்கு எளிது ?
அறைவது ஈண்டு ஒன்று ; அகத்தியற் காண்பது ஓர்
குறை கிடந்தது , இனி 'எனக் கூறினான் .
3.3.32

2754
'நல்லதே நினைந்தாய் ; அது , நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது ; தோன்றல் ! நீ ,
செல்க ஆண்டு ; அவற் சேருதி ; சேர்ந்த பின் ,
இல்லை , நின் வயின் எய்த கில்லாதவே '.
3.3.33

2755
'அன்றியும் நின் வரவினை ஆதரித்து ,
இன்று காறும் நின்று ஏமுறுமால் : அவற்
சென்று சேருதி ; சேருதல் , செவ்வியோய் !
நன்று தேவர்க்கும் , யாவர்க்கும் நன்று 'எனா .
3.3.34

2756
இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லல்
வழியும் கூறி , வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மாதவன் மொய்ம் மலர்த் தாள் தொழாப்
பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார் .
3.3.35

2757
அகத்தியர் இராமனை எதிர்கொள்ளுதல் (2757-2771)
ஆண் தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான் ,
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகும் எய்த ,
மாண்ட வரதன் சரண் வணங்க , எதிர் வந்தான் ;
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் .
3.3.36

2758
பண்டு ,'அவுணர் மூழ்கினர் ; படார்கள் 'என வானோர் ,
'எண் தவ ! எமக்கு அருள்க 'எனக் குறை இரப்பக்
கண்டு , ஒருகை வாரினன் முகந்து கடல் எல்லாம்
உண்டு , அவர்கள் பின்'உமிழ்க 'என்றலும் உமிழ்ந்தான் .
3.3.37

2759
தூய கடன் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்
ஆய அதனால் அமரும் மெய்யுடைய அன்னான் ,
மாய வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் .
3.3.38

2760
'யோகம் உறு பேர் உயிர்கள் தாம் , உலைவு உறாமல்
ஏகும் நெறி யாது ? 'என , மிதித்து அடியின் ஏறி ,
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகமது நாகம் உற , நாகம் என நின்றான் .
3.3.39

2761
மூசு அரவு சூடும் முதலோன் , உரையின் ,'மூவா
மாசு இல் தவ ! ஏகு 'என , வடாது திசை மேல் நாள்
நீசம் உற , வானின் நெடு மா மலயம் நேரா ,
ஈசன் நிகராய் , உலகு சீர் பெற இருந்தான் .
3.3.40

2762
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து , உலகம் ஓதும்
வழக்கினும் , மதிக் கவியினும் , மரபின் நாடி ,
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் .
3.3.41

2763
' விண்ணினில் , நிலத்தினில் , விகற்ப உலகில் , பேர்
எண்ணினில் , இருக்கினில் , இருக்கும்
என யாரும்
உள் நினை கருத்தினை , உறப்பெறுவெனால் , என்
கண்ணினில் 'எனக் கொடு களிப்புறும் மனத்தான் .
3.3.42

2764
'இரைத்த மறை நான்கினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞான நிமிர் கல்லில் நெடுநாள் இட்டு
அரைத்தும் அயனாரும் அறியாத பொருள் , நேர் நின்று
உரைத்து உதவுமால் 'எனும் உணர்ச்சியின் உவப்பான் .
3.3.43

2765
'உய்ந்தனர் இமைப்பிலர் ; உயிர்த்தனர் தவத்தோர் ;
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனார் ;
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் ,
வந்தனன் மருத்துவன் 'எனத் தனி வலிப்பான் .
3.3.44

2766
'ஏனை உயிராம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது 'என மைந்துறு மனத்தான் .
3.3.45

2767
கண்டனன் இராமனை வரக் கருணை கூரப்
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் ;
எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்யக்
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் .
3.3.46

2768
நின்றவனை , வந்த நெடியோன் அடி பணிந்தான் ;
அன்று , அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான்
'நன்று வரவு 'என்று , பல நல் உரை பகர்ந்தான் .
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் .
3.3.47

2769
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூறக்
காதல் மிக நின்று , எழில் கமண்டலுவின் நல் நீர்
மாதவர்கள் வீசி , நெடு மா மலர்கள் தூவப்
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் .
3.3.48

2770
பொருந்த அமலன் பொழில் அகத்து இனிது புக்கான் ;
விருந்து அவண் அமைத்தபின் விரும்பி முனி ,'மேனாள்
இருந்தவம் இழைத்த எனது இல்லிடையின் வந்து , என்
அருந்தவம் முடித்தனை ; அருட்கு அரச ! 'என்றான் .
3.3.49

2771
என்ற முனியைத் தொழுது இராமன் ,'இமையோரும் ,
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் ,
உன்தன் அருள் பெற்றிலர்கள் , உன் அருள் சுமந்தேன் ;
வென்றனென் அனைத்துலகும் ; மேல் இனி என் ? 'என்றான் .
3.3.50

2772
அகத்தியன் சொல்லுதல் (2772-2774)
' தண்டக வனத்து உறைதி என்று உரை தரக் கொண்டு ,
'உண்டு வரவு இத்திசை 'எனப் பெரிது உவந்தேன் ;
எண் தகு குணத்தினை ! 'எனக் கொடு உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் .
3.3.51

2773
'ஈண்டு உறைதி ஐய ! இனி , இவ் வயின் இருந்தால் ,
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் ;
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் ,
மாண்டு உக மலைந்து , எமர் மனத் துயர் துடைப்பாய் . '
3.3.52

2774
'வாழும் மறை ; வாழும் மனுநீதி ; அறம் வாழும் ;
தாழும் இமையோர் உயர்வர் ; தானவர்கள் தாழ்வார் ;
ஆழி உழவன் புதல்வ ! ஐயம் இலை ; மெய்யே !
ஏழ் உலகும் வாழும் ; இனி , இங்கு உறைதி 'என்றான் .
3.3.53

2775
இராமன் மறுமொழி
'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தத்
தருக்கு அழிதரக் கடிது கொல்வது சமைந்தேன் ;
வருக்க மறையோய் ! அவர் வரும் திசையில் முந்து உற்று
இருக்கை நலம் ; நிற்கு அருள் என் ? 'என்றனன் இராமன் .
3.3.54

2776
அகத்தியன் இராமனுக்குப் படைவழங்கிப் பஞ்சவடிக்கனுப்புதல் (2776-2779)

'விழுமியது சொற்றனை ; இவ் வில் இது இவண் , மேல் நாள்
முழுமுதல்வன் வைத்துளது ; மூவுலகும் , யானும் ,
வழிபட இருப்பது ; இது தன்னை வடி வாளிக்
குழு , வழு இல் புட்டிலொடு கோடி 'என , நல்கி .
3.3.55

2777
இப்புவனம் முற்றும் ஒரு தட்டின் இடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்பு அரிய வாளும் ,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லா
முப்புரம் எரித்த தனி மொய்க்கணையும் , நல்கா .
3.3.56

2778
ஓங்கும் மரன் ஓங்கி , மலை ஓங்கி , மணல் ஓங்கிப்
பூங்குலை குலாவு குளிர் சோலை புடை விம்மித்
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஒர் குன்றின்
பாங்கர் உளதால் , உறையுள் பஞ்சவடி ; மஞ்ச !
3.3.57

2779
கன்னி இள வாழை கனி ஈவ , கதிர் வாலின்
செந் நெல் உள ; தேன் ஒழுகு போதும் உள ; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள ; போதா
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட .
3.3.58

2780
இராமன் விடைபெற்றுச் செல்லுதல்
'ஏகி , இனி அவ் வயின் இருந்து உறைமின் 'என்றான் ;
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் ;
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக , முனி சிந்தை தொடரக் கடிது போனான் .
3.3.59


3.4 – Textabschnitt

3.4 . சடாயு காண் படலம் (2781- 2828 )

2781
இராமன் முதலியோர் சடாயுவைக் கண்டது
நடந்தனர் காவதம் பலவும் ; நல் நதி
கிடந்தன , நின்றன , கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன , துவன்றின சூழல் யாவையும் ,
கடந்தனர் ; கண்டனர் கழுகின் வேந்தையே .
3.4.1

2782
சடாயுவின் இயல்பு (2782-2789)
உருக்கிய சுவணம் ஒத்து , உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எலாம்
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் திசை
விரித்து இருந்தனன் என , விளங்குவான் தனை .
3.4.2

2783
முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய ,
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய ,
மந்தர கிரி என வயங்குவான் தனை .
3.4.3

2784
மால் நிற விசும்பு எழில் மறையத் தன் மணிக்
கால் நிறச் சேயொளி கதுவக் கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்திடப் பொலிகின்றான் தனை .
3.4.4

2785
தூய்மையன் , இருங்கலை துணிந்த கேள்வியன் ,
வாய்மையன் , மறு இலன் , மதியின் கூர்மையன் ,
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை .
3.4.5

2786
வீட்டி வாள் அவுணரை , விருந்து கூற்றினை
ஊட்டி , வீழ் மிச்சில் தான் உண்டு , நாள்தொறும்
தீட்டி , மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை .
3.4.6

2787
கோள் இருநான்கினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை ,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியில் பொலி மௌலியான் தனை ,
3.4.7

2788
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை ,
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலைச்
சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப்பல கண்டுளான் தனை .
3.4.8

2789
ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று , அது
தாங்கலது இருநிலம் தாழ்ந்து தாழ்வுற ,
வீங்கிய வலியினில் இருந்த வீரனை ,
ஆங்கு அவர் அணுகினர் , அயிர்க்குஞ் சிந்தையார் .
3.4.9

2790
இராம இலக்குவர் சடாயுவை ஐயுற்று நோக்குதல்
'இறுதியைத் தன்வயின் இயற்ற எய்தினான் ,
அறிவு இலி அரக்கன் ஆம் ; அல்லனாம் எனின் ,
எறுழ் வலிக் கலுழனே 'என்ன உன்னி , அச்
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் .
3.4.10

2791
சடாயுவின் ஐயம் (2791-2795)
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான்
'வினை அறு நோன்பினர் அல்லர் ; வில்லினர்
புனை சடை முடியினர் புலவரோ ? 'எனா ,
3.4.11

2792
'புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென் ; நேமியானும் , அவ்
வரம் தரும் இறைவனும் , மழு வலாளனும் ,
கரந்திலர் என்னை ; யான் என்றும் காண்பெனால் .
3.4.12

2793
'காமன் என்பவனையும் , கண்ணின் நோக்கினேன் ;
தாமரைச் செங்கண் இத் தடக்கை வீரர்கள்
பூமரு பொலங் கழல் பொடியினோடும் ஒப்பு
ஆம் என அறிகிலென் ; ஆர்கொலாம் இவர் ?
3.4.13

2794
'உலகு ஒருமூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் ;
மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச்
சிலை வலி வீரரைத் தெரிகிலேன் 'எனா ,
3.4.14

2795
'கருமலை செம்மலை அனைய காட்சியர் ;
திரு மகிழ் மார்பினர் ; செங்கண் வீரர்தாம் ,
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ . '
3.4.15

2796
சடாயுவின் வினா
எனப் பல நினைப்பினன் மனத்துள் எண்ணுவான் ,
சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான் ,
'கனப் படை வரி சிலைக் காளை நீர்கள் யார் ?
மனப்பட எனக்கு உரை வழங்குவீர் 'என்றான் .
3.4.16

2797
இராம இலக்குவர் விடை
வினவிய காலையில் , மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால் ,
'கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான் ,
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் 'என்றார் .
3.4.17

2798
சடாயு , தயரதன் நலம் வினாதல்
உரைத்தலும் , பொங்கிய உவகை வேலையன் ,
தரைத்தலை இழிந்து , அவர்த் தழுவும் காதலன் ,
'விரைத் தடம் தாரினிர் ! வேந்தர் வேந்தன் தன் ,
வரைத்தடம் தோள் இணை வலியவோ ? 'என்றான் .
3.4.18

2799
தயரதன் துறக்கமுற்றது அறிந்து சடாயு வருந்துதல் (2799-2800)
'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து , அவன்
துறக்கம் உற்றான் 'என , இராமன் சொல்லலும் ,
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் ;
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் .
3.4.19

2800
தழுவினர் , எடுத்தனர் , தடக்கையால் ; முகம்
கழுவினர் இருவரும் , கண்ணின் நீரினால் ;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் ,
அழிவுறு நெஞ்சினன் , அரற்றினான் அரோ .
3.4.20

2801
சடாயு அரற்றல் (2801-2804)
பரவல் அருங் கொடைக்கும் நின்தன் பனிக்குடைக்கும்
பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும் , உடுபதியும் ,
கடல் இடமும் , களித்து வாழப்
புரவலர்தம் புரவலனே ! பொய்ப்பகையே ! மெய்க்கு
அணியே ! புகழின் வாழ்வே !
இரவலரும் , நல் அறமும் , யானும் இனி என்பட
நீத்து ஏகினாயே .
3.4.21

2802
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்
தனி குடையாய் ! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க , நிலையாத
நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண நடந்தனையோ ? நாயகனே !
தீவினையேன் , நண்பின் நின்றும்
விலங்கு ஆனேன் ஆகலினால் , விலங்கினேன் ;
இன்னும் உயிர் விட்டிலேனால் .
3.4.22

2803
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை
நலி சம்பரனைத் தடிந்த அந்நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய ,
'நீ உடல் நான் ஆவி 'என்று
செயிர் கிடத்தல் செய்யாத திருமனத்தாய் !
செப்பினாய் ; திறம்பா , நின்சொல் ;
உயிர் கிடக்க , உடலை விசும்பு ஏற்றினார் ,
உணர்வு இறந்த கூற்றினாரே .
3.4.23

2804
'எழுவது ஓர் இசை பெருக , இப்பொழுதே ,
ஒப்பு அரிய எரியும் தீயின்
விழுவதே நிற்க , மட மெல்லியலார் தம்மைப்போல்
நிலத்தின் மேல் வீழ்ந்து
அழுவதே யான் ? 'என்னா , அறிவுற்றான் என
எழுந்து , ஆங்கு அவரை நோக்கி ,
'முழுவது ஏழ் உலகு உடையான் மைந்தன்மீர் !
கேண்மின் 'என முறையில் சொல்வான் .
3.4.24

2805
உயிர்களின் தோற்ற வரலாறு (2805-2809)
தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர்
தடங் கொங்கைத் தையலாருள்
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
புணர்ந்தனன் ; அத் தோகைமாருள்
மிக்க அதிதிப் பெயராள் , முப்பத்து முக்கோடி
விண்ணோர் ஈந்தாள் ;
மை கரும் கண் திதி என்பாள் , அதின் இரட்டி
அசுரர்தமை வயிறுவாய்த்தாள் .
3.4.25

2806
தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள் ;
மதி என்பாள் , மனிதர்தம் ஊடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
பயந்தனளால் ; சுரபி என்பாள் ,
தேனுவுடன் கந்தருவம் மற்றுள்ள பிற
பயந்தாள் ; தெரிக்கும் காலை
மானமுடைக் குரோதவசை , கழுதை ,
மரை , ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் .
3.4.26

2807
மழை புரையும் குழல் விநதை வான் , இடி ,
மின் , அருணனுடன் வயிநதேயன் ,
தழை புரையும் சிறைக் கூகை , பாறு முதல்
பெரும் பறவை தம்மை ஈன்றாள் ;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி , சிவல் ,
காடையுடன் பிறவும் ஈன்றாள் ;
கழை எனும் அக் கொடி பயந்தாள் கொடி
உடனே செடி முதலாக் கண்ட எல்லாம் .
3.4.27

2808
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம்
கத்துருவாம் மின்னும் ஈன்றாள் ;
மருட்டி எழும் ஒரு தலைய புயங்கம் எலாம்
சுதை என்னும் மாது தந்தாள் ;
அருட்டை எனும் அவள் பயந்தாள் ஓந்தி உடும்பு
அணில்கள் முதலாய எல்லாம் ;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம்
ஆகிய பலவும் தெரிக்கும் காலை .
3.4.28

2809
அதிதி , திதி , தனு , அருட்டை , சுதை , கழையே ,
சுரபி , அணி விநதை , ஆன்ற
மதி , இளை , கத்துருவுடனே குரோதவசை ,
தாம்பிரை , ஆம் மடநலார்கள் ,
விதிமுறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் ;
விநதை சுதன் அருணன் மென் தோள்
புது மதி சேர் நுதல் அரம்பைதனைப் புணர
உதித்தனம் யாம் புவனி மீதே .
3.4.29

2810
சடாயு , தன் வரலாறு கூறியது
அருணன்தன் புதல்வன் யான் ; அவன் படரும்
உலகு எல்லாம் படர்வேன் ; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு
இன் உயிர்த் துணைவன் ; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் ;
கழுகின் மன்னன் ;
தருணங்கொள் பேர் ஒளியீர் ! சம்பாதி பின்னர்
வரு சடாயு
என்றான் .
3.4.30

2811
இராம இலக்குவர் மகிழ்ச்சி
ஆண்டு அவன் ஈது உரை செய்ய , அஞ்சலித்த
மலர்க் கையார் , அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறைமுறையின் நிறை
மலர்க் கண் மொய்த்த நீரார் ,
பூண்ட பெரும் புகழ் நிறுவித் தம்பொருட்டால்
மேல் உலகம் புக்க தாதை
மீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரே
ஒத்தனர் , அவ் விலங்கல் தோளார் .
3.4.31

2812
சடாயு இறக்கத் துணிதல்
மருவினிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி ,
'மக்காள் ! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் ; உடல்
இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும் உடல்
பொறை யான் , பீழை பாராது ,
எரி அதனின் இன்றே புக்கு இறவேனேல்,
இத்துயரம் மறவேன் 'என்றான் .
3.4.32

2813
இராம இலக்குவரின் துன்பச் சொல் (2813-2815)
என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது , கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக ,
நின்று மற்று இன நீர்மை நிகழ்த்தினார் .
3.4.33

2814
'உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விடக் கருதாது விண் ஏறினான் ;
இவ்விடத்தினில் எம்பெருமாஅன் ! எமைக்
கைவிடில் பினை யார் களைகண் உளார் ?
3.4.34

2815
'தாயின் , நீங்கரும் தந்தையின் , தண் நகர்
வாயில் நீங்கி வனம் புகுந்து எய்திய
நோயும் நீங்கினம் நுன்னின் என்
எங்களை
நீயும் நீங்குதியோ ? நெறி நீங்கலாய் ! '
3.4.35

2816
சடாயு அமைதி கூறி , அவர் வனம்புகுந்தமைக்குக் காரணம் வினவல் (2816-2818)
என்ற சொல்லர் ; இரந்து அழி நெஞ்சினர் ;
நின்ற வீரரை நோக்கி நினைந்து அவன் ,
'அன்று அது என்னின் , அயோத்தியின் , ஐயன்மீர் !
சென்றபின் அவற் சேர்குவென் யான் 'என்றான் .
3.4.36

2817
வேந்தன் விண் அடைந்தான் எனின் , வீரர் நீர்
ஏந்தும் ஞாலம் இனிது அளியாது , இவண்
போந்தது என்னை ? புகுந்த என் ? புந்தி போய்க்
காந்துகின்றது ; கட்டுரையீர்
என்றான் .
3.4.37

2818
'தேவர் தானவர் , திண் திறல் நாகர் , வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் ,
பூ அராவு பொலம் கதிர் வேலினீர் !
சாவர் ஆக்கித் தருவென் அரசு 'என்றான் .
3.4.38

2819
இலக்குவன் , வனம்போந்த வரலாறு கூறல்
தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன் ; அவனும் தன் சிற்றவை
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் .
3.4.39

2820
சடாயு இராமனைப் புகழ்தல் (2820-2821)
'உந்தை உண்மையன் ஆக்கி , உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக் கொண்டு , தாரணி
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே !
எந்தை வல்லது யாவர் வல்லார் ? 'எனா .
3.4.40

2821
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி , மோந்து , பொழிந்த கண் நீரினன் ,
வல்லை ; மைந்த !'அம் மன்னையும் , என்னையும் ,
எல்லை இல் புகழ் எய்துவித்தாய் 'என்றான் .
3.4.41

2822
சடாயு சீதையைப் பற்றி வினவுதல்
பின்னரும் அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் ;
மன்னர் மன்னவன் மைந்த !'இவ் வாள் நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் 'என்றான் .
3.4.42

2823
இலக்குவன் விடை
அல் இறுத்து அன தாடகை ஆதியா
வில் இறுத்தது இடை என மேலை நாள்
புல் இறுத்தது யாவும் புகன்று , தன்
சொல் இறுத்தனன் ; தோன்றல் பின் தோன்றினான் .
3.4.42

2824
இக்காட்டில் தங்குக என்றல்
கேட்டு உவந்தனன் கேழ்கிளர் மௌலியான் ;
தோட்டு அலங்கலினீர் ! துறந்தீர் வளம் ;
நாட்டின் நீவிரும் நல் நுதல் தானும் இக்
காட்டில் வைகுதிர் ; காக்குவென் யான்
என்றான் .
3.4.44

2825
இராமன் விடை
'இறைவ ! எண்ணி அகத்தியன் ஈந்துளது ,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு சூழல் ; அச்சூழல் புக்கு
உறைதும் ;' என்றனன் உள்ளத்து உறைகுவான் .
3.4.45

2826
சடாயு சிறை நிழலில் இராமன் முதலியோர் செல்லுதல்
பெரிதும் நன்று ; அப் பெருந்துறை வைகி , நீர்
புரிதிர் மாதவம் ; போதுமின் ! யான் அது
தெரிவுறுத்துவென்
என்று அவர் திண் சிறை
விரியும் நீழலில் செல்ல , விண் சென்றனன் .
3.4.46

2827
இராமன் முதலியோர் சோலையில் தங்குதல்
ஆய சூழல் அறிய உணர்த்தி , அத்
தூய சிந்தைய தோம் இல் குணத்தினான்
போய பின்னைப் பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார் .
3.4.47

2828
சடாயு அவர்களைக் குறிக்கொண்டு காத்தல்
வார்ப் பொன் கொங்கை மருகியை , மக்களை
ஏர்ப்பச் சிந்தனை இட்டு அவ் வரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கு அறத் தேறினன் , சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையில் பார்க்கின்றான் .
3.4.48


3.5 – Textabschnitt

3.5 . சூர்ப்பணகைப் படலம் ( 2829 -2971 )

2829
கோதாவரியின் தோற்றம் (2829-2831)
புவியினுக்கு அணியாய் , ஆன்ற
பொருள் தந்து , புலத்திற்று ஆகி ,
அவி அகத் துறைகள் தாங்கி ,
ஐந்திணை நெறி அளாவிச்
சவி உறத் தெளிந்து , தண் என்று
ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார் .
3.5.1

2830
வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்கு உற நோக்கி ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரித் திரு மலர் தூவிச் செல்வர்க்
கண்டு அடி பணிவது என்னப் பொலிந்தது கடவுள் யாறு .
3.5.2

2831
எழுவுறு காதலால் இங்கு
இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கிப்
பழுவ நாள் குவளைச் செவ்விக்
கண் பனி பரந்து சோர ,
வழு இலா வாய்மை மைந்தர்
வனத்து உறை வருத்தம் நோக்கி ,
அழுவதும் ஒத்ததால் , அவ்
அலங்கு நீர் ஆறு மன் ஓ .
3.5.3

2832
இராமனும் சீதையும் இயற்கை யெழிலைக் கண்டு மகிழ்தல் (2832-2834)
நாளம் கொள் நளினப் பள்ளி ,
நயனங்கள் அமைய , நேமி
வாளங்கள் உறைவ கண்டு
மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் ;
மற்றை நேரிழை , நெடிய நம்பி
தோளின்கண் மனம் வைத்து அன்ன
சுடர் மணித் தடங்கள் கண்டாள் .
3.5.4

2833
ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியது ஓர் முறுவல் செய்தான் ;
மாது அவள்தானும் , ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியது ஓர் முறுவல் பூத்தாள் .
3.5.5

2834
வில் இயல் தடக்கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க ,
எல்லி அம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற
அல்லி அம் கமலம் கண்டாள் , அண்ணல்தன் வடிவு கண்டாள் .
3.5.6

2835
பன்னசாலையில் தங்குதல்
அனையது ஓர் தன்மையால் அவ் அருவி நீர் ஆற்றின் பாங்கர்ப்
பனி தரு படிவப் பஞ்சவடி எனும் பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் ; இப்பால் .
3.5.7

2836
சூர்ப்பணகை வருகை (2836-2839)
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் ,
மேலை நாள் உயிரொடும் பிறந்து , தான் விளை
காலம் ஓர்ந்து , உடன் உறை கடிய நோய் அனாள் . .
3.5.8

2837
செம்பு அராகம் படச் செறிந்த கூந்தலாள் ,
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் ,
உம்பர் ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் .
3.5.9

2838
வெய்யதோர் காரணம் உண்மை மேயினாள் ,
வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள் ,
நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள் ,
எய்தினள் , இராகவன் இருந்த சூழல்வாய் .
3.5.10

2839
எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் .
3.5.11

2840
இராமனழகை வியத்தல் (2840-2855)
'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ;
இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள்
உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் .
3.5.12

2841
'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான்
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப்
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .
3.5.13

2842
'தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின ;
மரங்களும் நிகர்க்கல ; மலையும் புல்லிய ;
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணிக் கரம் 'என்று உன்னுவாள் .
3.5.14

2843
'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்
கல் மலை நிகர்க்கல ; கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது , நாம மேருவும்
பொன் மலை ஆதலால் , பொருவலாது 'என்பாள் .
3.5.15

2844
'தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண் ; நெடிய மார்பு 'என்பாள் .
3.5.16

2845
'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்
பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ ?
கதிர் மதி ஆம் எனில் கலைகள் தேயும் ; அம்
மதியெனின் , மதிக்கும் ஓர் மறு உண்டு 'என்னும் ஆல் .
3.5.17

2846
'எவன் செய , இனிய இவ் அழகை எய்தினோன் ,
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான் ?
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த தவன் என் ? 'என்கின்றாள் .
3.5.18

2847
'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் ,
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள் .
3.5.19

2848
'வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக்
காணலனே கொலோ கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி செலுத்திச் சிந்தையின்
நாணலன் மீமிசை நடக்கின்றான் 'என்றாள் .
3.5.20

2849
'குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்
இப் பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என உலகமேல் உரைக்க ஒண்ணுமோ ?
துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன் ? '
3.5.21

2850
'நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற
வற்கலை நோற்றன மாசு இலா மணிப்
பொன் கலை நோற்றில போலும் , ஆல் 'என்பாள் .
3.5.22

2851
'தொடை அமை நெடு மழைத் தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன் என்னில் , தையலார்
உடை உயிர் யாவையும் உடையும் , ஆல் 'என்றாள் .
3.5.23

2852
'நாறிய நகை அணி நல்ல புல்லினால்
ஏறிய செவ்வியின் இயற்றுமோ ? 'எனா ,
'மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ ? 'என்பாள் .
3.5.24

2853
'கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய
பரம்தரு நான் முகன் பழிப்பு உற்றான் அரோ !
இரந்து இவன் இணை அடிப் பொடியும் ஏற்கலாப்
புரந்தரன் உலகு எலாம் புரக்கின்றான் 'என்பாள் .
3.5.25

2854
நீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள ,
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள் .
3.5.26

2855
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் , நின்றனள் , புழுங்கும் நெஞ்சினள் ,
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் , பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் .
3.5.27

2856
இராமன்மேல் காதல் கொள்ளல்
நின்றனள் ,இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் ; அன்று எனின் , அமுதம் உண்கினும்
பொன்றுவென் ; போக்கு இனி அரிது போன்ம்
எனாச்
சென்று , எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் .
3.5.28

2857
உருமாறிச் செல்ல எண்ணுதல்
'எயிறு உடை அரக்கி , எவ் உயிரும் இட்டது ஓர்
வயிறு உடையாள் 'என மறுக்கும் , ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வைச் செவ்வி வாய்
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று
எனா .
3.5.29

2858
திருமகள் அருளால் உருமாறி வருதல் (2858-2861)
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் ,
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள் .
3.5.30

2859
பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி ,
அம் சொல் இள மஞ்ஞை என , அன்னம் என , மின்னும்
வஞ்சி என , நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் .
3.5.31

2860
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
பின்னு எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்து ஓர்
கன்னி எழில் கொண்டது கலைத் தட மணித் தேர்
மின் அழிவு இல் தன்மையது விண் இழிவது என்ன .
3.5.32

2861
கானின் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாசத்
தேனின் மொழி உற்று , இனிய செவ்வி நனி பெற்று , ஓர்
மானின் விழி பெற்று , மயில் வந்தது என வந்தாள் .
3.5.33

2862
அவள் வரும் வழியை இராமன் நோக்குதல்
நூபுரமும் , மேகலையும் , நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை , பூசலிடும் ஓசை
தாம் , உரை செய்கின்றது ;'ஒரு தையல் வரும்’
என்னாக்
கோமகனும் , அத்திசை குறித்து எதிர் விழித்தான் .
3.5.34

2863
சூர்ப்பணகையின் அழகை இராமன் வியந்து காண்டல் (2863-2864)
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு , இடை வணங்க வரு போழ்தத்து ,
எண் அருளி , ஏழைமை துடைத்து , எழும் மெய்ஞ்ஞானக்
கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் .
3.5.35

2864
பேர் உழைய நாகர் உலகின் , பிறிது வானின்
பார் உழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா ,
ஆர் உழை அடங்கும் ? அழகிற்கு அவதி உண்டோ ?
நேர் இழையர் யாவர் இவர் நேர் ? என நினைந்தான் .
3.5.36

2865
சூர்ப்பணகை இராமனை வணங்கி நிற்றல்
அவ்வயின் அவ் ஆசை தன் அகத்து உடைய அன்னாள் ,
செவ்வி முகம் முன்னி , அடி செங்கையின் இறைஞ்சா ,
வெவ்விய நெடுங்கண் அயில் வீசி , அயல் பாரா ,
நவ்வியின் ஒதுங்கி , இறை நாணி , அயல் நின்றாள் .
3.5.37

2866
இராமன் சூர்ப்பணகை உரையாடல் (2866-2884)
தீது இல் வரவு ஆக திரு ! நின் வரவு சேயோய் !
போத உளது எம் உழை ஓர் புண்ணியமது அன்றோ
ஏது பதி ? ஏது பெயர் ? யாவர் உறவு என்றான்
வேதமுதல் ; பேதை அவள் தன் நிலை விரிப்பாள் .
3.5.38

2867
'பூவிலோன் புதல்வன் மைந்தன்
புதல்வி ; முப் புரங்கள் செற்ற
சே வலோன் துணைவன் ஆன
செங்கையோன் தங்கை ; திக்கின்
மா எலாம் தொலைத்து , வெள்ளி
மலை எடுத்து , உலகம் மூன்றும்
காவலோன் பின்னை ; காம
வல்லியாம் கன்னி 'என்றாள் .
3.5.39

2868
அவ்வுரை கேட்ட வீரன் .
ஐயுறு மனத்தான் ,'செய்கை
செவ்விது அன்று ; அறிதல் ஆகும்
சிறிதின் 'என்று உணரச்செங்கண்
வெவ்வுரு அமைந்தோன் தங்கை

என்றது மெய்ம்மை ஆயின் ,
இவ்வுரு இயைந்த தன்மை
இயம்புதி இயல்பின் என்றான் .
3.5.40

2869
தூயவன் பணியாமுன்னம்
சொல்லுவாள் , சோர்வு இலாள் : 'அம்
மாய வல் அரக்கரோடு
வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வுறு மனத்தேன் ஆகி ,
அறம் தலைநிற்பது ஆனேன் .
தீவினை தீய நோற்றுத்
தேவரில் பெற்றது ' என்றாள் .
3.5.41

2870
'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின் , உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் ,
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை ; துணையும் இன்றித்
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் ? தையல் !' என்றான் .
3.5.42

2871
வீரன் அஃது உரைத்தலோடும்
மெய் இலாள் ,'விமல ! யான் அச்
சீரியர் அல்லார் மாட்டுச்
சேர்கிலென் ; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும்
அடைந்தனென் ; இறைவ ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை நின்னைக்
காணிய வந்தேன் 'என்றாள் .
3.5.43

2872
அன்னவள் உரைத்தலோடும் ,
ஐயனும் ,'அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை
நல் நெறிப் பால அல்ல ;
பின் இது தெரியும் 'என்னாப் ,
'பெய் வளைத் தோளி ! என்பால்
என்ன காரியத்தை ? சொல் ; அஃது
இயையுமேல் இழைப்பல் 'என்றான் .
3.5.44

2873
'தாம் உறு காமத் தன்மை
தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால் ,
அருங்குல மகளிர்க்கு அம்மா !
ஏம் உறும் உயிர்க்கு நோவேன் ;
என் செய்கேன் ? யாரும் இல்லேன் ;
காமன் என்று ஒருவன் செய்யும்
வன்மையைக் காத்தி 'என்றாள் .
3.5.45

2874
சேண் உற நீண்டு , மீண்டு ,
செவ்வரி சிதறி , வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து , நானா
விதம் புரண்டு , இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
அம்மொழி புகறலோடும் ,
'நாண் இலள் ; ஐயன் , நொய்யள் ;
நல்லளும் அல்லள் 'என்றான் .
3.5.46

2875
பேசலன் இருந்த வள்ளல்
உள்ளத்தின் பெற்றி ஓராள் ,
பூசல் வண்டு அரற்றும் கூந்தல்
பொய்ம் மகள் ,புகன்ற என்கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ ?
அன்று எனல் உண்டோ ?
என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் ,
மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் .
3.5.47

2876
'எழுதரு மேனியாய் ! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் ,
முழுது உணர்முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் 'என்றாள் .
3.5.48

2877
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் : வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் 'என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் ;
'சுந்தரி ! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் ;
அந்தணர் பாவை நீ ; யான் அரசரில் வந்தேன் 'என்றான் .
3.5.49

2878
'ஆரண மறையோன் எந்தை ; அருந்ததிக் கற்பின் எம்மோய் ,
தாரணி புரந்த சால கடங்கடர் மரபின் தையல் ;
போர் அணி பொலம் கொள் வேலாய் ! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் , என் உயிர் காண்பென் 'என்றாள் .
3.5.50

2879
அருத்தியள் அனைய கூற , அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான் ,
'வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல் , நங்கை !
பொருத்தம் அன்று
என்று சாலப் புலமையோர் புகல்வர் 'என்றான் .
3.5.51

2880
'பராவருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது
இராவணன் தங்கை என்றது ஏழைமைப்பாலது 'என்னா ,
'அராவணை அமலன் அன்னாய் ! அறிவித்தேன் முன்னம் ; தேவர்ப்
பராவினில் நீங்கினேன் அப் பழிபடு பிறவி 'என்றாள் .
3.5.52

2881
'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ; ஊங்கின்
ஒருவனோ குபேரன் ; நின்னோடு உடன் பிறந்தவர்கள் ; அன்னார்
தருவரேல் , கொள்வென் ; அன்றேல் , தமியை வேறு இடத்துச் சார்தி ;
வெருவுவன் ; நங்கை ! 'என்றான் , வேதத்தின் அறிவை வென்றான் .
3.5.53

2882
'காந்தர்ப்பம் என்பது உண்டால் : காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் ,
ஏந்தல் பொன் தோளினாய் ! இ•து இயைந்தபின் , எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்றாகும் ; வேறும் ஓர் உரை உண்டு 'என்றாள் .
3.5.54

2883
'முனிவரோடு உடையர் முன்னே முதிர்பகை , முறைமை நோக்கார் ,
தனியை நீ ; ஆதலால் , மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை ; விண்ணும் நின் ஆட்சி ஆக்கி ,
இனியராய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் 'என்றாள் .
3.5.55

2884
இராமன் இகழ்ச்சிக் குறிப்பால் சிரித்தல்
'நிருதர்தம் அருளும் பெற்றேன் ; நின் நலம் பெற்றேன் ; நின்னோடு
ஒருவருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ; ஒன்றோ ?
திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய் தவம் பயந்தது 'என்னா ,
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் .
3.5.56

2885
சீதை வருதல்
விண் இடை , இம்பர் , நாகர் , விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர்க் கடி கமழ் சாலை நின்றும்
பெண்ணிடை அரசி , தேவர் பெற்ற நல் வரத்தால் , பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் .
3.5.57

2886
சூர்ப்பணகை சீதையைக் கண்டு வியத்தல் (2886-2890)
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி , உருவம் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்கல் , நோக்கி ,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் .
3.5.58

2887
'மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் ;
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை ;
அரவிந்த மலருள் நீங்கி , அடி இணை படியில் தோயத்
திரு இங்கு வருவாள் கொல்லோ ? 'என்று அகம் திகைத்து நின்றாள் .
3.5.59

2888
பண்பு உற நெடிது நோக்கிப் ,படைக்குநர் சிறுமை அல்லால் ,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம்
என்று நின்றாள் ;
கண் பிற பொருளில் செல்லா ; கருத்து எனின் , அ•தே ; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் , என்படும் பிறருக்கு ?
என்றாள் .
3.5.60

2889
'பொரு திறத்தானை நோக்கிப் பூவையை நோக்கி , நின்றாள் ;
கருத மற்று இனி வேறு இல்லை ; கமலத்துக் கடவுள் தானே ,
ஒரு திறத்து உணர நோக்கி , உருவினுக்கு , உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும் , செய்த வரம்பு இவர் இருவர் 'என்றாள் .
3.5.61

2890
'பொன்னைப் போல் பொரு இல் மேனிப்
பூவைப்பூ வண்ணத்தான் , இம்
மின்னைப் போல் இடையாளோடும் மேவும்
மெய் உடையன் அல்லன் ;
தன்னைப் போல் தகையோர் இல்லாத்
தளிரைப் போல் அடியினாளும் ,
என்னைப் போல் இடையே வந்தாள் ;
இகழ்விப்பென் இவளை 'என்னா .
3.5.62

2891
சீதையை அரக்கியெனல்
வரும் இவள் , மாயம் வல்லள் ; வஞ்சனை அரக்கி ; நெஞ்சம்
தெரிவு இலம் ; தேறும் தன்மை , சீரியோய் ! செயல் இது அன்றால் ,
உரு இது மெய்யது அன்றால் ; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் ; எய்திடாமல் விலக்குதி , வீர ! என்றாள் .
3.5.63

2892
சூர்ப்பணகையின் பொய்யுரை கேட்டு இராமன் சிரித்தல்
'ஒள்ளிது உன் உணர்வும் மின்னே ! உன்னை ஆர் ஒளிக்கும் மீட்டார் ?
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது ; அம்மா !
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி 'என்னா ,
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் .
3.5.64

2893
சீதைமேல் அரக்கி வெகுளல்
ஆயிடை , அமுதின் வந்த , அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும் , வீரனைச் சேரும் வேலை ,
'நீ இடை வந்தது என்னை ? நிருதர்தம் பாவை 'என்னாக்
காய் எரி அனைய கள்ள உள்ளத்தான் கதித்தலோடும் .
3.5.65

2894
சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்
அஞ்சினள் ; அஞ்சி அன்னம் , மின் இடை அலச ஓடிப்
பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள் ; பருவக் கால
மஞ்சு இடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்னக்
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக்கொண்டாள் .
3.5.66

2895
இராமன் சூர்ப்பணகையைக் கடிதல்
'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் ,
விளைவன தீமையே ஆம் 'என்பதை உணர்ந்து , வீரன் ,
'உளைவன இயற்றல் ; ஒல்லை உன் நிலை உணருமாயின் ,
இளையவன் முனியும் ; நங்கை ! ஏகுதி விரைவின் 'என்றான் .
3.5.67

2896
சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி
பொற்பு உடை அரக்கி ,'பூவில் , புனலினில் , பொருப்பில் , வாழும்
அற்பு உடை உள்ளத்தாரும் அநங்கனும் , அமரர் மற்றும்
எற்பெறத் தவம் செய்கின்றார் ; என்னை நீ இகழ்வது என்னே ?
நல் பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி 'என்றாள் .
3.5.68

2897
சீதையோடு இராமன் பன்னசாலை புகுதல்
'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் ; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் 'என்னா ,
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் , மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய் , அப் பூம் பொழிற் சாலை புக்கான் .
3.5.69

2898
சூர்ப்பணகையின் காதல்நோய் (2898-2912)
புக்க பின் போயது என்னும் உணர்வினள் ; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள் ; ஒன்றும் உயிர்த்திலள் ; ஒடுங்கிநின்றாள் ;
'தக்கிலன் ; மனத்துள் யாதும் தழுவிலன் ; சலமும் கொண்டான் ;
மைக் கருங்குழலினாள் மாட்டு அன்பினில் வலியன் 'என்பாள் .
3.5.70

2899
நின்றிலள் ; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் ;
'இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் , உயிர் இழப்பென் 'என்னாப்
பொன் திணி சரளச் சோலைப் பளிக்கறைப் பொதும்பர் புக்காள் ;
சென்றது , பரிதி மேல்பால் ; செக்கர் வந்து இறுத்தது அன்றே .
3.5.71

2900
அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின் ,
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால் ,
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே .
3.5.72

2901
தாடகைக் கொடியாள் தட மார்பிடை ,
ஆடவர்க்கு அரசன் அயில் அம்புபோல் ,
பாடவத் தொழில் மன்மதன் பாய் கணை
ஓட , உட்கி , உயிர் உளைந்தாள் அரோ !
3.5.73

2902
கலை உவாமதியே கறி ஆக , வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள் ,
மலைய மாருதம் ஆம் நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட , ஓயுமால் ,
3.5.74

2903
அலைக்கும் ஆழி அடங்கிட , அங்கையான்
மலைக் குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் ,
நிலைக்கும் வானில் நெடுமதி நீள் நிலா
மலைக்க , நீங்கும் மிடுக்கினள் மாந்துவாள் .
3.5.75

2904
'பூ எலாம் பொடி ஆக , இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென் 'எனக் காந்துவாள் ,
சேவலோடு உறை செந்தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச , நடுங்குவாள் .
3.5.76

2905
'அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் , ஓடி 'எனக் கொதித்து உன்னுவாள் ,
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர , ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் .
3.5.77

2906
கைகளால் , தன் கதிர் இளங் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் ;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்கும் ஆல் .
3.5.78

2907
அளிக்கும் மெய் , உயிர் , காந்து அழல் அஞ்சினள் ,
குளிக்கும் நீரும் கொதித்து எழக் கூசுமால் ;
விளிக்கும் வேலையை , வெங்கண் அநங்கனை ,
ஒளிக்கல் ஆம் இடம் யாது ? என , உன்னுமால் .
3.5.79

2908
வந்து கார் மழை தோன்றினும் , மா மணிக்
கந்து காணினும் , கைத்தலம் கூப்புமால் ;
இந்துகாந்தத்தின் ஈர நெடுங்கலும்
வெந்து காந்த , வெதுப்புறு மேனியாள் .
3.5.80

2909
வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனைக் கண்டு உணராவகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால் .
3.5.81

2910
அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்
முன்னின் மும்மடியாய் முலை வெந்து உக ,
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ .
3.5.82

2911
வீரன் மேனி வெளிப்பட , வெய்யவள் ,
கார் கொள் மேனியைக் கண்டனளாம் எனச்
சோரும் ; வெள்கும் ; துணுக்கெனும் ; அவ் உருப்
பேருங்கால் , வெம் பிணியிடைப் பேரும் ஆல் .
3.5.83

2912
ஆகக் கொங்கையின் , ஐயன் என்று , அஞ்சன
மேகத்தைத் தழுவும் ; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும் ; அப்புன்மையாள்
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாங்கொலோ ?
3.5.84

2913
கவிக்கூற்று
'ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் , அவ்
ஏழை ஆவி இறந்திலள் 'என்பர் ஆல் ;
'ஆழியானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே . '
3.5.85

2914
சூர்ப்பணகையின் காமமிக்க கழிபடர்கிளவி (2914-2916)
'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கென தாவத்தை நீக்கு 'எனும் ;
'அஞ்சனக் கிரியே ! அருளாய் 'எனும் ;
நஞ்சு நக்கினள் போல நடுங்குவாள் .
3.5.86

2915
'காவியோ , கயலோ , எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள் ;
பாவியேனையும் பார்க்குங்கொலோ ? 'எனும் ,
ஆவி ஓயினும் , ஆசையின் ஓய்வு இலாள் .
3.5.87

2916
'மாண்ட கற்பு உடையாள் மலர் மார்பகம்
ஆண்டு இருக்கும் நல்லாள் மகள் 'என்னுமால் ;
வேண்டகிற்பின் அல்லால் அவர் மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ ? தெறும் காமமே .
3.5.88

2917
சூரியன் உதித்தல்
ஆன்ற காதல் அஃது உற எய்துழி ,
மூன்று உலோகமும் மூடும் அரக்கராம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என , வெய்யவன் தோன்றினான் .
3.5.89

2918
சூர்ப்பணகையின் எண்ணம் (2918-2920)
விடியல் காண்டலின் , ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் ,
'படி இலாள் மருங்கு உள்ளளவு , எனை அவன் பாரான் ;
கடிதின் ஓடினென் எடுத்து , ஒல்லைக் கரந்து , அவள் காதல்
வடிவில் நான் உடன் வாழ்வதே மதி 'என மதியா .
3.5.90

2919
வந்து நோக்கினள் ; வள்ளல் போய் ஒரு மணித் தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் ; தம்பி
இந்து நோக்கிய நுதலியைக் காத்து , அயல் இருண்ட
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் .
3.5.91

2920
தனி இருந்தனள் ; சமைந்தது என் சிந்தனை ; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் 'என , எண்ணாத்
துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் ;
கனி இரும் பொழில் , காத்து அயல் இருந்தவன் கண்டான் .
3.5.92

2921
இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்புக்களை அறுத்தல் (2921-2922)
'நில் அடீஇ 'எனக் கடுகினன் , பெண் என நினைந்தான் ;
வில் எடாது , அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங்கையில் திருகுறப் பற்றி ,
ஒல்லை ஈர்த்து , உதைத்து , ஒளி கிளர் சுற்று வாள் உருவி .
3.5.93

2922
ஊக்கித் தாங்கி ,'விண் படர்வென் 'என்று உருத்து எழுவாளை
நூக்கி , நொய்தினின் ,'வெய்து இழையேல் 'என நுவலா ,
மூக்கும் , காதும் , வெம் முரண் முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும் , புரி குழல் விட்டான் .
3.5.94

2923
உறுப்பறுப்புண்ட சூர்ப்பணகையின் நிலை (2923-2925)
அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது ; தேவர்தம் செவியும்
புக்கது ; உற்றது புகல்வது என் ? மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று , உருகியது உலகம் .
3.5.95

2924
கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின் அக் கொடியாள்
முலை துமித்து , உயர் மூக்கினை நீக்கிய முறைமை ,
மலை துமித்தென , இராவணன் மணி உடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது , ஒத்தது ஓர் தன்மை .
3.5.96

2925
அதிர , மா நிலத்து , அடி பதைத்து அரற்றிய அரக்கி ,
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் , வெம் கதப் போர்
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து , ஆண்டு ,
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் .
3.5.97

2926
சூர்ப்பணகையின் துன்பநிலை (2926-2928)
உயரும் விண்ணிடை ; மண்ணிடை விழும் ; கிடந்து உழைக்கும் ;
அயரும் ; கை குலைத்து அலமரும் ; ஆர் உயிர் சோரும் ;
பெயரும் ;'பெண் பிறந்தேன் பட்ட பிழை 'எனப் பிதற்றும் ;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல் குடிப் பிறந்தாள் .
3.5.98

2927
ஒற்றும் மூக்கினை ; உலை உறு தீ என உயிர்க்கும் ;
எற்றும் கையினை நிலத்தினில் ; இணைத் தடங் கொங்கை
பற்றும் ; பார்க்கும் ; மெய் வெயர்க்கும் ; தன் பரு வலிக் காலால்
சுற்றும் ஓடும் ; போய்ச் சோரி நீர் சொரிதரச் சோரும் .
3.5.98

2928
ஊற்று மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள் , தேவரும் இரியக்
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி ,
ஆற்றுகிற்கிலள் , பற்பல பன்னி நின்று , அழைத்தாள் .
3.5.100

2929
சூர்ப்பணகை தன் உறவினரை அழைத்தல் (2929-2941)
நிலை எடுத்து , நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ ? தேவர் எதிர்
தலை எடுத்து விழியாமைச் சமைப்பதே ? தழல் எடுத்தான் !
மலை எடுத்த தனி மலையே ! இவை காண வாராயோ ?
3.5.101

2930
புலிதானே புறத்து ஆகக் குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும் , வானவர்க்கும் , தானவர்க்கும் ,
வலியானே ! யான் பட்ட வலி காண வாராயோ ?
3.5.102

2931
ஆர்த்து , ஆனைக்கு அரசு உந்தி , அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது , அவனைப் போர் தொலைத்து ,
வேர்த்தானை , உயிர் கொண்டு மீண்டானை , வெரிந் பண்டு
பார்த்தானே ! யான் பட்ட பழி வந்து பாராயோ ?
3.5.103

2932
காற்றினையும் , புனலினையும் , கனலினையும் , கடுங் காலக்
கூற்றினையும் , விண்ணினையும் , கோளினையும் , பணி கோடற்கு
ஆற்றினை நீ , ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ ? உன் வலத்தைச் சிவன் தடக்கை வாள் கொண்டாய் !
3.5.104

2933
உருப் படிவம் மன்மதனை ஒத்துளரே ஆயினும் , உன்
செருப்பு அடியில் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ ?
நெறுப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடியப் பொருப்பு இடியத் தோள் நிமிர்த்த வலியோனே !
3.5.105

2934
தேன் உடைய நறுந்தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும் , தம்பியர்க்கும் , தவிர்ந்ததோ ?
ஊன் உடைய உடம்பினராய் , எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடவர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி ? அம்மா !
3.5.106

2935
மரன் ஏயும் நெடுங்கானின் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனேயோ ? அடல் அரக்கர் ஓய்வேயோ ? உற்று எதிர்ந்தார்
அரனேயோ ? அயனேயோ ? அரியேயோ ? எனும் ஆற்றல்
கரனேயோ ! யான் பட்ட கையறவு காணாயோ ?
3.5.107

2936
இந்திரனும் , மலர் அயனும் , இமையவரும் , பணி கேட்பச்
சுந்தரி பல்லாண்டு இசைப்ப , உலகு ஏழும் தொழுது ஏத்தச்
சந்திரன் போல் தனிக் குடைக் கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து , அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ ?
3.5.108

2937
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி , மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க , நான் இருந்து புலம்புவதோ ?
கரன் இருந்த வனம் அன்றோ ? இவை படவும் கடவேனோ ?
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ ! அண்ணாவோ !
3.5.109

2938
'நசையாலே மூக்கு இழந்து , நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ ?
திசையானை விசை கலங்கச் செருச் செய்து , மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ ! இராவணவோ !
3.5.110

2939
'கானம் அதின் இடை இருவர் , காதொடு மூக்கு உடன் அரிய ,
ஈனமதால் பாவியேன் , இவண் மடியக் கடவேனோ ?
தானவரைக் கரு அறுத்துச் சதமகனைத் தளையிட்டு
வானவரைப் பணி கொண்ட மருகாவோ ! மருகாவோ! ! '
3.5.111

2940
'ஒரு காலத்து , உலகு ஏழும் உருத்து எதிரத் தனு ஒன்றால் ,
திருகாத சினம் திருகித் திசை அனைத்தும் செல நூறி ,
இரு காலில் , புரந்தரனை இருஞ் சிறையின் இடுவித்த
மருகாவோ ! மானிடவர் வலி காண வாராயோ ? '
3.5.112

2941
'கல் ஈரும் படைத் தடக்கை அடல் , கர தூடணர் முதலா ,
அல் ஈரும் சுடர் மணிப் பூண் , அரக்கர் குலத்து அவதரித்தீர் !
கொல் ஈரும் படைக் கும்பகருணனைப்போல் , குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ ? யான் அழைத்தல் கேளீரோ ? '
3.5.113

2942
அப்பொழுது இராமன் வருதல்
என்று , இன்ன பல பன்னி , இகல் அரக்கி அழுது இரங்கிப்
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து ,
நின்று , அந்த நதியகத்து , நிறை தவத்தின் குறை முடித்து ,
வன் திண் கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான் .
3.5.114

2943
சூர்ப்பணகை தான் பட்டதை இராமனுக்குணர்த்தல்
வந்தானை முகம் நோக்கி , வயிறு அலைத்து , மழைக் கண்ணீர் ,
செந்தாரைக் குருதி கொடு செழுநிலத்தைச் சேறு ஆக்கி ,
'அந்தோ ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய் ! யான் பட்டபடி இதுகாண் 'என்று எதிர் விழுந்தாள் .
3.5.115

2944
இராமன் வினா
விரிந்தாய கூந்தலாள் , வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது , தனது பொரு அரிய திரு மனத்தால்
தெரிந்தான் ; இன்று , இளையானே இவளை நெடுஞ் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் ;'அம்மனை ! நீ யார் ? 'என்றான் ,
3.5.116

2945
சூர்ப்பணகையின் விடை
அவ் உரை கேட்டு , அடல் அரக்கி'அறியாயோ நீ , என்னை ?
தெவ் உரை என்றோர் உலகும் இல்லாத சீற்றத்தான் ;
வெவ் இலை வேல் இராவணனாம் , விண் உலகம் முதலாக
எவ் உலகும் உடையானுக்கு உடன் பிறந்தேன் யான் 'என்றாள் .
3.5.117

2946
இராமன் வினாவும் சூர்ப்பணகையின் விடையும் (2946-2947)
'தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழியத் தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு என் செய வந்தீர் ? 'எனலும் ,
'வேம் இருந்தில் எனக் கனலும் வெம் காம வெம் பிணிக்கு
மா மருந்தே ! நெருநலினும் வந்திலனோ யான் ? 'என்றாள் .
3.5.118

2947
'செங்கயல் போல் கரு நெடும் கண் , தேம்மரு தாமரை உறையும்
நங்கை இவர்
என நெருநல் நடந்தவரோ நாம் ? 'என்னக்
'கொங்கைகளும் குழைக் காதும் கொடி மூக்கும் குறைத்து அழித்தால் ,
அங்கண் அரசே ! ஒருவர்க்கு அழியாதோ அழகு ? 'என்றாள் .
3.5.119

2948
இராமன் இலக்குவனை வினவுதல்
மூரல் முறுவலன் , இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி ,
'வீர ! விரைந்தனை , இவள்தன் விடு காதும் , கொடி மூக்கும் ,
ஈர , நினைந்து இவள் இழைத்த பிழை என் ? 'என்று இறை வினவச்
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கிச் சொல்லுவான் :
3.5.120

2949
இலக்குவன் விடை
'தேட்டம் தான் வாள் எயிற்றில் தின்னவோ ? தீவினையோர்
கூட்டம் தான் புறத்து உளதோ ? குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம் தான் எரி உமிழ , நல்லாள் மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள் ; அரிதின் இவள் உடன்று எழுந்தாள் 'என உரைத்தான் .
3.5.121

2950
சூர்ப்பணகை இடைமறித்துக் கூறுதல்
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன் , இகல் அரக்கி ,
'சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்பச் சினம் திருகிச்
சூல் தவளை , நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாடா !
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் ? 'என்றாள் .
3.5.122

2951
'ஓடிப்போ 'என இராமன் சினந்துரைத்தல்
'பேடிப் போர் வல் அரக்கர் பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம் ; இன்று , தீ மாற்றம் சில விளம்பி ,
வீடிப்போகாதே ; இம் மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப்போ 'என்று உரைத்த உரை கடந்தாற்கு , அவள் உரைப்பாள் .
3.5.123

2952
சூர்ப்பணகையின் சொல் (2952-2962)
'நிரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர் , இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால் ,
விரையும் இது நன்று அன்று ; வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது , நுமக்கு உறுதி உணர்வு உளதேல் 'என்று உரைப்பாள் .
3.5.124

2953
'ஆக்கரிய மூக்கு , உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் ; நாகரிகர் அல்லாமை ,
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் ; இனி , உமக்குப்
போக்கு அரிது ; இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே !
3.5.125

2954
'வான் காப்போர் , மண் காப்போர் , மா நாகர் வாழ் உலகம்
தான் காப்போர் , இனித் தங்கள் தலை காத்து நின்று , உங்கள்
ஊன் காக்க உரியார் யார் ? என்னை , உயிர் நீர் காக்கின் ,
யான் காப்பென் ; அல்லால் , அவ் இராவணனார் உளர் ! என்றால் .
3.5.126

2955
'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் ;
ஆவல் பேர் அன்பினால் , அறைகின்றேன் ஆம் அன்றோ ?
தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள் ; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள்
என்று , இளையானுக்கு இயம்பீரோ ?
3.5.127

2956
'மாப் போரில் புறம் காப்பேன் ; வான் சுமந்து செல வல்லேன் ;
தூப் போல்வ கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் ;
காப்போரைக் கைத்து என் ? நீர் கருதியது தருவேன் ; இப்
பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ ? புகல்வீரே .
3.5.128

2957
'குலத்தாலும் , நலத்தாலும் , குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும் , மதியாலும் , வடிவாலும் , மடத்தாலும் ,
நிலத்தாரும் , விசும்பாரும் , நேரிழையார் , என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ , வல்லீரேல் ?
3.5.129

2958
'போக்கினீர் என் நாசி ; போய்த்து என் ? நீர் பொறுக்கிலிரேல் ,
ஆக்குவென் ஓர் நொடி வரையின் ; அழகு அமைவென் ; அருள்கூரும்
பாக்கியம் உண்டு எனின் , அதனால் , பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?
மேக்கு உயரும் நெடு மூக்கு மடந்தையர்க்கு மிகை அன்றோ ?
3.5.130

2959
'விண்டாரே அல்லாரோ வேண்டாதார் நான் வேண்டின் ?
உண்டாய காதலின் , என் உயிர் என்பது உமது அன்றோ ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ ?
கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால் , கொள்ளீரோ ?
3.5.131

2960
'சிவனும் , மலர்த் திசைமுகனும் , திருமாலும் , தெறு குலிசத்து
அவனும் , அடுத்து ஒன்றகி நின்றன்ன உருவோனே !
புவனம் அனைத்தையும் , ஒரு தன் பூங்கணையால் உயிர் வாங்கும்
அவனும் , உனக்கு இளையானோ ? இவனே போல் அருள் இலனால் .
3.5.132

2961
'பொன் உருவப் பொரு கழலீர் ! புழை காண ,
மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ ?
இன் உருவம் இது கொண்டு , இங்கு இருந்தொழியும்
நம் மருங்கே ; ஏகாள் அப்பால் ;
பின் , இவளை அயல் ஒருவர் பாரார்
என்றே
அரிந்தீர் ; பிழை செய்தீரோ ?
அன்னதனை அறிந்து அன்றோ , அன்பு இரட்டி
பூண்டது ? நான் அறிவிலேனோ ?
3.5.133

2962
'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர்
ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் ,
அப்பழியால் , உலகு அனைத்தும் , நும்
பொருட்டால் அழிந்தனவாம் ; அறத்தை நோக்கி ,
ஒப்பு அழியச் செய்கிலார் உயர் குலத்துத்
தோன்றினோர் ; உணர்ந்து நோக்கி ,
இப்பழியைத் துடைத்து உதவி , இனிது இருத்திர் ,
என்னொடும் 'என்று , இறைஞ்சி நின்றாள் .
3.5.134

2963
இராமன் வெகுண்டு அச்சுறுத்தியது (2963-2965)
'நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி ,
நின் அன்னை தன்னை நல்கும்
தாடகையை , உயிர் கவர்ந்த சரம் இருந்தது ;
அன்றியும் , நான் தவம் மேற்கொண்டு ,
தோள் தகைய துறு மலர்த் தார் இகல் அரக்கர்
குலம் தொலைப்பான் , தோன்றி நின்றேன் ;
போடு , அகலப் புல் ஒழுக்கை ; வல் அரக்கி ! '
என்று இறைவன் புகலும் பின்னும் .
3.5.135

2964
'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
புதல்வர் யாம் ; தாய்சொல் தாங்கி ,
விரை அளித்த கான் புகுந்தேம் ; வேதியரும்
மாதவரும் வேண்ட , நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர்
குலம் தொலைத்துக் கண்டாய் , பண்டை
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் ; இவை
தெரிய மனக்கொள் 'என்றான் .
3.5.136

2965
'நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர்
நில்லாதே , நெடிய தேவர்
மறித்தார் ; ஈண்டு இவர் இருவர் ; மானிடவர்

என்னாது , வல்லை ஆகின் ,
வெறித் தாரை வேல் அரக்கர் , விறல் இயக்கர்
முதலினர் , நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் , கொணருதியேல் ,
நின் எதிரே கோறும் 'என்றான் .
3.5.137

2966
சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்தல் (2966-2969)
'கொல்லலாம் ; மாயங்கள் குறித்தனவே
கொள்ளலாம் ; கொற்றம் முற்ற
வெல்லலாம் ; அவர் இயற்றும் வினை எல்லாம்
கடக்கலாம் ;மேல்வாய் நீங்கிப்
பல் எலாம் உறத் தோன்றும் பகுவாயள்

என்னாது , பார்த்தி ஆயின் ,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட !
கேள் 'என்று , நிருதி கூறும் .
3.5.138

2967
'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் எனினும் ,
யான் மிகையோ ? கள்வர்
ஆம் , பொறி இல் அடல் அரக்கர் அவரோடே
செருச் செய்வான் அமைந்தீராயின் ,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
அறிந்து , அவற்றைத் தடுப்பென் அன்றே ?
பாம்பு அறியும் பாம்பின்கால் என மொழியும்
பழமொழியும் பார்க்கிலீரோ ?
3.5.139

2968
'உளம் கோடல் உனை இழைத்தாள் உளள்
ஒருத்தி என்னுதியேல் , நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால்
ஒரு மூவேம் கலந்த காலைக்
குளம் கோடும் என்றிதுவும் உறுகோளே ?
என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தின் இருகோளும்
சிறைவைத்தாற்கு இளையேன் 'என்றாள் .
3.5.140

2969
'பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் வேண்டும்
உருப் பிடிப்பேன் நன்றே ;
அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும்
ஈங்கு இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவேனோ ?
என்பானேல் இறைவ ! ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடும் காலம் வாழ்ந்தது ? என்பாய் .
3.5.141

2970
இலக்குவன் அவளைக் கொல்ல எண்ணுதல்
என்றவள்மேல் , இளையவன்தான் இலங்கு
இலைவேல் கடைக்கணியா ,'இவளை ஈண்டுக்
கொன்று களையேம் என்றால் , நெடிது அலைக்கும் ;
அருள் என் கொல் ? கோவே ! 'என்ன ,
'நன்று , அதுவே ஆம் அன்றோ ? போகாளேல்
ஆக ! 'என நாதன் கூற ,
'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் ; உயிர்
இழப்பென் , நிற்கின் 'என , அரக்கி உன்னா .
3.5.142

2971
சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்திச் செல்லுதல்
'ஏற்ற நெடுங் கொடி மூக்கும் , இரு காதும்
முலை இரண்டும் , இழந்தும் வாழ
ஆற்றுவனே ? வஞ்சனையால் , உமை உள்ள
பரிசு அறிவான் அமைந்தது அன்றோ ?
காற்றினிலும் கனலினிலும் கடியானைக்
கொடியானைக் கரனை , உங்கள்
கூற்றுவனை , இப்பொழுதே கொணர்கின்றேன் '
என்று சலம் கொண்டு போனாள் .
3.5.143


3.6 – Textabschnitt

3.6 . கரன்வதைப் படலம் (2972 -3163 )

2972
சூர்ப்பணகை கரன் முன் விழுந்து புரளுதல் (2972-2973)
இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசைச்
சொரிந்த சோரியள் , கூந்தலள் , தூம்பு எனத்
தெரிந்த மூக்கினள் , வாயினள் , செக்கர் மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள் ; அரோ .
3.6.1

2973
'அழுங்கும் நாள் இது 'என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள் ,
முழங்கும் மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கும் நாகம் எனப் புரண்டாள் அரோ !
3.6.2

2974
கரன் வினவுதல்
வாக்கின் கோபப் புகை முந்து வாயினான் ,
நோக்கிக்'கூசலர் , நுன்னை இத்தன்மையை
ஆக்கிப் போனவர் , ஆர்கொல் ? 'என்றான் ; அவள்
மூக்கின் சோரி முழீஇக்கொண்ட கண்ணினான் .
3.6.3

2975
சூர்ப்பணகை கூறுதல் (2975-2978)
இருவர் , மானிடர் , தாபதர் , ஏந்திய
வரி வில் வாள் கையர் , மன்மதன் மேனியர் ,
தரும நீரர் , தயரதன் காதலர் ,
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார் .
3.6.4

2976
ஒன்றும் நோக்கலர் உன் வலி , ஓங்கு அறம்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் ,
'வென்றி வேல் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும் 'என்று உணர் கொள்கையார் .
3.6.5

2977
மண்ணில் நோக்கரு வானினில் மற்றினின்
எண்ணில் நோக்கு உறின் யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்கு உடையாள் ஒரு பேதை , என்
கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள் .
3.6.6

2978
'கண்டு , நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை , வெகுண்டு , அவர் ,
துண்டம் ஆக்கினர் மூக்கு 'எனச் சொல்லினாள் .
3.6.7

2979
கரன் வெகுண்டெழுதல் (2979-2980)
கேட்டனன் உரை ; கண்டனன் , கண்ணினால்
தோட்ட நுங்கில் தொளை உறும் மூக்கினை ;
'காட்டு 'எனா எழுந்தான் ; எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான் .
3.6.8

2980
எழுந்து நின்று , உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உகப் பொங்குவான் ,
'கழிந்துபோயினர் மானிடர் என்னுங்கால் ,
அழிந்ததோ ? இவ் அரும்பழி 'என்னுமால் .
3.6.9

2981
கரன் போர்க்கு எழ , அடுத்திருந்த வீரர் பதினால்வர் போர்ப்பணி தமக்குத் தருமாறு வேண்டல் (2981-2983)
'வருக தேர் 'எனும் மாத்திரை மாடு உளோர் ,
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் ,
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் ,
'தருக இப்பணி எம் வயின் 'தான் என்றார் .
3.6.10

2982
சூலம் வாள் மழுத் தோமரம் சக்கரம்
காலபாசம் கதை பொரு கையினார் ;
வேலை ஞாலம் வெரு உறும் ஆர்ப்பினார் ;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார் .
3.6.11

2983
வெம்பு கோபக் கனலர் விலக்கினார் ;
'நம்பி ! எம் அடிமைத்தொழில் நன்று ! 'எனா
'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ ? 'என்றார் .
3.6.12

2984
கரன் , வீரர் வேண்டுகோட்கு இசைதல்
'நன்று சொல்லினிர் ! நான் இச் சிறார்கள் மேல்
சென்று போர் செயின் , தேவர் சிரிப்பரால் ;
கொன்று , சோரி குடித்து , அவர் கொள்கையை
வென்று , மீளுதிர் மெல்லியலோடு 'என்றான் .
3.6.13

2985
கரன் வீரர் பதினால்வரும் இராமனிருக்குமிடம் அடைதல்
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் ,
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என ,
அன்னள் பின் படர்வார் என ஆயினார் ,
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் .
3.6.14

2986
சூர்ப்பணகை வீரர்க்கு இராமனைக் காட்டுதல்
துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள் ,
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாதம் நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள் .
3.6.15

2987
கரன்வீரர் இராமனை வளைதல்
'எற்றுவாம் பிடித்து ஏந்தினம் 'என்குநர் ,
'பற்றுவாம் நெடும் பாசத்தின் 'என்குநர் ,
'முற்றுவாம் இறை சொல் முறையால் 'எனாச்
சுற்றினார் வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார் .
3.6.16

2988
இராமன் போர்க்கு எழுதல்
ஏத்து வாய்மை இராமன் , இளவலைக்
'காத்தி தையலை 'என்று , தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக்கையால்
ஆத்த நாணின் அருவரை வாங்கினான் .
3.6.17

2989
இராமன் கரன் வீரரொடு பொருதல் (2989-2990)
வாங்கி , வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கித் தாமரைக் கண்ணன் , அச் சாலையை
நீங்கி ,'இவ்வழி நேர்மின் அடா 'எனா ,
வீங்கு தோளன் , மலைதலை மேயினான் .
3.6.18

2990
மழுவும் , வாளும் , வயங்கு ஒளி முச்சிகைக்
கழுவும் , கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும் ,
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் .
3.6.19

2991
வீரர் இறந்துபடச் சூர்ப்பணகை கரனிடம் செல்லுதல்
மரங்கள்போல் நெடு வாளொடு தோள் விழ ,
உரங்களான் அடர்ந்தார் ; உரவோன் விடு
சரங்கள் ஓடின தைக்க , அரக்கர்தம்
சிரங்கள் ஓடின ; தீயவள் ஓடினாள் .
3.6.20

2992
வீரர் இறந்தமை சூர்ப்பணகை கரன்பாற் கூறல்
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் ;
குளிறு கோப வெம் கோள் அரிமா அடக்
களிறு எலாம் படக் கை தலைமேல் உறப்
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் .
3.6.21

2993
கரன் வெகுளுதல்
'அங்கு அரக்கர் அவிந்து ஒழிந்தார் 'எனப்
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கரப் பெயரோன் வெகுண்டான் ; விடைச்
சங்கரற்கும் தடுப்பருந் தன்மையான் .
3.6.22

2994
கரன் கட்டளை
'அழை என் தேர் ';'எனக்கு ஆக்கு வன் போர்ப் படை ';
'உழையர் ஓடி , ஒரு நொடி ஓங்கல் மேல்
மழையின் மா முரசு எற்றுதிர் வல் ;' என்றான் ,
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் .
3.6.23

2995
தேர்ப்படை திரளுதல்
பேரி ஓசை பிறத்தலும் , பெட்பு உறும்
மாரி மேகம் வரம்பு இல வந்தெனத்
தேரின் சேனை திரண்டது ; தேவர்தம்
ஊரும் நாகர் உலகும் உலைந்தவே .
3.6.24

2996
காலாட்படை திரளுதல் (2996-3000)
போர்ப் பெரும் படை , பொம்மென் முழக்கமா
நீர்த் தரங்கம் நெடுந்தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது ; இறுதியின் ஆர்கலிக்
கார்க் கரும் கடல் கால் கிளர்ந்து என்ன ஏ .
3.6.25

2997
காடு துன்றி விசும்பு கரந்தென
நீடி , எங்கும் நிரந்த நெடும் கொடி ,
'ஓடும் எங்கள் பசி 'என்று உவந்து , எழுந்து ,
ஆடுகின்ற அலகையின் ஆடவே .
3.6.26

2998
தறியின் நீங்கிய தாழ் தடக் கைத் துணைக்
குறி கொளா மத வேழக் குழு அனார்
செறிவின் வாளொடு வாள் இடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே .
3.6.27

2999
முருடு இரண்டும் முழங்குறத் தாக்கு ஒலி ,
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக ,
அருள் திரண்ட அருக்கன்றன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே .
3.6.28

3000
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற ,
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம் ஒரு மாடு தொக்க என்ன ஏ .
3.6.29

3001
வீரர் தோற்றமும் தொகையும்
வல்லியக் குழாங்களோ ? மழையின் ஈட்டமோ ?
ஒல் இபத் தொகுதியோ ? ஓங்கும் ஓங்கலோ ?
அல்ல , மற்று அரிகளின் அனிகமே எனப்
பல் பதினாயிரம் படைக் கை வீரரே .
3.6.30

3002
தேர்களின் அமைதி (3002-3003)
ஆளிகள் பூண்டன , அரிகள் பூண்டன ,
மீளிகள் பூண்டன , வேங்கை பூண்டன ,
ஞாளிகள் பூண்டன , நரிகள் பூண்டன ,
கூளிகள் பூண்டன , குதிரை பூண்டன .
3.6.31

3003
ஏற்றினம் ஆர்த்தன , ஏனம் ஆர்த்தன ,
காற்று இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன ,
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றினம் ஆர்த்தன , பணிலம் ஆர்த்தன .
3.6.32

3004
நால்வகைப் படையும் பெயர்தல்
தேரினம் துவன்றின , சிறுகண் செம்முகக் காரினம்
நெருங்கின , காலின் கால் வரு
தாரினம் குழுமின , தடை இல் கூற்று அன்ன
பேர் இனம் கடல் எனப் பெயருங்காலையே .
3.6.33

3005
படைக்கலங்கள் செறிதல் (3005-3007)
மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமரத் தொகையும் ஈட்டியும்
முழுக் கலும் முசுண்டியும் தண்டும் முத்தலைக்
கழுக்களும் உலக்கையும் காலபாசமும் .
3.6.34

3006
குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம் இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும் பாசமும் .
3.6.35

3007
ஆதிய , அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய , சோரியும் தூவும் துன்னிய ,
ஏதிகள் மிடைந்தன ; இமையவர்க்கெலாம்
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன .
3.6.36

3008
சேனைத்தலைவர் திறலும் தொகையும்
ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் ,
மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் ,
தீ எரி விழியினர் , நிருதர் சேனையின்
நாயகர் , பதின்மரோடு அடுத்த நால்வரே .
3.6.37

3009
திரண்ட சேனையின் அளவு
'ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை ; குறித்த அப்படை
ஏறினது ஏழினது இரட்டி 'என்பரால் ,
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் .
3.6.38

3010
சேனை வீரர் திறம் (3010-3017)
உரத்தினர் , உருமென உரறும் வாயினர் ,
கரத்து எறி படையினர் , கமலத்தோன் தரும்
வரத்தினர் , மலை என மழை துயின்று எழு
சிரத்தினர் , தருக்கினர் , செருக்கும் சிந்தையார் .
3.6.39

3011
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் ,
கண் அளவிடல் அரு மார்பர் , காலினால்
மண் அளவிடும் நெடுவலத்தர் , வானிடை
எண் அளவிடல் அரும் செரு வென்று ஏறினார் .
3.6.40

3012
இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை ,
சிந்தின தெறித்து உகச் செறிந்த தோளினார் ;
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் ;
வெம் தழல் உருவுகொண்டனைய மேனியார் .
3.6.41

3013
சூலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் ,
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் , ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கும் காட்சியார் .
3.6.42

3014
கழலினர் , தாரினர் , கவச மார்பினர் ,
நிழல் உறு பூணினர் , நெறித்த நெற்றியர் ,
அழல் உறு குஞ்சியர் , அமரை வேட்டு உவந்து
எழல் உறும் மனத்தினர் , ஒருமை எய்தினார் .
3.6.43

3015
மருப்பு இறா மதக் களிற்று அமரர் மன்னனும் ,
விருப்பு உறா முகத்து எதிர் விழிக்கின் , வெந்நிடும் ;
உருப் பொறாது உலைவுறும் உலகம் ; ஊன் தினும்
செருப் பெறாத் தினவு உறு சிகரத் தோளினார் .
3.6.44

3016
குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி
வெம் சினக் கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுறக் கனல் புரை முகத்தர் , ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும் .
3.6.45

3017
எண் கையர் , எழு கையர் , ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரிதரும் முகத்தர் , காலினர் ,
வண் கையின் வளைத்து , உயிர் வாரி , வாயின் இட்டு
உண் கையின் உவகையர் , உலப்பு இலார்களும் .
3.6.46

3018
கொடி முதலியவை செறிந்தமை (3018-3019)
இயக்கரில் பறித்தன , அவுணர் இட்டன ,
மயக்கு உறுத்து அமரரை வலியின் வாங்கின ,
துயக்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின ,
நயப்பு உறு சித்தரை நலிந்து வவ்வின .
3.6.47

3019
கொடி , தழை , கவிகை , வான் தொங்கல் , குஞ்சரம்
படியுறு பதாகை , மீ விதானம் , பல்வகை
இடை இலாது எங்கணும் இசைய , மீமிசை
மிடைதலின் , உலகு எலாம் வெயில் இழக்கவே .
3.6.48

3020
சேனைத் தலைவர் திறம் (3020-3021)
எழுவரொடு எழுவர் , ஆம் உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர் , தலைவர் தானையர் ,
மழுவினர் , வாளினர் , வயங்கு சூலத்தர் ,
உழுவையொடு அரியென உடற்றும் சீற்றத்தார் .
3.6.49

3021
வில்லினர் , வாளினர் , இதழின்மீது இடு
பல்லினர் , மேருவைப் பறிக்கும் ஆற்றலர் ,
புல்லினர் , திசைதொறும் ; புரவித் தேரினர்
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார் .
3.6.50

3022
கரனைத் தூடணன் முதலியோர் சூழ்தல்
தூடணன் திரிசிராத் தோன்றல் ஆதியர் ,
கோடு அணை முரசினம் குளிறு சேனையர் ,
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் ,
பாடவ நிலையினர் , பலரும் சுற்றினர் .
3.6.51

3023
படை சூழநின்ற கரனுடைய தோற்றம்
ஆன்று அமை எறி படை அழுவத்து , ஆர்கலி
வான் தொடர் மேருவை வளைத்தது ஆம் என ,
ஊன்றின தேரினன் , உயர்ந்த தோளினன் ,
தோன்றினன் ; யாவரும் துணுக்கம் எய்தவே .
3.6.52

3024
கரன்படை இராமனிருக்கும் இடம் நோக்கிச் செல்லுதல் (3024-3028)
அசும்பு உறு மத கரி , புரவி , ஆடகத்
தசும்பு உறு சயந்தனம் , அரக்கர் , தாள் தர
விசும்பு உறு தூளியான் வெண்மை மேயின
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர் அரோ .
3.6.53

3025
வனம் துகள் பட்டன ; மலையின் வான் உயர்
கனம் துகள் பட்டன ; கடல்கள் தூர்ந்தன ;
இனம் தொகு தூளியால் , இசைப்பது என் ? இனிச்
சினம் தொகு நெடுங் கடல் சேனை செல்லவே .
3.6.54

3026
நிலை மிசை விசும்பிடை நெருக்கலால் , நெடு
மலைமிசை , மலையினம் வருவ போல் , மலைத்
தலைமிசைத் தலைமிசைத் தாவிச் சென்றனர் ;
கொலை மிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார் .
3.6.55

3027
வந்தது சேனை வெள்ளம்
வள்ளியோன் மருங்கு ; மாயா
பந்த மா வினையம் மாளப்
பற்று அறு பெற்றியோர்க்கும்
உந்தரு நிலையது ஆகி ,
உடன் உறைந்து , உயிர்கள் தம்மை
அந்தகற்கு அளிக்கும் நோய் போல்
அரக்கி முன் ஆக , அம்மா !
3.6.56

3028
தூரியக் குரலின் வானின்
முகில் குலம் துணுக்கம் கொள்ள ,
வார் சிலை ஒலியின் அஞ்சி ,
உருமெலாம் மறுக்கம் கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி ,
அசைவு உற , அரக்கர் சேனை ,
போர் வனத்து இருந்த வீரர்
உறைவிடம் புக்கது அன்றே .
3.6.57

3029
கரன் படைவரவுகண்ட புள் விலங்கு முதலியவற்றின் தோற்றம்
வாய் புலர்ந்து அழிந்த , மெய்யின்
வருத்தத்த , வழியின் யாண்டும்
ஓய்வு இல , நிமிர்ந்து வீங்கும்
உயிர்ப்பின , உலைந்த கண்ண ,
தீயவர் சேனை வந்து
சேர்ந்தமை , தெரியச் சென்று ,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற
புள்ளொடு விலங்கும் அம்மா !
3.6.58

3030
கரன் சேனையின் வரவறிந்து இலக்குவன் போர்க்கு எழ இராமன்
அவனைத் தடுத்துத் தானே போர்க்கு எழுதல் (3030-3036)
தூளியின் படலை வந்து
தொடர்வுற , மரமும் தூறும்
தாளிடை ஒடியும் ஓசை ,
சடசட ஒலிப்பக் கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி ,
இரிதரும் அமலை நோக்கி ,
மீளி மொய்ம்பின் அருஞ்சேனை
மேல்வந்தது உளது என்று உன்னா .
3.6.59

3031
மின் நின்ற சிலையன் வீரக்
கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளிப்
புட்டிலன் புகையும் நெஞ்சன் ,
'நில் ; நின்று காண்டி ; யான் செய்
நிலை ;' என விரும்பி நேரா
முன் நின்ற பின் வந்தோனை
நோக்கினன் , மொழியல் உற்றான் .
3.6.60

3032
நெறிக் கொள் மாதவர்க்கு முன்னே
நேர்ந்தனென்'நிருதர் ஆவி
பறிக்குவென் யானே 'என்ற
பழமொழி பழுது உறாமே ,
வெறிக் கொள் பூங்குழலினாளை ,
வீர ! நீ வேண்டினேன் யான் ;
குறிக்கொடு காத்தி ; இன்னே
கொல்வென் இக்குழுவை
என்னா .
3.6.61

3033
மரம் படர் கானம் எங்கும்
அதர் பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணிக்
கரு நிறக் கமலக் கண்ணன் ,
சரம் படர் புட்டில் கட்டிச்
சாபமும் தரித்தான் , தள்ளா
உரம் படர் தோளின் மீளாக்
கவசம் இட்டு , உடைவாள் ஆர்த்தான் .
3.6.62

3034
'மீளருஞ் செருவில் விண்ணும்
மண்ணும் என்மேல் வந்தாலும் ,
நாள் உலந்து அழியுமன்றே !
நான் உனக்கு உரைப்பது என்னே ?
ஆளியின் துப்பினாய் ! இவ்
அமர் எனக்கு அருளிநின்று , என்
தோளினைத் தின்னுகின்ற
சோம்பினைத் துடைத்தி 'என்றான் .
3.6.63

3035
என்றலும் , இளைய வீரன்
இசைந்தனன் ; இராமன் ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல்
உள்ளத்தின் உணரக் கொண்டான் ,
அன்றியும் , அண்ணல் ஆணை
மறுக்கிலன் , அம் கை கூப்பி
நின்றனன் ; இருந்து கண்ணீர்
நிலன் உறப் புலர்கின்றாள்பால் .
3.6.64

3036
குழை உறு மதியம் பூத்த
கொம்பு அனாள் குழைந்து சோரத்
தழை உறு சாலை நின்றும்
தனிச் சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற
வாள் எயிற்று அரக்கர் காண
முழையில் நின்று எழுந்து செல்லும்
மடங்கலின் முனிந்து சென்றான் .
3.6.65

3037
சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல்
தோன்றிய தோன்றல் தன்னைச்
சுட்டினள் காட்டிச் சொன்னாள் ;
வான்தொடர் மூங்கில் தந்த
வயங்கு வெம் தீ இது என்னத்
தான் தொடர் குலத்தையெல்லாம்
தொலைக்குமா சமைந்துநின்றாள் ,
ஏன்று வந்து எதிர்ந்த வீரன்
இவன் இகல் இராமன்
என்றே .
3.6.66

3038
படையினரை நோக்கிக் கரன் கூறல் (3038-3039)
கண்டனன் கனகத் தேர்மேல் ,
கதிரவன் கலங்கி நீங்க ,
விண்தனில் நின்ற வென்றிக்
கரனெனும் விலங்கல் தோளான் ,
'மண்டு அமர் யானே செய்து , இம்
மானிடன் வலியை நீக்கிக்
கொண்டனன் வாகை 'என்று
படைஞரைக் குறித்துச் சொன்னான் .
3.6.67

3039
'மானிடன் ; ஒருவன் ; வந்த
வலி கெழு சேனைக்கு , அம்மா !
கான் இடம் இல்லை
என்னும்
கட்டுரை கலந்த காலை
யான் உடை வென்றி என்னாம் ?
யாவரும் கண்டு நிற்றிர் ;
ஊன் உடை இவனை யானே ,
உண்குவென் உயிரை 'என்றான் .
3.6.68

3040
தீயகுறிகளைக் கண்ட அகம்பன் அறிவுரை கூறுதல் (3040-3044)
அவ் உரை கேட்டு வந்தான் ,
அகம்பன் , என்று அமைந்த கல்விச் ,
செவ்வியோன் ஒருவன் ,'ஐய !
செப்புவென் ; செருவில் சால
வெவ்வியராதல் நன்றே !
வீரருள் ஆண்மை வீர !
இவ்வயின் உளவாம் தீய
நிமித்தம் 'என்று இயம்பலுற்றான் .
3.6.69

3041
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறிப்
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் !
கருது வீர ! நின் கொடி மிசைக்காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன புலம்புவ நிலம்படப் புரள்வ .
3.6.70

3042
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன ; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன ; தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன ; விரவி
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரிக் குலம் பல , ஆல் .
3.6.71

3043
பிடியெலாம் மதம் பெய்திடப் பெருங்கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு ; உலகமும் கம்பிக்கும் ; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும் ; எரிந்திடும் பெருந்திசை ; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழுமுடை நாறும் .
3.6.72

3044
இனைய ஆகலின் , மானிடன்
ஒருவன் என்று இவனை
நினையல் ; ஆவதொன்று அன்று அது ;
நீதியாநின்ற
வினை எலாம் செய்தும் வெல்லலாம்
தன்மையன் அல்லன் ;
புனையும் வாகையாய் ! பொறுத்தி
என் உரை
எனப் புகன்றான் .
3.6.73

3045
நிமித்திகன் கூறியதுகேட்ட கரன் கூறுதல்
உரைத்த வாசகம் கேட்டலும் , உலகு எலாம் உலையச்
சிரித்து ,'நன்று நம் சேவகம் , தெவ்வரைத் தேய
அரைத்த அம்மியாம் அலங்கு எழில் தோள் , அமர்வேண்டி
இரைத்து வீங்குவ , மானிடற்கு எளியவோ ? 'என்றான் .
3.6.74

3046
கரன் கூறியது கேட்ட படையினர் இராமனை வளைதல்
என்னும் மாத்திரத்தே'எறி பிடி 'என இடியா ,
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன ; வனத்து ,
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் எனச் சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி .
3.6.75

3047
இராமன் பொருதமையால் கரன்படை அழிதல் (3047-3066)
வளைந்தகாலையில் வளைந்தது அவ் இராமன் கை வரிவில் ;
விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும் ; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன ; புகர்முகப் பூட்கை
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன .
3.6.76

3048
சூலம் அற்றன ; அற்றன சுடர் மழுத் தொகை ; வாள்
மூலம் அற்றன ; அற்றன முரண் தண்டு ; பிண்டி
பாலம் அற்றன ; அற்றன பகழி , வெம் பகுவாய்
வேலும் அற்றன ; அற்றன வில்லொடு பல்லம் .
3.6.77

3049
தொடி துணிந்தன தோளொடு ; தோமரம் துணிந்த ;
அடி துணிந்தன கட களிறு ; அச்சொடு நெடுந் தேர் ,
கொடி துணிந்தன ; குரகதம் துணிந்தன ; குல மா
முடி துணிந்தன ; முளையொடு துணிந்தன முசலம் .
3.6.78

3050
கருவி மாவொடு கார் மதக் கைம்மலைக் கணத்தூடு
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் ; உதிரம்
அருவி மாலையில் பிறங்கினது அவனியில் ; அரக்கர்
திரு இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் .
3.6.79

3051
ஒன்று பத்து நூறாயிரம் கோடி என்று உணராத்
துன்று பத்திய , இராகவன் சுடுசரம் துரப்பச்
சென்று பத்திரத் தலை என மலை திரண்ட என்னக்
கொன்று பத்தியில் குவித்தன பிணப் பெருங்குன்றம் .
3.6.80

3052
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் எரி கதுவச்
சூடு கொண்டன எனத் தொடர் குருதி மீத் தோன்ற ,
ஆடுகின்றன , அறுகுறை ; அயில் அம்பு விண் மேல்
ஓடுகின்றன , உயிரையும் தொடர்வன ஒத்த .
3.6.81

3053
கைகள் வாளொடு களம் படக் கழுத்து அறக் கவச
மெய்கள் போழ்படத் தாள் விழ மிக நெடு நிருதர்
செய்ய மாத் தலை சிந்திடத் திசை உறச் சென்ற
தையலார் நெடு விழி எனக் கொடியன சரங்கள் .
3.6.82

3054
மாரி ஆக்கிய வடிக் கணை , வரை புரை நிருதர்
பேர் இயாக்கையின் பெருங்கரை வயின் தொறும் பிறங்க ,
ஏரி ஆக்கின ; ஆறுகள் இயற்றின ; நிறையச்
சோரி ஆக்கின ; போக்கின வனம் எனும் தொன்மை .
3.6.83

3055
அலை மிதந்தன குருதியின் பெருங்கடல் , அரக்கர்
தலை மிதந்தன ; நெடுந்தடி மிதந்தன ; தடக்கை
மலை மிதந்தன ; வாம் பரி மிதந்தன ; வயப் போர்ச்
சிலை மிதந்தன ; மிதந்தன கொடி நெடுந்தேர்கள் .
3.6.84

3056
ஆய காலையின் அனல் விழித்து , ஆர்த்து இகல் அரக்கர்
தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள் ,
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன , மேகம்
தூய தாரைகள் சொரிவனவாம் எனச் சொரிந்தார் .
3.6.85

3057
சொரிந்த பல் படை துணி படத் துணி படச் சரத்தால்
அரிந்து , போந்தன சிந்திடத் திசைதிசை அகற்றி ,
நெரிந்து பார்மகள் நெளிவுற , வனம் முற்றும் நிறைய ,
விரிந்த செம் மயிர்க் கருந்தலை மலை என வீழ்த்தான் .
3.6.86

3058
கவந்த பந்தங்கள் களித்தன , குளித்த கைம் மலைகள்
சிவந்து பாய்ந்த வெம் குருதியில் ; திருகிய சினத்தால்
நிவந்த வெம் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி ,
உவந்த , வன் கழுது ; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் .
3.6.87

3059
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் ,
கருடன் அஞ்சுறு கண்மணி காகமும் கவர்ந்த ;
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ ,
அருள் தரும் திறத்து அறன் அன்றி , வலியது உண்டாமோ ?
3.6.88

3060
பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா , வெயில் அயில் ஆம் என விழியாக்
கல் ஆர் மழை , கண மா முகில் கடைநாள் , விழுவன போல்
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் ; வினை செய்தார் .
3.6.89

3061
எறிந்தார் என , எய்தார் என , நினைந்தார் என , எறிய
அறிந்தார் என அறியாவகை அயில் வாளியின் அறுத்தான் ;
செறிந்தாரையும் , பிறிந்தாரையும் , செறுத்தாரையும் , சினத்தால்
மறிந்தாரையும் , வலித்தாரையும் , மடித்தான் சிலை பிடித்தான் .
3.6.90

3062
வானத்தன , கடலின் புற வலயத்தன , மதி சூழ்
மீனத்தன , மிளிர் குண்டல மிதுனத்தன , மிடல் வெம்
கானத்தன , மலையத்தன , திசை சுற்றிய கரியின்
தானத்தன , காகுத்தன சரம் உந்திய சிரமே .
3.6.91

3063
மண் மேலன , மலை மேலன , மழை மேலன , மதி தோய்
விண் மேலன , நெடு வேலையின் மேல் கீழன , மிடலோர்
புண் மேலன , குருதிப் பொரு திரை யாறுகள் பொங்கத்
திண் மேருவை நகும் மார்பினை உருவித் திரி சரமே .
3.6.92

3064
பொலம் தாரினர் அனலின் சிகை
பொதி கண்ணினர் எவரும் ,
வலம் தாங்கிய வடி வெம் படை
விடுவார் , சர மழையால்
உலந்தார் ; உடல் கடலோடு உற
உலவா உடல் உற்றார் ;
அலந்தார் நிசிசரர் ஆம் என
இமையோரொடும் ஆர்த்தார் .
3.6.93

3065
ஈரல் செறி கமலத்தன , இரதத் திரள் புளினம் ,
வீரக் கரி முதலைக் குலம் மிதக்கின்றன , உதிக்கும்
பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன , பல வால்
மூரித் திரை உதிரக் கடல் முழுகிக் கழுது எழுமே .
3.6.94

3066
அழைத்தார் சிலர் , அயர்த்தார் சிலர் ,
அழிந்தார் சிலர் , கழிந்தார் ,
உழைத்தார் சிலர் , உயிர்த்தார் சிலர் ,
உருண்டார் சிலர் , புரண்டார்
குழைத்து ஆழ் திரைக் குருதிக் கடல்
குளித்தார் சிலர் , கொலைவாய்
மழைத்தாரைகள் படப் பாரிடை
மடிந்தார் சிலர் உடைந்தார் .
3.6.95

3067
கரன்படைத்தலைவர் பதினால்வரும் இராமனோடு பொருதல் (3067-3079)
உடைந்தார்களை நகை செய்தனர் ,
உருள் தேரினர் , உடன் ஆய்
அடைந்தார் , படைத் தலைவீரர்கள்
பதினால்வரும் ; அயில் வாள்
மிடைந்து ஆர் நெடுங்கடல் தானையர் ,
மிடல் வில்லினர் , விரி நீர்
கடைந்தார் வெரு உற மீது எழு
கடு ஆம் எனக் கொடியார் .
3.6.96

3068
நாகத் தனி ஒரு வில்லியை , நளிர் முப்புரர் , முன்னாள் ,
மாகத்திடை வளைவுற்றனர் என , வள்ளலை மதியார் ,
ஆகத்து எழு கனல் கண்வழி உக , உற்று எதிர் அழன்றார் ;
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் , செரு விளைத்தார் .
3.6.97

3069
எய்தார் பலர் , எறிந்தார் பலர் ,
மழு ஓச்சினர் , எழுவால்
பொய்தார் பலர் , புடைத்தார் பலர் ,
கிடைத்தார் பலர் , பொருப்பால்
பெய்தார் மழை , பிதிர்த்தார் எரி ,
பிறை வாள் எயிற்று அரக்கர்
வைதார் பலர் , தெழித்தார் பலர் ,
மலையாம் என வளைத்தார் .
3.6.98

3070
தேர் பூண்டன விலங்கு யாவையும் ,
சிலை பூண்டு எழு கொலை ஆல் ,
பார் பூண்டன ; மத மா கரி
பலி பூண்டன ; பரி மாத்
தார் பூண்டன , உடல் பூண்டில
தலை ; வெம் கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தாலென ,
இரிந்தார் உயிர் உலைந்தார் .
3.6.99

3071
மால் பொத்தின மறவோர் உடல்
மழை பொத்தின ; வழி செம்
பால் பொத்தின நதியில் கிளர்
படி பொத்தின ; படர் வான்
மேல் பொத்தின குழு விண்ணவர்
விழி பொத்தினர் ; விரை வெம்
கால் பொத்தினர் நமன் தூதுவர்
கடிது உற்று உயிர் கவர்வார் .
3.6.100

3072
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் , பில வாய்
நாய் ஏறின ; தலை மேல் நெடு நரி ஏறின ; எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வான் ஏறினர் ; வந்தார்
தீ ஏறு இகல் அரியேறு என , முகிலேறு எனச் செறிந்தார் .
3.6.101

3073
தலை சிந்தின , விழி சிந்தின , தழல் சிந்தின , தரை மேல் ,
மலை சிந்தினபடி சிந்தின வரு சிந்துரம் ; மழை போல்
சிலை சிந்தின கணை சிந்தின ; திசை சிந்தின . திசையூடு
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் .
3.6.102

3074
படைப் பெருந்தலைவரும் படைத்த தேர்களும்
உடைத் தடம் படைகளும் ஒழிய , உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்த்தவர் , வீரன் வாளியால்
முடைத் தடங் குருதியின் கடலின் மூழ்கினார் .
3.6.103

3075
கரன் படைத்தலைவர் இராமனை வளைதல்
சுற்று உற நோக்கினர் , தொடர்ந்த சேனையில்
அற்றில தலை எனும் ஆக்கை கண்டிலர் ;
தெற்றினர் எயிறுகள் , திருகினார் சினம் ,
முற்றினர் இராமனை முடுகு தேரினார் .
3.6.104

3076
படைத்தலைவர் தேர் பதினான்கும் அழிதல்
ஏழிரு தேரும் வந்து , இமைப்பின் முன்பு இடைச்
சூழ , வன் கணைகளால் துணிய நூறினான் ;
ஆழியும் புரவியும் ஆளும் அற்று , அவை ,
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே .
3.6.105

3077
படைத்தலைவர் தரையினின்று விற்போர் புரிதல்
அழிந்தன தேர் , அவர் , அவனி கீண்டு உக
இழிந்தனர் , வரி சிலை எடுத்த கையினர் ,
ஒழிந்திலர் , சரங்களை உருமின் ஏறு எனப்
பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் .
3.6.106

3078
படைத்தலைவர் விற்களை இராமன் துண்டித்தல்
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறு செய்து , அவர் சிலை ஏழொடு ஏழையும் ,
ஆறினொடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால்
கூறுசெய்து , அமர்த் தொழிற் கொதிப்பை நீக்கினான் .
3.6.107

3079
படைத்தலைவர் மலைகொண்டு பொருதல்
வில் இழந்து , அனைவரும் வெகுளி மீக்கொளக்
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் ,
ஒல்லையின் உருத்து , உயர் விசும்பின் ஓங்கி நின்று ,
எல் உயர் பொறி உக , எறிதல் மேயினார் .
3.6.108

3080
படைத்தலைவர் பதினால்வரும் இறத்தல்
கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் ,
இலை கொள் வெம் பகழி ஏழிரண்டு வாங்கினான் ,
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் ,
மலைகளும் தலைகளும் விழுந்த , மண்ணினே .
3.6.109

3081
திரிசிரன்படை இராமனோடு பொருதல் (3081-3083)
படைத் தலைத் தலைவர்கள் படலும் , பல் படை
புடைத்து , அடர்ந்து , எதிர் அழல் புரையும் கண்ணினார் ,
கிடைத்தனர் , அரக்கர்கள் , கீழும் மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை , அமரர் அஞ்சினார் .
3.6.110

3082
முழங்கின பெரும் பணை , மூரி மால் கரி ;
முழங்கின வரி சிலை முடுகும் நாண் ஒலி ;
முழங்கின சங்கொடு புரவி ; மொய்த்து உற
முழங்கின அரக்கர்தம் முகிலின் ஆர்ப்பு அரோ .
3.6.111

3083
'வெம் படை நிருதர் வீச ,
விண்ணிடை மிடைந்த , வீரன்
அம்பு இடை அறுக்கச் சிந்தி
அற்றன படும் , என்று அஞ்சி
உம்பரும் இரியல் போனார் ;
உலகு எலாம் உலைந்து சாய்ந்த ;
கம்பம் இல் திசையில் நின்ற
களிறும் கண் இமைத்த அன்று ஏ .
3.6.112

3084
திரிசிரா வருதல்
அத்தலைத் தானையின் , அளவு இல் ஆற்றலன் ,
முத்தலைக் குரிசில் , பொன் முடியன் , முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் ,
வைத் தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் .
3.6.113

3085
அரக்கர் படையிடை இராமன் தோற்றம்
அன்னவன் நடு உற , ஊழி ஆழி ஈது
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் ,
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன்
துன் இருள் இடையது ஓர் விளக்கில் தோன்றினான் .
3.6.114

3086
இராமன் திரிசிரன் படையை எதிர்த்துநிற்றல்
ஓங்கிய வாளினன் , உருமின் ஆர்ப்பினன் ,
வீங்கிய கவசத்தன் , வெய்ய கண்ணினன் ,
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக , நேர்
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால் .
3.6.115

3087
இராமன் சரத்தால் அரக்கர்படை அழிதல் (3087-3090)
தாள் இடை அற்றன ; தலையும் அற்றன ;
தோள் இடை அற்றன ; தொடையும் அற்றன ;
வாள் இடை அற்றன ; மழுவும் அற்றன ;
கோள் இடை அற்றன ; குடையும் அற்றன .
3.6.116

3088
கொடியொடு கொடிஞ்சு அறப் புரவிக் கூட்டு அறப்
படியொடு படிந்தன பருதித் தேர்ப்பணை ;
நெடிய வன் கட கரி புரண்ட , நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே .
3.6.117

3089
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்
கொற்ற வெம் சிலைச் சரம் கோத்து வாங்குவார்
இற்றவர் ; இறாதவர் எழுந்து விண்ணினைப்
பற்றின மழை எனப் படை வழங்குவார் .
3.6.118

3090
கேடகத் தடக்கைய , கிரியின் தோற்றத்த ,
ஆடகக் கவசத்த , கவந்தம் ஆடுவ ,
பாடகத்து அரம்பையர் மருளப் பல் வித
நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே .
3.6.119

3091
குருதியாறு பெருகுதல்
கவரி வெண் குடை எனும் நுரைய , கைம்மலைச்
சுவரின , கவந்தம் ஆழ் சுழிய , தண் துறைப்
பவர் இனப் படு மணி குவிக்கும் பண்ணைய ,
உவரியைப் புதுக்கின உதிர ஆறு அரோ .
3.6.120

3092
போர்க்களக் காட்சி (3092-3097)
சண்ட வெம் கடுங்கணை தடியத் தாம் சில
திண் திறல் வளை எயிற்று அரக்கர் , தேவர் ஆய் ,
வண்டு உழல் புரிகுழல் மடந்தைமாரொடும்
கண்டனர் தம் உடற் கவந்த நாடகம் .
3.6.121

3093
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் ,
தூய வெம் கடுங்கணை துணித்த தங்கள் தோள் ,
பேய் ஒருதலை கொளப் பிணங்கி வாய் விடா
நாய் ஒரு தலைகொள நகை உற்றார் சிலர் .
3.6.122

3094
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இருவினை கடந்துபோய் உம்பர் எய்தினார் ,
'நிருதர்தம் பெரும் படை நெடிது நின்றவன்
ஒருவன் 'என்று உள்ளத்தின் உலைவுற்றார் சிலர் .
3.6.123

3095
கைக் கரி அன்னவன் பகழி , கண்டகர்
மெய்க் குலம் வேரொடுந் துணித்து வீழ்த்தின ;
மைக் கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன்
பொய்க் கரி கூறிய கொடுஞ்சொற் போலவே .
3.6.124

3096
அம் சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன்மயம் ஆக்கும் தன்மைபோல் ,
வஞ்சகத்து அரக்கரை வளைத்து , வள்ளல்தான் ,
செஞ்சரத் தூய்மையால் தேவராக்கினான் .
3.6.125

3097
வலம் கொள் போர் மானிடன் , வலிந்து கொன்றமை ,
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் எனச்
சலம் கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின
இலங்கையின் உற்ற அக் குருதியாறு அரோ .
3.6.126

3098
திரிசிரா இராமனொடு பொருதல் (3098-3099)
சூழ்ந்த தார் நெடும் படை பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின் , புரளப் பொங்கினான் ,
தாழ்ந்திலன் , முத்தலைத் தலைவன் , சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் .
3.6.127

3099
ஊன்றிய தேரினன் , உருமின் வெம் கணை ,
வான் தொடர் மழை என , வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத் தருமம் அன்னவன்
தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான் .
3.6.128

3100
திரிசரன் தேரும் பாகனும் அழிதல்
தூவிய சரம் எலாம் துணிய , வெம் கணை
ஏவினன் இராமனும் , ஏவி , ஏழிரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து ,
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் .
3.6.129

3101
திரிசிரன் தலைகளுள் இரண்டு அறுபடல்
அன்றியும் , அக்கணத்து அமரர் ஆர்த்து எழப்
பொன் தெரி வடிம்பு உடைப் பொரு இல் வாளியால் ,
வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து , இரண்டையும் உருட்டினான் அரோ .
3.6.130

3102
திரிசிரன் ஒருதலையொடு பொருதல்
தேர் அழிந்து , அவ் வழித் திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் ,
வார் அழிந்து இமிழ் சிலை வளைய நாட்டுழிக்
கார் அழிந்தால் எனக் கணை வழங்கினான் .
3.6.131

3103
திரிசிரன்வில் துண்டமாதல்
ஏற்றிய நுதலினன் , இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர , மீமிசைக்
காற்று இடை அழித்தெனக் கார்முகத்தையும்
மாற்றரும் பகழியால் அறுத்து மாற்றினான் .
3.6.132

3104
வில்லிழந்த நிலையினும் திரிசரன் போர்புரிதல்
வில் இழந்தனன் என்னினும் , விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன் ; இழந்திலன் வெம் கதம் ; இடிக்கும்
சொல் இழந்திலன் ; தோள் வலி இழந்திலன் ; சொரியும்
கல் இழந்திலன் ; இழந்திலன் கறங்கு எனத் திரிதல் .
3.6.133

3105
திரிசிரன் தாளும் தோளும் அறுதல்
ஆள் இரண்டு நூறு உள என , அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானைத்
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து ,
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் .
3.6.134

3106
திரிசிரன் ஒருதலையுமிழந்து இறந்துபடல்
அற்ற தாளொடு தோளினன் , அயில் எயிறு இலங்கப்
பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் புகுந்து ,
பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினன் , பரியான் ,
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் தலையையும் குறைத்தான்
3.6.135

3107
திரிசிரன்படை சிதறியோடுதல் (3107-3111)
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் , சிந்தி ,
நிருதர் ஓடினர் , தூடணன் விலக்கவும் நில்லார் ,
பரிதி வாளினர் , கேடகத் தடக்கையர் , பரந்த
குருதி நீரிடை , வார்கழல் கொழுங்குடர் தொடக்க .
3.6.136

3108
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத் தார்ப்பப்
பணத்தின் மேல் நிலம் குழி உறக் கால்கொடு பதைப்பார் ,
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் ; சிலர் , நிவந்த
பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர் உயிர்கொடு பிழைப்பார் .
3.6.137

3109
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைதலின் ஓட்டம்
ஓய்ந்துளார் சிலர் ; உலந்தனர் உதிரநீர் ஆற்றில்
பாய்ந்து , கால் பறிந்து ஒழுகினர் சிலர் ; சிலர் பயத்தால்
நீந்தினார் , நெடுங் குருதியங் கடல் புக்கு நிலையார் .
3.6.138

3110
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் ,
அச்சம் என்பது ஒன்று உருவுகொண்டால் என , அழிவார் ;
உச்ச வீரன் கைச் சுடுசரம் நிருதர் நெஞ்சு உருவத்
தச்சு நின்றன கண்டனர் , அவ் வழித் தவிர்ந்தார் .
3.6.139

3111
மண்டி ஓடினர் சிலர் , நெடுங் கட கரி வயிற்றுப்
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் ,
தொண்டை நீங்கிய கவந்தத்தைத்துணைவ ! நீ எம்மைக்
'கண்டிலேன் 'எனப் புகல்
எனக் கை தலைக் கொள்வார் .
3.6.140

3112
அஞ்சி ஓடிய படையினரை நோக்கித் தூடணன் கூறுதல் (3112-3118)
அனையர் ஆகிய அரக்கரை ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனத்தரை'வெருவன்மின் 'என்னா ,
நினையும்'யான் உமக்கு உரைப்பதும் உண்டு 'என்று நின்றன் ,
துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான் .
3.6.141

3113
பச்சை ஆம் எனப் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூடார் ;
நிச்சயம் எனும் கவசம் தான் நிலைநிற்பதன்றி ,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ ?
3.6.142

3114
பூ அராவு வேல் புரந்தரனோடுதான் , பொன்றா
மூவரோடுதான் , முன்னின்று முட்டிய முனையில்
ஏவர் ஓடினார் இராக்கதர் ? நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்று அறிந்துளிரோ ? மனம் திகைத்தீர் .
3.6.143

3115
இங்கு ஒர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் ,
உம் கை வாளொடு புகழ் இழந்து ஊர் புகல் உற்றீர் ,
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்பு உறு கொழுங்கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ ? நலம் நுகர்வீர் .
3.6.144

3116
செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர் !
வெம்பு காட்டிடை நுழைதொறும் , வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ ? தட மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ ? குல மங்கையர்க்கு அம்மா !
3.6.145

3117
ஏக்கம் இங்கு இதன் மேலும் உண்டே ? இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து , ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்கரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி , உம் முதுகொடும் போம் பழி முயன்றீர் .
3.6.146

3118
ஆர் அ வாழ்க்கையில் வணிகராய் அமைதிரோ ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ ? வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீர வாள் கையீர் ! எங்ஙனம் வாழ்திரோ ? விளம்பீர் .
3.6.147

3119
தூடணனும் இராமனும் போர்புரிதல் (3119-3131)
என்று , தானும் , தன் எறி கடற் சேனையும் ,'இறை , நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ்சிலை வலி 'என நேராச்
சென்று தாக்கினன் ; தேவரும் மருள்கொண்டு திகைத்தார் ;
'நன்று காத்தி 'என்று , இராமனும் எதிர்செல நடந்தான் .
3.6.148

3120
தூடணன் படை அழிதல் (3120-3125)
ஊடு அறுப்புண்ட மொய்படை ; கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம் ; கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் ; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட துரகம் .
3.6.149

3121
துருவி ஓடின உயிர்நிலை சுடுசரம் ; துரந்த
கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல
அருவி ஓடின என அழி குருதியாறு ஒழுக
உருவி ஓடின கேடகத் தட்டொடும் உடலம் .
3.6.150

3122
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு , அரக்கரது ஆவி
தோய்ந்த ; தோய்வு இலாப் பிறைமுகச் சரம் சிரம் துமித்த ;
காய்ந்த வெம் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த ; வஞ்சகர் இதயமும் பிளந்தன , பல்லம் .
3.6.151

3123
தூடணன் விடு சுடுசரம் யாவையும் துணியா ,
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா ,
ஆடல் கொண்டனன் , அளப்பரும் பெருவலி அரக்கர்
கூடிநின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான் .
3.6.152

3124
ஆர்த்து எழுந்தனர் வானவர் ; அருவரை மரத்தோடு
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி ; இராமன்
தூர்த்த செஞ்சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து ,
போர்த்த வெஞ்சினத் தரக்கரைப் புரட்டின , புவியில் .
3.6.153

3125
தோன்றும் மால்வரைத் தொகை எனத்
துவன்றிய நிணச்சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையைப்
புகல்வது என் ? அமர்வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ,
ஒல்லையில் ஒழிந்தார் ;
கான்ற இன்னுயிர் காலனும்
கவர்ந்து , மெய் மறந்தான் .
3.6.154

3126
தூடணன் கொதித்தெழுதல்
களிறு , தேர் , பரி , கடுத்தவர் முடித்தலை , கவந்தம் ,
ஒளிறு பல் படை , தம் குலத்து அரக்கர்தம் உடலம் ,
வெளிறு சேர் நிணம் , பிறங்கிய அடுக்கலின் மீதாக்
குளிறு தேர் கடிது ஓட்டினன் , தூடணன் , கொதித்தான் .
3.6.155

3127
தூடணன் தேரின் செலவு
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன , கணிப்பில ; பெருங்கடு விசையால்
கறங்கு போன்று உளது ஆயினும் , பிணப் பெருங்காட்டில்
இறங்கும் , ஏறும் ; அத்தேர் பட்டது யாது என இசைப்பாம் .
3.6.156

3128
தூடணன் இராமனை எதிர்தல்
அரிதின் எய்தினன் ஐயைந்து கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன் , மேகத்து
இருளின் நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர் , ஆவி சென்றென்ன .
3.6.157

3129
தூடணன் அம்பு இராமன் வீரபட்டத்தில் தாக்குதல் (3129-3130)
சென்ற தேரையும் , சிலை உடை மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும் நேருற நோக்கி
'நன்று நன்று நின் நிலை 'என அருள் இறை நயந்தான் ;
என்ற காலத்து , அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான் .
3.6.158

3130
தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று , பார் புரக்கப்
பேர விட்டவன் நுதல் அணி ஓடையில் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன , விண்ணவர் வெருவ .
3.6.159

3131
தூடணன் தேரும் வில்லும் கவசமும் அழிதல்
'எய்த காலமும் வலியும் நன்று 'என நினைந்து , இராமன் ,
செய்த சேயொளி முறுவலன் , கடுங்கணை தெரிந்தான் ;
நொய்தில் அங்கு அவன் நொறில் பரித் தேர் பட நூறிக்
கையில் வெம் சிலை அறுத்து , ஒளிர் கவசமும் கடிந்தான் .
3.6.160

3132
தூடணன் தலையறுபட்டு மாய்தல்
தேவர் ஆர்த்து எழ , முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்தொலி கார்க்கடல் முழக்கு என ஓங்கக்
'கா அடா ! இது , வல்லையேல் நீ 'எனக் கணை ஒன்று
ஏவினான் ; அவன் , எயிறு உடை நெடுந்தலை இழந்தான் .
3.6.161

3133
கரன் இராமனொடு பொருதல் (3133-3155)
தம்பி தலையற்றபடியும் , தயரதன் சேய்
அம்பு படையைத் துணிபடுத்ததும் , அறிந்தான் ;
வெம்பு படை விற்கை விசயக் கரன் வெகுண்டான் ;
கொம்புதலை கட்டிய கொலைக்கரி கடுப்பான் .
3.6.162

3134
அந்தகனும் உட்கிட , அரக்கர் கடலோடும்
சிந்துரம் வயப் புரவி தேர்திசை பரப்பி ,
இந்துவை வளைக்கும் எழிலிக்குலம் எனத் தான்
வந்து வரி வில் கை மதயானையை வளைத்தான் .
3.6.163

3135
அடங்கல் இல் கொடுந்தொழில் அரக்கர் , அவ் அனந்தன்
படம் கிழிதரப் படிதனில் பலவிதப் போர் ,
கடம் கலுழ் தடங்களிறு தேர் பரி கடாவித்
தொடங்கினர் , நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் .
3.6.164

3136
இராமன் கரன்படையைக் கொன்றொழித்தல் (3136-3139)
துடித்தன கடக் கரி , துடித்தன பரித் தேர் ,
துடித்தன முடித் தலை , துடித்தன தொடித் தோள் ,
துடித்தன மணிக் குடர் , துடித்தன தசைத் தோல்
துடித்தன கழல் துணை , துடித்தன இடத்தோள் .
3.6.165

3137
வாளின் வனம் , வேலின் வனம் , வார் சிலை வனம் , திண்
தோளின் வனம் என்று இவை துவன்றி , நிருதப் பேர்
ஆளின் வனம் நின்றதனை , அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினில் குறை படுத்தான் .
3.6.166

3138
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான் ,
மீன் உருவும் , மேருவை விலங்கு உருவும் , மேலாம்
வான் உருவும் , மண் உருவும் , வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ .
3.6.167

3139
அன்று இடை வளைந்தவர் குலங்களொடு அடங்கச்
சென்று உலைவுறும்படி தெரிந்து கணை சிந்தா ,
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்
கொன்றனர் நுகர்ந்த பொருளில் கடிது கொன்றான் .
3.6.168

3140
கரன் தமியனாய்ச் சினந்து நிற்றல்
கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன் ,
அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட அழன்றான் ,
ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம் அதின் உள்ளான் ,
நெடுங் கடலின் மந்தரம் எனத் தமியன் நின்றான் .
3.6.169

3141
கரன் தேரூர்ந்து போர்க்கு வருதல்
செம் கண் எரி சிந்த , வரி வில் பகழி சிந்தப்
பொங்கு குருதிப் புணரியுள் புகையும் நெஞ்சன் ,
கங்கமொடு காகம் மிடையக் கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆய் அது ஒரு தேரின்மிசை வந்தான் .
3.6.170

3142
இராமன் கரனை எதிர்தல்
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தைக்
கறுத்த மணிகண்டர் கடவுட் சிலை கரத்தால்
இறுத்தவனும் , வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் .
3.6.171

3143
கரனும் இராமனும் பொருதல் (3143-3144)
தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ்வாய்
ஆயிரம் வடிக்கணை அரக்கர் பதி எய்தான் ;
தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ் வாய்
ஆயிரம் வடிக் கணை இராமனும் அறுத்தான் .
3.6.172

3144
ஊழி எரியில் கொடிய பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் ;
சூழ் சுடர் வடிக்கணை அவற்று எதிர் தொடுத்தே
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் .
3.6.173

3145
கரன் கணைமாரியால் இராமனை மறைக்க , இராமன் வெகுளுதல்
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான் ,
வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான் ;
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினர் , ஒளித்தார் ;
வெள் எயிறு இதழ்ப் பிறழ வீரனும் வெகுண்டான் .
3.6.174

3146
இராமன் வில் ஒடிதல்
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனத்
தொடுத்து நின்று , உயர் தோள் உற வாங்கினான் ;
பிடித்த திண் சிலை , பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை படக் கடிது இற்றதே .
3.6.175

3147
இராமனிலைகண்ட தேவர் துயருறல்
வெற்றி கூறிய வானவர் , வீரன் வில்
இற்ற போது , துணுக்கம் உற்று ஏங்கினார் ,
மற்று ஒர் வெம் சிலை இன்மை மனக்கொளா ,
'அற்றதால் எம் வலி 'என அஞ்சினார் .
3.6.176

3148
வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல் (3148-3150)
என்னும் மாத்திரத்து , ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் , தனி என்றும் , சிந்தியான் ,
மன்னர் மன்னவன் செம்மல் , மரபினால்
பின் உறத் தன் பெரும் கரம் நீட்டினான் .
3.6.177

3149
கண்டு நின்று , கருத்து உணர்ந்தான் என ,
அண்டர் நாதன் தடக் கையின் , அத்துணை ,
பண்டு போர் மழு வாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் .
3.6.178

3150
கொடுத்த வில்லை , அக் கொண்டல் நிறத்தினான் ,
எடுத்து வாங்கி , வலம் கொண்டு , இடம் கையில்
பிடித்த போது , நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால் , இடக் கண்ணொடு தோளுமே .
3.6.179

3151
இராமன் கணைகளால் கரன்தேர் அழிதல்
ஏற்றினான் இமையாமுன் எடுத்தது ,
கூற்றினாரும் குனிக்கக் குனித்து , எதிர்
ஆற்றினான் , அடல் ஆழி அம் தேர் சரம்
நூற்றினால் நுண் பொடி பட நூறினான் .
3.6.180

3152
கரன் வானிடை நின்று பொருதல்
எந்திரத் தடம் தேர் இழந்தான் , இழிந்து ,
அந்தரம் அத்து இடை ஆர்த்து எழுந்து , அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரம் அத்து இல் மழையின் வழங்கினான் .
3.6.181

3153
இராமன் வாளியால் கரன் வலக்கை அறுபடுதல்
தாங்கி நின்ற தயரத ராமனும் ,
தூங்கு தூணி இடை சுடு செம் சரம்
வாங்குகின்ற வலம் கை ஒர் வாளியால்
வீங்கு தோளொடு பாரிடை வீழ்த்தினான் .
3.6.182

3154
கரன் இடக்கையால் போர் செய்தல் (3154-3155)
வலக்கை வீழ்தலும் , மற்றைக் கையால் , வெற்றி
உலக்கை , வானத்து உரும் என ஓச்சினான் ;
இலக்குவற்கு முன் வந்த இராமனும் ,
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் .
3.6.183

3155
விராவு அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
அரா அழன்றது அனையவன் , ஆற்றலால்
மராமரம் கையில் வாங்கி வந்து எய்தினான் ,
இராமன் அங்கு ஒர் தனிக் கணை ஏவினான் .
3.6.184

3156
கரன் இறந்துபடுதல்
வரம் அரக்கன் படைத்தலின் , மாயையின்
உரம் உடைத் தன்மையால் , உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் , வலக்
கரம் எனக் கரன் கண்டம் உற்றான் அரோ .
3.6.185

3157
வானவர் மலர்மழை பொழிய இராமன் விளங்குதல்
ஆர்த்து எழுந்தனர் , ஆடினர் , பாடினர் ,
தூர்த்து அமைந்தனர் வானவர் தூமலர் ;
த்தனும் பொலிந்தான் , கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே .
3.6.186

3158
இராமன் சீதையை அணுகுதல்
முனிவர் வந்து முறை முறை மொய்ப்பு உற ,
இனிய சிந்தை இராமனும் , ஏகினான் ;
அனிக வெம் சமம் அத்து ஆர் உயிர் போகத் தான்
தனி இருந்த உடல் அன்ன தையல் பால் .
3.6.187

3159
இளவலும் சீதையும் இராமனைப் போற்றல்
விண்ணில் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக ,
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் .
3.6.188

3160
விண்ணவர்போற்ற வீரன் இருந்தமை
மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய் புண் நீர்
நீத்தம் , ஓடி நெடும் திரை நேர் உறக்
கோத்த வேலைக் குரல் என வானவர்
ஏத்த , வீரன் இனிது இருந்தான் அரோ .
3.6.189

3161
சூர்ப்பணகை கரனுடலைத்தழுவி அழுதல்
இங்கு நின்றது உரைத்தும் ; இராவணன்
தங்கை , தன்கை வயிறு தகர்த்தனள் ,
கங்குல் அன்ன கரனைத் தழீஇ , நெடும்
பொங்கு வெம் குருதிப் புரண்டாள் அரோ .
3.6.190

3162
சூர்ப்பணகை போதல்
'ஆக்கினேன் மனத்து ஆசை ; அவ் ஆசை , என்
மூக்கினோடு முடிய , முடிந்திலேன் ;
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் 'என்று போயினாள் .
3.6.191

3163
சூர்ப்பணகை இலங்கையை அடைதல்
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அறக்
குலங்கள் வேர் அறுப்பான் குறித்தாள் , உயிர்
கலங்கு சூறை வன் போர் நெடுங் கால் என
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் .
3.6.192


3.7 – Textabschnitt

3.7 . மாரீசன் வதைப் படலம் (3164 -3416)

சூர்ப்பணகை வந்தபொழுது இராவணன் இருந்த நிலை (3164-3186)

3164
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
மறந்தனள் , போர் இராமன் துங்க
வரைப் புயம் அத்து இன் இடை கிடந்த பேர் ஆசை
மனம் கவற்ற , ஆற்றாள் ஆகித்
திரைப் பரவைப் பேர் அகழித் திருநகரில்
கடிது ஓடிச் சீதை தன்மை
உரைப்பென்
எனச் சூர்ப்பணகை வர , இருந்தான்
இருந்த பரிசு உரைத்தும் , மன் , ஓ .
3.7.1

3165
நிலை இலா உலகினிடை நிற்பனவும்
நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது ,
நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என ,
நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தெரிப்பது , ஒரு புனை மணி மண்டபம்
அதனில் பொலிய , மன் , ஓ .
3.7.2

3166
புலியின் அதள் உடையானும் , பொன் ஆடை
புனைந்தானும் , பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர் ; தேவரின் இங்கு
யாவர் இனி நாட்டல் ஆவார் ?
மெலியும் இடை , தடிக்கும் முலை , வேய் இளந் தோள் ,
சேய் அரிக்கண் , வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுடம் நிரை வயங்க , மன் , ஓ .
3.7.3

3167
பண்டு அலங்கு திசைக் களிற்றின் பணை மருப்பின்
இணை ஒடியப் படர்ந்த பொன் தோள்
விண் தலங்கள் உற வீங்கி , ஓங்கு உதய மால்
வரையின் விளங்க , மீதில்
குண்டலங்கள் , குல வரையை வலம் வருவான்
இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும் நால் ஐந்து ஆய்ப்
பொலிந்த என வயங்க , மன் , ஓ .
3.7.4

3168
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
தொகை வழங்க , வயிரக் குன்றத்
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் படம்
நிரையின் தோன்ற , ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க , நாம நீர்
இலங்கையில் தான் நலங்க இட்ட
கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை
அன்ன நிறை ஆரம் குலவ , மன் , ஓ .
3.7.5

3169
ஆய்வு அரும் பெருவலி அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் ,
தேய்வு உறத் தேய்வு உறப் பெயர்ந்து , செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே .
3.7.6

3170
மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர் ,
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல் ,
தேவரும் அவுணரும் முதலினோர் திசை
தூவிய நறுமலர்க் குப்பை துன்னவே .
3.7.7

3171
இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை
உன்னலர் , கரம் தலம் சுமந்த உச்சியர் ,
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறை முறை துறையில் சுற்றவே .
3.7.8

3172
மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும் ,
தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர் ,
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் ,
சிங்க ஏறு எனத் திறல் சித்தர் சேரவே .
3.7.9

3173
அன்னவன் அமைச்சரை நோக்கி , ஆண்டு ஒரு
நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் ,
என்னைகொல் பணி ? என இறைஞ்சுகின்றனர்
கின்னரர் , பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் .
3.7.10

3174
பிரகர நெடுந்திசைப் பெருந்தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் ,
உரகர்கள் , தம் மனம் உலைந்து சூழவே .
3.7.11

3175
திசை உறு கரிகளைச் செறுத்துத் தேவனும் ,
வசை உறக் கயிலையை மறித்து , வான் எலாம்
அசை உறப் புரந்தரன் அடர்த்த தோள்களின்
இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே .
3.7.12

3176
சேண் உயர் நெறிமுறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செயப் பழுது இல் பண்ணிடை ,
வீணையின் நரம்பிடை விளைந்த தேமறை ,
வாணியின் , நாரதன் செவியின் வார்க்கவே .
3.7.13

3177
மேகம் என் துருத்தி கொண்டு ,
விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீம் தேன் ,
நறும் புனலோடு அளாவித்
தோகையர் துகிலில் தோயும்
என்பது ஓர் துணுக்கத்தோடும் ,
சீகர மகர வேலை
காவலன் சிந்த , மன் , ஓ .
3.7.14

3178
நறை மலர்த் தாதும் , தேனும்
நளிர் நெடு மகுட கோடி
முறை முறை இறைஞ்சச் சிந்தி
முரிந்து உகும் மணியும் , முத்தும் ,
தறையிடை உகாத முன்னம்
தாங்கினன் தழுவி வாங்கித்
துறை தொறும் தொடர்ந்து நின்று
சமீரணன் துடைப்ப , மன் , ஓ .
3.7.15

3179
மின்னுடை வேத்திரக் கையர் , மெய்புகத்
துன் நெடுங் கஞ்சுகத் துகிலர் , சோர்வு இலர் ,
பொன்னொடு வெள்ளியும் புரந்தர ஆதியர்க்கு
இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே .
3.7.16

3180
சூலமே முதலிய துறந்து , சுற்றிய
சேலையால் , செறிய வாய் புதைத்த செங்கையன் ,
தோல் உடை நெடும் பணை துவைக்கும் தோறு எலாம் ,
காலன் வந்து இசைக்கும் நாள் கடிகை கூறவே .
3.7.17

3181
நயம் கிளர் நானம் நெய் அளாவி , நந்தல் இல்
வியன் கருப்பூரம் மென் பஞ்சி மீக் கொளீஇக்
கயங்களில் மரை மலர்க் காடு பூத்து என ,
வயங்கு எரிக் கடவுளும் விளக்கம் மாட்டவே .
3.7.18

3182
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து , நல்
புதிது அலர் கற்பகத் தருவும் , பொய் இலாக்
கதிர்நெடு மணிகளும் , கறவை ஆன்களும் ,
நிதிகளும் , முறை முறை நின்று , நீட்டவே .
3.7.19

3183
குண்டலம் முதலிய குலம் கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்க வீசலால் ,
உண்டு கொல் இரவு இனி உலகம் ஏழினும் ?
எண் திசை மருங்கினும் இருள் இன்று
என்னவே .
3.7.20

3184
கங்கையே முதலிய கடவுள் கன்னியர் ,
கொங்கைகள் சுமந்து , இடை கொடியின் ஒல்கிடச்
செங்கையின் அரிசியும் மலரும் சிந்தினர் ,
மங்கலம் முறை முறை கூறி வாழ்த்தவே .
3.7.21

3185
ஊருவில் தோன்றிய உயிர்பெய் ஓவியம் ,
காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல் ,
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் ,
நாரியர் , அரும் நடம் நடிப்ப நோக்கியே .
3.7.22

3186
இருந்தனன் , உலகங்கள் இரண்டும் ஒன்றும் , தன்
அருந்தவம் உடைமையின் , அளவு இல் ஆற்றலில்
பொருந்திய இராவணன் , புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர் கண்ணின் வெள்ளம் அத்து ஏ .
3.7.23

சூர்ப்பணகை இலங்கை நகரின் வடக்கு வாயிலை அடைதல் (3187-3188)

3187
தங்கையும் , அவ் வழித் தலையில் தாங்கிய
செங்கையள் , சோரியின் தாரை சேர்ந்து இழி
கொங்கையள் , மூக்கினள் , குழை இல் காதினள் ,
மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள் .
3.7.24

3188
முடை உடை வாயினால் முறையிட்டு , ஆர்த்து எழு
கடை யுகம் கடல் ஒலி காட்டக் காந்துவாள் ,
குடதிசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் ,
வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் .
3.7.25

சூர்ப்பணகை தோற்றங்கண்டு இலங்கை நகரமக்கள் துயருறல் (3189-3207)

3189
தோன்றலும் , தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் , வயிறு அலைத்து , இரங்கி ஏங்கினார் ;
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் ,
தான் தனியவள் வரத் தரிக்க வல்லரோ ?
3.7.26

3190
பொருக்கென நோக்கினர் , புகல்வது ஓர்கிலர் ,
அரக்கரும் இரைத்தனர் , அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப் புடைத்து , கண்களில்
நெருப்பு எழ விழித்து , வாய் மடித்து நிற்கின்றார் .
3.7.27

3191
இந்திரன் மேலதோ ? உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ ? ஆழியானதோ ?
சந்திர மவுலிபால் தங்குமே கொல் ஓ ?
அந்தரம்
என்று நின்று அழல்கின்றார் சிலர் .
3.7.28

3192
செப்பு உறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் ?
முப்புறத்து உலகமும் அடங்க மூடிய
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது ;
அ புறத்து அண்டத்தோர் ஆர் ?
என்றார் சிலர் .
3.7.29

3193
என்னையே !' இராவணன் தங்கை ' என்ற பின் ,
' அன்னையே ! ' என்று அடி வணங்கல் அன்றியே ,
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் ? இவள்
தன்னையே அரிந்தனள் தான்
என்றார் சிலர் .
3.7.30

3194
போர் இலான் புரந்தரன் , ஏவல் பூண்டனன் ;
ஆர் உலாம் நேமியான் , ஆற்றல் தோற்று போய்
நீரினான் ; நெருப்பினான் பொருப்பினான் ; இனி
ஆர் கொல் ஆம் ஈது ?
என அறைகின்றார் சிலர் .
3.7.31

3195
சொல் பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமே ?
இல் பிறந்தார் தமக்கு இயைவ செய்திலள் ,
கற்பு இறந்தாள் எனக் கரன் கொலாம் இவள்
பொற்பு இறந்த ஆக்கினன் புகன்று
என்றார் சிலர் .
3.7.32

3196
' தத்து உறு சிந்தையர் , தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே ? பிழைப்பு இல் சூழ்ச்சியார் ,
முத்திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் ,
இத்திறம் புணர்த்தனர் ' என்கின்றார் சிலர் .
3.7.33

3197
இனி ஒரு கற்பம் உண்டு என்னின் அன்றி ஏ ,
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ ?
பனி வரு கானிடைப் பழிப்பு இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு
என்றார் சிலர் .
3.7.34

3198
கரை அறு திருநகர்க் கருங்கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்களை நெரித்து நெக்கனர் ,
பிரை உறு பால் என , நிலையில் பின்றிய
உரையினர் , ஒருவர்முன் ஒருவர் முந்தினார் .
3.7.35

3199
முழவினில் , வீணையில் , முரல் நல் யாழினில் ,
தழுவிய குழலினில் , சங்கில் , தாரையில்
எழு குரல் இன்றியே , என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது அவ் இலங்கைக்கு அன்று , அரோ !
3.7.36

3200
கள்ளுடை வள்ளமும் , களித்த தும்பியும் ,
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் ,
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் ,
தள்ளுறும் மருங்கினர் , தழீஇக் கொண்டு ஏங்கினார் .
3.7.37

3201
நாந்தக உழவர்மேல் நாட்டும் தண்டத்தர் ,
காந்திய மனத்தினர் , புலவி கை மிக
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக ,
வேந்தனுக்கு இளையவள் தாளின் வீழ்ந்தனர் .
3.7.38

3202
பொன் தலை மரகதப் பூகம் நேர்வு உற
சுற்றிய மணி வடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலின் முனிவு உற்று ஏங்கினார் ,
சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார் .
3.7.39

3203
எழு என மலை என எழுந்த தோள்களைத்
தழுவிய வளைத் தளிர் நெகிழத் தாமரை
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதரச் சிலர் உளம் பொருமி விம்முவார் .
3.7.40

3204
நெய்ந் நிலைய வேல் அரசன் , நேருநரை இல்லான் ,
இ நிலை உணர்ந்தபொழுது எ நிலையன் ?
என்னா ,
மை நிலை நெடுங்கண் மழை வான் நிலையது ஆகப்
பொய் நிலை மருங்கினர் புலம்பினர் , புரண்டார் .
3.7.41

3205
மனம் தலைவரும் கனவின் இன் சுவை மறந்தார் ,
கனம் தலைவரும் குழல் சரிந்து , கலை சோர ,
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட , நடந்தார் ,
அனந்தல் இள மங்கையர் , அழுங்கி அயர்கின்றார் .
3.7.42

3206
அம் கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன்
தங்கை நிலை இங்கு இது கொல் ?
என்று தளர்கின்றார் ,
கொங்கை இணை செங்கையின் மலைந்து , குலை கோதை
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் .
3.7.43

3207
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் ,
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்ன ,
நலம் கையில் அகன்றதுகொல் , நம்மின் ?
என நைந்தார் ,
கலங்கல் இல் கருங்கண் இணை வாரி கலுழ்கின்றார் .
3.7.44

3208
சூர்ப்பணகை இராவணனடிகளில் விழுந்து புரளுதல்
என்று , இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த ,
நின்றவர் இரும் தவரொடு ஓடும் நெறி தேடக்
குன்றின் அடி வந்துபடி கொண்டல் என , மன்னன்
பொன் திணி கரும் குழல் விழுந்தனள் , புரண்டாள் .
3.7.45

இராவணன் வெகுளியின் விளைவு (3209-3212)

3209
மூடினது இருள் படலை மூவுலகும் முற்றச்
சேடனும் வெரு கொடு சிரக் குவை நெளித்தான் ,
ஆடின குலக் கிரி , அருக்கனும் அயிர்த்தான் ,
ஓடின திசைக் கரிகள் , உம்பரும் ஒளித்தார் .
3.7.46

3210
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர , மீது இட்டு
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் எரிப்ப ,
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்றத்
திரிந்த புவனங்கள் , வினை தேவரும் அயர்த்தார் .
3.7.47

3211
தென் திசை நமன்தன் ஒடு தேவர் குலம் எல்லாம் ,
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்த ;
நின்று உடல் நடுங்க , உயிர் விம்மி நிலை நில்லாது ,
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் .
3.7.48

3212
இராவணன்' இது செய்தார் யார் ? ' என வினவுதல்
மடித்த பில வாய்கள் தொறும் வந்து புகை முந்தத்
துடித்த தொடர் மீசைகள் சுறு கொள உயிர்ப்பக்
கடித்த கதிர் வாள் எயிறு மின் கனல , மேகத்து
இடித்த உருமு ஒத்து உரறி , யாவர் செயல் ? என்றான் .
3.7.49

3213
சூர்ப்பணகை கூறுதல்
கானிடை அடைந்து புவி காவல்புரிகின்றார் ,
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் , மேல் கீழ்
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லார் ,
மானிடர் , தடிந்தனர்கள் வாள் உருவி ;
என்றாள் .
3.7.50

3214
இராவணன் மீட்டும் வினாவுதல்
செய்தனர்கள் மானிடர் எனத் திசை அனைத்தும்
எய்த நகைவந்தது ; எரி சிந்தின கண் எல்லாம் ;
நொய்து அவர் வலி தொழில் ; நுவன்ற மொழி ஒன்றோ ?
பொய் தவிர் ; பயத்தை ஒழி ; புக்க புகல்
என்றான் .
3.7.51

சூர்ப்பணகை மீண்டும் கூறுதல் (3215-3220)

3215
மன்மதனை ஒப்பர் மணி மேனி ; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள் தோளின் வலி தன்னால் ;
என் அதனை இப்பொழுது இசைப்பது ? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஒர் இமைப்பின் நனி வில்லால் .

3.7.52

3216
வந்தனை முனித்தலைவர்பால் உடையர் ; வானம் அத்து
இந்துவின் முகத்தர் ; எறி நீரில் எழும் நாளக்
கந்த மலரைப் பொருவு கண்ணர் , கழல் , கையர் ;
அந்தம் இல் தவத் தொழிலர் ; ஆர் அவரை ஒப்பார் ?

3.7.53

3217
வற்கலையர் , வார்கழலர் , மார்பின் அணி நூலர் ,
வில் கலையர் , வேதம் உறை நாவர் , தளிர் மெய்யர் ,
உற்கு அலையர் , உன்னை ஒர் துகள் தனையும் உன்னார் ,
சொல் கலை எனத் தொலைவு இல் தூணிகள் சுமந்தார் .

3.7.54

3218
’ஆறும் மனம் அஞ்சினம் அரக்கரை ' எனச் சென்று
ஏறும் நெறி அந்தணர் இயம்ப ,' உலகு எல்லாம்
வேறும் ' எனும் நுங்கள் குலம்' வேரொடும் அடங்கக்
கோறும் ' என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் .

3.7.55

3219
மாரர் உளரே இருவர் ஓர் உலகின் வாழ்வார் ?
வீரர் உளரே அவரின் வில்லதனின் வல்லார் ?
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ? ஐயா !
ஓரொருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் .

3.7.56

3220
தரா வலய நேமி உழவன் தயரதப் பேர்ப்
பராவரு நலத்து ஒருவன் மைந்தர் , பழி இல்லார் ,
விராவரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் ,
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர்
என்றாள் .
3.7.57

3221
இராவணன் நொந்து கூறுதல் (3221-3224)
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் , அரிந்தும் உயிர்வாழ்வார் ;
விருந்து அனைய வாளொடும் விழித்து , இறையும் வெள்காது
இருந்தனன் இராவணனும் இன் உயிர் கொடு இன்னும் !

3.7.58

3222
கொற்றம் அது முற்றி , வலியால் அரசு கொண்டேன்
உற்ற பயன் மற்று இது ; ஒல்கா உரை இறந்தேன் ;
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதௌ அத்து இது பொருந்தும் எனல் ஆமே ?

3.7.59

3223
மூளும் உளது ஆய பழி என் வயின் முடித்தோர்
ஆளும் உளவாம் , அவரது ஆர் உயிரும் உண்டாம் ,
வாளும் உளது , ஓத விடம் உண்டவன் வழங்கும்
நாளும் உள , தோளும் உள , நானும் உளென் அன்றோ ?

3.7.60

3224
புத்துறவு உறப் பழி புகுந்தது என நாணித்
தத்துறுவது என்னை ? மனனே ! தளரல் ; அம்மா !
எ துயர் உனக்கு உளது ? இனிப் பழி சுமக்கப்
பத்து உள தலைப் பகுதி ; தோள்கள் பல அன்றோ !

3.7.61

3225
இராவணன் மீட்டும் வினாவல்
என்று உரைசெயா , நகைசெயா , எரி விழிப்பான் ,
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா , நெடிய குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர் ?
என்றான் .
3.7.62

சூர்ப்பணகை கரன் முதலியோர் இறந்தமை சொல்லல் (3226-3227)

3226
அற்று அவன் உரைத்தலோடும் ,
அழுது இழி அருவிக் கண்ணள் ,
எற்றிய வயிற்றள் , பாரின்
இடை விழுந்து ஏங்குகின்றாள் ,
சுற்றமும் தொலைந்தது ஐய !
நொய்து
எனச் சுமந்த கையள் ,
உற்றது தெரியும் வண்ணம்
ஒருவகை உரைக்கலுற்றாள் .
3.7.63

3227
சொல் என் தன் வாயில் கேட்டார் ,
தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார் ,
கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங்கண்
இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
ஏறினர் விண்ணின்
என்றாள் .
3.7.64

3228
இராவணன் இரக்கமும் வெகுளியும் ஒருங்கெய்துதல்
தார் உடைத் தானையோடும் தம்பியர் , தமியன் செய்த
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத முன்னம் ,
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா போல் ,
நீரொடு நெருப்புக் கான்ற நிறைநெடுங் கண்கள் எல்லாம் .
3.7.65

3229
இராவணன் சூர்ப்பணகையை நீ அவர்க்கு இழைத்த குற்றம் என் ? என வினவுதல்
ஆ இடை எழுந்த சீற்றத்து
அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உகுக்கும் நெய்யில்
சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய ,
நீ இடை இழைத்த குற்றம்
என்னை கொல் ? நின்னை இன்னே
வாய் இடை இதழும் மூக்கும்
வலிந்து அவர் கொய்ய ?
என்றான் .
3.7.66

3230
சூர்ப்பணகை தன்பால் குற்றம் புகுந்தவாறு கூறுதல்
என் வயின் உற்ற குற்றம் ,
யாவர்க்கும் எழுத ஒண்ணாத்
தன்மையன் இராமனோடும்
தாமரை தவிரப் போந்தாள் ,
மின் வயின் மருங்குல் கொண்டாள் ,
வேய்வயின் மென்தோள் கொண்டாள் ,
பொன் வயின் மேனி கொண்டாள் ,
பொருட்டினால் புகுந்தது
என்றாள் .
3.7.67

சூர்ப்பணகை இராவணனிடம் சீதையின் அழகினை விரித்துரைத்தல் (3231-3242)

3231
ஆர் அவள் ? என்னலோடும்
அரக்கியும் , ஐய ! ஆழ்ந்து
தேர் ; அவள் திரண்ட கொங்கை
செம்பொன் செய் குலிகச் செப்பு ;
பார் அவள் பாதம் தீண்டப்
பாக்கியம் படைத்தது , அம்மா !
பேர் அவள் சீதை
என்று
வடிவு எலாம் பேசலுற்றாள் .
3.7.68

3232
காமரம் முரலும் பாடல் ,
கள் எனக் கனிந்த இன் சொல் ,
தேம் மலர் நிரந்த கூந்தல் ,
தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்
தாமரை இருந்த தையல்
சேடி ஆம் தரமும் அல்லள் ;
யாம் உரை வழங்கும் என்பது
ஏழைமை பாலது அன்று , ஓ .

3.7.69

3233
மஞ்சு ஒக்கும் அளக ஓதி ; மழை ஒக்கும் வடித்த கூந்தல் ;
பஞ்சு ஒக்கும் அடிகள் , செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும் ;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம் , ஐய !
கஞ்சத்தின் அளவிற்று ஏனும் , கடலினும் பெரிய கண்கள் .

3.7.70

3234
ஈசனார் கண்ணின் வெந்தான்
என்னும் இது இழுதைச் சொல் ; இவ்
வாசம் நாறு ஓதியாளைக்
கண்டனன் , வவ்வல் ஆற்றான் ,
பேசலாம் தகைமைத் தல்லாப்
பெரும்பிணி பிணிப்ப , நீண்ட
ஆசையால் , அழிந்து தேய்ந்தான்
அநங்கன் அவ் உருவம் அம்மா !

3.7.71

3235
தெவ் உலகத்தும் காண்டி , சிரத்தினில் பணத்தினோர்கள்
அ உலகத்தும் காண்டி , அலைகடல் உலகில் காண்டி ,
வெவ் உலை உற்ற வேலை , வாளினை வென்ற கண்ணாள் ,
எ உலகத்தாள் ? அங்கம் யாவர்க்கும் எழுத ஒணாதாள் .

3.7.72

3236
தோளையே சொல்லுகேன் ஓ ?
சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ ?
அல்லவை வழுத்துகேனோ ?
மீளவும் திகைப்ப தல்லால்
தனி தனி விளம்பல் ஆற்றேன் ;
நாளையே காண்டி அன்றே ?
நான் உனக்கு உரைப்பது என்னோ ?

3.7.73

3237
வில் ஒக்கும் நுதல் என்றாலும் ,
வேல் ஒக்கும் விழி என்றாலும் ,
பல் ஒக்கும் முத்து என்றாலும் ,
பவளத்தை இதழ் என்றாலும் ,
சொல் ஒக்கும் ; பொருள் ஒவ்வா ஆல் ;
சொல்லலாம் உவமை உண்டோ ?
நெல் ஒக்கும் புல் என்றாலும் ,
நேர் உரைத்தாக வற்றோ ?
3.7.74

3238
இந்திரன் சசியைப் பெற்றான் ;
இருமூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான் ;
தாமரைச் செங்கணானும்
செம் திரு மகளைப் பெற்றான் ;
சீதையைப் பெற்றாய் நீயும் ;
அந்தரம் பார்க்கின் , நன்மை
அவர்க்கு இலை ; உனக்கே ஐயா !

3.7.75

3239
பாகத்தில் ஒருவன் வைத்தான் ;
பங்கயம் அத்து இருந்த பொன்னை
ஆகம் அத்து இல் ஒருவன் வைத்தான் ;
அந்தணன் நாவில் வைத்தான் ;
மேகத்தில் பிறந்த மின்னை
வென்ற நுண் இடையை , நீயும் ,
மாகத் தோள் வீர ! பெற்றால் ,
எங்ஙனம் வைத்து வாழ்தி ?

3.7.76

3240
பிள்ளை போல் பேச்சினாளைப்
பெற்றபின் பிழைக்கல் ஆற்றாய் ,
கொள்ளை போகின்ற செல்வம்
அவளுக்கே கொடுத்தி ; ஐய !
வள்ளலே ! உனக்கு நல்லேன் ,
மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம்
கேடு சூழ்கின்றேன் . அன்று ஏ .

3.7.77

3241
தேர் தந்த அல்குல் சீதை ,
தேவர்தம் உலகின் , இம்பர் ,
வார் தந்த கொங்கையார் தம்
வயிறு தந்தாளும் அல்லள் ;
தார் தந்த கமலத் தாளைத்
தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது , அதனை வெல்வான்
நிலம் தந்து , நிரம்பிற்று , அன்று , ஏ .

3.7.78

3242
மீன்கொண்டு ஊடாடும் வேலை
மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் , சிறு
இடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ ;
உன் வாள் வலி உலகம் காண ,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் ,
இராமனைத் தருதி என்பால் .

3.7.79

3243
தருவது விதியே என்றால் ,
தவம் பெரிது உடையர் ஏனும் ,
வருவது வரும் நாள் அன்றி ,
வந்து கைகூட வற்றோ ?
ஒருபது முகமும் , கண்ணும் ,
உருவமும் , மார்பும் , தோள்கள்
இருபதும் , படைத்த செல்வம்
எய்துவது , இனி நீ , எந்தாய் !

3.7.80

3244
'இன்னவள் தன்னை உன்பால்
உய்ப்பல் ' என்று எடுக்கல் உற்ற
என்னை அவ் இராமன் தம்பி ,
இடை புகுந்து , இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான் ;
முடிந்தது என் வாழ்வு ; முன் நின்
சொன்ன பின் உயிரை நீப்பான்
துணிந்தனென்
என்னச் சொன்னாள் .
3.7.81

சூர்ப்பணகை மாற்றம் கேட்ட இராவணனுக்குக் காமம் மிகுதல் (3245-3250)

3245
கோபமும் , மறனும் , மானக்
கொதிப்பும் , என்று இனைய எல்லாம் ,
பாபம் நின்றிடத்து நில்லாப்
பெற்றி போல் பற்று விட்ட ;
தீபம் ஒன்று ஒன்றை உற்றால்
என்னலாம் செயலில் புக்க
தாபமும் காம நோயும்
ஆர் உயிர் கலந்த . அன்று , ஏ .
3.7.82

3246
கரனையும் மறந்தான் ; தங்கை
மூக்கினைக் கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் ; உற்ற
பழியையும் மறந்தான் ; வெற்றி
அரனையும் கொண்ட காமன்
அம்பினால் , முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான் . கேட்ட
மங்கையை மறந்து இலாதான் .
3.7.83

3247
சிற்று இடை சீதை என்னும்
நாமமும் சிந்தை தானும்
உற்று , இரண்டு ஒன்றாய் நின்றால் ,
ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்று ஒரு மனமும் உண்டோ ?
மறக்கலாம் வழி மற்று யாதோ ?
கற்றனர் ஞானம் இன்றேல் காமம்
அத்து ஐ கடக்கலாமோ ?
3.7.84

3248
மயில் உடைச் சாயலாளை
வஞ்சியாமுன்னம் , நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் ,
இதயம் ஆம் சிறையில் வைத்தான் ;
அயில் உடை அரக்கன் உள்ளம் ,
அவ் வழி மெள்ள மெள்ள
வெயில் உடை நாளில் உற்ற
வெண்ணெய் போல் வெதும்பிற்று . அன்று , ஏ .
3.7.85

3249
விதியது வலியினானும் ,
மேல் உள விளைவினானும் ,
பதி உறு கேடு வந்து
குறுகிய பயத்தினானும் ,
கதி உறு பொறியின் வெய்ய
காமம் நோய் , கல்வி நோக்கா
மதி இலி மறையச் செய்த
தீமை போல் வளர்ந்தது . அன்று , ஏ .
3.7.86

3250
பொன் மயம் ஆன நங்கை
மனம் புகப் புன்மை பூண்ட
தன்மையோ , அரக்கன் தன்னை
அயர்த்தது ஓர் தகைமை ஆல் ஓ ,
மன்மதன் வாளி தூவி
நலிவது ஓர் வலத்தன் ஆனான் ?
வன்மையை மாற்றும் ஆற்றல்
காம அத்து ஏ வதிந்தது . அன்றே ?
3.7.87

3251
இராவணன் தன் கோயில் அடைதல்
எழுந்தனன் இருக்கை நின்று ; ஆண்டு ,
ஏழ் உலகத்துளோரும்
பொழிந்தனர் ஆசி ஓசை ;
முழங்கின சங்கம் எங்கும் ;
பொழிந்தனர் பூவின் மாரி
போயினர் புறத்தோர் எல்லாம் ;
அழிந்து அழி சிந்தையோடும்
ஆடகம் கோயில் புக்கான் .
3.7.88

3252
இராவணன் காமநோய் மேலும் முதிர்தல் (3252-3257)
பூவினால் வேய்ந்து செய்த
பொங்கு பேர் அமளிப் பாங்கர்த்
தேவிமார் குழுவும் நீங்கிச்
சேர்ந்தனன் ; சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி ,
நயனமும் குயமும் புக்குப்
பாவியாக் கொடுத்த வெம்மை
பயப்பயப் பரந்தது அன்றே .
3.7.89

3253
நூக்கல் ஆகலாத காதல் நூறு நூறு கோடியாய்ப்
பூக்க , வாச வாடை வீசு சீதம் நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து , திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் ,
ஆக்கை தேய , உள்ளம் நைய , ஆவி வேவது ஆயினான் .
3.7.90

3254
தாது கொண்ட சீதம் மேவு சந்து , சந்த மென் தளிர் ,
போது , கொண்டு அடுத்தபோது , பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன , மேனி வெந்து வெந்து , விம்மு தீ
ஊது வன் துருத்திபோல் , உயிர்த்து உயிர்த்து , உயங்கினான் .
3.7.91

3255
தாவியாது , தீது எனாது , தையலாளை மெய் உறப்
பாவியாத போது இலாத பாவி , மாழை , பானல் , வேல் ,
காவி , ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் ,
ஆவி சால நொந்து நொந்து , அழுங்குவானும் ஆயினான் .
3.7.92

3256
பரம் கிடந்த மாதிரம்
பரித்த பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து
அடங்க வென்ற காவலன் ,
மரம் குடைந்த தும்பிபோல்
அநங்கன் வாளி வந்து வந்து
உரம் குடைந்து நொந்து நொந்து
உளைந்து உளைந்து ஒடுங்கினான் .
3.7.93

3257
கொன்றை துன்று கோதையோடு ஒர்
கொம்பு வந்து என் நெஞ்சு இடை
நின்றது உண்டு கண்டது
என்று
அழிந்து அழுங்கும் நீர்மையான் ,
மன்றல் தங்கு அலங்கல் மாரன்
வாளி போல , மல்லிகைத்
தென்றல் வந்து எதிர்ந்தபோது
சீறுவானும் ஆயினான் .
3.7.94

3258
இராவணன் மாளிகையினின்று நீங்கி ஒரு சோலையினை அடைதல்
அன்னகாலை , அங்குநின்று
எழுந்து , அழுங்கு சிந்தையான் ,
இன்ன ஆறு செய்வென் என்று ஒர்
எண் இலான் , இரங்குவான் ,
பன்னு கோடி தீப மாலை ,
பாலையாழ் பழித்த சொல்
பொன் அனார் எடுக்க , அங்கு , ஒர்
சோலை ஊடு போயினான் .
3.7.95

3259
இராவணன் புக்க சோலையின் இயல்பு (3259-3260)
மாணிக்கம் பனசம் ; வாழை
மரகதம் ; வயிரம் தேமா ;
ஆணி பொன் வேங்கை ; கோங்கம்
அரவிந்த ராகம் ; பூகம்
சேண் உற்ற நீலம் ; சாலம்
குருவிந்தம் ; தெங்கு வெள்ளி ;
பாணித் தண் பளிங்கு நாகம் ;
பாடலம் பவளம் . மன் , ஓ .
3.7.96

3260
இராவணன் அச்சோலையுள் அமைந்த மண்டபத்துள்ள படுக்கையினை அடைதல்
வான் உற நிவந்த செங்கேழ்
மணிமரம் துவன்றி , மாக
மீனொடு மலர்கள் தம்மில்
வேற்றுமை தெரிதல் தேற்றாத்
தேன் உகு சோலை நாப்பண் ,
செம்பொன் மண்டபம் அத்து உள் , ஆண்டு ஓர்
பால்நிற அமளி சேர்ந்தான்
பையுள் உற்று உயங்கி நைவான் .
3.7.97

3261
அச்சோலை புள்ளொலி அற்றதாதல்
கனிகளின் , மலரின் வந்த
கள் உண்டு , களிகொள் அன்னம் ,
வனிதையர் மழலை இன்சொல்
கிள்ளையும் , குயிலும் , வண்டும்
இனியன மிழற்றுகின்ற
யாவையும் ,' இலங்கை வேந்தன்
முனியும் ' என்று அவிந்த வாய ,
மூங்கையர் போன்ற அன்றே .
3.7.98

3262
இராவணனுக்கு அஞ்சிப் பனிப்பருவம் நீங்க வேனில் வருதல்
பருவத்தால் வாடைவந்த
பசும்பனி , அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
குளித்தலும் , உளைந்து விம்மி ,
இருதுத்தான் யாது அடா ? என்று
இயம்பினன் ; இயம்பலோடும் ,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி ,
வேனில் வந்து இறுத்தது அன்றே .
3.7.99

3263
இராவணன் வேனிலால் வெதும்பல் (3263-3264)
வன் பணை மரமும் தீய ,
மலைகளும் குளிர , ஆழும்
மென் பனி எரிந்தது என்றால் ,
வேனிலை விளம்பல் ஆமோ !
அன்பு எனும் விடம் உண்டாரை
ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ ,
இன்பமும் துன்பம்தானும்
உள்ளத்தோடு இயைந்த அன்றே ?
3.7.100

3264
மாதிரம் அத்து இறுதி காறும் ,
தன் மனத்து எழுந்த மையல்
வேதனை வெப்பம் செய்ய ,
வேனிலும் வெதுப்புங் காலை ,
யாது இது ? இங்கு இதனின் முன்னைச்
சிசிரம் நன்று ; இதனை நீக்கிக்
கூதிர் ஆம் பருவம் தன்னைக்
கொணருதிர் விரைவின்
என்றான் .
3.7.101

3265
கூதிர்ப்பருவமும் வேதனைதர , இராவணன் பருவங்களை அகற்றக் கட்டளையிடுதல்
கூதிர் வந்து அடைந்த காலை
கொதித்தன குவவுத் திண் தோள் ;
சீதமும் சுடுமோ ? முன்னைச்
சிசிரமே காண் இது
என்றான் ;
ஆதியாய் ! அஞ்சு மன்றே
அருள் அலது இயற்ற
என்ன ,
யாதும் இங்கு இருது ஆகாது ;
யாவையும் அகற்றுக
என்றான் .
3.7.102

3266
பருவம் நீங்கிய நிலையில் உலகத் தோற்றம்
என்னலும் , இருது வெல்லாம்
ஏகின ; யாவும் தத்தம்
பன்ன அரும் பருவம் செய்யா ,
யோகி போல் பற்று நீத்த ;
பின்னரும் உலகம் எல்லாம்
பிணிமுதல் பாசம் வீசித்
துன் அருந்தவத்தின் எய்தும்
துறக்கம்போல் தோன்றிற்று . அன்றே .
3.7.103

3267
பருவங்கள் நீங்கிய நிலையிலும் இராவணன் வருந்தல்
கூலத்தார் உலகம் எல்லாம்
குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க ,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
நெய் இன்றி எரிந்தது ; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ ?
காமத்தால் கனலும் வெம் தீ
சீலம் அத்து ஆல் அவிவது அன்றிச்
செய்யத்தான் ஆவது உண்டோ ?
3.7.104

3268
உழையர் செய்த உபசாரங்களால் துயர்நீங்காத இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
நாரம் உண்டு எழுந்த மேகம்
தாமரை வளையம் நானச்
சாரம் உண்டிருந்த சீதச்
சந்தனம் தளிர் மென் தாதோடு
ஆரம் உண்டிருந்தும் சிந்தை
அயர்கின்றான் அயல் நின்றாரை
'ஈரம் உண்டு ' என்பர் ; ஓடி
இந்துவைக் கொணர்திர்
என்றான் .
3.7.105

சந்திரன் தோன்றுதல் (3269-3271)

3269
வெம் , சினத்து அரக்கன் ஆண்ட
வியன் நகர் மீது போதும்
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற
நிறைமதியோனை நேடி ,
' அஞ்சலை வருதி ; நின்னை
அழைத்தனன் அரசன் ' என்னச்
சஞ்சலம் துறந்து , தான் அச்
சந்திரன் உதிக்கல் உற்றான் .
3.7.106

3270
அயிர் உறக் கலந்த நல் நீர்
ஆழி நின்று ஆழி நீத்துச்
செயிர் உறக் கலந்தது ஆண்டு ஓர்
தேய்வு வந்து உற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர்
வலியவற் செல்லுமா போல்
உயிர் தெறக் காலன் என்பான்
ஒத்தனன் உதயஞ் செய்தான் .
3.7.107

3271
பரா வரும் கதிர்கள் எங்கும்
பரப்பி மீப் படர்ந்து , வானில்
தராதலத்து எவரும் பேணா
அவனையே சலிக்கும் நீரால் ,
அரா அணைத் துயிலும் அண்ணல் ,
காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர்மேல் உய்த்த
திகிரியும் என்னல் ஆனான் .
3.7.108

3272
இராவணன் நிலவால் வருந்தல் (3272-3275)
அருகு உறு பாலின் வேலை
அமுது எலாம் அளைந்து வாரிப்
பருகின பரந்து பய்ந்த
நிலாச் சுடர்ப் பனிமென் கற்றை ,
நெரி உறு புருவச் செம் கண்
அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி
வீசினால் ஒத்தது . அன்றே .
3.7.109

3273
மின் நிலம் திரிந்தது அன்ன விழு நிலா , மிதிலை சூழ்ந்த
செந்நெல் அம் கழனி நாடன் திருமகள் செவ்வி கேளா ,
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலாத்
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் எனச் சுட்டது அன்றே .
3.7.110

3274
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் , கறுத்து நோக்கித்
தரும் கதிர்ச்' சீத யாக்கைச் சந்திரன் தருதிர் ' என்ன ,
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முகக்கும் சீற்றம் அத்து
அரும் கதிர் 'அருக்கன்தன்னை ஆர் அழைத்தீர்கள் ? ' என்றான் .
3.7.111

3275
அவ் வழிச் சிலதர் அஞ்சி ,' ஆதியாய் ! அருள் இல்லாரை
இ வழி தருதும் என்பது இயம்பலாம் இயல்பிற்று அன்று ; ஆல் ,
செம் வழி கதிரோன் என்றும் தேரின்மேல் அன்றி வாரான் ;
வெவ் வழித்து எனினும் , திங்கள் விமானம் அத்தி இன் மேலது ' என்றார் .
3.7.112

3276
இராவணன் சந்திரனோடு நொந்து கூறல் (3276-3278)
பணம் தாழ் அல்குல் பணி மொழியார்க்கு
அன்புபட்டார் படும் காமக்
குணம் தான் முன்னம் அறியாதான் ,
கொதியாநின்றான் , மதியாலே
தண் அம் தாமரையின் தனிப் பகைஞன்
என்னும் தன்மை ஒருதானே
உணர்ந்தான் ; உணர்வுற்று , அவன்மேல் இட்டு
உயிர் தந்து உய்க்க உரைசெய்வான் .
3.7.113

3277
' தேயா நின்றாய் , மெய் வெளுத்தாய் ,
உள்ளம் கறுத்தாய் , நிலைதிரிந்து
காயா நின்றாய் , ஒரு நீயும்
கண்டார் சொல்லக் கேட்டாயோ ?
பாயாநின்ற மலர் வாளி
பறியாநின்றார் இன்மையால் ,
ஓயா நின்றேன் ; உயிர் காத்தற்கு
உரியார் யாவர் ? உடுபதியே ! '
3.7.114

3278
ஆற்றார் ஆகில் தம்மைக் கொண்டு
அடங்காரோ ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி
குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய் ; அதனால் அகம் கரிந்தாய் ,
மெலிந்தாய் , வெதும்பத் தொடங்கினாய் !
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் ,
வெற்றி ஆக வற்று ஆமோ ?
3.7.115

3279
சந்திரனும் இரவும் மறையச் சூரியனும் பகலும் தோன்றுதல்
என்னப் பன்னி , இடர் உழவா ,
' இரவோடு இவனைக் கொண்டு அகற்றி ,
முன்னைப் பகலும் பகலோனும்
வருக ' என்றான் ; மொழியாமுன் ,
உன்னற்கு அரிய உடுபதியும்
இரவும் ஒளித்த ; ஒரு நொடியில்
பன்னற்கு அரிய பகலவனும்
பகலும் வந்து பரந்த ; ஆல் .
3.7.116

3280
விடியற்கால வருணனை . சூரியன் உதித்தலால்
தாமரை மலர்தலும் , ஆம்பல் குவிதலும்
இருக்கின் மொழியார் எரி முகம் அத்து இன்
ஈந்த நெய்யின் அவிர் செம் பொன்
உருக்கி அனைய கதிர் பாய
அனல்போல் விரிந்தது உயர் கமலம் ;
அருக்கன் எய்த அமைந்து அடங்கி
வாழாது , அடாத பொருள் எய்திச்
செருக்கி , இடையே திரு இழந்த
சிறியோர் போன்ற செம் ஆம்பல் .
3.7.117

3281
சந்திரன் ஒளிமழுங்கி மறைதல்
நாணி நின்ற ஒளி மழுங்கி ,
நடுங்காநின்ற உடம்பினன் ஆய்ச்
சேணில் நின்று புறம் சாய்ந்து ,
கங்குல் தாரம் பின் செல்லப்
பூணின் வெய்யோன் ஒரு திசை ஏ
புகுதப் போவான் , புகழ்வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த
அரசர் போன்றான் அல் ஆண்டான் .
3.7.118

3282
அகால சூரியோதயத்தில் மகளிர் நிலை (3282-3284)
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்திலர் இடை ஒரு வெகுளி பொங்கலால் ;
கணம் குழை மகளிர்கள் , கங்குல் நீங்கிட ,
உணர்ந்திலர் ; கனவினும் ஊடல் தீர்ந்திலர் .
3.7.119

3283
தள்ளுறும் உயிரினர் , தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலார்
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள் மலர்
கள் உகுவன எனக் கலுழும் கண்ணினார் .
3.7.120

3284
அணை மலர்ச் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் ,
பணைகளைத் தழுவிய பவள வல்லி போல் ,
இணை மலர்க் கைகளின் இறுக இன் உயிர்த்
துணைவரைத் தழுவினர் , துயில்கின்றார் சிலர் .
3.7.121

3285
யானைகளின் நிலை
அளி இனம் கடம் தொறும் ஆர்ப்ப , ஆய் கதிர்
ஒளி பட , உணர்ந்தில உறங்குகின்றன ,
தெளிவு இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களிநல் யானையே .
3.7.122

3286
விளக்குகள் ஒளி மழுங்கினமை
விரிந்து உறை துறை தொறும் விளக்கம் யாவையும் ,
எரிந்து இழுது அ•கல , ஒளி இழந்தன ;
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரைப்
பிரிந்து உறைதரும் குலப் பேதைமாரினே .
3.7.123

3287
காலையில் மலரும் மலர் மலராமை
புனைந்து இதழ் உரிஞ்சு உறு பொழுது புல்லியும்
வனைந்தில , வைகறை மலரும் மா மலர் ,
நனந்தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடும் கண் ஓடு ஒத்தவாம் அரோ .
3.7.124

3288
மக்கள் துயிலுணராமை
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் ,
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீங்கல ,
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடும் மனை வாயில் மானவே .
3.7.125

3289
நேமிப்புள் பகல் வரவால் மகிழ்தல்
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர்
தஞ்சு உற , விடுவது ஓர் தயாவு தாங்கலால் ,
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உறக் களித்தன நேமிப்புள் எலாம் .
3.7.126

3290
மலர்கள் விரியாமையால் வண்டுகள் வருந்தல்
நாள் மதிக்கு அல்லது நடுவண் எய்திய
ஆணையில் திறக்கிலா அலரில் பாய்வன ,
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரில் தளர்ந்தன பாடல் தும்பியே .
3.7.127

3291
மருளும் தெருளும் உற்ற மங்கையர் நிலை
அரு மணிச் சாளரம் அதனின் ஊடு புக்கு
எரி கதிர் , இன் துயில் எழுப்பி எய்தவும் ,
மருளொடு தெருள் உறும் நிலையர் ; மங்கையர் ,
தெருள் உற மெய் பொருள் தெளிந்திலார் இன் ஏ .
3.7.128

3292
யாமக்கணக்கரும் கோழியும் துயின்றமை
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர்
நாவலர் இயற்றிய நாளின் நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணிதம் மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே .
3.7.129

3293
பகற்பொழுதும் இராவணன் வருந்தி இது சூரியனன்று சந்திரனே யெனல்
இனையன உலகினில் நிகழும் எல்லையில் ,
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் ,
நினைவுறும் மனத்தையும் நெருப்பில் தீய்க்கும் ஆல்
அனைய அத் திங்களே ஆகுமால் என்றான் .
3.7.130

3294
உழையர் சூரியனே எனல்
திங்களோ அன்று இது ; செல்வ ! செங்கதிர் ;
பொங்கு உளைப் பச்சை அம் புரவித் தேரது ; ஆல்
வெம் கதிர் சுடுவதே ; அன்றி , மெய் உறத்
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர் .
3.7.131

3295
இராவணன் பிறைமதியை அழைக்கும்படி கூறுதல்
நீலச் சிகரக் கிரி அன்னவன் , ' நின்ற வெய்யோன்
ஆலத்தினும் வெய்யன் ; அகற்றி , அரற்றுகின்ற
வேலைக் குரலைத் தவிர்கென்று விலக்கி , மேலை
மாலைப் பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் .
3.7.132

3296
பிறைத்தோற்றம் (கவிக்கூற்று)
சொன்னான் நிருதர்க்கு இறை , அ மொழி சொல்லலோடும் ,
அ நாள் இன் நிரம்பிய அம்மதி , ஆண்டு ஒர் வேலை
முந்நாளின் இளம் பிறையாகி முளைத்தது , என்றால் ,
எ நாள் உம் அருந்தவம் அன்றி இயற்றல் ஆமோ ?
3.7.133

3297
பிறைவர இராவணன் வருந்தல் (3297-3299)
குடபாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் ,
வடவா அனல் ; அன்று எனின் , மண் பிடர் வைத்த பாம்பின்
விடம் வாள் எயிறு ; அன்று எனின் என்னை வெகுண்டு , மாலை
அட , வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் . அன்று ஏ .
3.7.134

3298
தாது உண் சடிலத் தலைவைத்தது , தண் தரங்கம்
மோதும் கடலிற்கு இடை முந்து பிறந்தபோதே
ஓதும் கடுவைத் தன் மிடற்றின் ஒளித்த தக்கோன் ,
' ஈதும் கடுவாம் ' என எண்ணிய எண்ணம் அன்றோ .
3.7.135

3299
உரும் ஒத்த வலம் அத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடித்
திருமு இச்சிறு மின் பிறை , தீமை குறைந்தது இல்லை !
கருமைக் கறை நெஞ்சினின் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமைச் சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ ?
3.7.136

3300
இராவணன் பிறையை அகற்றி இருளைத் தருக எனல்
' கன்னக் கனியும் இருள் தன்னையும் காண்டும் ; அன்று , ஏ
முன்னைக் கதிர் நன்று ; இது அகற்றுதிர் ; முன்பு சான்ற
என்னைச் சுடும் என்னின் , இவ் ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னைச் சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ ? '
3.7.137

3301
இருள் வருணணை(கவிக் கூற்று) (3301-3302)
ஆண்டு அ பிறை நீங்கலும் , எய்தியது அந்தகாரம் ;
தீண்டற்கு எளிதாய்ப் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி ,
வேண்டில் கரபத்திரத்து ஈர்ந்து விழுத்தல் ஆகிக்
காண்டற்கு இனிது ஆய்ப் பல கந்து திரட்டல் ஆகி .
3.7.138

3302
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் ? முற்றும் முற்றிப்
பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர் புக்கு வழங்கல் இன்றிக்
குருடு ஈங்கு இது என்னக் குறிக்கொண்டு , கண்ணோட்டம் குன்றி ,
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அவ் அந்தகாரம் .
3.7.139

3303
இருளின் தோற்றங் கண்டு இராவணன் கூறுதல் 3303 , 3304
விள்ளாது செறிந்து இடை மேல் உற வீங்கி , எங்கும்
நள்ளா இருள் வந்து அகல் ஞாலம் விழுங்கலோடும் ,
' எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது , உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் ' என்றான் .
3.7.140

3304
வேலைத் தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும்
ஆலத்தின் அடங்குவது அன்று இது ; அறிந்து உணர்ந்தேன் .
ஞாலம் அத்து ஒடு விண்முதல் யாவையும் நாவின் நக்கும்
காலக் கனல் கார்விடம் உண்டு கறுத்தது அன்று ஏ .
3.7.141

3305
சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராவணன் கூறுதல் (3305-3309)
அம்பும் அனலும் நுழையாக் கன அந்தகாரத்து
உம்பர் மழை கொண்டு , அயல் ஒப்பு அரிது ஆய துப்பின்
கொம்பர் , குரும்பைக் குலம் கொண்டது , திங்கள் தாங்கி ,
வெம்பும் தமியேன்முன் , விளக்கு எனத் தோன்றும் அன்று ஏ .
3.7.142

3306
மருள் ஊடு வந்த மயக்கோ ! மதி மற்றும் உண்டோ !
தெருளாது , இது என்னோ ? திணி மை இழைத்தாலும் ஒவ்வா
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீலச்
சுருளோடும் வந்து ஒர் சுடர் மா மதி தோன்றும் அன்றே .
3.7.143

3307
புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம் ; அல்லது எல்லாவுருவும் தெரிந்தாம் ;
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்ல மெல்ல
மடம் மங்கையராய் என் மனத்தவர் ஆயினார் ஏ .
3.7.144

3308
பண்டே உலகு ஏழினும் உள்ள படைக் கணாரைக்
கண்டேன் ; இது போல்வது ஒர் பெண் உருக் கண்டிலேன் ஆல் ;
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்று ஏ .
3.7.145

3309
இராவணன் சூர்ப்பணகையை அழைத்துவரக் கட்டளையிடுதல்
பூண்டு இ பிணி யான் உறுகின்றது தான் பொறாதாள் ,
தேண்டிக்கொடுவந்தனள் ; செய்வது ஒர் மாறும் உண்டோ !
காண்டற்கு இனியாள் உருக் கண்டவட் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையைக் கூவுக என்றான் .
3.7.146

3310
சூர்ப்பணகை இராவணன்பால் வருதல்
என்றான் ; எனலும் , கடிது ஏகினர் கூவும் எல்லை ,
வன் தாள் நிருதக் குலம் வேர் அற மாய்த்தல் செய்வாள் ,
ஒன்றாத காமம் கனல் உள் தெறலோடும் நாசி
பொன் தாழ் குழை தன்னொடும் போக்கினள் போய்ப் புகுந்தாள் .
3.7.147

3311
இராவணனுக்கும் சூர்ப்பணகைக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (3311-3316)
பொய் நின்ற நெஞ்சில் கொடியாள் புகுந்தாளை நோக்கி ,
நெய் நின்ற கூர் வாளவன் , நேர் உற நோக்கு நங்காய் !
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர்
இந்நின்றவள் ஆம் கொல் இயம்பிய சீதை ? என்றான் .
3.7.148

3312
' செம் தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலம் அத்து ஒடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் , ஆகும் அவ் வல் வில் இராமன் ' என்றாள் .
3.7.149

3313
பெண் பால் உரு நான் இது கண்டது ; பேதை ! நீ ஈண்டு
எண்பாலும் இலாதது ஒர் ஆண் உரு என்றி ; என்னே !
கண் பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை
மண் பாலவர் ஏ கொல் ! விளைப்பவர் மாயை ? என்றான் .
3.7.150

3314
' ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி ,
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள் தோறும்
தோன்றும் அனையாள் ; இது தொல் நெறித்து ஆகும் ' என்றாள் .
3.7.151

3315
அன்னாள் அது கூற ,
அரக்கனும் ,' அன்னது ஆக ;
நின்னால் அவ் இராமனைக்
காண்குறும் நீர் என் ? ' என்றான் ;
' எந்நாள் அவன் என்னை இத்
தீர்வு அரும் இன்னல் செய்தான் ,
அ நாள் முதல் யானும்
அயர்த்திலன் ஆகும் ' என்றாள் .
3.7.152

3316
' ஆம் ! ஆம் ! அது அடுக்கும் ; என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால் ; வினையேற்கு இனி என் விடிவாகும் ? ' என்னக்
' கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே ?
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி ' என்றாள் .
3.7.153

3317
சூர்ப்பணகை நீங்க இராவணன் வருந்தல்
என்றாள் , அகன்றாள் ; அவ் அரக்கனும் ஈடு அழிந்தான் ;
ஒன்றானும் உணர்ந்திலன் , ஆவி உலைந்து சோர்ந்தான் ;
நின்றாரும் நடுங்கினர் ; நின்று உள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை ; போலும் அன்று ஏ .
3.7.154

3318
இராவணன் சந்திரகாந்த மண்டபம் அமைக்கும்படி சொல்லல்
இறந்தார் பிறந்தார் என
இன் உயிர் பெற்ற மன்னன் ,
மறந்தான் உணர்ந்தான் , அவண்
மாடு நின்றாரை நோக்கிக்
'கறந்தால் என நீர்தரு
சந்திரகாந்தத்தாலே
சிறந்து ஆர் மணி மண்டபம்
செய்க
எனச் செப்புக ' என்றான் .
3.7.155

3319
தெய்வத்தச்சன் சந்திரகாந்த மண்டபம் அமைத்தல் (3319-3320)
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் ,
சிந்தா வினை அன்றியும் , கைவினையாலும் செய்தான் .
அம் தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைந்த
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண .
3.7.156

3320
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் ,
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் ,
பூ தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் ,
ஏந்தும் மணிக் கற்பகச் சீதளக் கா இழைத்தான் .
3.7.157

3321
இராவணன் மண்டபங் காண வருதல்
ஆணிக்கு அமை பொன் கை மணிச் சுடர் ஆய் விளக்கம் ,
சேண் உற்று இருள் சீப்பன தெய்வ மடந்தைமார்கள்
பூணிற் பொலிவார் புடை ஏந்திடப் பொங்கு தோளான் ,
மாணிக்க மானம் அத்து இடை மண்டபம் காண வந்தான் .
3.7.158

3322
இருள் நீங்குதல் (3322-3323)
அல் ஆயிர கோடி அடுக்கியது ஒத்ததேனும் ,
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாமப்
பல் ஆயிர கோடி பனி சுடர் ஈன்ற ; திங்கள்
எல்லாம் உடன் ஆய் இருள் ஓடி இரிந்தது அன்று ஏ .
3.7.159

3323
பொற்பு உற்றன மா மணி ஒன்பதும் , பூவின் நின்ற
கற்பம் தரு வின் கதிர் நாள் நிழல் கற்றை நாற ,
அல் பற்று அழியப் பகல் ஆக்கியது ; ஆல் ; அருக்கன்
நிற்பத் தெளிகின்றது நீள்சுடர் மேன்மையன்றோ !
3.7.160

3324
இராவணன் மண்டபத்தை அடைதல்
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் , செய்கை ஓரான் ,
வேறு ஆய பிறப்பு இடை வேட்கை விசித்தது ஈர்ப்ப
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் .
3.7.161

3325
இராவணன் மலர்ச்சேக்கை சேர்தல்
தண்டல் இல் தவம் செய்வோர்தாம்
வேண்டின தாயின் நல்கும்
மண்டல மகர வேலை ,
அமுதொடும் வந்தது என்னப்
பண் தரு சுரும்பு சேரும்
பசு மரம் உயிர்த்த பசுமை பொன்
தண் தளிர் மலரில் செய்த
சீதளச் சேக்கை சார்ந்தான் .
3.7.162

3326
தென்றல் வருதல்
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி ,
வேரி அம் சரளச் சோலை வேனிலான் விருந்து செய்ய ,
ஆர்கலி அழுவம் தந்த அமிழ்து என , ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் , வந்து இறுத்தது அன்று ஏ .
3.7.163

3327
இராவணன் தென்றலால் வருந்திக் கூறுதல் (3327-3330)
சாளரத் தூடு வந்து தவழ்தலும் , தரித்தல் தேற்றான் ,
நீள் அரத்தங்கள் சிந்தி , நெருப்பு உக நோக்கும் நீரான் ,
வாழ் மனைப் புகுந்தது ஆங்கு ஓர் மாசுணம் வரக் கண்டன்ன
கோள் உறக் கொதித்து விம்மி உழையரைக் கூவிச் சொன்னான் .
3.7.164

3328
' கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினைக் குப்புற்று என்னத்
தேவரின் ஒருவன் என்னை இன்னலும் செயத் தக்கானோ ?
ஏவலின் அன்றித் தென்றல் எவ் வழி எய்திற்று ? ' என்னாக்
காவலின் உழையர் தம்மைக் கொணருதிர் கடிதின் என்றான் .
3.7.165

3329
அவ்வழி உழையர் ஓடி ,
ஆண்டு அவர்க் கொணர்தலோடும் ,
வெம் வழி அமைந்த செம் கண்
வெரு உற நோக்கி , வெய்யோன்
' செம் வழி தென்றலாற்குத்
திருத்தினீர் நீர்கொல் ? ' என்ன ,
' இவ் வழி இருந்த காலைத்
தடை அவற்கு இல்லை ' என்றார் .
3.7.166

3330
' வேண்டிய நினைந்து செய்வான்
விண்ணவர் வெருவார் என்றால் ,
மாண்டது போலும் கொள்கை ,
யான் உடை வன்மை ; வல்லைத்
தேண்டினீர் , திசைகள் தோறும்
சேண் உற விசையின் செல்குற்று ,
ஈண்டு இவன் தன்னைப் பற்றி
இரும் சிறை இடுதிர் ' என்றான் .
3.7.167

3331
இராவணன் அமைச்சரை அழைமின் எனல்
' காற்றினோன் தன்னை வாளா
முனிதலின் , கண்டது இல்லை ;
கூற்றும் வந்து என்னை இன்னே
குறுகும் ஆல் ; குறித்த ஆற்றால்
வேல் தரும் கருங்கண் சீதை
மெய் அருள் புனையேன் என்றால் ,
ஆற்றலால் அடுத்தது எண்ணும்
அமைச்சரைக் கொணர்திர் ' என்றான் .
3.7.168

3332
அமைச்சர் வருதல்
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் , எங்கும்
கூவினர் ; கூவலோடும் குறுகினர் , கொடித் திண் தேர்மேல்
மாவினில் சிவிகைதன்மேல் மழை மதம் களிற்றின் ; வையத்
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த .
3.7.169

3333
இராவணன் மாரீசனிருக்கையடைதல்
வந்த மந்திரியரோடு
மாசு அற மனத்தின் எண்ணிச்
சிந்தையில் நினைந்த செய்யும்
செய்கையன் , தெளிவு இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
விமானத்தில் , ஆரும் இன்றி ,
இந்தியம் அடக்கி நின்ற
மாரீசன் இருக்கை சேர்ந்தான் .
3.7.170

3334
மாரீசன் இராவணனை உபசரித்து அவன் வந்த காரியம் வினவுதல் (3334-3335)
இருந்த மாரீசன் , வந்து அவ் இராவணன் எய்தலோடும் ,
பொருந்திய பயத்தன் , சிந்தை பொருமுற்று , வெருவுகின்றான் ,
கருந்தட மலை அன்னானை எதிர்கொண்டு , கடன்கள் யாவும்
திருந்திடச் செய்து , செவ்வித் திரு முகம் நோக்கிச் செப்பும் .
3.7.171

3335
' சந்த மலர்த் தண் கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் !
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் ? சொல்லுதி ' என்றான் மருள்கின்றான் .
3.7.172

3336
இராவணன் மாரீசனிடம் தான் வந்த காரியம் கூறுதல் (3336-3339)
ஆனது அனைத்தும் ; ஆவி தரித்தேன் , அயர்கின்றேன் ;
போனது பொற்பும் ; மேன்மையும் அற்றேன் புகழோடும் ;
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் ; இனி என் ? ஆ
வானவருக்கும் நாண அடுக்கும் வசை அம்மா .
3.7.173

3337
வன்மை தரித்தோர்மானிடர் ; மற்று அங்கு அவர் , வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் ;
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன்மேல் ஓர்
புன்மை தெரிப்பின் வேறு இனி மற்று என் ? புகழ் வேலோய் .
3.7.174

3338
திருகு சினத்தார் , முதிர மலைந்தார் , சிறியோர் நாள்
பருகினன் என்றால் வென்றி நலத்தில் பழி அன்றோ ?
இருகை சுமந்தாய் ! இனிதின் இருந்தாய் ! இகல் வேல் உன்
மருகர் உலந்தார் ; ஒருவன் மலைந்தான் வரி வில்லால் .
3.7.175

3339
' வெப்பு அழியாது என் நெஞ்சும்
உலந்தேன் ; விளிகின்றேன் ;
ஒப்பு அழிவு என்றே போர் செயல்
ஒல்லேன் ; உடன் வாழும்
துப்பு அழி செவ்வாய் வஞ்சியை
வௌவத் துணை கொண்டிட்டு ,
இப் பழி நின்னால் தீரிய
வந்தேன் . இவண் ' என்றான் .
3.7.176

3340
இராவணன்பால் மாரீசன் கூறுதல் (3340-3351)
இச் சொல் அனைத்தும் சொல்லி , அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்னக் கிளராமுன் ,
சிச்சி எனத் தன் மெய்ச் செவி பொத்தித் தெருமந்தான் ,
அச்சம் அகற்றிச் செற்ற மனத்தோடு அறைகின்றான் .
3.7.177

3341
மன்னா ! நீ நின் வாழ்வை முடித்தாய் ! மதி அற்றாய் ,
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் ;
இன்னாதேனும் யான் இது உரைப்பன் இதம் என்னச்
சொன்னான் அன்றே அன்னவனுக்குத் துணிவு எல்லாம் .
3.7.178

3342
அற்ற கரத்தோடு உன் தலை நீயே அனல் முற்றிப்
பற்றினை உய்த்தாய் , பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் , பினை அன்றோ
பெற்றனை செல்வம் ; பின் அது இழந்தால் பெறலாம் ஓ .
3.7.179

3343
திறத் திறனாலே செய் தவம் முற்றித் திரு உற்றாய் ;
மறத் திறனாலே சொல்லுதி ; சொல் ஆய் மறை வல்லாய் !
அறத் திறனாலே எய்தினை அன்று ஓ அது ; நீயும்
புறத் திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ ?
3.7.180

3344
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் , நடை அல்லா
வாரம் கொண்டார் , மற்று ஒருவற்கு ஆய் மனை வாழும்
தாரம் கொண்டார் என்று இவர் தம்மைத் தருமம் தான்
ஈரும் கண்டாய் ! கண்டகர் உய்ந்தார் எவர் ? ஐயா !
3.7.181

3345
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் ;
இந்திரன் ஒப்பார் எத்தனையோர் தாம் இழிபு உற்றார் ?
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் ?
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் , மதி அற்றாய் .
3.7.182

3346
செய்தாயேனும் , தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது ; எய்தின் , இராமன் , உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் .
3.7.183

3347
என் தான் என்னே எண்ணலையோ ? நீ ; கரன் என்பான்
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா !
தன் தானைத் திண் தேரொடு மாளத் தனு ஒன்றால்
கொன்றான் , முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் .
3.7.184

3348
வெய்யோர் யாரே வீர விராதன் துணை வெய்யோர் ?
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் ; என்றால் ,
' உய்வார் யாரே ? நம்மின் ' எனக் கொண்டு , உணர்தோறும்
நையா நின்றேன் ; நீ இது , உரைத்து நலிவாயோ ?
3.7.185

3349
மாண்டார் மாண்டார் ; நீ இனி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா ; செய்திடின் உய்வான் விதி உண்டோ ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் ; அறம் நோனார்
ஈண்டார் ஈண்டார் ; நின்றவரெல்லாம் இலர் அன்றோ ?
3.7.186

3350
எம்பிக்கும் என் அன்னை தனக்கும் இறுதிக்கு ஓர்
அம்பு உய்க்கும் போர் வில்லி தனக்கும் அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்கின்றேன் ;
கம்பிக்கும் என் நெஞ்சு ; அவன் என்றே கவல்கின்றேன் .
3.7.187

3351
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையா ஆய்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் ! புலையாள் தன் கு
ஒன்றும் உன்னாய் ; என் உரை கொள்ளாய் ; உயர் செல்வத்து
' என்றும் என்றும் வைகுதி ; ஐயா ! இனி ' என்றான் .
3.7.188

3352
இராவணன் மாரீசனை முனிந்து கூறுதல் (3352-3353)
' கங்கை சடை வைத்தவனொடும் கயிலைவெற்பு ஓர்
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித் தோள் ,
இங்கு ஒர் மனிதற்கு எளிய என்றனை ' எனத் தன்
வெம் கண் எரியப் புருவம் மீது உற விடைத்தான் .
3.7.189

3353
' நிகழ்ந்ததை நினைத்திலை ; என் நெஞ்சின் நிலை அஞ்சாது
இகழ்ந்தனை ; எனக்கு இளைய நங்கை முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா !
புகழ்ந்தனை ; தனிப்பிழை ; பொறுத்தனென் இது ' என்றான் .
3.7.190

3354
மாரீசன் இராவணனிடம் மீட்டும் கூறல் (3354-3360)
தன்னை முனிவுற்ற தறுகண் தகவு இலோனைப்
பின்னை முனிவுற்றிடும் எனத் தவிர்தல் பேணான் ,
' உன்னை முனிவுற்று , உன குலத்தை முனிவுற்றாய் ,
என்னை முனிவுற்றிலை ; இது என் ? ' என இசைத்தான் .
3.7.191

3355
' எடுத்த மலையே நினையின் , ஈசன் இகல் வில்லாய்
வடித்த மலை , நீ இது வலித்தி
என வாரிப்
பிடித்து அமலை நாண் இடை பிணித்து , ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை , அண்டம் முகடு உற்ற மலையன்றோ ? '
3.7.192

3356
' யாதும் அறியாய் ; உரைகொளாய் ; இகல் இராமன்
கோதை புனையா முன் உயிர் கொள்ளை படும் அன்றே !
பேதை மதியால் இ•து ஒர் பெண் உருவம் என்றாய் !
சீதை உருவோ ? நிருதர் தீ வினை அது அன்றோ ?
3.7.193

3357
' உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா ,
நெஞ்சு பறை மோதும் ; அது நீ நினையகில்லாய் ;
அஞ்சும் எனது ஆர் உயிர் ; அறிந்து அருகு நின்றார்
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ ? '
3.7.194

3358
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றைத்
தேசம் முதல் முற்றும் ஒர் இமைப்பின் உயிர் தின்ப ,
கோசிகன் அளித்த கடவுள் படை , கொதிப்போடு
ஆசு இல , கணிப்பு இல , இராமன் அருள் நிற்ப .
3.7.195

3359
ஆயிரம் அடல் கை உடையானை மழுவாளால்
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிரில்லான்
மேய விறல் முற்றும் , வரி வெம் சிலையினோடும்
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ .
3.7.196

3360
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் ;
தீது உரை செய்தாய் ; இனைய செய்கை சிதைவு அன்றோ ?
மாதுலனும் ஆய் , மரபின் முந்தை உற வந்தேன் ,
ஈது உரைசெய்தேன் ; அதனை எந்தை ! தவிர்க என்றன் .
3.7.197

3361
இராவணன் மீட்டும் மாரீசனொடு சினந்து கூறுதல் (3361-3364)
என்ன உரை அத்தனையும் எத்தனையும் எண்ணிச்
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் ;
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ .
3.7.198

3362
திக்கயம் ஒளிப்ப , நிலை தேவர் கெட , வானம்
புக்கு , அவர் இருக்கை புகைவித்து , உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன்றன்
மக்கள் நலிகிற்பர் ? இது , நன்று ; வலி அன்று ஓ ?
3.7.199

3363
மூவுலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் ;
மேவலர் கிடைக்கின் இதன்மேல் இனியது உண்டோ ?
ஏவல் செயகிற்றி ; எனது ஆணை வழி எண்ணிக்
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ ?
3.7.200

3364
' மறுத்தனை எனப் பெறினும் , நின்னை வடி வாளால்
ஒறுத்து , மனம் உற்றது முடிப்பென் ; ஒழிகல்லேன் ;
வெறுப்பன கிளத்தல் உறும் இ தொழிலை விட்டு , என்
குறிப்பின் வழி நிற்றி , உயிர் கொண்டு உழலின் ' என்றான் .
3.7.201

3365
மீட்டும் மாரீசன் கூறல் (3365-3366)
அரக்கன் அஃது உரைத்தலோடும்
அறிந்தனன் , அடங்கி ,' நெஞ்சம்
தருக்கினர் கெடுவர் ' என்றல் ,
தத்துவம் நிலையிற்று , அன்றோ
' செருக்குநர்த் தீர்த்தும் என்பார்
தம்மின் ஆர் செருக்கர் ' என்னா
உருக்கிய செம்பின் உற்ற
நீர் என உரைக்கல் உற்றான் .
3.7.202

3366
' உன் வயின் உறுதி நோக்கி ,
உண்மையின் உணர்த்தினேன் ; மற்று
என் வயின் இறுதி நோக்கி
அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் ;
நன்மையும் தீமை அன்றே
நாசம் வந்து உற்றபோது ;
புன்மையின் நின்ற நீராய் !
செய்வது புகல்தி என்றான் .
3.7.203

3367
இராவணன் மாரீசனிடம் யான் சீதையை அடைய நீ உதவுக எனல்
என்றலும் எழுந்து புல்லி ,
ஏறிய வெகுளி நீங்கிக்
' குன்று எனக் குவிந்த தோளாய் !
மாரன் வேள் கொதிக்கும் அம்பால்
பொன்றலின் , இராமன் அம்பால்
பொன்றலே புகழ் உண்டு அன்றோ ;
தென்றலைப் பகைக்கச் செய்த
சீதையைத் தருதி ' என்றான் .
3.7.204

3368
மாரீசன் , வினவுதல்
ஆண்டையான் அனைய கூற ,'
அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீரத்
தண்டகம் புக்க காலைத்
தூண்டிய சரங்கள் பாயத்
துணைவர் பட்டு உருள அஞ்சி ,
மீண்ட யான் , சென்று செய்யும்
வினை என் கொல் ? விளம்புக ' என்றான் .
3.7.205

3369
இராவணன் சீதையை மாயையால் கவர்வோம் எனல்
ஆயவன் அனைய கூற ,
அரக்கர்கோன் ,' ஐய ! நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை
யான் கொலச் சமைந்து நின்றேன் ;
போய் ஐயா ! புணர்ப்பது என்னை ?
என்பது பொருந்திற்று ஒன்றோ ?
மாயையால் வஞ்சித்து அன்றோ
வௌவுதல் அவளை ' என்றான் .
3.7.206

3370
மாரீசன் சீதையை மறநெறியால் கவர்க எனல்
' புறம் அத்து இனி உரைப்பது என்னே ?
புரவலன் தேவி தன்னைத்
திறம் அத்து உழி அன்றி வஞ்சித்து
எய்துதல் சிறுமைத்து ஆகும் ;
அறம் அத்து உளது ஒக்கும் அன்றே !
அமர்த்தலை வென்று கொண்டு , உன்
மறம் துறை வளர்த்தி மன்ன !’
என்ன மாரீசன் சொன்னான் .
3.7.207

3371
இராவணன் சீதையை மாயையால் கவர்தலே தகும் எனல்
ஆனவன் உரைக்க , நக்க
அரக்கர் கோன் ,' அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ ?
என் தடக்கை வாள் தக்கது அன்றோ !
ஏனையர் இறக்கில் , தானும்
தமியளாய் , இறக்கும் அன்றே
மான் அவள் ; ஆதலாலே
மாயையின் வலித்தும் ' என்றான் .
3.7.208

3372
மாரீசன் நினைதல்
'தேவியைத் தீண்டா முன்னம் , இவன் தலை சரத்தின் சிந்திப்
போம் வகை புணர்ப்பன் ' என்று புந்தியால் புகல்கின்றேற்கும் ,
ஆம் வகை ஆயிற்று இல்லை ; ஆர் விதி விளைவை ஓர்வார் ?
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று
என்று எண்ணா .
3.7.209

3373
இராவணன் கூறியபடி செய்ய இசைந்து மாரீசன் போதல்
' என்ன மா மாயம் யான் மற்று
இயற்றுவது ? இயம்புக ' என்றான் ;
' பொன்னின் மான் ஆகிப் புக்கு , அ
பொன்னை மால் புணர்த்துக ' என்ன ,
' அன்னது செய்வென் ' என்னா மாரீசன் அமைந்து போனான் ;
மின்னும் வேல் அரக்கர் கோனும் , வேறு ஒரு நெறியில் போனான் .
3.7.210

3374
கவிக்கூற்று
மேல் நாள் அவர் வில் வலி கண்டமையால் ,
தானாக அமைந்து சமைந்திலன் ஆல் ;
' மான் ஆகுதி ' என்றவன் வாள் வலியால்
போனான் மனமும் செயலும் புகல்வாம் .
3.7.211

3375
மாரீசன் மனநிலை
வெம் சுற்றம் நினைந்து உகும் ; வீரரை வேறு
அஞ்சு உற்று மறுக்கு உறும் ; ஆழ் குழி நீர்
நஞ்சு உற்ற உழி மீனின் நடுக்கு உறுவான் ,
நெஞ்சு உற்றது ஒர் பெற்றி நினைப்பு அரிது ஆல் .
3.7.212

3376
மாரீசன் இராமனிருக்கும் வனத்தை அடைதல்
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து
எ காலும் நலிந்தும் ஒர் ஈறு பெறான் ,
முக்காலின் முடிந்திடுவான் முயல்வான்
புக்கான் அவ் இராகவன் வைகு புனம் .
3.7.213

3377
மாரீசன் மானுருவங்கொண்டு செல்லுதல்
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் மானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினன் ஆல்
நன் மான் அனையாள் தனை நாடுறுவான் .
3.7.214

3378
மாயமானைக் கலைமான் முதலியவை நெருங்குதல்
கலை மான் முதலாயின கண்ட எலாம் ,
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் ;
நிலை மா மன வஞ்சனை நேயம் இலா
விலை மாதர் கண் யாரும் விழுந்து என ஏ .
3.7.215

3379
மலர் கொய்து நின்ற சீதை மாயமானைக் கண்டு விரும்புதல் (3379-3381)
பொய் ஆம் என ஓது புறம் சொல் இன் ஆல்
நையா இடை நோவ நடந்திடுவாள்
வைதேவி தன் வால் வளை முன்கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் .
3.7.216

3380
உண்டாகிய கேடு உடையார் , துயில்வாய்
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனல் ஆம் வகை கண்டனள் ஆல் ;
பண்டு ஆரும் உறா இடர் பாடுறுவாள் .
3.7.217

3381
காணா இது கைதவம் என்று உணராள் ,
பேணாத நலம் கொடு பேணினள் ஆல் ;
வாணாள் அவ் இராவணன் மாளுதல் ஆல்
வீழ் நாளில் அறம் புவி மேவுதல் ஆல் .
3.7.218

3382
சீதை இராமனை அடைதல்
நெற்றிப் பிறையாள் , முனம் நின்றிடலும் ,
முற்றிப் பொழி காதலின் முந்துறுவாள் ,
பற்றித் தருக என்பென் எனப் பதையா
வெற்றிச் சிலை வீரனை மேவினள் ஆல் .
3.7.219

3383
சீதை பொன் மானின் இயல்பை இராமனிடம் கூறல்
' ஆணிப் பொனின் ஆகியது , ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது , திண் செவி கால்
மாணிக்கம் மயம் அத்து ஒரு மான் உளது ஆல் ;
காண தகும் ' என்றனள் கைதொழுவாள் .
3.7.220

3384
இராமன் பொன்மானைக் காண விரும்புதல்
இம்மான் இ நிலம் அத்து இன் இல் இல்லை எனா ,
எ மான் இது ? எனச் சிறிது எண்ணல் செயான் ,
செம் மான் அவள் சொல் கொடு தேம் மலரோன்
அம்மானும் அருத்தியன் ஆயினன் ஆல் .
3.7.221

3385
இலக்குவன் இராமனிடம் அது மாயமானென்றல் (3385-3386)
ஆண்டு அங்கு இளையோன் உரையாடினன் ஆல் ;
வேண்டும் எனல் ஆம் விளைவு அன்று இது எனாப்
' பூண் துஞ்சு பொலம் கொடி ! போய் , அது நாம்
காண்டும் ' என , வள்ளல் கருத்து உணர்வான் .
3.7.222

3386
காயம் கனகம் ; மணி கால் செவி வால் ;
பாயும் உருவோடு இது பண்பு எனலால்
மாயம் எனல் அன்றி மனக் கொள ஏ
ஏயும் இறை ஐயுறவு என்ற அளவே .
3.7.223

3387
இலக்குவன் கூறியதுகேட்டு , இராமன் இயம்பல் (3387-3389)
நில்லா உலகின் நிலை நேர்மையின் ஆல்
வல்லாரும் உணர்ந்திலர் ; மன் உயிர்தாம்
பல் ஆயிர கோடி பரந்து உள ஆல் ;
இல்லாதன இல்லை இளங்குமரா !
3.7.224

3388
என் என்று நினைந்தது ? இழைத்து உளம் , நம்
கன்னங்களின் வேறு உள காணுதும் ஆல் ;
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ !
3.7.225

3389
இராமலக்குவர் உரையாடலால் சீதை வருந்தல்
' முறையும் முடிவும் இல மொய் உயிர் ' என்று
இறைவன் இளையானொடு இயம்பினன் ஆல் ;
' பறையும் துணை , அன்னது பல் நெறி போய்
மறையும் ' என , ஏழை வருந்தினள் ஆல் .
3.7.226

3390
இராமன் சீதையொடு சென்று மானைக் காணுதல்
அனையவள் கருத்தை உன்னா ,
அஞ்சனக் குன்றம் அன்னான் ,
' புனை இழை காட்டு அது ' என்று
போயினான் ; பொறாத சிந்தைக்
கனை கழல் தம்பி பின்பு
சென்றனன் ; கடக்க ஒண்ணா
வினை என வந்து நின்ற மான் ,
எதிர் விழித்தது அன்று ஏ .
3.7.227

3391
இராமன் மானைக் கொண்டாடுதலும் அதற்குக் காரணமும்
நோக்கிய மானை நோக்கி ,
நுதி உடை மதியின் ஒன்றும்
தூக்கிலன் ,' நன்று இது ' என்றான் ;
அதன் பொருள் சொல்லல் ஆகும் ;
சேக்கையின் அரவு நீங்கிப்
பிறந்தது , தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ !
அன்னது பழுதுபோமோ ?
3.7.228

3392
இராமன் இலக்குவனிடம் மானின் இயல்பு பேசுதல் (3392-3393)
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ ! இதனை நோக்காய் !
தன் ஒக்கும் என்பது அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ ?
பல் நக்க தரளம் ஒக்கும் ; பசும் புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும் ; செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி .
3.7.229

3393
வரி சிலை மறை வலோனே ! மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் ?
உருகிய மனத்த ஆகி , ஊர்வன பறப்ப யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் .
3.7.230

3394
இலக்குவன் , இராமன்பால் , மானை விரும்பாது மீள்வதே நலம் எனல் ;
ஆரியன் அனைய கூற , அன்னது தன்னை நோக்கிச்
' சீரியது அன்று இது ' என்று , சிந்தையில் தெளிந்த தம்பி ,
' காரியம் என்னை ? ஈண்டுக் கண்டது கனகம் மான் ஏல் ,
வேரி அம் தெரியல் வீர ! மீள்வது ஏ மேன்மை ' என்றான் .
3.7.231

3395
சீதை மானைப் பிடித்துத் தரும்படி இராமனை வேண்டுதல்
அற்று அவன் பகராமுன்னம் ,
அழகனை அழகியாளும் ,
' கொற்றவன் மைந்த ; மற்றிக்
குழைவு உடை உழையை , வல்லை
பற்றினை தருதி ஆயின் ,
பதியிடை அவதி எய்தப்
பெற்ற உழி இனிது உண்டாடப்
பெறற்கு அருந்தகைமைத்து ' என்றாள் .
3.7.232

3396
இலக்குவன் இது மாயமான் எனல்
ஐய , நுண் மருங்குல் நங்கை
அஃது உரைசெய்ய , ஐயன்
' செய்வென் ' என்று அமைய , நோக்கித்
தெளிவு உடைச் செம்மல் செப்பும் ;
வெய்ய வல் அரக்கர் வஞ்சம்
விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல் !
காணுதி கடையின் ' என்றான் .
3.7.233

3397
இராமன் மானைப் பிடித்தல் தவறாகாது என்னுதல்
' மாயம் ஏல் மடியும் அன்றே வாளியின் ; மடிந்த போது ,
காய் சினத்தவரைக் கொன்று கடன் கழித்தோமும் ஆதும் ;
தூயது ஏல் பற்றிக் கோடும் ; சொல்லிய இரண்டின் ஒன்று
தீயதே ? உரைத்தி ' என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் .
3.7.234

3398
ஆராயாது வேட்டையாடுதல் தகாது என்று இலக்குவன் கூறுதல்
' பின் நின்றார் எனையர் என்றும்
உணர்கிலம் ; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் ;
யாவது ஈது என்றும் ஓராம் ;
முன் நின்ற முறையின் நின்றார்
முனிந்துள வேட்டம் முற்றல் ,
பொன் நின்ற வயிரத் தோளாய் !
புகழுடைத் தரம் அன்று ' என்றான் .
3.7.235

3399
இலக்குவன் கூறியதனை இராமன் மறுத்துரைத்தல்
பகை உடை அரக்கர் என்றும் , பலர் என்றும் , பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும் , பூண்ட விரதத்தை விடுதும் என்றால் ,
நகை உடைத்து ஆகும் அன்றே ; ஆதலின் , நன்று இது என்னாத்
தகை உடைத் தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் .
3.7.236

3400
இலக்குவன் யானே பிடித்து வருவேன் எனல்
' அடுத்தவும் எண்ணிச் செய்தல் ,
அண்ணலே ! அமைதி அன்று ஓ ;
விடுத்து இதன் பின் நின்றார்கள்
பலர் உளர் எனினும் , வில்லால்
தொடுத்த வெம் பகழி தூவித்
தொடர்ந்தனென் , விரைந்து சென்று
படுக்குவென் ; அது அன்று ஆயின் ,
பற்றினென் கொணர்வென் ' என்றான் .
3.7.237

3401
சீதை , இராமன்பால் நீயே பற்றி நல்கலை போலும் என்று சினந்து செல்லுதல்
ஆயிடை , அன்னம் அன்னாள் , அமுது உகுத்து அனைய செய்ய
வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி ,
' நாயக ! நீயே பற்றி நல்கலை போலும் ' என்னாச்
சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு , சீறிப் போனாள் .
3.7.238

3402
இராமன் மானைப் பிடிக்கச் செல்லுதல்
போனவள் புலவி நோக்கிப்
புரவலன் ,' பொலன் கொள் தாராய் !
மான் இது நானே பற்றி
வல்லையின் வருவென் அன்று ஏ ;
கான் இயல் மயில் அன்னாளைக்
காத்தனை இருத்தி ' என்னா ,
வேல் நகு சரமும் வில்லும்
வாங்கினன் விரையல் உற்றான் .
3.7.239

3403
இலக்குவன் இராமனிடம் இது' மாரீசன் மாயம் ' என்று கூறி , சீதை புக்க சாலையைக் காத்துநிற்றல்
' முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் ;
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனென் இதனை ; ஐயா !
இன்னமும் காண்டி ; வாழி ; ஏகு ' என இருகை கூப்பிப்
பொன் அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றான் .
3.7.240

3404
இராமன் பொன்மானைத் தொடரல்
மந்திரம் அத்து இளையோன் சொன்ன
வாய்மொழி மனத்துக் கொள்ளான் ,
சந்திரற்கு உவமை சான்ற
வதனத்தாள் சலத்தை நோக்கிச்
சிந்துரப் பவளச் செவ்வாய்
முறுவலன் , சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான் அம்
மானினைத் தொடரல் உற்றான் .
3.7.241

3405
மானின் விரைவு
மிதித்தது மெல்ல மெல்ல ,
வெறித்தது , வெருவி மீதில்
குதித்தது , செவியை நீட்டிக்
குரபதம் உரத்தைக் கூட்டி ,
உதித்து எழும் ஊதை உள்ளம்
என்று இவை உருவச் செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
காட்டுவது ஒத்தது அன்றே .
3.7.242

3406
இராமன் விரைவு
நீட்டினான் உலகம் மூன்றும்
நின்று எடுத்து அளந்த பாதம் ;
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா !
வேறும் ஓர் அண்டம் உண்டோ ?
ஓட்டினான் , தொடர்ந்த தன்னை
ஒழிவு அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி , அன்று அக்
கடுப்பை யார் கணிக்கற் பாலார் .
3.7.243

3407
மான் அணுகியும் விலகியும் செல்லுதல்
குன்றிடை இவரும் ; மேகக்
குழுவிடைக் குதிக்கும் ; கூடச்
சென்றிடின் அகலும் ; தாழின்
தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் ;
நின்றதே போல நீங்கும் ;
நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர்
மனம் எனப் போயிற்று அம்மா !
3.7.244

3408
இராமன் மாயமான் என்று தெளிதல்
' காயம் வேறு ஆகிச் செய்யும்
கருமம் வேறு ஆயிற்று அன்றே ;
ஏயுமே என்னின் முன்னம்
எண்ணமே இளவல் கு உண்டே ;
ஆயுமேல் உறுதல் செல்லாது ;
அரக்கரானவர்கள் செய்த
மாயமே ஆயதே , நான்
வருந்தியது ' என்றான் ; வள்ளல் .
3.7.245

3409

இராமன் நினைவறிந்து மாரீசன் தப்பியோட முயலுதல்
' பற்றுவான் இனி அல்லன் ; பகழியால்
செற்று வானில் செலுத்தல் உற்றான் ' என
மற்று அ மாய அரக்கன் மனம் கொளா
உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான் .
3.7.246

3410
இராமன் அம்பு தொடுத்தல்
அக் கணத்தினில் ஐயனும் , வெய்ய தன்
சக்கரத்தில் தகைவு அரிது ஆயது , ஓர்
செக்கர் மேனிப் பகழி செலுத்தினான் ,
' புக்க தேயம் புக்கு , இன் உயிர் போக்கு ' எனா .
3.7.247

3411
மாரீசன் கதறி விழுந்து மடிதல்
நெட்டு இலை சரம் , வஞ்சனை நெஞ்சு உறப்
பட்டது ; அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அ புறமும் புக ,
விட்டு அழைத்து , ஒரு குன்று என வீழ்ந்தனன் .
3.7.248

3412
இராமன் இலக்குவனைப் பாராட்டுதல்
வெய்யவன் தன் உருவொடு வீழ்தலும் ,
' செய்யது அன்று ' எனச் செப்பிய தம்பியை
' ஐயன் வல்லன் , என் ஆர் உயிர் வல்லன் , நான்
உய்ய வந்தவன் வல்லன் ' என்று உன்னினான் .
3.7.249

3413
உயிர்நீங்கி விழுந்த உடலை நோக்கிய இராமன் மாரீசனென்று தெளிதல்
ஆசை நீளத்து அரற்றினன் , வீழ்ந்த அந்
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் ,
மாசு இல் மாதவன் வேள்வியில் வந்த மா
ரீசனே இவன் என்பதும் தேறினான் .
3.7.250

3414
மாரீசன் குரலால் சீதை வருந்துவாள் என்று இராமன் இரங்குதல்
' புழைத்த வாளி உரம் புகப் புல்லியோன் ,
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு ; அது கேட்டு அயர் வெய்தும் ஆல்
மழைக் கண் ஏழை ' என்று உள்ளம் வருந்தினான் .
3.7.251

3415
இலக்குவன் சீதையைத் தேற்றுவானென்று இராமன் ஆறுதலடைதல்
' மாற்றம் இன்னது மாயம் , மாரீசன் என்று
ஏற்றம் முன் உணர்ந்தான் , இருந்தான் ; எனது
ஆற்றல் தேரும் அறிவினன் , ஆதலால்
தேற்றும் ஆல் , இளையோன் ' எனத் தேறினான் .
3.7.252

3416
இராமன் திரும்புதல்
' மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் ;
சூழ்வது ஓர் பொருள் உண்டு ; இவன் சொல்லினால்
மூள்வது ஏதம் ; அது முடியா முனம்
மீள்வதே நலன் ' என்று அவன் மீண்டனன் .
3.8.253

3.8 – Jatayus Tod

3.8 . சடாயு உயிர் நீத்த படலம் (3417 - 3641)

3417
சங்கு அடுத்த தனிக் கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் ;
கொங்கு அடுத்த மலர்க் குழல் கொம்பு அனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் .
3.8.1

சீதையின் துயர்நிலை (3418-3419)

3418
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய
செயிர் தலை கொண்ட சொல் செவி சேர்தலும் ,
குயில் தலம் அத்து இடை உற்றது ஒர் கொள்கையாள் ,
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் .
3.8.2

3419
'பிடித்து நல்கு , இவ் உழை ' எனப் பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு
என , மொய் அழல்
கொடிப் படிந்தது என , நெடுங் கோள் அரா
இடிக்கு உடைந்தது எனப் புரண்டு ஏங்கினாள் .
3.8.3

3420
சீதை இலக்குவனைச் சினந்து கூறியது
குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் ,
மற்றை வாள் அரக்கன் புரி மாயையால் ,
இற்று வீழ்ந்தனன் என்னவும் , என் அயல்
நிற்றியோ ? இளையோய் ! ஒரு நீ ?
என்றாள் .
3.8.4

3421
இலக்குவன் கூறும் அமைதி (3421-3427)
எண்மையார் ,' உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர் ' எனச் செப்பற் பாலரோ ?
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்
என
உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான் .
3.8.5

3422
ஏழுமே கடல் , உலகு ஏழும் ஏழுமே ,
சூழும் ஏழ் மலை , அவை தொடர்ந்த சூழல்வாய்
வாழும் ஏழையர் சிறுவலிக்கு , வாள் அமர் ,
தாழுமே இராகவன் தனிமை ? தையலீர் !

3.8.6

3423
பார் எனப் புனல் எனப் பவனம் வான் , கனல்
பேர் என அவை அவன் முனியில் பேருமால் ;
கார் எனக் கரிய அக் கமலக் கண்ணனை
யார் எனக் கருதி , இவ் இடரின் ஆழ்கின்றீர் ?

3.8.7

3424
இடைந்துபோய் நிசிசரற்கு , இராமன் , எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே ? அழைக்குமாம் எனின் ,
மிடைந்த பேர் அண்டங்கள் , மேல , கீழன ,
உடைந்து போம் ; அயன் முதல் உயிரும் வீயுமால்

3.8.8

3425
மாற்றம் என் பகர்வது ? மண்ணும் வானமும்
போற்ற , வன் திரிபுரம் எரித்த புங்கவன்
ஏற்றி நின்று எய்த வில் இற்றது , எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மை ஓ ?

3.8.9

3426
காவலன் , ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் ,
மூவகை உலகமும் முடியும் ; முந்து உள
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும் , வீவர் ; நல் அறமும் எஞ்சுமால் .

3.8.10

3427
பரக்க என் பகர்வது ? பகழி , பண்ணவன்
துரக்க , அங்கு அது படத் தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அவ் உரை எடுத்து அரற்றினான் ; அதற்கு
இரக்கம் உற்று இரங்கலிர் ; இருத்திர் ஈண்டு
என்றான் .
3.8.11

3428
சீதையின் கடுஞ்சொல் 3428 , 3429
என்று அவன் இயம்பலும் , எடுத்த சீற்றத்தள் ,
கொன்றன இன்னலள் , கொதிக்கும் உள்ளத்தள் ,
நின்ற நின் நிலை இது , நெறியிற்று அன்று எனா ,
வன் தறுகண்ணினள் , வயிர்த்துக் கூறுவாள் .
3.8.12

3429
ஒருபகல் பழகினார் உயிரை ஈவரால் ;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் , நீ
வெருவலை நின்றனை ; வேறு என் ? யான் இனி ,
எரி இடை கடிது வீழ்ந்து இறப்பென் , ஈண்டு
எனா .
3.8.13

3430
இலக்குவன் சீதையை விலக்கி வணங்குதல்
தாமரை வனம் அத்து இடை தாவும் அன்னம் போல் ,
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள் தனை
சேம வில் குமரனும் விலக்கிச் சீறடிப்
பூ முக நெடு நிலம் புல்லிச் சொல்லும் ஆல் .
3.8.14

3431
இலக்குவன் செல்ல உடன்படல்
துஞ்சுவது என்னை ? நீர் சொற்ற சொல்லை யான்
அஞ்சுவென் ; மறுக்கிலென் ; அவலம் தீர்ந்து இனி ,
இஞ்சு இரும் ; அடியனேன் ஏகுகின்றனென் ;
வெம் சினம் விதியினை வெல்ல வல்லம் ஓ ?

3.8.15

3432
இலக்குவன் போதல்
போகின்றேன் அடியனேன் ; பொருந்தி வந்து , கேடு
ஆகின்றது ; அரசன் தன் ஆணை நீர் மறுத்து ,
' ஏகு ' என்றீர் ; இருக்கின்றீர் தமியிர்
என்று , பின்
வேகின்ற சிந்தையான் விடைகொண்டு ஏகினான் .
3.8.16

3433
இலக்குவன் தனக்குள் விம்முதல் (3433-3435)
இருப்பனேல் , எரி இடை இறப்பரால் இவர் ;
பொருப்பு அனையான் இடை போவென் ஏ எனின் ,
அருப்பம் இல் கேடு வந்து அடையும் ; ஆருயிர்
விருப்பனேற்கு என் செயல் ?
என்று விம்மினான் .
3.8.17

3434
அறம்தனால் அழிவு இலது ஆகின் ஆக்கலாம் ;
இறந்து பாடு இவர்க்கு உறும் இதனின் , இவ் வழி
துறந்து போம் இதனையே துணிவென் ; தொல் வினை
பிறந்து போந்து இதுபடும் பேதையேன்
எனா .
3.8.18

3435
போவது புரிவல் யான் ; புகுந்தது உண்டு எனின் ,
காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ;
ஆவது காக்கும்
என்று அறிவித்து , அவ் வழித்
தேவர் செய் தவம் அத்து இன் ஆல் செம்மல் ஏகினான் .
3.8.19

3436
இராவணன் தவவேடம் தாங்கிச் செல்லுதல் (3436-3439)
இளையவன் ஏகலும் , இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன் , வஞ்சம் முற்றுவான் ,
முளை வரித் தண்டு ஒரு மூன்றும் , முப்பகைத்
தளை அரி தவத்தவர் வடிவும் தாங்கினான் .
3.8.20

3437
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் ,
சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன் ,
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என ,
வீணையின் இசைபட வேதம் பாடுவான் .
3.8.21

3438
பூப் பொதி அவிழ்ந்தன நடையன் ; பூதலம்
தீப் பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் ;
காப்பு அரும் நடுக்கு உறும் காலன் ; கையினன் ;
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் .
3.8.22

3439
தாமரை மணிதொடர் தவத்தின் மாலையன் ,
ஆமையின் இருக்கையன் , வளைந்த ஆக்கையன் ,
நாம நூல் மார்பினன் , நணுகினான் அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்வாய் .
3.8.23

3440
இராவணன் இப்பன்னசாலையில் இருப்பது யார் எனல்
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் ,
நா முதல் குழறிட நடுங்கு சொல்லினான் ,
யாவிர் இவ் இருக்கையுள் இருந்துளீர் ? என்றான்
தேவரும் மருள் கொளத் தெரிந்த மேனியான் .
3.8.24

3441
சீதை வரவேற்றல்
தோகையும் இவ்வழித் தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்
என்னும் சிந்தையாள் ,
பாகு இயல் கிளவி ஓர் , பவளக் கொம்பர் போன்று ,
ஏகுமின் ஈண்டு என , எதிர் வந்து எய்தினாள் .
3.8.25

3442
சீதையைக் கண்ட இராவணன் மனநிலை (3442-3448)
வெற்பு இடை மதம் என வியர்க்கும் மேனியன் ,
அற்பு இன் திரை புரள் ஆசை வேலையன் ,
பொற்பினுக்கு அணியினைப் புகழின் சேக்கையைக்
கற்பினுக்கு அரசியைக் கண்ணில் நோக்கினான் .
3.8.26

3443
3.8.26.
தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் , உம்பரின்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் ,
ஏங்கினன் மனநிலை யாது என்று உன்னுவாம் ?
வீங்கின ; மெலிந்தன ; வீரத் தோள்களே .
3.8.27

3444
புன மயில் சாயலின் எழிலில் , பூநறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின்
இனம் எனக் களித்துளது என்பது என் ? அவன்
மனம் எனக் களித்தது , கண்ணின் மாலையே .
3.8.28

3445
சேம் இதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண்
மேயவள் மணி நிற மேனி காணுதற்கு ,
ஏயும் ஏ இருபது ? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை !
என்று அல்லல் எய்தினான் .
3.8.29

3446
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே ?
நிரை வளை முன்கை இந் நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு
என்று உன்னினான் .
3.8.30

3447
தேவரும் , அவுணரும் , தேவி மாரொடும்
கூவல் செய் தொழிலினர் , குடிமை செய்திட ,
மூவுலகமும் இவர் முறையின் ஆள , யான்
ஏவல் செய்து உய்குவன் , இனி
என்று உன்னினான் .
3.8.31

3448
உளைவு உறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் ,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் ?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பன் என் அரசு
என்று எண்ணினான் .
3.8.32

3449
சீதை இராவணனை வரவேற்று முகமன் செய்தல் (3449-3450)
ஆண்டையான் அனையன உன்னி , ஆசை மேல்
மூண்டு எழு சிந்தனை , முறை இலோன் தனை
காண்டலும் , கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் ,
ஈண்டு எழுந்து அருளும் என்று , இனிய கூறினாள் .
3.8.33

3450
ஏத்தினள் ; எய்தலும் , இருத்திர் ஈண்டு என ,
வேத்திரம் அத்து ஆசனம் விதியின் நல்கினாள் ;
மாத் திரி தண்டு அயல் வைத்த வஞ்சனும் ,
பூத் தொடர் சாலையின் இருந்த போழ்தினே .
3.8.34

3451
இராவணனை யறிந்து அஃறிணைப் பொருள்கள் அஞ்சுதல்
நடுங்கின மலைகளும் மரனும் ; நா அவிந்து
அடங்கின பறவையும் ; விலங்கும் அஞ்சின ;
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் ; பாதகக்
கடுந் தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே .
3.8.35

3452
இராவணன் வினாவும் சீதை விடையும் (3452-3453)
இருந்தவன் , யாவது இவ் இருக்கை ? இங்கு உறை
இருந்தவன் யாவன் ? நீர் யாரை ?
என்றலும் ,
விருந்தினர் ; இவ் வழி விரகு இலார் எனப்
பெருந்தடங் கண்ணவள் பேசல் மேயினாள் .
3.8.36

3453
தயரதன் தொல் குலத் தலைவன் , தம்பியோடு
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் ,
அயர்வு இலன் , இவ் வழி உறையும் ; அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர் , பெருமையீர் !
என்றாள் .
3.8.37

3454
இராவணன் விடையும் வினாவும்
கேட்டனென் , கண்டிலென் ; கெழுவு கங்கை நீர்
நாடு இடை ஒருமுறை நண்ணினேன் ; மலர்
வாள் தடங் கண்ணின் நீர் யாவர் மா மகள் ?
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் !
என்றான் .
3.8.38

3455
சீதையின் விடை
அனக மா நெறி படர் அடிகள் ! நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள் ; பெயர் சனகி ; காகுத்தன்
மனைவி யான்
என்றனள் , மறு இல் கற்பினாள் .
3.8.39

3456
சீதையின் வினா
அ வழி அனையன உரைத்த ஆய் இழை ,
வெம் வழி வருந்தினிர் , விளைந்த மூப்பினிர் ,
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் ,
எவ் வழி நின்றும் இங்கு எய்தினீர் ?
என்றாள் .
3.8.40

3457
இராவணத் துறவியின் சொல் (3457-3466)
இந்திரற்கு இந்திரன் ; எழுதல் ஆகலாச்
சுந்தரன் ; நான்முகன் மரபில் தோன்றினான் ;
அந்தரம் அத்து ஓடு உம் எவ் உலகும் ஆள்கின்றான் ;
மந்திரம் அத்து அருமறை வைகும் நாவினான் .

3.8.41

3458
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால்வரை
ஊசி வேர் ஒடு உம் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் ;
ஆசைகள் சுமந்த பேர் ஆற்றல் ஆனைகள்
பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான் .

3.8.42

3459
நிற்பவர் , கடை தலை நிறைந்து தேவரே ;
சொல் படும் மற்றவன் பெருமை சொல்லுங்கால் ;
கற்பகம் முதலிய நிதியம் கையன ;
பொற்பு அகம் , மான நீர் இலங்கைப் பொன் நகர் .

3.8.43

3460
மேனகை திலோத்தமை முதல ஏழையர் ,
வானகம் துறந்து வந்து , அவன்தன் மாட்சியால் ,
ஊனம் இல் அடைப்பை , கால் வருடல் , ஒண் செருப்பு
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே .

3.8.44

3461
சந்திரன் , இரவி என்பவர்கள்தாம் , அவன்
சிந்தனை வழி நிலை திரிவர் ; தேசு உடை
இந்திரன் முதலிய அமரர் , ஈண்டு அவன்
கம் தடு கோயிலின் காவலாளரே .

3.8.45

3462
பொன் நகரத்தினும் ; பொலம் கொள் நாகர் தம்
தொல் நகரத்தினும் , தொடர்ந்த மா நிலம் அத்து
எந் நகரத்தினும் இனிய , ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன .

3.8.46

3463
தாள் உடை மலர் உளான் தந்த , அந்தம் இல்
நாள் உடை வாழ்க்கையன் ; நாரி பாகத்தன்
வாள் உடைத் தட கையன் ; வாரி வைத்த வெங்
கோள் உடைச் சிறையினன் ; குணங்கள் மேன்மையான் .

3.8.47

3464
வெம்மை தீர் ஒழுக்கினன் ; விரிந்த கேள்வியன் ;
செம்மையோன் ; மன்மதன் திகைக்கும் செவ்வியன் ;
எம்மையோர் அனைவரும்' இறைவர் ' என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் .

3.8.48

3465
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனைப் பலர் , அவன் தனது அருளின் இச்சையோர் ;
நினைத்து அவர் உருகவும் , உதவ நேர்கிலன் ;
மனக்கு இனியாள் ஒரு மாதர் நாடுவான் .

3.8.49

3466
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அந்நகர் ,
வேண்டி , யான் சில் பகல் உறைதல் மேயினேன் ;
நீண்டனென் இருந்து , அவற் பிரியும் நெஞ்சு இலேன் ,
மீண்டனென்
என்றனன் , வினையம் உன்னுவான் .
3.8.50

3467
சீதையின் வினா (3467-3468)
வேதமும் , வேதியர் அருளும் வெஃகலாச்
சேதனை மன் உயிர் தின்னும் தீ வினை
பாதக அரக்கர் தம் பதியின் வைகுதற்கு
ஏது என் ? உடலமும் மிகை என்று எண்ணுவீர் !

3.8.51

3468
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் ;
புனல் திரு நாடு இடை புனிதர் ஊர்புக
நினைத்திலிர் ; அறநெறி நினைக்கிலாதவர்
இனத்திடை வைகினிர் ; என் செய்தீர் !
என்றாள் .
3.8.52

3469
இராவணத் துறவி நிருதரே நல்லவர் எனல்
மங்கை அஃது உரைத்தல் கேட்ட
வரம்பு இலான் , மறுவில் தீர்ந்தார் ,
வெம் கண் வாள் அரக்கர் என்ன
வெருவலம் ; மெய்ம்மை நோக்கின் ,
திங்கள் வாள் முகத்தினாய் ! அத்
தேவரில் தீயர் அல்லர் ;
எங்கள் போலியர்க்கு நல்லார்
நிருதரே போலும்
என்றான் .
3.8.53

3470
சீதை தீயரைச் சேரின் நல்லவரும் தீயராவர் எனல்
சேயிழை , அன்ன சொல்லத்
தீயவர்ச் சேர்தல் செய்தால்
தூயவர் அல்லர் , சொல்லின் ,
தொல் நெறி தொடர்ந்தோர்
என்றாள் ;
மாய வல் அரக்கர் வல்லர் ,
வேண்டு உரு வரிக்க என்பது ,
ஆயவள் அறிதல் தேற்றாள் ,
ஆகலின் அயல் ஒன்று எண்ணாள் .
3.8.54

3471
இராவணன் வல்லோன் வழியது உலகம் எனல்
அயிர்த்தனள் ஆகும் என்று ,
ஓர் ஐயுறவு அகத்துக் கொண்டான் ;
பெயர்த்து , அது துடைக்க எண்ணிப்
பிறிது உற பேசலுற்றான் ;
மயக்கு அறும் உலகம் மூன்றின்
வாழ்பவர்க்கு , அனைய வல்லோர்
இயற்கையின் நிற்பது அல்லால் ,
இயற்றலாம் நெறி என் ?
என்றான் .
3.8.55

3472
சீதை இராமனால் அரக்கர் அழிவர் எனல்
திறம் தெரி வஞ்சன் , அ சொல்
செப்பலும் , செப்பம் மிக்காள் ,
அறம் தரு வள்ளல் , ஈண்டு இங்கு
அருந்தவம் முயலும் நாளுள் ,
அறம் தலைதிரிந்த வாழ்க்கை
அரக்கர் தம் வருக்கத் தோடும்
இறந்தனர் முடிவர் ; பின்னர்
இடர் இலை உலகம்
என்றாள் .
3.8.56

3473
இராவணன் மனிதர் அரக்கரை வெல்லார் எனல்
மானவள் உரைத்தலோடும் ,
மானிடர் அரக்கர் தம்மை ,
மீன் என மிளிரும் கண்ணாய் !
வேர் அற வெல்வர் என்னின் ,
யானையின் இனம் அத்து ஐ எல்லாம்
இள முயல் கொல்லும் ; பின்னும் ,
கூன் உகிர் மடங்கல் ஏற்றைக்
குருளை மான் கொல்லும்
என்றான் .
3.8.57

3474
அழிந்த அரக்கர்களைக் கூறி இராமன் ஆற்றலைப் புகழ்தல் (3474-3475)
மின் திரண்டு அனைய பங்கி
விராதனும் , வெகுளி பொங்கக்
கன்றிய மனத்து வென்றிக்
கரன் முதல் கணக்கிலோரும்
பொன்றிய பூசல் ஒன்றும்
கேட்டிலிர் போலும்
என்றாள் ,
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி ,
மழை கண் நீர் அருவி சோர்வாள் .
3.8.58

3475
வாள் அரி வள்ளல் , சொன்ன
மான் கணம் நிருதர் ; அன்னோர் ,
கேள் ஒடு மடியு மாறும் ,
வானவர் கிளரு மாறும் ,
நாளையே காண்டிர் அன்றே ;
நவை இலிர் , உணர்கிலீரோ ?
மீள் அரும் தருமம் தன்னை
வெல்லுமோ பாவம் ?
என்றாள் .
3.8.59

3476
இராவணன் சீற்றமும் மாயவேடங் கலைதலும் (3476-3480)
தேன் இடை அமுது அளாய
அன்ன மென் சில சொல் மாலை ,
தானுடைச் செவிகள் ஊடு
தவழ் உற தளிர்த்து வீங்கும்
ஊனுடை உடம்பினானும் ,
உருகெழு மானம் ஊன்ற ,
' மானிடர் , வலியர் ' என்ற
மாற்றத்தால் சீற்றம் வைத்தான் .
3.8.60

3477
சீறினன் , உரை செய்வான் , அச்
சிறு வலிப் புல்லியோர்கட்கு
ஈறு , ஒரு மனிதன் செய்தான் ,
என்று எடுத்து இயம்பினாயேல் ,
தேறுதி நாளையே ; அவ்
இருபது திண்தோள் வாடை
வீறிய பொழுது , பூளை
வீ என வீவன் அன்றே ?

3.8.61

3478
மேருவைப் பறிக்க வேண்டின் ,
விண்ணினை இடிக்க வேண்டின் ,
நீரினைக் கலக்க வேண்டின் ,
நெருப்பினை அவிக்க வேண்டின் ,
பாரினை எடுக்க வேண்டின்
பல வினைச் சில சொல் ஏழாய் !
யார் எனக் கருதிச் சொன்னாய் !
இராவணற்கு அரிது என் ?
என்றான் .
3.8.62

3479
அரண் தரு திரள் தோள் சால
உள எனின் , ஆற்றல் உண்டோ ?
கரண்ட நீர் இலங்கை வேந்தைச்
சிறை வைத்த கழல் கால் வீரன்
திரண்ட தோள் வனத்தை எல்லாம் ,
சிறியது ஓர் பருவம் தன்னில் ,
இரண்டு தோள் ஒருவன் அன்றோ
மழுவினால் எறிந்தான் ?
என்றாள் .
3.8.63

3480
என்று அவள் உரைத்தலோடும் ,
எரிந்தன நயனம் ; திக்கில்
சென்றன திரள் தோள் ; வானம்
தீண்டின மகுடம் ; திண் கை
ஒன்று ஒடு ஒன்று அடித்த ; மேகத்து
உரும் என எயிற்றின் ஓளி
மென்றன ; வெகுளி பொங்க ,
விட்டது மாயம் வேடம் .
3.8.64

3481
சீதையின் ஐயமும் இராவணன் வடிவமும்
இருவினை துறந்த மேலோர்
அல்லன் கொல் இவன் ?
என்று எண்ணி ,
அரிவையும் ஐயம் எய்தா ,
ஆர் இவன்தான் ? என்று ஒன்றும் ,
தெரிவு அரு நிலையளாகத்
தீ விடத்து அரவம் தானே
உரு கெழு சீற்றம் பொங்கிப்
பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் .
3.8.65

3482
சீதையின் அச்சம்
ஆற்ற வெம் துயரத்து அன்னாள்
ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் ?
எதிர் எடுத்து இயம்பலாகும்
மாற்றம் ஒன்று இல்லை ; செய்யும்
வினை இல்லை ; வரிக்கல் ஆகாக்
கூற்றம் வந்து உற்ற காலத்து
உயிர் எனக் குலைவு கொண்டாள் .
3.8.66

3483
இராவணன் சீதையை அச்சுறுத்தல்
விண்ணவர் ஏவல் செய்ய ,
வென்ற என் வீரம் பாராய் ;
மண் இடை புழுவின் வாழும்
மானிடர் வலியர் என்றாய் ;
பெண் எனப் பிழைத்தாய் அல்லை ;
உன்னை யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் ; எண்ணில் , பின்னை
என் உயிர் இழப்பென்
என்றான் .
3.8.67

3484
இராவணன் சீதையை நயந்து வேண்டுதல்
குலைவு உறல் , அன்னம் !
முன்னம் யாரையும் கும்பிடா என்
தலை மிசை மகுடம் என்னத்
தனி தனி இனிது தாங்கி ,
அலகு இல் பூண் அரம்பை மாதர்
அடி முறை ஏவல் செய்ய
உலகம் ஈரேழும் ஆளும்
செல்வத்துள் உறைதி
என்றான் .
3.8.68

3485
சீதையின் சினச்சொல் (3485-86)
செவிகளைத் தளிர்க் கையாலே
சிக்குறச் சேமம் செய்தாள் ;
கவினும் வெஞ்சிலைக் கை வென்றிக்
காகுத்தன் கற்பினேனை ,
புவி இடை ஒழுக்கம் நோக்காய்
பொங்கு எரிப் புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டது என்ன ,
என் சொனாய் அரக்க ?
என்னா .
3.8.69

3486
புல் நுனை நீரின் நொய்தாப்
போதலே புரிந்து நின்ற
இன் உயிர் இழத்தல் அஞ்சி ,
இல் பிறப்பு அழிதல் உண்டே ?
மின் உயிர்த்து உருமின் சீறும்
வெம் கணை விரவாமுன்னம் ,
உன் உயிர்க்கு உறுதி நோக்கின் ,
ஒளித்தியால் ஓடி
என்றாள் .
3.8.70

3487
இராவணன் மறுமொழி (3487-3488)
என்று அவள் உரைக்க , நின்ற
இரக்கம் இல் அரக்கன் , எய்த
உன் துணைக் கணவன் அம்பு ,
அவ் உயர் திசை சுமந்த ஓங்கல்
வன் திறல் மருப்பின் ஆற்றல்
மடித்த என் மார்பில் வந்தால் ,
குன்று இடை தொடுத்து விட்ட
பூங்கணை கொல் அது
என்றான் .
3.8.71

3488
அணங்கினுக்கு அணங்கு அனாய் ! நின்
ஆசை நோய் அகத்துப் பொங்க ,
உணங்கிய உடம்பினேனுக்கு
உயிரினை உதவி , உம்பர்க்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம்
பெரும் பதம் கைக்கொள்
என்னா ,
வணங்கினன் -- உலகம் தாங்கும்
மலையினும் வலிய தோளான் .
3.8.72

3489
சீதையின் ஏக்கம்
தறை வாய் அவன் வந்து அடி தாழுதலும் ,
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் ,
இறைவா ! இளையோய் ! என ஏங்கினளால் ,
பொறைதான் உருவானது ஒர் பொற்பு உடையாள் .
3.8.73

இராவணன் சீதையைப் பன்னசாலையோடு எடுத்தல் (3490-3491)

3490
ஆண்டு ஆ இடை , தீயவன் ஆய் இழையை
தீண்டான் , அயன் மேல் உரை சிந்தைசெயாத்
தூண் தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் ,
கீண்டான் நிலம் ; யோசனை கீழொடு மேல் .
3.8.74

3491
கொண்டான் உயர் தேர் மிசை ; கோல் வளையாள்
கண்டாள் , தனது ஆர் உயிர் கண்டிலள் ஆல் ,
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் ;
விண் தான் வழியா எழுவான் விரைவான் .
3.8.75

3492
சீதையின் அரற்றல் (3492-3497)
விடு தேர் என , வெம் கனல் வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள் , குலைவாள் , அயர்வாள் ,
துடியா எழுவாள் , துயரால் அழுவாள் ,
கடிதா அறனே ! இது கா எனுமால் .
3.8.76

3493
மலையே ! மரனே ! மயிலே ! குயிலே !
கலையே ! பிணையே ! களிறே ! பிடியே !
நிலையா உயிரேன் நிலை தேறினிர் போய் ,
உலையா வலியார் உழை நீர் உரையீர் !

3.8.77

3494
செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர் ;
மஞ்சே ! பொழிலே ! வன தேவதைகாள் !
' அஞ்சேல் ' என நல்குதிரேல் , அடியேன்
உஞ்சால் , அதுதான் இழிவோ ? உரையீர் !

3.8.78

3495
நிருத ஆதியர் வேர் அற , நீல் முகில் போல்
சர தாரைகள் வீசினிர் , சார்கிலிர் ஓ ?
வரதா ! இளையோய் ! மறு ஏதும் இலாப்
பரதா ! இளையோய் ! பழி பூணுதிர் ஓ ?

3.8.79

3496
கோதாவரியே ! குளிர்வாய் , குழைவாய் ;
மாதா அனையாய் மனனே தெளிவாய் ;
ஓதாது உணர்வார் உழை ஓடினை போய் ,
நீதான் வினையேன் நிலை சொல்லலை ஓ ?

3.8.80

3497
முந்தும் சுனைகாள் ! முழை வாழ் அரிகாள் !
இந்தந் நிலன் ஓடு உம் எடுத்த கை நால்
ஐந்தும் , தலை பத்தும் , அலைந்து உலையச்
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் .

3.8.81

3498
இராவணன் சிரித்தல்
என்று இன்ன பலவும் பன்னி
இரியல் உற்று அரற்றுவாளைப்
பொன் துன்னு புணர் மென் கொங்கைப்
பொலம் குழாய் ! போரில் என்னைக்
கொன்று , உன்னை மீட்பர் கொல் ,
அம் மானிடர் ? கொள்க
என்னா ,
வன் திண்கை எறிந்து நக்கான் ,
வாழ்க்கை நாள் வறிது வீழ்ப்பான் .
3.8.82

3499
சீதையின் சினச் சொற்கள் (3499-3500)
வாக்கினால் அன்னான் சொல்ல ,
மாயையால் வஞ்ச மான் ஒன்று
ஆக்கினாய் ; ஆக்கி , உன்னை
ஆருயிர் உண்ணும் கூற்றைப்
போக்கினாய் ; புகுந்து , கொண்டு
போகின்றாய் ; பொருது நின்னைக்
காக்குமா காண்டி ஆயின் ,
கடவல் உன் தேரை
என்றாள் .
3.8.83

3500
மீட்டும் ஒன்று உரை செய்வாள் ; நீ
வீரனே ! விரைவில் மற்று உன்
கூட்டராம் அரக்கர் தம்மை கொன்று ,
உங்கை கொங்கை மூக்கும்
வாட்டினார் வனத்தில் உள்ளார் ,
மானிடர்
என்ற வார்த்தை
கேட்டும் , இம் மாயம் செய்தது
அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ ?
3.8.84

3501
இராவணன் மறுமொழி
மொழிதரும் அளவில் , நங்கை !
கேள் இது ; முரண் இல் யாக்கை
இழி தரு மனிதரோடே
யான் செரு ஏற்பல் என்றால் ,
விழி தரும் நெற்றியான் தன்
வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப்
பழி தரும் ; அதனின் சாலப்
பயன் தரும் , வஞ்சம்
என்றான் .
3.8.85

3502
சீதையின் பழிப்புரை
பாவையும் அதனைக் கேளாத்
தம் குலப் பகைஞர் தம்பால்
போவது குற்றம் ! வாளின்
பொருவது நாணம் போலாம் !
ஆவது , கற்பினாரை
வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் !
ஏவம் என் ? பழிதான் என்னே ?
இரக்கம் இல் அரக்கர்க்கு
என்றாள் .
3.8.86

3503
சடாயு எதிர்த்தல் (3503-3509)
என்னும் அவ் வேலை இன் கண் ,
எங்கு அடா போவது ? எங்கே ?
நில் ! நில் !
என்று இடித்த சொல்லன் ,
நெருப்பு இடை பரப்பும் கண்ணன் ,
மின் என விளங்கும் வீரத்
துண்டத்தன் , மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானின்
வருவதே போலும் மெய்யான் .
3.8.87

3504
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து ,
எழுந்து , ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர , விண்ணில்
புடைப்பு உற கிளர்ந்து பொங்கி ,
ஆழியும் உலகும் ஒன்றாய்
அழிதர , முழுதும் வீசும்
ஊழி வெம் காற்று இது என்ன ,
இரு சிறை ஊதை மோத .
3.8.88

3505
சாக வன் தலையொடு மரமும் தாழ , மேல்
மேகமும் விண்ணின் மீச் செல்ல , மீமிசை
மாக வெம் கலுழன் ஆம் ; வருகின்றான் என ,
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே .
3.8.89

3506
யானையும் , யாளியும் , முதல யாவையும் ,
கான் நெடு மரம் அத்து ஒடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து , இரு சிறை வீச்சின் ஏறலால் ,
வானமும் கானமும் மாறு கொள்ளவே .
3.8.90

3507
உத்தமன் தேவியை , உலகொடு ஓங்கு தேர்
வைத்தனை ஏகுவது எங்கு ? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு
எனாப்
பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான் .
3.8.91

3508
வந்தனன் எருவையின் மன்னன் ; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் ஈட்டினால் ,
சிந்துரக் கால் சிரம் செக்கர் மூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான் .
3.8.92

3509
ஆண்டு உற்று அவ் அணங்கினை அஞ்சல் எனாத்
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் ,
மூண்டு உற்று , எழு வெம் கதம் முற்றிலனாய் ,
மீண்டுற்று , உரையாடலை மேயினன் ஆல் .
3.8.93

3510
சடாயுவின் அறிவுரை (3510-3518)
கெட்டாய் ! கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் ; இது என்னை தொடங்கினை ? நீ
பட்டாய் எனவே கொடு , பத்தினியை
விட்டு ஏகுதியால் ! விளிகின்றிலை ஆல் .

3.8.94

3511
பேதாய் ! பிழை செய்தனை ; பேர் உலகின்
மாதா அனையாளை மனம் கொடு , நீ
யாது ஆக நினைத்தனை ? எண்ணம் இலாய் !
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ ?

3.8.95

3512
உய்யாமல் மலைந்து , உமர் ஆருயிரை
மெய்யாக இராமன் விருந்து இட ஏ ,
கை ஆர முகந்து கொடு, அந்தகனார் ,
ஐயா ! புதிது உண்டது அறிந்திலையோ ?

3.8.96

3513
கொடு வெம் கரி கொல்லிய வந்ததன் மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே !
அடும் என்பது உணர்ந்திலை , ஆயினும் , வன்
கடு உண்டு , உயிரின் நிலை காணுதியோ ?

3.8.97

3514
எல்லா உலகங்களும் , இந்திரனும் ,
அல்லாதவர் மூவரும் , அந்தகனும் ,
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் ,
வில்லாளரை வெல்லும் மிடுக்கு உளரோ ?

3.8.98

3515
இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்
வெம்மைத் தொழில் , இங்கு , இதன்மேல் இலை ஆல் ;
அம்மைக்கு , அரு மா நரகம் தரும் ஆல் ;
எம்மைக்கு இதமாக இது எண்ணினை , நீ ?

3.8.98

3516
முத் தேவரில் மூல முதல் பொருள் ஆம்
அ தேவர் இம் மானிடர் ; ஆதலினால் ,
எ தேவர் ஒடு எண்ணுவது ? எண்ணம் இலாய் !
பித்து ஏறினை ஆதல் பிழைத்தனை ஆல் .

3.8.100

3517
புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் ,
உரம் பெற்றன ஆவன , உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும் தனையே .

3.8.101

3518
வான் ஆள்பவன் மைந்தன் , வளைத்த விலான் ,
தானே வரின் , நின்று தடுப்பு அரிதால் ;
நானே அவண் உய்ப்பென் இந் நல் நுதல் ஐ ;
போ , நீ கடிது
என்று புகன்றிடலும் .
3.8.102

3519
இராவணன் மறுப்புரை (3519-3520)
கேட்டான் நிருதர்க்கு இறை ; கேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உக , வாய் மடியா ,
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை
காட்டாய் கடிது
என்று , கனன்று உரையா .
3.8.103

3520
வரும் புண்டரம் ! வாளி உன் மார்பு உருவிப்
பெரும் புண் திறவா வகை பேருதி நீ ;
இரும்பு உண்ட நிர் மீள்கினும் என் உழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் ; காணுதியால் .

3.8.104

3521
அஞ்சிய சீதையைச் சடாயு அஞ்சல் என்றது (3521-3522)
என்னும் அளவில் , பயம் முன்னின் இரட்டி எய்த ,
அன்னம் அயர்கின்றது நோக்கி , அரக்கன் யாக்கை
சின்னம் உறும் இ பொழுது ஏ ;' சிலை ஏந்தி , நங்கள்
மன்னன் மகன் வந்திலன் ' என்று வருந்தல் ; அன்னை !

3.8.105

3522
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை கண் வீழத்
தத்துற்று அயரேல் ; தலை , தால பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டு , இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி
என்றான் .
3.8.106

3523
சடாயுவின் போர் (3523-43)
இடிப்பு ஒத்த முழக்கின் , இரும் சிறை வீசி எற்றி ,
முடிப் பத்திகளைப் படி இட்டு , முழங்கு துண்டம்
கடிப்பக் கடிது உற்று அவன் காண்தகும் நீண்ட வீணைக்
கொடிப் பற்றி ஒடித்து , உயர் வானவர் ஆசி கொண்டான் .
3.8.107

3524
அ காலை , அரக்கன் , அரக்கு உருக்கு அன்ன கண்ணன் ,
எ காலம் உம் , இன்னது ஒர் ஈடு அழிவு உற்றிலாதான்
நக்கான் , உலகு ஏழும் நடுங்கிட ; நாகம் அன்ன
கைக் கார்முகத்தோடு கடைப் புருவம் குனித்தான் .
3.8.108

3525
சண்டப் பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்டச் சிறகால் அடித்தான் சில ; வள் உகிரால்
கண்டப் படுத்தான் சில ; காலனும் காண உட்கும்
துண்டப் படையால் , சிலை துண்ட துண்டங்கள் கண்டான் .
3.8.109

3526
மீட்டும் அணுகா , நெடு வெங்கண் அநந்த நாகம்
வாட்டும் கலுழன் என , வன் தலை பத்தின் மீதும்
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் , சேம வில் கால்
கோட்டும் அளவில் , மணிக் குண்டலம் கொண்டு எழுந்தான் .
3.8.110

3527
எழுந்தான் தட மார்பினில் , ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிடப் பெய்து , எடுத்து ஆர்த்து , அரக்கன்
பொழிந்தான் , புகர் வாளிகள் மீளவும் ;' போர்ச் சடாயு
விழுந்தான் ' என , அஞ்சினர் , விண்ணவர் வெய்து உயிர்த்தார் .
3.8.111

3528
புண்ணில் புது நீர் பொழியப் பொலி புள்ளின் வேந்தன் ,
மண்ணில் , கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணிக் கடல் என்று நுகர்ந்தது கான்று , மீள
விண்ணில் பொலிகின்றது ஒர் வெள் நிறம் மேகம் ஒத்தான் .
3.8.112

3529
ஒத்தான் உடனே உயிர்த்தான் ; உருத்தான் ; அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி , மூக்கால்
கொத்தா , நகத்தால் குடையா , சிறையால் புடையா ,
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் .
3.8.113

3530
அறுத்தானை , அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில் ; செறித்தலும் , தேவர் அஞ்சி
வெறித்தார் ; வெறியாமுன் , இராவணன் வில்லைப் பல்லால்
பறித்தான் பறவைக்கு இறை , விண்ணவர் பண்ணை ஆர்ப்ப .
3.8.114

3531
எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு , ஈசனோடும் ,
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி ,
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான்
சொல் இட்டு அவன் தோள் வலி , யார் உளர் , சொல்ல வல்லார் ?
3.8.115

3532
மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட ,
வாளால் ஒறுத்தான் சிலை வாய் இடை நின்றும் வாங்கித்
தாளால் இறுத்தான் ; தழல் வண்ணன் தடக்கை வில்லைத்
தோளால் இறுத்தான் துணைத் தாதை தன் அன்பின் தோழன் .
3.8.116

3533
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில்
மூலம் ஒடிப்பு உண்டது கண்டு , முனிந்த நெஞ்சன் ,
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஒர் அம்பு போலும்
சூலம் எடுத்தான் எறிந்தான் , மறம் தோற்றிலாதான் .
3.8.117

3534
ஆற்றான் இவன் என்று உணராது , எனது
ஆற்றல் காண்
என்று
ஏற்றான் , எருவைக்கு இறை முத்தலை
எஃகம் மார்பின் ;
மேல்தான் இது செய்பவர் யார் ? என ,
விண்ணுளோர்கள்
தோற்றாது நின்றார் , தம தோள் புடை
கொட்டி ஆர்த்தார் .
3.8.118

3535
பொன் நோக்கியர் தம் புலன்
நோக்கிய புன்கணோரும் ,
இன் நோக்கியர் இல் வழி
எய்திய நல் விருந்தும் ,
தன் நோக்கிய நெஞ்சு உடை
யோகியர் தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ,
ஆம் என மீண்டது , அவ் வேல் .
3.8.119

3536
வேகம் முடன் , வேல் இழந்தான்
படை வேறு எடாமுன் ,
மாகம் மறையும் படி நீண்ட
வயங்கு மான் தேர்ப்
பாகன் தலையைப் பறித்துப்
படர் கற்பினாள் பால்
மோகம் படைத்தான் உளைவு
எய்த , முகத்து எறிந்தான் .
3.8.120

3537
எறிந்தான் தனை நோக்கி ,
இராவணன் , நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான் ; முனிந்து , ஆண்டது ஒர்
ஆடகத் தண்டு வாங்கி ,
பொறிந்தாங்கு எரியின் சிகை
பொங்கி எழப் புடைத்தான் ;
மறிந்தான் எருவைக்கு இறை ,
மால்வரை போல மண்மேல் .
3.8.121

3538
மண்மேல் விழுந்தான் ; விழலோடும் ,
வயங்கு மான் தேர்க்
கண்மேல் ஒளியும் தொடரா வகை ,
தான் கடாவி
விண்மேல் எழுந்தான் ; எழ ,
மெல்லியலாளும் , வெம் தீ
புண்மேல் நுழையத் துடிக்கின்றனள்
போல் , புரண்டாள் .
3.8.122

3539
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய
கொள்கை கண்டான் ;
அழுந்தேல் அவலத்திடை ; அஞ்சலை
அன்னை !
என்னா
எழுந்தான் , உயிர்த்தான் ; அட ! எங்கு இனிப்
போவது !
என்னா ,
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர்
பண்ணை ஆர்ப்ப .
3.8.123

3540
பாய்ந்தான் , அவன் பல் மணித் தண்டு
பறித்து எறிந்தான் ;
ஏய்ந்து ஆர் கதிர்த் தேர் பரி எட்டினொடு
எட்டும் எஞ்சித்
தீ ய்ந்து ஆசு அற வீசி அத் திண் திறல்
துண்ட வாளால்
காய்ந்தான் ; கவர்ந்தான் உயிர் காலனும் ,
கை விதிர்த்தான் .
3.8.124

3541
திண் தேர் அழித்து , ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி ,
விண்தான் மறைப்பச் செறிகின்றன , வில் இலாமை ,
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் , வச்சைமாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன , வள் உகிரால் பறித்தான் .
3.8.125

3542
மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும்
தோள்கள் மேலும்
ஓச்சிச் சிறகால் புடைத்தான் ;
உலையா விழுந்து ,
மூர்ச்சித்த இராவணனும்
முடி சாய்ந்து இருந்தான் ;
' போச்சு ; இத்தனை போலும் நின் ஆற்றல் ? '
எனப் புகன்றான் .
3.8.126

3543
அ வேலையின் ஏ முனிந்தான் ; முனிந்து , ஆற்றலன் , அவ்
வெம் வேல் அரக்கன் , விடலாம் படை வேறு காணான் ;
இ வேலையின் ஏ இவன் இன் உயிர் உண்பென் என்னாச்
செவ்வே , பிழையா நெடு வாள் உறை தீர்த்து , எறிந்தான் .
3.8.127

3544
சடாயு வீழ்தல்
வலியின் தலை தோற்றிலன் ; மாற்ற அரும் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் , வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்று உளது ஆகலின் , விண்ணின் வேந்தன்
குலிசம் எறியச் சிறை அற்றது ஒர் குன்றின் , வீழ்ந்தான் .
3.8.128

3545
சீதை வருந்தி யுரைத்தல் (3545-3552)
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் ,
மண்ணின் ; விண்ணோர்
இரிந்தார் ; இழந்தாள் துணை ! என்ன ,
முனிக் கணங்கள்
பரிந்தார் ; படர் விண்டுவின் நாட்டவர்
பைம்பொன் மாரி
சொரிந்தார் ; அது நோக்கிய சீதை
துளக்கம் உற்றாள் .
3.8.129

3546
வெள்கும் அரக்கன் , நெடு விண் புக
ஆர்த்து , மிக்கான் ;
தொள் கின் தலை எய்திய மான் எனச்
சோர்ந்து நைவாள் ,
உள்கும் ; உயிர்க்கும் ; உயங்கும் ; ஒரு
சார்பு காணாள் ,
கொள் கொம்பு ஒடியக் கொடி வீழ்ந்தது
போல் குலைந்தாள் .
3.8.130

3547
வன் துணை உளன் என வந்த மன்னனும்
பொன்றினன் ; எனக்கு இனிப் புகல் என் ?
என்கின்றாள் ;
இன் துணை பிரிந்து இருந்து இன்னல் எய்திய
அன்றில் அம் பெடை என அரற்றினாள் அரோ .
3.8.131

3548
பின்னவன் உரையினை மறுத்துப் பேதையேன் ,
அன்னவன் தனை கடிது அகற்றினேன் ; பொரு
மன்னவன் சிறை அற மயங்கினேன் ; விதி
இன்னமும் எவ் வினை இயற்றுமோ ?
எனா .
3.8.132

3549
அல்லல் உற்றேனை , வந்து ,' அஞ்சல் ' என்ற , இந்
நல்லவன் தோற்பது ஏ ? நரகன் வெல்வதே ?
வெல்வதும் பாவம் ஓ ? வேதம் பொய்க்குமோ ?
இல்லையோ அறம் ?
என இரங்கி ஏங்கினாள் .
3.8.133

3550
நாண் இலேன் உரை கொடு நடந்த நம்பிமீர் !
நீள் நிலை அறம் நெறி நின்றுளோர்க்கு எலாம்
ஆணியை , உந்தையர்க்கு அமைந்த அன்பனைக்
காணிய வம்
எனக் கலங்கி விம்மினாள் .
3.8.134

3551
எல் இயல் விசும்பு இடை இருந்த நேமியாய் !
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியைப்
புல்லுதியோ ?
எனப் பொருமிப் பொங்கினாள் .
3.8.135

3552
கற்பு அழியாமை என் கடமை ; ஆயினும் ,
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர் வலான்
வில் பழியுண்டது ; வினையினேன் வந்த
இல் பழியுண்டது
என்று இரங்கி ஏங்கினாள் .
3.8.136

3553
சீதையை நிலத்தோடு தோளில் தாங்கி இராவணன் செல்லுதல்
ஏங்குவாள் தன்மையும் , இறகு இழந்தவன்
ஆங்கு உறு தன்மையும் , அரக்கன் நோக்கினான் ;
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் .
3.8.137

3554
சீதையின் நிலை
விண் இடை வெய்யவன் ஏகும் வேகத்தால் ,
கண்ணொடு மனம் இவை சுழன்ற ; கற்பினாள் ,
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் ;
மண் இடை தன்னையும் மறந்து சாம்பினாள் .
3.8.138

சடாயு விண்ணோக்கி இரங்குதல் (3555-3561)

3555
ஏகினன் அரக்கனும் ; எருவை வேந்தனும் ,
மோக வெம் துயர் சிறிது ஆறி , முன்னியே ,
மாகமே நோக்கினன் ; வஞ்சன் வல்லையில்
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் .
3.8.139

3556
வந்திலர் மைந்தரும் ; மருகிக்கு எய்திய
வெந்துயர் துடைத்தனன் என்னும் மெய்ப் புகழ்
தந்திலர் , விதியினார் , தரும வேலியைச்
சிந்தினர் ; மேல் இனிச் செயல் என் ஆம் கொலோ ?

3.8.140

3557
வெற்றியர் உளர் எனின் , மின்னின் நுண் இடைப்
பொன் தொடிக்கு , இ நிலை புகுதற் பாலதோ ?
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் ;
சிற்றவை வஞ்சனை முடியச் செய்ததோ ?

3.8.141

3558
பஞ்சு அணை பாம்பு அணை ஆகப் பள்ளி சேர்
அஞ்சன வண்ணனே இராமன் ; ஆதலால் ,
வெஞ்சின அரக்கனால் வெல்லற்பாலன் ஓ ?
வஞ்சனை இழைத்தனன் , கள்ள மாயையால் .

3.8.142

3559
வேர் அற அரக்கரை வென்று , வெம் பழி
தீரும் , என் சிறுவனும் ; தீண்ட அஞ்சுமால்
ஆரியன் தேவியை அரக்கன் , நல் மலர்ப்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் .

3.8.143

3560
பரும் சிறை இன்னன பன்னி உன்னுவான் ;
அருஞ்சிறை உற்றனளாம் எனா , மனம்
' பொரும் சிறை அற்றதேல் , பூவை கற்பு எனும்
இரும் சிறை இறாது ' என , இடரும் நீங்கினான் .
3.8.144

3561
அம் சிறைக் குருதி யாறு அழிந்து சோர்வு உற ,
வஞ்சியை மீட்கிலேன் என்னும் மானமும் ,
செஞ்செவே மக்கள்பால் சென்ற காதலும் ,
நெஞ்சு உறத் துயின்றனன் , உணர்வு நீங்கலான் .
3.8.145

3562
சீதையை அசோகவனத்தில் சிறை வைத்தல்
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய்ச்
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான்
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடைச்
சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் அரோ .
3.8.146

3563
கவிக் கூற்று
இ நிலை இனையவன் செயல் இயம்பினாம் ;
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக
என மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை பேசுவாம் அரோ .
3.8.147

3564
இலக்குவன் துயர்நிலை
ஒருமகள் தனிமையை உன்னி , உள் உறும்
பருவரல் மீதிடப் பதைக்கும் நெஞ்சினான் ,
பெருமகன் தனை தனிப் பிரிந்து பேது உறும்
திருநகர்த் தீரும் அப் பரதன் செய்கையான் .
3.8.148

3565
இலக்குவன் இராமனைக் காணுதல்
தெண் திரைக் கலம் என விரைவில் செல்கின்றான் ,
புண்டரீகத் தடம் காடு பூத்து , ஒரு
கொண்டல் வந்து இழிந்தன , கோலத்தான் தனை
கண்டனன் , மனம் எனக் களிக்கும் கண்ணினான் .
3.8.149

3566
இராமன் இலக்குவனைக் காணுதல்
துண் எனும் அவ் உரை தொடரத் தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்கப் பேதினால்
உள்நிறை சோரும்
என்று , ஊசலாடும் அக்
கண்ணனும் இளவலைக் கண்ணுற்றான் அரோ .
3.8.150

3567
இலக்குவன் வருதல் கண்டு இராமன் சிந்தித்தல்
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன்
உரை பொய் எனாது , புலர்வாள்
வன் சொற்கள் தந்து மடமங்கை ஏவ ,
நிலை தேர வந்த மருளே
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம்
உடையேன் மருங்கு , தனியே
என் சொல் கடந்து , மனமும் தளர்ந்த
இளவீரன் வந்த இயல்பே .

3.8.151

3568
இராமன் இலக்குவனை வினவுதல்
என்று உன்னி , என்னை விதியார் முடிப்பது ?
என எண்ணி நின்ற இறையைப்
பொன் துன்னு வில் கை வய வீரன் வந்து
புனைதாள் இறைஞ்சு பொழுதில்
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த ,
விரைவோடு புல்லி , உருகா ,
நின்று , உன்னி , வந்த நிலை என்கொல் ? என்று ,
நெடியோன் விளம்ப , நொடிவான் .
3.8.152

3569
இலக்குவன் மறுமொழி (3569-3570)
இல்லா நிலத்தின் இயையாத வெம்சொல்
எழ , வஞ்சி எவ்வம் உற , யான் ,
' வல் வாய் அரக்கன் உரையாகும் ' என்ன ,
மதியாள் , மறுக்கம் உறுவாள் ,
' நில்லாது மற்று இது அறி , போதி ' என்ன ,
நெடியோய் புயம் அத்து இன் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள் , சினத்தின்
முடிவோடு நின்று துவள்வாள் .
3.8.153

3570
'ஏகாது நிற்றி எனின் , யான் நெருப்பின்
இடை வீழ்வென் ' என்று , முடுகா
மா கானகம் அத்தின் இடை ஓடலோடும் ,
மனம் அஞ்சி வஞ்ச வினையேன் ,
போகாது இருக்கின் இறவாது இருக்கை
புணராள் என கொடு உணரா ,
ஆகாது இறக்கை ; அறன் அன்று ; எனக்கொடு
இவண் வந்தது
என்ன அமலன் .
3.8.154

3571
இராமன் சிந்தனை
சாவாது இருத்தல் இவள் ஆனது , உற்றது ;
அஃதோ தடுக்க முடியாது ;
ஆ ! ஆ ! அலக்கண் உறுவாள் உரைத்த
பொருளோ அகத்தின் அடையா ;
காவா நிலத்தின் வரும் ஏதம் ; மற்று அது ,
ஒழியாது கை கொடு அகலப்
போவார் , பிரிக்க முயல்வார் புணர்த்த
பொருள் ஆகும் ; என்று தெருளா .
3.8.155

3572
இராமன் இலக்குவனுக்குக் கூறுவது
வந்தாய் திறத்தின் உளது அன்று குற்றம் ;
மடவாள் மறுக்கம் உறுவாள் ,
சிந்தாகுலத்தொடு உரைசெய்த செய்கை
அது தீதும் அன்று , தெளிவாய் ,
முந்தே தடுக்க ஒழியாது , எடுத்த
வினையேன் முடித்த முடிவால்
அந்தோ ! கெடுத்தது
என உன்னி உன்னி
அழியாத உள்ளம் அழிவான் .
3.8.156

3573
இராமன் சீதையிருந்த சோலைக்கு விரைதல்
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை ?
பயில் பூவை அன்ன குயிலைக்
காணில் கலந்த துயர் தீரும் அன்றி ,
அயல் இல்லை
என்று கடுகிச்
சேண் உற்று அகன்ற நெறி ஊடு சென்று ,
சிலை வாளி அன்ன விசை போய் ,
ஆணிப் பசும்பொன் அனையாள் இருந்த
அவிர் சோலை வல்லை அணுகா .
3.8.157

3574
சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575)
ஓடி வந்தனன் , சாலையின் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூ சுரி குழலாள் தனை காணான் ,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர் , குறியா ,
நேடி வந்து , அது கண்டிலது என நின்றான் .
3.8.158

3575
கைத்த சிந்தையன் , கணம் குழை
அணங்கினைக் காணாது ,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
பொருள் இலான் , உதவ
வைத்த மா நிதி , மண்ணொடு
மறைந்தன , வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
நின்றானையும் போன்றான் .

3.8.159

3576
அப்போது உலகப் பொருள்கட்கு நேர்ந்த நிலை (3576-3578)
மண் சுழன்றது ; மால் வரை சுழன்றது ; மதியோர்
எண் சுழன்றது ; சுழன்றது அவ் எறி கடல் ஏழும் ;
விண் சுழன்றது ; வேதமும் சுழன்றது ; விரிஞ்சன்
கண் சுழன்றது ; சுழன்றது கதிரொடு மதியும் .
3.8.160

3577
அறம் அத்து ஐ சீறுங்கொல் ? அருளையே
சீறுங்கொல் ? அமரர்
திறம் அத்து ஐ சீறுங்கொல் ? முனிவரைச்
சீறுங்கொல் ? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல் ?' என் கொல் ஓ
முடிவு ? ' என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல் ? நெடும் தகையோன்

என நடுங்கா .
3.8.161

3578
நீல மேனி அ நெடியவன் மனநிலை திரிய ,
மூல காரணத்தவன் ஒடு உம் உலகு எலாம் முற்றும்
காலம் ஆம் எனக் கடையிடும் கணக்கு அரும் பொருள்கள் ,
மேல கீழ் உறக் கீழன மேல் உறும் வேலை .
3.8.162

3579
இலக்குவன் , தேடிச் செல்லுவோம் எனல்
தேரின் ஆழியும் தெரிந்தனம் ;
தீண்டுதல் அஞ்சிப்
பாரினோடு கொண்டு அகன்றதும்
பார்த்தனம் ; பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது ?
உரன் இலாதவர் போல் ;
தூரம் போதல் முன் தொடர்தும்
என்று ,
இளையவன் தொழலும் .
3.8.163

3580
இராமனும் உடன்பட்டுப் போதல்
ஆம் ; அதே இனி அமைவது என்று , அமலனும் , மெய்யில்
தாம வார் கணைப் புட்டிலும் முதலிய தாங்கி
வாம மால் வரை மரன் இவை மடிதர , வயவர் ,
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் .
3.8.164

3581
தேர் சென்ற சுவடு மறைய வருந்துதல்
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற
சுவடு எலாம் மாய்ந்து ,
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை ;
மெய் உற வெந்த
புண்ணின் ஊடு உறு வேல் என ,
மனம் மிகப் புழுங்கி ,
எண்ணின் நாம் இனிச் செய்வது என் ?
இளவலே !
என்றான் .
3.8.165

3582
இலக்குவன் அமைதி கூறல்
தெற்கு நோக்கியது எனும் பொருள்
தெரிந்தது , அ திண் தேர் ;
மற்கு நோக்கிய திரள் புயத்து
அண்ணலே ! வானம் ,
விற்கு நோக்கிய பகழியின்
நெடிது அன்று ; விம்மி ,
நிற்கும் நோக்கு இது , என் பயத்தது ? என்று
இளையவன் நேர்ந்தான் .
3.8.166

3583
வீணைக் கொடியைக் காணுதல்
ஆகும் ; அன்னதே கருமம் என்று ,
அ திசை நோக்கி ,
ஏகி , யோசனை இரண்டு சென்றார் ,
இடை எதிர்ந்தார் ,
மாக மால் வரை கால் பொர
மறிந்தது மானப்
பாக வீணையின் கொடி ஒன்று
கிடந்தது பார் மேல் .
3.8.167

3584
கொடி துணிந்துள்ள நிலையை ஆராய்தல் 3584 , 3585
கண்டு , கண்டகர் ஓடு உம் அக்
காரிகை பொருட்டால் ,
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர்
விளைந்தது ?
என்று அயிர்த்தார் ;
துண்ட வாளினில் சுடர்க் கொடி
துணிந்தது என்று உணராப்
புண்டரீகக் கண் புனல் வரப்
புரவலன் புகல்வான் .
3.8.168

3585
நோக்கினால் , ஐய ! நொய்து
இவண் எய்திய நுந்தை
மூக்கினால் இது முறிந்தமை
முடிந்ததால் ; மொய்ம்பின்
தாக்கினான் ; நடு அடுத்தது
தெரிகிலம் ; தமியன் ;
யாக்கை தேம்பிடும் ; எண்ணரும்
பருவங்கள் இறந்தான் .

3.8.169

3586
இலக்குவன் சொல்
நன்று சாலவும் ; நடுக்கு அரு
மிடுக்கினன் ; நாமும்
சென்று கூடலாம் ; பொழுது எலாம்
தடுப்பது திடனால் ;
வென்று , மீட்கினும் மீட்குமால் ;
வேறு உற எண்ணி ,
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை

என்றலும் , நெடியோன் .
3.8.170

3587
இராம இலக்குவர் இராவணனது வில் முறிந்திருத்தலைக் காணுதல்
தொடர்வதே நலம் ஆம்
எனப் படிமிசைச் சுற்றிப்
படரும் கால் எனக் கறங்கு
எனச் செல்லுவார் பார்த்தார் ,
மிடல்கொள் வெம் சிலை , விண்
இடு வில் முறிந்து என்ன
கடலின் மாடு உயர் திரை எனக்
கிடந்தது கண்டார் .
3.8.171

3588
வில்லை ஒடித்த சடாயுவை இராமன் வியத்தல்
சிலை கிடந்ததால் , இலக்குவ !
தேவர் நீர் கடைந்த
மலை கிடந்தன வலியது ;
வடிவினால் மதியின்
கலை கிடந்தன காட்சியது ;
இது கடித்து ஒடித்தான்
நிலை கிடந்தவா நோக்கு !

என நோக்கினன் நின்றான் .
3.8.172

3589
இராவணனது அம்பறாத்தூணியைக் காணுதல்
நின்று , பின்னரும் நெடு நெறி
கடந்து உற நிமிரச்
சென்று நோக்கினர் , திரிசிகைத்
திணி நெடுஞ் சூலம்
ஒன்று , பல் கணை மழை உறு
புட்டில் ஓர் இரண்டு
குன்று போல் அவண் கிடந்த கண்டு
அதிசயம் கொண்டார் .
3.8.173

3590
இராவணனது கவசத்தைக் காணுதல்
மறித்தும் சென்றனர் ; வான் இடை
வயங்கு உற வழங்கி
எறிக்கும் சோதிகள் யாவையும்
தொக்கன எனலாய்
நெறிக் கொள் கானகம் மறைதர ,
நிருதர் கோன் நெஞ்சில்
பறித்து வீசிய கவசமும்
கிடந்தது பார்த்தார் .
3.8.174

3591
இராவணனது குதிரை முதலிய கிடந்த இடத்தை அடைதல்
கான் கிடந்தது மறைதரக் கால் வயம் கலி மா
தான் கிடந்த உழி , சாரதி கிடந்துழி , சார்ந்தார் ;
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துழி , உலகில்
வான் கிடந்தது போன்ற தேர் கிடந்துழி வந்தார் .
3.8.175

3592
இராவணனது குண்டலங்களைக் காணுதல்
கண்டு , அலங்கு தம் கை தலம் விதிர்த்தனர் , கவின் ஆர்
விண் தலம் துறந்து , இறுதியின் விரி கதிர் வெய்யோன்
மண்டலம் பல , மண்ணிடைக் கிடந்தன மணியின்
குண்டலம் பல , குலம் மணி பூண்களின் குவியல் .
3.8.176

3593
குண்டலம் முதலியன பலவாக இருத்தலைக் கொண்டு போர்
செய்தோர் பலர் என இராமன் கூறுதல்
தோள் அணி குலம் பல உள ; குண்டலத் தொகுதி
வாள் இமைப்பன பல உள ; மணி முடி பலவால் ;
நாள் அனைத்தையும் கடந்தனன் , தமியன் , நம் தாதை ;
யாளி போல்பவர் பலர் உளர் , பொருதனர் ; இளையோய் !

3.8.177

3594
பொருதவன் இராவணன் ஒருவனே என இலக்குவன் கூறல்
திருவின் நாயகன் உரை செயச் சுமித்திரை சிங்கம் ,
தருவின் நீளிய தோள் பல , தலை பல என்றால் ,
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான்
ஒருவனே ; அவன் இராவணன் ஆம்
என உரைத்தான் .
3.8.178

3595
சடாயுவைக் காணுதல்
மடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா ,
மிடலுள் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் ,
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்க்
கடலுள் நாட்டிய மலை அன்ன தாதையைக் கண்டான் .
3.8.179

3596
இராமன் சடாயுவின் உடல்மேல் வீழ்ந்து அரற்றுதல் (3596-3602)
துள்ளி , ஓங்கு செம் தாமரை நயனங்கள் சொரியத்
தள்ளி , ஓங்கிய அமலன் தன் தனி உயிர்த் தந்தை
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் .
3.8.180

3597
உயிர்த்திலன் ஒரு நாழிகை ; உணர்வு இலன் கொல் ? என்று
அயிர்த்த தம்பி புக்கு , அம் கையின் எடுத்தனன் , அருவிப்
புயல் கலந்த நீர் தெளித்தலும் , புண்டரீகக் கண்
பெயர்த்துப் பைப் பய அயர்வு தீர்ந்து , இனையன பேசும் .
3.8.181

3598
தம் தாதையரைத் தனையர் கொலை நேர்ந்தார்
முந்து ஆரே உள்ளார் ? முடிந்தான் முனை ஒருவன் ;
எந்தாய் ! ஓ ! எற்கு ஆக நீயும் இறந்தனையோ ?
அந்தோ ! வினையேன் அருங் கூற்றம் ஆனேன் ஏ !

3.8.182

3599
பின் உறுவது ஓராது ஏ பேதுறு ஏன் , பெண்பாலாள்
தன் உறுவல் தீர்ப்பான் , தனி உறுவது ஓராதே ,
உன் உறவு நீ தீர்த்தாய் ; ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் ? எந்தாயே !

3.8.183

3600
மாண்டேனே அன்றோ ? மறையோர் குறை முடிப்பான்
பூண்டேன் விரதம் ; அதனால் உயிர் பொறுப்பேன் ;
நீண்டேன் மரம்போல நின்று ஒழிந்த புன்தொழிலேன்
வேண்டேன் , இம் மா மாயம் புன் பிறவி வேண்டேனே !

3.8.184

3601
என் தாரம் பற்று உண்ண ஏன்றாயைச் சான்றோயைக்
கொன்றானும் நின்றான் ; கொலை உண்டு நீ கிடந்தாய் ;
வன் தாள் சிலை ஏந்தி , வாளிக் கடல் சுமந்து ,
நின்றேனும் நின்றேன் , நெடு மரம்போல் நின்றேனே .

3.8.185

3602
சொல் உடையார் என்போல்
இனி உளரோ ? தொல் வினையேன்
இல் உடையாள் காண ,
இறகு உடையாய் ! எண் இலாப்
பல் உடையாய் ! உன்னைப் படை
உடையான் கொன்று அகல
வில் உடையேன் நின்றேன் ;
விறல் உடையேன் அல்லேன் ஓ ?

3.8.186

3603
சடாயு உயிர்த்தெழுதல்
அன்னா பலபலவும் பன்னி அழும் ; மயங்கும் ;
தன் நேர் இலாதான் தன் தம்பியும் அ தன்மையன் ஆ ;
உன்னா , உணர்வு சிறிது உள் முளைப்பப் புள் அரசும் ,
இன்னா உயிர்ப்பான் , இருவரையும் நோக்கினான் .
3.8.187

3604
இராம இலக்குவரைக் கண்டு மகிழ்தல்
உற்றது உணராது , உயிர் உலைய வெய்து உயிர்ப்பான்
கொற்றவரைக் கண்டான் ; தன் உள்ளம் குளிர்ப்பு உற்றான் ;
இற்ற இரு சிறகும் , இன்னுயிரும் , ஏழ் உலகும் ,
பெற்றனனே ஒத்தான் , பெயர்த்தேன் பழி என்றான் .
3.8.188

3605
அவர்களை அருகே அழைத்து உச்சி மோத்தல்
பாக்கியம் அத்து ஆல் , இன்று , என்
பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன் , கண்ணுற்றேன் ;
புண்ணியரே ! வம்மின்
என்று ,
தாக்கி அரக்கன்
மகுடத் தலை தகர்த்த
மூக்கினால் உச்சி
முறை முறையே மோக்கின்றான் .
3.8.189

3606
இரங்கி வினவுதல்
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னம் நினைவித்தது ; ஆனாலும் ,
அம் சொல் மயிலை , அருந்ததியை , நீங்கினிர் ஓ ,
எஞ்சல் இலா ஆற்றல் இருவீர் உம் ?
என்று உரைத்தான் .
3.8.190

3607
இலக்குவன் நிகழ்ந்தது கூறல்
என்று அவன் இயம்பலும் , இளைய கோமகன் ,
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவு உறா வகை ,
வன் திறல் மாயம் மான் வந்தது ஆதியா
நின்றது நிகழ்ந்தது நிரப்பினான் அரோ .
3.8.191

3608
சடாயு அவர்கட்குத் தேறுதல் கூறுதல்
ஆற்றலோன் அவ் உரை அறைய , ஆணையால் ,
ஏற்று , உணர்ந்து , எண்ணி , அவ் எருவை வேந்தனும் ,
மாற்ற அரும் துயர் அவர் மனக் கொளா வகை
தேற்றுதல் நன்று
என , இனைய செப்புவான் .
3.8.192

3609
சடாயுவின் ஆறுதல் மொழி (3609-3616)
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகும் ஓ ?
' துதி அறு பிறவியின் இன்ப துன்பம்தான்
விதி வயம் ' என்பதை மேற்கொள்ளா விடின் ,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ ?

3.8.193

3610
தெரிவுறு துன்பம் வந்து ஊன்றச் , சிந்தையை
இரிவு செய்து ஒழியுமது , இழுதை நீரது ஆல் ;
பிரிவு செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ ?

3.8.194

3611
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை ,
விலக்குவம் என்பது , மெய்யிற்று ஆகுமோ ?
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார்
தலை கல அத்து இரந்தது தவத்தின் பாலதோ ?

3.8.195

3612
பொங்கு வெம் கோள் அரா , விசும்பு பூத்தன
வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால் ;
அம் கண்மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர்
திங்களும் ஒரு முறை வளரும் , தேயுமால் .

3.8.196

3613
அந்தரம் வருதலும் , அனைய தீர்தலும் ,
சுந்தரத் தோளினிர் ! தொன்மை நீரவால் ;
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ ?

3.8.197

3614
தடைக்க அரும் பெருவலிச் சம்பரப் பெயர்க்
கடைத் தொழில் அவுணனால் , குலிசக் கையினான் ,
படைத்தனன் பழி ; அது , பகழி வில் வலாய் !
துடைத்தனன் நுந்தை , தன் குவவுத் தோளினால் .

3.8.198

3615
பிள்ளைச் சொல் கிளி அனாளைப்
பிரிவுறல் உற்ற பெற்றி ,
தள்ளுற்ற அறமும் , தேவர்
துயரமும் , தந்தது ஏ ஆல் ;
கள்ளப் போர் அரக்கர் என்னும்
களையினைக் களைந்து வாழ்தி ;
புள்ளிற்கும் , புலன் இல் பேய்க்கும் ,
தாய் அன்ன புலவு வேலோய் !
3.8.199

3616
வடு கண் , வார் கூந்தலாளை ,
இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை , எதிர்ந்து ,
எனது ஆற்றல் கொண்டு
தடுத்தனென் , ஆவது எல்லாம் ; தவத்து ,
அரன் தந்த வாளால்
படுத்தனன் ; இங்கு வீழ்ந்தேன் ;
இது இன்று பட்டது
என்றான் .
3.8.200

3617
இராமன் சீற்றம்
கூறின மாற்றம் சென்று
செவி துளை குறுகா முன்னம் ,
ஊறின உதிரம் , செம் கண் ;
உயிர்த்தன , உயிர்ப்புச் செம் தீ ;
ஏறின புருவம் மேல் மேல் ;
இரிந்தன சுடர்கள் எங்கும் ;
கீறினது அண்ட கோளம் ;
கிழிந்தன கிரிகள் எல்லாம் .
3.8.201

3618
கவிக்கூற்று
மண்ணகம் திரிய , நின்ற
மால் வரை திரிய , மற்றைக்
கண் அகன் புனலும் காலும்
கதிரொடும் திரியக் காவல்
விண் அகம் திரிய , மேலை
விரிஞ்சனும் திரிய , வீரன்
எண் அரும் பொருள்கள் எல்லாம்

என்பது தெரிந்தது அன்றே .
3.8.202

3619
குறித்த வெம் கோபம் யார் மேல்
கோள் உறும் கொல் ?
என்று அஞ்சி ,
வெறித்து நின்று , உலகம் எல்லாம்
விம்முறுகின்ற வேலை ,
பொறிப் பிதிர் படலைச் செந்தீப்
புகையொடு பொடிப்பப் பொம் என்று ,
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற ,
இராமனும் இயம்பல் உற்றான் .
3.8.203

இராமன் வெகுளிச் சொற்கள் (3620-3622)

3620
பெண் தனி ஒருத்தி தன்னைப்
பேதை வாள் அரக்கன் பற்றிக்
கொண்டனன் ஏக , நீ இக்
கோளுறக் குலுங்கல் செல்லா
எண் திசை இறுதியான
உலகங்கள் இவற்றை , இன்னே ,
கண்ட வானவர்களோடும்
களையுமாறு , இன்று காண்டி .

3.8.209

3621
தாரகை உதிரு மாறும் ,
தனி கதிர் பிதிருமாறும் ,
பேர் அகல் வானம் எங்கும்
பிறங்கு எரி பிறக்குமாறும் ,
நீரொடு நிலனும் , காலும் ,
நின்றவும் , திரிந்த யாவும் ,
வேரொடும் அழியு மாறும் ,
விண்ணவர் விளியு மாறும் .

3.8.205

3622
இ கணம் ஒன்றில் , நின்ற
ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் ,
உலகங்கள் வீயு மாறும் ,
திக்கு உடை அண்ட கோளப்
புறத்தவும் தீந்து , நீரின்
மொக்குளின் உடையு மாறும் ,
காண்
என முனியும் வேலை .
3.8.206

3623
சூரியன் மறைய உலகம் அஞ்சுதல்
வெம் சுடர் கடவுள் மீண்டு ,
மேருவில் மறையலுற்றான் ;
எஞ்சல் இல் திசையில் நின்ற
யானையும் இரியல் போய ;
துஞ்சின உலகம் எல்லாம்
என்பது என் ? துணிந்த நெஞ்சின் ,
அஞ்சினன் , இளைய கோவும் ;
அயல் உளோர்க்கு அவதி உண்டோ ?
3.8.207

3624
சடாயு இராமன் வெகுளியைத் தணித்தல் (3624-3628)
இவ் வழி நிகழும் வேலை ,
எருவைகட்கு இறைவன் , யாதும் ,
செவ்வியோய் ! முனியல் ; வாழி !
தேவரும் முனிவர் தாமும் ,
வெம் வலி வீர ! நின்னால்
' வேறும் ' என்று ஏமுற்று உய்வார் ,
எ வலி கொண்டு வெல்வார் ,
இராவணன் செயலை ?
என்றான் .
3.8.208

3625
நாள் செய்த கமலத்து அண்ணல்
நல்கின நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில்
கண்டனை ; சொல்லும் உண்டோ ?
தாள் செய்ய கமலத்தானே
முதலினர் , தலை பத்து உள்ளாற்கு
ஆட் செய் கின்றார்களன்றி ,
அறம் செய்கின்றார்கள் யாரே ?

3.8.209

3626
தெள் திரை உலகம் தன்னில் ,
செறுநர்மாட்டு ஏவல் செய்து
பெண்டிரின் வாழ்வர் அன்றே !
இது அன்றோ தேவர் பெற்றி ?
பண்டு உலகு அளந்தோன் நல்கப்
பாற்கடல் அமுதம் அந் நாள்
உண்டிலர் ஆகில் , இந் நாள்
அன்னவர்க்கு உய்தல் உண்டோ ?
3.8.210

3627
வம்பு இழை கொங்கை வஞ்சி
வனத்திடைத் தமியள் வைகக் ,
கொம்பு இழை மானின் பின் போய்
குலம் பழி கூட்டிக் கொண்டீர் ;
அம்பு இழை வரிவில் செங்கை
ஐயன்மீர் ! ஆயும் காலை ,
உம் பிழை என்பது அல்லால் ,
உலகம் செய் பிழையும் உண்டோ ?

3.8.211

3628
ஆதலால் , முனிவாய் அல்லை ;
அருந்ததி அனைய கற்பின்
காதலாள் துயரம் நீக்கித்
தேவர்தம் கருத்தும் முற்றி ,
வேத நூல் முறையின் யாவும்
விதியுளி நிறுவி , வேறும்
தீது உள துடைத்தி
என்றான் ,
செம் அடி கமலம் சேர்வான் .
3.8.212

3629
இராமன் தணிதல்
புயல் நிற வண்ணன் , ஆண்டு ,
அப் புண்ணியன் புகன்ற சொல்லைத்
தயரதன் பணி ஈது என்னச்
சிந்தையில் தழுவி நின்றான் ;
அயல் இனி முனிவது என்னை ?
அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனிச் செயல்
என்று எண்ணிக் ,
கண்ணிய சீற்றம் தீர்ந்தான் .
3.8.213

3630
சடாயு உயிர் நீத்தல்
ஆயபின் , அமலன் தானும் ,
ஐய !' நீ அமைதி ' என்ன
வாய் இடை மொழிந்தது அன்றி ,
மற்று ஒரு செயலும் உண்டோ ?
போயது அவ் அரக்கன் எங்கே ?
புகல்
எனப் புள்ளின் வேந்தன்
ஓய்வினன் , உணர்வும் தேய ,
உரைத்திலன் , உயிரும் தீர்ந்தான் .
3.8.214

3631
கவிக்கூற்று (3631-3632)
சீதம் கொள் மலர் உளோனும் ,
தேவரும் என்பது என்னே ?
வேதங்கள் காண் கிலாமை ,
வெளிநின்றே மறையும் வீரன்
பாதங்கள் கண்ணில் பார்த்தான் ;
படிவம் கொள் நெடிய பஞ்ச
பூதங்கள் விளியும் நாளும்
போக்கு இலா உலகம் புக்கான் .
3.8.215

3632
வீடு அவன் எய்தும் வேலை ,
விரிஞ்சனே முதல மேலோர் ,
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் ,
அழுது சோர ,
காடு அமர் மரமும் மாவும்
கற்களும் கரைந்து சாய்ந்த ;
சேடரும் பாரினோர்க்கும்
கரம் சிரம் சேர்ந்த அன்றே .
3.8.216

3633
இராமன் இரங்கி வினவுதல்
அறம் தலை நின்றிலாத
அரக்கனின் , ஆண்மை தீர்ந்தேன் ;
துறந்தனென் , தவம் செய்கேனோ ?
துறப்பெனோ உயிரைச் சொல்லாய் ?
பிறந்தனென் பெற்று நின்ற
பெற்றியால் , பெற்ற தாதை
இறந்தனன் ; இருந்துளேன் யான் ;
என் செய்கேன் ? இளவல் !
என்றான் .
3.8.217

இலக்குவன் தேற்றுதல் 3634 , 3635

3634
என்றலும் , இளைய கோ அவ்
இறையினை இறைஞ்சி , யாண்டும்
வென்றியாய் ! விதியின் தன்மை
பழி அல ; விளைந்தது ஒன்றோ ?
நின்று இனி நினைவது என்னே ?
நெருக்கிய அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ , வெய்ய
கொடும் துயர் குளிப்பது ?
என்றான் .
3.8.218

3635
எந்தை ஈது இயம்பிற்று என்னை ?
எண்மையன் ஆகி ஏழைச்
சந்த வார் குழலினாளைத்
துறந்தனை தணிதி ஏனும் ,
உந்தையை உயிர் கொண்டானை
உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்
சிந்தையை ஆகின் நன்று ,
செய் தவம் செய்கை
என்றான் .
3.8.219

3636
சடாயுவுக்கு ஈமச் சடங்கு இயற்றுவோம் ' என இராமன் கூறுதல்
அ வழி இளவல் கூற ,
அறிவனும் அயர்வு நீங்கி ,
இ வழி இனைய எண்ணின்
ஏழைமைப் பாலது
என்னா ,
வெம் வழி பொழியும் கண்ணீர்
விலக்கினன் , விளிந்த தாதை
செம் வழி உரிமை யாவும்
திருத்துவம் ; சிறுவ !
என்றான் .
3.8.220

3637
ஈமவிறகு அமைத்தல்
இந்தனம் எனைய என்னக்
கார் அகில் ஈட்டம் அத்து ஓடும்
சந்தனம் குவித்து , வேண்டும்
தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் ; மணலின் வேதி
தீது அற இயற்றித் தெள் நீர்
தந்தனன் ; தாதை தன்னைத்
தடக்கையான் எடுத்துச் சார்வான் .
3.8.221

3638
ஈமப்பள்ளியில் தீவைத்தல்
ஏந்தினன் இருகை தன்னால்
ஏற்றினன் ஈமம் தன் மேல் ;
சாந்தொடு மலரும் நீரும்
சொரிந்தனன் ; தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டிக்
கடன் முறை கடவா வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நன்னூல்
மந்திர நெறியின் வல்லான் .
3.8.222

3639
இராமன் நீர்க்கடன் செய்தல்
தளிர்த்தன களித்த பச்சைத்
தாமரைக் கெழுவு செம் பூ
துளித்தன அனைய என்னத்
துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் ,
குளித்தனன் கொண்டல் ;
ஆற்றுக் குளித்தபின் , கொண்ட நன்னீர்
அளித்தனன் ; அரக்கர்ச் செற்ற
சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் .
3.8.223

3640
கவிக்கூற்று
மீட்டு இனி உரைப்பது என்னே ?
விரிஞ்சனே முதல மேல் , கீழ் ,
காட்டிய உயிர்கள் எல்லாம்
அருந்தின களித்த போலாம் ;
பூட்டிய கைகளால் , அப்
புள்ளினுக்கு அரசைக் கொள்க என்று ,
ஊட்டிய நல் நீர் ஐயன்
உண்ட நீர் ஒத்தது அன்றே !
3.8.224

3641
சூரியன் மறைவு
பல் வகை துறையும் , வேதப்
பலி கடன் பலவும் முற்றி ,
வெல் வகை குமரன் நின்ற
வேலையின் , வேலை சார்ந்தான் ,
தொல் வகை குலத்தின் வந்தான்
துன்பத்தால் , புனலும் தோய்ந்து ,
செல் வகை கு உரிய எல்லாம்
செய்குவான் என்ன , வெய்யோன் .
3.8.225

3.9 – Ayomukhi

3.9 . அயோமுகிப் படலம் (3642- 3742)

3642
இராம இலக்குவர் அந்திப்பொழுதில் ஒரு மலையிற்
சென்று தங்குதலும் இருள் பரவுதலும்
அந்தி வந்து அணுகும் வேலை ,
அவ் வழி , அவரும் , நீங்கிச்
சிந்துரச் சென்னித்து ஆண்டு ஓர்
மை வரை சேக்கை கொண்டார் ;
இந்திரற்கு அடங்கல் செல்லா
இராக்கதர் எழுந்தது என்ன ,
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய
விரி இருள் வீங்கிற்று அன்றே . 3.9.1.

இரவுப் பொழுது வர இராம இலக்குவர் மனங்கவலுதல் 3643 , 3644

3643
தேன் உக அருவி சிந்தித் தெருமரல் உறுவ போலக்
கானமும் மலையும் எல்லாம் , கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் ,
மானமும் சினமும் தாதை மரணமும் , மைந்தர் சிந்தை ,
ஞானமும் துயரும் , தம்முள் மலைந்து என , நலிந்தது அன்றே .
3.9.2

3644
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் நூக்கும்
பொய் உறு பிறவிபோலப் போக்க அரும் பொங்கு கங்குல் ,
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர , உயிர்ப்பு நீளக்
கையறவு உறுகின்றார் ஆல் காணல் ஆம் கரையிற்று அன்றே .
3.9.3

3645
இராமன் கண்துயிலப்பெறாமை 3645 , 3646
யாம் அது தெரிதல் தேற்றாம் ; இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ ? முகம் மதி காண்கிலாதோ ?
தேம்மரு தெரியல் வீரன் கண் எனத் தெரிந்த செய்ய
தாமரை , கங்குற் போதும் , குவிந்து இலா தன்மை என்னோ ?
3.9.4

3646
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினால் , நவை இல் உள்ளம் அத்து
எண்ணியது அறிதல் தேற்றாம் ; இமைத்தில , இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பிகண் போன்ற அன்றே .
3.9.5

3647
வெண்மதி தோன்றுதல்
' வண்டு உளர் கோதைச் சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் ' என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்டத்
தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல் ,
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே .
3.9.6

3648
நிலவு இராமனை வருத்துதல்
களியுடை அனங்கக் கள்வன் கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து , உலகம் எங்கும் விளக்கிய நிலவின் வெள்ளம் ,
நளி இருள் பிழம்பு என்று , ஈண்டு , நஞ்சொடு கலந்த நாகத்
துளை ஏயிற்று ஊறல் உற்றதாம் எனச் சுட்டது அன்று ஏ .
3.9.7

இராமன் சீதையை நினைந்து வருந்துதல் (3649-3665)

3649
இடம்படு மானம் துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் ;
விடம் பரந்து அனையது ஆய வெண்நிலா வெதுப்ப , வீரன் ,
படம் பரந்து அனைய அல்குல் , பால்பரந்தனைய இன் சொல் ,
தடம்பெரும் கண்ணினாள்தன் தனிமையை நினையல் உற்றான் .
3.9.8

3650
மடித்த வாயன் , வயங்கும் உயிர்ப்பினன் ;
துடித்து வீங்கி , ஒடுங்குறு தோளினன் ,
பொடித்த தண் தளிர் பூவொடு , மால்கரி
ஒடித்த கொம்பு அனையாள் திறம் அத்து உன்னுவான் .
3.9.9

3651
'வாங்கு வில்லன் வரும் வரும் ' என்று இரு
பாங்கும் நீள்நெறி பார்த்தனளோ ?
எனும் ;
வீங்கு வேலை விரி திரை ஆம் என ,
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் .
3.9.10

3652
என் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் இனைந்த எயிற்றின் விலங்கு அனான் ,
' நில் நில் ' என்று நெருங்கியபோது , அவள்
என் நினைந்தனளோ ?
என ஏங்குமால் .
3.9.11

3653
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயின் மதி என மட்குவாள் ,
' வெஞ்சினம் செய் அரக்கர்தம் வெம்மையை
அஞ்சினான் கொல் ? ' என்று ஐயுறுமால்
என்பான் .
3.9.12

3654
பூண்ட மானமும் , போக்க அருங் காதலும்
தூண்ட , நின்று , இடை தோம் உறும் ஆர் உயிர் ,
மீண்டு மீண்டு வெதுப்ப , வெதும்பினான் ;
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் ? என்பான் .
3.9.13

3655
வில்லை நோக்கி நகும் ; மிக வீங்கு தோட்
கல்லை நோக்கி நகும் ; கடை கால் வரு
சொல்லை நோக்கித் துணுக்கு எனும் ; தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் .
3.9.14

3656
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் ,
வேத வேள்வி விதி முறை மேவிய
சீதை , என்வயின் தீர்ந்தனளோ ?
எனும் ;
போதகம் எனப் பொம் என் உயிர்ப்பினான் .
3.9.15

3657
நின்று பல உயிர் காத்தற்கு நேர்ந்த யான் ,
என் துணைக் குலம் மங்கை ஒர் ஏந்து இழை
தன் துயர்க்கும் தகவு இலென் ஆயினேன் ;
நன்று நன்று என் வலி !
என நாணுமால் .
3.9.16

3658
சாயும் ; தம்பி திருத்திய தண் தளிர்
தீயும் ; அங்கு அவை தீய்தலும் , செம் இருந்து
ஆயும் ; ஆவி புழுங்க அழுங்குமால் ;
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் .
3.9.17

3659
பிரிந்த ஏதுகொல் ? பேர் அபிமானம் கொல் ?
தெரிந்தது இல்லை ; திரு மலர் கண் இமை
பொருந்த , ஆயிரம் கற்பங்கள் போக்குவான் ,
இருந்து கண்டிலன் கங்குலின் ஈறு அரோ .
3.9.18

3660
வென்றி வேற்கை இளவலை ! மேல் எலாம்
ஒன்றுபோல உலப்பு இல நாள்கள்தாம்
நின்று காண்டி அன்றே ? நெடுங் கங்குல் தான் ,
இன்று நீள்வதற்கு ஏது என் ?
என்னும் ஆல் .
3.9.19

3661
நீண்ட மாலை மதியினை , நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்கு ஆய் ;
பூண்ட பூணவள் வாள்முகம் போதலால் ,
ஈண்டு சால விளங்கினை
என்னும் ஆல் .
3.9.20

3662
நீள் நிலாவின் இசைநிறை தன் குலம் அத்து
ஆணி ஆய பழி வர , அன்னது
நாணி , நாடு கடந்தனனாம் கொலோ ,
சேண் உலாம் தனித் தேரவன் ?
என்னுமால் .
3.9.21

3663
சுட்ட கங்குல் நெடிது எனச் சோர்கின்றான் ,
முட்டு அமைந்த நெடு முடம் கோன் ஒடு
கட்டி , வாள் அரக்கன் , கதிரோனையும்
இட்டனன்கொல் இரும் சிறை ?
என்னுமால் .
3.9.22

3664
துடியின் நேர் இடை தோன்றலள் ஆம் எனின் ,
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும் ; ஆகின் , முடியும் இம் மூரி நீர்
நெடிய மாநிலம்
என்ன நினைக்கும் ஆல் .
3.9.23

3665
திறத்து இ(ன்)னாதன , செய்தவத்தோர் உற
ஒறுத்து , ஞாலத்து உயிர்தமை உண்டு உழல்
மறத்தினார்கள் , வலிந்தனர் வாழ்வரேல் ,
அறத்தினால் இனி ஆவது என் ?
என்னுமால் . 3.9.24.

காமனது கலக்கம் (3666-3667)

3666
தேனின் தெய்வத் திரு நெடு நாண் சிலைப்
பூ நின்று எய்யும் பொருகணை வீரனும் ,
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான் ;
தான் நின்று எய்யகிலான் , தடுமாறினான் .
3.9.25

3667
உழந்த யோகத்து ஒருமுதல் கோபத்தால்
இழைந்த மேனியும் எண்ணி இரங்கினான் ;
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ ,
பழந் துயர்க்குப் பரிவு உறும் பான்மையால் ?
3.9.26

3668
கங்குற்பொழுது கழிதல்
நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆகத் தொலைவுறும் எல்லையில் ,
மூலம் ஆம் மலர் முன்னவன் முற்றுறும்
காலம் ஆம் எனக் கங்குல் கழிந்ததே .
3.9.27

இராமனது ஆற்றாமை 3669 , 3670

3669
வெள்ளம் சிலம்பு பால் கடல் இன் விரும்பும்
துயிலை வெறுத்து , அளியும்
கள்ளும் சிலம்பு பூ கோதை
கற்பின் கடலில் படிவாற்குப்
புள்ளும் சிலம்பும் ; பொழில் சிலம்பும் ;
புனலும் சிலம்பும் ; புனை கோலம்
உள்ளும் சில் அம்பும் சிலம்பா ஏல் ,
உயிர் உண்டாகும் வகை உண்டோ ?
3.9.28

3670
மயிலும் பெடையும் உடன் திரிய ,
மானும் கலையும் மருவி வரப்
பயிலும் பிடியும் கடம் கரி உம்
வருவ , திரிவ , பார்க்கின்றான் ;
குயிலும் , கரும்பும் செழும் தேன் உம் ,
குழலும் , யாழும் , கொழும் பாகும் ,
அயிலும் அமுதும் சுவை தீர்த்த
மொழியைப் பிரிந்தான் , அழியானோ ?
3.9.29

3671
கதிரவன் தோன்றுதல்
முடி நாட்டிய கோட்டு உதயம் அத்து
முற்றம் உற்றான் ; முதுகங்குல்
விடிநாள் கண்டும் கிளி மிழற்றும்
மென்சொல் கேளா வீரற்கு , ஆண்டு ,
அடிநாள் செந்தாமரை ஒதுங்கும்
அன்னம் இலளால் , யான் அடைத்த
கடி நாள் கமலம் அத்து
என , அவிழ்த்துக்
காட்டுவான்போல் , கதிர்வெய்யோன் .
3.9.30

3672
சீதையின் பிரிவுத் துயரால் இராமன் வருந்துதல்
பொழிலை நோக்கும் ; பொழில் உறையும்
புள்ளை நோக்கும் ; பூங்கொம்பின்
எழிலை நோக்கும் ; இளமயிலின்
இயலைநோக்கும் ; இயல்பு ஆனாள்
குழலை நோக்கிக் கொங்கை இணைக்
குவட்டை நோக்கி , அ குவடு இன்
தொழிலை நோக்கித் தன்னுடைய
தோளை நோக்கி , நாள் கழிப்பான் .
3.9.31

3673
இராம இலக்குவர் இருவரும் இராவணன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுதல்
அன்ன காலை , இளவீரன் ,
அடியின் வணங்கி , நெடியோய் ! அப்
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல்
புகழோ ?
என்னப் புகழோனும்
சொன்ன அரக்கன் இருக்கும் இடம்
துருவி அறிதும் தொடர்ந்து
என்ன ,
மின்னு சிலையார் மலைதொடர்ந்த
வெயில் வெம் கானம் போயினர் ஆல் .
3.9.32

3674
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் ,
பசும் இலை துன்று வனம்பல பின்னாக்
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார் ;
யோசனை ஒன்பது ஒடு ஒன்பது சென்றார் .
3.9.33

3675
அவ்விருவரும் சோலையை அடைதல்
மண் படி செய்த தவத்தினின் வந்த
கள் படி கோதையை நாடினர் காணார் ;
உள் படி கோபம் , உயிர்ப்பொடு பொங்கப்
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார் .
3.9.34

3676
கதிரவன் மறைதல்
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் ,
நாரியை எங்கணும் நாடினன் , நாடிப்
பேர் உலகு எங்கும் உழன்று , இருள் பின்னா
மேருவின் வெங்கதிர் மீள மறைந்தான் .
3.9.35

3677
எங்கும் இருள் செறிதல்
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம்
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த ,
தெருண்ட அறிவு இல்லவர் சிந்தையின் , முந்தி
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் .
3.9.36

3678
அவ்விருவரும் ஓர் பளிக்கறையில் தங்குதல்
இளிக்கு அறை இன்சொல் இயைந்தன , பூவை ,
கிளிக்கு அறையும் பொழில் , கிஞ்சுக வேலி ,
ஒளி கறை மண்டிலம் ஒத்து உளது , ஆங்கு ஓர்
பளிங்கு அறை , கண்டு , அதில் வைகல் பயின்றார் .
3.9.37

3679
இராமன் பணித்தவாறு இலக்குவன் தண்ணீர் கொணரச் செல்லுதல்
அவ் இடை எய்திய அண்ணல் இராமன் ,
வெவ் விடைபோல் இள வீரனை ,' வீர !
இவ் இடை நாடினை நீர் கொணர்க ' என்றான் ;
தெவ் இடை வில்லவனும் , தனி சென்றான் .
3.9.38

3680
அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டு காமுறுதல் (3680-3683)
எ கண் உம் நாடினன் , நீர் இடை காணான் ,
சிங்கம் எனத் தமியன் திரிவானை ,
அங்கு அ வனம் அத்து உள் , அயோமுகி ஆன
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் .
3.9.39

3681
நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் , தொடர்கிற்பாள் ,
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் ,
' மன்மதன் ஆம் இவன் ' என்னும் மனத்தாள் .
3.9.40

3682
அழுந்திய சிந்தை அரக்கி , அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து , எதிர் நின்றாள் ;
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி ,
விழுங்கு வெனோ ?
என விம்மல் உழன்றாள் .
3.9.41

3683
இரந்தனென் எய்தியபோது , இசையாது
கரந்தனனேல் , நனி கொண்டு கடந்து , என்
முரஞ்சினில் மேவி முயங்குவென்
என்று ,
விரைந்து எதிர் வந்தனள் , தீயினும் வெய்யாள் .
3.9.42

அயோமுகியின் தோற்றம் (3684-3689)

3684
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ; ஒன்ற
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் ; வலம் கொடு மாசுணம் வீசு
கயிற்றின் அசைத்த முலை , குழி கண்ணாள் .
3.9.43

3685
பற்றிய கோள் அரி , யாளி , பணிக்கண்
தெற்றிய பாதம் சிலம்பு தெரிந்தாள் ;
இற்று உலகு யாவையும் ஈறு உறும் அ நாள் ,
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் .
3.9.44

3686
ஆழி வறக்க முகக்க அமைந்த
மூழையெனப் பொலி மொய் பில வாயாள் ;
கூழை புறத்து விரிந்தது ஒர் கொட்பு ஆல் ,
ஊழி நெருப்பின் உருத்தனை ஒப்பாள் .
3.9.45

3687
தடி தடவப் பல தலை தழுவத் தாள்
நெடிது அடையக் குடர்கெழுமு நிணம் அத்து ஆள் ,
அடி தடவப் பட அரவம் இசைக்கும்
கடி தடம் உற்றவள் , உருமு கறிப்பாள் .
3.9.46

3688
இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள் ,
அவை குளிரக் கடிது அழலும் எயிற்றாள் ,
குவை குலையக் கடல் குவிய அலைப்பாள் ,
நவை இல் புவி திரு நாண நடப்பாள் .
3.9.47

3689
நீள் அரவம் சரி தாழ்கை நிரைத்தாள் ;
ஆள் அரவம் புலி ஆரம் அணைத்தாள் ;
யாளியினைப் பல தாலி இசைத்தாள் ;
கோள் அரியை கொடு தாழ்குழை இட்டாள் ;
3.9.48

அயோமுகியைக் கண்ட இலக்குவன் அவளது
கொடுமை யுணர்ந்து நீ யார் ? என வினவுதல் (3690-3692)

3690
நின்றனள் , ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப , குளிர்ப்ப விழிப்பாள் ;
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் ,
கன்று இருளில் திரி கோளரி கண்டான் .
3.9.49

3691
பண்டையின் நாசி இழந்து பதைக்கும்
திண் திறலாள் ஒடு தாடகை சீராள் ;
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர்
ஒள் தொடி ஆம் இவள்
என்பது உணர்ந்தான் .
3.9.50

3692
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் ; நம்பால்
மேவிய காரணம் வேறு இலை
என்பான் ,
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் !
யாவள் அடீ ? உரை செய் , கடிது
என்றான் .
3.9.51

3693
அயோமுகி தான் வந்த காரணத்தைக் கூறித் தன்னை
ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுதல் (3693-3694)
பேசினன் , அங்கு அவள் பேசுற நாணாள் ,
ஊசல் உழன்று அழி சிந்தையளும் தான் ,
ஏசல் இல் அன்பினளாய் இனிது உன்பால்
ஆசையின் வந்த அயோமுகி
என்றாள் .
3.9.52

3694
பின்னும் உரைப்பவள் , பேர் எழில் வீரா !
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து , என்
இன் உயிரைக் கடிது ஈகுதி
என்றாள் .
3.9.53

3695
இலக்குவன் வெகுண்டுரைத்தல்
ஆறிய சிந்தையள் அ•து உரை செய்யச்
சீறிய கோளரி , கண்கள் சிவந்தான் ,
மாறு இல் இ வார்கணை , இவ் உரை வாயில்
கூறிடின் , நின் உடல் கூறு இடும்
என்றான் .
3.9.54

அயோமுகி மீண்டும் இலக்குவனை இரந்து வேண்டுதல் (3696-3697)

3696
மற்று அவன் அவ் உரை செப்ப , மனத்தால்
செற்றிலள் , கை துணை சென்னியின் வைத்தாள் ,
கொற்றவ ! நீ எனை வந்து உயிர் கொள்ளப்
பெற்றிடின் , இன்று பிறந்தனென்
என்றாள் .
3.9.55

3697
வெம் கதம் இல்லவள் பின்னரும் , மேலோய் !
இங்கு நறும் புனல் நாடுதி என்னின் ,
அங் கையினால் எனை' அஞ்சலை ' என்றால் ,
கங்கையின் நீர் கொணர்வென் கடிது
என்றாள் .
3.9.56

3698
தன் வேண்டுகோளை ஏலாது வெகுண்டுரைத்த இலக்குவனைக்
குறித்து அயோமுகி சிந்தித்தல்
சுமித்திரை சேய் , அவள் சொன்ன சொல் அன்ன
கமித்திலன் , நின் இரு காதொடு நாசி
துமிப்பதன் முன்பு அகல்
என்பது சொல்ல ,
இமைத்திலள் நின்றனள் , இன்ன நினைந்தாள் .
3.9.57

3699
இலக்குவனைத் தூக்கிச் செல்லக் கருதிய அயோமுகி அயலே
சிறிது விலகிச் செல்லுதல்
எடுத்தனென் ஏகினென் , என் முழை தன்னுள்
அடைத்து , இவன் வெம்மை அகற்றிய பின்னை ,
உடல் படும் ஆல் ; உடனே உறும் நன்மை ;
திடம் அத்து இதுவே நலன்
என்று அயல் சென்றாள் .
3.9.58

3700
அயோமுகி மோகனச் செய்கையால் இலக்குவனை எடுத்துச் செல்லுதல்
மோகனை என்பது முந்தி முயன்றாள் ,
மாக நெடுங் கிரி போலியை வவ்வா ,
ஏகினள் உம்பரின் , இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி , நொய்தினின் வெய்யாள் .
3.9.59

3701
இலக்குவனை யெடுத்துக்கொண்டு ஆகாயத்திற் செல்லும்
அயோமுகியின் தோற்றம்
மந்தரம் வேலையில் வந்ததும் , வானத்து
இந்திரன் ஊர்முகில் என்னலும் ஆனாள் ;
வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் .
3.9.60

3702
அயோமுகியின் பிணிப்பில் பொருந்திய இலக்குவனது தோற்றம்
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கிப்
பூங்கழல் வார்சிலை மீளி பொலிந்தான் ;
வீங்கிய வெஞ்சின வீழ் மதம் வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் .
3.9.62

இலக்குவன் மீண்டு வாராமையை எண்ணி இராமன்
பலவாறு சிந்தித்து வருந்துதல் (3703-3717)

3703
இப்படி ஏகினள் அன்னவள் ; இ பால் ,
அப்பு இடை தேடி நடந்த என் ஆவித்
துப்பு உடை மால்வரை தோன்றலன்
என்னா ,
வெப்பு உடை மெய் உடை வீரன் விரைந்தான் .
3.9.62

3704
வெய்து ஆகிய கான் இடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ ? அயல் ஒன்று உளதோ ?
நொய்தாய் வர வேகமும் நொய்திலன் ஆல் ;
எய்தாது ஒழியான் ; இது என்னை கொலாம் ?

3.9.63

3705
'நீர் கண்டனை இவ் வழி நேடினை போய்ச்
சார் , கொண்டு ' என , இ துணை சார்கிலனால் ;
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர் பால்
போர் கொண்டனனோ ? பொருள் உண்டு இது
எனா .
3.9.64

3706
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன்
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ ?
நஞ்சிற் கொடியான் நடலைத் தொழிலால்
துஞ்சுற்றனனோ , விதியின் துணிவால் ?

3.9.65

3707
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் ;
தருசொல் கருதேன் , ஒரு தையலை யான்
பிரிவுற்றனென் என்பது ஒர் பீழை பெருத்து
எரிவு உற்றிட , ஆவி இழந்தனனோ ?

3.9.66

3708
' உண்டாகிய கார் இருளோடு ஒருவென்
கண்தான் ; அயல் வேறொரு கண் இலென் ஆல் ;
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவேன் ;
எண்தான் இலென் ; எங்ஙனம் நாடுகென் ஓ ? '
3.9.67

3709
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்
உள்ளாய் ! ஒரு நீயும் ஒளித்தனை ஓ ?
பிள்ளாய் ! பெரியாய் ! பிழை செய்தனை ஆல் ;
கொள்ளாது உலகு உன்னை ; இது ஓ கொடிதே !

3.9.68

3710
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் !
தீரா இடர் தந்தனை ; தெவ்வர் தொழும்
வீரா ! எனை இங்ஙன் வெறுத்தனை ஓ ?
வாராய் , புறம் இத்துணை வைகுதியோ ?

3.9.69

3711
என்னைத் தரும் எந்தையை என்னையரைப்
பொன்னைப் பொருகின்ற பொலங் குழையாள்
தன்னைப் பிரிவேன் , உளென் ஆவதுதான் ,
உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ ?

3.9.70

3712
பொன் தோடு இவர்கின்ற பொலங் குழையாள்
தன் தேடி வருந்து தவம் புரிவேன் ,
நின் தேடி வருந்த நிரப்பினையோ ?
என் தேடினை வந்த இளம் களிறு ஏ !

3.9.71

3713
இன்றே இறவாது ஒழியேன் ; எமரோ ,
பொன்றாது ஒழியார் , புகல்வார் உளரேல் ;
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய் ; கொடியாய் ! இதுவும் குணமோ ?

3.9.72

3714
மாந்தா முதல் மன்னவர் தம் வழியின்
வேந்து ஆகை துறந்தபின் , மெய் உறவோர்
தாம்தாம் ஒழியத் தமியேன் உடனே
போந்தாய் ; எனை விட்டனை போயினை ஓ ?

3.9.73

3715
என்னா உரையா , எழும் ; வீழும் ; இருந்து
உன்னா , உணர்வு ஓய்வு உறும் ; ஒன்று அல ஆல் ;
மின்னாது இடியாது , இருள் வாய் விளைவு ஈது
என் ஆம்
எனும் ; என் தனி நாயகனே .
3.9.74

3716
நாடும் , பல சூழல்கள் தோறும் நடந்து ;
ஓடும் , பெயர் சொல்லி உளைந்து ; உயிர்போய்
வாடும் வகைசோரும் ; மயங்குறு மால் ,
ஆடும் களி மா மத யானை அ(ன்)னான் .
3.9.75

3717
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன் , இ துணை தாழ்வுறும் ஓ ?
சுமையா உலகு ஊடு உழல் தொல் வினையேன் கு
அமையாது கொல் வாழ்வு ? அறியேன்
எனுமால் .
3.9.76

3718
அறம் பால் உளதேல் , அவன் , முன்னவனாய்ப்
பிறப்பான் உறின் , வந்து பிறக்க
எனா ,
மறப்பால் வடிவாள் கொடு மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய் .
3.9.77

3719
பேர்ந்தான் நெடு மாயையினில் ; பிரியா ,
ஈர்ந்தான் , அவள் நாசி பிடித்து , இளையோன் ;
சோர்ந்தாள் இடு பூசல் , செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே , திருமால் தெருளா ,
3.9.78

3720
பரல்தரு கானகம் அத்து அரக்கர் , பல்கழல்
முரற்று அரு வெம் சமம் முயல்கின்றார் , எதிர்
உரற்றிய ஓசை அன்று ; ஒருத்தி ஊறுபட்டு
அரற்றிய குரல் ; அவள் அரக்கி ஆம்
எனா .
3.9.79

3721
அங்கியின் நெடும்படை வாங்கி , ஆங்கு அது
செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லையில் ,
பொங்கு இருள் அ புறம் அத்து உலகம் புக்கது ;
கங்குலும் , பகல் எனப் பொலிந்து காட்டிற்று ஏ .
3.9.80

3722
நெடும் வரை பொடிபட , நிவந்த மா மரம்
ஒடிவு உற , நிலம் மகள் உலைய , ஊங்கு எலாம்
' சடசட ' எனும் ஒலி தழைப்பத் தாக்குமா
முடுகினன் இராமன் , வெம் கால் இன் மும்மையான் .
3.9.81

3723
ஒருங்கு உயர்ந்து , உலகு இன் மேல் , ஊழிப் பேர்ச்சியுள்
கரும் கடல் வருவதே அனைய காட்சித் தன்
பெருந் துணைத் தம்முனை நோக்கிப் பின்னவன் ,
வருந்தலை , வருந்தலை , வள்ளியோய் ! எனா .
3.9.82

3724
வந்தனென் அடியனேன் ; வருந்தல் , வாழி ! நின்
அந்தம் இல் உள்ளம்
என்று அறியக் கூறுவான் ,
சந்த மென் தளிர் புரை சரணம் ! சார்ந்தனன் ;
சிந்தின நயனம் வந்து அனைய செய்கையான் .
3.9.83

3725
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் ,
ஏற்று இளம் கன்றினை பிரிவுற்று , ஏங்கிநின்று
ஆற்றலது , அரற்றுவது , அரிதின் எய்திட ,
பால் துறும் பனிமுலை ஆவின் பான்மையான் .
3.9.84

3726
தழுவினன் பல முறை ; தாரைக் கண்ணின் நீர்
கழுவினன் , ஆண்டு அவன் கனக மேனியை ;
வழுவினையாம் என மனம் கொடு ஏங்கினேன் ;
எழு என மலை என இயைந்த தோளினாய் !

3.9.85

3727
என்னை அங்கு எய்தியது ? இயம்புவாய் என ,
அன்னவன் அஃது எலாம் அறியக் கூறலும் ,
இன்னலும் , உவகையும் , இரண்டும் எய்தினான் ;
தன் அலாது ஒருபொருள் தனக்குமேல் இலான் .
3.9.86

3728
ஆய்வு உறு பெரும் கடல் அகத்துள் ஆயவன் ,
பாய் திரை வருதொறும் பரியற் பாலனோ ?
தீவினைப் பிறவி வெம் சிறை இல் பட்டயாம் ,
நோய் , உறுதுயர் என நுடங்கல் நோன்மையோ ?

3.9.87

3729
மூவகை , உலகமும் , அமரர் மூவரும்
மேவ அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் ,
ஏவரே கடப்பவர் ? எம்பி ! நீ உளை
ஆவதே வலி ; இனி , அரணும் வேண்டுமோ ?

3.9.88

3730
பிரிபவர் யாவரும் பிரிக ; பேர் இடர்
வருவன யாவையும் வருக ; வார்கழல்
செருவலி வீர ! நின் தீரும் அல்லது
பருவரல் என் வயின் பயிலற் பாலதோ ?

3.9.89

3731
வன் தொழில் வீர !' போர் வலி அரக்கியை
வென்று போர் மீண்டனென் ' என விளம்பினாய் ;
புன் தொழில் அனையவள் புகன்ற சீற்றத்தால்
கொன்று இலை போலுமால் ? கூறுவாய்
என்றான் .
3.9.90

3732
துளைபடு மூக்கொடு செவி துமித்து உகத்
தளை வயின் நகிலொடு தடிந்து நீக்கிய
அளவையில் , பூசலிட்டு அரற்றினாள்
என
இளையவன் , விளம்பி நின்று இருகை கூப்பினான் .
3.9.91

3733
' தொல் இருள் , தனைக் கொ(ல்)லத் தொடர்கின்றாளையும் ,
கொல்லலை , நாசியைக் கொய்து நீக்கினாய் ;
வல்லை நீ ; மனுமுதல் மரபினோய் ! ' எனப்
புல்லினன் ; உவகையின் பொருமி விம்முவான் .
3.9.92

3734
பேர் அருந்துயர் இறை பேர்ந்து உளோர் என ,
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார் ,
வாருணம் நினைந்தனர் , வானம் நீர் உண்டு ,
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார் .
3.9.93

3735
கல் அதர் வெள் இடை கானின் நுண்மணல் ,
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் ,
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் ;
மெல் அடி , இளையவன் வருட , வீரனே .
3.9.94

3736
மயில் இயல் பிரிந்தபின் மான நோயினால் ,
அயில்வு இலன் ஒருபொருள் ; அவலம் எய்தலால் ,
துயில்வு இலன் என்பது , சொல்லற் பாலதோ ?
உயிர் , நெடிது உயிர்ப்பு இடை , ஊசல் ஆடுவான் .
3.9.95

3737
சீதையின் பிரிவாற்றாது இராமன் வருந்துதல்
' மானவள் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ ? அன்று எனின் , அரக்கர் மாயமோ ?
கானகம் முழுவதும் , கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே !
3.9.96

3738
கரும் குழல் செம் அரி கண்ணி , கற்பினோர்
அரும் கலம் , மருங்கு வந்து இருப்ப , ஆசையால்
ஒருங்கு உறத் தழுவுவென் ; ஊறு காண்கிலேன் ;
மருங்குல்போல் ஆனதோ வடிவும் ? மெல்லவே .
3.9.97

3739
' புண்டரிகப் புது மலரில் தேன் பொதி
தொண்டை அம் செம் ஒளி துவர்த்த வாய் அமுது
உண்டனென் ; ஈண்டு அவள் உழையள் அல்லள் ஆல் ;
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ ? '
3.9.98

3740
மண்ணினும் , வானினும் , மற்றை மூன்றினும் ,
எண்ணினும் , நெடியதாய் , ஈரும் ஈட்டத்தால் ,
தண் நறுங் கரும் குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ ? கொடிய கங்குலே ! '
3.9.99

3741
' அப்பு உடை அலங்கு மீன் அமரும் ஆர்கலி
உப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப , மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ , கொதிக்கும் வானமே ?
3.9.100

3742
இன்னன இன்னன பன்னி , ஈடு அழி
மன்னவர் மன்னவன் , மதி மயங்கினான் ;
அன்னது கண்டனன் , அல்கினான் எனத்
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் .
3.9.101

3.10 – Die Tötung Kabandhas

3.10 . கவந்தன் வதைப் படலம் (3743 -3800)

3743
இராம இலக்குவர் விடியலில் புறப்பட்டுப் போதல்
நிலம்' பொறை ஈது ! ' என நிமிர்ந்த கற்பினாள் ,
நலம் பொறை கூர்தரு மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் எனப்
புலம்புறு விடியலில் கடிது போயினார் .
3.10.1

3744
கவந்தன் வனத்தைச் சேர்தல்
ஐ ஐந்து அடுத்த யோசனையின்
இரட்டி , அடவி புடைபடுத்த
வையம் திரிந்தார் ; கதிரவனும்
வானின் நாப்பண் வந்து உற்றான் ;
எய்யும் சிலை கை இருவரும் சென்று ,
இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்று அடக்கும்
கவந்தன் வனத்தின்கண் உற்றார் .
3.10.2

கவந்தன் கைக்குள் புக்க பொருள்களின் இயல்பு (3745-3747)

3745
எறும்பு இனம் கடை உற , யானையே முதல்
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன ;
வெறிப்பு உறு நோக்கின , வெருவுகின்றன ;
பறிப்பு அரு வலை இடை பட்ட பான்மைய .
3.10.3

3746
மரபுளி நிறுத்திலன் , புரக்கும் மாண்பு இலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன ,
வெருவுவ , சிந்துவ , குவிவ , விம்மலோடு
இரிவன , மயங்குவ இயல்பு நோக்கினார் .
3.10.4

3747
மால்வரை உருண்டன வருவ , மா மரம்
கால் பறிந்து இறுவன , கான யாறுகள்
மேல் உள திசை ஒடு வெளிகள் ஆவன ,
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன .
3.10.5

இராம இலக்குவர் கவந்தன் கைக்குள் புகுதல் (3748-3749)

3748
நால் திசைப் பரவையும் , இறுதி நாள் உறக்
காற்று இசைத்து எழ எழுந்து , உலகைக் கால் பரந்து
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல் , திசைச் சுற்றிய கரத்துப் புக்குளார் .
3.10.6

3749
தே மொழி திறம் அத்து இன் ஆல் , அரக்கர் சேனை வந்து
ஏம் உற வளைந்தது என்று உவகை எய்தினார் ;
நேமி மால் வரை என நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கைம் மதிள் கு உள் ஆயினார் .
3.10.7

3750
மகிழ்ச்சியால் இராமன் இலக்குவனுக்குக் கூறுவது
இளவலை நோக்கினன் இராமன் , ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இவ்
அளவையது ஆகுதல் அறிதி , ஐய ! நம்
கிளர் பெருந் துயரமும் கீண்டது ஆம்
என்றான் .
3.10.8

இலக்குவன் சொல் (3751-3752)

3751
முற்றிய அரக்கர்தம் முழங்கு தானையேல் ,
எற்றிய முரசு ஒலி , ஏங்கும் சங்கு இசை
பெற்றிலது , ஆகலின் , பிறிது ஒன்று ஆம்
எனச்
சொற்றனன் இளையவன் , தொழுது முன் நின்றான் .
3.10.9

3752
தெள்ளிய அமுது எழத் தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் ? வேறு ஓர் நாகம்தான் ?
தள்ளுரு வாலொடும் தலையினால் வளைத்து
உள் உறக் கவர்வதே ஒக்கும் , ஊழியாய் !

3.10.10

3753
கவந்தன் தோற்றம்
என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் , நடந்த நாயகன் ;
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு , ஓங்கல்தான்
நின்று என இருந்த அக் கவந்தன் நேர் சென்றார் .
3.10.11

3754
கண்ணும் வாயும்
வெயில் சுடர் இரண்டினை மேருமால் வரை
குயிற்றியது ஆம் எனக் கொதிக்கும் கண்ணினன் ,
எயிற்று இடைக்கு இடை இரு காதம் ஈண்டிய
வயிறு இடை வாய் எனும் மகர வேலையான் .
3.10.12

3755
கைகளின் நீட்சி
ஈண்டிய புலவரோடு அவுணர் , இந்துவைத்
தீண்டிய நெடுவரைத் தெய்வ மத்தினைப்
பூண்டு உயர் வடம் இரு புடை உம் வாங்கலின் ,
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் .
3.10.13

3756
மூக்கும் நாக்கும்
தொகைக் கனல் கருமகன் துருத்தித் தூம்பு எனப்
புகை கொடி கனலொடு பொடிக்கும் மூக்கினான்
பகைத் தகை நெடுங்கடல் பருகும் பாவகன்
சிகைக் கொழுந்து இது எனத் திருகு நாவினான் .
3.10.14

3757
கோரப் பற்கள்
புரண்டு பாம்பு இடைவர வெருவி புக்கு உறை
அரண் தனை நாடி ஓர் அருவி மால்வரை
முரண் தொகு முழைநுழை முழுவெண் திங்களை
இரண்டு கூறு இட்டு என இலங்கு எயிற்றினான் .
3.10.15

3758
உடம்பின் இயல்பு
ஓதம் நீர் மண் இவை முதல ஓதிய
பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அன்றியே ,
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் .
3.10.16

3759
செவியும் வயிறும்
வெய்ய வெங் கதிர்களை விழுங்கும் வெவ் அராச்
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் ,
பொய் கிளர் வன்மையில் பிரியும் புன்மையோர்
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் .
3.10.17

3760
வாய்
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரித்தான்
பற்றிய கரத்தினன் , பணைத்த பண்ணையில்
துற்றிய புகுதரும் தோற்றத்தால் , யமன்
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் .
3.10.18

3761
உடம்பு
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் ,
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் ,
நீலமால் , நேமியின் தலையை நீக்கிய
கால நேமியைப் பொரும் கவந்தக் காட்சியான் .
3.10.19

3762
இருவரும் நோக்குதல்
தாக்கிய தணப்பு இல் கால் எறியத் தன் உடை
மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்
ஆக்கையின் இருந்தவன் தன்னை அவ் வழி
நோக்கினார் இருவரும் , நுணங்கு கேள்வியார் .
3.10.20

3763
வாயைப் பார்த்து ஐயுறல்
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ்
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் ;
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது ?
என்று உன்னினார் .
3.10.21

இராம இலக்குவர் உரையாடல் (3764-3778)

3764
அவ்வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
வெவ்வியது , ஒரு பெரும் பூதம் , வில் வலாய் !
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் ;
செய்வது என் இவண் ?
எனச் செம்மல் சொல்லுவான் .
3.10.22

3765
பாரிடம் ஏ இது , பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப் பரந்த மெய்யது ,
பார் ! இடம் வலம் வரப் பரந்த கையது ,
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் !

3.10.23

3766
தோகையும் பிரிந்தனள் , எந்தை துஞ்சினன் ,
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலேன் ;
ஆகலின் , யான் , இனி , இதனுக்கு ஆமிடம் ;
ஏகுதி ஈண்டு நின்று , இளவலே !
என்றான் .
3.10.24

3767
ஈன்றவர் இடர் பட , எம்பி துன்பு உற
சான்றவர் துயர் உற பழிக்குச் சார்வுமாய்த்
தோன்ற வல்லேன் உயிர் துறந்தபோது அலால் ,
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ ?

3.10.25

3768
'இல் இயல்பு உடைய நீர் அளித்த இன்சொல் ஆம்
வல்லி அவ் அரக்கர் தம் மனை உளாள் ' எனச்
சொல்லினென் , மலை எனச் சுமந்த தூணியென் ,
வில்லினென் , செல்வெனோ மிதிலை வேந்தன்பால் ?

3.10.26

3769
'தளை அவிழ் கோதையைத் தாங்கல் ஆற்றலன் ,
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன்
உளன் ' என உரைத்தலின் ,' உம்பரான் ' என
விளைதல் நன்று ஆதலின் , விளிதல் நன்று
என்றான் .
3.10.27

3770
ஆண்டான் இன்னன பன்னிட , ஐயற்கு இள வீரன் ,
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் , இவ் இடர் வந்து
மூண்டால் , முன்னே ஆர் உயிரோடும் முடியாதே
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை
என்றான் .
3.10.28

3771
என்றான் என்னாப் பின்னும் இசைப்பான் , இடர் தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் ? விரவார் இன் ,
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே
பொன்றான் என்றால் , நீங்குவது அன்றோ புகழ் அம்மா ?

3.10.29

3772
'மானே அன்னாள் தன்னொடு தம் முன் வரை ஆரும்
கானே வைகக் கண் துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனான் , என்னே ! ' என்றவர் முன்னே ,' அவர் இன்றித்
தானே வந்தான் ' என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ ?

3.10.30

3773
என்தாய் ,' உன்முன் ஏவிய யாவும் இசை ; இன்னல்
பின்றாது எய்திப் பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் ,
பொன்றா முன்னம் பொன்றுதி ' என்றாள் ; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா ?

3.10.31

3774
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்புப் பிழையாமல் ,
நல் பொன் தோளாய் ! நல்லவர் பேண நனி நிற்கும்
சொல் பெற்றோம் ; மற்று ஆருயிர் பேணித் துறவேம் ஆல் .

3.10.32

3775
ஓதும் கால் , அப்பல் பொருள் முற்று உற்று , ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் ;
மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின் தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதி போலும் ? பொருள் உண்டோ ?

3.10.33

3776
கேட்டார் கொள்ளார் , கண்டவர் பேணார் ,' கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர் குழல் தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல
மாட்டான் மாண்டான் ' என்றலின் மேலும் வசை உண்டோ ?

3.10.34

3777
தணிக்கும் தன்மைத்து அன்று
எனின் அன்று , இ தகை வாளால் ;
கணிக்கும் தன்மைத்து அன்று ,
விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும் , பெய்
பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி ;
துன்பம் துற
என்றான் .
3.10.35

3778
என்னா , முன்னே செல்லும் இளங்கோ ; இளையோற்கு
முன்னே செல்லும் முன்னவன் ; அன்னானினும் முந்தும்
தன்நேர் இல்லாத் தம்பி ; தடுப்பார் பிறர் இல்லை ;
அன்னோ ! கண்டார் உம்பரும் , வெய்துற்று அழுதாரால் .
3.10.36

3779
யார் என்று வினவிய கவந்தனை வெகுண்டு நிற்றல்
இனையர் ஆகிய இருவரும் , முகத்து இரு கண் போல் ,
கனையும் வார்கழல் வீரர் சென்று அணுகலும் , கவந்தன் ,
வினையின் எய்தினிர் யாவர் கொலாம் ? என்று வினவ ,
நினையும் நெஞ்சினர் , இமைத்திலர் , உருத்தனர் , நின்றார் .
3.10.37

3780
கவந்தன் இருதோள்களை இருவரும் அரிதல்
அழிந்து உளார் அலர் ; இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் ;
பொழிந்த கோபத்தன் ; புது பொறி மயிர் புறம் பொடிப்ப ,
விழுங்குவேன் என விரையலும் , விண் உற , வீரர் ,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் , இட்டார்
3.10.38

3781
கவந்தன் கைகளற்ற தோற்றம்
கைகள் அற்று , வெம் குருதி ஆறு ஒழுக்கிய கவந்தன் ,
மெய்யின் , மேற்கொடு கிழக்கு உற பெருநதி விரவும் ,
சைய மா நெடுந் தாழ் வரை தனி வரை தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் .
3.10.39

3782
கவந்தன் பழைய தெய்வ உருவம் பெறல்
ஆளும் நாயகன் அம் கையில் தீண்டிய அதனால் ,
மூளும் சாபத்தின் முந்திய தீ வினை முடித்தான் ;
தோளும் வாங்கிய தோம் உடை யாக்கையைத் துறவா ,
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் .
3.10.40

3783
விண்ணில் நின்றவன் , விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன்
எனக் கருத்து உற உணர்ந்தான் ,
எணில் அன்னவன் குணங்களை வாய் திறந்து , இசைத்தான் ,
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருள் ஏ ?
3.10.41

இராமனைத் துதித்தல் (3784-3792)

3784
ஈன்றவனோ எப்பொருள் உம் ? எல்லைதீர் நல் அறம் அத்து இன்
சான்றவனோ ? தேவர் தவத்தின் தனிப்பயனோ ?
மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ ?
தோன்றி , அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய் !

3.10.42

3785
மூலமே இல்லா முதல்வனே ! நீ முயலும்
கோலமோ , யார்க்கும் தெரிவு அரிய கொள்கைத்தால் ;
ஆலமோ ? ஆலின் அடையோ ? அடை கிடந்த
பாலனோ ? வேலைப் பரப்போ ? பகராயே !

3.10.43

3786
காண் பார்க்கும் காணப் படு பொருட்கும் கண் ஆகிப்
பூண்பாய் போல் நிற்றியால் , யாது ஒன்றும் பூணாதாய் !
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதி ஆல் ;
ஆண்பாலோ ? பெண்பாலோ ? அ பால் ஓ ? எ பால் ஓ ?

3.10.44

3787
'ஆதிப் பிரமனும் நீ ! ஆதிப் பரமனும் நீ !
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ !
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ' என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ வேறு உள்ளார் ?

3.10.45

3788
எண்திசையும் திண் சுவர் ஆ , ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகு உடைய
மண்டலங்கள் மூன்றின்மேல் நின்று , மலராத
புண்டரிக மொட்டின் பொகுட்டே புரை ; அம்மா !

3.10.46

3789
மண் பால் அமரர் வரம்பு ஆரும் காணாத ,
எண்பால் உயர்ந்த , எரி ஓங்கு நல் வேள்வி
உண்பாய் நீ , ஊட்டுவாய் நீ ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார் ? பகராய் , பரமேட்டி !

3.10.47

3790
நிற்கும் நெடும் நீத்தம் நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல , முரண் இற்ற அண்டங்கள் ,
ஒக்க உயர்ந்து , உனுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ ? பரம்பரனே !

3.10.48

3791
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் ?
உன் செய்கை அன்னவைதாம் சொன்ன ஒழுக்கினவோ ?
என் செய்தேன் முன்னம் ? மறம் செய்கை எய்தினார்
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய் .
3.10.49

3792
மாயப் பிறவி மயல் நீக்கி , மாசு இலாக்
காயம் அத்து ஐ நல்கித் துயரின் கரை ஏற்றிப்
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம்பெருமான் !
நாய் ஒத்தேன் , என்னநலன் இழைத்தேன் நான் ?
என்றான் .
3.10.50

3793
பணிந்துநின்ற கவந்தனை இராமன் காணுதல்
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறியக் கூறுவெனேல்
ஒன்றாது தேவர் உறுதிக்கு
என உன்னாத்
தன்தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையனாய்
நின்றானைக் கண்டான் , நெறிநின்றார் நேர்நின்றான் .
3.10.51

3794
இலக்குவனுக்கு அவனைக்காட்டி ஆராய்க எனல்
பாராய் இளையவனே ! பட்ட இவன் , வேறே ஓர்
பேராளன் தானாய் , ஒளி ஓங்கும் பெற்றியனாய் ;
நேர் ஆகாயத்தில் நிற்கின்றான் ; நீ , இவனை
ஆராய் !
என , அவனும் ஆர்கொலோ நீ ? என்றான் .
3.10.52

3795
கவந்தன் தன் வரலாறு கூறுதல்
சந்தம் பூண் அலங்கல் வீர !
தனு எனும் நாமத்தேன் ஓர்
கந்தர்ப்பன் ; சாபத்தால் , இக்
கடை படு பிறவி கண்டேன் ;
வந்து உற்றீர் மலர் கை தீண்ட ,
முன் உடை வடிவம் பெற்றேன் ;
எந்தைக்கும் எந்தை நீரே !
இசைப்பது கேண்மின் !
என்றான் .
3.10.53

துணை இன்றியமையாதது எனல் (3796-3797)

3796
கணை உலாம் சிலையினீரைக்
காக்குநர் இல்லை ஏனும் ,
இணை இலாள் தன்னை நாடற்கு ,
ஏயன செய்தற்கு ஏற்கும் ;
புணை இலாதவற்கு வேலை
போக்கு அரிது ; அன்னது ஏ போல் ,
துணை இலாதவற்கும் , இன்றால் ,
பகை புலம் தொலைத்து நீக்கல் .

3.10.54

3797
பழிப்பு அறும் நிலைமை , ஆண்மை ;
பகர்வது என் ? பதும பீடம் அத்து
உழிப் பெரும் தகைமை சான்ற
அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவனான
அண்ணலும் , அறிதிர் அன்றே
ஒழிப்பு அரும் திறல் பல்பூத
கணத்தொடும் உறையும் உண்மை .

3.10.55

3798
ஆயது செய்கை என்பது ,
அறம் துறை நெறியின் எண்ணித்
தீயவர்ச் சேர்க்கிலாது ,
செவ்வியோர்ச் சேர்த்துச் செய்தல் !
தாயினும் உயிர்க்கு நல்கும்
சவரியைத் தலை பட்டு , அன்னாள்
ஏயதோர் நெறியின் எய்தி ,
இரலையின் குன்றம் ஏறி .

3.10.56

3799
சுக்கிரீவனைத் துணையாகக் கொள்க எனல்
கதிரவன் சிறுவன் ஆய
கனக வாள் நிறத்தினானை
எதிர் உற தழுவி நட்பின்
இனிது அமர்ந்து அவனின் நீண்ட
வெதிர் பொரு தோளினாளை
நாடுதல் விழுமிது
என்றான் ;
அதிர் கழல் வீரர் தாமும்
அன்னதே அமையும் என்றார் .
3.10.57

3800
இராம இலக்குவர் மதங்கன் இருக்கை சேர்தல்
ஆனபின் தொழுது , வாழ்த்தி , அந்தரம் அத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாம் உம் அத்திசை வழிக் கொண்டு ஏகிக் ,
கானமும் மலையும் நீங்கிக் , கங்குல் வந்து இறுத்த காலை ,
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் .
3.10.58

3.11 – Shabaris Befreiung aus der Wiedergeburt

3.11 . சவரி பிறப்பு நீங்கு படலம் (3801- 3809)

3801
கண்ணிய தருதற்கு ஒத்த
கற்பக தருவும் என்ன ,
உண்ணிய நல்கும் செல்வம்
உறுநறும் சோலை , ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றித்
துன்பங்கள் இல்லையான
புண்ணியம் புரிந்தோர் வைகும்
துறக்கமே போன்றது அன்று , ஏ !
3.11.1

3802
அன்னது ஆம் இருக்கை நண்ணி ,
ஆண்டு நின்று , அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும்
சவரியைத் தலைப்பட்டு , அன்னாட்கு
இன் உரை அருளித் தீது இன்று
இருந்தனை போலும் ?
என்றான் ,
முன் இவற்கு இது என்று எண்ணல்
ஆவது ஓர் மூலம் இல்லான் .
3.11.2

3803
ஆண்டு , அவள் அன்பின் ஏத்தி ,
அழுது இழி அருவிக் கண்ணள் ,
மாண்டது என் மாயம் பாசம் !
வந்தது வரம்பு இல் காலம்
பூண்டமா தவத்தின் செல்வம் !
போயது பிறவி !
என்பாள் ,
வேண்டிய கொணர்ந்து நல்க ,
விருந்து செய்து இருந்த வேலை .
3.11.3

3804
ஈசனும் , கமலத் தோனும் , இமையவர் யாரும் , எந்தை !
வாசவன் தானும் ஈண்டு வந்தனர் , மகிழ்ந்து நோக்கி ,
' ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது ; இராமற்கு ஆய
பூசனை விரும்பி , எம்பால் போதுதி ' என்று போனார் .

3.11.4

3805
இருந்தனென் , எந்தை ! நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட ; இன்றுதான் என் புண்ணியம் பூத்தது
என்ற
அருந் தவத்து அரசி தன்னை அன்பு உற நோக்கி , எங்கள்
வருந்து உறு துயரம் தீர்த்தாய் , அம்மனை ! வாழி !
என்றான் .
3.11.5

3806
அனகனும் இளைய கோவும்
அன்று அவண் உறைந்த பின்றை ,
வினை அறு நோன்பினாளும்
மெய்ம்மையின் நோக்கி , வெய்ய
துனை பரி தேரோன் மைந்தன்
இருந்த அத் துளக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த
நெறி எலாம் நினைந்து சொன்னாள் .
3.11.6

3807
வீட்டினுக்கு அமைவது ஆன
மெய் நெறி வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன ,
அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ ,
கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும்
அமுதத்தின் சுவையாய் நின்றான் .
3.11.7

3808
பின் , அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியால் ஏ
தன் உடல் துறந்து , வானம் தனிமையின் இனிது சார்ந்தாள் ;
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவு இன்று எய்திப்
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்பப் புகன்ற மா நெறியில் போனார் .
3.11.8

3809
தண் எனும் கானும் குன்றும் நதிகளும் தவிரப் போனார் ,
மண் இடை வைகல் தோறும் வரம்பு இலா மாக்கள் ஆடக்
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே
புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் .
3.11.9

Kishkindha Kandam – Das Buch von Kishkindha

Mit Hanuman und Sugriva entsteht eine Gemeinschaft des Suchens. Das Buch erzählt von Freundschaft und Verpflichtung, aber auch von schwierigen Entscheidungen, deren Folgen nicht einfach verschwinden.

4.1 – Der Pampa-See

4.1 . பம்பைப் படலம் (3810-3852)

4 . கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய இராமாயணம்
கிட்கிந்தா காண்டம் (முதற் பகுதி) (3810 - )

3810
கடவுள் வாழ்த்து
மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல் ,
தோன்று உரு எவையும் அம்முதல ; சொல்லுதற்கு
ஏன்ற உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
ஊன்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் .

3811
பம்பைப் வருணனை (3811-3831)
தேன் படி மலரது , செம் கண் வெம் கை மா
தான் படிகின்றது , தெளிவு சான்றது ,
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடை கிடந்த மாண்பது .
4.1.1

3812
ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல் ,
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்
சேர்ந்து உழி சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது . .
4.1.2

3813
குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்
கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்
தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்
உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது .
4.1.23

3814
ஓதம் நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேத பாரகரையும் விதிக்க வேட்ட நாள் ,
சீதம் நீர் உவரியைச் செகுக்குமாறு , ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது .
4.1.4

3815
எல் படர் நாகர் தம் இருக்கை ஈது எனக்
கிற்பது ஒர் காட்சியது எனினும் கீழ் உறக்
கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது .
4.1.5

3816
களம் நவில் அன்னமே முதல கண்ணகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க , இன்னதோர்
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ; ஆதலால்
வள நகர்க் கூலமே போலும் மாண்பது .
4.1.6

3817
அரி மலர்ப் பங்கயம் அத்து அன்னம் , எங்கணும் ,
'புரி குழல் புகு இடம் புகல்கிலாத யாம் ,
திருமுகம் நோக்கலம் , இறந்து தீர்தும் ' என்று
எரி புகுவன எனத் தோன்றும் ஈட்டது .
4.1.7

3818
காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும்
மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் எனப்
பாசு அடை வயின் தொறும் பரந்த பண்பது .
4.1.8

3819
களிப்பு அடா மனத்தவன் காணின் , கற்பு எனும்
கிளிப் படா மொழியவள் விழியின் கேள் எனத்
துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும் என்று
ஒளிப் படாது ஆயிடை ஒளிக்கும் மீனது .
4.1.9

3820
கழை படு முத்தமும் கலுழிக் கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி , நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால்
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது .
4.1.10

3821
பொங்கு வெம் கடம் கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலின்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது .
4.1.11

3822
விண் தொடர் நெடு வரைத் தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் , ஓதியர்
தொண்டை அம் கனி இதழ்த் துப்பின் சான்றது .
4.1.12

3823
ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்தது ஆம் என
ஓர்வு இல கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது .
4.1.13

3824
தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம்
வான் அரமகளிர் தம் வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது .
4.1.104

3825
ஏறிடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒண் நகர் உறைத்த ஒண் தளச்
சேறிடு பரணியில் திகழும் தேசது .
4.1.105

3826
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
வவ்வி , மாந்தரில் களி மயக்கு உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வும் மீனொடு முழுகின எழுவன கரண்டம் .
4.1.16

3827
கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலம் அத்து
அவளை ஈகிலம் , ஆவது செய்தும் , என்று அருளித்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ , செம் கண்
குவளை காட்டுவ , துவர் இதழ் காட்டுவ குமுதம் .
4.1.17

3828
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ ,
வைகலும் புனல் குடைபவர் வான் அரமகளிர் ,
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூ கொம்பர் பொலிவ .
4.1.18

3829
ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் , படிகம்
போலும் வார்புனல் புகுந்து உள ஆம் எனப் பொங்கி ,
ஆலும் மீன் கணம் அஞ்சின அலமர , வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குரண்டம் .
4.1.19

3830
அங்கு ஒர் பாகத்தில் , அஞ்சன மணி நிழல் அடையப் ,
பங்கு பெற்று அதில் , பதுமராகத்து ஒளி பாயக் ,
கங்குலும் பகலும் எனப் பொலிவு எய்து கரைய ;
மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம் .
4.1.20

3831
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய ,
ஒலி நடத்திய திரை தொறும் உகள்வன நீர்நாய் ,
கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவினப்
பொலிவு உடைத்து எனத் தேரைகள் புகழ்வன போலும் .
4.1.21

3832
இராமன் சீதையை நினைந்து புலம்புதல் (3832-3843)
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகிக்
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் ,
தன்னின் நீங்கிய தளிர் இயற்கு உருகினன் தளர்வான் ,
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிடப் புலம்புதல் உற்றான் .
4.1.22

3833
வரி ஆர் மணிக் கால் வாளமே !
மட அன்னங்காள் எனை நீங்கத்
தரியாள் நடந்தாள் ; இல்லளேல் ,
தளர்ந்த போதுந் தகைவேயோ ?
எரியா நின்ற ஆர் உயிருக்கு
இரங்கினால் , ஈது இசையன்றோ !
பிரியாது இருந்தீர் ஒரு மாற்றம்
பேசில் பூசல் பெரிது ஆமோ ?
4.1.23

3834
வண்ண நறும் தாமரை மலரும்
வாசக் குவளை நாண் மலரும் .
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம்
பொதியும் மருந்தின் தரும் பொய்காய் !
கண்ணும் முகமும் காட்டுவாய் ;
வடிவும் ஒருகால் காட்டாயோ ?
ஒண்ணும் என்னின் அ•து உதவாது
உலோவினாரும் உயர்ந்தாரோ ?
4.1.24

3835
விரிந்த குவளை செம் ஆம்பல்
விரைமென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை
என்று இத்தகையதமை நோக்கி ,
மருந்தின் அனையாள் அவயவங்கள்
அவை நின்கண்டேன் ; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ ?
ஆவி ! உரைத்தி ஆம் அன்று ஏ .
4.1.25

3836
ஓடாநின்ற களி மயிலே !
சாயற்கு ஒதுங்கி , உள் அழிந்து
கூடாதாரில் திரிகின்ற
நீயும் ஆகம் குளிர்ந்தாயோ !
தேடா நின்ற என் உயிரைத்
தெரியக் கண்டாய் ! சிந்தை உவந்து
ஆடா நின்றாய் , ஆயிரம் கண்
உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ ?
4.1.26

3837
அடையீர் எனினும் ஒரு மாற்றம்
அறிந்தது உரையீர் அன்னத்தின்
பெடையீர் ! ஒன்றும் பேசீரோ ?
பிழையா தேற்குப் பிழைத்தீரோ !
நடைநீர் அழியச் செய்தாரே
நடு இலாதார் ; நனி அவரோடு
உடையீர் பகைதான் , உமை நோக்கி
உவக்கின்றேனை முனிவீரோ .
4.1.27

3838
பொன் பால் பொருவும் விரை அல்லி
புல்லிப் பொலிந்த பொலம் தாது
தன்பால் தழுவும் குழல் வண்டு
தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே !
என்பால் இல்லை ; அப்பாலோ
இருப்பாரல்லர் ; விருப்பு உடைய
உன்பால் இல்லை என்றபோது
ஒளிப்பாரோடும் உறவு உண்டோ ?
4.1.28

3839
ஒரு வாசகத்தை வாய் திறந்திட்டு
உதவாப் பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
திருவாய் அனைய சேதாம்பற்கு
அயலே கிடந்த செம்கிடையே !
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்த்து
விளங்கும் செவ்விக் கொழும் கனிவாய்
தருவாய் , அவ் வாய் முகிழ் நகையும்
தண் என் மொழியும் தாராயோ .
4.1.29

3840
அலம் கண் உற்றேற்கு உற்று உதவற்கு
அடைவு உண்டன்றோ ! கொடிவள்ளாய் !
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை
காதே , மற்றொன்று அல்லை ; ஆல்
பொலக் குண்டலமும் கொடும் குழை உம்
புனைதாழ் முத்தின் பொன்தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ ?
இன்னும் பூசல் விரும்புதியோ ?
4.1.30

3841
பஞ்சு பூத்த விரற் பதுமம்
பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின்
நிலையம் பூத்தாள் , நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த
குழலாள் கண்போல் மணிக் குவளாய் !
நஞ்சு பூத்தது ஆம் அன்ன
நகையால் என்னை நலிவாயோ .
4.1.31

3842
என்று அயா உயிர்க்கின்றவன் , ஏடு அவிழ்
கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி , யான்
பொன்ற யாதும் புகல்கிலை போலும் ஆல்
வன் தயா இலி என்று வருந்தினான் .
4.1.32

3843
வார் அளித் தழை மாப் பிடி வாய் இடை
கார் அளிக் கலுழிக் கரும் கை மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான் .
4.1.33

3844
இலக்குவன் இராமனை மாலைக்கடன் இறுக்குமாறு தூண்டுதல்
ஆண்டு அவ் வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி போழுது கழிந்ததால்
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் .
4.1.34

3845
இராமன் நீராடி மாலைக்கடனிறுத்தல் (3845-3847)
அரைசும் அவ் வழி நின்று அரிது ஏகி அத்
திரை செய் தீர்த்தமும் செய் தவம் உண்மையால்
வரை செய் மும்முத வாரணம் நாண் உற
விரைசெய் பூ புனல் ஆடலை மேயினான் .
4.1.35

3846
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்
தீத்த காமத் தெறு கதிர் தீயினால்
காய்த்து இரும்பைக் கருமகக் கம்மியன்
தோய்த்த தண் புனல் ஒத்தது தோயமே .
4.1.36

3847
ஆடினான் அன்னமாய் அருமறைகள் பாடினான் ,
நீடுநீர் முன்னை நூல் நெறி முறையின் நேமிதாள் ,
சூடினான் முனிவர் தம் தொகுதிசேர் சோலைவாய்
மாடுதான் வைகினான் ; எரி கதிர் உம் வைகினான் .
4.1.37

3848
மதி தோன்றுதல்
அந்தியாள் வந்து , தான் அணுக , அங்கு அணுகு உறாச்
சந்தம் ஆர் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய்பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என .
4.1.38

3849
இரவில் யாவும் துயில இராமன் துயிலாமை (3849-3850)
பூ ஒடுங்கின ; விரவு புள் ஒடுங்கின , பொழில்கள் ;
மா ஒடுங்கின ; மரனும் இலை ஒடுங்கின ; கிளிகள் ,
நா ஒடுங்கின ; மயில்கள் நடம் ஒடுங்கின ; குயில்கள்
கூ ஒடுங்கின ; பிளிறு குரல் ஒடுங்கின களிறு .
4.1.39

3850
மண் துயின்றன ; நிலைய மலை துயின்றன ; மறு இல்
பண் துயின்றன ; விரவு பணி துயின்றன ; பகரும்
விண் துயின்றன ; கழுதும் விழி துயின்றன ; பழுது இல்
கண் துயின்றில , நெடிய கடல் துயின்றது ஒர் களிறு .
4.1.40

3851
சூரியன் உதித்தல்
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் பகையினொடு
பங்கம் உற்று அளவு இல் வினை பரிவு உறும் படி முடிவு இல்
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தன ; கடலில்
வெம் கதிர்க் கடவுள் எழ , விமலன் வெம் துயரின் எழ .
4.1.41

3852
இராம இலக்குவர் சீதையைத் தேடிச் செல்லுதல்
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய
ஆலை ஏய் துழனி அகன் நாடர் ஆர்கலி அமிழ்து
போலவே உரை செய் புன மானை நாடுதல் , புரிஞர் .
4.1.42


4.2 – Hanuman

4.2 . அனுமப் படலம் (3853 -3887 )

3853
இராம இலக்குவர் வருவதைக் கண்டு சுக்கிரீவன் ஓடி ஒளிதல் (3853-3854)
எய்தினார் , சவரி , நெடிது ஏய மால்வரை எளிதின் ;
நொய்தின் ஏறினர் அதனின் ; நோன்மை சால் கவி அரசு ,
செய்வது ஓர்கிலன் , 'இவர்கள் தெவ்வராம் ' என வெருவி ,
'உய்தும் நாம் ' என , விரைவின் ஓடினான் , மலை முழையின் .
4.2.1

3854
அமைச்சர் அனுமனை ஏவி ஒளிதல்
காலின் மா மதலை ! இவர் காண்மினோ ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் ; வரிசிலையர் ;
நீல மால் வரை அனையர் ; நீதியா நினைமின் என ,
மூலம் ஓர்கிலர் , மறுகி ஓடினார் , முழை அதனின் .
4.2.2

3855
அனுமன் அவரை அஞ்சல் என்றல்
அவ் இடத்து , அவர் மறுகி , அஞ்சி , நெஞ்சு அழி அமைதி ,
வெம் விடத்தினை மறுகு தேவர் , தானவர் , வெருவல்
தவ்விடத் , தனி அருளு தாழ்சடைக் கடவுள் என ,
'இவ் இடத்து இனிது இருமின் ; அஞ்சல் ' என்று இடை உதவி .
4.2.3

3856
அனுமன் இராம இலக்குவரைக் கண்டுணர்தல்
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் , அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி , ஒரு மாணவப் படிவமொடு ,
'வெஞ்சமத் தொழிலர் , தவம் மெய்யர் , கை சிலையர் ' என ,
நெஞ்சு அயிர்த்து , அயல் மறைய நின்று , கற்பினின் நினையும் .
4.2.4

3857
அனுமன் உய்த்துணர்ச்சி (3857-3860)
'தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின் ,
மூவர் ; மற்று , இவர் இருவர் ; மூரிவில் கரர் ; இவரை
யாவர் ஒப்பவர் , உலகின் ? யாது இவர்க்கு அரிய பொருள் ?
கேவலம் அத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு ? '
4.2.5

3858
சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் , தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர் ; நோவுறச் சிறியர் அலர் ;
அந்தரத்து அமரர் அலர் ; மானிடப் படிவர் ; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறும் நிலையர் .
4.2.6

3859
'தருமமும் , தகவும் , இவர் தனம் எனும் தகையர் ; இவர் ,
கருமமும் பிறிது ஒர்பொருள் கருதி அன்று ; அது கருதின் ,
அரும் மருந்து அனையது , இடை அழிவு வந்து உளது ; அதனை ,
இரு மருங்கினும் , நெடிது துருவுகின்றனர் , இவர்கள் ' .
4.2.7

3860
'கதம் எனும் பொருண்மை இலர் ;
கருணையின் கடல் அனையர் ;
இதம் எனும் பொருள் அலது , ஒர்
இயல்பு உணர்ந்திலர் இவர்கள் ;
சதமன் அஞ்சுறும் நிலையர் ;
தருமன் அஞ்சுறு சரிதர் ;
மதனன் அஞ்சுறு வடிவர் ;
மறலி அஞ்சுறு விறலர் .
4.2.8

3861
அனுமனின் அன்புணர்ச்சி
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி ,
அன்பினின் , உருகுகின்ற உள்ளத்தன் , ஆர்வத்தோரை
முன் பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்
தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் .
4.2.9

3862
அனுமான் , விலங்கின் அன்பைக் கண்டு வியத்தல்
'தன் கன்று கண்ட அன்ன
தன்மைய , தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா ,
வேங்கை என்று இனையவேயும் ,
பின் சென்று , காதல் கூரப்
பேழ்கணித்து இரங்குகின்ற ;
என் கன்றுகின்றது எண்ணிப்
பற்பல இவரை ? அம்மா ! '
4.2.10

3863
பறவை , மேகம் பணிபுரிதல்
'மயில் முதல் பறவை எல்லாம் , மணி நிறம் அத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி மீதா , விரி சிறை பந்தர் வீசி
எயில் வகுத்து எய்துகின்ற ; விண் முகில் கணங்கள் எங்கும்
பயில்வு உற , திவலை சிந்திப் பயப் பயத் தழுவும் , பாங்கர் ' .
4.2.11

3864
நிலைத்திணைப் பொருள்களின் நெகிழ்ச்சி
'காய் எரி கனலும் கற்கள் ,
கள் உடை மலர்களே போல் ,
தூய செங்கமல பாதம்
தோய் தொறும் குழைந்து தோன்றும் ;
போயின திசைகள் தோறும் ,
மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும் , தொழுவபோல் ; இங்கு ,
இவர்களோ தருமம் ஆவார் ? '
4.2.12

3865
அனுமான் தன் அன்பிற்குக் காரணம் ஆராய்தல்
துன்பினைத் துடைத்து , மாயத்
தொல் வினை தன்னை நீக்கித்
தென்புலத்து அன்றி , மீளா
நெறி உய்க்கும் தேவரோ தாம் ?
என்பு நெக்கு உருகுகின்றது ;
இவர்கின்றது அளவு இல் காதல் ;
அன்பினுக்கு அவதி இல்லை ;
அடைவு என்கொல் ? அறிதல் தேற்றேன் .
4.2.13

3866
அனுமன் எதிர் சென்று வரவேற்றல்
இ வழி எண்ணி , ஆண்டு , அவ் இருவரும் எய்தலோடும் ,
செம் வழி உள்ளத் தானும் , தெரிவு உற எதிர்சென்று எய்திக்
'கவ்வை இன்றாக , நுங்கள் வரவு ! ' எனக் , கருணையோனும் ,
எ வழி நீங்கியோய் ? நீயார் ? என , விளம்பல் உற்றான் .
4.2.14

3867
அனுமன் விடை (3867-3868)
'மஞ்சு எனத் திரண்ட கோல
மேனிய ! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி ,
நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண !
யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் ;
நாமமும் அனுமன் என்பேன் ; '
4.2.15

3868
'இம் மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் ; தேவ ! நும்வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ , வினவிய வந்தேன் ' என்றான் -
எ மலை குலமும் தாழ , இசை சுமந்து , எழுந்த தோளான் .
4.2.16

3869
இராமன் அனுமனைத் தனக்குள் பாராட்டுதல்
மாற்றம் அஃது உரைத்தலோடும் ,
வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்ற , இவனின் ஊங்குச்
செவ்வியோர் இன்மை தேறி ,
'ஆற்றலும் , நிறையும் , கல்வி
அமைதியும் , அறிவும் , என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் '
என , விளம்பலுற்றான் .
4.2.17

3870
இராமன் இலக்குவனிடம் அனுமனைப் புகழ்தல் (3870-3871)
`'இல்லாத உலகத்து எங்கும்
ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் , வேதக்
கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ?
யார்கொல் இச்சொல்லின் செல்வன் ?
வில் ஆர் தோள் இளைய ! வீர ! –
விரிஞ்சனோ ? விடை வலான் ஓ ?
4.2.18

3871
மாணி ஆம் படிவம் அன்று ,
மற்று இவன் வடிவம் ; மைந்த !
ஆணி இவ் உலகுக்கு எல்லாம்
என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமை தன்னைச்
சிக்கு அறத் தெளிந்தேன் ; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று ,
தம்பிக்குக் கழறிக் , கண்ணன் .
4.2.19

3872
இராமன் சுக்கிரீவனைக் காட்டுமாறு கூறல்
'எவ்வழி இருந்தான் , சொன்ன கவி குலம் அத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம் ;
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத் தோனைக் காட்டுதி , தெரிய ' என்றான் .
4.2.20

3873
அனுமன் பாராட்டு
'மாதிரப் பொருப்பு ஓடு ஓங்கு
வரம்பு இலா உலகின் , மற்றுப்
பூதரப் புயத்து வீரர்
நும் ஒக்கும் புனிதர் யாரே ?
ஆதரித்து அவனைக் காண்டற்கு
அணுகினிர் என்னின் , அன்னான் ,
தீது அவித்து அமையச் செய்த ,
செய்தவச் செல்வம் நன்றே ! '
4.2.21

3874
அனுமன் சுக்கிரீவனுடைய வரலாறு கூறுதல்
'இரவிதன் புதல்வன் தன்னை ,
இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு இலன் சீறப் , போந்து ,
பருவரற்கு ஒருவன் ஆகி ,
அருவி அம் குன்றின் , என்னோடு
இருந்தனன் ; அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்
வரையினும் வளர்ந்த தோளீர் ! '
4.2.22

3875
அஞ்சினர்க்கு அடைக்கலம் கொடுத்தலின் சிறப்புக் கூறியது (3875-3876)
'ஒடுங்கல் இல் உலகம் யாவும்
உவந்தன உதவி , வேள்வி
தொடங்கின , மற்றும் , முற்றத்
தொல் அறம் துணிவர் அன்றே ,
கொடும் குலம் பகைஞன் ஆகிக்
கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும்
அதனினும் , நல்லது உண்டோ ? '
4.2.23

3876
‘’ எம்மையே காத்திர் என்றல்
எளிது அரோ ! இமைப்பு இலாதோர்
தம்மையே முதலிட்டு , ஆன்ற
சராசரம் சமைத்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும்
முதல்வர்நீர் ; முருகற் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு ,
இதின் வரும் உறுதி உண்டோ ?
4.2.24

3877
அனுமன் விரும்பியவாறு இலக்குவன் தம் வரலாறு கூறல் (3877-3880)
'யார் என விளம்புகேன் நான் ,
எம்குலத் தலைவற்கு , உம்மை ?
வீரர் ! நீர் பணித்திர் ! ' என்றான் ,
மெய்ம்மையின் வேலி போல்வான் ;
வார்கழல் இளைய வீரன் ,
மரபுளி , வாய்மை யாதும்
சோர்வு இலன் , நிலைமை எல்லாம்
தெரிவுறச் சொல்லல் உற்றான் . '
4.2.25

3878
சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட
ஆரியன் ; அமரர்க்கு ஆகி அசுரரை ஆவி உண்ட
வீரியன் ; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட ,
காரியன் ; கருணை அன்ன கண்ணன் அக்கவிகை மன்னன் .
4.2.26

3879
'புயல் தரும் மதம் திண் கோட்டுப்
புகர் மலைக்கு இறையை ஊர்ந்து ,
மயல் தரும் அவுணர் யாரும்
மடிதர , வரிவில் கொண்ட
இயல் தரும் புலமைச் செங்கோல்
மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன் , கனக மாடத்
தட மதில் அயோத்தி வேந்தன் . '
4.2.27

3880
'அன்னவன் சிறுவன் ஆம் ,
இவ் ஆண் தகை ; அன்னை ஏவ ,
தன்னுடை உரிமைச் செல்வம்
தம்பிக்குத் தகவின் நல்கி ,
நல் நெடுங் கானம் சேர்ந்தான் ;
நாமமும் இராமன் என்பான் ;
இந் நெடுஞ் சிலை வலானுக்கு
ஏவல் செய் அடியன் யானே . '
4.2.28

3881
இலக்குவன் சொல்லைக் கேட்ட அனுமன் இராமனை வணங்குதல்
என்று , அவன் தோற்றம் ஆதி
இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆகப் ,
புகுந்து உள பொருள்கள் எல்லாம் ,
ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் ,
உணர்த்தினன் ; உணர்த்தக் கேட்டு ,
நின்ற அக் காலின் மைந்தன் ,
நெடிது உவந்து , அடியில் தாழ்ந்தான் .
4.2.29

3882
அனுமன் தானும் வானர இனத்தினன் என்றல்
தாழ்தலும் , 'தகாத செய்தது
என்னை நீ ? தருமம் அன்றால் ;
கேள்வி நூல் மறை வலாளா ! '
என்றனன் ; என்னக் கேட்ட
பாழி அம் தடந்தோள் வீர
மாருதி , 'பதுமச் செங்கண்
ஆழியாய் ! அடியேன் தானும்
அரிக் குலத்து ஒருவன் ' என்றான் .
4.2.30

3883
அனுமன் பேருருக் கொண்டு நிற்றல் (3883-3884)
மின் உருக் கொண்ட வில்லோர்
வியப்புற , வேத நன்னூல்
பின் உருக் கொண்டது என்னும்
பெருமை ஆம் பொருளும் நாணப் ,
பொன் உருக் கொண்ட மேரு ,
புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான் ,
தருமத்தின் தனிமை தீர்ப்பான் .
4.2.31

3884
கண்டிலன் , உலகம் மூன்றும்
காலினால் கடந்து கொண்ட
புண்டரிகக் கண் ஆழிப்
புரவலன் , பொலன் கொள் சோதி
குண்டல வதனம் என்றால் ,
கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்லப்
படித்தனன் படிவம் ? அம்மா .
4.2.32

3885
இராமன் இலக்குவனுக்கு அனுமன் வடிவத்தை வியந்து கூறல் (3885-3886)
தாள் படாக் கமலம் அன்ன
தடங்கணான் , தம்பிக்கு , 'அம்ம !
கீழ்ப் படா நின்ற நீங்கி ,
கிளர்படாது ஆகி , என்றும்
நாட் படா மறைகளாலும் ,
நவை படா ஞானத்தாலும் ,
கோட்படாப் பதமே , ஐய !
குரக்கு உருக்கொண்டது ' என்றான் .
4.2.33

3886
நல்லன நிமித்தம் பெற்றேம் ;
நம்பியைப் பெற்றேம் ; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது ;
இன்பமும் எய்திற்று ; இன்னும் ,
வில்லினாய் ! இவனைப் போலாம்
கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான் ;
அவன் நிலை சொல்லற் பாற்றோ ?
4.2.34

3887
அனுமன் சுக்கிரஈவனைக் கொணரச் செல்லல்.
என்று , அகம் உவந்து , கோல
முகம் மலர்ந்து , இமையா நின்ற
குன்று உறழ் தோளினாரை
நோக்கி , அக்குரக்குச் சீயம் ,
‘’ சென்று அவன் தன்னை , இன்னே
கொணர்கின்றேன் ; சிறிது போது
வென்றியிர் ! இருத்திர் என்று
விடைபெற்று விரைவில் போனான் .
4.2.35


Rama mit Pfeil und Bogen: Stärke steht im Dienst verantwortlichen Handelns.

Begleitender Vortrag von Yoga Vidya über Hanuman und den Geist der Hingabe:

4.3 – Der Freundschaftsbund

4.3 . நட்புக் கோட் படலம் (3888-3966 )

3888
அனுமன் மகிழ்ச்சி புலப்படச் சுக்கிரீவனை அணுகுதல்
போனவன் திரள் மணி புய நெடும் புகழினான்
ஆன , தன் , பொருசினத்து அரசன்மாடு அணுகினான் ;
'யானும் உன்குலமும் இவ் உலகும் உய்ந்தனம் ' எனா ,
மானவன் குணம் எலாம் நினையும் மா மகிழ்வினான் .
4.3.1

3889
வாலிக்குக் காலன் வந்தான் எனல்
மேலவன் திரு மகன் கு உரை செய்தான் , 'விரை செய்தார்
வாலி என்று அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன் ; இடர்க்கடல் கடந்தனம் ' எனா
ஆலம் உண்டவனின் நின்று அருநடம் புரிகுவான் .
4.3.2

3890
அனுமன் , இராம இலக்குவர் இயல்பை விளக்குதல்
'மண் உளார் , விணுளார் , மாறு உளார் , வேறு உளார் ,
எண் உளார் , இயலுளார் , இசை உளார் , திசை உளார்
கண் உளார் ஆயினார் ; பகை உளார் , கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போல் உளார் .
4.3.3

3891
அனுமன் , இராமன் வரலாறு கூறல் (3891-3901)
'சூழி மால் யானையார் தொழுகழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒருவழிப் படர வாழ்
ஆழியான் , மைந்தர் ; பேர் அறிவினார் ; அழகினார் ;
ஊழியார் எளிது உனக்கு அரசுதந்து உதவுவார் .
4.3.4

3892
'நீதியார் ; கருணையின் நெறியினார் ; நெறிவயின்
பேதியா நிலைமையார் ; எவரினும் பெருமையார் ;
போதியாது அளவு இலா உணர்வினார் ; புகழினார் ;
காதிசேய் தருகடல் கடவுள்வெம் படையினார் .
4.3.5

3893
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில்
கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன்
கால் இயல் பொடியினால் , நெடிய கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர் உருவு அளித்து அருளினான் .
4.3.6

3894
'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து ,
எல் உறுப்பு அரிய பேர் எழுசுடர்க் கடவுள் தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் - மிதிலை புக்கு கனைய நாள் .
4.3.7

3895
'உளை வயம் புரவியான் உதவ உற்று , ஒரு சொலால் ,
அளவு இல் கற்புடைய சிற்றவை பணித்து அருளலால் ,
வளை உடை புணரிசூழ் மகிதலத் திரு எலாம்
இளையவற்கு உதவி , இ தலை எழுந்தருளினான் .
4.3.8

3896
தெவ் இரா வகை நெடுஞ் சிகை விரா மழுவினான்
அவ் இராமனையும் மா வலி தொலைத் தருளினான் ,
இவ் இராகவன் ; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அவ் விராதனை இராவகை துடைத்தருளினான் .
4.3.9

3897
'கரன் முதல் கருணை அற்றவர் , கடல் படை ஒடு உம்
சிரம் உகச் சிலை குனித்து உதவுவான் ; திசை உளார்
பரம் உகப் பகை துமித்து அருளுவான் ; பரமர் ஆம்
அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான் .
4.3.10

3898
ஆயம் மால் நாகர் தாழ் ஆழியானே அலால் ,
காயம் மான் ஆயினான் யாவனே ? காவலா !
நீ அ(ம்)மால் நேர்தியால் , நேரில் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மாய , மான் ஆயினான் .
4.3.11

3899
உக்க அந்தமும் உடல் பகை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும் , நமக்கு உரை செயும் புரையவோ -
திக்க அந்தர நெடுந் திரள் கரம் சினவு தோள் ,
அக் கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரிபோல் .
4.3.12

3900
'முனைவரும் பிறரும் மேல் , முடிவு அரும் பகல் எலாம் ,
இனையர் வந்துறுவர் என்று : இயல்தவம் புரிகுவார் ,
வினை எனும் சிறை துறந்து உயர்பதம் விரவினார்
எனையர் என்று உரை செய்கேன் ? - இரவிதன் சிறுவனே !
4.3.13

3901
'மாயையால் மதி இலா நிருதர்கோன் , மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன் ; அவள் தேடுவார் .
நீ ஐயா , தவம் இழைத்து உடைமை யால் நெடுமனம் ,
தூயையா உடைமையால் , உறவினைத் துணிகுவார் .
4.3.14

3902
'தந்திருந்தனர் அருள் ; தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும் ;
புந்தியின் பெருமையாய் ! போதர் ' என்று உரை செய்தான்
மந்திரம் கெழுமும் நூல் மரபு உணர்ந்து உதவுவான் .
4.3.15

3903
அனுமனோடு சுக்கிரீவன் இராமனை யடைதல்
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் ,
'உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள் அரோ ?
பொன்னையே பொருவுவாய் ! போது ' எனப் போதுவான்
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் .
4.3.16

3904
கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன் , காமர்க்
குண்டலம் துறந்த கோல வதனமும் , குளிர்க்கும் கண்ணும்
புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை .
4.3.17

3905
நோக்கினான் ; நெடிது நின்றான் ;
'நெடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
குவிந்து இரு படிவ மாகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
வீரர் ஆய் விளைந்த ' என்பான் .
4.3.18

3906
தேறினன் - அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே ,
மாறி , இ பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ ;
ஆறுகொள் சடிலத் தானும் , அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம் , மானுடம் வென்றது ' என்றே .
4.3.19

3907
வந்த சுக்கிரீவனை இராமன் வரவேற்றல்
என நினைந்து இனைய எண்ணி ,
இவர்கின்ற காதல் ஓதக்
கனைகடல் கரை நின்று ஏறாக்
கண் இணை களிப்ப நோக்கி ,
அனகனைக் குறுகினான் ; அவ்
அண்ணலும் , அருத்தி கூர ,
புனை மலர் தடக்கை நீட்டிப் ,
'போந்து இனிது இருத்தி ' என்றான் .
4.3.20

3908
இருவரும் ஒருங்கிருந்த காட்சி (3908-3909)
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளிக் ,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் ;
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் , அரியின் வேந்தும் ,
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி , ஒத்தார் .
4.3.21

3909
கூட்டம் உற்று இருந்த வீரர் ,
குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும் , பின்னர்
முயற்சியும் இயைந்தது ஒத்தார் ;
வீட்டு வாள் அரக்கர் என்னும்
தீவினை வேரின் வாங்கக் ,
கேட்டு உணர் கல்வியோடு
ஞானமும் கிடைத்தது ஒத்தார் .
4.3.22

3910
சுக்கிரீவன் இராமனைப் பாராட்டுதல்
ஆயது ஓர் அவதியின்கண் , அருக்கன் சேய் , அரசை நோக்கி ,
'தீவினை தீய நோற்றார் என்னின் யார் ? செல்வ ! நின்னை -
நாயகன் உலகுக்கு எல்லாம் என்னலாம் நலம் மிக்கோயை
மேயினன் ; விதியே நல்கின் மேவல் ஆகாது என் ? என்றான் .
4.3.23

3911
இராமன் வந்த வரலாற்றைக் கூறுதல்
'மை அறு தவத்தின் வந்த சவரி , இம்மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை , இயம்பினள் ; யாங்கள் உற்ற
கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் ;
ஐய ! நின்தீரும் ' என்ன , அரி குலம் அத்து அரசன் சொல்வான் .
4.3.24

3912
சுக்கிரீவன் தன் வரலாறு கூறிச் சரண்புகல்
'முரண் உடை தடக்கை ஓச்சி , முன்னவன் , பின் வந்தேனை ,
இருள் நிலை புறத்தின் காறும் , உலகு எங்கும் தொடர , இ குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன் ; ஆர் உயிர் துறக்கலாற்றேன் ,
சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் ' என்றான் .
4.3.25

3913
இராமன் சுக்கிரீவனை நண்பனாகக் கொள்ளுதல் (3913-3914)
என்ற அக்குரக்கு வேந்தை , இராமனும் இரங்கி நோக்கி ,
'உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள , முன் நாள்
சென்றன போக , மேல் வந்து உறுவன தீர்ப்பல் ; அன்ன
நின்றன எனக்கும் நிற்கும் நேர் ' என மொழியும் நேரா .
4.3.26

3914
'மற்று , இனி உரைப்பது என்னே ?
வான் இடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் ;
தீயரே எனினும் , உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் ;
உன் கிளை எனது ; என் காதல்
சுற்றம் , உன் சுற்றம் ; நீ என்
இன் உயிர்த் துணைவன் ' என்றான் .
4.3.27

3915
இராமன் சுக்கிரீவனோடு நண்பு பூண்டமை யறிந்த வானரங்களின் மகிழ்ச்சி
ஆர்த்தது குரக்குச் சேனை ;
அஞ்சனை சிறுவன் மேனி ,
போர்த்தன , பொடித்த ரோமப்
புளகங்கள் ; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர் ; மேகம்
சொரிந்தன ; அனகன் சொன்ன
வார்த்தை எ குலம் அத்து உளோர்க்கும் ,
மறையினும் மெய் என்று உன்னா .
4.3.28

3916
அனுமன் சுக்கிரீவனது மாளிகைக்கு அழைக்க இராமன் இசைதல்
ஆண்டு எழுந்து , அடியில் தாழ்ந்த
அஞ்சனை சிங்கம் , வாழி !
தூண் திரள் தடந்தோள் மைந்த !
தோழனும் நீயும் வாழி !
ஈண்டு நும் கோயில் எய்தி ,
இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என் ? என்றான் ,
வீரனும் 'விழுமிது ' என்றான் .
4.3.29

3917
சோலைக்குப் போதல்
ஏகினர் இரவி சேயும்
இருவரும் அரிகள் ஏறும்
ஊக வெம் சேனை சூழ ,
அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த ,
நாகமும் நரந்தக் காவும் ,
நளின வாவிகளும் நண்ணி ,
போக பூமியையும் ஏசும்
புது மரம் சோலை புக்கார் .
4.3.30

3918
சோலையின் சிறப்பு (3918-3919)
ஆரமும் அகிலும் துன்றி ,
அவிர் பளிக்கு அறை அளாவி ,
நாரம் நின்றன போல் தோன்றி ,
நவமணித் தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தெய்வத்
தருவு நீர்ப் பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல்
துவன்றிய சும்மைத்து ; அன்றே .
4.3.31

3919
அயர்வு இல் கேள்விசால் அறிஞர் வேலைமுன் ,
பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மைபோல் ,
குயிலும் மா மணி குழுவு சோதியால் ,
வெயிலும் , வெள்ளி வெண் மதியும் , மேம்படா .
4.3.32

3920
பூவணையிலிருந்து உரையாடல்
ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்
மேய மைந்தரும் , கவியின் வேந்தனும்
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் ,
ஆய அன்பினோடு அளவளாவுவார் .
4.3.33

3921
இராமன் நீராடி விருந்துண்ணல்
கனியும் , கந்தமும் , காயும் , தூயநன்கு
இனிய யாவையும் கொணர , யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில்புரிந்து , பின்
இனிது இருந்து , நல் விருந்தும் ஆயினான் .
4.3.34

3922
இராமன் சுக்கிரீவனை வினாவுதல்
விருந்தும் ஆகி , அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி , நொந்து , இறைவன் , சிந்தியா
பொருந்தும் நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரித்துளாய் கொலோ நீயும் ? பின் ! என்றான் .
4.3.35

3923
சுக்கிரீவன் நிலையை அனுமன் விளக்குதல்
என்ற வேலையில் எழுந்து , மாருதி ,
குன்று போல நின்று இருகை கூப்பினான் -
'நின்ற நீதியாய் ! நெடிது கேட்டியால் !
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு ' எனா .
4.3.36

3924
வாலியின் பெருமை கூறல்
நாலு வேதம் ஆம் நவையில் ஆர்கலி
வேலி அன்ன தொல் மலையின்மேல் உளான் ,
சூலி தன் அருள் துறையில் முற்றினான்
வாலி என்று உளான் , வரம்பு இல் ஆற்றலான் .
4.3.37

3925
கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று ,
உழலும் மந்தரம் அத்து உருவு தேய , முன் ,
அழலும் கோள் அரா அகடு தீவிடச் ,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான் .
4.3.38

3926
நிலனும் , நீரும் , மா நெருப்பும் , காற்றும் , என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான் ;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இ மலையின் வாவுவான் .
4.3.39

3927
'கிட்டுவார் பொரக் கிடைக்கின் , அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான் ;
எட்டு மாதிரம் அத்து இறுதி , நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் '
4.3.40

3928
கால் செலாது அவன் முன்னர் ; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில் ; வென்றியான்
வால் செலாத வாய் அலது , இராவணன்
கோல் செலாது ; அவன் குடை செலாது அரோ .
4.3.41

3929
மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே , அவன் பேருமேல் ; நெடும்
காரும் வானமும் , கதிரும் , நாகமும் ,
தூருமே , அவன் பெரிய தோள்களால் .
4.3.42

3930
பார் இடந்த வெம் பன்றி , பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் ;
மார்பு இடந்த மா எனினும் , மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ .
4.3.43

3931
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி , மீது
அடர்ந்து பாரம் வந்து உற , அனந்தனும்
கிடந்து தாங்கும் ; இ கிரியை மேயினான் ,
நடந்து தாங்கும் ; இ புவனம் நாள் எலாம் .
4.3.44

3932
கடல் ஒலிப்பதும் , கால் சலிப்பதும் ,
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் ,
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் ! - அயலின் ஆபவோ ?
4.3.45

3933
'வெள்ளம் ஏழுபத்து உள்ள , மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் ;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே ! அவன் வலியின் வண்மையால் .
4.3.46

3934
'மழை இடிப்பு உறா ; வய வெஞ் சீயமா
முழை இடிப்பு உறா ; முரண் வெம் காலும் மென்
தழை துடிப்புறச் சார்வுறாது ' ; - அவன்
விழைவிடத்தின் மேல் , விளிவை அஞ்சலால் .
4.3.47

3935
'மெய்க்கொள் வாலினால் , மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர் படுத்த நாள் ,
புக்கு இலாத - வெம் பொழி அரத்தம் நீர்
உக்கு இலாத - வேறு உலகம் யாவதோ .
4.3.48

3936
இந்திரன் தனிப் புதல்வன் , இன் அளிச்
சந்திரன் தழைத்த அனைய தன்மையான் ,
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் ,
முந்தி வந்தனன் இவனின் - மொய்ம்பினோய் !
4.3.49

3937
'அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குலப் பகைஞன் - முட்டினான் -
மின் எயிற்று வாள் அவுணன் , வெம்மையான் .
4.3.50

3938
'முட்டி நின்றவன் முரண் உரத்தினோடு
ஒட்ட , அஞ்சி , நெஞ்சு உலைய ஓடினான் ;
`'வட்ட மண் தலத்து அரிது வாழ்வு எனா ,
எட்டரும் பெரும் பிலனுள் எய்தினான் . '
4.3.51

3939
'எய்து காலை , “அ பிலன் உள் எய்தி , யான்
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் ; - நோன்மையாய் !
செய்தி , காவல் , நீ , சிறிது போழ்து எனா ,
வெய்தின் எய்தினான் , வெகுளி மேயினான் . '
4.3.52

3940
“ஏகி வாலியும் இருது ஓர் ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி , வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிடச் ,
சோகம் எய்தினன் , துணை துளங்கினான் .
4.3.53

3941
'அழுது அழுங்குறும் இவனை , அன்பினில்
தொழுது இரந்து ,”'நின் தொழில் இது ; ஆகலால் ,
எழுது வென்றியாய் ! அரசு செய்க எனப்
'பழுது இது ' என்றனன் , பரியும் நெஞ்சினான் .
4.3.54

3942
'என்று , தானும் , “அவ்வழி இரும் பிலம்
சென்று , முன்னவன் - தேடுவேன் ; அவற்
கொன்று உளான் தனைக் கொல்வென் ; அன்று எனின் ,
பொன்று வேன் எனாப் , புகுதல் மேயினான் . '
4.3.55

3943
தடுத்து வல்லவா தணிவு செய்து நோய்
கெடுத்து , மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் , அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு ; இவன் கொண்டனன் கொலாம் ?
4.3.56

3944
'அன்ன நாளில் , மாயாவி , அ பிலம் அத்து ,
இன்ன வாயில் ஊடு எய்தும் என்ன , யாம் ,
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து , வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் . '
4.3.57

3945
'சேமம் அவ் வழிச் செய்து , செங்கதிர்க்
கோமகன் தனைக் கொண்டு வந்து , யாம்
மேவு குன்றின்மேல் வைகும் வேலை வாய் ,
ஆவி உண்டனன் அவனை , அன்னவன் . '
4.3.58

3946
'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு உளம் ,
களித்த வாலியும் , கடிதின் எய்தினான் ;
விளித்து நின்று , வேறு உரை பெறான் ; “இருந்து
அளித்த வாறு நன்று , இளவலார் ! எனா . '
4.3.59

3947
'வால் விசைத்து , வான் வளி நிமிர்ந்து என
கால் விசைத்து , அவன் கடிதின் எற்றலும் ,
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் ,
வேலை புக்கவும் , பெரிய வெற்பு எலாம் . '
4.3.60

3948
'ஏறினான் அவன் ; எவரும் அஞ்சு உற
சீறினான் , நெடுஞ்ச் சிகரம் எய்தினான் ;
வேறு இலாத அன்பு உதவ , மெய்ம்மையால்
ஆறினானும் வந்து அடி வணங்கினான் . '
4.3.61

3949
'வணங்கி . `'அண்ண ! நின் வரவு இலாமையால் ,
உணங்கி , உன்வழிப் படர உன்னு வேற்கு ,
இணங்கர் இன்மையால் , இறைவ ! நும் உடை
கணங்கள் , 'காவல் , உன் கடன்மை என்றனர் .
4.3.62

3950
“ஆணை அஞ்சி , இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை , நல்குவாய்
பூண் உலாவு தோள் இறை ! பொறாய் ! எனக் ,
கோணினான் , நெடுங் கொடுமை கூறினான் . '
4.3.63

3951
'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி , வெங்
குடல் கலங்கி , எம் குலம் ஒடுங்க , முன்
கடல் கடைந்த அக் கரம் தலங்களால் ,
உடல் கடைந்தனன் ; இவன் உலைந்தனன் . '
4.3.64

3952
'பற்றி , அஞ்சலன் பழியை , வெஞ்சினம்
முற்றி நின்றதன் முரண் வலிக் கையால் ,
எற்றுவான் எடுத்து எழுதலும் , பிழைத்து ,
அற்றம் ஒன்று பெற்று , இவன் , அகன்றனன் . '
4.3.65

3953
எந்தை ! மற்று அவன் எயிறு அதுக்குமேல் ,
அந்தகன் கு உம் ஓர் அரணம் இல்லையால் ;
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் -
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் .
4.3.66

3954
'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான் ;
இருமையும் துறந்து , இவன் இருந்தனன் ;
கருமம் இங்கு இது ; எம் கடவுள் ! ' என்றனன் .
4.3.67

3955
இராமன் சினம்
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல ,
ஐயன் , ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் ,
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது ; மலர் கண்
செய்ய தாமரை , ஆம்பல் அம் போது எனச் சிவந்த .
4.3.68

3956
கவிக்கூற்று
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன ,
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமை
பாரம் ஈந்தவன் , 'பரிவு இலன் ஒருவன் , தன் இளையோன்
தாரம் வௌவினன் ' என்ற சொல் தரிக்கும் ஆறு உளதோ ?
4.3.69

3957
'உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் , வில் இடை வாளியின் வீட்டித் ,
தலைமையோடு , நின்தாரமும் , உனக்கு இன்று தருவேன் ;
புலமையோய் ! அவன் உறைவிடம் காட்டு ' என்று புகன்றான் .
4.3.70

3958
சுக்கிரீவன் மகிழ்ச்சியும் எண்ணமும்
எழுந்த பேர் உவகைக்
கடற் பெரும் திரை இரைப்ப ,
அழுந்து துன்பினுக்கு அ கரை
கண்டனன் அனையான் ,
'விழுந்ததே இனி வாலிதன்
வலி ! ' என , விரும்பா ,
மொழிந்த வீரற்கு , 'யாம் எண்ணுவது
உண்டு ' என மொழிந்தான் .
4.3.71

3959
சுக்கிரீவன் அமைச்சரோடு தனியே ஆலோசித்தல்
அனைய ஆண்டு உரைத்து , அனுமனே முதலிய அமைச்சர் ,
நினைவும் , கல்வியும் , நீதியும் , சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர் , அன்னவரோடும் வேறு இருந்தனன் , இரவி
தனையன் ; அவ் வழிச் சமீரணன் மகன் உரை தருவான் .
4.3.72

3960
அனுமன் இராம இலக்குவரின் ஆற்றலை விளக்குதல்
'உன்னினேன் , நினது உள்ளத்தின் உள்ளதை , உரவோய் !
`'அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்பால் இல்லை என்று அயிர்த்தனை ; இனி , யான்
சொன்ன கேட்டு , அவை கடைப்பிடிப்பாய் ' எனச் சொன்னான் .
4.3.73

3961
இராமன் திருமாலே என அனுமன் நிறுவுதல் (3961-3964)
'சங்கு சக்கரக் குறி உள தடக்கையில் , தாளில் ;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை ;
செம் கண் வில் கரம் அத்து இராமன் அத் திரு நெடும் மாலே ;
இங்கு உதித்தனன் , ஈண்டு அறம் நிறுத்துதற்கு ; இன்னும் '
4.3.74

3962
'செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக் ,
கறுக்கும் வெஞ்சினக் காலன்தன் காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்டபேர் ஆடகத் தனிவில்
இறுக்கும் தன்மை , அ மாயவற்கு அன்றியும் எளிதோ ? '
4.3.75

3963
'என்னை ஈன்றவன் , `'இ வுலகு
யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் ;
தவம் உனக்கு அதுவே ;
உன்னை ஈன்ற எற்கு உறு பதம்
உளது என உரைத்தான் ;
இன்ன தோன்றலே அவன் ;
இதற்கு ஏது உண்டு ; - இறையோய் !
4.3.76

3964
'துன்பு தோன்றிய பொழுது ,
உடன் தோன்றுவன் ; ”எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு
முடிவு என் ? என்று இயம்ப ,
“அன்பு சான்று
என உரைத்தனன் ;
ஐய ! என் யாக்கை ,
என்பு தோன்றல உருகினது
எனின் , பிறிது எவனோ ? '
4.3.77

3965
இராமனாற்றலைச் சோதிக்க அனுமன் கூறும் உபாயம்
'பிறிதும் , அன்னவன் பெருவலி ஆற்றலைப் , பெரியோய் !
அறிதி என்னின் , உண்டு உபாயமும் ; அ•து அரும் மரங்கள்
நெறியில் நின்றன ஏழில் , ஒன்று உருவ , இ நெடியோன்
பொறிகொள் வெஞ்சரம் போவதுகாண் ! ' எனப் புகன்றான் .
4.3.78

3966
சுக்கிரீவன் உடன்பட்டு இராமனை அணுகிக் கூறல்
'நன்று நன்று எனா , நல் நெடுங்
குன்றமும் நாணும்
தன் துணைத் தனி மாருதி
தோளிணை தழுவி ,
சென்று , செம்மலைக் குறுகி , 'யான்
செப்புவது உளதால் ,
ஒன்று உனக்கு ' என , இராமனும் ,
'உரைத்தி அஃது ' என்றான் .
4.3.79


4.4 – Die sieben Mara-Bäume

4.4 . மராமரப் படலம் (3967-3987)

3967
மராமரங்கள் ஏழினுள் ஒன்றை எய்யும்படி சுக்கிரீவன் இராமனை வேண்டுதல்
'ஏக வேண்டும் இ நெறி ' என , இனிது கொண்டு ஏகி ,
'மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ , நின் அம்பு
போகவே , என்தன் மனத்து இடர் போம் ' எனப் புகன்றான் .
4.4.1

3968
இராமன் இசைதல்
மறு இலான் அது கூறலும் , வானவர்க்கு இறைவன் ,
முறுவல் செய்து , அவன் முன்னிய முயற்சியை முன்னி ,
எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி ,
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் .
4.4.2

3969
மராமரங்களின் வருணனை (3969-3977)
ஊழி பேரினும் பேர்வில ; உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும் தாழ்வில ; தயங்கு பேர் இருள் சூழ்
ஆழி மாநிலம் தாங்கிய அருங் குலக் கிரிகள்
ஏழும் , ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த .
4.4.3

3970
கலை கண்டு ஓங்கிய மதியமும் , கதிரவன் தானும் ,
தலை கண்டு ஓடுதற்கு அருந்தவம் தொடங்குறும் ; சாரல்
மலை கண்டோம் என்பது அல்லது , மலர்மிசை அயற்கும் ,
இலை கண்டோம் எனத் தெரிப்ப அருந் தரத்தன , ஏழும் .
4.4.4

3971
ஒக்க நாள் எலாம் உழல்வன , உலைவு இல ஆக ,
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலம் ஆல் ,
திக்கும் , வானமும் செறிந்த அத் தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்வு இல , இரவி தேர்ப் புரவி .
4.4.5

3972
நீடு நாள்களும் , கோள்களும் , என்ன , மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர் எனப் பொலிகின்ற வளத்த ;
ஓடு மா சுடர் வெண் மதிக்கு , உள் கறுப்பு , உயர்ந்த
கோடு தேய்த்தலின் , களங்கம் உற்றால் எனும் குறிய .
4.4.6

3973
தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன ; விசும்பினும் உயர்ந்த ;
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் , அங்கு அவன் ஊர்
ஓதிமம் தனிப் பெடையொடும் புடை இருந்து உறைவ .
4.4.7

3974
நாற்றம் மல்கு போது , அடை , கனி , காய் முதல் நானா
வீற்று , மண் தலத்து , யாவையும் , வீழ்கில , யாண்டும் ,
காற்று அலம்பினும் , கலி நெடு வான் இடை கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய் , அலை கடல் பாய் தரும் இயல்ப .
4.4.8

3975
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
முடிவின் மேல் சென்ற முடியன ஆதலின் , முடியா
நெடிய மால் எனும் நிலையன ; நீரிடைக் கிடந்த
படியின் மேல் நின்ற மேரு மால் வரையினும் பழைய .
4.4.9

3976
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என , ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய ;
தெள்ளு நீரிடைக் கிடந்து பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர .
4.4.10

3977
சென்று திக்கினை அளந்தன ; `'பணைகளின் , தேவர் ,
`'என்று நிற்கும்
என்று இசைப்பன ; இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ; ஒன்றினுங் குறுகா ;
ஒன்றினுக்கு ஒன்றின் இடை , நெடிது யோசனை உடைய .
4.4.11

3978
இராமன் நாணொலி எழுப்புதல்
ஆய மாமரம் அனைத்தையும் நோக்கி நின்று , அமலன் ,
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்றச்
சேய வானமும் , திசைகளும் செவிடு உறத் தேவர்க்கு
ஏய்வு இலாதது ஓர் பயம் வரச் சிலையின் நாண் எறிந்தான் .
4.4.12

3979
நாணொலியின் வருணனை
ஒக்க நின்றது எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை ;
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ ?
திக்கயங்களும் மயங்கின ; திசைகளும் திகைத்த ;
புக்கு , அயன்பதி சலிப்பு உற ஒலித்தது , அப் பொரு வில் .
4.4.13

3980
அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் , அமரர்
இரிந்து நீங்கினர் , கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் ;
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் ; மற்றைப் பல்லோர்
புரிந்த தன்மையை உரை செயின் , பழி அவர்ப் புணரும் .
4.4.14

3981
இராமன் மராமரங்களை எய்தல்
” எய்தல் காண்டும் கொல் இன்னம் என்று ,
அரிதின் வந்து எய்தி ,
பொய் இல் மாருதி முதலினோர்
புகழ்வுறும் பொழுதில் ,
மொய் கொள் வார்சிலை நாணினை
முறை உற வாங்கி ,
வெய்ய வாளியை , ஆளுடை
வில்லியும் விட்டான் .
4.4.15

3982
இராமனது அம்பின் செயல்
ஏழு மா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது , அவ் இராகவன் பகழி ;
ஏழு கண்டபின் உருவுமால் , ஒழிவது அன்று , இன்னும் .
4.4.16

3983
ஏழு என நின்றவை அஞ்சுதல்
ஏழு வேலையும் , உலகம் மேல் உயர்ந்தன ஏழும் ,
ஏழு குன்றமும் , இருடிகள் எழுவரும் , புரவி
ஏழும் , மங்கையர் எழுவரும் , நடுங்கின என்ப ,
” ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம் ? என்று எண்ணி .
4.4.17

3984
சுக்கிரீவன் பேசத் தொடங்குதல்
அன்னது ஆயினும் , அறம் அத்து இன் உ கு
ஆர் உயிர் துணைவன்
என்னும் தன்மையை நோக்கினர்
யாவரும் , எவையும் ;
பொன்னின் வார் கழல்
புது நறும் தாமரை பூண்டு ,
சென்னி மேல் கொளூஉ , அருக்கன் சேய்
இவை இவை செப்பும் .
4.4.18

3985
சுக்கிரீவன் இராமனைத் துதித்தல்
” வையம் நீ ! வானும் நீ ! மற்றும் நீ ! மலரின் மேல்
ஐயன் நீ ! ஆழிமேல் ஆழிமா மாலும் நீ !
செய்யன் நீ ! வினை தெறும் தேவும் நீ ! நாயினேன்
உய்ய வந்து உதவினாய் , உலகம் முந்து உதவினாய் !
4.4.19

3986
சுக்கிரீவன் முகமன் கூறுதல்
`'என் எனக்கு அரியது , எ பொருளும் என்கு எளிதலால் ?
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் ;
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியன் யான் ,
மன்னவர்க்கு அரச ! என்று உரை செய்தான் வசை இலான் .
4.4.20

3987
மற்றை வானரரின் மகிழ்ச்சி
ஆடினார் , பாடினார் , அங்கும் இங்கும் கலந்து
ஓடினார் , உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் ,
” நேடினாம் வாலி காலனை எனா , நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர , மற்றவர் எலாம் .
4.4.21


4.5 – Dundubhi

4.5 . துந்துபிப் படலம் (3988 -4003)

3988
இராமன் துந்துபியின் உடலைக் காணுதல்
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனல் இடை
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் , வான்
மண்டலம் தொடுவது , அம் மலையின் மேல் மலை எனக்
கண்டனன் , துந்துபிக் கடல் அனான் உடல் , அரோ .
4.5.1

3989
இராமன் வினாவுதல் 'தென்புலக் கிழவன் ஊர் மயிடமோ ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ ? மகர மீன்
என்பு உலப்பு உற உலர்ந்தது கொலோ இது ? ' எனா ,
'அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் ' என , அவன் .
4.5.2

3990
சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றைக் கூறுதல் (3990-4002)
'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன் , மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் ,
மந்தரக் கிரி எனப் பெரியவன் , மகர நீர்
சிந்திடக் கரு நிறத்து அரியினைத் தேடுவான் . '
4.5.3

3991
'அங்கு வந்து அரி எதிர்ந்து , ” அமைதி ; என் ? என்றலும் ,
`'பொங்கு வெஞ் செருவினில் பொருதி
என்று உரை செயக்
`'கங்கையின் கணவன் , அக் கறை மிடறு இறைவனே
உங்கள் வெங் கதம் வலிக்கு ஒருவன் என்று உரை செய்தான் . '
4.5.4

3992
'கடிது சென்று , அவனும் , அக்
கடவுள் தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து
எழுதலும் , குறுகி முன் ,
” நொடிதி , நின் குறை என் ?
என்றலும் , நுவன்றனன் அரோ ,
” முடிவு இல் வெஞ் செரு எனக்கு
அருள் செய்வான் முயல்க
எனா . '
4.5.5

3993
’ “மூலமே வீரமே மூடினாயோடு போர்
ஏலுமே ? தேவர் பால் ஏகு எனா ஏவினான் ;
” சால நாள் போர் செய்வாய் ஆதியேல் , சாரல் ; போர்
வாலி பால் ஏகு
எனா , வான் உளோர் வான் உளான் . '
4.5.6

3994
'அன்னவன் விட , உவந்து , அவனும் வந்து , ” அரிகள் தம்
மன்னவன் ! வருக ! போர் செய்க ! எனா , மலையினைச்
சின்ன பின்னம் படுத்திடுதலும் , சினவி , என்
முன்னவன் , முன்னர் வந்து அனையவன் முனைதலும் . '
4.5.7

3995
'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் ; எவ் உலகமும்
வெருவரும் தகையர் ஆய்விழுவர் , நின்று எழுவரால் ;
மருவ அருந் தகையர் , தானவர்கள் வானவர்கள் தாம் . '
4.5.8

3996
'தீ எழுந்தது விசும்பு உற ; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது முழக்கு ; உடன் எழுந்தது புகை ;
தோய நன் புணரியும் , தொடர் தடங் கிரிகளும் ,
சாய் அழிந்தன , அடி தலம் எடுத் திடுதலால் . '
4.5.9

3997
'புயலும் வானகமும் அப் புணரியும் புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால் அறிவருந் தகையவா ,
மயனின் மாமகனும் வாலியும் மறம் அத்து உடலினார் ,
இயலும் மாமதியம் ஈர் ஆறும் வந்து எய்தவே . '
4.5.10

3998
'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில் ,
கொற்ற வாலியும் அவன் குவவு தோள் வலியொடும்
பற்றி , ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து
எற்றினான் ; அவனும் வான் இடியின் நின்று உரறினான் . '
4.5.11

3999
'தலையின் மேல் அடிபடக் கடிது சாய் நெடிதுதாள்
உலைய , வாய் முழை திறந்து உதிர ஆறு - ஒழுக , மா
மலையின் மேல் உரும் இடித்து என்ன , வான் மண்ணொடும்
குலைய , மாதிசைகளும் செவிடு உற குத்தினான் . '
4.5.12

4000
’ ”கவரி இங்கு இது எனக் கரம் தலம் கொடு திரித்து
இவர்தலும் , குருதிபட்டு இசை தொறும் , திசை தொறும்
துவர் அணிந்தன எனப் பொசி துதைந்தன , துணைப்
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே . '
4.5.13

4001
'புயல் கடந்து , இரவி தன் புகல் கடந்து , அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர , மேல்
வயிர வன் கரம் தலம் அத்து அவன் வலித்து எறிய , அன்று ,
உயிரும் விண் படர , இவ் உடலும் இப் பரிசு அரோ . '
4.5.14

4002
'முட்டி , வான் முகடு சென்று அளவி , இம் முடை உடற்
கட்டி மால் வரையை வந்து உறுதலும் , கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் ' என்று இயல்பினின்
பட்டவா முழுவதும் பரிவினால் உரை செய்தான் .
4.5.15

4003
இராமன் பணித்த வண்ணம் துந்துபியின் உடலை இலக்குவன் எற்றுதல்
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் ,
வாள் தொழில் இளவலை , 'இதனை மைந்த ! நீ
ஓட்டு ' என , அவன் கழல் விரலின் உந்தினான் ;
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே .
4.5.16


4.6 – Das Wiedersehen mit dem Schmuck

4.6 . கலன்காண் படலம் (4004-4037 )

4004
இராமனிடம் சுக்கிரீவன் சீதை அணிகலன்களை முடிந்திட்டமை கூறுதல் (4004-4007)
ஆ இடை , அரி குலம் அசனி அஞ்சுற
வாய் திறந்து ஆர்த்தது ; வள்ளல் , ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய் ,
'நாயக ! உணர்த்துவது உண்டு நான் ' எனா .
4.6.1

4005
இவ் வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை ,
வெவ் வழி இராவணன் கொணர , மேலைநாள்
செம் வழி நோக்கி , நின் தேவியே கொல் ஆம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் .
4.6.2

4006
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ ?
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் ;
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள் ; யாங்கள் ஏற்றனம் .
4.6.3

4007
சுக்கிரீவன் சீதையின் அணிகளைக் கொணர்ந்து இராமனுக்குக் காட்டுதல்
” வைத்தனம் ! இவ் வழி ; 'வள்ளல் ! நின்வயின்
உய்த்தனம் தந்த போது உணர்தி ' ஆல் எனாக்
கைத்தலம் அத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் ;
நெய்த்தலை பால் கலந்து அனைய நேயத்தான் .
4.6.4

4008
சீதையின் அணிகலம் நோக்கிய இராமன் நிலை (4008-4012)
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி ;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கைபோல்
உருகினன் என்கிலம் ; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம் ?
4.6.5

4009
நல்குவது என் ? இனி ; நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும் , அக் கொங்கை போன்றன ;
அல்குலின் அணிகளும் , அல்குல் ஆயின ;
பல கலன் பிறவும் , அப்படிவம் ஆனவே .
4.6.6

4010
விட்ட பேர் - உணர்வினை விளித்த என்கெனோ ?
அட்டன உயிரை அவ் அணிகள் , என்கெனோ !
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ !
சுட்டன என்கெனோ ! யாது சொல்லுகேன் ?
4.6.7

4011
மோந்திட நறுமலர் ஆன ; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன ;
சாந்தமும் ஆய் ஒளி தழுவப் போர்த்தலால்
பூ துகில் ஆய ; அப் பூவை பூண்களே .
4.6.8

4012
ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும் ;
போர்த்தன மயிர் புறம் புளகம் ; பொங்குதோள்
வேர்த்தனன் என்கெனோ ? வெதும்பினான் என்கோ ?
தீர்த்தனை அவ் வழி யாது செப்புகேன் ?
4.6.9

4013
சோர்ந்து சாய்ந்த இராமனைச் சுக்கிரீவன் தாங்குதல்
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீ கொள ,
நெடும்பொழுது உணர்வினோடு உயிர்ப்பும் நீங்கிய
தடம்பெருங் கண்ணனைத் தாங்கினான் ; தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கொண்டு ஏறவே .
4.6.10

4014
இராமனைச் சுக்கிரீவன் தேற்றுதல் (4014-4021)
தாங்கினன் , இருத்தி , அ துயரம் தாங்கலாது
ஏங்கிய நெஞ்சினன் , இரங்கி விம்முவான் ,
'வீங்கிய தோளினாய் ! வினையினேன் , உயிர்
வாங்கினென் இவ் அணி வருவித்தே ' எனா .
4.6.11

4015
'அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும்
மயர்வு அற நாடி , என் வலியும் காட்டி , உன்
உயர் புகழ்த் தேவியை உதவற் பாலன் ; ஆல்
துயர் உழந்து அயர்தியோ ? சுருதி நூல் வலாய் ' .
4.6.12

4016
திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்
வெருவரச் செய்து உள வெய்யவன் புயம்
இருபதும் ஈரைந்து தலையும் நிற்க ; உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ ? உலகம் ஏழுமே .
4.6.13

4017
'ஈண்டு நீ இருந்து அருள் ; ஏழொடு ஏழ் எனப்
பூண்ட பேர் உலகங்கள் வலியில் புக்கு , ' இடைத்
தேண்டி , அவ் அரக்கனைத் திருகித் தேவியைக்
காண்டி , யான் இவ் வழிக் கொணர்வல் காவலோய் .
4.6.14

4018
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ; ஈங்கு இவன்
தா அரும் பெரு வலித் தம்பி ; நம்பி ! நின்
சேவகம் இது எனில் , சிறுக நோக்கல் என் ?
மூவகை உலகும் நின் மொழியின் முந்தும் ஓ .
4.6.15

4019
பெருமையோர் ஆயினார் , பெருமை பேசலார் ;
கருமமே அல்லது பிறிது என் கண்டது ?
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ ?
அருமை ஏது உனக்கு ? நின்று அவலம் கூர்தி ஓ ?
4.6.16

4020
முளரி மேல் வைகுவான் , முருகன் - தந்த அத்
தளிர் இயல் பாகத்தான் , தடக்கை ஆழியான் ,
அளவி ஒன்று ஆவர் ஏ அன்றி , ஐயம் இல்
கிளவியாய் ! தனித்தனி கிடைப்பரோ ? துணை .
4.6.17

4021
” என் உடைச் சிறு குறை முடித்தல் , ஈண்டு ஒரீஇப்
பின் உடைத்தாயினும் ஆக ; பேதுறும்
மின் இடைச் சனகியை மீட்டு மீள்தும் ஆல்
பொன் உடைச் சிலையினாய் ! விரைந்துபோய் , `' என்றான் .
4.6.18

4022
சுக்கிரீவனிடம் இராமன் கூறுதல் (4022-4028)
எரி கதிர் காதலன் இனைய கூறலும் ,
அருவி அம் கண் திறந்து , அன்பின் நோக்கினான் ,
திரு உறை மார்பனும் , தெளிவு தோன்றிட ,
ஒரு வகை உணர்வு வந்து , உரைப்பது ஆயினான் .
4.6.19

4023
விலங்கு எழில் தோளினாய் ! வினையினேனும் , இவ்
இலங்கு வில் கரத்தினன் இருக்கவே , அவள்
கலன் கழித்தனள் ; இது கற்பு மேவிய
பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார் ?
4.6.20

4024
வாள் நெடுங்கண்ணி என் வரவு நோக்க , யான்
தாள் நெடும் கிரியொடும் தடங்கள் தம்மொடும்
பூணொடும் புலம்பினன் , பொழுது போக்கினேன் ;
நாண் நெடும் சிலை சுமந்து உழல நாணலேன் .
4.6.21

4025
ஆறு உடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி , வெம் சமம் அத்து
ஊறு உறத் தம் உயிர் உகுப்பர் ; என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் .
4.6.22

4026
கரும் கடல் தொட்டனர் ; கங்கை தந்தனர் ;
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் ;
பெரும் தகை என் குலத்து அரசர் , பின் ஒரு ,
திருந்து இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் .
4.6.23

4027
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து , இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் ;
எந்தை , மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர்க் கொடும் பழி வில்லின் , தாங்கினேன் .
4.6.24

4028
'விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் ;
கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கை கொள
பெரும் பழி சூடினேன் ; பிழைத்தது என் ? அரோ .
4.6.25

4029
சுக்கிரீவன் மீட்டும் ஆறுதல் கூறி இராமன் துயர்நீக்கல்
என்ன நொந்து , இன்னன பன்னி , ஏங்கியே
துன்ன அரும் துயரம் அத்து சோர்கின்றான் தனைப்
பன்ன அரும் கதிரவன் புதல்வன் , பையுள் பார்த்து ,
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் .
4.6.26

4030
இராமன் சுக்கிரீவனிடம் மீட்டும் கூறுதல்
'ஐய ! நீ ஆற்றலின் , ஆறினேன் , அலது
உய்வனே ? எனக்கு இதின் உறுதிவேறு உண்டோ ?
வையகம் அத்து இப்பழி தீர , மாய்வது
செய்வன் ; நின் குறை முடித்து அன்றி செய்கலேன் .
4.6.27

4031
அனுமன் இராமனிடம் கூறுதல் (4031-4036)
என்றனன் இராகவன் ; இனைய காலையில்
வன் திறல் மாருதி , வணங்கினான் ; 'நெடுங்
குன்று இவர் தோளினாய் ! கூறவேண்டுவது
ஒன்று உளது ; அதனை நீ உணர்ந்து கேள் ' எனா .
4.6.28

4032
'கொடும் தொழில் வாலியைக் கொன்று , கோமகன்
கடும் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர்
நெடும் படை கூட்டினாலன்றி , நேடரிது
அடும் படை அரக்கர்தம் இருக்கை , ஆணையாய் !
4.6.29

4033
'வானதோ ? மண்ணதோ ? மற்று வெற்பதோ ?
ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ ?
தேன் உலாம் தெரியலாய் ! தெளிவது அன்று , நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் . '
4.6.30

4034
எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர் ;
வவ்வுவர் அவ் வழி மகிழ்ந்த யாவையும் ;
வெம் வினை வந்தென வருவர் மீள்வர் ; ஆல்
அவ் அவர் உறைவிடம் அறியற் பாலதோ ?
4.6.31

4035
ஒரு முறையே பரந்து , உலகம் யாவையும்
திரு உறை வேறு இடம் தேரவேண்டும் ; ஆல்
வரன் முறை நாடிட வரம்பு இன்று ; ஆல் உலகு
அருமை உண்டு ; அளப்ப அரும் ஆண்டும் வேண்டும் ஆல் .
4.6.32

4036
ஏழுபத்து ஆகிய வெள்ளத்து எம் படை ,
ஊழியிற் கடல் என உலகம் போர்க்கும் ; ஆல்
ஆழியைக் குடிப்பினும் , அயன் செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யும் ஆல் .
4.6.33

4037
இராமன் முதலியோர் வாலிபாற் போதல்
`ஆதலால் அன்னதே அமைவது ஆம் என ,
நீதியாய் ! நினைந்தனென்
என நிகழ்த்தினான் ;
'சாது ஆம் ' என்ற அத் தனுவின் செல்வனும்
'போதும் நாம் வாலிபால் ' என்னப் போயினார் .
4.6.34


4.7 – Die Tötung Valis

4.7 . வாலி வதைப் படலம் (4038- )

4038
இராமன் முதலியோர் மலைச்சாரல் வழியே செல்லுதல்
வெம் கண் ஆளி ஏறும் , மீளிமாவும் , வேக நாகமும் ,
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார் ,
தங்கு சாலம் , மூலம் ஆர் தமாலம் , ஏலம் , மாலைபோல்
பொங்கு நாகமும் துவன்று சாரல் ஊடு போயினார் .
4.7.1

4039
அவர்கள் சென்ற மலை வழியிலுள்ள காட்சிகள் (4039-4045)
உழை உலாம் நெடுங்கண் மாதர் ஊசல் ; ஊசல் அல்லவேல் ,
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் ; சாரல் அல்லவேல் ,
மழை உலாவு முன்றில் ; அல்ல , மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை ; சோலை அல்ல , பொன்செய் குன்றமே .
4.7.2

4040
அறங்கள் நாறும் மேனியார் , அரி கணங்கள் ஓடு உம் அங்கு
இறங்கு போதும் , ஏறுபோதும் . ஈறு இலாத ஓதையால் ,
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப , முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாகம் மீது உலாவுமே .
4.7.3

4041
நீடு நாகம் ஊடு மேகம் ஓட , நீரும் ஓட , நேர்
ஆடும் நாகம் ஓட , மான யானை ஓட , ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல் , வாளை ஓடும் வாவி ஊடு
ஓடு நாகம் ஓட , வேங்கை ஓடும் ; யூகம் ஓடுமே .
4.7.4

4042
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல ; மால்
தெருண்டு இலா மதத்த யானை சீறி நின்று சிந்தலால் ,
இருண்ட காழ் அகில் தடம் அத்து ஒடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது , அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே .
4.7.5

4043
மினல் மணி குலம் துவன்றி , வில் அலர்ந்து , விண்குலாய் ,
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப , வந்து அவிப்பபோல் ,
புனல் பரப்பல் ஒப்ப இருந்த பொன்பரப்பும் என்பவால் ;
இனைய வில் தடக்கை வீரர் ஏகுகின்ற குன்றமே .
4.7.6

4044
மருவி ஆடும் வாவி தோறும் வானயாறு பாயும் , வந்து ;
இருவி ஆர் தடங்கள்தோறும் ஏறுபாயும் ; ஆறுபோல்
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானைபாயும் ; ஏனலில்
குருவி பாயும் ; ஓடி , மந்தி கோடு பாயும் , மாடு எலாம் .
4.7.7

4045
தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல , மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும் ; அன்றி , வானம் வில் இழுக்கும் ; வெண் மதி
கூன் இழுக்கும் ; மற்று உலாவு கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏலம் வாசம் மன்றல் நாறு குன்றமே .
4.7.8

4046
இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்
அன்னது ஆய குன்றின் ஆறு
சென்ற வீரர் , ஐந்தொடு ஐந்து
உன்னல் ஆய யோசனைக்கும்
உம்பர் ஏறி , இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன
வாலிவாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள் ; 'செய்வது என்னை ? '
என்று நின்று சொல்லுவார் .
4.7.9

4047
வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்
அ இடம் அத்து , இராமன் , 'நீ அழைத்து , வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர்விளைக்கும் ஏல்வை , வேறு நின்று
எவ் விடத் துணிந்து அமைந்தது , என்கருத்து இது ' என்றனன் ;
தெவ் அடக்கும் வென்றியானும் , 'நன்று இது ' என்று சிந்தியா .
4.7.10

4048
இராமனது கருத்துக்குச் சுக்கிரீவன் இசைதல்
வார்த்தை அன்னது ஆக , வான் இயங்கு தேரினான் மகன் ,
நீர்த் தரங்க வேலை அஞ்ச , நீலமேகம் நாணவே ,
வேர்த்து மண்ணுளோர் இரிந்து , விண் உளோர்கள் விம்ம , மேல்
ஆர்த்த ஓசை , ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே .
4.7.11

4049
சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்
இடித்து , உரப்பி , 'வந்து போர்
எதிர்த்தியேல் அடர்ப்பன் ' என்று
அடித் தலங்கள் கொட்டி ,
வாய் மடித்து , அடுத்து , அலங்கு தோள்
புடைத்து நின்று , உளைத்த பூசல்
புக்கது என்ப ; மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி
திண் செவி தொளைக்கணே .
4.7.12

4050
அப்பேரொலியினைக் கேட்ட வாலி , உலகமெலாம் நடுங்கும்படி அடங்காச் சினமுடையவனாய்ச் சுக்கிரீவனொடு போர் செய்தற்கு விரைந்து எழுதல் (4050-4058)
மால் பெருங் கடம் கரி முழக்கம் , வாள் அரி
ஓர்ப்பது செவி தலம் அத்து என்ன , ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன் ; அமளிமேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் .
4.7.13

4051
உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை ,
வரைத் தடந் தோளினான் , மனத்தின் எண்ணினான் ;
சிரித்தனன் ; அவ் ஒலி , திசையின் அ புறத்து
இரித்தது , அவ் உலகம் ஒர் ஏழொடு ஏழையே .
4.7.14

4052
எழுந்தனன் , வல்விரைந்து , இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் ;
அழுந்தியது அ கிரி ; அருகில் மால் வரை
விழுந்தன , தோள்புடை விசைத்த காற்றினே .
4.7.15

4053
போய்ப் பொடித்தன மயிர் புறத்த , வெம் பொறி ;
காய்ப்பொடு உற்று எழு வட அனலும் கண் கெட
தீப் பொடித்தன , விழி ; தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை , உயிர்ப்பு வீங்கவே .
4.7.16

4054
கை கொடு கை தலம் புடைப்பக் , காவலின்
திக் கயங்களும் , மதம் செருக்கு சிந்தின ;
உக்கன உரும் இனம் ; உலைந்த உம்பரும் ;
நெக்கன , நெரிந்தன , நின்ற குன்றமே .
4.7.17

4055
'வந்தனென் வந்தனென் ' என்ற வாசகம் ,
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன ;
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின , மணிமுடிச் சிகரம் தீண்டவே .
4.7.18

4056
வீசின கரத்தின் வேர்பறிந்த வெற்பு இனம் ,
ஆசையை உற்றன ; அண்டப் பித்திகை
பூசின , வெண் மயிர் பொடித்த வெம் பொறி ;
கூசினன் , அந்தகன் ; குலைந்தது உம்பரே .
4.7.19

4057
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் , கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின ;
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின ,
வடித்த தோள் வலயம் அத்து இன் வயங்கு காசு அரோ .
4.7.20

4058
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும்
மூலமும் முற்றிட , முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன் , கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் , எவரும் அஞ்சவே .
4.7.21

4059
போர்க்குச் செல்லுதல் வேண்டாம் என வாலியைத் தாரை விலக்குதல்
ஆ இடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேய் இடை தோளினாள் , இடை விலக்கினாள் ;
வாய் இடை புகை வர , வாலி கண்வரும்
தீய் இடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள் .
4.7.22

4060
வாலி , அவள் தடையை மீறுதல்
'விலக்கலை , விடு விடு ; விளித்து உளான் உரம்
கலக்கி , அ கடல் கடைந்து அமுது கண்டு என ,
உலக்க இன் உயிர் குடித்து , ஒல்லை மீள்குவன் ,
மலை குலம் மயில் ' என , மடந்தை கூறுவாள் .
4.7.23

4061
'சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைக்கின்றான் ' எனத் தாரை கூறுதல்
'கொற்றவ , நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன் , முன்னை நாள் , ஈடு உண்டு ஏகினான் ;
பெற்றிலன் பெருந்திறல் ; பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது , நெடும் துணை உடைமையால் ' என்றாள் .
4.7.24

4062
வாலி , தன் பேராற்றலை எடுத்துக் கூறித் தேற்றுதல் (4062-4066)
'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் , தோற்று அவை தொலையும் என்றலின்
சான்று உள ; அன்னவை தையல் கேட்டியால் . '
4.7.25

4063
'மந்தர நெடும் வரை மத்து , வாசுகி
அந்தம் இல் கடைகயிறு , அடைகல் ஆழியான் ,
சந்திரன் தூண் , எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் , ஏனையோர் . '
4.7.26

4064
'பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி ' யான் , அது
'தயிர் ' எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது ,
மயில் இயல் குயில் மொழி , மறக்கல் ஆவதோ ? '
4.7.27

4065
'ஆற்றலின் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் ; ஏனையர் சொல்லற் பாலரோ ?
கூற்றும் என்பெயர் சொல குலையும் , யார் , இனி
மாற்றலற்கு ஆகிவந்து , எதிரும் மாண்பினார் ? '
4.7.28

4066
'பேதையர் எதிர்குவர் எனினும் பெற்று உடை
ஊதிய வரங்களும் , உரமும் , உள்ளதில்
பாதியும் என்னதால் ; பகைப்பது எங்ஙனம் ?
நீ துயர் ஒழிக ' என , நின்று கூறினான் .
4.7.29

4067
'சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துளான் ' எனத் தாரை கூறுதல்
அன்னது கேட்டவள் , 'அரச , `'ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார் ' என்றாள் .
4.7.30

4068
வாலி , இராமனுடைய நற்பண்புகளை யெடுத்துரைத்துத் தாரையின் கூற்றினை மறுத்தல் (4068-4073)
'உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு , இயல்பு அல இயம்பி என் செய்தாய் ?
பிழைத்தனை , பாவி ! உன் பெண்மையால் ' என்றான் .
4.7.31

4069
'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ ? இங்கு இதிற் பெறுவது என் கொல் ஓ ?
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை
தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ ? '
4.7.32

4070
'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி , ஈன்றவள்
மாற்றவள் ஏவ , மற்று , அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை ; இன்னன புகல்தற் பாலையோ ? '
4.7.33

4071
'நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் ,
வென்றி வெம் சிலை அலால் , பிறிது வேண்டுமோ ?
தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ ? '
4.7.34

4072
'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது ' என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடைதொடுக்குமோ , அருளின் ஆழியான் ? '
4.7.35

4073
'இருத்தி , நீ , இறை , இவண் ; இமைப்பு இல் காலையில்
உருத்தவன் உயிர்குடித்து , உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென் ; கலங்கல் ' என்றனன் ;
விரை குழல் , பின் , உரைவிளம்ப அஞ்சினாள் .
4.7.36

4074
போர் வேட்டெழுந்த வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்
ஒல்லைச் செரு வேட்டு உயர் வெல் புயம் ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்
மல்லல் கிரியின்தலை வந்தனன் வாலி , கீழ்பால்
தொல்லைக் கிரியின்தலை தோற்றிய ஞாயிறு என்ன .
4.7.37

4075
வாலியின் வீரத் தோற்றம்
நின்றான் , எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத்
தன் தோள் வலியால் தனி மால் வரை சாலும் வாலி ,
குன்றூ ஊடு வந்து உற்றனன் ; கோள் அவுணன் குறித்த
வன் தூண் இடை தோன்றிய மா நரசிங்கம் என்ன .
4.7.38

4076
வாலி , சுக்கிரீவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்
ஆர்க்கின்ற பின்னேன்தனை நோக்கினன் ; தானும் ஆர்த்தான் ;
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ்ந்த ;
போர்க்கின்றது எல்லா உலகும் , பொதிர்வுற்ற பூசல்
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன .
4.7.39

4077
வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன் , அதனை இலக்குவனுக்குக் காட்டிக் கூறுதல்
அ வேலை , இராமனும் , அன்புடைத் தம்பிக்கு 'ஐய ,
செவ்வே செலநோக்குதி ; தானவர் தேவர் நிற்க ,
எ வேலை , எ மேகம் , எ கால் ஒடு எக்கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை மானும் ? ' என்றான் .
4.7.40

4078
'சுக்கிரீவனது ஒவ்வாச்செயல் நினைந்து உணர்விழந்தேன் ' என இலக்குவன் கூறுதல்
வள்ளற்கு இளையான் பகர்வான் : 'இவன் தம்முன் வாழ்நாள்
கொள்ளக் கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான் ; குரங்கின்
எள்ளற்கு உறு போர் செய எண்ணினன் , என்னும் என்னல்
உள்ளத்தின் ஊன்ற , உணர்வு உற்றிலன் ஒன்றும் ' என்றான் .
4.7.41

4079
ஆற்றாது பின்னும் பகர்வான் , 'அறம் அத்து ஆறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விது அன்றால் ;
மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான் ,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் ? வீர ! ' என்றான் .
4.7.42

4080
இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல் (4080-4081)
'அத்தா ! இது கேள் ' என ஆரியன் கூறுவான் : 'இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ ?
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் , பரதன் பெரிது உத்தமன் ஆவது உண்டோ ? '
4.7.43

4081
'வில் தாங்கு வெற்பு அன்ன , இலங்கு எழில்
தோள ! `'மெய்ம்மை
உற்றார் சிலர் , அல்லவரே பலர்
என்பது உண்மை ;
பெற்றார் உழைப் பெற்ற பயன் பெறும்
பெற்றி அல்லால் ,
” அற்றார் நவை
என்றலுக்கு ஆகுநர்
ஆர் கொல் ? ' என்றான் .
4.7.44

4082
வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்
வீரத் திறலோர் , இவை இன்ன விளம்பும் வேலை ,
தேரில் திரிவான் மகன் , இந்திரன் செம்மல் , என்று இப்
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் ,
மூரித் திசை யானை இரண்டு என , முட்டினாரே .
4.7.45

4083
இருவரும் சாரிதிரிதல்
குன்றோடு குன்று ஒத்தனர் ; கோள் அரிக் கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் ;
நின்றார் , திரிந்தார் நெடுஞ்சாரி ; நிலம் திரிந்த ,
வன் தோள் குயவன் திரி மண் கலம் அத்து ஆழி என்ன .
4.7.46

4084
இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்
தோளோடு தோள் தேய்த்தலின் , தொல் நிலம்
தாங்கல் ஆற்றாத்
தாளோடு தாள் தேய்த்தலின் , தந்த
தழற் பிறங்கல் ,
வாளோடு மின் ஓடுவபோல் நெடு
வானின் ஓடும் ;
கோளோடு கோள் உற்றென ஒத்து ,
அடர்ந்தார் , கொதித்தார் .
4.7.47

4085
அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்
தம் தோள் வலி மிக்கவர் , தம் ஒருதாய் வயிற்றின்
வந்தோர் , மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் ;
சிந்து ஓடு அரி ஒன் கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோப சுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார் .
4.7.48

4086
இருவரும் செய்த பெரும் போர்
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் , காவல் மேருத்
திடல் ஒன்றினொடு ஒன்று அமர்செய்யவும் , சீற்றம் என்பது
உடல்கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் , கண்டிலாதேம் ;
மிடல் இங்கு இவர் வெம் தொழில் கு ஒப்பு உரை வேறு காணேம் .
4.7.49

4087
இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள் ஓடி மறைதல்
ஊகங்களின் நாயகர் வெங்கண் உமிழ்ந்த தீயால் ,
மேகங்கள் எரிந்தன ; வெற்பும் எரிந்த ; திக்கின்
நாகங்கள் நடுங்கின ; நால் நிலமும் குலைந்த ;
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் .
4.7.50

4088
இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து ஓடிப் பொருதல்
'விண் மேலினரோ ? நெடுவெற்பின் முகட்டினாரோ ?
மண் மேலினரோ ? புற மாதிர வீதியாரோ ?
கண் மேலினரோ ? ' என யாவரும் காண நின்றார் ,
புண் மேல் இரத்தம் பொடிப்பக் கடிப்பார் , புடைப்பார் .
4.7.51

4089
அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்
ஏழ் ஒத்து உடன் ஆம் , திசை எட்டு ஒடு இரண்டும் முட்டும்
ஆழிக் கிளர் ஆர்கலிக்கு ஐம்மடங்கு , ஆர்ப்பின் ஓசை ;
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய ,
ஊழிக் கிளர் கார் உரும் ஒத்தது , குத்தும் ஓதை .
4.7.52

4090
ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் மேகத்திலும் படிந்த தோற்றம்
வெம் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீச்சென்று
அ வாய் எழு சோரி அது , ஆசைகள் தோறும் வீச ,
எ வாய் உம் எழுந்த கொழுஞ்சுடர் மீன்கள் யாவும் ,
செம் வா ஐ நிகர்த்தன ; செக்கரை ஒத்த , மேகம் .
4.7.53

4091
வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்
வெந்த வல் இரும்பு இடை நெடுங் கூடங்கள் வீழ்ப்பச்
சிந்தி எங்கணும் சிதறுவபோல் , பொறி தெறிப்ப ,
இந்திரன்மகன் புயங்களும் , இரவிசேய் உரனும் ,
சந்த வல் நெடுந் தட கைகள் தாக்கலின் தகர்வ .
4.7.54

4092
இருவரும் செய்த போர்ச் செயல்கள் (4092-4096)
உரத்தினால் மடுத்து உந்துவர் , பாதம் இட்டு உதைப்பர் ;
கரம் அத்து இன் ஆல் விசைத்து எற்றுவர் ; கடிப்பர் ; நின்று இடிப்பர் ;
மரத்தினால் அடித்து உரப்புவர் ; பொருப்பு இனம் வாங்கிக்
சிரம் அத்து இன் மேல் எறிந்து உறுக்குவர் ; தெழிப்பர் ; தீ விழிப்பர் .
4.7.55

4093
எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் ;
கொடுப்பர் வந்து உரம் ; குத்துவர் கை தலம் குளிப்ப ;
கடுப்பினில் பெருங் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர் ; பின்றுவர் , ஒன்றுவர் , தழுவர் , விழுவர் .
4.7.56

4094
வாலினால் உரம் வரிந்தனர் , நெரிந்து உக வலிப்பர் ;
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் ; கழல்வர் ;
வேலினால் அற எறிந்து என , விறல் வலி உகிரால் ,
தோலின் ஆர் உடல் , நெடுவரை முழை எனத் தொளைப்பர் .
4.7.57

4095
மண் அகத்தன மலைகளும் , மரங்களும் , மற்றும்
கண் அகத்தினில் தோன்றிய யாவையும் , கையால் ,
எண் நக பறித்து எறிதலின் , எற்றலின் , இற்ற ;
விண் அகத்தினை மறைத்தன ; மறிகடல் வீழ்ந்த .
4.7.58

4096
வெருவிச் சாய்ந்தனர் , விண்ணவர் ; வேறு என்னை விளம்பல் ?
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் ; உடன்று
செருவில் தேய்த்தலின் , செங்கனல் வெண்மயிர் செல்ல ,
முரிபுல் கான் இடை எரிபரந்தன என முனைவார் .
4.7.59

4097
வாலி , சுக்கிரீவனைத் தாக்கி வருத்துதல்
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர்புரி பொழுதின் ,
வல் நெடும் தடம் திரள் புயத்து அடுதிறல் வாலி ,
சொன்ன தம்பியைத் தும்பியை அரி தொலைத்து என்ன
கொன் நகங்களின் , கரங்களின் குலைந்து உக மலைந்தான் .
4.7.60

4098
வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன் , இராமனை யடைந்து அவன் பணித்தவாறு அடையாளமாலை மிலைந்து சென்று பொருதல்
மலைந்தபோது இனைந்து , இரவிசேய் , ஐயன்மாட்டு அணுகி ,
உலைந்த சிந்தையோடு உணங்கினன் , வணங்கிட , 'உள்ளம்
குலைந்திடேல் ; உமை வேற்றுமை தெரிந்திலம் ; கொடி பூ
மிலைந்து செல்க ' என விடுத்தனன் ; எதிர்த்தனன் மீட்டும் .
4.7.61

4099
சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தன போல ,
வயங்கு சென்னியன் , வயம் புலி வானவல் ஏற்றோடு
உயங்கும் ஆர்ப்பினன் , ஒல்லை வந்து , அடு திறல் வாலி
பயம் கொளப் புடைத்து , எற்றினன் ; குத்தினன் , பல கால் .
4.7.62

4100
வாலி சுக்கிரீவனை உயிர்த்தலத்தில் புடைத்து உதைத்தல்
அயிர்த்த சிந்தையன் , அந்தகன்
குலைகுலைந்து அஞ்சச்
செயிர்த்து நோக்கினன் ; சினத்தொடு
சிறுநகை செய்யா ,
வயிர்த்த கையினும் , காலினும் ,
கதிர்மகன் மயங்க ,
உயிர்த் தலந்தொறும் புடைத்தனன் ;
அடித்தனன் ; உதைத்தான் .
4.7.63

4101
வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசைநோக்கி விழித்தல்
கக்கினான் உயிர் , உயிர்ப்பொடும் ; செவிகளின் , கண்ணின்
உக்கது , ஆங்கு எரி படலை ஓடு உதிரத்தின் ஓதம் ;
திக்கு நோக்கினன் , செம் கதிரோன் மகன் ; செருக்கிப்
புக்கு , மீக்கொடு நெருக்கினன் , இந்திரன் புதல்வன் .
4.7.64

4102
வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுதற்குப்பற்றி மேலே தூக்கியபொழுது இராமன் வாலியின்மேல் அம்பு செலுத்தல்
'எடுத்துப் பார் இடை எற்றுவன் , பற்றி ' என்று இளவல்
கடி தலம் அத்து இன் உம் , கழுத்தினும் , தன் இருகரங்கள்
மடுத்து , மீ கொண்ட வாலிமேல் , கோல் ஒன்று வாங்கித்
தொடுத்து , நாணொடு தோள் உறுத்து , இராகவன் துரந்தான் .
4.7.65

4103
இராமபாணம் வாலியின் மார்பை எளிதில் துளைத்தல்
காரும் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது நின்றது என் செப்ப ?
நீரும் , நீர்தரு நெருப்பும் , வன் காற்று உம் , கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி .
4.7.66

4104
வாலி கலங்கி விழுதல்
அலங்கு தோள் வலி அழிந்த தன் தம்பியை அருளான் ,
வலம்கொள் பார் இடை எற்றுவான் உற்ற போர் வாலி ,
கலங்கி , வல்விசைக் கால் கிளர்ந்து எறிவு உற கடை கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என , வீழ்ந்தான் .
4.7.67

4105
வாலி , சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து , தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல்
சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்தெனச் சாய்ந்தான் ,
வையம் மீதிடைக் கிடந்த , போர் அடுதிறல் வாலி ,
வெய்யவன் தரு மதலையை மிடல்கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன் ; நெகிழ்ந்திலன் , கடும் கணை கவர்தல் .
4.7.68

4106
வெற்றி வீரனது அடுகணை , அவன்மிடல் உரம் அத்து ஊடு
உற்றது ; அ புறத்து உறாதமுன் , உறு வலி கரத்தால்
பற்றி , வாலினும் காலினும் பறித்து அகப்படுத்தான் ;
கொற்ற வெங் கொடு மறலியும் சிரம் தலம் குலைந்தான் .
4.7.69

4107
வாலியின் சீற்றமும் ஐயமும்
எழுந்து , 'வான் முகடு இடித்து
உகப் படுப்பல் ' என்று , இவரும் ;
'உழுந்து பேரு முன் , திசை திரிந்து
இறுப்பல் ' என்று உறுக்கும் ,
விழுந்து 'பாரினை வேரொடும்
பறிப்பல் ' என்று ஓரும் ;
'அழுந்தும் இச்சரம் எய்தவன்
ஆர்கொல் ? ' என்று அயிர்க்கும் .
4.7.70

4108
வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வாராமையின் வருந்துதல்
எற்றும் , கையினை நிலத்தொடும் ; எரிப் பொறி பறப்பச்
சுற்றும் நோக்குறும் ; சுடு சரத்தினைத் துணைக் கரத்தால்
பற்றி , வாலினும் காலினும் வலி உறப் பறிப்பான்
உற்று , உறாமையின் உலைவுறும் ; மலை என உருளும் .
4.7.71

4109
வாலி , தன்மேற் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்
'தேவரோ ? ' என அயிர்க்கும் ; 'அத்தேவர் இ செயலுக்கு
ஆவரோ ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ? ' எனும் ; 'அயலோர்
யாவரோ ? ' என நகைசெயும் ; 'ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயலாம் ' என மொழியும் .
4.7.72

4110
வாலி , தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
'நேமி தான் கொலோ ? நீலகண்டன்
நெடுஞ் சூலம்
ஆம் இது , ஆம் கொலோ ? அன்று எனின் ,
குன்று உருவு அயிலும் ,
நாம இந்திரன் வச்சிரப்
படையும் , என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ ?
யாது ? ' எனப் புழுங்கும் .
4.7.73

4111
வாலி , தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் ஆற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்
'வில்லினால் துரப்ப அரிது , இவ்
வெம் சரம் ! ' என வியக்கும் ;
'சொல்லினால் நெடு முனிவரோ
தூண்டினார் ? ' என்னும் ;
பல்லினால் கடிப்புறும் பல
காலும் ; தன் உரத்தைக்
கல்லி , ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
பகழியைக் கண்டான் .
4.7.74

4112
அம்பினை எய்தவன் பெயர் யாதென அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தெடுத்தல் (4112-4113)
'சரம் எனும்படி தெரிந்தது ; பலபடச் சலித்து என் ?
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றைக்
கரம் இரண்டினும் காலினும் வாலினும் கழற்றிப்
பரமன் அன்னவன் பெயர் அறிவேன் ' எனப் பறிப்பான் .
4.7.75

4113
ஓங்கு அரும் பெருந் திறல் உடை மனத்தன் , உள்ளத்தன் ,
வாங்கினான் மற்று அவ் வாளியை , ஆளிபோல் வாலி ;
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் ,
வீங்கினார்கள் தோள் ; வீரரை யார் வியவாதார் ?
4.7.76

4114
வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமெனப் பெருகுதல்
மூடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ ?
காடும் மா நெடு விலங்கலும் கடந்தது ; அக் கடலின்
ஊடு போதல் உற்று அதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் .
4.7.77

4115
வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கைக் கண்ட சுக்கிரீவன் உடன்பிறப்பென்னும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல்
வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் ; உடன் பிறப்பு என்னும்
பாசம் அத்து ஆல் பிணிப்பு உண்ட அத் தம்பியும் , பசும் கண்
நேசத் தாரைகள் சொரிதர , நெடுநிலம் சேர்ந்தான் .
4.7.78

4116
தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தெடுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணுதல் (4116-4117)
பறித்த வாளியைப் பரு வலித்
தடக்கையால் பற்றி ,
'இறுப்பென் ' என்று கொண்டு எழுந்தனன் ,
மேருவை இறுப்போன் ;
'முறிப்பென் என்னினும் முறிவது அன்றாம் '
என மொழியாப் ,
பொறித்த நாமத்தை அறிகுவான்
நோக்கினன் , புகழோன் .
4.7.79

4117
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை , முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை , தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை , 'இராமன் ' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான் .
4.7.80

4118
இராமனது செயல் நினைந்து , வாலி நாணி வருந்துதல் (4118-4119)
'இல் அறம் துறந்த நம்பி ,
எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் ,
தோன்றலால் , வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
சூரியன் மரபும் , தொல்லை
நல் அறம் துறந்தது ' என்னா ,
நகை வர , நாண் உள் கொண்டான் .
4.7.81

4119
வெள்கிடும் ; மகுடம் சாய்க்கும் ;
வெடிபடச் சிரிக்கும் ; மீட்டும்
உள்கிடும் ; 'இதுவும் தான் ஓர்
ஓங்கு அறமோ ? ' என்று உன்னும் ;
முள்கிடும் குழியில் புக்க
மூரிவெம் களி நல் யானை
தொள் கொடும் கிடந்தது என்னத் ,
துயர் உழந்து அழிந்து சோர்வான் .
4.7.82

4120
'இராமன் முறை திறம்பினான் ' என்று கூறி வருந்தும் வாலியின் முன்னே இராமன் வந்து தோன்றுதல்
'இறை திறம்பினனால் ; என்னே
இழிந்துளோர் இயற்கை ? என்னில்
முறை திறம்பினனால் ' என்று
மொழிகின்ற முகத்தான் முன்னர் ,
மறை திறம்பாத வாய்மை
மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
தோன்றினான் , வந்து தோன்ற .
4.7.83

4121
இராமனைக் கண்ணுற்ற வாலி , 'நின்செயல் முறையற்றது '
எனக் கூறி இகழ்தல் (4121-4136)
கண்ணுற்றான் வாலி ,
நீலக் கார்முகில் , கமலம் பூத்து ,
மண் உற்று வரிவில் ஏந்தி ,
வருவதே போலும் மாலை ;
புண் உற்றது அனைய சோரி
பொறியொடும் பொடிப்ப , நோக்கி ,
'எண் உற்றாய் என் செய்தாய் ? ' என்று ,
ஏசுவான் இயம்பல் உற்றான் .
4.7.84

4122
'வாய்மையும் மரபும் காத்து
மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே ! நீ
பரதன் முன் தோன்றினாயே ;
தீமைதான் பிறரைக் காத்துத்
தான் செய்தால் தீங்கு அன்று ஆம் ஓ ?
தாய்மையும் அன்றி நட்பும்
தருமமும் தழுவி நின்றாய் .
4.7.85

4123
குலம் இது ; கல்வி ஈது ;
கொற்றம் ஈது ; உற்று நின்ற
நலம் இது ; புவனம் மூன்றும்
நாயகம் உன்னது அன்றோ ?
வலம் இது ; இவ் உலகம் தாங்கும்
வண்மை ஈது ; என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ ,
அறிந்திருந்து அயர்ந்துளார் போல் .
4.7.86

4124
'கோ இயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய் ; - உடைமை அன்றோ ?
ஆவியை , சனகன் பெற்ற
அன்னத்தை , அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை ,
திகைத்தனை போலும் , செய்கை . '
4.7.87

4125
'அரக்கர் ஓர் அழிவு செய்து
கழிவரேல் , அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனுநெறி கூறிற்று உண்டோ ?
இரக்கம் எங்கு உகுத்தாய் ? என்பால்
எப் பிழை கண்டாய் ? அப்பா !
பரக்கழி இது நீ பூண்டால் ,
புகழை யார் பரிக்கற் பாலார் ? '
4.7.88

4126
'ஒலி கடல் உலகம் தன்னில்
ஊர்தரு குரங்கின் மாடே
கலியது காலம் வந்து
பரந்ததோ ? கருணை வள்ளால் !
மெலியவர் பாலதேயோ ,
ஒழுக்கமும் , விழுப்பம் தானும் ?
வலியவர் மெலிவு செய்தால்
புகழ் அன்றி வசை இன்று ஆமோ ? '
4.7.89

4127
'கூட்டு ஒருவரையும் வேண்டாக்
கொற்றவ ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே
தம்பிக்குக் கொடுத்துப் போந்து ,
நாட்டு ஒரு கருமம் செய்தாய் ;
எம்பிக்கு இவ் அரசை நல்கி ,
காட்டு ஒரு கருமம் செய்தாய் ;
கருமம்தான் இதன்மேல் உண்டோ ? '
4.7.90

4128
'அறை கழல் அலங்கல் வீரர்
ஆயவர் புரிவது , ஆண்மைத்
துறை ' எனல் ஆயிற்று அன்றே ?
தொன்மையின் நல் நூல் கு எல்லாம்
இறைவன் நீ , என்னைச் செய்தது ,
ஈது எனில் , 'இலங்கை வேந்தன்
முறை அ(ல்)ல செய்தான் ' என்று
முனிதியோ ? முனிவு இலாதாய் '
4.7.91

4129
'இருவர் போர் எதிரும் காலை ,
இருவரும் நல் உற்றாரே ;
ஒருவர்மேல் கருணை தூண்டி ,
ஒருவர்மேல் ஒளித்து நின்று ,
வரி சிலை குழைய வாங்கி ,
வாய் அம்பு மருமம் அத்து எய்தல்
தருமமோ ? பிறிது ஒன்று ஆமோ ?
தக்கிலது என்னும் பக்கம் . '
4.7.92

4130
'வீரம் அன்று ; விதி அன்று ; மெய்ம்மையின்
வாரம் அன்று ; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று ; பகை அன்று ; பண்பு ஒழிந்து ,
ஈரம் அன்று இது ; என் செய்தவாறு நீ ? '
4.7.93

4131
'இருமை நோக்கி நின்று , யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காப்பது ?
பெருமை என்பது , இது என் ? பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவல் ஓ ? '
4.7.94

4132
'செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து ,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின் ,
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி , ஓர்
முயலைப் பற்றுவது , என்ன முயற்சியோ ? '
4.7.95

4133
'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளது ஆம் என ,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு ,
ஆரியன் ! பிறந்து ஆக்கினை ஆம் அரோ ! '
4.7.96

4134
'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ , வந்து
உற்ற என்னை , ஒளித்து , உயிர் உண்ட நீ ,
இற்றையில் , பிறர்க்கும் 'இகல் ஏறு ' என
நிற்றி போலும் ? கிடந்த நிலத்து அரோ . '
4.7.97

4135
'நூல் இயற்கையும் , நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் , சீலமும் , போற்றலை ;
வாலியைப் படுத்தாய் அ(ல்)லை ; மன் அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே ! '
4.7.98

4136
'தாரம் மற்று ஒருவன் கொள , தன் கையில்
பார வெம் சிலை வீரம் பழிப்பதே !
நேரும் அன்று , மறைந்து , நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே ? '
4.7.99

4137
வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல் (4137-4148
என்று , தானும் எயிறு பொடி படத்
தின்று , காந்தி , விழி வழித் தீ உக
அன்று அ(வ்)வாலி அனையன கூறினான் ;
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான் .
4.7.100

4138
” பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் எனாப்
புலம்பு உற்று , உன் வழிப் போதல் உற்றான் தனை ,
குலம் புக்கு ஆன்ற முதியர் , ” குறிக்கொள் நீ
அலம் பொன் தாரவனே ! அரசு
என்றலும் .
4.7.101

4139
” வானம் ஆள என் தன்முனை வைத்தவன்
தானும் மாளக் , கிளையின் இறத் தடிந்து ,
யானும் மாள்வென் ; இருந்து அரசு ஆள்கிலென் ;
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என ,
4.7.102

4140
'பற்றி , ஆன்ற படைத் தலை வீரரும்
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும்
'இற்றது , உம் அரசு , எய்தலையேல் ' என ,
கொற்ற நன் முடி கொண்டது , இக் கோதிலான் . '
4.7.103

4141
'வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் ;
” எந்தை ! என் கண் , இனத்தவர் ஆற்றலால்
தந்தது உன் அரசு என்று , தரிக்கலான்
முந்தை உற்றது சொல்ல , முனிந்து நீ . '
4.7.104

4142
'கொல்லல் உற்றனை , உம்பியை ; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை ;
” அல்லல் செய்யேல் ; உனக்கு அபயம் ; பிழை
புல்லல் என்னவும் , புல்லலை , பொங்கினாய் . '
4.7.105

4143
'ஊற்றம் முற்று உடையான் , ” உனக்கு ஆர் அமர்
தோற்றும் என்று தொழுது உயர் கையனைக்
” கூற்றம் உண்ணக் கொடுப்பன்
என்று எண்ணினாய் ;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் . '
4.7.106

4144
'அன்ன தன்மை அறிந்தும் , அருளலை ;
பின்னவன் இவன் என்பதும் பேணலை ;
வன்னிதான் இடு சாப வரம்புடைப்
பொன் மலைக்கு இவன் நண்ணலின் , போகலை ; '
4.7.107

4145
'ஈரம் ஆவதும் , இற் பிறப்பு ஆவதும் ,
வீரம் ஆவதும் , கல்வியின் மெய்ந் நெறி
வாரம் ஆவதும் , மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவது தாங்கும் தருக்கு அரோ . '
4.7.108

4146
'மறம் திறம்பல் , ” வலியம் எனா , மனம்
புறம் திறம்ப , எளியவர்ப் பொங்குதல் ;
அறம் திறம்பல் , அருங் கடி மங்கையர்
திறம் திறம்பல் ; - தெளிவு உடையோர்க்கு எலாம் . '
4.7.109

4147
'தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை ; எண்ணினால் ,
அருமை உம்பிதன் ஆர் உயிர் தேவியைப்
பெருமை நீங்கினை , எய்தப் பெறுதியோ ? '
4.7.110

4148
'ஆதலானும் , அவன் எனக்கு ஆருயிர்க்
காதலான் எனலானும் , நின் கட்டனென் ;
ஏதிலாரும் , எளியர் என்றால் , அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ . '
4.7.111

4149
இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி பகர்தல் (4149-4152)
'பிழைத்த தன்மை இது ' எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரை செய , தக்கிலாது
இழைத்த வாலி , 'இயல்பு அல , இ துணை ;
விழைத் திறம் , தொழில் ' என்று விளம்புவான் . '
4.7.112

4150
'ஐய ! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் , எமைத் தேம் மலர் மேலவன் ;
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் . '
4.7.113

4151
'மணமும் இல்லை , மறை நெறி வந்தன ;
குணமும் இல்லை , குல முதற்கு ஒத்தன ;
உணர்வு சென்ற உழி செல்லும் ஒழுக்கு அலால் -
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் ! '
4.7.114

4152
'பெற்றி மற்று இது ; பெற்றது ஒர் பெற்றியின்
குற்றம் உற்றிலென் ; நீ அது கோடியால் -
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் ! ' எனச்
சொற்ற சொல் தகைக்கு உற்றது சொல்லுவான் :
4.7.115

4153
'குற்றமுற்றிலேன் ' என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து , அவன் செய்த
செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல் (4153-4166)
நலம் கொள் தேவரின் தோன்றி , நவை அற ,
கலங்கலாது , அற நல் நெறி காண்டலின் ,
விலங்கு அலாமை விளங்கியது ; ஆதலான்
அலங்கலார்க்கு இது அடுப்பது அன்று ஆம் அரோ .
4.7.116

4154
'பொறியின் யாக்கையதோ ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ , அறம் அத்து ஆறு தான் ?
நெறியின் நோன்மையை நேர் நின்று உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றிதான் ?
4.7.117

4155
'மாடு பற்றி இடங்கர் வலித்திட ,
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் ,
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அது ஓ ? '
4.7.118

4156
'சிந்தை நல் அறத்தின் வழிச் சேர்தலால் ,
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான் ,
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும் , எருவைக்கு அரசு அல்லனோ ? '
4.7.119

4157
'நன்று , தீது , என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ , விலங்கின் இயல் ?
நின்ற நல் நெறி , நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை , உன் வாய்மை உணர்த்துமால் . '
4.7.120

4158
'தக்க இன்ன , தகாதன இன்ன , என்று
ஒக்க உன்னலர் ஆயின் , உயர்ந்துள
மக்களும் , விலங்கே ; மனுவின் நெறி
புக்கவேல் , அவ் விலங்கும் புத்தேளிரே . '
4.7.121

4159
'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் -
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் ,
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் . '
4.7.122

4160
மே வரும் தருமம் துறை மேவினார் ,
ஏவரும் , பவத்தால் இழிந் தோர்களும் ;
தா வரும் தவரும் , பல தன்மை சால்
தேவரும் , உளர் , தீமை திருத்தினார் .
4.7.123

4161
'இனையது ஆதலின் , எக் குலத்து யாவர்க்கும் ,
வினையினால் வரும் , மேன்மையும் கீழ்மையும் ;
அனைய தன்மை அறிந்தும் , அழித்தனை ,
மனையின் மாட்சி ' என்றான் மனு நீதியான் .
4.7.124

4162
'நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி '
என வாலி இராமனை வினாதல்
அவ் உரை அமையக் கேட்ட
அரி குலத்து அரசு , 'மாண்ட
செவ்வியோய் ! அனையது ஆக ;
செரு களம் அத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன ,
விலங்கியே மறைந்து , வில்லால்
எவ்வியது என்னை ? ' என்றான் ;
இலக்குவன் இயம்பல் உற்றான் .
4.7.125

4163
வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
'முன்பு , நின் தம்பி வந்து
சரண்புக , முறை இ(ல்)லோயைத்
‘’ தென் புலத்து உய்ப்பன் என்று
செப்பினன் ; செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி ,
‘’ அடைக்கலம் யானும்
என்றி
என்பது கருதி , அண்ணல்
மறைந்து நின்று எய்தது ' என்றான் .
4.7.126

4164
தன் குற்றம் உணர்ந்த வாலி இராமனைப் பணிந்து தான் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருளுமாறு வேண்டுதல் (4164-4165)
கவி குலத்து அரசும் அன்ன
கட்டுரை கருத்தில் கொண்டான் ;
அவியுறு மனத்தன் ஆகி ,
'அறம் திறன் அழியச் செய்யான்
புவி உடை அண்ணல் ' என்பது
எண்ணினன் ; பொருந்தி முன்னே
செவி உறு கேள்விச் செல்வன்
சென்னியின் இறைஞ்சிச் சொன்னான் .
4.7.127

4165
'தாய் என உயர்க்கு நல்கி ,
தருமமும் , தகவும் , சால்பும் ,
நீ என நின்ற நம்பி !
நெறியினின் நோக்கும் நேர்மை ,
நாய் என நின்ற எம்பால் ,
நவை அற உணரலாமே ?
தீயன பொறுத்தி ' என்றான்
சிறியன சிந்தி யாதான் .
4.7.128

4166
வாலி , தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம்
வேண்டுதல் (4166-4172)
இரந்தனன் பின்னும் ; 'எந்தை !
யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி , நாயேன்
கூறிய மனம் அத்து கொள்ளேல் ;
அரந்தை வெம் பிறவி என் நோய்க்கு
அரு மருந்து அனைய ஐயா !
வரம் தரும் வள்ளால் ! ஒன்று
கேள் ' என மறித்தும் சொல்வான் :
4.7.129

4167
'ஏவு கூர் வாளியால் எய்து , நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய் , அறிவு தந்து அருளினாய் ;
மூவர் நீ ! முதல்வன் நீ ! முற்றும் நீ ! மற்றும் நீ !
பாவம் நீ ! தருமம் நீ ! பகையும் நீ ! உறவும் நீ ! '
4.7.130

4168
'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொருவு இலா
வரம் எலாம் உருவி , என் வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி , என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால் , பிறிது வேறு உளது அரோ தருமமே ? '
4.7.131

4169
‘’ யாவரும் எவையும் ஆய் , இருதுவும் பயனும் ஆய் ,
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் !
'யாவன் நீ யாவது ' என்று அறிவினார் அருளினார் ;
தாவு அரும் பதம் எனக்கு அருமையோ ? தனிமையோய் !’’
4.7.132

4170
'உண்டு எனும் தருமமே உருவமாய் உடைய நிற்
கண்டு கொண்டேன் ; இனிக் காண என் கடவெனோ ?
பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே , அடியனேற்கு உறு பதம் தருவதே . '
4.7.133

4171
'மற்று இனி உதவி உண்டோ ?
வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ ! நின்னை , என்னைக்
கொல்லிய கொணர்ந்து , தொல்லைச்
சிறு இனம் குரங்கினோடும்
தெரிவு உறச் செய்த செய்கை ,
வெற்று அரசு எய்தி , எம்பி ,
வீட்டு அரசு எனக்கு விட்டான் . '
4.7.134

4172
'ஓவிய உருவ ! நாயேன்
உளது ஒன்று பெறுவது உன்பால் ;
பூ இயல் நறவம் மாந்தி ,
புந்தி வேறு உற்ற போழ்தில் ,
தீவினை இயற்று மேனும் ,
எம்பி மேல் சீறி , என் மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல் ' என்றான் .
4.7.135

4173
வாலி மற்றும் ஒருவரம் வேண்டுதல்
'இன்னும் ஒன்று இரப்பது உண்டால் ;
எம்பியை உம்பிமார்கள்
‘’தன்முனைக் கொல்வித்தான் என்று
இகழ்வரேல் , தடுத்தி , தக்கோய் !
முன் முனே மொழிந்தாய் அன்றே ,
இவன் குறை முடிப்பது ? ஐயா !
பின் இவன் வினையின் செய்கை
அதனையும் பிழைக்கல் ஆமோ ? '
4.7.136

4174
வாலி , இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி , இராமனுக்கு அநுமனைப் பற்றித் தகவுரை பகர்தல் (4174-4175)
'மற்று இலென் எனினும் , மாய
அரக்கனை வாலின் பற்றி ,
கொற்றவ ! நின்கண் தந்து ,
குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலென் ; கடந்த சொல்லின் ,
பயன் இலை ; பிறிது ஒன்றேனும் ,
'உற்றது செய்க ' என்றாலும் ,
உரியன் இவ் அனுமன் ' என்றான் .
4.7.137

4175
'அனுமன் என்பவனை - ஆழி
ஐய ! - நின் செய்ய செங்கைத்
தனு என நினைதி ; மற்று , என்
தம்பி நின் தம்பி ஆக
நினைதி ; ஓர் துணைவர் இன்னோர்
அனையவர் இலை ; நீ , ஈண்டு , அவ்
வனிதையை நாடிக் கோடி –
வானினும் உயர்ந்த தோளாய் !
4.7.138

4176
வாலி , தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து அவனுக்கு உறுதியுரை பகர்தல் (4176-4182)
என்று அவற்கு இயம்பி , பின்னர் ,
இருந்தனன் இளவல் தன்னை
வன் துணைத் தடக்கை நீட்டி
வாங்கினன் தழுவி , 'மைந்த !
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்
உறுதி ; அஃது உணர்ந்து கோடி ;
குன்றினும் உயர்ந்த தோளாய் !
வருந்தலை ' என்று கூறும் :
4.7.139

4177
'மறைகளும் , முனிவர் யாரும் ,
மலர் மிசை அயனும் , மற்றைத்
துறைகளின் முடிவும் , சொல்லும்
துணிபொருள் , தனி வில் தாங்கி ,
அறை கழல் இராமன் ஆகி ,
அற நெறி நிறுத்த வந்தது ;
இறை ஒரு சங்கை இன்றி
எண்ணுதி ; எண்ணம் மிக்கோய் ! '
4.7.140

4178
'நிற்கின்ற செல்வம் வேண்டி
நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது , இவன்தன் நாமம் ;
கருதுவது , இவனைக் கண்டாய் ;
பொற் குன்றம் அனைய தோளாய் !
பொது நின்ற தலைமை நோக்கின் ,
எற் கொன்ற வலியே சாலும் ;
இதற்கு ஒன்றும் ஏது வேண்டா . '
4.7.141

4179
'கைதவம் இயற்றி , யாண்டும்
கழிப்ப அரும் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும் ,
வான் உயர் நிலையை , வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால் ,
இணை அடி இறைஞ்சி , ஏவல்
செய்தவர் பெறுவது , ஐயா !
செப்பலாம் தன்மைத்து ஆமோ ? '
4.7.142

4180
'அருமை என் ? விதியினாரே
உதவுவான் அமைந்த காலை ;
இருமையும் எய்தினாய் ; மற்று
இனிச் செயல் பாலது எண்ணின் ,
திருமறு மார்பன் ஏவல்
சென்னியில் சேர்த்தி , சிந்தை
ஒருமையின் நிறுவி , மும்மை
உலகினும் உயர்தி அன்றே . '
4.7.143

4181
'மத இயல் குரக்குச் செய்கை
மயர்வு ஒடு மாற்றி , வள்ளல்
உதவியை உன்னி , ஆவி
உற்ற இடம் அத்து உதவுகிற்றி ;
பதவியை எவர்க்கும் நல்கும்
பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து , நொய்தின் ,
தீர்வு அரும் பிறவி தீர்தி . '
4.7.144

4182
'அரசியல் பாரம் பூரித்து ,
அயர்ந்தனை இகழாது , ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா
வாழுதி ; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியர் என்றே
எண்ணுதி ; எண்ணம் யாவும்
புரிதி ; சிறு அடிமை குற்றம்
பொறுப்பர் என்று எண்ண வேண்டா ' .
4.7.145

4183
வாலி , சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தல்
என்ன , இத் தகைய ஆய
உறுதிகள் யாவும் , ஏங்கும்
பின்னவற்கு இயம்பி , நின்ற
பேர் எழிலானை நோக்கி ,
'மன்னவர்க்கு அரசன் மைந்த !
மற்று இவன் , சுற்றத்தோடும்
உன் அடைக்கலம் ' என்று உய்த்தே ,
உயர்கரம் உச்சி வைத்தான் .
4.7.146

4184
வாலி , சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை அழைத்து வரச் செய்தல்
வைத்தபின் , உரிமைத் தம்பி மா முகம் நோக்கி , 'வல்லை
உய்த்தனை கொணர்தி , உன் தன் ஓங்கு அரு மகனை ' என்ன ,
அ தலை அவனை ஏவி அழைத்தலின் , அணைந்தான் என்ப ;
கை தம் அத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை .
4.7.147

4185
அங்கதன் வாலியைக் காணுதல்
சுடர் உடை மதியம் என்னத்
தோன்றிய தோன்றல் , யாண்டும்
இடர் உடை உள்ளத் தோரை
எண்ணினும் உணர்ந்திலாதான் ,
மடல் உடை நறுமென் சேக்கை
மலை அன்றி , உதிர வாரிக்
கடல் இடை கிடந்த காதல்
தாதையைக் கண்ணின் கண்டான் .
4.7.148

4186
அங்கதன் , வாலியின்மீது வீழ்ந்து புலம்புதல் (4186-4190)
கண்ட கண் , கனலும் நீரும்
குருதியும் கால , மாலைக்
குண்டலம் அலம்பு கின்ற
குவவுத் தோள் குரிசில் , திங்கள்
மண்டலம் , உலகின் வந்து
கிடந்தது ; அம் மதியின் மீதா
விண் தலம் அதனின் நின்று ஓர்
மீன் விழுந்து என்ன , வீழ்ந்தான் .
4.7.149

4187
'எந்தையே ! எந்தையே ! இவ்
எழு திரை வளாகத்து , யார்க்கும்
சிந்தையால் , செய்கையால் , ஓர்
தீவினை செய்திலாதாய் !
நொந்தனை ; அதுதான் நிற்க ,
நின்முகம் நோக்கிக் கூற்றும்
வந்ததே அன்றோ அஞ்சாது ?
ஆர் அதன் வலியைத் தீர்ப்பார் ? '
4.7.150

4188
'தறை அடித்தது போல் தீராத்
தகைய , இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு , அழிவு செய்த
கண்டகன் நெஞ்சம் , உன்தன்
நிறை அடிக் கோல வாலின்
நிலைமையை நினையுந் தோறும்
பறை அடிக்கின்றது ; அந்தப்
பயம் அறப் பறந்தது அன்றே ? '
4.7.151

4189
'குலம் வரை , நேமிக் குன்றம்
என்ற வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும் , நின் பொன் தாளின்
தழும்பு , இனி , தவிர்ந்த அன்றே ?
மலைகொளும் அரவும் மற்றும்
மதியமும் பலவும் தாங்கி ,
அலைகடல் கடைய வேண்டின் ,
ஆர் இனிக் கடைவர் ? ஐயா ! '
4.7.152

4190
'பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங்கை
ஆணையாய் ! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால் ;
இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை ; வள்ளியோர்கள்
நின்னின் யார் சொல்லற் பாலார் ? '
4.7.153

4191
வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்
ஆயன பலவும் பன்னி ,
அழுங்கினன் புழுங்கி , நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை
உருகினன் ; செங்கண் வாலி ,
'நீ இனி அயர்வாய் அல்லை '
என்று , தன் நெஞ்சில் புல்லி ,
'நாயகன் இராமன் செய்த , -
நல்வினைப் பயன் , இது ' என்றான் .
4.7.154

4192
வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல் (4192-4194)
'தோன்றலும் , இறத்தல் தானும் ,
துகள் அறத் துணிந்து நோக்கின் ,
மூன்று உலகத்தினோர்க்கும்
மூலத்தே முடிந்த அன்றே ?
யான் தவம் உடைமையால் இவ்
இறுதி வந்து இசைந்தது ; யார்க்கும்
சான்று என நின்ற வீரன் ,
தான் வந்து வீடு தந்தான் . '
4.7.155

4193
'பாலமை தவிர் நீ ; என் சொல்
பற்றுதி ஆயின் , தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய் பொருள் , வில்லும் தாங்கி ,
கால் தரை தோய நின்று ,
கண் புலக்கு உற்றது அம்மா !
மால்தரும் பிறவி நோய்க்கு
மருந்து என வணங்கு மைந்த ! '
4.7.156

4194
'என் உயிர்க்கு இறுதி செய்தான்
என்பதை இறையும் எண்ணாது ,
உன் உயிர்க்கு உறுதி செய்தி ;
இவற்கு அமர் உற்றது உண்டேல் ,
பொன் உயிர்த்து ஒளிரும்
பூணாய் பொன்றுதி ; தருமம் போற்றி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான்
மலர் அடி சுமந்து வாழ்தி . '
4.7.157

4195
அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி , இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கையடைப் பொருளாவான் எனக் காட்டுதல் (4195-4196)
என்றனன் இனைய ஆய
உறுதிகள் யாவும் சொல்லி ,
தன் துணைத் தடக்கை ஆரத்
தனயனைத் தழுவி , சாலக்
குன்றினும் உயர்ந்த திண்தோள்
குரக்கு இனத்து அரசன் , கொற்றப்
பொன் திணி வயிரப் பசுமை
பூண் புரவலன் தன்னை நோக்கி .
4.7.158

4196
'நெய் அடை நெடும் வேல் தானை
நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன
தோளினன் , தொழிலும் தூயன் ;
பொய் அடை உள்ளத்தார்க்குப்
புலப்படாப் புலவ ! மற்று உன்
கையடை ஆகும் ' என்று ,
அவ் இராமற்குக் காட்டும் காலை .
4.7.159

4197
அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள , வாலி பரமபதம் அடைதல்
தன் அடி தாழ்தலோடும்
தாமரைத் தடங்கணானும் ,
பொன் உடை வாளை நீட்டி ,
'நீ இது பொறுத்தி ' என்றான் ;
என்னலும் , உலகம் ஏழும்
ஏத்தின ; இறந்து , வாலி ,
அந் நிலை துறந்து , வானுக்கு
அ புறத்து உலகன் ஆனான் .
4.7.160

4198
வாலி உயிரைக் கவர்ந்த இராம பாணம் , தூயநீர்க்கடலில் நீராடி , இராமனது அம்பறாத் தூணியில் வந்தடைதல்
கை அவண் நெகிழ்தலோடும் ,
கடுங்கணை , கால வாலி
வெய்ய மார்பு அகம் அத்து உள் தங்காது
உருவி , மேக்கு உயர மீ போய் ,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து ,
தூய் மலர் அமரர் சூட்ட ,
ஐயன் வெந் விடாத கொற்றம் அத்து
ஆவம் வந்து அடைந்தது அன்றே .
4.7.161

4199
தன் கணவன் வாலி இறந்து வானுலகடைந்தமை கேட்ட தாரை , அங்கு வந்து அவன்மேல் வீழ்ந்து புரண்டு வருந்துதல்
வாலியும் ஏகினான் அவ் வரம்பு இலா உலகில் ; இன்பம்
பாலியா , முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி ,
ஆல் இலைப் பள்ளியானும் , அங்கதனோடு போனான் ;
வேல் விழித் தாரை கேட்டாள் , வந்து அவன் மேனி வீழ்ந்தாள் .
4.7.162

4200
குங்குமம் கொட்டி அன்ன , குவிமுலைக் குவட்டிற்கு ஒக்கப்
பொங்கு , வெங் குருதி போர்ப்ப , புரிகுழல் சிவப்ப , பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்
வெங்கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள் .
4.7.163

4201
வேய்ங் குழல் , விளரி நல் யாழ் , வீணை என்று இவையும் நாண ,
ஏங்கினள் இரங்கி ; விம்மி உருகினள் ; இரு கை கூப்பி ,
தாங்கிய கலைகள் சோர்ந்து சரிதர , குழலும் தாழ ,
ஓங்கிய துயராள் , பன்னி , இனையன உரைக்கலுற்றாள் .
4.7.164

4202
தாரை புலம்புதல் (4202-4214)
'வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன் ,
கரை சேரா இடர் வேலை காண்கலேன் ;
உரை சேர் ஆர் உயிரே ! என் உள்ளமே !
அரைசே ! யான் இது காண அஞ்சினேன் . '
4.7.165

4203
'துயராலே தொலையாத என்னையும் ,
பயிராயோ ? பகையாத பண்பினாய் !
செயிர் தீரா வினை ஆன தெய்வமே !
உயிர் போனால் , உடலாரும் உய்வரோ ? '
4.7.166

4204
'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் ,
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி , தாம்
அறியாரோ நமனார் ? அது அன்று எனின் ,
சிறியாரோ , உபகாரம் சிந்தியார் ? '
4.7.167

4205
'அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று ,
உணங்கா ஒண் மலர் கொண்டு , உள் அன்பொடும்
இணங்கா , காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது , இ துணை வைக வல்லையோ ? '
4.7.168

4206
'வரை ஆர் தோள் பொடி ஆடி வைகுவாய் !
தரை மேலாய் ; ‘’ உறு தன்மை ஈது எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் , ஒன்று
உரையாய் , என் வயின் ஊனம் யாவதோ ? '
4.7.169

4207
'நையா நின்றனன் , நான் இருந்து இங்ஙன் ;
மெய் வானோர் திருநாடு மேவினாய் ;
ஐயா ! 'நீ எனது ஆவி ' என்றதும் ,
பொய்யோ ? பொய் உரையாத புண்ணியா ! '
4.7.170

4208
'செரு ஆர் தோள ! நின் சிந்தையேன் எனின் ,
மருவார் வெஞ் சரம் எனையும் வௌவுமால் ;
ஒரு வேனுள் உளை ஆகில் உய்தியால் ;
இருவேம் உள் இருவேம் இருந்திலேம் . '
4.7.171

4209
' ‘’ எந்தாய் ! நீ அமிழ்து ஈய , யாம் எலாம்
உய்ந்தாம் என்று உபகாரம் உன்னுவார் ,
நந்தா நாள் மலர் சிந்தி , நண்பு ஒடு உம்
வந்தாரோ எதிர் ? வான் உளோர் எலாம் . '
4.7.172

4210
'ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான் ,
வாயால் ஏயினன் என்னின் , வாழ்வு எலாம்
ஈயாயோ ? அமிழ் தேயும் ஈகுவாய் ! '
4.7.173

4211
'சொற்றேன் , முந்து உற ; அன்ன சொல் கொளாய் ,
‘’ அற்றான் , அன்னது செய்கலான் எனா ,
உற்றாய் , உம்பியை ; ஊழி காணும் நீ ,
இற்றாய் ; யான் உனை என்று காண்பெனோ ? '
4.7.174

4212
'நீறு ஆம் , மேருவும் , நீ நெருக்கினால் ;
மாறு ஓர் வாளி , உன் மார்பை ஈர்வதோ ?
தேறேன் யான் இது , தேவர் மாயமோ ?
வேறு ஓர் வாலி கொல் ஆம் , விளிந்துளான் ? '
4.7.175

4213
'தகை நேர் வண் புகழ் நின்று , தம்பியார் ,
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் ,
உக , நேர் சிந்தி உலந்து அழிந்தவால் ;
மகனே ! கண்டிலையோ , நம் வாழ்வு எலாம் ?
4.7.176

4214
'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் ,
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் ;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் ,
கருமம் கட்டளை என்றல் கட்டதோ ? '
4.7.177

4215
'அனுமன் , வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு , வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல் (4215-4216)
என்றாள் , இன்னன பன்னி , இன்னலோடு
ஒன்றானாள் ; உணர்வு ஏதும் உற்றிலாள் ;
நின்றாள் ; அ நிலை நோக்கி , நீதிசால் ,
வன் தாள் மால்வரை அன்ன மாருதி ,
4.7.178

4216
மடவாரால் அம் மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி , வாலிபால்
கடன் யாவும் கடைகண்டு , கண்ணனோடு
உடனாய் உற்றது எலாம் உணர்த்தினான் .
4.7.179

4217
சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதை அரிதிற் கழித்தலும் (4217-4218)
அகம் ஏர் அற்று உக , மீது அருக்கனார்
புக மேலை கிரி , புக்க போதினில் ,
நகமே ஒத்த குரக்கு நாயகன்
முகமே ஒத்தது , மூரி மண்டிலம் .
4.7.180

4218
மறைந்தான் மாலை அருக்கன் ; வள்ளியோன்
உறைந்தான் , மங்கை திறத்தை உன்னுவான் ;
குறைந்தான் , நெஞ்சு குழைந்து அழுங்குவான் ,
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் .
4.7.181


4.8 – Die Regierung

4.8 . அரசியற் படலம் (4219 - 4252)

சூரியோதய வருணனை

புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான்
உதவும் பூமகள் சேர ஒள் மலர்க்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான். 4.8.1

சுக்கிரீவனுக்கு முடிசூட்டும்படி இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிடுதல்

அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
'கதிரோன் மைந்தனை ஐய! கைகளால்
விதியால் மௌலி மிலைச்சுவாய்'எனா. 4.8.2

முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணர்க என
இலக்குவன் அனுமனுக்குக் கூறுதல்

அப்போதே அருள் நின்ற அண்ணலும்
மெய்ப்போர் மாருதி தன்னை'வீர! நீ
இப்போதே கொணர் இன்ன செய்வினைக்கு
ஒப்பு ஆம் யாவையும்'என்று உணர்த்தலும். 4.8.3
அவ்வாறே அனுமன் கொணர்தல்

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி ஆதி யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும்
திண்ணம் செய்வன செய்து செம்மலை. 4.8.4

இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடிசூட்டுதல்

மறையோர் ஆசி வழங்க வான் உேளார்
நறை தோய் நாள் மலர் தூவ நல்நெறிக்கு
இறையோன்தன் இளையோன் அவ் ஏந்தலைத்
துறையோர் நூல்முறை மௌலி சூட்டினான். 4.8.5

முடிசூடிய சுக்கிரீவன் இராமனை வணங்கிய நிலையில் இராமன், அவனுக்கு உறுதிபயக்கும் அறிவுரைகளைப் பகர்தல் (4224-4234)

பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான். 4.8.6

'ஈண்டு நின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,
வேண்டுவ மரபின் எண்ணி,விதிமுறை இயற்றி, வீர!
பூண்ட பேர் அரசுக்கு ஏற்றயாவையும் புரிந்து, போரில்
மாண்டவன் மைந்தனோடும்வாழ்தி! நல்திருவின் வைகி.' 4.8.7

'வாய்மை சால் அறிவின் வாய்த்தமந்திர மாந்தரோடும்,
தீமை தீர் ஒழுக்கின் வந்ததிறத் தொழில் மறவரோடும்,
தூய்மை சால் புணர்ச்சி பேணித்துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்தேவரின் தரெிய நிற்றி.' 4.8.8

'புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்; நூலோர்வினையமும் வேண்டற் பாற்றே;
பகையுடைச் சிந்தை யார்க்கும்,பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி,இன் உரை நல்கு, நாவால்.' 4.8.9

'தேவரும் மருள்தற்கு ஒத்தசெயிர் அறு செல்வம், அஃது உன்
காவலுக்கு உரியது என்றால்,அன்னது கருதிக் காண்டி;
ஏவரும், இனிய நண்பர்,அயலவர், விரவார் என்று
மூவகை இயலோர் ஆவர்,முனைவர்க்கும், உலகம் மூன்றின்.' 4.8.10

'செய்வன செய்தல், யாண்டும்,தீயன சிந்தியாமல்;
வைவன வந்த போதும்வசை இல இனிய கூறல்,
மெய் சொலல், வழங்கல் யாவும்,மேவின வெஃகல் இன்மை,
உய்வன ஆக்கித் தம்மோடுஉயர்வன உவந்து செய்வாய்.' 4.8.11

'சிறியர் என்று இகழ்ந்து நோவுசெய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமைஇழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆயகூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன். 4.8.12

'மங்கையர் பொருட்டால் எய்தும்மாந்தர்க்கு மரணம், என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலிசெய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே,அல்லலும் பழியும் ஆதல்
எங்களில் காண்டி அன்றே;இதற்கு வேறு உவமை உண்டோ?' 4.8.13

"நாயகன் அல்லன், நம்மைநனி பயந்து எடுத்து நல்கும்
தாய்" என, இனிது பேணத்தாங்குதி தாங்கு வாரை;
ஆயது தன்மை யேனும்,அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்த போது,சுடுதியால் தீமையோரை.' 4.8.14

'இறத்தலும் பிறத்தல் தானும்என்பன இரண்டும், யாண்டும்,
திறத்துளி நோக்கின், செய்தவினைதரத் தரெிந்த அன்றே?
புறத்து இனி உரைப்பது என்னே?"பூவின்மேல் புனிதற் கேனும்,
அறத்தினிது இறுதி வாழ் நாட்குஇறுதி; அஃது உறுதி" என்ப.' 4.8.15

'ஆக்கமும், கேடும், தாம் செய்அறத்தொடு பாவம் ஆய
போக்கி, வேறு உண்மை தேறார்,பொரு அரும் புலமை நூலோர்;
தாக்கின ஒன்றோடு ஒன்றுதருக்கு உறும் செருவில், தக்கோய்!
பாக்கியம் அன்றி, என்றும்,பாவத்தைப் பற்றல் ஆமோ?' 4.8.16

'இன்னது தகைமை என்ப;இயல்புளி மரபின் எண்ணி,
மன் அரசு இயற்றி, என்கண்வருவுழி, மாரிக் காலம்
பின்னுற, முறையின், உன்தன்பெருங்கடற் சேனையோடும்
துன்னுதி, போதி'என்றான்சுந்தரன்; அவனும் சொல்வான். 4.8.17

கிட்கிந்தை நகரத்தில் தம்முடன் வந்து சிலநாள் தங்கும்படி சுக்கிரீவன் இராமனை இறைஞ்சி வேண்டுதல் (4236-4237)

'குரங்கு உறை இருக்கை என்னும்குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு உறு துறக்க நாட்டுக்குஅரசு எனல் ஆயது அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்?வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய,இருத்தியால் சில நாள், எம்பால்.' 4.8.18

'அரிந்தம! நின்னை அண்மி,அருளுக்கும் உரியேம் ஆகிப்
பிரிந்து வேறு எய்தும் செல்வம்வெறுமையின் பிறிது ஒன்றாமோ?
கருந்தடங் கண்ணினாளைநாடல் ஆம் காலம் காறும்
இருந்து, அருள் தருதி எம்மோடு'என்று அடி இணையின் வீழ்ந்தான்.' 4.8.19

இராமன் தான் கிட்கிந்தை நகரில் தங்கியிருக்க ஒண்ணாமையைத் தரெிவித்தல் (4238-4242)

ஏந்தலும் இதனைக் கேளா,இன் இள முறுவல் நாற,
வேந்து அமை இருக்கை, எம்போல்விரதியர் விழைதற்கு ஒவ்வா;
போந்து அவண் இருப்பின், எம்மைப்போற்றவே பொழுது போமால்;
தேர்ந்து இனிது இயற்றும் உன்தன்அரசியல் தருமம் தீர்தி. 4.8.20

'ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்துஎரி வனத்து இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும்வள நகர் வைகல் ஒல்லேன்;
பாழி அம் தடம் தோள் வீர!பார்த்திலை போலும் அன்றே!
யாழ் இசை மொழியோடு அன்றி,யான் உறும் இன்பம் என்னோ?' 4.8.21

"தேவி வேறு அரக்கன் வைத்தசேமத்துள் இருப்பத் தான் தன்
ஆவி போல் துணைவரோடும்அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான் இராமன்" என்றால்,ஐய! இவ் வெய்ய மாற்றம்
மூவகை உலகம் முற்றும்காலத்தும் முற்ற வற்றோ?' 4.8.22

'இல் அறம் துறந்திலாதோர்இயற்கையை இழந்தும், போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு,இன்னன மேன்மை இல்லாச்
சில் அறம்; புரிந்து நின்றதீமைகள் தீருமாறு,
நல் அறம் தொடர்ந்த நோன்பின்,நவை அற நோற்பல் நாளும்.' 4.8.23

'அரசியற்கு உரிய யாவும்ஆற்றுழி ஆற்றி, ஆன்ற
திரைசெயற்கு உரிய சேனைக்கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக, என்பால்; நின்னைவேண்டினென், வீர!'என்றான்,
உரைசெயற்கு எளிதும் ஆகி,அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான். 4.8.24

சுக்கிரீவன் இராமனது சொல்லுக்கு உடன்பட்டுச் செல்லுதல்

மறித்து ஒரு மாற்றம் கூறான்,'வான் உயர் தோற்றத்து அன்னான்
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோகோது இலர் ஆதல்'என்னா,
நெறிப் படர் கண்கள் பொங்கிநீர்வர, நெடிது தாழ்ந்து
பொறிப்ப அருந் துன்பம் உன்னாக்கவிக் குலத்து அரசன் போனான். 4.8.25

வணங்கிய அங்கதனுக்கு இராமன் அறிவு உரை பகர்தல்

வாலி காதலனும், ஆண்டு,மலர் அடி வணங்கினானை,
நீல மா மேகம் அன்னநெடியவன் அருளின் நோக்கி,
'சீலம் நீ உடையை ஆதல்,இவன் சிறு தாதை என்னா,
மூலமே தந்த நுந்தை ஆம் என,முறையின் நிற்றி.' 4.8.26

அங்கதன் சென்றபின் அனுமனையும் சுக்கிரீவனுடன் செல்லும்படி இராமன் பணித்தல்

என்ன, மற்று இனைய கூறி,'ஏகு அவன் தொடர'என்றான்;
பொன் அடி வணங்கி, மற்று அப்புகழ் உடைக் குரிசில் போனான்;
பின்னர், மாருதியை நோக்கிப்'பேர் எழில் வீர! நீயும்,
அன்னவன் அரசுக்கு ஏற்றதுஆற்றுதி, அறிவின்'என்றான். 4.8.27

இங்கிருந்து நின்பணி செய்வேன்'என அனுமன் கூறுதல்

பொய்த்தல் இல் உள்ளத்து அன்புபொழிகின்ற புணர்ச்சியானும்
'இத்தலை இருந்து நாயேன்,ஏயின, எனக்குத் தக்க
கைத்தொழில் செய்வென்'என்று,கழல் இணை வணங்கும் காலை,
மெய்த்தலை நின்ற வீரன்இவ் உரை விளம்பி விட்டான். 4.8.28

இராமன் அதனை மறுத்துரைத்தல் (4247-4248)

'நிரம்பினான் ஒருவன் காத்தநிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாது அதனை, மற்று ஓர்தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ நலனும் தீங்கும்;ஆகலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்நிலையினைப் பெறுவது அம்மா! 4.8.29

'ஆன்றவற்கு உரியது ஆயஅரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆயகருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர் நின்னின் இல்லை;ஆகலால், தருமம் தானே
போன்ற நீ, யானே வேண்ட,அத்தலை போதி'என்றான். 4.8.30

அனுமன் கிட்கிந்தைக்குச் செல்ல, இராம இலக்குவர் வேறொரு மலையை அடைதல்

ஆழியான் அனைய கூற,'ஆணை ஈது ஆகின், அஃதே,
வாழி! யான் புரிவேன்'என்று,வணங்கி மாருதியும் போனான்;
சூழிமால் யானை அன்னதம்பியும் தானும், தொல்லை
ஊழி நாயகனும், வேறு ஓர்உயர்தடங் குன்றம் உற்றான். 4.8.31

இராமனது அருள் பெற்றுச் சுக்கிரீவன் கிட்கிந்தையில் இருந்து அரசு புரிதல் (4250-4251)

ஆரியன் அருளின் போய் அவ்அகல்மலை அகத்தன் ஆய
சூரியன் மகனும், மானத்துணைவரும், கிளையும் சுற்ற,
தாரையை வணங்கி, அன்னாள்தாய் என, தந்தை முந்தைச்
சீரியன் சொல்லே என்ன,செவ்விதின் அரசு செய்தான். 4.8.32

வள அரசு எய்தி, மற்றைவானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ, ஆணைகிளர் திசை அளப்ப, கேேளாடு,
அளவு இல ஆற்றல் ஆண்மைஅங்கதன், அறம் கொள் செல்வம் அத்து
இளவரசு இயற்ற ஏவி,இனிதினின் இருந்தான், இப்பால். 4.8.33

இராமன் இலக்குவன் அமைத்த தவச் சாலையில் தங்கியிருத்தல்

வள்ளலும் அவண் நின்று ஏகி,மதங்கனது இருக்கை ஆய
வெள்ள வான் குடுமிக் குன்றத்துஒரு சிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பிஅன்பினால் அமைக்கப் பட்ட
எள்ளல் இல் சாலை எய்திஇனிதினின் இருந்த காலை. 4.8.34
---------------

4.9 – Die Regenzeit

4.9 . கார்காலப் படலம் (4253- 4371)

சூரியன் தனெ் திசையில் ஒதுங்கியது

மா இயல் வட திசை நின்று மானவன்
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய முந்தித் தனெ் திசைக்கு
ஏவிய தூது என இரவி ஏகினான். 4.9.1

கருமுகில் பரவிய தோற்றம்

பை அணைப் பல தலை பாந்தள் ஏந்திய
மொய்ந் நிலத் தகளியில் முழங்கு நீர்நெயின்
வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி
மை அடுத் தொத்தது மழைத்த வானமே. 4.9.2

வானம் இருண்டு சூரிய ஒளி மறைதல்

நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய
கண் நுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண் அகம் இருண்டது; வெயிலின் வெம் கதிர்
தண்ணிய மெலிந்தன; தழைத்த மேகமே. 4.9.3

வானமிருண்டமைக்கு உவமை

நஞ்சினின் நளிர் நெடுங்கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே. 4.9.4

மின்னல்

நாட்களின் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ
வாள் கைகள் மயங்கிய செருவின் வார்மதப்
பூட்கைகள் நிறைந்தபுண் திறப்ப போன்றவே. 4.9.5

நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல்நிற முகில் குலம் துவன்றி சூழ்திரை
மால்நிற நெடுங்கடல் வாரி மூரிவான்
மேல் நிறைந்துளது என முழக்க மிக்கதே. 4.9.6

அரிப்பெரும் பெயரவன் முதலினோர் அணி
விரிப்பவும் ஒத்தன; வெற்புமீது தீ
எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன; தரெிந்த மின் எலாம். 4.9.7

மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து
ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே. 4.9.8

சூடின மணிமுடித் துகளில் விஞ்சையர்
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடுவ பெயர்தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்தவே. 4.9.9

பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசைதொறும் மிசையின் மின் எலாம். 4.9.10

எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்தனைய மின் நக;
கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்பு
உள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின. 4.9.11

தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும்
விலை நினைந்து உளவழி விலங்கும் வேசையர்
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே. 4.9.12

அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர்
புழுங்குறு புணர்முலை கொதிப்பப் புக்கு உலாய்
கொழுங்குறைத் தசை என ஈர்ந்து கொண்டு அது
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே. 4.9.13

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின்
கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும்
தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு தாவினும்
போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது உம்பரே. 4.9.14

மழை பொழிதல்

இன் நகைச் சனகியைப்பிரிந்த ஏந்தல்மேல்,
மன்மதன் மலர்க் கணைவழங்கினான் எனப்
பொன்நெடுங் குன்றின்மேல்பொழிந்த தாரைகள்
மின்னொடுந் துவன்றினமேக ராசியே. 4.9.15

கல் இடைப்படும் துளி திவலை கார் இடு
வில் இடைச்சரம் என விசையின் வீழ்ந்தன;
செல் இடைப்பிறந்த செங்கனல்கள் சிந்தின
அல் இடை மணி சிறந்து அழல் இயற்றல் போல். 4.9.16

மள்ளர்கள் மறுபடை மான யானைமேல்
வெள்ளிவேல் எறிவன போன்ற மேகங்கள்;
தள்ளரும் துளிபடத் தகர்ந்து சாய்கிரி
புள்ளி வெங் கடகரி புரள்வ போன்றவே. 4.9.17

வானிடு தனு நெடுங் கருப்பு வில்; மழை
மீன் இடு கொடியவன்; பகழி வீழ்துளி;
தான் நெடுஞ் சார்துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம் உகுத்தது ஒத்ததே. 4.9.18

தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை
பேர்த்தனர் இனி எனப் பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய்மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே. 4.9.19

வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு
விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை
கண் எனப் பொழிந்தது கால மாரியே. 4.9.20

பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண்தொடர்
புரம்சுட விடுசரம் புரையும் மின் இனம்
அரம் சுடப் பொறிநிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துேளார் எலாம். 4.9.21

பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர் மிசை உயிர்கொண்டு உய்த்தலால்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெடக்
கருடனைப் பொருவின கால மாரியே. 4.9.22

முழங்கின முறை முறை மூரிமேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள்.
தழங்கின பொழிமதத் திவலை தாழ்தரப்
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே. 4.9.23

விசைகொடு மாருதம் மறித்து வீசலால்
அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின்
இசையுற எய்வன இயைவவாய் இருந்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே. 4.9.24

மரங்கள் பூத்தல்

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம். 4.9.25

பாடலம் வறுமை கூரப்,பகலவன் பசுமை கூரக்,
கோடல்கள் பெருமை கூரக்,குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள்; பேசாதுஅடங்கின குயில்கள்
கேடுறத் தளர்ந்தார் போன்றும்,திரு உறக் கிளர்ந்தார் போன்றும். 4.9.26

செங்காந்தளின் மலர்ச்சி

நால் நிறச் சுரும்பும் வண்டும்நவமணி அணியின் சாரத்,
தேன் உற மலர்ந்து அசைந்தசேயிதழ்க் காந்தள் செ ம்பூ,
'வேனிலை வென்றது அம்மா,கார்'என வியந்து நோக்கி,
மா நிலக் கிழத்தி கைகள்மறித்தன போன்ற மன்னோ. 4.9.27

வெண் காந்தள்

வாள் எயிற்று அரவம், தம்போல்வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடைக் கோடல் தம்மைத்தழீஇயன, காதல் தங்க
மீளல; அவையும் அன்னவிழைவின உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னிஅவற்றொடும் குழைந்து சாய்ந்த. 4.9.28

இந்திர கோபம்

எள் இட இடனும் இன்றிஎழுந்தன இலங்கு கோபம்
தள்ளுறத், தலைவர், தம்மைப்பிரிந்தவர் தழுவத் தூமக்
கள் உடை ஓதியார்தம்கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பைசிதர்ந்து என, விரிந்த மாதோ. 4.9.29

பொன்மலர் கொணரும் நல் மலை அருவி

தீங்கனி நாவல் ஓங்கும்சேண் உயர் குன்றின், செம்பொன்
வாங்கின கொண்டு, பாரில்மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றைவிரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்றுதலைமயக் குறுவ தம்மில். 4.9.30

காந்தளில் கொன்றையும் கோபமும்

நல்நெடுங் காந்தள் போதில்,நறை விரி கடுக்கை மென் பூ,
துன்னிய கோபத் தோடும்தோன்றிய தோற்றம் தும்பி
இன் இசை முரல்வ நோக்கி,இருநில மகள் கை ஏந்திப்,
பொன்னொடும் காசை நீட்டிக்கொடுப்பதே போன்றது அம்மா. 4.9.31

மலையில் நாடக அரங்கு

கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த, மின்னும்
துளிக் குரல் மேகம் வள் வார்த்தூரியம் துவைப்ப போன்ற;
வளைக் கையர் போன்ற, மஞ்ஞை;தோன்றிகள் அரங்கின் மாடே
விளக்கு இனம் ஒத்த; காண்போர்விழி ஒத்த, விளையின் மென்பூ. 4.9.32

கூதாளம் மலர்தல்

பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசை
ஊடுறத் தாக்கும் தோறும்ஒல் ஒலி பிறப்ப, நல்லார்
ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்அரிய அவ் அமிழ்தப் பாடல்
கோடியர் தாளம் கொட்டல்மலர்ந்த கூதாளம் ஒத்த. 4.9.33

கானயாறும் கொன்றையும்

வழைதுறு கான யாறு,மாநிலக் கிழத்தி மக்கட்கு
உழைதுறு மலைமாக் கொங்கைசுரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையோடும்வேண்டுநர்க்கு உதவ வேண்டிக்,
குழைதொறும் கனகம் தூங்கும்கற்பகம் நிகர்த்த, கொன்றை. 4.9.34

மான்கள்

பூ இயல் புறவம் எங்கும்பொறி வரி வண்டு போர்ப்பத்,
தீவிய களிய வாகிச்செருக்கிய, காமச் செவ்வி,
ஓவலில் மரங்கள் தோறும்உரைத்து அற உரிஞ்சி ஒண்கேழ்
நாவிய செவ்வி நாறக்,கலையொடும் புலந்த நவ்வி. 4.9.35

குவளை குவிய முல்லை அரும்பல்

தேரில் நல் நெடுந் திசை செலச்செருக்கு அழிந்து ஒடுங்கும்
கூர் எயிற்றியர் கண் எனக்குவிந்தன குவளை,
மாரன் அன்னவர் வரவு கண்டுஉவக்கின்ற மகளிர்
மூரல் மென்குறு முறுவல் ஒத்துஅரும்பின, முல்லை. 4.9.36

அருவி பெருகலும் தாமரை மலர்தலும

களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்இனமெனக் கண்ணுற்று
அளிக்கு மன்னரின் பொன்மழைவழங்கின அருவி;
வெளிக்கண் வந்த கார் விருந்து என,விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் எனப்பொலிந்தன, கமலம். 4.9.37

தேனீக்கள் தேனைச் சேர்த்தல்

சரத நாள் மலர் யாவையும்குடைந்தன, தடவிச்,
சுரத நூல் தரெி விடர் எனத்தேன் கொண்டு, தொகுப்பப்,
பரத நூல் முறை நாடகம்பயன் உறப் பகுப்பான்,
இரதம் ஈட்டுறும் கவிஞரைப்பொருவின தேனீ . 4.9.38

மான்களின் களிப்பு

"நோக்கினால் நமை நோக்குஅழிகண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அருஞ் சீதைக்குத்தாங்கருந் துன்பம்
ஆக்கினாம் உருவால்" எனும்அரும்பெறல் உவகை
வாக்கினால் உரையாம் எனக்களித்தன, மான்கள். 4.9.39

அன்னங்கள்

நீடு நெஞ்சு உறு நேயத்தால்நெடிது உறப் பிரிந்து
வாடுகின்றன, மருள் உறுகாதலின் மயங்கிக்,
கூடு நல் நதித் தடம்தொறும்குடைந்தன, படிவுற்று
ஆடுகின்றன கொழுநரைப்பொருவின அன்னம். 4.9.40

கொக்குகள்

கார் எனும் பெயர்க் கரியவன்மார்பினில் கதிர்முத்து
ஆரம் ஆம் எனப் பொலிந்தனஅளக்கரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின்அருகு உற நிரைத்துக்
கூரும் வெண் நிறத் திரையெனப்பறப்பன குரண்டம். 4.9.41

நாரைகள்

மருவி நீங்கல் செல்லா நெடுமாலைய, வானில்
பருவ மேகத்தின் அருகு உறக்குருகினம் பறப்ப,
'திருவின் நாயகன் இவன்'எனத்தேமறை தரெிக்கும்
ஒருவன் மார்பினின்உத்தரியத்தினை ஒத்த. 4.9.42

பசும் புல்

உற வெதுப்புறும் கொடுந் தொழில்வேனிலான் ஒழிய,
திறம் நினைப்பருங் கார் எனும்செவ்வியோன் சேர,
நிறை மனத்து உறு குளிர்ப்பினின்நெடுநில மடந்தை
புற மயிர்த்தலம் பொடித்தனபோன்றன பசும்புல். 4.9.43

மயில்கள் ஆடலும் அகவலும்

தேன் அவாம் மலர்த் திசைமுகன்முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவை உற,நோக்கின நல்கக்
கானம் யாவையும் பரப்பியகண்ணின் அச் சனகன்
மானை நாடி நின்று அழைப்பனபோன்றன மஞ்ஞை . 4.9.44

செந்தாமரையின் பொலிவும், கொடிகளின் அசைவும்

செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்குரிசிலர், இருண்ட
குஞ்சி சேயொளி கதுவுறப்புதுநிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி எனப்பொலிந்தன பதுமம்;
வஞ்சி போலியர் மருங்கு எனநுடங்கின, வல்லி. 4.9.45

குயில்கள் குரல் காட்டாமை

'நீயிர் அன்னவள் குதலையிர்ஆதலின் நேடிப்
போய தையலைத் தருதிர்'என்று,இராகவன் புகலத்
தேயம் எங்கணும் திரிந்தனபோந்து இடைத் தேடிக்,
கூய ஆய், குரல் குறைந்தகுறைந்தன - குயில்கள். 4.9.46

ஆம்பியும் பிடவமும்

பொழிந்த மாநிலம் புல்தரக்குமட்டிய புனிற்றா
எழுந்த ஆம்பிகள் இடறின,செறிதயிர் ஏய்ந்த;
மொழிந்த தேன் உடை முகிழ்முலைஆய்ச்சியர் முழவில்
பிழிந்த பால்வழி நுரையினைப்பொருவின பிடவம். 4.9.47

நானிலத்து மலர்களும் மலர்தல்

வேங்கை நாறின, கொடிச்சியர்வடிக் குழல், விரை வண்டு
ஏங்க; நாகமும் நாறின,நுளைச்சியர் ஐம்பால்;
ஆங்கு நாள் முல்லை நாறினஆய்ச்சியர் ஓதி;
ஞாங்கர் உற்பலம் உழத்தியர்பித்திகை நாற. 4.9.48

இராமன் கார்காலம் கண்டு கவலுதல் (4301-4303)

தேரைக் கொண்ட பேர் அல்குலாள்திரு முகம் காணான்
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல் ஆயிரம்மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்குஒருகரை காணான். 4.9.49

அளவு இல் கார் எனும் அப்பெரும்பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்அது வருத்தோ? 4.9.50

காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம்
பூவையும் பொருவான் அவன்,புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு கொலாம்'என அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்துஇவை இவை சொல்லும். 4.9.51

இராமன் காரொடு கூறுதல் (4304-4305)

வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய்? அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ? 4.9.52

'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு
எப் பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர்கொண்டு அலது ஓவலையோ? 4.9.53

மயிலொடு மொழிதல்

'அயில் ஏய் விழியார் விளை ஆர் அமிழ்தின்
குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்;
மயிலே! எனைநீ வலி ஆடுதியோ? 4.9.54

கொடியொடு கூறியது

'மழை வாடையொடு ஆடி வலிந்து உயிர் மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் கொடியே!
இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ? 4.9.55

உழையொடு உரைத்தல்

'விழையேன்; விழை வானருள் மெய்ம்மையின் நின்று
இழையேன்; உணர்வேன்; நவை இன்மையினால்
பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்
உழையே அவர் எவ் உழையார்? உரையாய்! 4.9.56

உயிரொடு கிளத்தல்

'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார்
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ?
அயிராது உடனே அகல்வாய் அலையோ?
உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையே! 4.9.57

கொன்றையொடு கூறல்

'ஒன்றைப் பகராய்! குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத் தினையோ?
கொன்றைக் கொடியாய்! கொணர்கிற்றிலையோ?
என்றைக்கு உறவாக இருந்தனையே? 4.9.58

முல்லையையும் இந்திர கோபத்தையுங் கண்டு மொழிதல்

குரா அரும்பு அனைய கூர்வாள்எயிற்று வெங் குருளை நாகம்,
விராவு வெங் கடுவின் கொல்லும்;மெல் இணர் முல்லை, வெய்தின்
உரா அருந் துயரம் ஊட்டிஉலைவு உற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க,இந்திர கோபம் ஒன்றோ? 4.9.59

வாடைக்கு மெலிந்து கூறியது

'ஓடை வாள் நுதலினாளைஒளிக்கலாம் உபாயம் உன்னி,
நாடி, மாரீசனார் ஓர்ஆடகம் நவ்வி ஆனார்;
வாடையாய்க், கூற்றினாரும்,உருவினை மாற்றி வந்தார்;
கேடு சூழ்வார்க்கும் வேண்டும்உருக்கொளக் கிடைத்த 4.9.60

மேகத்தோடு மொழிதல்

'அருவினை அரக்கர் என்ன,அந்தரம் அதனில் யாரும்
வெருவர, முழங்குகின்றமேகமே! மின்னுகின்றாய்;
'தருவல்'என்று இரங்கினாயோ?தாமரை மறந்த தையல்
உருவினைக் காட்டிக் காட்டிஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்!' 4.9.61

மன்மதனோடு கூறியது (4314-4315)

உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மைஉயிர் சுட உலைவேன் உள்ளம்
புண் உற வாளி தூர்த்தல்பழுது இனிப், போதி; மார!
எண் உறு கல்வி உள்ளத்துஇளையவன், இன்னே, உன்னைக்
கண்ணுறும் ஆயின், பின்னை,யார், அவன் சீற்றம் காப்பார்? 4.9.62

'வில்லும், வெங்கணையும், வீரர்,வெஞ்சமத்து அஞ்சினார் மேல்
புல்லுந அல்ல; ஆற்றல்போற்றலர்க் குறித்தல் போலாம்;
அல்லும் நன் பகலும் நீங்காய்அனங்க! நீ அருளில் தீர்ந்தாய்
'செல்லும்'என்று எளிவந்தோர் மேல்செலுத்தலும் சீர்மைத்து ஆமோ? 4.9.63

இலக்குவன் தேறுதல் கூறல் (4316-4321)

என்ன இத்தகைய பன்னி,ஈடு அழிந்து, இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கித்,தகை அழிந்து அயர்ந்த தம்பி,
'நின்னை எத்தகையை ஆகநினைந்தனை? நெடியோய்! என்னாச்
சென்னியில் சுமந்த கையன்தேற்றுவான், செப்பல் உற்றான். 4.9.64

"காலம் நீளிது காரும்; மாரியும்வந்தது; " என்ற கவற்சியோ?
நீல மேனி அரக்கர் வீரம்நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்நாட வாரல் இலாமையோ?
சால நூல் உணர் கேள்வி வீர!தளர்ந்தது என்னை? தவத்தினோய்! 4.9.65

'மறை துளங்கினும், மதி துளங்கினும்;வானும், ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும், நிலை துளங்குறுநிலைமை நின் வயின் நிற்குமோ?
பிறை துளங்குவ அனைய பேர் எயிறுஉடைய பேதையர் பெருமை, நின்
இறை துளங்குறு புருவ மென்சிலைஇடை துளங்குற இசையுமோ?' 4.9.66

'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்;அறிஞ! அங்கதன் ஆதியோர்
எனையர் என்பது ஓர் இறுதி கண்டிலம்;எழுபது என்று எணும் இயல்பினார்,
வினையின் வெந்துயர் விரவு திங்களும்,விரைவு சென்றன, எளிதின், நின்
தனு எனும் திரு நுதலி வந்தனள்;சரதம்; வன் துயர் தவிர்தியே. 4.9.67

'மறை அறிந்தவர் வரவு கண்டு, "உமைவலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று, இடர்களைவென்" என்றனை,குறை முடிந்தது; விதியினால்,
இறைவ! அங்கு அவர் இறுதி கண்டு, இனிதுஇசை புனைந்து, இமையவர்கள்தாம்,
உறையும் உம்பரும் உதவி நின்று அருள்;உணர்வு அழிந்திடல் உறுதியோ?' 4.9.68

'காது கொற்றம் நினக்கு அலாதுபிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?
வேதனைக்கு இடம் ஆதல் வீரதைஅன்று; பேதைமை ஆம் அரோ;
போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள்அன்று; நின்று புணர்த்தியேல்
யாது உனக்கு இயலாதது? எந்தை!வருந்தல்'என்ன இயம்பினான். 4.9.69

கூதிர் காலம் தொடங்குதல

சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்சோர்வு ஒடுங்கிய தொல்லையோன்,
இற்ற இன்னல் இயக்கம் எய்திட,வைகல் பற்பல ஏக, மேல்
உற்று நின்ற வினைக் கொடும் பிணிஒன்றின்மேல் உடன் ஒன்று உராய்,
மற்று வெம் பிணி பற்றினாலென,வந்து எதிர்ந்தது மாரியே. 4.9.70

கூதிர்ப்பருவ வருணனை (4323-4325)

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி. 4.9.71

பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வுற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ்
ஆசு இல் அயில் வாளி என ஆசை புரிவார்மேல். 4.9.72

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும்
சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ. 4.9.73

மருதம் நெய்தல்களில் கூதிர்

நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச்
சொற்கு இழிய நல்கிளிகள்; தோகையவர் தூய்மென்
பற்கு இழி மணிப்படர் திரைப் பரதர் முன்றில்
பொன் கிழி விரித்தன சினைப் பொதுளு புன்னை. 4.9.74

குறிஞ்சி நிலத்தில் கூதிர் (4327-4329)

நிறம் கருகு கங்குல், பகல்,நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனிஅந்தணரின், ஆலிப்
பிறங்கு அரு நெடுந் துளிபடப்,பெயர்வில் குன்றின்,
உறங்கல பிறங்கல் அயல்நின்ற உயர் வேழம். 4.9.75

சந்தின் அடையின் படலை வேதிகை தடந்தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்;
மந்தி துயில் உற்ற முழை; வன் கடுவன் அங்கத்து
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த. 4.9.76

ஆசு இல் சுனை, வால் அருவி,ஆய் இழையர் ஐம்பால்
வாச மணம் நாறல் இலஆன; மணி வன் கால்
ஊசல் வறிது ஆன; இதண்ஒள் மணிகள் விண்மேல்
வீசல் இலவான; நெடும்மாரி துளி வீச. 4.9.77

நெய்தலில் கூதிர்

கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல்
தருந்தகைய போது கிளையின் புடை தயங்கப்
பெருந்தகைய பொன் சிறகு ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவரக்ள் என்ன. 4.9.78

குறிஞ்சியில் கூதிர் (4331-4333)

பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்ன
விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும்
மதங்கியரை ஒத்த மயில்; வைகும் மர மூலத்து
ஒதுங்கின உழைக்குலம்; மழைக்குலம் உழக்க. 4.9.79

விளக்கு ஒளி அகில் புகைவிழுங்கு அமளி, மென் கொம்பு
இளைக்கும் இடை மங்கையரும்,மைந்தர்களும், ஏற,
தளத்தகும் மலர்த் தவிசு இகந்து,நகு சந்தின்
தொளைத் துயில் உவந்து,துயில்வுற்ற, குளிர் தும்பி. 4.9.80

தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம்
மாமரன் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக;
தேமரன் அடுக்கு இதண் இடைச் செறி குரம்பைத்
தூமருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார். 4.9.81

முல்லை நிலத்துக் கூதிர் (4334-4335)

வள்ளி புடை சுற்றி உயர் சிறு இலை மரம் தோறு
எள்ளரு மறி்க் குருெளாடு அண்டர்கள் இருந்தார்;
கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த. 4.9.82

சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா
வரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த. 4.9.83

இராமன் இலக்குவனை நோக்கிக் கூறத் தொடங்கல்

இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த
மத்தக மணிக் குறுநகைச் சனகன் மான்மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பு இடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும். 4.9.84

இராமன் சொல்லியவை (4337-4347)

'மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப (அ)ருங் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின்
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும்
பிழைப்பு அரிது எனக்கும்; ஈது என்ன பெற்றியோ? 4.9.85

'தூநிறச் சுடுசரம் தூணி தூங்கிட
வான் உறப் பிறங்கிய வயிரத் தோெளாடும்
யான் உறக் கடவதே இதுவும்? இந்நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன். 4.9.86

'தரெி கணை மலரொடு திறந்த நெஞ்சொடும்
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்;
எரியும் மின்மினி மணிவிளக்கின் இன் துணை
குரீஇ இனம் பெடையொடும் துயிலக் கூட்டினுள். 4.9.87

'வானகம் மின்னினும் மழை முழங்கினும்
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்;
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும்; கீழ் நகும்; இனி என் வேண்டுமால்? 4.9.88

'மறந்து இருந்து உய்கலேன்; மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம்; இப்பழி
பிறந்து பின் தீர்வலோ? பின்னர் அன்னது
துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்! 4.9.89

'ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக்
காண்டலின் பற்பல காலம் காண்டுமால்;
வேண்டுவது அன்று இது; வீர! "நோய் தறெ
மாண்டனன் " என்றது மாட்சிப் பாலது ஆம். 4.9.90

செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம்
வெப்பு உறப் புரம் சுட வெந்து வீவதோ
அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆய் இழை
துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்? 4.9.91

நெய் அடை தீ எதிர் நிறுவி "நிற்கு இவள்
கை அடை " என்ற அச் சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு
மெய் அடையாது; இனி விளிதல் நன்று அரோ. 4.9.92

'தேற்றுவாய் நீ உளையாகத் தேறி நின்று
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்வளை
தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி
மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ? 4.9.93

'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும்
சுட்டபோது இமையவர் முதல தொல்லையோர்
பட்டபோது உலகமும் உயிரும் பற்று அறக்
கட்டபோது அல்லது மயிலைக் காண்குமோ? 4.9.94

'தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான்
தரெுமருகின்றது; செறுநர் தேவரோடு
ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்;
உரும் என ஒலி படும் உர விலோய்!'என்றான். 4.9.95

இலக்குவன் ஆறுதல் கூறுதல்

இளவலும் உரை செய்வான் எண்ணும் நாள் இனும்
உள அல; கூதிரும் இறுதி உற்றதால்;
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து
அளவியது; அயர்வது என்? ஆணை ஆயியாய்! 4.9.96

திரை செய் அத் திண்கடல் அமிய்தம் செங்கணான்
உரை செயத் தரினும் அத்தொழில் உவந்திலன்;
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன்
குரை மலர்த் தடக்கையால் கடைந்து கொண்டனன். 4.9.97

மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியான் நெடும்
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். 4.9.98

கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண் இடைப் புரம் சுட வெகுண்ட மேலைநாள்
எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டிக் கொண்டவும்
அண்ணலே! ஒருவரால் அறியற் பாலவோ? 4.9.99

ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின்
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ
சேகு உறப் பல்முறை தரெுட்டிச் செய்தபின்
வாகை என்று ஒரு பொருள் வழுவற் பாலதோ? 4.9.100

அறம் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்;
'மறத் துறை நமக்கு'என வலிக்கும் வன்மையோர்;
திறத் துறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும்? 4.9.101

'பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே
வந்து அடுத்து உளது; இனி வருத்தம் நீங்குவாய்!
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆதுமோ?
சுந்தரத் தனு வலாய்! சொல்லு நீ'என்றான். 4.9.102

கூதிர்ப்பருவம் தேய்ந்து மாய்ந்து போதல்

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
'இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு?'என்பது ஓர்
தறெு துயர் உழந்தனன் தேயத் தேய்வு சென்று
அறுதியை அடைந்தது அப் பருவம் ஆண்டு போய். 4.9.103

மேகம் வெளுத்தல்

மள்கல் இல் பெரும் கொடை மருவி மண்ணுேளார்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே. 4.9.104

மாரிப் பேரிருள் மாய்தல்

தீவினை நல்வினை என்னத் தேற்றிய
பேய் வினை பொருள்தனை அறிந்து பெற்றது ஓர்
ஆய்வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது மாரிப் பேர் இருள். 4.9.105

இடியும் மின்னலும் இலவாதல்

மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல்
கோள் அமை கணம் முகில் குமுறல் ஓவின;
நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின;
வாள் உறை உற்று என மறைந்த மின்னெலாம். 4.9.106

தடுத்த தாள் நெடுந் தடம் கிரிகள் தாழ்வரை
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே. 4.9.107

ஆறு வாரியறல்

மேகம் மாமலைகளின் புறத்து வீதலால்
மாக யாறு யாவையும் வாரி அற்றன;
ஆகையால் தகவு இழந்து அழிவில் நல் பொருள்
போக ஆறு ஒழுகலான் செல்வம் போலவே. 4.9.108

மேகத்தின் மறைப்பு நீங்கச் சந்திரன் ஒளிவீசுதல்

கடம் திறந்து எழுகளிறுஅனைய கார்முகில்
இடம் திறந்து ஏகலின்பொலிந்தது இந்துவும்;
நடம் திறன் நவில்வுறுநங்கைமார் முகம்
படம் திறந்து ஒருவலின்பொலியும் பான்மைபோல். 4.9.109

குளிர்காற்று நறுங்காற்றாதல்

பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை
பூசிய சந்தனம் புழுகு குங்குமம்
மூசின முயங்கு சேறு உலா மொண்டு உற
வீசின நறும்பொடி விண்டு வாடையே. 4.9.110

அன்னங்கள் பறக்கத் தொடங்குதல்

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
நன்னெடும் பருவமும் நணுகிற்று ஆதலால்
"பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின் வாய்." 4.9.111

மயில்கள் ஒடுங்குதல்

தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிந்த மாமயில்
எஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே. 4.9.112

நீர் தெளிதலும் மீன் பிறழ்தலும்.

வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
நெஞ்சு எனத் தெளிந்தன நீரம் நீர்தொறும்
'பஞ்சு'எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர்
அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன். 4.9.113

தாமரை பொலிவிழத்தலும் செங்கிடை மலர்தலும்

ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன
தாள்தொறும் மலர்ந்தன முதிர்ந்த தாமரை;
கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை. 4.9.114

தவளை ஒலி அடங்கல்

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப்
பல்விதச் சிறார் எனப் பகர்வ பல்லரி
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம். 4.9.115

கடலொடு கலக்கும் ஆறுகளில் முத்துகள் தோன்றல்

செறிபுனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து
உறுதுணைக் கால்மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ்வலிக் கணவனை எய்தி ஆறு எலாம்
முறுவலிக்கின்றன போன்ற முத்தினால். 4.9.116

முன்பனியில் கமுகு முதிர்தல்

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிறம் பசலை உற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ளரும்
பொன் நிறம் பொருந்தின பூகத் தாறு எலாம். 4.9.117

முதலைகள் கரையில் வந்து உறங்குதல்

பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின
வயின்தொறும் வயின்தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள் தோறுமே. 4.9.118

வஞ்சிக்கொடி

கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின
அம் சிறை அறுபத்து அளக ஓளிய
எஞ்சல் இல் குழையன இடை நுடங்குவ
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே. 4.9.119

நந்துகள் சேற்றில் குளித்தல்

அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார்
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால்
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் நந்து எலாம். 4.9.120

நண்டுகள் வளைக்குள் ஒடுங்குதல்

மழைபடப் பொதுளிய மருதத் தாமரை
தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ
இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள்
புழை அடைத்து ஒடுங்கின பொச்சை மாக்கள் போல். 4.9.121
-------------

4.10 – Kiṣkindhā: Lakshmanas Gang zu Sugriva

4.10 கிட்கிந்தைப் படலம் 4374 - 4514

இராமன், தான்குறித்த கால எல்லையில் சுக்கிரீவன் வராமையால் இலக்குவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல் (4374-4381)

அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னம் வீரன் இளவலை'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கினன்;
மன்னன் வந்திலன்; என் செய்த ஆறு அரோ? 4.10.1

'பெறல் அரும் திருப் பெற்று உதவிப் பெருந்
திறன் நினைந்திலன்; சீர்மையின் தீர்ந்தனன்;
அறம் மறந்தனன் அன்புகிடக்க; நம்
மறன் அறிந்திலன்; வாழ்வின் மயங்கினான். 4.10.2

'நன்றி கொன்று அரு நட்பொடு நார் அறுத்து
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்து உளான்
கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்;
சென்று மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய். 4.10.3

"வெம்பு கண்டகர் விண்புக வேர் அறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில்
கொம்பும் உண்டு; அரும் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு " என்று சொல்லு நம் ஆணையே. 4.10.4

'நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது
வஞ்சம் அன்று; மனுவழக்கு; ஆதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய். 4.10.5

"ஊரும் ஆளும் அரசும் நும்சுற்றமும்
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும்; வாரலிராம் எனின் வானரப்
பேரும் மாளும் " எனும் பொருள் பேசுவாய். 4.10.6

"இன்னம் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி
துன்னினாரை " எனத் துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும்
நின்னலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். 4.10.7

'நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தரத்தக்கனை;
போதி ஆதி'என்றான் புகழ்ப் பூணினான். 4.10.8

இராமனது ஆணையை மேற்கொண்டு இலக்குவன் செல்லுதல் (4382-4388)

ஆணைசூடி அடிதொழுது ஆண்டு இறை
பாணியாது படர்வெரிந் பாழ்படாத்
தூணி தூக்கி தொடுசிலை தொட்டு அருஞ்
சேணின் நீங்கினன் சிந்தையுள் நீங்கலான். 4.10.9

மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறுசென்று நெடுநெறி நீங்கிட
வேறு சென்றனன்; மேன்மையின் ஓங்கிடும்
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான். 4.10.10

விண் உறத் தொடர் மேருவின் சீர் வரை
மண் உறப் புக்கு அழுந்தின மாதிரம்;
கண் உறத் தரெிவுற்றது கட்செவி;
ஒண் நிறம் கழல் சேவடி ஊன்றலால். 4.10.11

வெம்பு கான் இடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பு போன்றனன் அன்று அடல் வாலிதன்
தம்பிமேல் செலும் மானவன் தம்பியே. 4.10.12

மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று கெடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றது நண்ணிய கால்பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான். 4.10.13

உருக் கொள் ஒண்கிரி ஒன்றின் நின்று ஒன்றினைப்
பொருக்க எய்தினன், பொன் ஒளிர் மேனியான்
அருக்கன், மா உதயத்தின் நின்று அத்தம் ஆம்
பருப்பதத்தினை எய்திய பண்பினால். 4.10.14

தன் துணைத் தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின் நின்று ஒரு குன்றினில் குப்புறும்
பொன் துளங்கு உளைச் சீயமும் போன்றனன். 4.10.15

இலக்குவன் வெகுண்டு வருதலைக் கண்டு அஞ்சிய வானரர், அங்கதனுக்கு அவனது வருகையைத் தரெிவித்தல்

கண்ட வானரம் காலனைக் கண்டபோல்
மண்டி ஓடின; வாலி மகற்கு'அமர்
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான்
சண்ட வேகத்தினால்'என்று சாற்றுலும். 4.10.16

அங்கதன், இலக்குவனது குறிப்புணர்ந்து சுக்கிரீவனது அரண்மனையை அடைதல்

அன்ன தோன்றலும் ஆண் தொழிலான் வரவு
இன்னது என்று அறிவான் மருங்கு எய்திலான்;
மன்னன் மைந்தன் மனம் கருத்து உட் கொளா
பொன்னின் வார்கழல் தாதை இல் போயினான். 4.10.17

அரண்மனையின் உள்ளே சுக்கிரீவன் இருந்த நிலை (4391-4395)

நளன் இயற்றிய நாயகக் கோயிலுள்
தள மலர்த்தகைப் பள்ளியில் தாழ்குழல்
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்; 4.10.18

தெள்ளியோர் உதவு அப்பெருஞ் செல்வம் ஆம்
கள்ளினால் அதிகம் களித்தான்; கதிர்ப்
புள்ளி மால்நெடும் பொன்வரை புக்கது ஓர்
வெள்ளி மால்வரை என்ன விளங்குவான்; 4.10.19

சிந்துவாரத் தரு நறை தேக்கு அகில்
சந்தம் மா மயில்'சாயலர் தாழ் குழல்
கந்த மாமலர்க் காடுகள் தாவிய
மந்த மாருதம் வந்து உற வைகுவான்; 4.10.20

தித்தியா நின்ற செங்கிடை வாய்ச்சியர்
முத்த வாள்நகை முள்ளெயிறு ஊறுதேன்
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்குவான்; 4.10.21

மகுட குண்டலம் ஏய் முக மண்டலத்து
உகு நெடுஞ் சுடர்க்கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால்வரை
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான்; 4.10.22

அங்கதன், சுக்கிரீவனை அணுகித் துயில் எழுப்புதல் (4396-4398)

கிடந்தனன் கிடந்தானைக் கிடைத்து இரு
தடங்கை கூப்பினன்; தாரை முன்நாள் தந்த
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான்
தொடங்கினான் அவனைத் துயில் நீக்குவான். 4.10.23

'எந்தை! கேள் : அவ் இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடுஞ் சீற்றம் திருமுகம்
தந்து அளிப்ப தடுப்ப அரும் வேகத்தன்
வந்தனன்; உன் மனக் கருத்து யாது?'என்றான். 4.10.24

இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர்
நினைவு இலான் நெடுஞ் செல்வம் நெருக்கவும்
நனை நறுந்துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல் அணைத் தங்கினான். 4.10.25

அங்கதன் அநுமனிடம் செல்லுதல்

ஆதலால் அவ் அரசு இளம் கோளரி
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்
கோது இல் சிந்தை அனுமனைக் கூவுவான்
போதல் மேயினன் போதகமே அனான். 4.10.26

அங்கதன், அநுமனுடன் தாரையின் மாளிகையை அடைதல்

மந்திரத் தனி மாருதி தன்னொடும்
வெம் திறல் படைவீரர் விராய் வர
அந்தரத்தின் வந்து அன்னைதன் கோயிலை
இந்திரற்கு மகன்மகன் எய்தினான். 4.10.27

மேல் செயத்தக்கது என்'என வினாவிய அங்கதன் முதலியோரை நோக்கித் தாரை, கூறுதல் (4401-4405)

எய்தி'மேல்செயத் தக்கது என்?'என்றலும்
'செய்திர் செய்தற்கு அருநெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும் உதவி கொன்றீர்?'எனா. 4.10.28

மீட்டும் ஒன்று விளம்புகின்றாள் : "படை
கூட்டும்'என்று உமைக் கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் நும்நாள் திறம்பும் " எனக்
கேட்டிலீர்; இனிக் காண்டிர்; கிடைத்திரால். 4.10.29

'வாலியார் உயிர் காலனும் வாங்க வில்
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால் உம்புறத்து இருப்பார்? இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம். 4.10.30

'தேவி நீங்க அத்தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது பருகுதிர் போலும் நும்
காவி நாள்மலர்க் கண்ணியர் காதல்நீர். 4.10.31

'திறம்பினீர் மெய்; சிதைத்தீர் உதவியை;
நிறம்பொலீர்; உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர்; மற்று இனிப்
புறஞ்செய்து ஆவது என்?'என்கின்ற போதின்வாய் 4.10.32

குரங்குகள், கிட்கிந்தை வாயிலின் கதவைத் தாளிட்டுப் பெரும் பாறைகளைப் பெயர்த்து அடுக்கிப் போர் செய்தற்கு ஆயத்தமாதல் (4406-4407)

கோள் உறுத்தற்கு அரிய குரங்கு இனம்
நீள் எழுத் தொடரும் நெடு வாயிலைத்
தாள் உறுத்தி தடவரை தந்தன
மூளுறுத்தி அடுக்கின மொய்ம்பினால். 4.10.33

சிக்குறக் கடை சேமித்த செய்கைய
தொக்குறுத்த மரத்த; துவன்றின;
'புக்கு உறுக்கிப் புடைத்தும்'என புறம்
மிக்கு இறுத்தன; வெற்பும் இறுத்தன. 4.10.34

இலக்குவன் சினந்து உதைக்க, காவல் மதிலும் கதவு முதலியனவும்
சிதைந்து அழிதல் (4408-4409)

'காக்கவோ கருத்து?'என்று கதத்தினால்
பூக்க மூரல் புரவலர் புங்கவன்
தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால்
நூக்கினான் அக்கதவினை நொய்தினின். 4.10.35

காவல் மாமதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும்
தேவு சேவடி தீண்டலும் தீண்ட அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால். 4.10.36

குரங்குகள் அஞ்சிச் சிதறியோடுதல் (4410-4413)

நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை
ஐ இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரக்கும் வெருக் கொளா. 4.10.37

பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடித்தலை
நெரிய நெஞ்சு பிளப்ப நெடுந்திசை
இரியல் உற்றன; இற்றில இன் உயிர். 4.10.38

பகரவேயும் அரிது; பரிந்து எழு
புகர் இல் வானரம் அஞ்சிய பூசலால்
சிகர மால்வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது மாநகர். 4.10.39

வானரங்கள் வெருவி மலை ஒரீஇ
கான் ஒருங்கு படர அக் கார்வரை
மீன் நெருங்கிய வானகம் மீன் எலாம்
போனபின் பொலிவு அற்றது போன்றதே. 4.10.40

வாயிற் கதவினைத் தள்ளி நகரத்தினுள் இலக்குவன் வருதல் கண்டு அங்கு நின்றோர்,'இனி என் செய்வது?'எனத் தாரையை வினவுதல்

அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
"என்ன செய்குவது? எய்தினன் " என்றனர். 4.10.41

அநுமன் தக்கதோர் உபாயம் கூறுதல்

'அனை! எதிர்ந்து இவண் ஆய் வளையாரொடும்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலான்;
வினையம் ஈது'என்று அனுமன் விளம்பினான். 4.10.42

தாரை, மகளிர் கூட்டத்துடன் இலக்குவனை நோக்கிச் சென்று, அவன் வரும் வழியினைத் தடை செய்து நிற்றல்

'நீர் எலாம் அயல் நீங்குமின்; நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவன்'என்றலும்
பேர நின்றனர் யாவரும்; பேர்கலாத்
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும். 4.10.43

உரைசெய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலைப்
புரசை யானை அ(ன்)னான் புகலோடும் அவ்
விரைசெய் வார்குழல் தாரை விலங்கினாள். 4.10.44

விலங்கி மெல்லியல் வெள்நகை வெள்வளை
இலங்கு நுண்ணிடை ஏந்து இள மென்முலை
குலம்கொள் தோகை மகளிர் குழாத்தினால்
வலம்கொள் வீதி நெடுவழி மாற்றினாள். 4.10.45

இலக்குவனை நோக்கி வந்த மகளிர் குழாத்தின் தோற்றம்

வில்லும் வாளும் அணிதொறும் மின்னிட
மெல் அரிக்குரல் மேகலை ஆர்த்து எழ
பல்வகைப் புருவக் கொடி பம்பிட
வல்லி ஆயம் வலத்தினின் வந்ததே. 4.10.46

இலக்குவன், மகளிர் கூட்டத்தைப் பார்க்க அஞ்சித் திரும்பி நிற்றல்

ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குலாம் தடம் தேர் சுற்ற,
வேல் கண், வில் புருவம் போர்ப்ப, மடந்தையர் மிடைந்த போது,
பேர்க்க அருஞ்சீற்றம் பேர, முகம் பெயர்த்து ஒதுங்கி, பின்னர்ப்
பார்க்கவும் அஞ்சினான், அப் பருவரை அனைய தோளான். 4.10.47

நாணத்தால் தலை குனிந்து நின்ற இலக்குவனை நோக்கித் தாரை கூறுதல்

தாமரை வதனம் சாய்த்து, தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம் பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை, நடுங்குவாள், இனைய சொன்னாள். 4.10.48

'அந்தம் இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி,
இந்திரன் முதலினோர்க்கும் எய்தல் ஆம் இயல்பிற்று ஆமே?
மைந்த! நின் பாதம் கொண்டு எம் மனைவரப் பெற்று வாழ்ந்தேம்;
உய்ந்தனம்; வினையும் தீர்ந்தேம்; உறுதிவேறு இதனின் உண்டோ? 4.10.49

'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவி நின் சேனை வீரர்,
செய்திதான் உணர்கிலாது, "திருவுளம் தரெித்தி " என்றார்;
ஐய! நீ ஆழிவேந்தன் அடியிணை பிரிகலாதாய்
எய்தியது என்னை?'என்றாள் இசையினும் இனிய சொல்லாள். 4.10.50

இலக்குவன் தாரையை நோக்குதலும் தாயரை நினைந்து வருந்தலும் (4424-4425)

'ஆர் கொலோ உரைசெய்தார்?'என்று அருள்வர, சீற்றம் அஃக,
பார்குலாம் முழுவெண் திங்கள், பகல்வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை, இறைமுகம் எடுத்து நோக்கி,
தார்குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 4.10.51

மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நின்றான். 4.10.52

தாரைக்கு இலக்குவன் உரைத்த மாற்றம் (4426-4427)

'இனையராம், என்னை ஈன்ற இருவரும்'என்ன வந்த
நினைவினான், அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிரொர் மாற்றம் விளம்பவும் வேண்டும்'என்று,
அப்புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான். 4.10.53

"சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவென் " என்று,
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன்;
"ஆனவன் அமைதி வல்லை அறிக " என, அருளின் வந்தேன்;
மேல்நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக" என்றான். 4.10.54

தாரையின் மறுமொழி (4428-4432)

'சீறுவாய் அல்லை ஐய! சிறியவர் தீமை செய்தால்,
ஆறுவாய், நீ அலால் மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்;
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அவ் எல்லை
ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ? 4.10.55

'ஆயிர கோடி தூதர், அரிகணம் அழைப்ப, ஆணை
போயினர்; புகுதும் நாளும் புகுந்தது; புகல் புக்கோர்க்குத்
தாயினும் இனிய நீரே தணிதிரால்; தருமம் அஃதால்,
தீயன செய்யார் ஆயின், யாவரே செறுநர் ஆவார்? 4.10.56

'அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால், அதுவும்நும் தொழிலே அன்றோ?
மடந்தைதன் பொருட்டால் வந்து, வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னும் நிற்குமோ கேண்மை அம்மா? 4.10.57

'செம்மைசேர் உள்ளத் தீர்கள் செய்தபேர் உதவி தீர,
வெம்மைசேர் பகையும் மாற்றி, அரசு வீற்றிருத்தி விட்ட
உம்மையே இகழ்வர் என்னின், எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி, எழுமையும் இழப்பர் அன்றே. 4.10.58

'ஆண்டபோர் வாலி ஆற்றல் மாற்றியது, அம்பு ஒன்று ஆனால்,
வேண்டுமோ துணைவர்? நும்பால் வில்லினும் மிக்கது உண்டோ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டுநின்று உய்தற் பாலார், நும்கழல் புகுந்து உேளாரும். 4.10.59

இலக்குவன் சினம் தணிந்தமை கண்டு அனுமன் அருகில் வருதல்

என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வி யாளன், அருள்வர, நாணுக் கொண்டான்,
நின்றனன்; நிற்றலோடும்,"நீத்தனன் முனிவு'என்று உன்னா,
வன் துணை வயிரத் திண்தோள் மாருதி மருங்கின் வந்தான். 4.10.60

நீயும் மறந்தனையோ? என்று இலக்குவன் அனுமனை வினவ, அவன் மறுமொழி உரைத்தல் (4434-4440)

வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி,
'அந்தமில் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?'என்றான்;'முனிவு இனும் முளைக்கும்'என்று அங்கு
'எந்தை! கேட்டு அருளுக'என்னா இயம்பினன், இயம்ப வல்லான். 4.10.61

'சிதைவு அகல் காதல் தாயை, தந்தையை, குருவை, தயெ்வப்
பதவி அந்தணரை, ஆவை, பாலரை, பாவைமாரை
வதை புரிகுநர்க்கும், உண்டாம் மாற்றலாம் மாற்றம்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும் ஒழிக்கல் ஆம் உபாயம் உண்டோ? 4.10.62

'ஐய! நும்மோடும் எங்கள் அரிக்குலத்து அரசனோடும்
மெய்யுறு கேண்மை ஆகி, மேலைநாள் விளைவது ஆன
செய்கை, என்செய்கை அன்றோ? அன்னது சிதையு மாயின்,
உய்வகை எனக்கும் உண்டோ? உணர்வு மாசு உண்டது அன்றோ? 4.10.63

'தேவரும், தவமும், செய்யும் நல் அறம் திறமும், மற்றும்
யாவரும், நீரே என்பது, என்வயின் கிடந்தது; எந்தாய்!
ஆவது நிற்க, சேரும் அரண் உண்டோ? அருள் உண்டு அன்றே
மூவகை உலகும் காக்கும் மொய்ம்பினீர்! முனிவு உண்டானால்? 4.10.64

'மறந்திலன், கவியின் வேந்தன்; வயம் படை வருவிப்பாரைத்
திறம்திறம் ஏவி, அன்னார் சேர்வது பார்த்து, தாழ்த்தான்;
அறம்துணை நுமக்கு உற்றான்தன் வாய்மை, இன்று அழியுமாகில்,
பிறந்திலன் அன்றே? ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால். 4.10.65

'உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறு ஆக
மதம் யானை அனைய மைந்த! மற்றும் உண்டாக வற்றோ
சிதையாத செருவில் அன்னான் முன்சென்று, செறுநர் மார்பில்
உதையானேல், உதையுண்டு ஆவி உலையானேல், உலகில் மன்னோ? 4.10.66

'ஈண்டு, இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால்;
வேண்டலர் அறிவரேல், நும் கேண்மைதீர் வினையிற்று ஆமால்;
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய! நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த கவிகுலக் கோனொடு'என்றான். 4.10.67

அநுமனது வாய்மொழி கேட்டு இலக்குவன் சீற்றம் தணிதல்

மாருதி மாற்றம் கேட்ட மலைபுரை வயிரம் தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான்
'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிது ஆக செய்த சிறுமையான்'என்னும் பெற்றி. 4.10.68

இலக்குவன் அநுமனை நோக்கிக் கூறுதல் (4442-4447)

அனையது கருதி, பின்னர், அரி குலத்தவனை நோக்கி,
'நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது; நின்பால்
இனையன உரைத்தற்கு ஏற்ற; எண்ணுதி இவை நீ'என்னா,
வனைகழல்'வயிரத் திண்தோள் மன் இளம் குமரன் சொல்வான் : 4.10.69

தேவியைக் குறித்துச் செய்த சீற்றமும் மானத் தீயும்
ஆவியைக் குறித்து நின்ற ஐயனை; அதனைக் கண்டேன்,
கோ இயல் தருமம் நீங்க, கொடுமையோடு உறவு கூடிப்
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன்; பழியும் பாரேன். 4.10.70

'ஆயினும், என்னை யானே ஆற்றி நின்று, ஆவி உற்று,
நாயகன்தனையும் தேற்ற நாள்பல கழிந்த; அன்றேல்,
தீயும், இவ் உலகம் மூன்றும்; தேவரும் வீவர்; ஒன்றோ?
வீயும், நல் அறமும்; போகா விதியை யார் விலக்கல் பாலார்?" 4.10.71

'உன்னைக் கண்டு, உம்கோன், தன்னை, உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னைக் கண்டனன் போல் கண்டு, இந்நாள் இடை நெடிது வைகி,
தன்னைக் கொண்டு இருந்தே தாழ்த்தான்; அன்று எனில், தனு ஒன்றாலே
மின்னைக் கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல் பாற்றோ? 4.10.72

'ஒன்றுமோ, வானம் அன்றி உலகமும் பதினால் உள்ள
வென்றி மாக் கடலும் ஏழ் ஏழ் மலை உள்ள என்னவேயாய்
நின்றது ஓர் அண்டத்து உள்ளே எனின், அது நெடியது ஒன்றோ?
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால். 4.10.73

'தாழ்வித்தீர் அல்லீர்; பல்நாள் தருக்கிய அரக்கர் தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல் வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித் தீயாளர் துன்பம் கிளர்வித்தீர்; பாவம் தன்னை
மூள்வித்தீர்! முனியாதானை முனிவித்தீர்'முடிவின்'என்றான். 4.10.74

அநுமன் இலக்குவனுக்கு ஆறுதலும் உறுதியும் கூறி அவனைச் சுக்கிரீவன்பால் வருமாறு அழைத்தல்

தோன்றல் அஃது உரைத்தலோடும், மாருதி தொழுது,'தொல்லை
ஆன்ற நூல் அறிஞ! போய பொருள் மனத்து அடைப்பாய் அல்லை;
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும்; இத் திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே; போந்து உன் தம்முனைச் சார்தி'என்றான். 4.10.75

இலக்குவன், அநுமனது வார்த்தைக்கு இசைந்து அவனொடும் சுக்கிரீவன்பால் செல்லுதல்

'முன்னும், நீ சொல்லிற்று அன்றோ முயன்றது? முற்றுங் காலை
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம்'என்று கூறி,
அன்னது ஓர் அமைதியான்தன் அருள் சிறிது அறிவான் நோக்கி,
பொன்னின் வார் சிலையினானும், மாருதியோடும் போனான். 4.10.76

தாரை, மகளிர்கூட்டத்துடன் திரும்பிச் செல்லுதல்

அயில் விழி, குமுதச் செவ்வாய், சிலைநுதல், அன்னப் போக்கின்,
மயில் இயல், கொடித்தேர் அல்குல், மணி நகை, திணிவேய் மென்தோள்,
குயில் மொழி, கலசக் கொங்கை மின் இடை, குமிழ் ஏர் மூக்கின்,
புயல் இயல் கூந்தல், மாதர் குழாத்தொடும் தாரை போனாள். 4.10.77

அங்கதன் இலக்குவனை வணங்கி அவன் பணித்தவண்ணம் அவனது வருகையைச் சுக்கிரீவனுக்கு உணர்த்தச் செல்லுதல்

வல்ல மந்திரியரோடு வாலி காதலனும், மைந்தன்
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து, அச்சம் தீர்ந்தான்;
வில்லியும் அவனை நோக்கி,'விரைவின் என் வரவு வீர!
சொல்லுதி நுந்தைக்கு'என்றான்;'நன்று'எனத் தொழுது போனான். 4.10.78

இலக்குவன் சினத்துடன் வந்திருத்தலை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தரெிவித்தல்

போனபின், தாதை கோயில் புக்கு, அவன் பொலம்கொள் பாதம்
தான் உறப் பற்றி, முற்றும் தைவந்து, தடக்கை வீரன்,
'மானவற்கு இளையோன் வந்து உன் வாயிலின் புறத்தான்; சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது; இது விளைந்தது'என்றான். 4.10.79

இலக்குவன் வெகுண்டு வருதற்குரிய காரணம் யாது? எனச் சுக்கிரீவன் அங்கதனை வினவுதல்

அறிவுற்று, மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கிப்
பிரிவுற்ற மயக்கத்தான், முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான்,
'செறி பொன் தார் அலங்கல் வீர! செய்திலம் குற்றம்; நம்மைக்
கறு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது?'என்றான். 4.10.80

அங்கதன், நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தல் (4454-4459)

"இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை" என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம்; மற்று ஈது உற்றது செய்கை; முற்றும்
நயம் தரெி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும். 4.10.81

வருகின்ற வேகம் நோக்கி, வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து, குன்றம்
அருகு ஒன்றும் இல்லா வண்ணம் வாங்கினர் அடுக்கி, மற்றும்
தரெிகின்ற சினத் தீப் பொங்க, செருச் செய்வான் செருக்கி நின்றார். 4.10.82

'ஆண்தகை, அதனை நோக்கி, அம் மலர்க் கமலத் தாளால்
தீண்டினன்; தீண்டா முன்னம், தறெ்கொடு வடக்கும் தேய
நீண்ட கல் மதிலும், கொற்ற வாயிலும், நிரைத்த குன்றும்,
கீண்டன தகர்ந்து, பின்னைப் பொடியொடும் கெழீஇய அன்றே. 4.10.83

'அந்நிலை கண்ட திண்தோள் அரிக்குலத்து அனிகம், அம்மா!
எந்நிலை நின்றது என்கேன்? யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்?
இந்நிலை கண்ட அன்னை, ஏந்து இழை ஆயத்தோடு,
மின் நிலை வில்லினானை'வழி எதிர் விலக்கி நின்றாள். 4.10.84

'மங்கையர் மேனி நோக்கான், மைந்தனும், மனத்து வந்து
பொங்கிய சீற்றம் பற்றிப் புகல்கிலன்; பொருமி நின்றான்;
நங்கையும் இனிது கூறி,'நாயக! நடந்தது என்னோ
எங்கள்பால்?'என்னச் சொன்னாள்; அண்ணலும் இனைய சொன்னான். 4.10.85

'அது பெரிது அறிந்த அன்னை, அன்னவன் சீற்றம் மாற்றி,
"விதிமுறை மறந்தான் அல்லன்; வெம் சினச் சேனை வெள்ளம்
கதும் என கொணரும் தூது கல் அதர்ச் செல்ல ஏவி,
எதிர்முறை இருந்தான்" என்றாள்; இது இங்குப் புகுந்தது'என்றான். 4.10.86

இலக்குவனது வருகையை எனக்குத் தரெிவியாதது என்'எனச் சுக்கிரீவன் அங்கதனை நோக்கி வினவுதல்

சொற்கு உரித்தான எல்லாம் சொல்லலும், அருக்கன் தோன்றல்,
'நிற்க உரியார்கள் யாவர், அனையவர் சினத்தின் நேர்ந்தால்?
விற்கு உரியான், இத்தன்மை வெகுளியின், விரைவின் எய்த,
எற்கு உரையாது நீர் இது இயற்றியது என்னை?'என்றான். 4.10.87

அங்கதன் மறுமொழி

'உணர்த்தினென் முன்னம்; நீ அஃது உணர்ந்திலை; உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு உரைக்கப் போனேன்;
இணர்த் தொகை ஈன்ற பொன்தார் எறுழ் வலித் தடந்தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல் கருமம்'என்றான். 4.10.88

சுக்கிரீவன், மதுவுண்டு மதி மயங்கித் தன் கடமையினை மறந்த குற்றத்தினை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டு கூறுதல் (4462-4470)

உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் :'ஒருவர்க்கு இன்னம்
பெறல் உண்டே, அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி? உற்றது
இறல் உண்டோ? என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன்; காண நாணுவன், மைந்த!'என்றான். 4.10.89

'ஏயின இது அலால் மற்று ஏழமைப் பாலது என்னோ?
"தாய் இவள், மனைவி'என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று இது; அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம்; மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்! 4.10.90

"தெளிந்து தீவினையைச் செற்றோர் பிறவியின் தீர்வர் " என்ன,
விளிந்து இலா உணர்வினோரும், வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின். 4.10.91

"தன்னைத் தான் உணரத் தீரும், தகை அறு பிறவி " என்பது
என்னத்தான் மறையும் மற்றைத் துறைகளும் இசைத்த, எல்லாம்,
முன்னைத்தான் தன்னை ஓரா முழுப்பிணி அழுக்கின் மேலே,
பின்னைத்தான் பெறுவது, அம்மா' நறவு உண்டு திகைக்கும் பித்தோ? 4.10.92

'அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில் மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைத்தவர், அன்றி, வேரி
ஒளித்தவர், உண்டு, மீண்டு, இவ் உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ? 4.10.93

'செற்றதும் பகைஞர், நட்டார் செய்த பேர் உதவிதானும்,
கற்றதும், கண் கூடாகக் கண்டதும், கலை வலாளர்
சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும், படர்ந்த துன்பம்
உற்றதும் உணரார் ஆயின், இறுதி வேறு இதனின் உண்டோ? 4.10.94

'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
"தஞ்சம் " என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்;
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால்; அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால், நரகினை நல்காது அன்றே? 4.10.95

'கேட்டனன்,'நறவால் கேடு வரும்'என; கிடைத்த அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்,
மீட்டு இனி உரைப்பது என்னே? விரைவின் வந்து அடைந்த வீரன்
மூட்டிய வெகுளியால் நான் முடிவதற்கு ஐயம் உண்டோ? 4.10.96

'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க'என்றான். 4.10.97

சுக்கிரீவன், இலக்குவனை எதிர்கொண்டு அழைத்து வருமாறு அங்கதனை அனுப்பித் தான் சுற்றத்தொடும் அரண்மனை வாயிலில் வந்து நிற்றல்

என்று கொண்டு இயம்பி, அண்ணற்கு எதிர் கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு,'இன்னும் நீயே நணுகு'என அவனை ஏவி,
தன் துணைத் தேவிமாரும் தமரொடும் தழுவ, தானும்
நின்றனன், நெடிய வாயில் கடைத்தலை, நிறைந்த சீரான். 4.10.98

இலக்குவனை வரவேற்கும் நிலையில் கிட்கிந்தை நகரம் பெற்ற அணிநலம் (4472 - 4473)

உரைத்த செம் சாந்தும், பூவும், சுண்ணமும், புகையும், ஊழின்
நிரைத்த பொன்குடமும், தீப மாலையும், நிகர் இல் முத்தும்
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும், கொடியும், சங்கும்,
இரைத்து இமிழ் முரசும், முற்றும் இயங்கின, வீதி எல்லாம். 4.10.99

தூய திண் பளிங்கின் செய்த சுவர்களில், தலத்தில், சுற்றி
நாயக மணியிற் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோர் அயர்வுற,'கை விலோடும்
ஆயிர மைந்தர் வந்தார் உளர்'எனப் பொலிந்தது, அவ் ஊர். 4.10.100

தன்னை நோக்கிவந்த அங்கதனைக் கண்ட இலக்குவன்'எங்கிருந்தான் நுங்கோமான்?'என வினவ, அவன் மறுமொழி பகர்தல்

அங்கதன், பெயர்த்தும் வந்து ஆண்டு அடிதொழுதானை, ஐயன்,
'எங்கு இருந்தான் நும் கோமான்?' என்றலும்,'எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க ஏறு அனைய வீர! செய்தவச் செல்வன்' என்றான். 4.10.101

சுக்கிரீவன் இலக்குவனை எதிர்கொள்ளுதல் (4475-4477)

சுண்ணமும் தூசும் வீசி, சூடகத் தொடிக் கைம் மாதர்,
கண் அகன் கவரிக் கற்றைக் கால் உற, கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க, வீர
வண்ண வில் கரத்தான் முன்னர், கவிக் குலத்து அரசன் வந்தான். 4.10.102

அருக்கியம் முதல ஆய அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த, முரசு இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு இனம் முனிவர் ஓத, இசை திசை அளப்ப, யாணர்த்
திருக்கிளர் செல்வம் நோக்கித் தேவரும் மருளச் சென்றான். 4.10.103

வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க, விண்ணில்
சும்மைவால் மதியம் குன்றில் தோன்றியது எனவுந் தோன்றிச்
செம்மலை எதிர்கோள் எண்ணித் திருவொடு மலர்ந்த செல்வன்,
அம் மலை உதயஞ் செய்யும் தாதையும் அனையன் ஆனான். 4.10.104

இலக்குவன் சுக்கிரீவனைக் கண்டவுடன் தன் மனத்து எழுந்த சீற்றத்தைத் தணித்துக் கொள்ளுதல்

தோற்றிய அரிக்குலத்து அரசை தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன்; எழுந்தது அவ் வழிச்
சீற்றம்; அங்கு அதுதனை தெளிந்த சிந்தையால்
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான். 4.10.105

சுக்கிரீவனும் இலக்குவனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு, பரிவாரங்களுடன் அரண்மனையை அடைதல்

எழு என மலை என எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும்; தழுவி தையலார்
குழுவொடும் வீரர்தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு இல் பொற் கோபுரத்து உறையுள் எய்தினார். 4.10.106

இலக்குவனைச் சிங்காதனத்தில் அமரும்படி சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாமை (4480-4481)

அரியணை அமைந்தது காட்டி'ஐய! ஈண்டு
இரு' எனக் கவிக்குலத்து அரசன் ஏவலும்
'திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு
உரியதோ இஃது?'என மனத்தின் உன்னுவான். 4.10.107

'கல் அணை மனத்தினையுடைக் கைகேசியால்
எல் அணை மணிமுடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூந்தொடர்
மெல் அணை வைகலும் வேண்டுமோ?'என்றான். 4.10.108

அது கேட்டுச் சுக்கிரீவன் வருந்திநிற்க, இலக்குவன், தரையில் இருத்தல்

என்று அவன் உரைத்தலும் இரவி காதலன்
நின்றனன்; விம்மினன் மலர்க்கண் நீர் உக;
குன்று என உயர்ந்த அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோமகன். 4.10.109

கண்டோர் வருந்துதல்

மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும்
அந்தம் இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர்;
நொந்தனர்; தளர்ந்தனர்; நுவல்வது ஓர்கிலார். 4.10.110

திருமஞ்சனம் ஆடி அமுது அருந்தும்படி இலக்குவனைச் சுக்கிரீவன் வேண்ட, இலக்குவன் அதற்கு உடன்படாது மறுத்துரைத்தல் (4484-4488)

'மஞ்சன விதிமுறை மரபின் ஆடினை
எஞ்சல் இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுமால். 4.10.111

'வருத்தமும் பழியுமே வயிறு மீக்கொள
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ?
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇக்
கருத்து வேறு உற்றபின் அமிழ்தும் கைக்குமால். 4.10.112

'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கைநீர் அரசன் தேவியைக்
காட்டினை எனின் எமைக் கடலின் ஆர் அமிழ்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால். 4.10.113

'பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது; வேறு நான் ஒன்றும்
நச்சிலேன்; நச்சினேன் ஆயின் நாய் உண்ட
எச்சிலே அது; இதற்கு ஐயம் இல்லையால். 4.10.114

'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச்
சென்றனன் கொணர்ந்து'அடைதிருத்தினால் அது
நுன் துணைக் கோமகன் நுகர்வது ஆதலான்
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்'என்றான். 4.10.115

சுக்கிரீவன் வருந்துதல்

வானர வேந்தனும்'இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது; குரக்கு இனத்து எமர்கட்கு ஆம்'எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான் அரோ. 4.10.116

வருந்திய சுக்கிரீவன் அநுமனை நோக்கி ஒரு வார்த்தை கூறி இராமன் இருக்கும் இடத்திற்கு விரைந்து புறப்படுதல் (4490-4491)

எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை;
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று
மொழிந்தனன் வரன்முறை போதல் முன்னுவான். 4.10.117

'போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறிவலோய்!'எனா
ஏயினன் அனுமனை'இருத்தி ஈண்டு'எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணுவான். 4.10.118

சுக்கிரீவன், தன் பரிவாரங்கள் சூழச் சென்று இராமனை அடைதல் (4492-4497)

அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன். 4.10.119

ஒன்பதினாயிர கோடி ஊகம் தன்
முன் செல பின் செல ஞாங்கர் மொய்ப்பு உற
மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்று உற
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில். 4.10.120

கொடி வனம் மிடைந்தன; குமிறு பேரியின்
இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின;
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி;
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே. 4.10.121

பொன்னினின் முத்தினின் புனைமென் தூசினின்
மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின்
பின்னின; விசும்பினும் பெரிய; பெட்பு உறத்
துன்னின சிவிகை; வெண் கவிகை சுற்றின. 4.10.122

வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும்
தாரினின் பொலம் கழல் தழங்கத் தாரணித்
தேரினில் சென்றனன் சிவிகை பின்செல. 4.10.123

எய்தினன் மானவன் இருந்த மால்வரை
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல்
ஐய வில் குமரனும் தானும் அங்கதன்
கை துறந்து அயல் செல காதல் முன் செல. 4.10.124

சுக்கிரீவன், இராமனிடத்துக் கொண்ட பேரன்பினால் பரதனை ஒத்துத் தோன்றுதல்

கண்ணிய கணிப்பு அரும் செல்வக் காதல் விட்டு
அண்ணலை அடிதொழ அணையும் அன்பினால்
நண்ணிய கவிக்குலத்து அரசன் நாள்தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன். 4.10.125

சுக்கிரீவன், இராமன் திருவடிகளை இறைஞ்சுதல்

பிறிவு அருந் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை
அறைமணித் தாரினோடு ஆரம் பார் தொட
செறி மலர்ச் சேவடி முடியின் தீண்டினான். 4.10.126

இராமபிரான், சுக்கிரீவனை அன்பினால் தழுவித் தன்னருகில் அமர்த்தி நலம் வினாதல் (4500-4501)

தீண்டலும் மார்பு இடைத் திருவும் நோவுற
நீண்ட பொன் தடக்கையால் நெடிது புல்லினான்;
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்புபோல்
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே; 4.10.127

அயல் இனிது இருத்தி'நின் அரசும் ஆணையும்
இயல்பினின் இயைந்தவே? இனிதின் வைகுமே
புயல் பொரு தடைக்கைநீ புரக்கும் பல் உயிர்?
வெயில் இலதே குடை?'என வினாயினான். 4.10.128

சுக்கிரீவன் விடை பகர்தல்

பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து வான்
உருளுடைத் தேரினான் புதல்வன்'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ?'என்றான். 4.10.129

சுக்கிரீவன் தன் பிழையினை எடுத்துரைத்து இரங்குதல் (4503-4505)

பின்னரும் விளம்புவான்'பெருமையோய்! நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்;
மன்னவ நின்பணி மறுத்து வைகி என்
புன் நிலைக் குரக்கு இயல் புதுக்கினேன்'என்றான். 4.10.130

பெருந்திசை அனைத்தையும் பிசைந்து நேடினேன்
தரும் தகை அமைந்தும் அத்தன்மை செய்திலேன்
திருந்து இழை திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருக்க யான் வாழ்வின் வைகினேன். 4.10.131

'இனையன யானுடை இயல்பும் எண்ணமும்
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும்
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ?
வனைகழல் வரிசிலை வள்ளியோய்!'என்றான். 4.10.132

இராமபிரான், சுக்கிரீவனது குணம் கொண்டு குற்றம் நீக்கிப் பாராட்டுதல்

திரு உறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து
ஒருவ அருங் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ! இனையன பகர்தியோ?'என்றான். 4.10.133

இராமன் சுக்கிரீவனை நோக்கி'அநுமன் எங்குள்ளான்'என வினவ, அவன், நாளை சேனையோடு வருவான்'எனச் சுக்கிரீவன் விடை கூறுதல் (4507-4508)

ஆரியன் பின்னரும்'ஐய! நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்?'என
சூரியன் கான்முளை'தோன்றுமால் அவன்
நீர் இரும் பரவையின் நெடிய சேனையான். 4.10.134

'கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர்
ஓடினர்; நெடும்படை கொணர்தல் உற்றதால் :
நாள்தரக் குறித்ததும் இன்று நாளை; அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால். 4.10.135

சேனைகள் யாவும் வந்த பின்னர்ச் செய்யத்தக்கது இது என ஆணையிடலாம் எனச் சுக்கிரீவன் கூறுதல்

'ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெருஞ் சேனை; அந் நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதிநாள் நாளை; நண்ணிய
பின் செய தக்கது பேசல் பாற்று என்றான். 4.10.136

மீண்டு சென்று சேனைகள் வந்தபின் வருக'என இராமன் சுக்கிரீவனைக் கிட்கிந்தைக்கு அனுப்புதல்

விரும்பிய இராமனும்'வீர நிற்கு இது ஓர்
அரும் பொருள் ஆகுமோ? அமைதி நன்று'எனா
'பெரும்பகல் இறந்தது; பெயர்தி; நின் படை
பொருந்துழி வா'என தொழுது போயினான். 4.10.137

இராமன் அங்கதனுக்கு இன்மொழி கூறி அனுப்பிவிட்டுத் தம்பியும் தானும் அவ் விடத்தில் தங்குதல்

அங்கதற்கு இனியன அருளி'ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு'என்று தாமரைச்
செங்கணான் தம்பியும் தானும் சிந்தையின்
மங்கையும் அவ் வழி அன்று வைகினான். 4.10.138

இராமன் பணித்தவண்ணம், தான் கிட்கிந்தைக்குச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றை இலக்குவன் எடுத்துரைத்தல்

சேய் உயர் கீர்த்தியான்'கதிரின் செம்மல் பால்
போயதும் அவ் வயின் புகுந்த யாவையும்
ஓய்வுறாது உணர்த்து'என உணர்த்தினான் அரோ
வாய்மையா உணர்வுறும் வலிய மொய்ம்பினான். 4.10.139

கவிக்கூற்று

அன்று அவண் இறுத்தனன்; அலரி கீழ்த் திசைப்
பொன் திணி நெடுவரை பொலிவு உறாத முன்
வன் திறல் தூதுவர் கூவ வானரக்
குன்று உறழ் நெடும்படை அடைதல் கூறுவாம். 4.10.140
---------------

4.11 – Die Heerschau

4.11 தானை காண் படலம் 4514 - 4552

சதவலி வானர சேனையுடன் வந்து சேர்தல்

ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ்வலி அமைந்த
வானர அதிபர் ஆயிரர் உடன்வர வகுத்த
கூனல் மாக் குரங்கு ஐ இரண்டு ஆயிர கோடித்
தானையோடும் அச் சதவலி என்பவன் சார்ந்தான். 4.11.1

சுடேணனன் வருகை

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தரெிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுடேணனன் எனும் பெயர்த் தோன்றல். 4.11.2

உருமையின் தந்தை தாரன் வருகை

ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு எண் ஆயிர கோடியது உடன் வர, அமுதம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான். 4.11.3

கேசரி வருகை

ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த
மொய்ம்பு மால்வரை புரை நெடு வானரம் மொய்ப்ப
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனைத் தந்த கேசரி கடல் என நடந்தான். 4.11.4

தூமிரன் வருகை

மண்கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியன, வயிரத்
திண் கொள் மால்வரை மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண்கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, எறுழ்வலித் தூமிரன் இறுத்தான். 4.11.5

கவாட்சன் வருகை

முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும்,
தனிமை தாங்கிய உலகையும் சலம்வரின் குமைக்கும்,
இனிய மாக்குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி
அனிகம் முன்வர ஆன்பெயர்க் கண்ணன் வந்து அடைந்தான். 4.11.6

பனசன் வருகை

தனிவரும் தடங்கிரி எனப் பெரியவன், சலத்தால்
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்குறு நிலையன்,
பனசன் என்பவன், பன்னிரண்டு ஆயிர கோடிப்
புனித வெஞ்சின வானரப் படைகொடு புகுந்தான். 4.11.7

நீலன் வருகை

இடியும், மாக்கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் முழக்கு உடையன, விசையன, முரண,
கொடிய, கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படைகொண்டு புகுந்தனன் நீலன். 4.11.8

தரீமுகன் வருகை
மா கரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்த வெங்கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு ஐந்து கோடி
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான். 4.11.9

கயன் வருகை

இளைத்து வேறு ஒரு மாநிலம் வேண்டும் என்று இரங்க,
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும்,
விளைத்த வெஞ்சினத்து அரி இனம் வெருவுற விழிக்கும்
அளக்கரோடும் அக்கயன் எனும் பெயரன் வந்து அடைந்தான். 4.11.10

சாம்பவான் வருகை

ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு பரவையின் திரையின்
தாய், உருத்து உடனே வர தட நெடு வரையை
ஏய் உருப் புயச் சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான். 4.11.11

துன்முகன் வருகை

வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
உகுத்தி நீயெனப் பொரு அரும் பெருவலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப் பத்தியின் இரட்டி
தொகுத்த கோடி வெம்படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான். 4.11.12

துமிந்தன் வருகை

கோடி கோடி நூறாயிர எண் எனக் குவிந்த
நீடு வெஞ்சினத்து அரி இனம் இருபுடை நெருங்க
மூடும் உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க
தோடு இவர்ந்த தார்க் கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான். 4.11.13

மயிந்தன் வருகை

இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ்சின வானரப் படையொடும் ஒருங்கே
சயம் தனக்கு ஒரு வடிவு எனத் திறல்கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான். 4.11.14

குமுதன் வருகை

கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய,
பிறங்கு தணெ் திரை கடல்புடை பெயர்ந்து எனப் பெயர்வ,
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த
திறம் கொள், வெஞ்சினப் படைகொடு குமுதனும் சேர்ந்தான். 4.11.15

பதுமுகன் வருகை

ஏழின் ஏழு நூறாயிர கோடி என்று இசைந்த
பாழி நல் நெடுந் தோள்கிளர் படைகொண்டு பரவை
ஊழி பேரினும் உலைவு இல உலகினில் உயர்ந்த
பூழி விண்புகப் பதுமுகன் என்பவன் புகுந்தான். 4.11.16

இடபன் வருகை

ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்வு இலாத் தடவரைக் குலங்கள்
சூழும் தோற்றத்த, வலிகொள் தொள்ளாயிர கோடிப்
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான். 4.11.17

தீர்க்கபாதன் முதலியோர் வருகை

தீர்க்கபாதனும், வினதனும், சரபனும் திரைக்கும்
மால் கருங்கடற்கு உயர்ந்துள மைம்முகத்து அனிகம்
ஆர்க்கும் எண்ணருங் கோடி கொண்டு, அண்டமும் புறமும்,
போர்க்கும் பூழியில் மறைதர, முறையினின் புகுந்தார். 4.11.18

அனுமன் வருகை

கை அஞ்சு ஆயுதம் உடைய அக் கடவுளைக் காண
மெய் அஞ்சாதன மாதிரம் சிறிது என விரிந்த,
வையம் சார்வரத் திரிதரு வானர சேனை
ஐ அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான். 4.11.19

நளன் வருகை

நொய்தின் கூடிய சேனை, நூறாயிர கோடி
எய்த, தேவரும்,'என்கொலோ முடிவு?'என்பது என்ன
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க,
தயெ்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் சேர்ந்தான். 4.11.20

கும்பன் சங்கன் முதலியோர் வருகை

கும்பனும் குலச் சங்கனும் முதலினர், குரங்கின்
தம் பெரும்படைத் தலைவர்கள் தர வந்த தானை,
இம்பர் நின்றவர்க்கு எண் அரிது; இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய; மற்று உரைப்ப அரிது அளவே 4.11.21

வானரப் படையின் சிறப்பு (4535-4537)

தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம்;
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்;
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெங்கனல் கடவுளும் இரவியும் கரியும். 4.11.22

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின் கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே. 4.11.23

ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். 4.11.24

படைத் தலைவர் வருகை

ஆறு பத்து எழு கோடியாம், வானரர்க்கு அதிபர்,
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்,
மாறு இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர்,
ஊறும் இப்பெரும் சேனைகொண்டு எளிதின் வந்துற்றார். 4.11.25

வந்த படைத் தலைவர் சுக்கிரீவனை வணங்குதல்

ஏழு மாகடல் பரப்பினும் பரப்பு என இசைப்பச்
சூழும் வானரப் படையொடு, அவ் வீரரும் துவன்றி,
'ஆழி மாபரித் தேரவன் காதலன் அடிகள்
வாழி! வாழி!'என்று உரைத்து அலர் தூவினர், வணங்கி. 4.11.26

சுக்கிரீவன் சேனையைக் காணுமாறு இராமனை வேண்டுதல்

அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன்
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்;
'நினையும் முன்னம் வந்து அடைந்தது, நின்பெருஞ் சேனை;
வினையின் கூற்றுவ! கண்டருள் நீ'என விளம்ப. 4.11.27

வானரப் படை காண இராமன் மலைச் சிகரத்தை யடைதல்

ஐயனும் உவந்து, அகம் என முகம் மலர்ந்து அருளி,
தையலாள் வரக் கண்டனன் ஆம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஒர் நெடுவரைச் சிகரத்தின் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அச்சேனையின் மீண்டான். 4.11.28

சேனை இயங்குமாறு ஒழுங்குபடுத்திச் சுக்கிரீவன் படைத் தலைவரோடு மீளுதல்

அஞ்சொடு ஐ இரண்டு யோசனை அகலத்தது ஆகி,
செஞ்செவே வடதிசை நின்று தனெ்திசை செல்ல,
எஞ்சலில் பெருஞ்சேனையை'எழுக'என ஏவி,
வெஞ்சினப் படைவீரரை உடன் கொண்டு மீண்டான். 4.11.29

சுக்கிரீவன் இராமனுக்கு வானரப் படையைக் காட்டுதல்

மீண்டு இராமனை அடைந்து'இகல் வென்றிவேல் வீர!
காண்டி நீ'என வரன்முறை தரெிவு உறக் காட்டி,
ஆண்டு இருந்தனன்; ஆர்த்து உருத்து எழுந்ததை அன்றே,
ஈண்டு சேனை, பால் எறிகடல் நெறி படர்ந்து என்ன. 4.11.30

வானரப் படையின் இயக்கத்தால் புழுதி எழுதல்

எட்டுத் திக்கையும் இருநிலப் பரப்பையும், இமையோர்
வட்ட விண்ணையும், மறிகடல் அனைத்தையும், மறைப்பத்
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி,
இட்டுச் செம்மிய நிறைகுடம் ஒத்தது இவ் அண்டம். 4.11.31

படையின் அளவின்மை

அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ?
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்,
எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ? 4.11.32

படையைப் பற்றி இராம இலக்குவர் உரையாடல் (4446-4452)

விண்ணின், தீம் புனல் உலகத்தின், நாகரின், வெற்றி
எண்ணின், தான் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்,
கண்ணின், சிந்தையின், கல்வியின், ஞானத்தின், கருதி,
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை செய்வதானான். 4.11.33

'அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் : இனி முடியுறக் காணுமாறு உளதோ?
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய்! மண்ணிடை மாக்கள்
"கடல் கண்டோம் " என்பர், யாவரே முடிவுறக் கண்டார்? 4.11.34

'ஈசன் மேனியை ஈர் ஐந்து திசைகளை, ஈண்டு இவ்
ஆசு இல் சேனையை, ஐம்பெரும் பூதத்தை அறிவை,
பேசும் பேச்சினை, சமயங்கள் பிணக்குறும் பிணக்கை,
வாசமாலையாய்! யாவரே முடிவு எண்ண வல்லார்? 4.11.35

'இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி,
பின்னைக் காரியம் புரிதுமேல், நாள்பல பெயரும்;
உன்னிச் செய்கைமேல் ஒருப்படல் உறுவதே உறுதி'
என்ன வீரனைக் கைதொழுது இளையவன் இயம்பும். 4.11.36

யாவது எவ் உலகத்தினின் ஈங்கு இவர்க்கு இயலாது
ஆவது; ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே?
தேவ! தேவியைத் தேடுவது என்பது சிறிதால்;
பாவம் தோற்றது, தருமமே வென்றது, இப்படையால். 4.11.37

தரங்க நீர் எழும் தாமரை நான்முகன் தந்த
வரம் கொள் பேர் உலகத்தினில், மற்றை மன்னுயிர்கள்,
உரம் கொள் மால்வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும்
குரங்கின் மாப் படைக்கு, உறை இடப் படைத்தன கொல்லாம்? 4.11.38

'ஈண்டு தாழ்க்கின்றது என், இனி எண் திசை மருங்கும்,
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்?
நீண்ட நூல்வலாய்!'என்றனன் இளையவன்; நெடியோன்,
பூண்ட தேரவன் காதலற்கு, ஒருமொழி புகலும். 4.11.39
----------------

4.12 – Die Aussendung der Suchtrupps

4.12 நாட விட்ட படலம் 4553- 4626

இராமன் சுக்கிரீவனை வினவுதல்

'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி, நிரந்து, பரந்து எழு
தகைவு இல் சேனைக்கு அவதி சமைந்தது ஓர்
தொகையும் உண்டு கொலோ?' எனச் சொல்லினான். 4.12.1

சுக்கிரீவன் மறுமொழி (4554 - 4555)

'ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற'என்று
ஆற்றலாளர் அறிவின் அமைத்தது ஓர்
மாற்றம் உண்டு; அது அல்லது, மற்றும் ஓர்
தோற்றம் என்று இதற்கு எண்ணும் முன் சொல்லுமோ? 4.12.2

'ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர் இவர்க்குமுன்
கூறு சேனைப் பதி கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன்'என்று ஓதினான். 4.12.3

இனிச் செய்வன சிந்திக்க என இராமன் கூறல்

என்று உரைத்த எரிகதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால்
நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான். 4.12.4

சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறுதல் (4557-4561)

அவனும் அண்ணல் அனுமனை'ஐய! நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை; ஓர்கிலை தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ? 4.12.5

'ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். 4.12.6

'தனெ் திசைக்கண் இராவணன் சேண்நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம்;
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்றிசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ? 4.12.7

'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது
தெள்ளியோய்! "அது தனெ் திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு " என உன்னுவாய். 4.12.8

'தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல்
வீரர் யாவரும் மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும்' திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால். 4.12.9

பிற திசைகளில் சுடேணனன் முதலியோரை அனுப்புதல்

'குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு'உற்றுப் படர்க எனப் பன்னினான். 4.12.10

சுடேணனன் முதலியோர்க்கும் சுக்கிரீவன் கட்டளை

'வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒரு மதி
முற்று உறாத முன் முற்றுதிர் இவ் இடை;
கொற்ற வாகையினீர்!'எனக் கூறினான். 4.12.11

சுக்கிரீவன் தனெ் திசையில் செல்வோர்க்கு வழி கூறல் (4564-4584)

விந்தமலை

'ஈண்டு நின்று எழுந்து ஈர் ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடுமுடி தோன்றலால்
நீண்ட நேமி கொல் ஆம் என நேர் தொழ
வேண்டும் விந்த மலையினை மேவுவீர். 4.12.12

நருமதையாறு

'தேடி அவ் வரை தீர்ந்தபின் தேவரும்
ஆடுகின்றது அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது பல மணி ஆல் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர். 4.12.13

ஏமகூடமலை

'வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் களி இசைக் கள்ளினால்
தூம மேனி அசுணம் துயில்வு உறும்
ஏம கூடம் எனும் மலை எய்துவீர். 4.12.14

வடபெண்ணை

'நொய்தின் அம்மலை நீங்கி நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணைக் கரிய பெண்ணைச் சில
வைகல் தேடிக் கடிது வழிக் கொள்வீர். 4.12.15

தண்டகம்

'தாங்கும் ஆர் அகில் தருவளர் சந்தனம்
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல் என
நீங்கி நாடு நெடியன பிற்படத்
தேங்கு வார்புனல் தண்டகம் சேர்திரால். 4.12.16

முண்டகத்துறை (4569-4571)

பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
தண்டகத்தது தாபதர் தம்மை உள்
கண்டு அகத்துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத் துறை என்று ஒரு மொய் பொழில். 4.12.17

ஞாலம் நுங்குற நல் அறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம்பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால். 4.12.18

'நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ்வழி;
சயன மாதர் கலவித் தலைத் தரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால். 4.12.19

பாண்டுவின் மலை

'ஆண்டு இறந்தபின் அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது; செங்கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம்'என்பது
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம். 4.12.20

கோதாவரி

முத்து ஈர்த்துப் பொன் திரட்டி மணி உருட்டி,
முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து, மலை ஈர்த்து
மான் ஈர்த்து வருவது; யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு
உதவுவது; புனிதம் ஆன
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்;
அம்மலையின் அருகிற்று அம்மா! 4.12.21

சுவண நதி

அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
எனத் தெளிந்த அருளின் ஆறும்,
வெவ் ஆறு ஆம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா
வகை இலங்கும் விரிபூஞ் சோலை,
எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட மணி
இமைப்பது, இமையோர் வேண்ட,
தெவ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த
சுவணத்தைச் சேர்திர் மாதோ. 4.12.22

சந்திரகாந்தம், கொங்கவை, குலிந்தம்

சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம்
என்னத் தோன்றி, மாதர்
கவண் உமிழ்கல் வெயில் இயங்கும் கனவரையும்,
சந்திர காந்தகமும், காண்டீர்
அவண் அவை நீத்து ஏகியபின், அகல்நாடு பல
கடந்தால், அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும்,
குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ. 4.12.23

அருந்ததி மலை

"அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன் "
என்று உரைக்கும் அறிவு இலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த்
தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால். 4.12.24

அஞ்சுவரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்
பெருஞ் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வளநாடும்,
பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
நஞ்சு வரும் மிடற்று அரவுக்கு, அமிழ்துநனி கொடுத்து
ஆயைக் கலுழன் நண்ணும்
எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி,
அதன் புறம் சார ஏகிர் மாதோ. 4.12.25

'வடசொற்கும் தனெ்சொற்கும் வரம்பிற்றாய்
நான்மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லையதாய்
நல் அறத்துக்கு ஈறாய் வேறு
புடை சுற்றுந் துணையின்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடத்தில்
சென்று அடைதிர் மாதோ. 4.12.26

'இருவினையும் இடைவிடா எவ் வினையும்,
இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடுபதம் தேர் சிறுமையையும்,
முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
"கருவினையது இப் பிறவிக்கு " என்று உணர்ந்து
அங்கு அது களையும் கடை இல் ஞானத்து
அருவினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்;
ஈண்டு இருந்தும் அடி வணங்கற் பாலார். 4.12.27

'தோதவத்தித் தூய்மறையோர் துறை ஆடும்
நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
மாதவத்தோர் உறைவிடனும், மழை உறங்கும்
மணித்தடனும், வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு
தொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும்
உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா. 4.12.28

'கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப்புறத்து
நீர் மேவு தொண்டை
நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர் அதன்
பின்னை நளிநீர்ப் பொன்னிச்
சேடு உறு தண்புனல் தயெ்வத் திருநதியின்
இருகரையும் தெரிதிர் மாதோ. 4.12.29

துறக்கம் உற்றார் மனம் என்னத் துறைகெழுநீர்
சோணாடு புகுந்தோர், தொல்லை
மறக்கம் உற்றார் அகம் மலர்ந்து மறைந்து உறைவர்;
அவ் வழி நீர் வல்லை ஏகி,
உறக்கம் உற்றார் கனவு உற்றார் என உணர்வினொடும்
ஒதுங்கி, மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலைநாடு நாடி, அகன்
தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. 4.12.30

தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்
தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான்
அம்மலையை இடத்திட்டு ஏகிப்,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திர மா
நெடுவரையும், கடலும், காண்டிர். 4.12.31

'ஆண்டு கடந்து, அலை உவரிக்கு அப்புறத்தும்
ஒரு திங்கள் அவதி ஆகத் தேண்டி,
இவண் வந்து அடைதிர்; விடை கோடிர்,
கடிது 'என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால்
உற நோக்கி,'நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி!'என,
வேறு கொண்டு இருந்து கழறல் உற்றான். 4.12.32

இராமன் சீதையின் அடையாளங்களை அனுமனுக்குக் கூறியது (4585-4617)

அடியின் அமைப்பு

பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தைப் பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி, விரகுற நிரைத்த, வெய்ய;
கால் தகை விரல்கள் ஐய! கமலமும் பிறவும் எல்லாம்
ஏற்பில என்பது அன்றி, இணை அடிக்கு உவமை உண்டோ? 4.12.33

புறவடி

நீ மெய்யா உணர்தி ஐய! நிரைவளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமையாக மதியறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போதும், அல்லன சொல்லினாலும்
யாம யாழ் மழலையாள் தன் புறவடிக்கு இழுக்கு மன்னோ. 4.12.34

கணைக்கால்

வினைவரால் அரிய கோதைப் பேதை மென் கணைக்கால், மெய்யே
நினைவரால் அரிய; இன்னும் நேர்படப் புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம், நெல் சினை யேனும் செப்பம்;
எனைவரால் பகரும் ஈட்டம், யான் உரைத்து இன்பம் என்னோ? 4.12.35

தொடை

அரம்பை என்று, அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த போது, மற்று உரை வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்தம் நாறும் நறவையும், நல்நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள், கவாற்கு இது கருது கண்டாய். 4.12.36

அல்குல்

'வார் ஆழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தார் ஆழிக் கலைசார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய்!
பார் ஆழி பிடரில் தங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா உனக்கு நான் உரைப்பது என்னோ.' 4.12.37
இடை

'சட்டகம் தன்னை நோக்கி, யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டிடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்,
கட்டுரைத்து உவமை காட்ட, கண் பொறி கதுவா; கையில்
தொட்ட எற்கு உணரலாம்; மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.' 4.12.38

வயிறு

'ஆல் இலை, படிவம் தீட்டும் ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக் கண்ணடி, பலவும் இன்ன,
போலும் என்று உரைத்த போதும், புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலா; இது, வயிற்று இயற்கை; இன்னும்.' 4.12.39

உந்தி

'சிங்கல் இல் சிறு கூதாளி, நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொதுமைத்து ஆமால்;
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி எனக் கணித்தது உண்டால்;
கங்கையை நோக்கிச் சேறி கடலினும் நெடிது கற்றோய்!' 4.12.40

வயிற்றிடை மயிரொழுங்கு

மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால், வல்லி சேர் வயிற்றில்; மற்று என்
உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க வேண்டின்,
செயிர் இல் சிற்றிடையாய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீரக்
குயில் உறுத்து அமைய வைத்த கொள் கொம்பு என்று உணர்ந்து கோடி. 4.12.41

வயிற்று மடிப்பு

"அல்லி ஊன்றிடும் " என்று அஞ்சி, அரவிந்தம் துறந்தாட்கு, அம்பொன்
வல்லி மூன்று உளவால், கோல வயிற்றில்; மற்று அவையும், மார
வில்லி, மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய வாம் வெற்றி வரையெனத் தோன்றும் அன்றே.' 4.12.42

கொங்கை

'செப்பு என்பென்; கலசம் என்பென்; செவ் இள நீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள் சூது என்பென்; சொல்லுவென் தும்பிக் கொம்பும்;
தப்பு இன்றிப் பகலின் வந்த சக்கர வாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் முலைக்குக் காணேன், பல நினைந்து உலைவென் இன்னும்.' 4.12.43

தோள்

'கரும்பு கண்டாலும் மாலைக் காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர்வது அன்றி வேறு அறிவது உண்டோ?
கரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம், எனக்கு இலை; இசைப்பது என்னோ?' 4.12.44

முன்கை

"முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு, மூன்று உலகத்துள்ளும் "
என் கையே இழுக்கம் அன்றே? இயம்பினும், காந்தள் என்றல்,
வன் கை யாழ் மணிக் கை என்றல், மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தடக்கை ஆமோ? நலத்தின்மேல் நலமும் உண்டோ?' 4.12.45

அகங்கை

ஏலக் கொண்டு அமைந்த பிண்டி இளந்தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர் குழை, நறுங் கமல மென்பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால், கைக்கு ஒப்பு வைக்கலாமோ? 4.12.46

நகம்

வெள்ளிய முறுவல், செவ்வாய், விளங்கு இழை இளம் பொன் கொம்பின்
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு அற வகுக்கலாமோ?
"எள்ளுதிர் நீரே மூக்கை " என்று கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள், முருக்கின் பூவைக் கிழிக்கு மேல், உரைக்கலாமோ? 4.12.47

கழுத்து

அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையு மாபோல்,
செங்களி சிதறி, நீலம் செருக்கிய தயெ்வ வாள் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கி, வளர் இளங் கமுகும், வாரிச்
சங்கமும், நினைதி யாயின், நவை என்று துணிதி தக்கோய்! 4.12.48

வாயிதழ் (4601-4602)

'பவளமும், கிடையும், கொவ்வைப் பழனும், பைங் குமுதப் பூவும்,
துவள்வில இலவம், கோபம், முருக்கு என்று இத் தொடக்கம் சாலத்
தவளம்'என்று உரைக்கும் வண்ணம் சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
குவளை உண்கண்ணி வண்ண வாய் அது; குறியும் அஃதே. 4.12.49

'சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை; தேன் இல்லை உள என்றாலும்,
கவர்ந்தபோது அன்றி, உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா;
பவர்ந்த வாள் நுதலினாள்தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்தபோது, உவந்த வண்ணம் உரைத்தபோது, உரைத்தது ஆமோ?' 4.12.50

பல்

'முல்லையும், முருந்தும், முத்தும் முறுவல் என்று உரைத்தபோது,
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்கத் தோன்றும்,
அல்லது ஒன்று ஆவது இல்லை; அமிழ்திற்கும் உவமை உண்டோ?
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய்! 4.12.51

மூக்கு

ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதிசெய் பொன்னும் மின்னும் மணியும்போல் துளங்கித் தோன்றா;
ஏதுவும் இல்லை; வல்லோர் எழுதுவோர்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி நீயே நினைதியால், நெடிது காண்பாய்! 4.12.52

காது

'வள்ளை கத்தரிகை வாம மயிர்வினைக் கருவி, என்ன,
பிள்ளைகள் உரைப்பது அல்லால் பெரியவர் உரைக்கின் பித்தாம்;
வெள்ளிவெண் தோடு செய்த விழுத்தவம் விளைந்தது என்றே
உள்ளுதி காதை; அல்லால், உவமைக்கும், உவமை உண்டோ? 4.12.53

கண்

பெரியவாய்ப் பரவை ஒவ்வா; பிறிது ஒன்று நினைந்து பேச
அரியவாய், ஒருவர் உள்ளத்து அடங்குவ அல்ல; உண்மை
தரெிய ஆயிரம் கால் நோக்கின் தரெிவில; தயெ்வம் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும் வாள்தடங் கண்கள் அம்மா. 4.12.54

புருவம்

கேள் ஒக்கின் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமால்;
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒப்பக் கூறிற்று ஆமோ?
வாள் ஒக்கும் வடி கணாள் தன் புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை, அநங்க சாபம். 4.12.55

நல்நாளும் நளினம் நாணும் நளிர் அடி நுதலை நாடிப்,
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி,
முன்நாளின் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி,
எந் நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமால். 4.12.56

அளகம்

வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னை?
அனையன எனினும் அந்த அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
வினை செயக் குழன்ற அல்ல; விதிசெய விளைந்த; நீலம்
புனைமணி அளகம் என்றும் புதுமையாம்; உவமை பூணா. 4.12.57

முகம்

'கொண்டலின் குழவி, ஆம்பல், குனிசிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக் கேண்மைய கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று வைத்தனன், விதியே; நீ அப்
புண்டரீகத்தை உற்ற பொழுது அது பொருந்தி ஓர்வாய்' 4.12.58

கூந்தல்

'காரினைக் கழித்துக் கட்டி, கள்ளினோடு ஆவி ஊட்டி,
பேர் இருள் பிழம்பு தோய்த்து, நெறிவு உறீஇப் பிறங்குகற்றைச்
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா!
நேர்மையைப், பருமை செய்த நிறைநறுங் கூந்தல் நீத்தம். 4.12.59

'புல் இதழ் கமலத் தயெ்வப் பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம் களங்கம், என்று உரைக்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றிப் பிறிது உண்டு அன்றால்.' 4.12.60

'மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாசப்
பங்கயத் தவட்கும் ஐயா! நிரம்பல; பற்றி நோக்கின்
செங்கயல் கருங்கண் செவ்வாய்த் தேவரும் வணங்கும் தயெ்வக்
கொங்கை அக்குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே. 4.12.61

சொல்

'குழல் படைத்து யாழைச் செய்து குயிலொடு கிளியும் கூட்டி,
மழலையும் பிறவும் தந்து வடித்த கைம்மலரின் மேலான்,
இழைபொரும் இடையினாள் தன் இன்சொற்கள் இயையச் செய்தான்;
பிழையிலது உவமை காட்டப் பெற்றிலன்; பெறும் கொல் இன்னும்?' 4.12.62

'வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்த வேனும்,
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை;
மீன் நின்ற கண்ணினாள்தன் மென்மொழிக்கு உவமை வேண்டின்,
தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ? அவை செவிக்கு இன்பம் செய்யா,' 4.12.63

நடை

'பூ வரும் மழலை அன்னம், புனை மடப் பிடி, என்று இன்ன,
தேவரும் மருளத் தக்க செலவின எனினும் தேறேன்;
பாவரும் கிழமைத் தொன்மைப் பருணிதர் தொடுத்த, பத்தி
நாவரும் கிளவிச் செவ்வி நடைவரு நடையள் நல்லோய்!' 4.12.64

நிறம்

'எந்நிறம் உரைக்கேன்? மாவின் இளநிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால், மணிநிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்; மலர்நிறம் சமழ்க்கும் அன்றே!' 4.12.65

உவமையற்றவளே சீதை

"மங்கையர் அவளை ஒப்பார் மற்று உளர் அல்லர் " என்னும்
சங்கையில் உள்ளந் தானே சான்று எனக் கொண்டு சான்றோய்!
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
திங்கள் வாள் முகத்தினாட்குச் செப்பு எனப் பின்னும் செப்பும். 4.12.66

சீதைக்குக் கூறவேண்டிய அடையாளச் செய்திகள்

'முன்னை நாள் முனியொடும் முதிய நீர் மிதிலைவாய்ச்
சென்னிநீள் மாலையான் வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அக்
கன்னி மாடத்திடைக் கண்டதும் கழறுவாய். 4.12.67

"வரை செய்தாள் வில் இறுத்தவன் அ மாமுனியொடும்
விரசினான் அல்லனேல் விடுவல்யான் உயிர்" எனக்
கரைசெயா வேலையிற் பெரிய கற்பினள் தரெிந்து
உரை செய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரை செய்வாய்.' 4.12.68

'சூழி மால் யானையின் துணை மருப்பு இணை எனக்
கேழ் இலா வனமுலைக் கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங் கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரச அவை கண்டதும் அறைகுவாய். 4.12.69

"முன்புநான் அறிகிலா முனிநெடுங் கானிலே,
என்பினே போதுவான் நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ?" என்றதும், சொல்லுவாய்.' 4.12.70

"ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய்; உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ? இனி" எனா
மீன் உலாம் நெடுமலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து,
ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும் உரை செய்வாய்.' 4.12.71

'மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி கடை கடந்திடுதல் முன்,
"எல்லை தீர்வு அரிய வெங்கானம் யாதோ " எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.' 4.12.72

இராமன் மோதிரம் அளிக்கப்பெற்று அனுமன் போதல

'இனையவாறு உரைசெயா,'இனிதின் ஏகுதி'எனா,
வனையும் மாமணி நல் மோதிரம் அளித்து,'அறிஞ! நின்
வினை எலாம் முடிக!'எனா விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான் அருெளாடும், போயினான்.' 4.12.73

அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவராம்
வெங்கதத் தலைவரும் விரிகடல் படையொடும்,
பொங்குவில் தலைவரைத் தொழுது, முன்போயினார்
செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். 4.12.74
-------------

Rama: göttliche Gegenwart inmitten menschlicher Erfahrungen.

Die bildlichen Darstellungen begleiten die Lektüre; sie sind keine Abbildungen einzelner Verse.

4.13 – Eintritt in die Höhle und Befreiung

4.13 பிலம் புக்கு நீங்கு படலம் 4627 - 4699

போயினார்; போயபின் புறந் நெடும் திசைகள்தோறு
ஏயினான் இரவி காதலனும்; ஏயின பொருட்கு
ஆயினார் அவரும்; அங்கு அன்னநாள் அவதியில்
தாயினார் உலகினைத் தகைநெடுந் தானையார். 4.13.1

குன்று இசைத்தன எனக் குலவுதோள் வலியினார்
மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய்
வன்திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழ் உடைத்
தனெ் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரை செய்வாம். 4.13.2

விந்திய மலையில் தேடுதல் (4629-4632)

சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு
இந்து யாறு எய்தலான் இறைவன் மா மௌலி நேர்
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால். 4.13.3

அந் நெடுங் குன்றமோடு அவிர் மணிச் சிகரமும்
பொன்நெடுங் கொடுமுடிப் புரைகளும் புக்குமுன்
நல்நெடுந் தோகையை நாடினார் நவை இலார்
பல் நெடுங் காலம் ஆம் என்னா ஓர் பகல் இடை. 4.13.4

மல்லல் மாஞாலம் ஓர் மறு உறா வகையின் அச்
சில் அல் ஓதியை இருந் துறைவிடம் தேடினார்
புல்லினார் உலகினைப் பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆடுமாறு ஏகினார். 4.13.5

விண்டு போய் இழிவ மேல் நிமிர்வ விண்படர்வ வேர்
உண்ட மாமரனின் அம்மலையின்வாய் உறையுநீர்
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினோர்
கண்டிலாதன அயன் கண்டிலாதன கொலாம். 4.13.6

நருமதையாற்றை அடைந்து தேடுதல் (4633-4636)

ஏகினார் ஓசனை ஏழ் ஒடு ஏழு; பார்
சேகரத் தனெ்திசைக் கடிது செல்கின்றார்
மேக மாலையினொடும் விரவி மேதியின்
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார். 4.13.7

அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர்
முன்னி ஆடு இடங்களும் சுரும்பு மூசுதேன்
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார். 4.13.8

பெறல் அருந் தரெிவையை நாடும் பெற்றியார்
அறல் நறுங் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறைநறுந் தாமரை முகமும் நித்தில
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார். 4.13.9

செருமத யாக்கையர் திருக்கு இல் சிந்தையர்
தரும தயாவினைத் தழுவும் தன்மையர்
பொரு மதயானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆகிய நதியும் நீங்கினார். 4.13.10

ஏமகூட மலை அடைதலும் அம்மலையின் சிறப்பும் (4637-4641)

தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம
நாம கூடப் பெருந்திசையை நல்கிய
வாம கூடச் சுடர்மணி வயங்குறும்
ஏமகூடத் தடம் கிரியை எய்தினார். 4.13.11

மாடு உறு கிரிகளும் மறனும் மற்றவும்
சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப்
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது;
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது. 4.13.12

பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து
உறைவன கனகம் நுண் தூளி ஒட்டலால்
நிறைநெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய்ப்
புறம்நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது. 4.13.13

பரவிய கனகநுண் பராகம் பாடு உற
எரிசுடர்ச் செம்மணி ஈட்டத்து ஊடு வீழ்
அருவியும் நதிகளும் அலங்கு தீ இடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது. 4.13.14

விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள்வளைப்
பஞ்சின்மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின்
மஞ்சு இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது. 4.13.15

அம்மலையை வானரர் இராவணன் இடம் என அயிர்த்தல் (4642-4644)

அனையது நோக்கினார்'ஆம்; இது ஆம் அயில்
வினையினன் இராவணன் இருக்கும் வெற்பு'எனும்
நினைவினர் உவந்து உவந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிகக் கனல்பொறி சிந்தும் செங்கணார். 4.13.16

'இம்மலை காணுதும் ஏழை மானை அச்
செம்மலை நீக்குதும் சிந்தைத் தீது'என
விம்மல் உற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அம்மலை ஏறினார் அச்சம் நீங்கினார். 4.13.17

இரிந்தன கரிகளும் யாளி ஈட்டமும்
விரிந்த கோளரிகளும் வெருவி நீங்கின
திரிந்தனர் எங்கணும் திருவைக் காண்கிலார்
பரிந்தன சிந்தனை பரிகின்றாம் என. 4.13.18

சீதையைக் காணாராய் இறங்குதல்

ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று
உம்பரைத் தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய
செம்பொன் நல்கிரியை ஓர் பகலில் தேடினார்;
கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார். 4.13.19

அங்கதன் முதலியோர், சீதையைத் தேடுமாறு சேனையைத் தனியே அனுப்புதல்

வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையைத்
'தெள்ளுநீர் உலகு எலாம் திரிந்து தேடி நீர்
எள் அரும் மகேந்திரத்து எம்மில் கூடும்'என்று
உள்ளினார் உயர்நெடும் ஓங்கல் நீங்கினார். 4.13.20

அனுமன் முதலியோர் ஒரு சுரத்தை அடைதல்

மாருதி முதலிய வயிரத் தோள் வயப்
போர்கெழு வீரரே குழுமிப் போகின்றார்;
நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தைத் துன்னினார். 4.13.21

சுரத்தின் வெம்மை

புள் அடையா; விலங்கு அரிது; புல்லொடும்
கள் உடை மரன் இல; கல்லும் தீந்து உகும்;
உள்ளிடை யாவும் நுண் பொடியொடு ஓடிய
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது 4.13.22

சுரத்தில் வானரர் படும் அல்லல் (4649-4650)

நல் புலன் நடுக்குற உணர்வு நாம் உறப்
பொன்பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார்
தனெ்புலம் தங்கு எரி நரகில் சிந்திய
என்பு இல்பல் உயிர் என வெம்மை எய்தினார். 4.13.23

நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டு தோறு
ஊட்டிய வெம்மையால் உலையுங் காலினர்;
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார். 4.13.24

வானரர் பிலத்தில் புகுதல் (4651-4653)

ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவில் பீழையார்
பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார் பல
விதங்களால் நெடும்பில வழியின் மேவினார். 4.13.25

'மீச் செலவு அரிது : இனி விளியின் அல்லது;
தீச் செலவு ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய்ச் செலல் நன்று'என மனத்தின் எண்ணினார்;
'போய்ச் சில அறிதும்'என்று அதனில் புக்கனர். 4.13.26

அக்கணத்து அப் பிலத்து அகணி எய்தினார்
திக்கினோடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள்
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏம் உறப்
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார். 4.13.27

வானரர் இருளில் வருந்துதல்

எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்;
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள்
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார். 4.13.28

வானரர் தம்மைக் காக்குமாறு அனுமனை வேண்டல்

நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர்
பொன்றினம் யாம் எனப் பொருமு புந்தியார்
'வன்திறல் மாருதி! வல்லையோ எமை
இன்று இது காக்க?'என்று இரந்து கூறினார். 4.13.29

'உய்வுறுத்துவென் மனம் உலையிர்; ஊழின் வால்
மெய் உறப் பற்றுதிர்; விடுகிலீர்'ஏன
ஐயன் அக்கணத்தினில் அகலும் நீள்நெறி
கையினில் தடவி வெங்காலின் ஏகினான். 4.13.30

பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்,
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இடத்,
துன் இருள் தொலைந்திடத் துரிதத்து ஏகினான்
பொன் நெடுங் கிரிகள் போல் பொலிந்த தோளினான். 4.13.31

வானரர் அங்கு ஒரு நகரைக் காணுதல்

கண்டனர் கடிநகர் கமலத்து ஒண்கதிர்
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது;
விண்தலம் நாணுற விளங்குகின்றது;
புண்டரிகத்தவள் வதனம் போன்றது. 4.13.32

அந் நகரின் சிறப்பு (4659-68)

கற்பகக் கானது; கமலக் காடது;
பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது;
அற்புதம் அமரரும் எய்தலாவது;
சிற்பியாம் மயன் மனம் வருந்திச் செய்தது. 4.13.33

இந்திர நகரமும் இணை இலாதது;
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து எழுசுடர் அவை இன்று ஆயினும்
உந்தரும் இருள் துரந்து ஒளிர நிற்பது. 4.13.34

புவிபுகழ் சென்னி பேர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனை எனக் கனக ராசியும்
சவி உடைத் தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழைக் குப்பையும் அளவு இலாதது. 4.13.35

பயில்குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்பு உடை மைந்தர்கள் இயக்கு இலாமையால்
துயிலவும் நோக்கவும் துணையது அன்றியே
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது. 4.13.36

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ்நிகர் நறவமும் தனித்தண் தேறலும்
இமிழ்கனிப் பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வு உற துவன்றிய கணக்கு இல் கொட்பது. 4.13.37

வானரர் அந்நகரத்துப் புகுதல்

கன்னிநெடு மாநகரம் அன்னது எதிர்கண்டார்;
'இந்நகரம் ஆம் இகல் இராவணனது ஊர்'என்று
உன்னி உரை ஆடினர் உவந்தனர் வியந்தார்
பொன்னின் நெடு வாயில் அதன் ஊடு இனிது புக்கார். 4.13.38

அந்நகரத்தின் தன்மை (4665-4666)

புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்;
மக்கள்கடை தேவர்தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எக்குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார். 4.13.39

வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும்
காவும் உள; காவி விழியார்கள்மொழி என்னக்
கூவும் இளமென் குயில்கள் பூவை கிளி கோலத்
தூவிமட அன்னம் இவை உள்ள சுவடு இல்லை. 4.13.40

அந்நகரைப் பற்றி வானரர் பல எண்ணித் திகைத்தல் (4667-4668)

ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்;
'மாயை கொல்'எனக் கருதி மற்றும் நினைவு உற்றார்
'தீய பிலனுள் பிறவி சென்ற இது அன்றோ
தூயது துறக்கம்?'என நெஞ்சு துணிவு உற்றார். 4.13.41

"இறந்திலம்; இதற்குரியது எண்ணியிலம், ஏதும்
மறந்திலம்; அயிர்ப்பினொடு இமைப்பு உளம்; மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய செய்த பிழை இன்றால்;
திறம் தரெிவது என்?" என இசைத்தனர் திகைத்தார். 4.13.42

சாம்பன் கலங்கிக் கூறுதல்

சாம்பன் அவன் ஒன்று உரை செய்வான்,'எழுசலத்தால்,
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன்,
நாம் புக அமைத்த பொறி நன்று; முடிவு இன்றால்;
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும்'என்றான். 4.13.43

அனுமன் கூறும் ஆறுதல் மொழி

'இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்;
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்கக்
கொன்று எழுதும்; அஞ்சல்'என மாருதி கொதித்தான். 4.13.44

நகர நடுவில் சுயம்பிரபையைக் காணுதல்

மற்றவரும் மற்று அது மனக்கொள வலித்தார்;
உற்றனர் புரத்தின் இடை; ஒள் சுடரின் உள் ஓர்
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றைவிரி பொன் சடையினாளை எதிர் கண்டார். 4.13.45

சுயம்பிரபையின் தோற்றம் (4672-4676)

மருங்கு அலச வற்கலை வரிந்து வரிவாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசப்
பெருங் கலை மதித்திரு முகத்த பிறழ் செங்கேழ்
கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண. 4.13.46

தேர் அனைய அல்குல் செறிதிண் கதலி செப்பும்
ஊருவின் ஒடுங்கு உற ஒடுக்கி உற ஒல்கும்
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கைப்
பாரம் உள் ஒடுக்கு உற உயிர்ப்பு இடை பரிப்ப. 4.13.47

தாமரை மலர்க்கு உவமை சால்வுறு தளிர்க்கை
பூமருவு பொன் செறி குறங்கு இடை பொருந்த
காமம் முதல் உற்ற பகை கால்தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல. 4.13.48

நெறிந்துநிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றது தலத்தின் நெறி செல்லப்
பறிந்து வினை பற்று அற மனப் பெரிய பாசம்
பிறிந்து பெயரக் கருணை கண்வழி பிறங்க. 4.13.49

சுயம்பிரபையைச் சீதையோ என ஐயுறல்

இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா
அருந்ததி எனத்தகைய சீதை அவள் ஆகப்
பரிந்தனர்; பதைத்தனர்; பணித்த குறி, பண்பின்
தரெிந்து உணர்தி; மற்று இவள் கொல் தேவி?'எனலோடும். 4.13.50

அனுமன் கூறுகின்றான்

'எக்குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்?
இக் குறியுடைக் கொடி இராமன் மனையாேளா?
அக்கு வடம் முத்தம் மணி ஆரம் அதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும்'என மாருதி உரைத்தான். 4.13.51

சுயம்பிரபை வானரரை யார் என வினவுதல்

அன்ன பொழுதின்கண் அவ் அணங்கும் அறிவுற்றாள்;
முன் அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்;
'துன் அரிய பொன் நகரியின் உறைவிர் அல்லீர்;
என்ன வரவு? யாவர்? உரைசெய்க' என இசைத்தாள். 4.13.52

வானரர் கூறுகின்றனர்

'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்;
சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று
ஏதம் இல் அறத்துறை நிறுத்திய இராமன்
தூதர் உலகில் திரிதும்'என்னும் உரை சொன்னார். 4.13.53

சுயம்பிரபையின் மகிழ்ச்சி

என்றலும்; இருந்தவள் எழுந்தனள் இரங்கிக்
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்;
'நன்று வரவு ஆக! நடனம்புரிவல்'என்னா
நின்றனள்; நெடுங்கண் இணை நீர் கலுழி கொள்ள. 4.13.54

சுயம்பிரபை வினாவும் அனுமன் விடையும்

'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச்
செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும்,
அவ் உழை நிகழ்ந்ததனை ஆதியினோடு அந்தம்,
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான். 4.13.55

சுயம்பிரபை வானரர்க்கு விருந்தளித்தல்

கேட்டு அவளும்,'என்னுடைய கேடு இல் தவம் இன்னே
காட்டியது வீடு!'என விரும்பி நனி கால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள். 4.13.56

அனுமன் வினவச் சுயம்பிரபை தன் வரலாறு கூறுதல் (4683-4690)

மாருதியும் மற்று அவள் மலர்ச் சரண் வணங்கி
யார் இ(ந்) நகருக்கு இறைவர்? யாதுநின் இயல் பேர்?
'பார்புகழ் தவத்தினை! பணித்து அருளுக'என்றான்;
சோர்குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள். 4.13.57

'நூல் முகம் நுனித்த நெறி நூறுவர நொய்தா
மேல் முகம் நிமிர்த்து வெயில் காலொடு விழுங்கா
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ(ம்) மாநகரம் நல்லோய். 4.13.58

'அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர்,
நல் நுதலினாள் முலை நயந்தனன்; அ(ந்)நல்லாள்
என் உயிர் அனாள்; அவளை யான், அவன் இரப்ப,
பொன் உலகில் நின்று, ஒளிர் பிலத்திடை புணர்த்தேன்.' 4.13.59

'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழைபோகத்து
உணர்ந்திலர், நெடும்பகல் இம் மாநகர் உறைந்தார்;
கணம் குழையினாெளாடு உயர்காதல் ஒருவாது உற்று,
இணங்கிவரு பாசம் உடையேன் உடன் இருந்தேன்.' 4.13.60

'இருந்து, பல நாள் கழியும் எல்லையினில், வல்லோய்!
திருந்து இழையை நாடிவரு தேவர் இறை சீறிப்,
பெருந் திறலினானை உயிர் உண்டு, "பிழை " என்று, அம்
முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான்.' 4.13.61

'முனிந்து அவளை, "உற்ற செயல் முற்றும் மொழிக " என்ன,
கனிந்த துவர் வாயவளும் என்னை, இவள் கண்ணா
வனைந்து முடிவு உற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து'இவண் இருத்தி நகர் காவல் நினது'என்றான்.' 4.13.62

என்றலும்; வணங்கி,'இருள் ஏகும் நெறி எந்நாள்?
ஒன்று, உரை, எனக்கு முடிவு" என்று உரை செயாமுன்,
"வன்திறல வானரம் இராமன் அருள் வந்தால்
அன்று முடிவு ஆகும் இடர்" என்று, அவன் அகன்றான். 4.13.63

'உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ?
வண்ண மணி ஆடை உள; மற்றும் உள பெற்றேன்;
அண்ணல்! அவை விட்டு உமை அடைந்திடுதல் வேண்டி
எண் அரிய பல்பகல் இருந்தவம் இழைத்தேன். 4.13.64

'ஐ இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா!
மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்;
உய்யும் நெறி உண்டு, உதவுவீர் எனின்; உபாயம்
செய்யும் வகை சிந்தையில் நினைத்திர், சிறிது'என்றாள். 4.13.65

அனுமனின் மறுமொழி

அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும்
மன்னுபுலன் வென்றுவரும் மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி,'நனி வானவர்கள் சேரும்
பொன் உலகம் ஈகுவல், நினக்கு'எனல் புகன்றான். 4.13.66

அவ்வாறே செய்ய அனுமனை வானரரும் வேண்டல்

'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப்
பிழைத்து உயிர் உயிர்க்க அருள்செய்த பெரியோனே!
இழைத்தி செயலாய வினை'என்றனர் இரந்தார்;
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான். 4.13.67

அனுமன் பேருருக் கொண்டு பிலத்தைப் பிளத்தல் (4694-4696)

'நடுங்கன்மின்'எனும் சொலை நவின்று, நகை நாற
மடங்கலின் எழுந்து, மழை ஏறு அரிய வானத்து
ஒடுங்கலில் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற
நெடுங்கைகள் பெயர்த்து, நெடுவான் உற நிமிர்ந்தான். 4.13.68

எருத்து உயர் சுடர்ப்புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இப்படி இடந்து உற வளர்ந்தான்;
கருத்து நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க
உருத்து உலகு எடுத்த கருமாவினையும் ஒத்தான். 4.13.69

மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும்
தூ வடிவுடைச் சுடர் கொள் விண்தலை தொளைக்கும்
மூ அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான்
பூ வடிவுடைப் பொருவு இல் சேவடி புரைந்தான். 4.13.70

அனுமன், பிலத்தின் மேற்பகுதியை மேல் கடலில் எறிதல்

ஏழ் இருபது ஓசனை இடந்து படியின் மேல்
ஊழ் உற எழுந்ததனை உம்பரும் ஒடுங்கப்
பாழிநெடு வன் பிலனுள் நின்று படர் மேல்பால்
ஆழியில் எறிந்து அனுமன் மேகம் என ஆர்த்தான். 4.13.71

சுயம்பிரபை பொன்னுலகம் போதல்

இன்றும் அது மேல்கடல் இயக்கு இல் பில தீவா
நின்று நிலை பெற்று உளது; நீள் நுதலியோடும்
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார்;
பொன்திணி விசும்பின் இடை நல் நுதலி போனாள். 4.13.72

வானரர் ஒரு பொய்கைக் கரையை அடைதல்

மாருதி வலித்தகையை பேசி மறவோரும்
பார் இடை நடந்து பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடை நெடுந்தகையும் மேலைமலை சென்றான். 4.13.73
----------

4.14 – Die weitere Suche

4.14. ஆறு செல் படலம் 4700 - 4754

பொய்கையை அடைந்த வானரர் கனியும் காயும் தேனும் உண்டு உறங்கத் துமிரன் என்னும் அசுரன் அங்கே வருதல்

கண்டார் பொய்கைக் கண் அகல் நல் நீர்க்கரை; காமுற்று
உண்டார் தேனும் ஒண் கனி காயும், ஒரு சூழல்
கொண்டார் அன்றே இன் துயில்; கொண்ட குறி உன்னித்
தண்டா வென்றித் தானவன் வந்தான் தகவு இல்லான். 4.14.1

துமிரன் உருவத் தோற்றமும் ஆற்றலும் (4701-4703)

மலையே போல்வான்; மா கடல் ஒப்பான்; மறம் முற்றக்
கொலையே செய்வான்; கூற்றை நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான், நீர்மை இலாதான்; நிமிர் திங்கள்
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான். 4.14.2

கருவி மா மழை கைகள் தாவி மீது
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால்
பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால்
அருவி பாய்தரும் குன்றமே அனான். 4.14..3

வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ? 4.14..4

துமிரன் உறங்குகின்ற வானரரை அடைதல்

பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான்
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால்
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான். 4.14..5

துமிரன் அங்கதன் மார்பில் அடித்தல்

'பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர்
எய்தினார்கள் யார்? இது எனோ?'எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான்; காலனே அனான். 4.14..6

அங்கதன் மோதத் துமிரன் இறத்தல்

மற்று அம் மைந்தனும் உறக்கம் மாறினான்
'இற்று இவன் கொல் ஆம் இலங்கை வேந்து'எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர்க்கு அந்தம் முற்றினான். 4.14..7

துமிரன் அலறி விழுதலும் வானரர் துயில் நீங்கி எழுதலும்

இடி உண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து
அடி உண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும்
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார்
பிடி உண்டார் எனத் துயிலும் பெற்றியார். 4.14..8

அனுமன் வினாவும் அங்கதன் விடையும்

'யார்? கொல் ஆம் இவன்; இழைத்தது என்?'எனாத்
தாரை சேயினைத் தனி வினாயினான்
மாருதேயன்; மற்று அவனும்'வாய்மை சால்
ஆரியா! தரெிந்து அறிகிலேன்'என்றான். 4.14..9

சாம்பவான் துமிரன் வரலாறு கூறல்

'யான் இவன் தனைத் தரெிய எண்ணினேன்
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே
ரான்; இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன்'எனச் சாம்பன் சாற்றினான். 4.14..10

சூரியனுதித்தலும் வானரர் சீதையைத் தேடிச் செல்லுதலும்

'வேறும் எய்துவார் உளர்கொல்? ஆம் எனாத்
தேறி இன்துயில் செலவு தீர்ந்து உளார்
வீறு செஞ்சுடர்க் கடவுள் வேலைவாய்
நாற நாள் மலர்ப் பெண்ணை நாடுவார். 4.14..11

வானரர் பெண்ணையாற்றை அடைதல்

புள் நை வெம் முலைப் புளினம் ஏய் தடம் அத்து
உண்ண ஆம்பல் இன் அமுதம் ஊறு வாய்
வண்ண வெள் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார். 4.14.12

பெண்ணையாற்றைச் சார்ந்த இடங்களில் வானரர் சீதையைத் தேடுதல்

துறையும் தோகை நின்று ஆடு சூழலும்
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்ச்
சிறையும் தெள்ளு பூந்தடமும் தணெ் பளிக்கு
அறையும் தேடினார் அறிவின் நீடினார். 4.1413

வானர வீரர் பெண்ணையாற்றின் கரையில் தங்குதல்

அணி கொழித்து வந்து எவரும் ஆடினார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன்
துணி கொழித்து அரும் சுழிகள்தோறும் நன்
மணி கொழிப்பதன் கரையின் வைகினார். 4.14.14

வானரர் பெண்ணையாறு கடந்து காடும் மலையும் தேடித் தசார்ண நாடடைதல்

ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார்; நவையின் நண்ணலார். 4.14.15

வானரர் விதர்ப்ப நாடடைந்து சீதையைத் தேடுதல் (4715-4716)

தச நவப் பெயர்ச் சரள சண்பகத்து
அசந அப்புலத்து அகணி நாடு ஒரீஇ
உசநவப் பெயர்க் கவி உதித்த பேர்
இசை விதர்ப்பநாடு எளிதின் எய்தினார். 4.14.16

வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
பெய் தருப்பம் நூல் பிறழும் மேனியார்
செய் தவத்துளார் வடிவின் தேடினார். 4.14..17

வானரர் தண்டகவனம் புகுதல்

அன்ன தன்மையால் அறிஞர் நாடி; அச்
செந்நெல் வேலி சூழ் திரு நல்நாடு ஒரீஇத்
தன்னை எண்ணும் அத்தகை புகுந்துளார்
துன்னு தண்டகம் கடிது துன்னினார். 4.14..18

வானரர் தண்டக வனத்தில் தேடி முண்டகத்துறை யடைதல்

உண்டு அகத்துள் ஆய் உறையும் ஐம்பொறிக்
கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார்
தண்டகத்தையும் தடவி ஏகினார்
முண்டகத் துறை கடிது முற்றினார். 4.14..19

முண்டகத்துறைப் பெருமை (4719-4721)

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளைமா முலைக் கலவை கோதையில்
கள்ளும் நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா; புலவு தீர்தலால். 4.14..20

குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால்
விஞ்சை மன்னர்பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலால்
அஞ்சுவார் கண்நீர் அருவி ஆறு அரோ. 4.14..21

கமுக வார் நெடுங் கனக ஊசலில்
குமுத வாயினார் குயிலை ஏசுவார்
சமுக வாளியும் தனுவும வாழ் முகத்து
அமுத பாடலார் மருவி யாடுவார். 4.14..22

வானர வீரர் முண்டகத்துறையில் சீதையைத் தேடி நீங்குதல்

இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்
வினைய வார்குழல் திருவை மேவலார்
புனையும் நோயினார் கடிது போயினார். 4.14..23

வானர வீரர் பாண்டு மலையினை அடைதல்

நீண்ட மேனியான் நெடிய தாளின் நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம்
பாண்டு அம் மலைப் படர் விசும்பினைத்
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார். 4.14..24

பாண்டு மலையின் தோற்றம்

இருள் உறுத்து மீது எழுந்த தெள்நிலா
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால்
அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல்
உருள் உறுத்து திண் கயிலை ஒத்ததால். 4.14..25

பாண்டு மலையில் தேடிச் சீதையைக் காணாது வானர வீரர் வருந்துதல்

விண் உற நிவந்த சோதி வெள்ளி அம் குன்றம் மேவிக்
கண் உற நோக்கல் உற்றார், களி உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ்வாய்ப் படை உறு நோக்கினாளை,
எண் உறு திறத்தும் காணார், இடர் உறும் மனத்தர் எய்த்தார். 4.14..26

வானர வீரர் கோதாவரியாற்றை அடைதல்

ஊதை போல் விசையின் வெம் கண் உழுவைபோல் வயவர், ஓங்கல்
ஆதியை அகன்று செல்வார், அரக்கனால் வஞ்சிப்பு உண்ட
சீதை போகின்றாள் கூந்தல் வழீ இவந்து, புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினைக் குறுகிச் சென்றார். 4.14..27

கோதாவரியாற்றின் தோற்றம் (4727-4728)

எழுகின்ற திரையிற்றாகி இழிகின்ற மணி நீர் யாறு,
தொழுகின்ற சனகன், வேள்வி தொடங்கிய, சுருதிச் சொல்லால்
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி, ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் எனப் பொலிந்தது அன்றே. 4.14..28

ஆசு இல் பேர் உலகில், காண்போர் அளவை நூல் எனலும் ஆகிக்
காசொடு கனகம் தூவிக் கவின் உறக் கிடந்த கான் யாறு,
ஏசு போர் அரக்கன் மார்பின் இடைபறித்து, எருவை வேந்தன்
வீசிய வடக மீக்கோள் ஈது என விளங்கிற்று அன்றே. 4.14..29

கோதாவரிச் சூழலில் சீதாபிராட்டியைக் காணாமையால் வானர வீரர் சுவணகத் துறையில் புகுதல்

அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை யாண்டும்
சந்நிதி உற்றிலாதார், நெடிது பின்தவிரச் சென்றார்
இன்னது ஈது, இலாதது ஈது என்று யாவையும் எண்ணும் கோளார்,
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார். 4.14..30

சுவணகத் துறையிலும் குலிந்த தேசத்திலும் தேடி நீங்குதல்

சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்று புள்ளும்
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கிப்
பெரும் புனல் மருதம் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்கச் சென்றார்,
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக் குலிந்தமும் புறத்துக் கொண்டார். 4.14..31

கொங்கணம் முதலியவற்றைக் கடந்து அருந்ததி மலையினை அடைதல்

கொங்கணம் ஏழும் நீங்கிக் குடகடல் தரளக் குப்பைச்
சங்கு அணி பானல் நெய்தல் தண்புனல் தவிர ஏகித்
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத் தேவர்
அம் கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார். 4.14..32

அருந்ததி மலையையும் மரகத மலையையும் தேடிக் கடந்து வேங்கட மலை யடைதல்

அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார், ஏகினார், இடையர் மாதர்
பெருந் ததிக்கு அருந்தேன் மாறும் மரகதப் பெருங்குன்று எய்தி
இருந்து அதில் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை. 4.14..33

திருவேங்கட மலையின் பெருமை (4733-4735)

முனைவரும் மறை வ(ல்)லோரும் முந்நைநாட் சிந்தை மூண்ட
வினைவரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர்
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
அனைவரும் அருவி நல்நீர் நாளும் வந்து ஆடுகின்றார். 4.14..34

பெய்த ஐம்பொறியும் பெருங் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள்கணின்
எய்த வஞ்சக வாளியும் எண் அறச்
செய்தவம் பல செய்குநர் தேவரால். 4.14..35

வலம் கொள் நேமி மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன; மெய் நெறி
புலம் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ? 4.14..36

வானர வீரர் வேங்கட மலையில் முனிவரை வணங்குதல்

ஆய குன்றினை எய்தி அருந்தவம்
மேய செல்வரை மேயினர் மெய்ந்நெறி
நாயகன்தனை நாளும் வணங்கிய
தூயர் நல் மலர்ப் பாதங்கள் சூடினார். 4.14..37

வானர வீரர் வேங்கடம் நீங்கித் தொண்டை நாட்டிற் புகுதல்

சூடி ஆண்டு அச் சுரிகுழல் தோகையைத்
தேடி வார்புனல் தணெ் திரைத் தண்டக
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினர்; வேண்டு உரு மேவுவார். 4.14..38

தொண்டை நாட்டின் பெருமை (4738-4745)

குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர்
முன்றில் சூழ்ந்த படப்பையும் மொய் புனல்
சென்று சூழ்ந்த கிடக்கையும் தணெ் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம். 4.14..39

சூல் அடிப் பலவின் தலை தூங்கு தேன்
கோல் அடிப்ப வெரீஇக் குல மள்ளர் ஏர்ச்
சால் அடித்தரும் சாலியின் வெண்முளை
தோல் அடிக் கிளை அன்னம் துவைப்பன. 4.14..40

செருகு உறும் கணில் தேம் குவளைக் குலம்
அருகு உறங்கும் வயல் மருங்கு; ஆய்ச்சியர்
இரு குறங்கும் பிறங்கின வாழையில்
குருகு உறங்கும்; குயிலும் துயிலுமால். 4.14..41

தெருவின் ஆர்ப்பு உறும் பல்லியம் தேர் மயில்
கருவிமா மழை என்று களிப்பு உறா;
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா
மருவினார்க்கு மயக்கம் உண்டாகுமே? 4.14..42

தேரை வன் தலைத் தஙெ்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன்தலைத் தண் இள ஆம்பலைச்
சேரை என்று புலம்புவ தேரையே. 4.14..43

நள்ளி வாங்கு கடை இள நவ்வியர்
வெள்ளி வால் வளை வீசிய வெண்மணி
அள்ளி'நாரை சினை பொரியாத'என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால். 4.14..44

சேட்டு இளங் கடுவன் சிறு புன்கையின்
கோட்ட தேம் பலவின் கனிக் கூன்சுளை
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்குதேன்
ஈட்டம் என்னச் சென்று ஈ இனம் மொய்ப்பன. 4.14..45

செல்வர் என்றும் வடக்கு கலை தறெ்கு தமிழ்
சொல் வரம்பினர் என்றும் சுளி படக்
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அவ்
இல் வரம்பின் தகைத் தனெும் மீட்டதே. 4.14..46

வானர வீரர் தண்டகநாடு கடந்து சோழநாடு அடைதல்

அன்ன தண்டகநாடு கடந்து அகன்
பொன்னிநாடு பொரு இலர் எய்தினார்
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார். 4.14..47

சோழநாட்டு வளம்

கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரைவாழ்
தடறு தாங்கிய கூன் இளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்பு உடைத் தீம் கனி
இடறுவார் நறுந்தேனின் இழுக்குவார். 4.14..48

குழுவு மீன் வளர் குட்டம் எனக் கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பேந்திரத்து
ஒழுகு சாற்று அகன் கூனையில் ஊழ்முறை
முழுகி நீர்க் கருங் காக்கை முளைக்குமே. 4.14..49

பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
மீன் நெருங்குறும் வெள்ளம் என வெரீஇ
வானரங்கள் மரங்களின் வைகுமால். 4.14..50

தாறு நாறுவ வாழைகள்; தாழையின்
சோறு நாறுவ; தூங்குறும் மாங்கனி
நாறு நாறுவ; நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ. 4.14..51

சோழநாடும் மலைநாடுங் கடந்த வானர வீரர் பாண்டியநாடு அடைதல்

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ
மனையின் மாட்சி குலாம் மலைமண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்
இனிய தனெ் தமிழ்நாடு சென்று எய்தினார். 4.14..52

பாண்டிய நாட்டுச் சிறப்பு

அத் திருத்தகு நாட்டினை அண்டர் நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ?
எத்திறத்தினும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ? 4.14..53

தனெ்றமிழ்நாட்டிற் சீதையைத் தேடிக் காணாது வருந்திய
வானர வீரர் மகேந்திரமலையை அடைதல் (4753-4754)

என்ற தனெ் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடித் திரிந்து திருந்தினார்
பொன்றுவாரில் பொருந்தினர் போயினார்
துன்று அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார். 4.14..54

வன் திசைக் களிறு அன்ன மகேந்திரக்
குன்று இசைத்தது வல்லையிற் கூடினார்
தனெ் திசைக் கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடுநெறி நீங்கினார். 4.14..55
----------------------

4.15 – Sampati

4. 15 சம்பாதிப் படலம் 4755- 4817

வானர வீரர் தனெ்கடலைக் காணுதல்

மழைத்த விண்ணகம் என முழங்கி, வான் உற
இழைத்த வெண் திரைக் கரம் எடுத்து,'இலங்கையாள்
உழைத் தடம் கண்ணி'என்று, உரைத்திட்டு ஊழின் வந்து
அழைப்பதே கடுக்கும் அவ் ஆழி நோக்கினார். 4.15.1

ஏமகூடத்திற் பிரிந்த படைகளும் வந்து அங்கதன் முதலிய வானர வீரரொடு சேர்தல்

விரிந்து'நீர் எண் திசை மேவி நாடினீர்
பொருந்துதிர் மயேந்திரத்து'என்று போக்கிய
அருந்துணைக் கவிகளாம் அளவு இல் சேனையும்
பெருந்திரைக் கடல் எனப் பெயர்த்தும் கூடிற்றே. 4.15.2

வானரர் சீதையைக் காணாமையால் வருந்திக் கூறுதல் (4757-4759)

யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்
பூ வரு புரி குழல் பொரு இல் கற்பு உடைத்
தேவியைக் காண்கிலார் செய்வது ஓர்கிலார்
நா உறக் குழறிட நவில்கின்றார் அரோ. 4.15.3

'அற்றது சொன்ன நாள் அவதி; காட்சியும்
உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்;
கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்;
இற்றது நம் செயல் இனி'என்று எண்ணினார். 4.15.4

அருந்தவம் புரிதுமோ? அன்னது அன்று எனின்
மருந்து அரு நெடுங்கடு உண்டு மாய்துமோ?
திருந்தியது யாது? அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார். 4.15.5

அங்கதன் உடன்வந்தவரிடம் கூறுதல் (4760-4763)

கரை பொரு கடல் அயல் கனகம் மால் வரை
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு
'உரை செயும் பொருள் உளது'என உணர்த்தினான்;
அரசிளங் கோளரி அயரும் சிந்தையான். 4.15.6

'நாடினம் கொணருதும் நளினத்தாளை வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி'என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம் பழியின் மூழ்கினேம். 4.15.7

"செய்தும்'என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம்
'எய்தும் வந்து'என்பது ஓர் இறையும் கண்டிலம்
'உய்தும்'என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ?" 4.15.8

'எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச்செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை; நுணங்கு கேள்வியீர்!
புந்தியின் உற்றது புகல்திர் ஆம்'என்றான். 4.15.9

சாம்பவான் அங்கதனிடம் கூறுதல் (4764-4765)

'விழுமியது உரைத்தனை; விசயம் வீற்றிருந்து,
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்!
அழுதுமோ? இருந்து நம் அன்பு பாழ்படத்
தொழுதுமோ சென்று?'எனச் சாம்பன் சொல்லினான். 4.15.10

'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்?
மாண்டுறுவது நலம்'என மதித்தனம்;
ஆண் தகை அரசிளங்குமர! அன்னது
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால். 4.15.11

சாம்பவான் மாற்றம் கேட்ட அங்கதன் மீட்டும் கூறுதல் (4766-4769)

என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய்
குன்று உறழ்ந்து என வளர் குவவுத் தோளினீர்!
பொன்றி நீர் மடிய யான் போவனேல் அது
நன்றதோ? உலகமும் நயக்கற் பாலதோ? 4.15.12

"சான்றவர் பழி உரைக்கு அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதரப் போந்துளான் " என
ஆன்ற பேர் உலகு உேளார் அறைதல் முன்னம் யான்
வான் தொடர்குவென்'என மறித்தும் கூறுவான். 4.15.13

எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
சொல்லவும் கூடும்; கேட்டால் துஞ்சவும் அடுக்கும்; கண்ட
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம்; அச்சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ? பரதன் மற்றோர். 4.15.14

பரதனும் பின் உேளானும் பயந்து எடுத்தவரும் ஊரும்
சரதமே முடிவர், கெட்டேன்! சனகி என்று உலகம் சாற்றும்
விரத மாதவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும்
கரை தரெிவு இலாத துன்பம் விளைந்த; ஆ எனக் கலுழ்ந்தான். 4.15.15

சாம்பவான் அங்கதனை நோக்கி மீட்டும் கூறல் (4770-4772)

பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்,
தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்பரும் தகைத்தது ஆய
நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு,
விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன். 4.15.16

நீயும் நின் தாதையும் நீங்க நின் குலத்
தாயம் வந்தவர்க்கு ஒரு தனையர் இல்லையால்;
ஆயது கருதினம்; அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலற் பாலதோ? 4.15.17

"ஏகு நீ; அவ் வழி எய்தி இவ்வழித்
தோகையைக் கண்டிலா வகையும் சொல்லி எம்
சாகையும் உணர்த்துதி; தவிர்தி சோகம்; போர்
வாகையாய்! " என்றனன் வரம்பு இல் ஆற்றலான். 4.15.18

அனுமன் கூறுதல் (4773-4775)

அவன் அவை உரைத்தபின் அனுமன் செப்புவான்
'புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்
கவனம் மாண்டவர் எனக் கருத்து இலார் எனத்
தவன வேகத்தினீர்! சலித்திரோ? என்றான். 4.15.19

பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
பொன் வரைக் குடுமியில் புறத்துள் அண்டத்தில்
நல் நுதல் தேவியைக் காண்டும் நாம் எனில்
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமோ. 4.15.20

'நாடுதலே நலம் இன்னும் நாடி அத்
தோடு அலர் குழலி தன் துயரில் சென்று அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம் அல்லது பழியிற்றாம்'என்றான். 4.15.21

சம்பாதி வானர வீரரை நெருங்குதல்

என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன்
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன்
குன்று என நடந்து அவர்க் குறுகல் மேயினான். 4.15.22

சடாயு இறந்தமை தரெிந்த சம்பாதியின் நிலை (4777-4780)

முறை உடை எம்பியார் முடிந்தவாறு எனாப்
பறையிடும் நெஞ்சினன் பதைக்கும் மேனியன்
இறை உடைக் குலிச வேல் எறிதலால் முனம்
சிறை அறு மலை எனச் செல்லும் செய்கையான். 4.15.23

'மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சினப்
படை உளர் ஆயினார் பாரில் யார்?'எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உகக்
கடலினைப் புரையுறும் அருவிக் கண்ணினான். 4.15.24

உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினால்
மழுங்கிய நெடுங்கணின் வழங்கும் மாரியான்
அழும் குரல் முழக்கினான் அவனி ஆறு என
முழங்கிவந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான். 4.15.25

வள்ளியும் மரங்களும் மலையும் மண் உறத்
தெள்ளும் நுண் பொடி படக் கடிது செல்கின்றான்
தள்ளுவன் கால் பொரத் தரணியில் தவழ்
வெள்ளி அம் பெருமலை பொருவும் மேனியான். 4.15.26

சம்பாதி நெருங்கக் கண்ட அனுமன் செயல்

எய்தினன்; இருந்தவர் இரியல் போயினார்;
ஐயன் அம் மாருதி அழலும் கண்ணினான்
'கைதவ நிசிசர கள்ள வேடத்தை
உய்தி கொல் இனி'என உருத்து முன் நின்றான். 4.15.27

அனுமான் சம்பாதியைக் குற்றமற்றவனென்று குறிகளால் அறிதல்

வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன்
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்
சங்கையிற் சழக்கு இலன் என்னும் தன்மையை
இங்கித வகையினால் எய்த நோக்கினான். 4.15.28

சம்பாதி, சடாயுவைக் கொன்றவர் யார்? என வினவுதல்

நோக்கினன் நின்றனன்; நுணங்கு கேள்வியான்
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன்
'தாக்க அரும் சடாயுவைத் தருக்கினால் உயிர்
நீக்கினர் யார்? அது நிரப்புவீர்'என்றான். 4.15.29

அனுமான் வினவச் சம்பாதி தன்னை அறிவித்தல் (4784-4785)

'உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றது
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்று ஆகுமால்'
என்ன மாருதி எதிர் எருவை வேந்தனும்
தன்னை ஆம் தன்மையைச் சாற்றல் மேயினான். 4.15.30

மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்!
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத? என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன்பு இறந்தேன் என முடியக் கூறினான். 4.15.31

அனுமான் சடாயு இறந்தவாறு கூறுதல்

கூறிய வாசகம் கேட்ட கோது இலான்
ஊறிய துன்பத்தின் உவரி உள் புகா
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன்
வீறிய வாள் இடை விளிந்த ஆறு எலாம். 4.15.32

சடாயு இறந்தது அறிந்து சம்பாதி இரங்குதல் (4787-4791)

அவ்வுரை கேட்டலும் அசனி ஏற்றினால்
தவ்விய கிரி எனத் தரையின் வீழ்ந்தனன்
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான்
இவ் உரை இவ் உரை எடுத்து இயம்பினான். 4.15.33

இளையா நீள் சிறகு இன்றி வெந்து உகத்
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால்
வளையா நேமியன் வன்மைசால் வலிக்கு
இளையானே! இது என்ன மாயமோ? 4.15.34

மலரோன் நின்றுளன்; மண்ணும் விண்ணும் உண்டு;
உலையா நீடு அறம் இன்னும் உண்டு; அரோ
நிலையார் கற்பமும் நின்றது; இன்று நீ
இலையானாய்; இது என்ன தன்மையோ? 4.15.35

உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்
திடு அந் நாள்வந்து இருவோம் உேளாம் எனை
விட நீயே தனி சென்ற வீரமும்
கடனோ எம் கலுழற்கும் மேன்மையாய். 4.15.36

ஒன்றா மூன்று உலகத்துேளாரையும்
வென்றான் என்னினும் வீர! நிற்கு நேர்
நின்றானே? அவ் அரக்கன் நின்னையும்
கொன்றானே? இது என்ன கொள்கையோ? 4.15.37

அனுமான் சம்பாதியைத் தேற்றுதல் சம்பாதி வினவுதலும் அனுமன் பதிலும் (4792-4796)

என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால்
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு
ஒன்றும் சொல்கொடு உணர்ச்சி நல்கினான்;
வன் திண் தோள் வரை அன்ன மாருதி. 4.15.38

சம்பாதி வினவுதலும் அனுமன் பதிலும் (4793-4796)

தேற்றத் தேறி இருந்த செங்கணான்
'கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு
ஏற்றுப் போர் செய்தது என் நிமித்து'என
காற்றின் சேய் அது கட்டுரைக்குமால். 4.15.39

எம் கோமான் அவ் இராமன் இல் உளாள்
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள்
வெம்கோல் வஞ்சன் விளைத்த மாயையால்
தம் கோனைப் பிரிவுற்ற தன்மையாள். 4.15.40

கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனைக்
கண்டான் உம்பி அறம் கடக்கலான்
'வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு'எனாத்
திண் தேரானொடு எதிர்ந்து சீறினான். 4.15.41

'சீறித் தீயவன் ஏறு தேரையும்
கீறித் தோள்கள் கிழித்து அழித்தபின்
தேறித் தேவர்கள் தேவன் தயெ்வ வாள்
வீறப் பொன்றினன் மெய்ம்மையோன்'என்றான். 4.15.42

சம்பாதி சடாயுவைப் பாராட்டுதல் (4797-4799)

விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய்!
தெளித்து ஆடத்தகு தீர்த்தன்மாட்டு உயிர்
அளித்தானே! அது நன்று! நன்று!! எனாக்
களித்தான்; வாரி கரந்த கண்ணினான். 4.15.43

பைந் தார் எங்கள் இராமன் பத்தினி
செந்தாள் வஞ்சி திறத்து இறந்தவன்
மைந்து ஆர் எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான்; அல்லது உலந்தது உண்மையோ? 4.15.44

அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவற்கு
இறவு என்னாம்? அதின் இன்பம் யாவதோ? 4.15.45

சம்பாதி சடாயுவுக்கு நீர்க்கடன் செய்து வானர வீரரை நோக்கிக் கூறுதல் (4800-4802)

என்று என்று ஏங்கி இரங்கி ஈர்ம்புனல்
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்தபின்
வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தார் அவர்க்கு இன்ன சொல்லினான். 4.15.46

வாழ்வித்தீர் எனை மைந்தர்! வந்து நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்க்
கேள்வித் தீவினை கீறினீர் இருள்
போழ்வித்தீர்; உரை பொய்யின் நீங்கினீர். 4.15.47

'எல்லீரும் அவ் இராம நாமமே
சொல்லீர்; சொல்ல எனக்கு ஓர் சோர்வு இலா
நல் ஈரப் பயன் நண்ணும்; நல்ல சொல்
வல்லீர்! வாய்மை வளர்க்கும் மாண்பினீர் 4.15.48

வானரர் இராமநாமம் சொல்லச் சம்பாதி சிறை வளர்தல் (4803-4804)

என்றான்;'அன்னது காண்டும் யாம்'எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான்
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார்;
வன் தோளான் சிறை வானம் தாயவே. 4.15.49

சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான்
முறைபெற்று ஆம் உலகு எங்கும் மூடினான்;
நிறைபெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனலாம் உறுப்பினான். 4.15.50

இராமநாமத்தால் சம்பாதிக்குச் சிறகு முளைக்கக் கண்ட வானரர் வியத்தல்

தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார்
வெருண்டார் சிந்தை வியந்து விம்முவார். 4.15.51

வானரர் வேண்டச் சம்பாதி தன் முன்னை வரலாறு கூறுதல் (4806-4811)

அன்னானைக் கடிது அஞ்சலித்து'நீ
முன்னாள் உற்றது முற்றும் ஓது'எனச்
சொன்னார்; சொற்றது சிந்தை தோய்வு உற
தன்னால் உற்றது தான் விளம்புவான். 4.15.52

தாய் எனத் தகைய நண்பீர்! சம்பாதி சடாயு என்பேம்,
சேய் ஒளிச் சேண் செல் நோக்கின் கழுகினுக்கு அரசு செய்வேம்
பாய் திரைப் பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின்
ஆய் கதிர்க் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர். 4.15.53

ஆய் உயர்'உம்பர் நாடு காண்டும்'என்று அறிவு தள்ள
மீ உயர் விசும்பின் ஊடு மேக்கு உறச் செல்லும் வேலை,
காய் கதிர்க் கடவுள் தேரைக் கண்ணுற்றேம்; கண்ணுறாமுன்
தீயையும் தீக்கும் தயெ்வச் செங்கதிர்ச் செல்வன் சீற, 4.15.54

முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை,
'எந்தை! நீ காத்தி'என்றான்; யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென், மறைத்தலோடும் மற்று அவன் மறையப் போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிந்திலாதேன். 4.15.55

மண்ணிடை விழுந்த என்னை வான் இடை வயங்கும் வள்ளல்
கண்ணிடை நோக்கி உற்ற கருணையன்,'சனகன் காதல்
பெண் இடை ஈட்டின் வந்த வானரர், இராமன் பேரை
எண் இடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி'என்றான். 4.15.56

'எம்பியும் இடரின் வீழ்ந்தான், ஏயது மறுக்க அஞ்சி
அம்பரத்து இயங்கும் யாணர்க் கழுகினுக்கு அரசன் ஆனான்;
நம்பிமீர்! ஈது எம் தன்மை; நீர் இவண் நடந்த வாற்றை
உம்பரும் உவக்கத் தக்கீர்! உணர்த்துமின் உணர'என்றான். 4.15.57

வானரர் சீதையைத் தேடிவந்தமை சொல்லச் சம்பாதி கூறுதல் (4812-4817)

என்றலும், இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி, "எந்தாய்!
புன் தொழில் அரக்கன், மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான்,
தனெ் திசை" என்ன உன்னித் தேடி நாம் வருதும்'என்றார்;
'நன்று; நீர் வருந்தல் வேண்டா; நான் அது நவில்வன்'என்றான். 4.15.58

பாகு ஒன்று குதலையாளைப் பாதக அரக்கன், பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்; புக்கனன் இலங்கை, புக்கு
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அகத்து வைத்தான்;
ஏகுமின், காண்டிர்; ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும். 4.15.59

ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அவ் ஊர்,
பாச வெம் கரத்துக் கூற்றும் கண் புலம் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ் அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு; நீங்கள்
ஏசு அறு குணத்தீர்! சேறல் எப் பரிசு இயைவது? என்றான். 4.15.60

நால் முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகம் அத்து அண்ணல்
பால் முகப் பரவைப் பள்ளிப் பாம்பு அணை பரன் என்றாலும்,
காலினுக் கேயும் சேறல் அரிது; இது காவல் தன்மை
மேல் உமக்கு உறுவது எண்ணிச் செல்லுமின் விளிவு இலாதீர். 4.15.61

எல்லீரும் சேறல் என்பது எளிதன்று அவ் இலங்கை மூதூர்
வல்லீரேல் ஒருவர் ஏகி, மறைந்து அவண் ஒழுகி, வாய்மைச்
சொல்லீரே! துயரை நீக்கித் தோகையைத் தரெுட்டி, மீடிர்;
அல்லீரேல், என் சொல் தேறி உணர்த்துமின் அழகற்கு அம்மா. 4.15.62

'காக்குநர் இன்மையால் அக் கழுகு இனம் முழுதும் கன்றிச்
சேக்கை விட்டு இரியல் போகித் தரெுமரும்; அதனைத் தீர்க்கப்
போக்கு எனக்கு அடுத்த; நண்பீர்! நல்லது புரிமின்; என்னா
மேக்கு உற விசையின் சென்றான்; சிறையினால் விசும்பு போர்ப்பான். 4.15.63
-------------

4.16 – Der Mahendra-Berg

4.16 மயேந்திரப் படலம் (4818- 4846)

'பொய் உரை செய்யான் புள் அரசு' என்றே புகலுற்றார்,
'கை உறை நெல்லித் தன்மையின் எல்லாம் கரை கண்டாம்,
உய் உரை பெற்றாம், நல்லவை எல்லாம் உற எண்ணிச்
செய்யுமின் ஒன்றோ, செய்வதை நொய்தின் செயவல்லீர்.' 4.16.1

'மாள வலித்தேம்; என்றும் இம் மாளா வசையோடும்
மீளவும் உற்றேம்; அன்னவை தீரும் வெளி பெற்றேம்;
காள நிறத்தோடு ஒப்பவர் மாயக் கடல் தாவுற்று
ஆளும் நலத்தீர்! ஆளுமின் எம் ஆர் உயிர் அம்மா!' 4.16.2

'சூரியன் வெற்றிக் காதலனோடும் சுடர் வில் கை
ஆரியனைச் சென்றே தொழுது; உற்றது அறைகிற்பின்
சீரியது அன்று; தேருதல் கொற்றச் செயல் அம்மா!
வாரி கடப்போர் யாவர்?'எனத் தம் வலி சொல்வார். 4.16.3

'வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஓர் அடி வைத்துப் பொலிபோழ்து, யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர, மேரு
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர்!' 4.16.4

'ஆதலின், இப்பேர் ஆர்கலி குப்புற்று, அகழ் இஞ்சி
மீது கடந்து, அத் தீயவர் உட்கும் வினையோடும்
சீதை தனைத் தேர்ந்து, இங்கு உடன் மீளும் திறன் இன்று'என்று
ஓதி இறுத்தான், நாலு முகத்தான் உதவுற்றான். 4.16.5

நீலன் முதல் பேர் போர்கெழு கொற்ற நெடுவீரர்
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை;
'வேலை கடப்பென், மீளமிடுக்கு இன்று'என விட்டான்,
வாலி அளிக்கும் வீர வயப்போர் வசை இல்லான். 4.16.6

'யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து, இங்கு இனி யாரைப்
போம் என வைப்போம் என்பது புன்மை; புகழ் அன்றே;
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்றக் குமரா! நம்
நாமம் நிறுத்திப் பேர் இசை தைக்கும் நவை இல்லோன்." 4.16.7

'ஆரியன் முன்னர்ப் போதுற உற்ற அதனானும்,
காரியம் எண்ணிச் சோர்வு அற முற்றும் கடனானும்
மாருதி ஒப்பார் வேறு இலை' என்னா, அயன் மைந்தன்,
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான், இவை செப்பும். 4.16.8

'மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகைநாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர்; நுவல்தக்கீர்;
காலனும் அஞ்சும் காய்சின மொய்ம்பீர்; கடன் நின்றீர்;
ஆலம் நுகர்ந்தான் ஆம் என வெம்போர் அடர்கிற்பீர்.' 4.16.9

'வெப்புறு செந்தீ நீர் வளியாலும் விளியாதீர்;
செப்புறு தயெ்வப் பல் படையாலும் சிதையாதீர்;
ஒப்பு உறின், ஒப்பார் நும் அலது இல்லீர்; ஒருகாலே
குப்புறின், அண்டத்து அப்புறமேயும் குதிகொள்வீர்.' 4.16.10

'நல்லவும் ஒன்றோ, தீயவும் நாடி, நவைதீரச்
சொல்லவும் வல்லீர்; காரியம் நீரே துணிகிற்பீர்;
வெல்லவும் வல்லீர், மீளவும் வல்லீர்; மிடல் உண்டேல்
கொல்லவும் வல்லீர்; தோள்வலி என்றும் குறையாதீர்.' 4.16.11

'மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்;
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்;
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர்; பழி அற்றீர்;
சூரியனைச் சென்று ஒண் கை அகத்தும் தொடவல்லீர்.' 4.16.12

'அறிந்து, திறத்து ஆறு எண்ணி, அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதிவல்லீர்;
பொறிந்து இமையாக்கோன் வச்சிர பாணம் புகமூழ்க
எறிந்துழி, இற்று ஓர் புன்மயிரேனும் இழவாதீர்.' 4.16.13

'போர் முன் எதிர்ந்தால் மூ உல கேனும் பொருள் ஆகா;
ஓர்வு இல் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்;
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன்,
தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தரெிவுற்றீர்.' 4.16.14

'நீதியின் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவானும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம்
ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும்
ஆதி அயன் தானே என யாதும் அறைகின்றீர்.' 4.16.15

'அண்ணல் அமைந்தாற்கு அன்பு சிறந்தீர்; அதனானே
கண்ணி உணர்ந்தீர் கருமம்; நுமக்கே கடன் என்னத்
திண்ணிது அமைந்தீர்; செய்து முடிப்பீர்; சிதைவு இன்றால்;
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.' 4.16.16

'அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல்; அமர் வந்தால்
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர்; மதி நாடித்
தொடங்கியது ஒன்றோ, முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ்வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர்.' 4.16.17

.'ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறை யாலும்
பாண்டிதர் நீரே; பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர்;
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்.' 4.16.18

'ஏகுமின்; ஏகி, எம் உயிர் நல்கி, இசை கொள்ளீர்;
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் உய்யும்படி செய்யீர்;
சாகரம் முற்றும தாவிடும் நீர் இக்கடல் தாவும்
வேகம் அமைந்தீர்'என்று விரிஞ்சன் மகன் விட்டான். 4.16.19

சாம்பன் இயம்பத் தாழ் வதனத் தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பான், அறிவாளன்,
கூம்பலொடும் சேர் கைக்கமலத்தன், குலம் எல்லாம்
ஏம்பல் வரத் தன் சிந்தை தரெிப்பான், இவை சொன்னான். 4.16.20

'நீயிரே நினைவின் முன்னே நெடுந்திரைப் பரவை ஏழும்
தாய், உலகு அனைத்தும் வென்று, தையலைத் தருதற்கு ஒத்தீர்;
"போய் இது புரிதி " என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினிர் என்னின், என்னின் பிறந்தவர் யாவர் இன்னும்?' 4.16.21

'இலங்கையை இடந்து வேரோடு இவ் வயின் தருக " என்றாலும்,
"விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறிப்
பொலங் குழை மயிலைக் கொண்டு போது" எனப் புகன்றிட்டாலும்,
கலங்கலிர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது, காண்டிர்.' 4.16.22

'ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளதாக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப, இருங் கடல் இனிது தாவி,
வாசவன் முதலோர் வந்து மலையினும், இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல், பின்னும்.' 4.16.23

'முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி, முந்நீர்
உற்றதே எனினும், அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்,
இற்றை நும் அருளும், எம் கோன் ஏவலும், இரண்டு பாலும்
கற்றைவார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டிர்.' 4.16.24

'ஈண்டு இனிது உறைமின், யானே எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல் காறும்; விடை தம்மின், விரைவின்'என்னா,
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த, அலர் மழை அமரர் தூவச்
சேண் தொடர் சிமயத் தயெ்வ மயேந்திரத்து உம்பர் சென்றான். 4.16.25

பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள்போல்,
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன், உவமை யாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தரெிய நின்றான். 4.16.26

பார்நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர்ப் பரிதி மைந்தன்
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்குத்
தார் நிழல் பரப்பும் தோளான், தடங்கடல் தாவா முன்னம்,
நீர் நிழல் உவரி தாவி இலங்கை மேல் செல்ல நின்றான். 4.16.27

பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி, ஊழின்
நெகு வாய சிகர கோடி நெரிவன தரெிய நின்றான்,
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான். 4.16.28

மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்பத்
தன் நெடும் தோற்றம் வானோர் கண் புலத்து எல்லை தாவ,
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம், அண்டம் தாங்கும்
பொன் நெடும் தூணின் பாத சிலை எனப் பொலிந்து நின்றான். 4.16.29
-------------------

கிட்கிந்தா காண்டம் முற்றிற்று

Sundara Kandam – Das Buch der Schönheit

Hanumans Weg nach Lanka verbindet Mut mit sorgfältiger Wahrnehmung. Seine Begegnung mit Sita lässt Hoffnung wachsen. Die folgenden Szenen zeigen unterschiedliche Seiten eines Dienstes, der vom Herzen ausgeht.

5.1 – Anrufung

5.1 கடவுள் வாழ்த்து படலம் 4847

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ' அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்! 5.1.1
---------

5.2 – Der Sprung über das Meer

5.2 கடல் தாவு படலம் 4848 – 4941

அநுமன் மகேந்திரத்துப் பேருருவோடு நின்ற நிலையில் துறக்க நாடு காண்டலும் கருதலும்

ஆண் தகை ஆண்டு அவ் வானோர் துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
'காண் தகு கொள்கை உம்பர் இல் 'எனக் கருத்துள் கொண்டான். 5.2.1

இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல்

'கண்டனென் இலங்கைமூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும்! 'என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான். 5.2.2

அநுமன் தாளால் அழுந்திய மகேந்திரத்து நிகழ்ந்தவை (4850-4859)

வன் தந்த வரிகொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற, நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான. 5.2.3

புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சிங்கம் பொங்கி,
உகல் அரும் குருதி கக்கி, உள் உற நெரிந்த; ஊழின்
அகல் அரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகிப்
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம். 5.2.4

மொய் உறு செவிகள் தாழ்ந்து முதுகு உற, முறை கால் தள்ள,
மை உறு விசும்பின் ஊடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய மெல் என் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் சுற்றிப் பிளிறின களிநல் யானை. 5.2.5

பொன்பிறழ் சிமையக் கோடு பொடி உறப், பொறியும் சிந்த,
மின்பிறழ் குடுமிக் குன்றம் வெரிந் உற நெரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா, கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கௌவி, வல்லியம் இரிந்த மாதோ! 5.2.6

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்தத்,
தூக்கு உறு தோலர், வாளர், துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்கு உறு செருவில் நேர்ந்தார் தாளற வீசத் தாவி,
மேக்கு உற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர்! 5.2.7

தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பார் இடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர்க் குவவுத் தோளான் கூம்பு எனக், குமிழி பொங்க,
ஆர்கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே! 5.2.8

தாது உகு நறு மென் சாந்தம், குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலம் தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி, அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீறிக் குருதி நீர் சொரிவது ஒத்த! 5.2.9

கடல் உறும் மத்து இது என்னக் கன வரை திரியும் காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த் தவர் விசும்பின் உற்றார்,
திடல் உறு கிரியில் தத்தம் செய்வினை முற்றி முற்றா
உடல் உறு பாசம் வீசா, உம்பர்ச் செல்வாரை ஒத்தார். 5.2.10

வெயில் இயல் குன்றம் கீறி வெடித்தலும், நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர்க்கை மாதர் தழீஇக் கொளப், பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித்தனிக் கடுத்தல் செய்தார்! 5.2.11

ஊறிய நறவும், உற்ற குற்றமும், உணர்வை உண்ணச்,
சீறிய மனத்தர், தெய்வ மடந்தையர், ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார், அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த பைங் கிளிக்கு இரங்குகின்றார். 5.2.12

அநுமன் கடல் கடக்க விரைதல்

இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும், முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், மணியும், தூவி,
'வித்தக! சேறி 'என்றார்; வீரனும் விரைவது ஆனான். 5.2.13

துணைவர் கூற்றும் தூயவன் இசைவும்

'குறு முனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை அல்லை; நீ சேறி! 'என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான். 5.2.14

அநுமன் தன் உறுப்புக்களைத் தொழிற்படுத்து மேலெழுதல் (4862-4863)

'இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்!
விலங்கவும் உளதன்று! 'என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித்துணை அழுத்தலோடும்,
பொலம் கெழு மலையும், தாளும், பூதலம் புக்க மாதோ! 5.2.15

வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோல் விசைத் தோள்கள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டும்
கால் விசைத் தடக்கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்,
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன். 5.2.16

அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4864-4869)

ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்
'நாயகன் பணி இது! 'என்னா, நளி கடல் இலங்கை தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான! 5.2.17

இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்
பசை உடை மரமும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறிகடல் இலங்கை சேரும்
விசை இல ஆகித் தாழ்ந்து வீழ்வன என்ன வீழ்ந்த! 5.2.18

மாவொடு, மரமும், மண்ணும், வல்லியும், மற்றும், எல்லாம்,
போவது புரிந்த வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின, கீழும் மேலும் தூர்த்தன, சுருதி அன்ன
சேவகன் சேரா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ! 5.2.19

கீண்டது வேலை நல் நீர், கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி, 'அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தன் ஆனேன் யான் 'எனக் களிப்புக் கொண்டான். 5.2.20

வெய்து, வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
'உய்தும் நாம் என்பது என்னே? உறுவலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் 'என்று எண்ணி, அலக்கண் உற்று, இரியல் போனார்! 5.2.21

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத், திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று, இலங்கை மேல் தவழ்ந்த மாதோ! 5.2.22

விசும்பில் விரைந்து செல்லும் அநுமன் தோற்றம் (4870-4878)

இடுக்கு உறு பொருள்கள் என்னாம்? எண்திசை சுமந்த யானை
நடுக்கு உற, விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்கு உறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந்நாள்,
முடுக்கு உறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியை ஒத்தான்! 5.2.23

கொட்பு உறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண் புலம் கதுவல் ஆகா வேகத்தான், கடலும், மண்ணும்
உள்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம் தான் அவ் இலங்கை மேல் போவது ஒத்தான்! 5.2.24

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
'அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! 'என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்! 5.2.25

மாணியாம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய், உலகுக்கு எல்லாம் அறப்பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடுநாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன் தன்னைக்
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான்! 5.2.26

மழை கிழித்து உதிர மீன்கள், மறி கடல் பாய, வானம்
குழைவு உறத், திசைகள் கீற, மேருவும் குலுங்கக், கோட்டின்
முழை உடைக் கிரிகள் முற்ற, முடுகுவான், முடிவு காலத்து
அழிவு உறக் கடுகும் வேகத் தாதையும் அனையன் ஆனான்! 5.2.27

தடக்கை நால் ஐந்து பத்துத் தலையொடும் உடையான் தானே,
அடக்கி ஐம்புலன்கள் வென்ற தவம் பயன் அறுதலாலே,
கெடக் குறியாகி, மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பருதி வானவனும் ஒத்தான்! 5.2.28

புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் போக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும் மாநகர் மனுவின் வந்த
திறத்தகை இராமன் என்னும் சேவகற் பற்றிச் செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான்! 5.2.29

கேழ் உலாம் முழு நிலாவில், கிளர் ஒளி இருளைக் கீறப்,
பாழி மா மேரு நாண, விசும்பு இடைப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழிநாள், வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான்! 5.2.30

அடல் எல் ஆம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்டக்,
குடல் எலாம் அவுணர் சிந்தக், குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்லச், சேண் விசும்பு ஒதுங்கு அத்தெய்வக்
கடல் எலாம் கடக்கத் தாவும், கலுழனும் அனையன் ஆனான்! 5.2.31

அநுமன் வேகம் கண்டு வானவர் வியத்தல்

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற, அடுக்கும் நாகர்
மேல் இல் மேல் நின்ற காறும் சென்ற கூலத்தன், 'விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்! 'என்று, வானவர் மருளச், சென்றான்! 5.2.32

அநுமன் வாலின் தோற்றம் (4880-4881)

விளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால், வேதம் எய்க்கும்
அளித் துப்பின் அநுமன் என்னும் அருந் துணை பெற்றதாயும்,
களித்துப் புன் தொழில் மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவர் என்ன
ஒளித்துப் பின்செல்லும் காலன் பாசத்தை ஒத்தது அன்றே! 5.2.33

மேருவை முழுதும் சூழ்ந்து, மீது உற்ற வேக நாகம்,
கார்நிறத்து அண்ணல் ஏவக் கலுழன் வந்து உற்ற காலைச்
சோர்வு உறும் மனத்த தாகிச், சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ்வால்! 5.2.34

அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4882-4884)

குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள் குரக்குச் சீயம்,
சென்று உறு வேகத் திண்கால் எறிதரத், தேவர் வைகும்
மின்தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி, மாக்கடல் உற்ற மாதோ! 5.2.35

வலங்கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது! 'ஏகுவான்தன் கருத்து என் கொல்? 'என்னும் கற்பால்;
'விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று! 'என்னா, இம்பர் நாடு இரிந்தது இப்பால்! 5.2.36

'ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்து உடைய! 'என்னத்,
தேசமும், நூலும், சொல்லும் திமிங்கில கிலங்கேளாடும்,
ஆசையை உற்ற வேலை கலங்க, அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின், வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்! 5.2.37

முன்னே நீட்டிய அநுமன் கைகளின் தோற்றம மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக்கை, தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப,
ஒருவு அரும் குணத்து வள்ளல், ஓர் உயிர்த் தம்பி, என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்தன, இரண்டு பாலும்! 5.2.38

மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

இந் நாகம் அன்னான், எறி கால் என ஏகும் வேலைத்,
திந்நாகம் மா வில் செறி கீழ்த்திசை காவல் செய்யும்
கைந் நாகம், அந்நாள் கடல் வந்தது ஒர் காட்சி தோன்ற
மைந்நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே! 5.2.39

மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள் உத்தரியத்தை ஒப்பத்,
தீயோர் உளராகியகால் அவர் தீமை தீர்ப்பான்,
மாயோன், மகரக் கடல்நின்று எழும் மாண்பது ஆகி! 5.2.40

நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனி ஆண்மை பொறாது நீங்கக்,
கால் ஆழ்ந்து அழுந்திக், கடல் புக்குழி, கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கும் நெடு மந்தர வெற்பு மானா! 5.2.41

தள்ளற்கு அரும் நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரும் நல் நிறம் எல்லை இலாது பொங்க,
வள்ளல் கடலைக் கெடநீக்கி, மருந்து வௌவி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசு ஏயும் ஒப்ப! 5.2.42

ஆன்று ஆழ் நெடு நீர் இடை ஆதியொடு அந்தம் ஆகித்
தோன்றாதுநின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும்
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் என்ன! 5.2.43

'இந்நீரில் என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி
செய்ந்நீர்மை செய்யேன்! 'எனச் சிந்தனை செய்து, நொய்தின்,
அந்நீரில் வந்த முதல் அந்தணன், ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கித், தவம் முற்றி, முளைத்தவா போல்! 5.2.44

பூவால் இடையூறு புகுந்து, பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட, வேலை குளித்த எல்லாம்,
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந்நாள்,
தேவ ஆசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன! 5.2.45

மைந்நாகம் எழுந்தகாலத்து நிகழ்ந்தவை (4893-4897)

நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த, நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம்பொன் ஏய்ந்த,
பிறங்கும் சிகரப் படர் முன்றில் தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர! 5.2.46

கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில்
தான் சூலநாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன்சூழ்வரும் அம் முழு வெண்மதி வீறு சீற! 5.2.47

பல்லாயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும்
கல்லார் சிமயத் தடம் கைத்தலம் நீண்டு காட்டித்
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன! 5.2.48

மனையில் பொலி மாக நெடுங்கொடி மாலை ஏய்ப்ப
வினையில் திரள் வெள் அருவித்திரள் தூங்கி வீழ
நினைவில் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்காச்
சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள! 5.2.49

கொடு நாலொடு இரண்டு குலப்பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விடம் நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப! 5.2.50

அநுமன் மைந்நாகத்தைக் கண்டு அயிர்த்தல்

எழுந்து ஓங்கி, விண்ணோடு மண் நோக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் எங்கும்
கொழுந்து ஓடி நின்ற கொழுங்குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்? ' எனா அயிர்த்தான். 5.2.51

அநுமன் மைந்நாகத்தைத் தலை கீழுறத் தள்ளி மேலெழுதல்
'நீர்மேல் படரா, நெடுங்குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர்மேல் படராது 'எனச் சிந்தை உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன்தலை கீழ்ப்பட, நூக்கி, விண்ணோர்
ஊர்மேல் படரக் கடிது உம்பரின் மீது உயர்ந்தான்! 5.2.52

மைந்நாகம் மீண்டும் எழுந்து அநுமனொடு கூறல் (4900-4904)

உந்தாமுன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வில் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானுட வேடம் ஆகி
'எந்தாய்! இது கேள்! 'என இன்ன இசைத்தது அன்றே. 5.2.53

'வேற்றுப் புலத்தோன் அலன், ஐய! விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப்பட நூறிய வேலையின், வேலை உய்த்துக்
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. ' 5.2.54

'அன்னான் அருங்காதலன் ஆதலின் அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்தாயது இன்மை
பொன்னார் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய்! 5.2.55

'கார் மேக வண்ணன் பணி பூண்டனன், காலின் மைந்தன்
தேர்வான் வருகின்றனன் சீதையைத், தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி, இதில் பெரும்பேறு இல்! 'என்ன
நீர்வேலையும் என்னை உரைத்தது, நீதிநின்றாய்! 5.2.56

'நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? 'என உற்று உரைத்தான். 5.2.57

அநுமன் மைந்நாகத்தை நோக்கல்

உரைத்தான் உரையால், இவன் ஊறு இலன் என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு விளங்க, வீரன்
சிரித்தான் அளவே சிறிது அத்திசைச் செல்ல நோக்கி,
வரைத்தாழ் நெடும் பொன் குடுமித் தலை மாடு கண்டான். 5.2.58

அநுமன் மைந்நாகத்தொடு கூறல் (4906-4907)

'வருந்தேல்! இது என்? துணை வானவன் வைத்த காதல்!
அருந்தேன் இனி யாதும் ஒன்று, ஆசை நிரப்பி அல்லால்;
பெருந் தேன்மொழி சார நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன், நுகர்ந்தேன் : இதன்மேல் இனி ஈவது என்னோ? ' 5.2.59

'முன்பின் சிறந்தார் இடை உள்ளவர் காதல், முற்றப்
பின்பின் சிறந்தார்; குணம் நன்று இது! பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்து ஆயது ஒர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஒர் பூசனை யார்கண் உண்டே? ' 5.2.60

அநுமன் மைந்நாகத்தைப் பாராட்டி மேலும் செல்லுதல்

'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின் ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வேன் நின் விருந்து 'என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பிற்பட, முன்பு போனான். 5.2.61

அநுமன் விரைவு

செவ்வான் கதிரும், குளிர் திங்களும், தேவர் வைகும்
வெவ்வேறு அரணங்களும், மீனொடு, மேகம், மற்றும்,
எவ்வாய் உலகத்தவும், ஈண்டி இருந்த தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெம் காலும் ஒத்தான்! 5.2.62

அநுமன் விரைவால் நிகழ்ந்தவை (4910-4911)

நீர்மேல் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்காப்,
பார்மேல் தவழ் சேவடி பாய் நடவாப் பதத்து என்
தேர்மேல் குதிகொண்டவன், இத்திறம் சிந்தைசெய்தான்!
ஆர்மேல்கொல்? என்று எண்ணி, அருக்கனும் ஐயம் உற்றான்! 5.2.63

வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் தோளின் விசும்பு நிரம்பு மெய்யின்,
கோள் ஒத்தவன் மேனி, விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது : மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம்! 5.2.64

சுரசை தோன்றுதல்

'மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்று உற்று வந்தான் வலி எம்மை உணர்த்து நீ! 'என்று
ஆன்று உற்ற வானோர் குறைநேர, அரக்கி ஆகித்,
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 5.2.65

சுரசைகூற்று (4913-4914)

பேழ்வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கிக்,
'கோள்வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆம் இடமாய் வருவாய் கொல்? 'என்னா,
நீள்வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள்! 5.2.66

'தீயே எனல் ஆய பசி பிணி தீர்த்தல் செய்வான்
ஆயே விரைவு உற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, நிணங்கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்! வழி மற்று இலை வானின்! 'என்றாள். 5.2.67

அநுமன்கூற்று

'பெண்பால் ஒரு நீ பசிப் பீழை ஒறுக்க நொந்தாய் :
உண்பாய் எனது ஆக்கையை : யான் உதவற்கு நேர்வல்,
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால் 'எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள். 5.2.68

சுரசை கூற்றும் அநுமன் கூற்றும்

'காய்ந்து ஏழ் உலகங்களும் காண நின் யாக்கை தன்னை
ஆர்ந்தே பசிதீர்வன்! இது ஆணை! 'என்று அன்னள் சொன்னாள்.
ஓர்ந்தானும், 'இகந்து ஒருவேன்! நினது ஊழில் பேழ்வாய்ச்
சேர்ந்து ஏகுகின்றேன், வலையாம் எனில் தின்றிடு! 'என்றான். 5.2.69

அநுமன் பேருருக் கொள்ளுதல்

அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெருவாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள்; அதுநோக்கி வீரன்
திக்கு ஆர் அவள்வாய் சிறிதாம்வகை சேணில் நீண்டான். 5.2.70

அநுமன் சுரசை வாயுள் புக்கு மீளல்

நீண்டான், உடனே சுருங்கா, நிமிர் வாய் இடத்தின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னம்
மீண்டான்! அது கண்டனர் விண் உறைவோர்கள் : 'எம்மை
ஆண்டான் வலன்! 'என்று அலர்தூய், நெடிது ஆசி சொன்னார். 5.2.71

சுரசை ஏத்தொடு தூதன் சென்றமை (4919-4921)

மின் மேல் படர் நோன்மையின் ஆம் உடல் வீக்கம் நீங்கித்,
தன்மேனியளாய், அவள், தாயினும் அன்பு தாழ,
'என் மேல் முடியாதன? 'என்று இனிது ஏத்தி நின்றாள்.
பொன் மேனியனும், நெடிது ஆசி புனைந்து, போனான். 5.2.72

கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர் தனெ்றல் விருந்து செய்ய! 5.2.73

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்துச் செறி வேர் சிதைப்பத்
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தாழாக்
கந்தார வீணைக்களி செஞ்செவி தாழ்ந்து நுங்க. 5.2.74

அங்காரதாரை தோற்றம் (4922-4924)

வெம் கார்நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்
'இங்கு ஆர் கடத்திர் எனை? 'என்னா எழுந்தாள்
அங்காரதாரை பிறிது ஆலாலம் அன்னாள்! 5.2.75

காதக் கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப
வேதக் கொழுஞ்சுடரை நாடி நெடு மேல்நாள்
ஓதத்து இன் ஊடு வரு கைடவனை ஒத்தாள்! 5.2.76

துண்டப் பிறைத்துணை எனச் சுடர் எயிற்றாள்;
கண்டத் திடைக் கறை உடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்! 5.2.77

அங்காரதாரையைக் கண்ட அநுமன் கருதியது (4925-4926)

நின்றாள் நிமிர்ந்து அலை நெடுங்கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வௌவ;
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருேளாடும்
தின்றாள் ஒருத்தி இவள்! என்பது தெரிந்தான். 5.2.78

பேழ் வாய் அகத்து அலது பேர் உலகம் மூடும்
நீள் வான் அகத்தின் இடை ஏகும் நெறி காணான்
வாழ் வான் அனுக்க வளர்வாள் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான். 5.2.79

அநுமன் வினவுதல்

'சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்!
வாயால் அளந்து நெடு வான்வழி அடைத்தாய்!
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை? 'என்றான். 5.2.80

அங்காரதாரை மறுமொழி

'பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி! உற்றால்
விண் பாலவர்க்கும் உயிர் வீடுவது மெய்யே!
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பால் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது! 'என்றாள். 5.2.81

அநுமன் அங்காரதாரையின் வாயுள் புக்கு வயிற்றினைக் கிழித்து வெளிப்படல்

திறந்தாள் எயிற்றை அவள்! அண்ணல் இடை சென்றான்!
அறந்தான் அரற்றியது! அயர்த்து அமரர் எய்த்தார்!
இறந்தான் எனக்கொடு; ஒர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்! எனப் பெரிய கோளரி பெயர்ந்தான்! 5.2.82

அங்காரதாரை வயிற்றிலிருந்து வெளிவந்த அநுமன் தோற்றம் (4930-4931)

கள்வாய் அரக்கி கதறக் குடர் கணத்தில்
கொள் வார் தடக்கையன் விசும்பின்மிசை கொண்டான்
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின்
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான்! 5.2.83

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான்
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்! 5.2.84

அநுமன் வென்றியால் நிகழ்ந்தவை

ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து மலர்வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார். 5.2.85

அநுமன் மீண்டும் ஏகுதல்

மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறு காறும்
கீண்டான் இமைப்பின் இடை மேருகிரி கீழா
நீண்டான் வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான் அருக்கன் உயர் வானின்வழி போனான்! 5.2.86

அநுமன் நினைவு (4934-4935)

'சொற்றார்கள் சொற்றதுணை பல தொகையது அன்றோ?
முற்றா முடிந்த நெடு வானின் இடை முந்நீ
ரில் தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு 'என உணர்ந்தான். 5.2.87

'ஊறு கடிது ஊறுவன; ஊறில் அறம் உன்னாத்
தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீரா
ஏறுவகை இங்கு உளது; இராம! என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல் 'என மதித்தான். 5.2.88

அநுமன் பவளமலையில் பாய்தல்

தசும்பு உடைக் கனகம் நாஞ்சில் கடிமதில் தணித்து நோக்கா,
அசும்பு உடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பு இடை செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசும் புடைச் சோலைத்து ஆங்கோர் பவள மால் வரையில் பாய்ந்தான்! 5.2.89

பவளமலை சலித்தல்

மேக்கு உறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்கு உறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்குறற்கு இடையூறாகப் புயலொடு பொதிந்த வாடை
தாக்குறத் தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே! 5.2.90

அநுமன் இலங்கையைக் காண்டல்

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன, இலங்கையைக் கண்ணில் கண்டான்! 5.2.91

அநுமன் இலங்கையை வியத்தல் (4939-4941)

நல் நகர் அதனை நோக்கி, நளினக் கை மறித்து, 'நாகர்
பொன் நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது, அம்மா!
அந்நகர், இதனின் நன்றேல், அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந்நகர் இருந்து வாழான்! இது, அதற்கு ஏது! 'என்றான். 5.2.92

'மாண்டது ஓர் நிலத்திற்றாம் 'என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்!
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்த துய்க்கும்
ஈண்டு அரும் போக இன்பம் ஈறு இலது, யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்! அஃதே அருமறைத் துணிவும், அம்மா! 5.2.93

'உள் புலம் எழுநூறு என்பர் ஓசனை; உலகம் மூன்றில்
தடெ்பு உறு பொருள்கள் எல்லாம் இதன் உழைச் செறிந்த என்றால்,
நுட்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும், நோக்கும்
கண் புலம் வரம்பிற்றாமே? காட்சியும் கரையிற்றாமே? 5.2.94
------------------

5.3 – Die Suche in der Stadt

5.3 ஊர் தேடு படலம் (4942- 5175)

இலங்கை நகர மாடவருணனை (4942-4949)

பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தெரிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்! 5.3.1

நாக ஆலயங்கெளாடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கும் இல என்ன உயர் பண்ப!
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு தனெ்றல் என நின்ற! 5.3.2

மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்
பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்! 5.3.3

பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணிப் பதுமச்
செம் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,
மஞ்சின் அஞ்சன நிறம் மறைத்து அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ! 5.3.4

நான நாள் மலர்க் கற்பக நறுவிரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில் செய்ய
வான யாறு தம் அரமியத் தலம் தொறும் மடுப்ப! 5.3.5

குழலும், வீணையும், யாழும், என்று இனையன குழைய,
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடும் தடமணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவரு நிலைய! 5.3.6

இனைய மாடங்கள், இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசு உண்ணும் :
அனையவாம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை,
நினையலாம்? அன்றி உவகையும் அன்னதாய் நிற்கும்! 5.3.7

மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினும் அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நகர்த் திருமனை, தெய்வமாத் தச்சன்
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள்! 5.3.8

அரக்கர்பெருமை

மரம் அடங்கலும் கற்பகம் : மனை எலாம் கனகம் :
அர மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு; அமரர்
உரம் அடங்கி வந்து உழையராய் உழல்குவர் : ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது! தவம் செய்த தவமால்! 5.3.9

இராவணன் பெருமை

தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர்? என்னின்
மூவர் தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தாவில் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ? 5.3.10

படைமிகுதி (4952-4953)

போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலில், புறம்போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியன் தனித் தெய்வ மாக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே, இந்நகர்த் தொகாத! 5.3.11

வாழும் மன் உயிர் யாவையும் ஒருவழி வாழும்
ஊழி நாயகன் திருவயிறு ஒத்துளது இவ் ஊர்!
ஆழி அண்டத்தின், அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம்! 5.3.12

பலவகையொலி

தழங்கு பேரியின் அரவமும், தகை நெடும் களிறு
முழங்கும் ஓதையும், மூரிநீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலின்,
வழங்கும் மேகலைக் கிண்கிணி வயின்தொறும் மறையும்! 5.3.13

இலங்கைநகரின் பெருமை (4955-4959)

மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தனித் தேர் எலாம் இமைப்பு இல் பல் கோடி
இரவி வெட்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இந்நகர்க்கு! 5.3.14

திருகு வெம் சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்,
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது, அழகைப்
பருகும் இந்நகர்த் துன் ஒளி பரத்தலில், பசும்பொன்
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி! 5.3.15

அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றும் நின்று, அகல்வான்
கண்ட அத் தனிக் கடிநகர் நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ் ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடில், தம்முன்
விண்டவாய்ச் சிறு மின்மினி என்னவும் விளங்கா! 5.3.16

தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறும் சேறும்,
வான நாள் மலர் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலில் தழீஇய
மீனும், தானும், ஓர் வெறிமணம் கமழுமால் வேலை! 5.3.17

தெய்வத் தச்சனை புகழ்துமோ? செங்கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத்
தொய்யல் சிந்தையேம் யாவரை யாது என்று துதிப்பேம்? 5.3.18

பொழில் சிறப்பு

வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ?
கானும் பொழிலும் இவை செங் கனகத்தினாலும்
ஏனை மணியாலும் இயற்றிய வேனும் யாவும்
தேனும் மலரும் கனியும் தரச் செய்த செய்கை. 5.3.19

கோபுரவருணனை

நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடும் காலும்
மாரி வானமும், வழங்கல வாகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ உடல் முற்றும் வெள்கி? 5.3.20

மதில் வருணனை (4962-4965)

முன்னம் யாவரும், 'இராவணன் முனியும் என்று எண்ணிப்
பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர் 'எனப் புகல்வார்;
கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக் குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார்! 5.3.21

'தீய செய்குநர் தேவரால், அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவன் 'என மதியாக்
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நல் மதில் இட்டனன், கயிலை அன்று எடுத்தான்! 5.3.22

கறங்கு கால் புகா, கதிரவன் ஒளி புகா, மறலி
மறம் புகாது, இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள், யாவையும் சிதையினும் சிதையா
அறம் புகாது, இந்த அணிமதிள் கிடக்கைநின்று அகத்தின்! 5.3.23

கொண்ட வான் திரைக் குரைகடல் இடையதாய்க் குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற இயல்பால்,
பண்டு அரா அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது இவ் அணி நகர் அமைதி! 5.3.24

இலங்கைநகர் வாழ்வோர் செயல் (4966-4981)

பாடுவார் பலர், எண் இல் மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள், மற்று அவரினும் பலருளர் அமைதி
கூடு வாரிடை இன்னியம் கொட்டுவார், முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார்! 5.3.25

வானம் மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்,
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியர், அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவர், தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார்! 5.3.26

செல்வ வளம்

இழையும், ஆடையும், மாலையும், சாந்தமும், ஏந்தி
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள்! ஒருவர்
விழையும் போகமே இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்! நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும்! 5.3.27

நகர் அமைத்த திறம்

பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
உன்னி, நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைப்பப்
பன்னி நாள் பல பணி உழந்து, அரிதினில் படைத்தான்,
சொன்ன வானவர் தச்சனாம், இந்நகர் துதிப்பான்! 5.3.28

மகர வீணையின் மந்தர கீதத்து மறைந்த
சகர வேலையின் ஆர்கலி! திசைமுகம் தழுவும்
சிகர மாளிகைத் தலம் தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும்! 5.3.29

பளிக்கு மாளிகைத் தலம் தொறும், இடம் தொறும், பசுந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறும் சோலைகள் தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகிக்,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன்! 5.3.30

தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்! 5.3.31

எறித்த குங்குமத்து இளமுலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன! ஊடலில் கனன்று
மறித்த நேக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள், பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி! 5.3.32

விளரிச் சொல்லியர் ஓதியால், வேலையுள் மிடைந்த
பவளக் கோடு எனப் பொலிந்தது! படைநெடும் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது! குளிர்முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது, முழங்குநீர் இலங்கை! 5.3.33

எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்று காறும்
கிழிந்திலது அண்டம், என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உேளான் ஆதி ஆக, ஒழிந்த
வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா! 5.3.34

காயத்தால் பெரியர், வீரம் கணக்கு இலர், உலகம் கல்லும்
ஆயத்தார், வரத்தின் தன்மை அளவு அற்றார், அறிதல் தேற்றா
மாயத்தார், அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமே? மற்றோர்
தேயத்தார் தேயம் சேர்ந்தால், தேர்விலார் செருவிற் சேறல்! 5.3.35

கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை! அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ! 5.3.36

கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த! காதல்
புள் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய, ஓடை யானை! 5.3.37

வள்ளிநுண் மருங்குல் என்ன, வானவர் மருளின் உள்ளம்
தள்ளுறப் பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம், வெள்குகின்றார்,
கள் இசை அரக்கர் மாதர் களித்திடும் குரவை காண்பார்! 5.3.38

ஒறுத்தலோ நிற்க, மற்றோர் உயர்படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மற்றும், யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கி மாரும், அரக்கரும், களித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கை யாலே தூரும் இவ் வீதியெல்லாம்! 5.3.39

வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலினமா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள் தோறும், யாறொடும் அடுத்த எல்லாம்,
அடங்கியது என்னின், என்னே, ஆழியின் ஆழ்ந்தது உண்டோ? 5.3.40

படைப் பெருமை

வில் படை பெரிது என்கேனோ? வேல் படை மிகும் என்கேனோ?
மல் படை உடைத்து என்கேனோ? வாள் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய, காந்தும்
நல் படை பெரிது என்கேனோ? நாயகற்கு உரைக்கும் நாளில். 5.3.41

சூரியன் மேலைக்கடலில் மறைதல்

என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி,
நின்றனன், அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னாத்
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குடகடல் குளிப்ப தானான். 5.3.42

இருள் பரவுதல் (4984-4987)

ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே! 5.3.43

கரித்த மூன்று எயில் உடைக் கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனன் நான்முகன் என்னும் பொற்பதே! 5.3.44

அணங்கு அரா அரசர்கோன் அளவில் ஆண்டெலாம்
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய்விடம்
உணங்கல் இல் உலகெலாம் முறையின் உண்டுவந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே! 5.3.45

வண்மை நீங்கா நெடு மரபின் வந்த அப்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
திண்மை நீங்காதவன் சிறைவைத்தான் என
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே! 5.3.46

இருளில் அரக்கர் இயங்குதல் (4988-4989)

அவ்வழி அவ் இருள் பரந்த ஆயிடை
எவ்வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
தெவ் வழி அந்தரத் திசையர் ஆகையால்
வெவ்வழி இருள்தர மதித்து மீச்செல்வார். 5.3.47

இந்திரன் வளநகர்க்கு ஏகுவார் எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார் சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில்
வெம்தொழில் அரக்கனது ஏவல் மேயினார். 5.3.48

தேவமாதர் முதலியோர் பணிநீங்கிச் செல்லுதல்

பொன் நகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணிமுறை மாறி முந்துவார்
மின்னினம் மிடைந்தனெ விசும்பின் மீ செல்வார். 5.3.49

தேவர் முதலியோர் பணிசெய வருதல் (145-146)

தேவரும் அவுணரும் செங்கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
ஏவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார்
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார். 5.3.50

சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
'இத்துணை தாழ்த்தனம் முனியும்! 'என்று தம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார். 5.3.51

சந்திரோதய வருணனை (4993-4995)

தீண்டரும் தீவினை தீக்கத் தீந்துபோய்
மாண்டு அற உலர்ந்தது மாருதிப் பெயர்
ஆண் தகை மாரி வந்து அளிக்க ஆயிடை
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே! 5.3.52

'வந்தனன் இராகவன் தூதன்! வாழ்ந்தனன்
எந்தையே இந்திரனாம்! 'என்று ஏமுறும்
அந்தம் இல் கீழ்த்திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே! 5.3.53

கற்றை வெண்கவரி போல் கடலின் வெண்திரை
சுற்றும் நின்று அலமரப் பொலிந்து தோன்றிற்றால்!
'இற்றது என் பகை 'என எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே. 5.3.54

நிலவு பரவுதல் (4996-4997)

தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பால் கடல் முகந்து மூரிவான்
சொரிந்ததேயாம் எனத் துள்ளும் மீனொடும்
விரிந்தது தண்நிலா மேலும் கீழுமே! 5.3.55

அரும் தவன் சுரபியே அந்தி வான்மிசை
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் பசும் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே! 5.3.56

விண்மீன் தோற்றம்

எண் உடை அநுமன்மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகல
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய்கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்! 5.3.57

எல்லியின் நிமிர் இருள் குறையும் இவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும் கௌவின
புல்லிய பகை எனப் பொருவ போன்றன
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம்! 5.3.58

வீசு உறு பசும் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசு உற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றால்! 5.3.59

இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என அநுமன் பற்றினால்
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை ஆங்கு அவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே! 5.3.60

அநுமன் இலங்கையுள்ளே புக எண்ணுதல்

அவ்வழி அநுமனும் அணுகலாம் வகை
எவ்வழி என்பதை உணர்வின் எண்ணினான்
செவ்வழி ஒதுங்கினன் தேவர் ஏத்தப் போய்
வெவ்வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான். 5.3.61

அநுமன் இலங்கையின் மதிலை அணுகுதல்

ஆழி அகழாக அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளி காறும் முகடு ஏறிக்
கேழ் அரிய பொன்கொடு சமைந்து கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான். 5.3.62

மதிலை வியத்தல் (5004-5005)

'கலங்கல் இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் :
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து! 'என வியந்தான். 5.3.63

'தெவ் அளவு இலாத இடை சேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடையாக;
எவ்வளவின் உண்டு வெளி ஈறும் அது! 'என்னா
வெவ் வள அரக்கனை மனம் கொள வியந்தான். 5.3.64

அநுமன் இலங்கை நகர வாயிலைக் காண்டல்

மடங்கல் அரி ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர்
அடங்கரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந்திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான். 5.3.65

வாயிலை வியத்தல் (5007-5008)

'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு விட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ? 'என நினைந்தான். 5.3.66

'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின்முறை அன்றி உடனே புகும்! இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை! 'என்றான். 5.3.67

வாயில் காவலர் நிலை (5009-5012)

வெள்ளம் ஒருநூறொடு இருநூறும் மிடைவீரர்
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இருகையும்
முள் எயிறும் வாளும் உற மின்ன முறை நின்றார்
எள்ளரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான். 5.3.68

சூலம் மழு வாெளாடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி
கோல கணை நேமி குலிசம் சுரிகை குந்தம்
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார். 5.3.69

அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர்
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார். 5.3.70

அளக்க அரிதாகிய கணத்தொடு அயல்நிற்கும்
விளக்கினம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான். 5.3.71

வாயிற்காவல் கண்டு அநுமன் வியத்தல் (5013-5015)

'எவ் அமரர் எவ் அவுணர் ஏவர் உளர் என்னே!
கவ்வை முது வாயிலின் நெடுங்கடை கடப்பார்?
தெவ்வர் இவர்! சேமம் இது! சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும்? 'என்றான். 5.3.72

'கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
பெருங்கடல் கடப்பது அரிது! எண்ணம் இறை பேரின்
அருங்கடன் முடிப்பது அரிதாம்! அமர் கிடைப்பின்
நெருங்கு அடல் விளைப்பர் நெடுநாள்! 'என நினைந்தான். 5.3.73

'வாயில்வழி சேறல் அரிது! அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்தவழி ஏகல் அழகு அன்றால்.
காய்கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய் இ நகர் புக்கிடுவென் 'என்று ஒர் அயல் போனான். 5.3.74

இலங்காதேவி எதிர்தல்

நாள்நாளும் தான்நல்கிய காவல், நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள், போவதின், மேலே வழிநின்றாள்,
தூணாம் என்னும் தோளுடையானைச், சுடரோனைக்
காணா வந்த கட் செவி என்னக் கனல் கண்ணாள். 5.3.75

இலங்காதேவியின் இயல்பு (5017-5021)

எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள், சுழல் கண்ணாள்,
முட்டிப் போரின் மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள், கமை இல்லாள். 5.3.76

பாரா நின்றாள் எண்திசை தோறும் பலர் அப்பால்
வாரா நின்றாரோ என, மாரி மழையே போல்
ஆரா நின்றாள், நூபுரம் அச்சம் தரு தாளாள்,
வேரா நின்றாள், மின்னின் இமைக்கும் மிளிர்பூணாள். 5.3.77

வேல், வாள், சூலம், வெம்கதை, பாசம், மிளிர்சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள், வடகுன்றம்
போல்வாள், திங்கட் போழின் எயிற்றாள், புகை வாயில்
கால்வாள், காணில் காலனும் உட்கும் கதம் மிக்காள். 5.3.78

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள், அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள், அருள் இல்லாள்,
அம் சுவணத்தின் உத்தரியத்தாள், அலை ஆரும்
அம் சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணிகொண்டாள். 5.3.79

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள், தெளிநூல் யாழ்
அம் தாரத்தின் நேர்வரு சொல்லாள், அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பன்னிக் களிகூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பு மகுடத்தாள். 5.3.80

இலங்கா தேவியை அநுமன் எதிர்தல்

எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள், அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்,
'நில்லாய்! நில்லாய்! 'என்று உரை நேரா, நினையாமுன்,
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக! 'என்றான். 5.3.81

அநுமனை நோக்கி இலங்காதேவி கூறுவது

'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என்னாம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே!
போகாய்! 'என்றாள், பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள். 5.3.82

அநுமன் மறுமொழி

களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள
விளியாநின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியான் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் :
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு? 'என்றான். 5.3.83

இலங்காதேவி சினத்தல்

என்னா முன்னம், 'ஏகு! என ஏகாது, எதிர்மாற்றம்
சொன்னாயே? நீ யாவன்? அடா! தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு : அளியுற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்? 'என்று உற நக்காள். 5.3.84

இலங்காதேவிகூற்றும்-அநுமன்மாற்றமும்

நக்காளைக் கண்டு, ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்;
'நக்காய்? நீ யார்? யார்சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏதாம்? ஓடலை? ' என்றாள்; 'இனி, இவ்வூர்
புக்கால் அன்றிப் போகலன்! ' என்றான், புகழ்கொண்டான். 5.3.85

இலங்காதேவி சிந்தித்தல்

'வஞ்சம் கொண்டான்! வானரம் அல்லன்! வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்டு ஆர் கண் நுதலைப் போல் நகுகின்றான்! '
நெஞ்சம் கொண்டே, கல் என நின்றே, நினைகின்றாள். 5.3.86

இலங்காதேவி சூலத்தை யேவல்

'கொல்வாம்! அன்றேல், கோள் உறும் இவ் ஊர்! 'எனல் கொண்டாள்;
'வெல்வாய் நீயேல், வேறி! ' எனத் தன் விழிதோறும்,
வல்வாய் தோறும், வெம் கனல் பொங்க, 'மதிவானில்
செல்வாய்! 'என்னா, மூவிலை வேலைச் செலவிட்டாள். 5.3.87

அநுமன் சூலத்தை முறித்தல்

தடித்தாம் என்னத் தன் எதிர் செல்லும் தழல்வேலைக்
கடித்தான், நாகம் விண்ணின் முரிக்கும் கலுழன் போல்,
ஒடித்தான் கையால், உம்பர் உவப்ப, உயர்காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண் என, எண்ணம் பிழையாதான். 5.3.88

இலங்காதேவியும் அநுமனும் பொருதல் (5030-5031)

இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றுத் தெய்வப் பல்படை கொண்டே மலைவாளை
உற்றுக் கையால் ஆயுதம் ஒன்றும் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான் பழி ஓர்வான். 5.3.89

வழங்கும் தெய்வப் பல்படை காணாள், மலைவான் மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்,
கழங்கும், பந்தும், குன்றுகொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும் செந்தீச் சிந்த அடித்தாள், தகைவு இல்லாள். 5.3.90

இலங்காதேவி தோல்வியுற்று வீழ்தல்

அடியா முன்னம், அங்கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்! கொல்லில் பிழை! 'என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடி கொண்டான்; உயிரோடும்,
இடியேறு உண்ட மால்வரை போல், மண்ணிடை வீழ்ந்தாள். 5.3.91

இலங்காதேவி தன் வரலாறு கூறுதல் (5033-5036)

விழுந்தாள்; நொந்தாள்; வெம் குருதிச் செம் புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார் தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாவையும், எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள். 5.3.92

'ஐய! கேள்! வையம் நல்கும் அயன் அருள் அமைதியாக
எய்தி, இம் மூதூர் காப்பென், இலங்கைமாதேவி என்பேன்;
செய்தொழில் இழுக்கினாலே திகைத்து இந்தச் சிறுமை செய்தேன்.
உய்தி என்று அளித்தியாயின் உணர்த்துவல் உண்மை 'என்றாள். 5.3.93

"எத்தனை காலம் காப்பல் யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, ' முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம் அதனால் தீண்டில், கழிவது; அன்று என்னைக் காண்டி!
சித்திர நகரம் பின்னைச் சிதைவது திண்ணம்! 'என்றாள். 5.3.94

'அன்னதே முடிந்தது, ஐய! அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்! உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி! 'என்று புகழ்ந்தனள், இறைஞ்சிப் போனாள். 5.3.95

அநுமன் இலங்கையுள் புகுதல்

வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே! விளையும் அஃது! 'என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்,
சீரிய பாலின் வேலைச் சிறுபிரை தறெித்தது அன்னான்! 5.3. 96

மணிமாடங்களின் ஒளிகண்டு துணுக்குறல்

வான்தொடர் மணியில் செய்த மை அறு மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அமைவு நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ? 'என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான். 5.3.97

இலங்கையின் ஒளியை வியத்தல் (5039-5040)

மொய்ம்மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றா நின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, மிகை என விலங்கிப் போனான்!
இம்மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன்முன் எய்தும்,
மிம்மினி அல்லனோ, அவ் வெயில்கதிர் வேந்தன் அம்மா! 5.3.98

'பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன்மதில் நடுவண் பூத்த
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ
நிசிசரர் ஆயிற்று, அம்மா! நீள் நகர் நிருதர் எல்லாம்! ' 5.3.99

அநுமன் மாளிகை நிழலில் மறைந்து செல்லல்

என்று அன இயம்பி, வீதி ஏகுவது இழுக்கம் என்னாத்
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சாரச்
சென்றனன் என்ப மன்னோ, தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் எனக், குலவு தோளான்! 5.3.100

பசுக்கொட்டில் முதலிய பல இடங்களிலும் அநுமன் தேடிச் செல்லுதல்

ஆத் துறு சாலை தோறும், ஆனையின் கூடம் தோறும்,
மாத் துறு மாடம் தோறும், வாசியின் பந்தி தோறும்,
காத் துறு சோலை தோறும், கரும் கடல் கடந்த தாளான்,
பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டில், போனான். 5.3.101

இலங்கைநகர் வீதியில் செல்லும் அநுமன் தோற்றம்

பெரிய நாள் ஒளிகொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கு அங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியனாய் வெளியன் ஆகிச் செய்யனாய்க் காட்டும், காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன் அகத்து உறை அழகனே போல்! 5.3.102

கவிக்கூற்று

ஈட்டுவார் தவம் அலால், மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டுவார் விதியார், அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நையப் பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர், ஆடுவார் அரக்கர் மாதர்! 5.3.103

அநுமன் கண்ட அரக்கர்நிலை (5045-5061)

கானக மயில்கள் என்னக், களி மட அன்னம் என்ன,
ஆனன கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலைத் தெய்வநீர் ஆற்றுத் தெள் நீர்
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை. 5.3.104

இலக்கண மரபிற்கு ஏற்ற எழுவகை நரம்பின் நல்யாழ்
அலத்தகத் தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைத்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று, சேடியர் கன்னிமார் தம்
மலர்க் கையால் மாடத்து உம்பர் மழையின்வாய் பொத்துவாரை. 5.3.105

சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தத்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்து, நிருத மாக்கள், விளம்பின நெறி வழாமல்
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை. 5.3.106

திருத்திய பளிக்கு வேதித், தெள்ளிய வேல்கள் என்னக்,
கருத்து இயல்பு உரைக்கும் உண்கண் கரும் கயல் செம்மை காட்ட,
வருத்திய கொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்த காமம்
அருத்திய பயிர்க்கு நீர்போல், அருநறவு அருந்துவாரை. 5.3.107

கோதறும் குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ளத்
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல், முறைமுறை களிக்கின்றாரை. 5.3.108

வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறும் கலவை பூசி,
அற்புத வடிக்கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொன்
கற்பகம் கொடுக்க, வாங்கிக், கலன் தெரிந்து அணிகின்றாரை. 5.3.109

புலிபடு மதுகை மைந்தர் புதுப்பிழை உயிரைப் புக்கு
நலிவு இடை, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமரச், சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும் தோறும், மயிர் புளகு உதிக்கின்றாரை. 5.3.110

உள்ளுடை மயக்கால் உண்கண் சிவந்து, வாய் வெண்மை ஊறித்
துள்ளிடைப் புருவம் கோணித் துடிப்ப, வேர் பொடிப்பத் தூங்கும்
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற, நோக்கிக் கணவரைக் கனல்கின்றாரை. 5.3.111

ஆலையில், மலையில், சாலி முளையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேல்கணார் குமுதச் செவ்வாய்
வாழ் எயிறு ஊறு தீம்தேன், மாந்தினர் மயங்குவாரை. 5.3.112

நலனுறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் நிலா முளரிச் செங்கேழ்
மலர்மிசை மலர் பூத்து என்ன, வளைக் கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும், நெடிது உயிர்த்து அயர்கின்றாரை. 5.3.113

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலில் சாய்வார்,
மாதுயர் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர்வந்து துடிக்கின்றாரை. 5.3.114

சங்கொடு, சிலம்பும், நூலும், பாதசாலகமும், தாழப்
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றிக்
கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர், பாணி கொட்டி,
மங்கல கீதம் பாட, மலர்ப்பலி வகுக்கின்றாரை. 5.3.115

இழைதொடர் வில்லும், வாளும், இருெளாடு மலைய, யாணர்க்
குழைதொடர் நயனக் கூர்வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழைதொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை. 5.3.116

பள்ளியின் மைந்தரோடும், ஊடிய பண்பு நீங்கி,
உள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இழையை நீக்கி, அஞ்சனம் எழுதி ஏய்ந்த
கள்ளவாள் நயனம் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை. 5.3.117

ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம் முற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அரும் கதவு அடைக்கின்றாரை. 5.3.118

கின்னர மிதுனம் பாடக், கிளர்மழை கிழித்துத் தோன்றும்
மின் எனத், தரளம் வேய்ந்த வெண்ணிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பல ஆண்டு இசை பரவப் பண்ணைப்
பொன்னகர் வீதி தோறும், புதுமனை புகுகின்றாரை. 5.3.119

கோவையும் குழையும் மின்னக் கொண்டலின் முரசம் ஆர்ப்பத்
தேவர்நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்பப்
பாவையர் குழாங்கள் சூழப் பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூறப் புதுமணம் புணர்கின்றாரை. 5.3.120

அநுமன் கும்பகன்னனைக் காண்டல்

இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர், இன்சொல் விஞ்சை
முயல்கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை
மயக்கற நாடி ஏகு மாருதி, மலையின் வைகும்
கயக்கம் இல் துயிற்சிக் கும்ப கருணனைக் கண்ணிற் கண்டான். 5.3.121

கும்பகன்னன் பள்ளியறைச் சிறப்பு

ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணிமுடி கவித்த மண்டபம்
ஏசு உற விளங்குவது இருளை எண்வகை
ஆசையின் நிலைகெட அகற்றி ஆன்றது. 5.3.122

கும்பகன்னன் துயிலுநிலை (5064-5070)

அன்னதன் நடுவண் ஓர் அமளி மீ மிசைப்
பன்னக அரசு எனப் பரவைதான் எனத்
துன்னிருள் ஒருவழித் தொக்கதாம் என
உன்னரும் தீவினை உருக்கொண் டென்னவே. 5.3.123

முன்னிய கனைகடல் முழுகி மூவகைத்
தன் இயல் கதியொடும் தழுவித் தாது உகு
மன்நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தனெ்றல் வந்து இழுகி ஏகவே. 5.3.124

வானவர் மகளிர் தாள் வருட மாமதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு காந்தம் மீக் கான்ற காமர்நீர்த்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றவே. 5.3.125

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்தக் கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான். 5.3.126

பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழில் வெம் கொடியவன் உயிர்ப்புக் கேடிலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் இறுதி பார்த்து உழல்வது ஒக்கவே. 5.3.127

பகை என மதியினைப் பகுத்துப் பாடுற
அகை இல் பேழ் வாய்மடுத்து அருந்துவான் எனப்
புகையொடு முழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழுமுகத்து எயிறு நாறவே. 5.3.128

தடையுறு மந்திரம் தகைந்த நாகம்போல்
இடையுறவு அரியது ஓர் உறக்கம் எய்தினான்
கடையுக முடிவெனும் காலம் ஓர்ந்து அயல்
புடைபெயரா நெடும் கடலும் போலவே. 5.3.129

கும்பகன்னனை இராவணனென்று நினைத்து அநுமன் சினத்தல்

ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்ற குணம் இலி இவன் எனக் கொண்டான்;
காவல் நாட்டங்கள் பொறி உகக் கனல் எழக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவனாம் ஈட்டான்! ' 5.3.130

இராவணன் அல்லன் என்று சினந்தணிதல்

குறுகி நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும், குன்று ஒத்து
இறுகு திண்புயம் இருபதும் இவற்கு இலை! என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலை,
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான். 5.3.131

அநுமன் கும்பகன்னன் பள்ளியறையைக் கடந்து செல்லல்

அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக! 'என்று அங்கை
கவித்து, 'நீ கிட சிலபகல்! ' என்பது கருதாச்
செவிக்குத் தேன் அன்ன இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான். 5.3.132

அநுமன் மேலும் பல இடங்களிலும் தேடல்

மாட கூடங்கள், மாளிகை ஓளிகள், மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன் புகழெனும் நலத்தான். 5.3.133

தேடுங்கால் அநுமன் நிலை

மணிகொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் எனப் புகை எனக் கலக்கும்,
நுணுகும், வீங்கும், மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?
அணுவின் மேருவின் ஆழியான் எனச் செலும் அறிவோன். 5.3.134

அநுமன் வீடணன் இல்லில் புகல்

ஏந்தல் இவ் வகை எவ் வழி மருங்கினும் எய்திக்
காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேலுேளார், கீழுேளார், விரும்பப்
போந்த புண்ணியன் கண்ணகன் கோயிலுள் புக்கான். 5.3.135

வீடணனை நெருங்கல்

பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கரு நிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான். 5.3.136

வீடணனை நல்லவன் என்று தெரிந்து அநுமன் மேல் செல்லல்

உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்,
குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன், எனக் கொண்டான்,
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறை சென்றான்.
பொற்ற மாடங்கள் கோடி ஓர் நொடி இடைப் புக்கான். 5.3.137

அநுமன் இந்திரசித்தின் மாளிகையை அடைதல் (5079-5080)

முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின்முன் செல்வான்,
இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான். 5.3.138

ஏதி ஏந்திய தடக்கையர், பிறை எயிறு இலங்க,
மூதுரைப் பெருங் கதைகளும், பிதிர்களும், மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறுவலி அரக்கர்,
காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான். 5.3. 139

அநுமன் இந்திரசித்தைக் காண்டல்

முக்கண் நோக்கினன் முறைமகன், அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந் தனையான்,
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன், புகைபுகா வாயினும் புகுவான். 5.3.140

இந்திரசித்தைக் கண்ட அநுமன் நினைதல் (5082-5083)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ? அறியேன்!
இளைய வீரனாம் ஏந்தலும் இவனுடன் நெடுநாள்
உளைய உள்ளபோர் உளது! என, உள்ளத்தின் உணர்ந்தான். 5.3.141

'இவனை இன் துணை உடைய பேர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது? ஓர் பொருள் எனப் புகலேன்!
சிவனை, நால் முகத்து ஒருவனைத் திருநெடுமாலாம்
அவனை அல்லது, நிகர் பிறர், என்பதும் அறிவோ? ' 5.3.142

அநுமன் பிற இடங்களில் தேடல்

என்று கை மறித்து 'இடைநின்று காலத்தை இழப்பது
அன்று பேர்வது! 'என்று ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஓளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன் இந்திர சித்தினைத் தீர்ந்தான். 5.3.143

அநுமன் அக்கன் முதலியோரில்லங்களில் தேடிக் கடத்தல்

அக்கன் மாளிகை கடந்துபோய், மேல் அதிகாயன்
தொக்க கோயிலும், தம்பியர் இல்லமும், துருவித்
தக்க மந்திரத் தலைவர்மா மனைகளும் தடவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் எனப் புகழோன். 5.3.144

அநுமன் இடைநகர் அகழியை அடைதல்

இன்னர் ஆகிய இரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மாநகர்ப் புறத்து அவன் கரந்து உறை காண்பான்,
சொன்ன மூன்றினுள், நடுவணது அகழியைத் தொடர்ந்தான். ' 5.3.145

அநுமன் அகழியைக் காண்டல்

தனிக் கடக் களிறு என ஒரு துணையிலான், 'தாய
பனிக் கடல் பெருங் கடவுள்தன் பரிபவம் துடைப்பான்,
இனிக் கடப்பு அரிது! ஏழ் கடல் கிடந்தது! 'என்று இசைத்தான்
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியைக் கண்டான். 5.3.146

அநுமன் இடைநகர் அகழியை வியத்தல் (5088-5089)

'பாழி நல் நெடும் கிடங்கு எனப் பகர்வரேல், பல் பேர்
ஊழிகாலம் நின்று, உலகு எலாம் கல்லினும், முடியா!
ஆழி வெம்சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும் இந்நகர்ச் சுலாய கொல் ஆம்! 'என இசைத்தான். 5.3.147

ஆய தாகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
'தாய வேலையின் இருமடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது! ' என்பது புகன்றான்,
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான். 5.3.148

இடைநகர் அகழின் இயல்பு (5090-5096)

மேக்கு நால்வகை மேகமும் கீழ்விழத்
தூக்கினால் அன்ன தோயத்ததாய்த் துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரை வைக்கலும் ஆகுமோ? 5.3.149

ஆனை மும்மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறைக்குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால்! 5.3.150

உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே! 5.3.151

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடின
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலம் பிடிக்கும் ஒர் ஊடல் கொடுக்குமால்! 5.3.152

நறவு நாறிய நாள் நறும் தாமரை
துறைகள் தோறும் முகிழ்த்தன தோன்றுமால்!
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்கேளா? 5.3.153

பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல்
தெளிந்த சிந்தையரும் சிறியார்கேளாடு
அளிந்த போது அறிதற்கு எளிதாவரோ? 5.3.154

நீலமேமுதல் நன்மணி நித்திலம்
மேல கீழ பல்வேறு ஒளி வீசலால்
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ எனக் காட்டுமே! 5.3.155

அநுமன் இடைநகருள் புகுந்து தேடல் (5097-5098)

அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பின்பட
துன்னரும் கடி மாநகர் துன்னினான்
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம். 5.3.156

கருவி நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரண்டு ஓசனைத்
தெரிவு மும்மை நூறாயிரம் தேடினான்! 5.3.157

இரவில் அரக்கர் நிகழ்ச்சிகள் (5099-5106)

வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கினது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியம் அடங்கின தொடங்கினது உறக்கம்! 5.3.158

இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினவர் அல்லார். 5.3.159

வடம் தரு தடம் கொள்புய மைந்தர் கலவிப் போர்
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில்போலும்
மடந்தையர் தடம் தன முகட்டு இடை மயங்கிக்
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம். 5.3.160

வாம நறையின் திறம் நுகர்ந்தவர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தவர் களித்தார்;
பூமன் அறை வண்டு உறை இலங்கு அமளி புக்கார்
தூம நறை இன் துறை அயின்றிலர் துயின்றார். 5.3.161

பண் இமை அடைத்த பல கண் பொருநர் பாடல்
விண் இமை அடைத்தன விளைந்தது இருள் வீணை
தண்ணுமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம். 5.3.162

விரிந்தன நரந்தம் முதல் மெல் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தனெ்றல் உணர்வு உண்டு அயல் உலாவச்
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம்
எரிந்தன பிரிந்தவர்தம் எஞ்சுதனி நெஞ்சம். 5.3.163

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தனெ்றல் பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்கரிய ஆசை உற வீயா
விளக்கு என விளங்கும் மணி மெய் உறு விளக்கம். 5.3.164

நித்த நியமத் தொழில் முடித்து நெடு வானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகிகள் துயின்றார்;
மத்தமத வெம் களிறு உறங்கின; உறங்காப்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரது என்னோ? 5.3.165

அநுமன் அகநகரடைதல்

ஆயபொழுது அம்மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரி ஒன்றொடு ஒருகோடி துருவிப் போய்த்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப் பகையை வென்றான். 5.3.166

இராவணன் காதல் கிழத்தியர் இல்லங்களில் அநுமன் தேடுதல்

போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களாத்
தாரகைக் குழுவில் தழைத்து ஓங்கிய
நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினான். 5.3.167

முயல் கரும் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினர்
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான். 5.3.168

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூலினும் இன் இளம் காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெம் வினை வேர் அற வீசினான். 5.3.169

இராவணன் உரிமை மகளிருள் இயக்கியர் நிலை (5111-5120)

அத்திரம் புரை யானை அரக்கன் மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பு இலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அறச்
சித்திரங்கள் என இருந்தார் சிலர் 5.3.170

அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் கண் முகிழ்த்து
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர். 5.3.171

பழுதில் மன்மதன் எய்கணை பல் முறை
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
'அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம் கொல்? 'என்று எண்ணுகின்றார் சிலர். 5.3.172

'ஆவது ஒன்று அருளாய்! எனது ஆவியைக்
கூவுகின்றிலை! கூறலை சென்று! 'எனப்
பாவை பேசுவ போல் கண் பனிப்பு உறப்
பூவையோடு புலம்புகின்றார் சிலர். 5.3. 173

ஈரத் தனெ்றல் இழுக மெலிந்து தம்
பாரக் கொங்கையைப் பார்த்து அந்தப் பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் எண்ணா உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 5.3.174

நக்க செம்மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல்பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர். 5.3.175

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால் செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர். 5.3.176

கவ்வு தீக்கணை மேருவைக் கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மாமுலை வௌவிய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர். 5.3.177

கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆடினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர். 5.3.178

இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஒராயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் வளையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான். 5.3.179

இராவணன் உரிமைமகளிருள் அரக்கியர்நிலை (5121-5132)

எரிசுடர் மணியின் செம் கேழ் இளவெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவின் நீங்கி, ஆசையும் தாமுமே புக்கு,
ஒருசிறை இருந்து, போன உள்ளத்தொடு ஊடுவாரும். 5.3.180

நகை எரிக் கற்றை தறெ்றி நாவி தோய்த்து அனைய ஓதி
புகை எனத் தும்பி சுற்றப், புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்கு உடைச் சீதப் பள்ளி
மிகை உயிரோடும் காம விம்மலின் வெதும்புவாரும். 5.3.181

சவிபடு தகைசால் வானம் தான் ஒரு மேனி ஆகக்
குவியும் மீன் ஆரம் ஆக, மின்கொடி மருங்குல் ஆகக்
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர்மதி நெற்றி ஆக, அந்திவான் ஒக்கின்றாரும். 5.3.182

பானல் உண் கண்ணும் வண்ணப் படிமுறை மாறப் பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரிகுழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெள்நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும். 5.3.183

உழை உழைப் பரந்த வான யாற்று நின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பில என்று ஊடி
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகும் நீரால் மஞ்சனம் ஆடுவாரும். 5.3.184

பன்னக அரசர் செம் கேழ்ப் பணா மணி வலியில் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆகப்
பொன்னின் நன் பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும். 5.3.185

தெனநகு குடம் உள் பாடல் சித்தியர் இசைப்பத் தீஞ்சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேணப்
பொன் நகு தரளப் பந்தர்க் கற்பகப் பொதும்பர்ப் பொன் தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும். 5.3.186

ஆணியில் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண்கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வ தோரார்,
வீணையும், குழலும், தத்தம் மிடறும், வேற்றுமையில் தீர்ந்த
பாணி தள்ளாடப் பாடல் அமுது உகப் பாடுவாரும். 5.3.187

தண்டலை வாழை அன்ன குறங்கு இடை அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோரக் கூர்ங்கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசல் இட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீசக் குரவையில் குழறு வாரும். 5.3.188

நச்சு எனக் கொடிய கண்ணார், கள்ெளாடு குருதி நக்கிப்
பிச்சரில் பிதற்றி, அல்குல் பூந்துகில் கலாபம் பீறிக்
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொளக் குழுக் கொண்டு ஈண்டிச்
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும். 5.3. 189

தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம் தள்ளத் தம் அறிவு, தள்ளப்
பயிர் உறத் 'தெய்வம் என்மேல் படிந்தது, பார்மின்! 'என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து, ஒடுங்கு வாரும். 5.3.190

இத்திறத்து அரக்கர் மாதர் ஈரிரு கோடி ஈட்டம்,
பத்தியின் உறையும் பத்திப் படர் நெடும் தெரிவும் பார்த்தான் :
சித்தியர் உறையும் மாடத் தெரிவும் பின்னாகச் சென்றான் :
உத்திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான். 5.3.191

இராவணன் உரிமை மகளிருள் விஞ்சை மகளிர் நிலை (5133-5135)

வளர்ந்த காதலர், மகரிகை நெடுமுடி அரக்கனை வரக்காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறிக்
களம் தவா நெடும் கருவியில், கைகளில், செயிரியர் கலைக்கண்ணால்,
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக, அலமரல் உறுகின்றார். 5.3.192

புரியும் நல்நெறி முனிவரும், புலவரும், புகல்கிலர் பொறைகூர,
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு, எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகையொடும், பனித்திங்கள்
சொரியும் வெம் கதிர் துணைமுலைக் குவை சுடக் கொடிகளில் துடிக்கின்றார். 5.3.193

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம்வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலைமுன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர், மயங்கினர், உயிர்க்கின்றார். 5.3.194

அநுமன் மண்டோதரி மனையைக் காண்டல்

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு இரண்டு அமை கோடி
தூய மாளிகை நெடும் தெரித் துருவிப்போய்த் தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் மணி மாடம். 5.3.195

மண்டோதரி மனையை அநுமன் வியத்தல்

கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் : 'காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு! எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்,
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது! 'என வியப்பு உற்றான். 5.3.196

மண்டோதரி துயிலும் நிலை (5138-5139)

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆதியாயவர், மாரன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி கரம் தொடச் சாமரை தடுமாறக்
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின்
நரம்பின் இன்னிசை செவிபுக, நாசியில் கற்பக விரை நாற. 5.3.197

விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையோர் வெகுள்வு உற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது என்று ஐயுறு பீழையால், பெரும் தனெ்றல்,
உழையர் கூவப் புக்கு ஏகு எனப் பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் :
பழையம் யாம் எனப் பண்பு அல செய்வரோ? பருணிதர் பயன் ஓர்வார். 5.3.198

மண்டோதரியைப் பிராட்டியென்று மயங்கி அநுமன் வருந்தல் (5140-5141)

இன்ன தன்மையின் எழில் மணி விளக்கங்கள் இயல்கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைவு உறத் துயில்கொளும் தையலைத் தகைவு இல்லான்,
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து, அகத்து எழு வெம் தீத்
துன்னு தன் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான். 5.3.199

'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க,
அற்பு வான் தளை, இல் பிறப்பு அதனொடும் இழந்து, தன் அரும் தெய்வக்
கற்பும் நீங்கிய கனம் குழை இவள் எனில், காகுத்தன் புகழோடும்,
பொற்பும், யானும், இவ் இலங்கையும், அரக்கரும், பொன்றுதும் இன்று! 'என்றான். 5.3.200

அநுமன் தெளிதல் (5142-5143)

'மானுயர்த் திருவடிவினள் அவள் : இவள் மாறுகொண்டனள் : கூறில்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை 'என்றான். 5.3.201

'இலக்கணங்களும் சில உள! என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று, எடுத்து அறைகின்றது இவள் யாக்கை!
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇச் சில மாற்றங்கள் பறைகின்றாள்!
உலக்கும் இங்கு இவள் கணவனும்! அழிவும் இவ் வியன் நகர்க்கு உளது! 'என்றான். 5.3.202

அநுமன் மண்டோதரி மனை விட்டு இராவணன்மனையிற் புகுதல்

என்று உணர்ந்து நின்று ஏம் உறு நிலையினில், 'நிற்க இ திறன்! 'என்னாப்
பின்று சிந்தையன், பெயர்ந்தனன், அ மனை பிற்படப் பெருமேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்றத்து மணிக் கோயில்
சென்று புக்கனன், இராவணற்கு எடுப்பரும் கிரி எனத் திரள் தோளான். 5.3.203

அநுமன் இராவணன் மனையில் கண்ட தீக்குறிகள்

நிலம் துடித்தன, நெடுவரை துடித்தன, நிருதர்தம் குலமாதர்
பொலம் துடித்தன மருங்குல் போல், கண்களும் புருவமும் பொன் தோளும்
வலம் துடித்தன, மாதிரம் துடித்தன, தடித்து இன்றி நெடுவானம்
கலந்து இடித்தன, வெடித்தன பூரண மங்கல கலசங்கள். 5.3.204

அநுமன் இலங்கை அழியும் என்றெண்ணி இரங்கல்

புக்கு நின்று, தன் புலன் கொடு நோக்கினன், பொருவரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன், 'நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த் திரு! 'என்னா,
எக்குலங்களில் யாவரே ஆயினும், இருவினை எல்லோர்க்கும்
ஒக்கும் : ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல், என உணர்வுற்றான். 5.3.205

அநுமன் இராவணனைக் காண்டல்

நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியான், நோக்கினன், மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடைபரந்து ஈண்டிய வெள் இடை வியன் கோயில்,
பால் பெரும் கடல் பல்மணிப் பல்தலைப் பாப்பு இடைப் படர்வேலை
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை! 5.3.206

இராவணன் துயிலும் நிலை (5148-5158)

குழவி ஞாயிறு குன்று இவர்ந்து அனையன குருமணி நெடுமோலி
இழைகேளாடு நின்று இளவெயில் எறித்திட இரவு எனும் பொருள் வீய,
முழைகொள் மேருவின் முகட்டு இடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்
தழைகொள் தோெளாடும் தலைபல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை! 5.3.207

ஆய பொன் தலத்து ஆய்வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய பொன் கவரி திரள் இயக்கிடச் சுழிபடு பசுங்காற்றின்
மீய கற்பகத் தேன் துளி விராயன வீழ்தொறும், நெடுமேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை! 5.3.208

குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பலபாய,
உழந்த வெம் சமத்து உயர்திசை யானையின் ஒளிர் மருப்பு உற்று இற்ற
பழம் தழும்பினுக்கு இடை இடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற! 5.3.209

சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசும் தனெ்றல்
ஏய்ந்த காமவெம் கனல் உயிர்த்து இருமடி துருத்தியின் உயிர்ப்பு ஏறக்
காந்தள் மெல் விரல் சனகிபால் மனம் முதல் கரணங்கள் கடிது ஓடப்
பாந்தள் நீங்கிய முழை எனக் குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை! 5.3.210

கொண்ட பேர் ஊக்கம் மூளத் திசைதொறும் குறித்து மேல் நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தவெிட்டிப் பேழ்வாய்க் கடைகள் தோறு ஒழுகிப் பாயும்
அண்டர்தம் புகழில் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை! 5.3.211

வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்கக்
கள் அவிழ் மாலை தும்பி வண்டொ டும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை! 5.3.212

தே இயல் நேமியானில், சிந்தைமெய்த் திருவின் ஏகப்
பூஇயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானைக்
காவி அம் கண்ணி தன் பால் கண்ணிய காதல் நீரால்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை! 5.3.213

மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறும் மனத்தன், 'வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உள்ளத்து உள்ளே
புகுந்தனள் அன்றோ? 'என்று மயிர் புறம் பொடிக்கின்றானை! 5.3.214

மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூரும் ஏனும்,
குன்று ஒழித்து ஒருமாக் குன்றின் அரிதில் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன் தோள் மணந்திடும் மடந்தை மார்கட்கு
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை! 5.3.215

தழுவா நின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் திகழும் இயல்பிற்றாய்,
முழு வானவராய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை! 5.3.216

தோடு உழுத தார் வண்டும், திசையானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறும் கலவை, வயக் களிற்றின் சிந்துரத்தை மாறு கொள்ளக்
கோடு உழுத மார்பே போல், கொலை உழுத வடிவேலின் கொற்றம் அஞ்சித்
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுது தழும்பு இருந்த சரணத்தானை! 5.3.217

இராவணனைக் கண்ட அநுமன் சினத்தல்

கண்டனன், காண்டலோடும், கருத்தின் மூள் காலச் செந்தீ
விண்டன கண்கள், கீண்டு வெடித்தன கீழும் மேலும்,
கொண்டது ஓர் உருவ மாயோன் குறளினும் குறுகி நின்றான்,
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி. 5.3.218

அநுமன் இராவணனைக் கொல்ல நினைத்தல் (5160-5161)

'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே! ' 5.3.219

'நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நல் நுதலைப்
பிடித்துவாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எ(ல்)லாம் முடிந்து ஒழிக! ' 5.3.220

இராவணனைக் கொல்ல நினைந்த அநுமன் அந்நினைவொழிதல் (5162-5164)

என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரமும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், நேமியோன் பணி அன்றால்!
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடையோர்க்கு உரித்து அன்றால் :
பின் தூக்கின், இது சாலப் பிழைபயக்கும் எனப் பெயர்ந்தான். 5.3.221

ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்,
சீலம் பார்க்குரியோர்கள் எண்ணாது செய்பவோ?
மூலம் பார்க்குறின் உலகை முடிவிக்கும் முறைத்து எனினும்,
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான். 5.3.222

இற்றைப் போர்ப் பெரும் சீற்றம் என்னோடு முடிந்திடுக!
கற்றைப் பூங் குழலாளைச் சிறைவைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு குரங்கு, என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக் குறை உண்டாம் 'எனக் குறைந்தான். 5.3.223

அநுமன் தன்னுள் கூறுதல்

அந்நிலையான், பெயர்த்து உரைப்பான், 'ஆய்வளைக்கை அணி இழையார்
இந்நிலையானுடன் துயில்வார் உளரல்லர்! இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை! பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்! ' 5.3.224

அநுமன் பிராட்டியைக் காணாது வருந்துதல் (5166-5174)

என்று எண்ணி, ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையாக்
குன்று அன்ன தோளவன்தன் கோ மனை பின்படப் பெயர்ந்தான்,
நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்! 'என்னப் பொருமினான். 5.3.225

'கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியோன்?
ஒன்றானும் உணரகிலேன் : மீண்டு இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு இக் கொடும் துயரம் போகாதால் ' 5.3.226

'கண்டு வரும்! என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக்கோன்
கொண்டு வரும்! என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இதுவால்
புண்டரிக நயனத்தான் பால் இனி யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? ' 5.3.227

'கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால், கனம் குழையை!
விண் அடைதும் 'என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்! இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என் உழை நின்றும் போயதால். 5.3.228

'ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்த இவ் இலங்கை
வாழும் மா மன்னுயிர் யான் காணாத மற்று இல்லை :
ஊழியான் பெருந் தேவி ஒருவரையும் யான் காணேன்!
ஆழி தாய், இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ? ' 5.3.229

'வல் அரக்கன்தனைப் பற்றி, வாய் ஆறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால், 'காட்டு 'என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இவ் ஊரும்
மெல் அரக்கின் உருகி விழ, வெம் தழலால் வேய்கேனோ? ' 5.3.230

'வானவரே முதலோரை வினவுவனேல், வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்!
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ் வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்! ' 5.3.231

'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, 'இலங்கையில் அத்
திருவைக் கண்டனென் 'என்றான் : அவன் உரையும் சிதைந்ததால்
கருவைக்கும் நெடுநகரைக் கடல் இடையே கரையாதே
உருவைக் கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்வேனோ? 5.3.232

'வடித் தாழ் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறியப்
பிடித்தான் இவ் அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் :
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற! என்று உணர்வான். 5.3.233

அநுமன் அசோக வனத்தைக் காண்டல்

எள் உறையும் ஒழியாமல், யாண்டையினும் உளனாய்த் தன்
உள் உறையும் ஒருவனைப் போல், எம் மருங்கும் உலாவுவான்,
புள் உறையும் மானத்தை உற நோக்கிப் புறம் பேர்வான்,
கள் உறையும் மலர்ச்சோலை அயல் ஒன்று கண்ணுற்றான். 5.3.234
------------

5.4 – Sitas Anblick

5.4 காட்சிப் படலம் (5176 - 5334)

அநுமன் நினைத்தல்

மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
'தேடி அவ் வழிக் காண்பெனேல் தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின் உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி! ' 5.4.1

அநுமன் அசோகவனத்தை அடைதல்

என்று, சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்,
அன்று வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம். 5.4.2

பிராட்டி துயர்நிலை (5178-5204)

வல் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள் :
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மெல் மருங்குல்போல், வேறு உள அங்கமும் மெலிந்தாள். 5.4.3

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என, ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள். 5.4.4

விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். 5.4.5

தழைத்த பொன் முலைத் தடம் கடந்து அருவிபோல் தாழப்
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள், இணை நெடும் கண்கள்
மழைக்கண் என்பது காரணக் குறி என வகுத்தாள். 5.4.6

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதலிய அதிகம்
கரிய காண்டலும், கண்ணின்நீர் கடல்புகக் கலுழ்வாள்;
உரிய காதலர் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவுகொண்டால் அன்ன பிணியாள். 5.4.7

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும், நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை உறாத மென் துகிலாள். 5.4.8

அரிது போகவோ விதிவலி கடக்க என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச்
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள். 5.4.9

கமையினாள் திருமுகத்து அயல் கதுப்பு உறக் கௌவிச்
சுமையுடைக் கற்றை நிலத்திடைக் கிடந்த, தூமதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவில்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள். 5.4.10

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்,
தூவி அன்னம் மென் புனல் இடைத் தோய்கிலா மெய்யாள்,
தேவு தணெ்கடல் அமிழ்துகொண்டு அநங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள். 5.4.11

'கண்டிலன்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர், உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்? ' எனக் குழையாப்
புண் திறந்ததில் எரி நுழைந்தால் எனப் புகைவாள். 5.4.12

'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன், மற்று அவரோடு
ஆண்டை என் நிலை உரைப்பவர் இல்லை : இப் பிறப்பில்
காண்டலோ அரிது! 'என்று என்று விம்முறும், கலங்கும்;
மீண்டும் மீண்டும் புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள். 5.4.13

'என்னை நாயகன் இளவலை எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள், எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? ' என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆருயிர் பதைப்பாள். 5.4.14

'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? 'என்று அழுங்கும்;
'விருந்து கண்டபோது என் உறுமோ? ' என்று விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? 'என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள். 5.4.15

'வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல் வையார்,
தின்பர், என் இனிச் செயத்தக்கது? என்று தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன்பொறை எனத் தவிர்ந்தானோ?
என்கொல் எண்ணுவது? 'என்னும், அங்கு இராப்பகல் இல்லாள். 5.4.16

'பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்திக்
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்கொலோ? குறித்துச்
சொற்ற யாண்டு எலாம் உறைந்து அன்றி அந்நகர்த் துன்னான்.
உற்றது உண்டு 'எனாப் படர் உழந்து உறாதன உறுவாள். 5.4.17

'முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பில வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்? ' எனப் பொருமாக்
கரன் நெரித்து, அது கண்டனளாம் எனக் கவல்வாள். 5.4.18

தெம்மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியதாம் என
மும்மடங்கு பொலிந்த முகத்தின் அவ்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள். 5.4.19

'மெய்த் திருப்பதம் மேவு 'என்ற போதினும்
'இத்திரு துறந்து ஏகு 'என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். 5.4.20

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார்சிலை
ஏங்கும் மாத்திரத்து இற்று இரண்டாய்விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள். 5.4.21

இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாலாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள். 5.4.22

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு 'எம்பி நின் தம்பி : நீ
தோழன் : மங்கை கொழுந்தி! 'எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள். 5.4.23

மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கை தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்தபோது தருப்பையில் ஒண்பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக்கொள்வாள். 5.4.24

உரம் கொள் தேம் மலர்ச் சென்னி உரிமைசால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள். 5.4.25

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள். 5.4.26

மழுவின் வாய் இன மன்னரை மூவெழு
பொழுது நூறிப் புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவில்
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள். 5.4.27

ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்தநாள்
காகம் முற்றும் ஓர் கண்ணில வாகிய
வேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள். 5.4.28

வெவ் விராதனை மேவு அரும் தீவினை
வவ்வி மாற்று அரும் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னித் தன் ஆர் உயிர்
செவ் இராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள். 5.4.29

காவல் அரக்கியர் துயிலுதல்

இருந்தனள்; திரிசடை என்னும் இன்சொலில்
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அருந்திறல் அரக்கியர் அல்லும் நள் உறப்
பொருந்தலும் துயில் நறைக் களிபொருந்தினார். 5.4.30

பிராட்டி திரிசடையிடம் கூறல் (5206-5210)

ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
'தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! 'எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள். 5.4.31

'நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்
வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்! 5.4.32

'முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்! 5.4.33

'மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்!
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்
துறந்து கான் புகுந்தநாள் வலம் துடித்ததே! 5.4.34

'நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;
அஞ்சல் என்று இரங்குவாய்! அடுப்பது யாது என்றாள்? 5.4.35

திரிசடை பிராட்டிபால் நற்குறிப்பயன் கூறுதல்

என்றலும் திரிசடை 'இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று! 'எனா நயந்த சிந்தையாள்
'உன்துணைக் கணவனை உறுதல் உண்மையால்!
அன்றியும் கேட்டி! 'என்று அறைதல் மேயினாள். 5.4.36

திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)

'உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிறத் தெனஇசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய்! செவியில் மெல்ல ஓர்
பொன் நிறத் தும்பி வந்து ஊதிப் போயதால்! 5.4.37

'ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்! என்
வாயது கேள்! 'என மறித்தும் கூறுவாள். 5.4.38

துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்! 5.4.39

'எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தெனபுலம்; நவை இல் கற்பினாய்! 5.4.40

'மக்களும் சுற்றமும் மற்று உேளார்களும்
புக்கனர் அப்புலம் போந்தது இல்லையால்!
சிக்கு அற நோக்கினன்! தீய இன்னமும்
மிக்கன கேட்க! 'என விளம்பல் மேயினாள். 5.4.41

'ஆண்தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில பிறந்தவால்; இனம் கொள் செம் சிதல்
தூண்டரு மணிவிளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள்! 5.4.42

'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
இடிபட முழங்கின இரட்டல் இன்றியே;
தடி உடை முகில் குலம் இன்றித் தாவு இல் வான்
வெடிபட அதிருமால் : உதிரும் மீன் எலாம்! 5.4.43

'வில் பகல் இன்றியே இரவு விண்டு அற
எல் பகல் எறித்து உளது என்னத் தோன்றுமால்!
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால்! 5.4.44

'திரியுமால் இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால் இருள்! 5.4.45

'தோரணம் முறியுமால் துளங்கிச் சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வால் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறவில் பொங்குமால்! 5.4.46

'விண் தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்;
புண் தொடர் குருதியில் பொழியுமால் மழை;
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற! 5.4.47

'மங்கையர் மங்கலத் தாலி மற்று அவர்
அம் கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்! 5.4.48

'மன்னவன் தேவி அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன் அரும் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறின
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது ஈது எனா! 5.4.49

என்று அன இயம்பி 'வேறு இன்னும் கேட்டியால்!
இன்று இவண் இப்பொழுது எழுந்தது ஓர் கனா!
வன் துணைக் கோளரி இரண்டு மாறு இலாக்
குன்று இடை உழுவை அம் குழுக்கொண்டு ஈண்டியே! 5.4.50

வரம்பு இலா மதகரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
குரம்பு அறு பிணம் படக் கொன்று மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால்! 5.4.51

'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேய் ஒளி விளக்கம் ஒன்று ஏந்திச் செய்யவள்
நாயகன் தனி மனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென் சொலாய்! 5.4.52

'பொன்மனை புக்க அப் பொருவில் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல்! 'என
'அன்னையே! அதன்குறை காண்! என்று ஆயிழை
இன்னமும் துயில்க! என இருகை கூப்பினாள். 5.4.53

அநுமன் பிராட்டி இருக்கை காணுதல்

இவ்விடை அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்
அவ்விடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான். 5.4.54

துயிலுணர்ந்த அரக்கியர் நிலை (5230-5235)

அவ்வயின் அரக்கியர் அறிவு உற்று 'அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செய்தது ஈது! 'எனா
எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ் அயில் மழு எழுச் சூல வெங்கையார். 5.4.55

வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடையிடை யானை யாளி பேய்
துயில்கொள் வெம் பிலன் எனத் தொட்ட வாயினார். 5.4.56

ஒருபது கையினர் ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர் இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்;
பருவரை எனமுலை பலவும் நாற்றினார். 5.4.57

சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
கால வேல் கப்பணம் கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் :
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார். 5.4.58

கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்
அரி நரி நாய் என அணி முகத்தினர் :
வெரிந் உறு முகத்தினர் : விழிகண் மூன்றினர் :
புரிதரு கொடுமையர் : புகையும் வாயினார். 5.4.59

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் எனப் பெயர்கொடு திரியும் பெற்றியர்
துண் எனத் துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார். 5.4.60

பிராட்டி வருந்தலும் அநுமன் அணுகலும்

ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
தீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள் :
நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான்
ஓய்விலன் உயர்மரப் பணையின் உம்பரான். 5.4.61

அநுமன் சிந்தனை

'அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் : மற்று இதற்கு ஏது என்? 'எனப்
பொருக்கென அவர் இடை பொருந்த நோக்கினான். 5.4.62

அநுமன் பிராட்டியைக் காண்டல்

விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! 5.4.63

பிராட்டியே என்று அநுமன் துணிதல் (5239-5241)

'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளார்!
மடக்கொடி சீதையாம் மாதரே கொலாம்?
கடல்துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள்! 5.4.64

'எள்ளரும் உருவின் நல் இலக்கணங்களும்
வள்ளல்தன் உரையொடும் மாறு கொண்டில!
கள்ள வாள் அரக்கன் அக் கமலக்கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்துவைத்தவா! 5.4.65

'மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்!
ஆவதே? அரவு அணை துயிலின் நீங்கிய
தேவனே அவன்! இவள் கமலச் செல்வியே! 5.4.66

அநுமன் மகிழ்தல்

'வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! 'எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். 5.4.67

பிராட்டியின் தூய்மை கண்டு அநுமன் வியந்து பேசுதல் (5243-5251)

'மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்
தேசு உண்ட திங்களும் என்னத் தேய்ந்து உளாள்!
காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்ட இல்லையால்! அறத்துக்கு ஈறு உண்டோ? 5.4.68

'புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்? 5.4.69

'தேவரும் பிழைத்திலர்! தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால்?
யாவது இங்கு இனிச் செயல் அரியது எம்பிராற்கு?
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம் அரோ! 5.4.70

'கேழிலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள
ஊழியின் இறுதி வந்து உறும்! என்று உன்னினேன் :
வாழிய! உலகு இனி வரம்பில் நாள் எலாம்! 5.4.71

'வெங்கனல் முழுகியும் புலன்கள் வீக்கியும்
நுஙகுவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர்; குலத்தில் வந்து இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ? 5.4.72

'பேண நோற்றது மனைப் பிறவி! பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது! நங்கை தோன்றலால்!
மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு எலாம்
காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால்! 5.4.73

'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்!
இனி அவள் தான் அலாது யாரும் இல்லையால்!
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே!
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம்! 5.4.74

'தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? 5.4.75

செல்வமோ அது! அவர் தீமையோ இது!
அல்லும் நன்பகலும் நின்று அமரர் ஆட்செய்வார்!
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்? 5.4.76

அசோக வனத்துள் இராவணன் தோன்றுதல்

என்று இவை இனையன எண்ணி வண்ணவான்
பொன் திணி நெடுமரப் பொதும்பர் புக்கவன்
நின்றனன் : அவ் வழி நிகழ்ந்தது என் எனில்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான். 5.4.77

இராவணன் அசோகவனத்துட் புகும்நிலை (5253-5271)

சிகர வண் குடுமி நெடுவரை எவையும் ஒருவழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பு திண் திறல் தோள் புடை வயங்கச்
சகரன் நீர் வேலை தழுவிய கதிரில், தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பல் மகுடம் இளவெயில் எறிப்பக் கங்குலும் பகல்பட வந்தான். 5.4.78

உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர, மேனகை வெள்ளடை உதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்றக்
கருப்புரச் சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப. 5.4.79

நான நெய் விளக்கு நால் இரு கோடி நங்கையர் அங்கையால் எடுப்ப,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்கக்
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்பக் கிண்கிணி கலையொடும் கலிப்பப்
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தனெ்னப் பற்பல மங்கையர் படர. 5.4.80

'அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ? ' என்று தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர் இமைப்பு இலா நாட்டத்து எனைவரும் உயிர்ப்பு அவிந்து இருப்ப. 5.4.81

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்பு உறப் பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வருகதிர் இளவெயில் பொருவச்
சூல்நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பின் நூல் துளங்க. 5.4.82

தோள்தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக் கிம்புரி வலயமாச் சுடர்கள்
நாள்தொறும் தொடரும் கலி கெழு விசும்பின் நாெளாடு கோளினை நக்கத்
தாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவக்,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின் முக மலர் இரவினும் கிளர. 5.4.83

தன்நிறத்தோடு மாறுகொண்டு இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கருவரை மருங்கில் தழுவிய புதுவெயில் பொருவ,
மின் நிறக் கதிரில் செற்றிய பசும்பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடுநிழல் பூத்த கற்பக முழுவனம் கவின. 5.4.84

சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடு வரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடையிடை பொலிய,
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் ம்ீப் படர் வெம் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும் இருவரும் தவிர உதித்தது ஓர்படி ஒளிபரப்ப. 5.4.85

பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடியப் படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானை
கயிலையில் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக் கரியின் நின்று அஞ்ச. 5.4.86

அம் கயல் கரும் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர் முதலாம்
குங்குமக் கொம்மைக் குவிமுலைக் கனிவாய்க் கோகிலம் துயர்ந்த மென் குதலை
மங்கையர் ஈட்டம் மால்வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என வயங்க. 5.4.87

தொளை உறு புழை வேய் தூங்கு இசைக் கானம் துயல் உறாது ஒருநிலை தொடர,
இளையவர் மிடறும் இன் நிலை இயக்கக் கின்னரம் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில் அரிப் பாண்டில் தழுவிய முழவொடும் கெழுமி
அளை உறை அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும் அளப்ப. 5.4.88

அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம், ஆதியாம் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த இழைக்குலம் மழைக் கரும் கடைக்கண்
மின் இடைச் செவ்வாய்க் குவி முலைப் பணைத்தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என, நடப்ப. 5.4.89

தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில் சில்லரிப் பாண்டிலின் முறையின்,
மந்தர கீதத்து இசைப்பதம் தொடர்ந்த வகையுறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின் பாடலார், அருகு வந்து அகவ 5.4.90

அந்தியின் அனங்கன் அழல்படத் துரந்த அலர் மலர்ப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின், வேல் நுழைந்து என்ன வெண்மதிப் பசும் கதிர் விரவ,
மந்தமாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மாரியின் வருதேன்
சிந்து நுண் துளிகள் சீகரத் திவலை உருக்கிய செம்பு எனத் தறெிப்ப. 5.4.91

இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரீயத்தினர், ஒல்கிக்
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும், குறுநகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண்கண் செங்கடை ஈட்டம், மார்பினும் தோளினும் வயங்க. 5.4.92

மாலையும், சாந்தும், கலவையும், பூணும் வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும், கொண்டு பின்தொடரப்
பாலின் வெண் பரவைத் திரை கரும் கிரிமேல் பரந்து என சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயலில் வெண்மதியின், வெண்குடை மீது உற விளங்க. 5.4.93

ஆர்கலி அகழி அருவரை இலங்கை அடி பெயர்த்து இடு தொறும் அழுந்த,
நேர் பொரும் பரவைப் பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசைதொறும் நிமிரச்
சார்வு அரும் கடுவின் எயிறு உடைப் பகுவாய் அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இருநில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல. 5.4.94

கேடகத்தோடு, மழு, எழுச் சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர்வாள், அயில், சிலை, குலிசம், முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ்வலி தழைத்த தகைமையர், தடவரை பொறுக்கும்
சூடகத் தடக்கைச் சுடுசினத்து, அடுபோர் அரக்கியர் தலைதொறும் சுமப்ப. 5.4.95

விரிதளிர், முகை, பூக் கொம்பு, அடை, முதல், வேர், பழம், இவை, மணி பொனால் வேய்ந்த
தரு உயர் சோலை திசை தொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்பு உறு சிந்தையால், கெடுத்தது
ஒருமணி நேடும் பல்தலை அரவின், உழைதொறும் உழைதொறும் உலாவி. 5.4.96

அநுமன் இராவணனை நோக்குதல்

இனையது ஓர் தன்மை எறுழ்வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன், அமைவுற நோக்கி,
'வினையமும், செயலும், மேல்விளை பொருளும், இவ் வழி விளங்கும்! 'என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி, இருந்தனன் வந்து அயல் மறைந்தே. 5.4.97

இராவணன் அணுகலும் பிராட்டி அஞ்சுதலும்

ஆயிடை, அரக்கன், அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல,
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு அவள் வெருவிப்
போயின உயிரளாம் என நடுங்கிப் பொறி வரி எறுழ் வலிப் புகைக் கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணை எனக் கரைந்தாள். 5.4.98

இருவர் நிலையினையும் அநுமன் காண்டல்

கூசி ஆவி குலைவுறு வாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்
ஊசல் ஆடல் ஒழிந்த உளத்தினான். 5.4.99

அநுமன் பிராட்டியை வாழ்த்தல்

வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான். 5.4.100

இராவணன் பிராட்டியை இரத்தல் (5276-5289)

அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்
'எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் விடக் குயிலே! நுவல்க 'என்றனன்
வெவ் விடத்தை அமுது என வேண்டுவான். 5.4.101

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான். 5.4.102

இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்! 5.4.103

உலகம் மூன்றும் ஒருங்கு உடன் ஓம்பும் என்
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ. 5.4.104

பூந்தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை! இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானிடர் வாழ்வு அன்றோ? 5.4.105

நோற்கின்றார்களும் நுண்பொருள் நுண்ணிதில்
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார்க் குன்றாம் முலை! என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால். 5.4.106

பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருளும் நாளும் மழலை வழங்குவாய்!
தெரிளும் நான்முகன் செய்தது உன் சிந்தையில்
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ? 5.4.107

ஈண்டு நாளும் இளமையும் என்று இவை
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டும் நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ? 5.4.108

இழவு எனக்கு உயிர் எய்தினும் எய்துக
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்
பழகி நிற்புறு பண்பு இயை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரோ? 5.4.109

பெண்மையும் அழகும் பிறழா மனத்
திண்மையும் முதல் யாவையும் செய்யவாய்க்
கண்மையும் பொருந்திக் கருணைப்படா
வண்மை என்கொல்? சனகன் மடந்தையே! 5.4.110

வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டற்கு இருத்திகொல்? கிள்ளை நீ
நாட்டுங்கால் நெடு நல்லறத்தின் பயன்
ஊட்டுங் காலத்து இகழ்வது உறும் கொலோ? 5.4.111

தக்கது என் உயிர் வீடு உறத் தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ. 5.4.112

தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தாவு இல் மூவுலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின்? இலங்கு இழாய்! 5.4.113

'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால் 'எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்
படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான். 5.4.114

பிராட்டியின் மறுமாற்றம் (5290-5311)

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்
தீந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள்; ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன வல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள். 5.4.115

மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
'கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய
சொல் இது தெரியக் கேட்டி! துரும்பு! 'எனக் கனன்று சொன்னாள். 5.4.116

மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏகவேண்டின்
ஈர் எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது; அறிந்திருந்து அறிவு இலாதாய்!
சீரிய அல்ல சொல்லித் தலை பத்தும் சிந்துவாயோ? 5.4.117

அஞ்சினை ஆதலால் அன்று ஆண்தகை அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைத்து வைத்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி! உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது நோக்குமோ நினது நாட்டம்? 5.4.118

பத்து உள தலையும் தோளும் பல உள பகழி தூவும்
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும்? மேல் நாள் சடாயுவால் தரையின் வீழ்ந்தாய். 5.4.119

தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளும் நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய், இன்று எனின் இறத்தி அன்றே!
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்துக்கும் குறித்தது உண்டோ? 5.4.120

பெற்று உடை வாளும், நாளும், பிறந்து உடை உரனும், பின்னும்
மற்று உடை எவையும் தந்த மலரவன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று உடைந்து இறுதல் மெய்யே! விளக்கின் முன் இருள் உண்டாமோ? 5.4.121

குன்றுநீ எடுத்தநாள் தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா! 5.4.122

மலை எடுத்து எண்திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர்த் தாழ்தியோ? 5.4.123

ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
ஆழி எம் கோம் மகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ? 5.4.124

வெம் சின அரக்கரை விளித்து வீயுமோ?
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தான்
எஞ்சல் இல் உலகெலாம் எஞ்சும்! எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறமும் சான்று அரோ! 5.4.125

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய்! புன்தொழில் விலக்க மேற்கொளாய்!
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலோ
எங்கள் நாயகனையும் நினைந்தது? ஏழை நீ! 5.4.126

மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்
தான் ஒரு மனிதனால்; தவத்துளார் எனில்
தேன் உயர் கொன்றையான் தன்மை தேர்தியால்! 5.4.127

இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்!
செரு வருங்கால் அவர் மேன்மை தேர்தியால்!
பொரு அரும் திரு இழந்து ஆயுள் பொன்றுவாய்! 5.4.128

பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்
வில் கண் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நல் கணார் நல்லறம் துறந்த நாளினும்
இல் கணார் இறந்திலர் இறந்து நீங்கினார். 5.4.129

பூ இலோன் ஆதியாகப் புலன்கள் பாம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர் தாமோ, நிலைநின்று வினையில் தீர்ந்தார்?
ஏவர் மூவுலகின் செல்வம் எய்தினர்? இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்! 5.4.130

இப் பெரும் செல்வம் நின் கண் ஈந்தது, ஓர் ஈசன், யாண்டும்
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மாதவத்தின் அன்றே?
ஒப்பு அரும் திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னித்
தப்புதி அறத்தை, ஏழாய்! தருமத்தைக் காமியாயோ? 5.4.131

மறம் திறம்பாத தோலா வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்கு உடைப் பிணியில் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார்? சொல்லாய்! 5.4.132

தெனதமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
'புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்! நோற்கிலம்! புகுந்த போதே
கொன்று அருள்! உன்னால் அன்னார் குறைவது சரதம்! கோவே! '
என்றனர், யானே கேட்டேன், நீ அதற்கு இயைவ செய்தாய். 5.4.133

உன்னையும் கேட்டு, மற்று, உன் ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை, இவ் அரக்கர் சேனைப் பெருமையும் முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும், தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ? 5.4.134

ஆயிரம் தடக்கையால் நின் ஐந்நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக் குத்தி, வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ? நீதி நிலை அறிந்திலாத நீசா! 5.4.135

கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின்றோயை
'அடுக்கும், ஈது அடாது! 'என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது, முடிவு அன்றி முடிவது உண்டோ? 5.4.136

இராவணன் சினத்தல் (5312-5313)

என்ற அறத்து உரை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன; வெயில்விடு பகுவாய்
குன்று இறத் தழெித்து உரப்பின; குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை. 5.4.137

வளர்ந்த தாளினன், மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன், அனல்சொரி கண்ணினன், 'இவளைப்
பிளந்து தின்பென்! 'என்று உடன்று நின்றனன், அடிபெயரான்,
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப. 5.4. 138

இராவணன் நிலை கண்ட அநுமன் நினைவு (5314-5315)

அன்னகாலையில் அநுமனும், 'அருந்ததிக் கற்பின்
என்னை ஆளுடை நாயகன் தேவியை என்முன்
சொன்ன நீசன் கை தொடுவதன்முன் துகைத்து உழக்கிப்
பின்னை, நின்றது செய்குவென்! ' என்பது பிடித்தான். 5.4.139

'தனியன், நின்றனன் தலைபத்தும் கடிது உகத் தாக்கிப்
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சிப்
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனன் போவென்
இனிதின் 'என்பதும் நினைந்து தன் கரம் பிசைந்து இருந்தான 5.4.140

சீற்றம் தணிந்து இராவணன் பேசுதல் (5316-5324)

ஆண்டு, அவ் வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின் அவிவுறும் நிலையில்,
மீண்டு நின்று, ஒருதன்மையால், இவை இவை விளம்பும். 5.4.141

கொல்வென் என்று உடன்றேன், உன்னைக் கொல்கிலென், குறித்துச் சொன்ன
சொல் அளவு; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
ஒல்வது ஈது, ஒல்லாது ஈது, என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ?
வெல்வதும் தோற்றல் தானும் விளையாட்டின் விளைந்த மேல்நாள். 5.4.142

ஒன்று கேள் உரைக்க! நிற்கு ஓர் உயிர் என உரியோன் தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின் உயிர் விடில் குற்றம் கூடும்,
என்றன் ஆர் உயிரும் நீங்கும் : என்பதை இயைய எண்ணி
அன்று நான் வஞ்சம் செய்தது; ஆர் எனக்கு அமரின் நேர்வார்? 5.4.143

மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு
யான் என்பது அறிந்தால் வாரார், ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய்! தேவர்தாம் யாவரே எம்
கோன் என்பது அறிந்து பின்னைத் திறம்புவார், குறையின் அல்லால்? 5.4.144

வென்றோரும் இருப்ப, யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர்
என்றோரும் இருப்ப அன்றே இந்திரன் ஏவல் செய்ய
ஒன்றோ இவ் உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே,
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ? 5.4.145

மூவரும் தேவர் தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர் பழி பெறப் பயன்தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர் தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டக்
கூவிநின்று ஏவல் கொள்வென், காணுதி! குதலைச் சொல்லாய்! 5.4.146

சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறுதொழில் மனிதரோடே
முற்றியது ஆய வீர முனிவு என்கண் முளையாதேனும்,
இற்றை இப்பகலில் நொய்தின் இருவரை ஒருகையாலே
பற்றினென் கொணரும் தன்மை காணுதி! பழிப்பு இலாதாய்! 5.4.147

பதவு இயல் மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின், உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டிச் செய்தி நீ தேர்ந்தது இன்றி;
இதம் உனக்கு ஈதே ஆகில், இயற்றுவல்! காண்டி இன்னும்! 5.4.148

பள்ள நீர் அயோத்தி நண்ணிப் பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர் தம்மை எல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேர் அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென் நின் உயிரும்! என்னை அறிந்திலை! குறைந்த நாேளாய்! 5.4.149

இராவணன் பிராட்டியை அச்சுறுத்துதல்

ஈது உரைத்து அழன்று பொங்கி, எரிகதிர் வாளை நோக்கித்
'தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது!
ஆதலில், பின்னை நீயே அறிந்தவாறு அறிதி! 'என்னாப்
போது அரிக் கண்ணினாளை அகத்துவைத்து, உரப்பிப் போனான். 5.4.150

இராவணன் காவல் அரக்கியர்க்குக் கட்டளையிட்டுச் செல்லல்

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்! அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென்! 'என்னா, நகை இலா முகத்துப் பேழ்வாய்
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு வேறு உரைத்துப் போனான். 5.4.151

காவலரக்கியர் பிராட்டியைக் கனன்று கூறல் (5327-5331)

போயினன் அரக்கன் பின்னைப் பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றித்
தீய வல் அரக்கிமார்கள் தழெித்து இழித்து உரப்பிச் சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார். 5.4.152

முன்முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகு உற்றார்,
மின்மின் என்னும் சூலமும் வாளும் மிசை ஓச்சிக்
'கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்துக் குடர் ஆரத்
தின்மின்! தின்மின்! 'என்று தழெித்தார் சிலர் எல்லாம 5.4.153

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம் வல்லான், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்? ' என்றார் சிலர் எல்லாம். 5.4.154

'மண்ணில் தீய மானுயர்த் தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின்முதல் மாயும் பிணிசெய்தாய்!
புண்ணில் கோல் இட்டால் அன சொல்லிப் பொதுநோக்காது
எண்ணில், காணாய் மெய்ம்மையை! ' என்றார் சிலர் எல்லாம். 5.4.155

'புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ, உணர்வு இல்லாய்!
இக்கணம் இற்றாய்! உன் இனம் எல்லாம் இனி வாழா!
சிக்க உரைத்தேம்! 'என்று தழெித்தார் சிலர் எல்லாம். 5.4.156

பிராட்டி வருந்துதல்

கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதோன்
வெல்வான் நம் கோன்! தின்னுமின்! வம்! 'என்பவர் மெய்யும்,
வல்வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்வாய் நல்லாள், கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள். 5.4.157

திரிசடை சொல்லால் பிராட்டி ஆறுதலடைதல்

இன்னோர் அன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
'முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல், பிழை! 'என்றாள்
'அன்னே! நன்று! 'என்றாள், அவர் எல்லாம் அவிவு உற்றார். 5.4.158

திரிசடை சொல்லால் காவலரக்கியர் அடங்குதல்

அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்லப்
பிறிந்தார் சீற்றம், மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்,
செறிந்தார் ஆய தீவினை அன்னார், தறெல் எண்ணார்,
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள். 5.4.159
--------------

5.5 – Hanuman zeigt sich

5.5 உருக் காட்டு படலம் (5335 -5452 )

அநுமன் விஞ்சையால் காவலரக்கியர் உறங்குதல்

'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே : தறெு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் :
வேண்டத் துஞ்சார் 'என்று, ஒரு விஞ்சை வினை செய்தான்;
மாண்டு அற்றார் ஆம் என்றிட அன்னார் மயர்வு உற்றார். 5.5.1

பிராட்டி துயர்நிலைக் கிளவி (5336-5343)

துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள். 5.5.2

கருமேகம் நெடும் கடல் கா அனையான்
தருமே தமியேன் தனது ஆர் உயிர்தான்?
உரும் ஏறு உறழ் வெம் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய்! வலி ஆர் விதியே! 5.5.3

கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யாதும் விளித்திலிரோ? 5.5.4

தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் : எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனான் உடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ? 5.5.5

வாராது ஒழியான் எனும் வன்மையினால்
ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :
தீரா ஒரு நாள் வலி; சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே! 5.5.6

தரு ஒன்றிய கான் அடைவாய் 'தவிர்நீ :
வருவென் சில நாளினில் : மாநகர்வாய்
இரு! 'என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ? 5.5.7

பேணும் உணர்வே! உயிரே! பெருநாள்
நாண் இன்று உழல்வீர் தனிநாயகனைக்
காணும் துணையும் கழிவீரலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ? 5.5.8

முடியா முடி மன்னன் முடிந்திடவும்
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியான் உடன் வந்து வனம் புகுதும்
கொடியான் வரும் என்று குலாவுவதோ? 5.5.9

பிராட்டி இறக்கத் துணிதல் (5344-5354)

என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்
'ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் : யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் 'எனா. 5.5.10

பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் :
நிறை இரும் பல்பகல் நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனையும் புனிதன் தீண்டுமோ? 5.5.11

உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் :
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ? 5.5.12

சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்!
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று அரோ!
கற்புடை மடந்தையர் கதை உேளார்கள் தாம்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால்? 5.5.13

பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உறப் பொழுது போக்கி யான்
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன்? 5.5.14

எப்பொழுது இப் பெரும் பழியின் எய்தினேன்
அப்பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் :
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான்
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ? 5.5.15

அன்பு அழி சிந்தையர் ஆய ஆடவர்
வன்பழி சுமக்கினும் சுமக்க : வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே? 5.5.16

வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி என்
மஞ்சனை வைது பின் வழிக்கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ? 5.5.17

வல் இயல் மறவர் தம் வருக்கம் மாசு அற
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக :
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ? 5.5.18

வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவ மடந்தையர் முன்பு பேதையேன்
'கரும் தனி முகிலினைப் பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள்! 'என ஏச நிற்பெனோ? 5.5.19

அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
'இல் புகத் தக்கலை! 'என்னின் யான் உடைக்
கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்? 5.5.20

பிராட்டி மாதவிச் சூழலடைதல்

'ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறு! 'எனாச்
'சாதல் காப்பவரும் என் தவத்தில் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை 'என்று ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள். 5.5.21

பிராட்டி உயிரைவிட முயலுதல்

எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி 'ஈங்கு
உய்திறம் இல்லை! 'என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால். 5.5.22

அநுமன் தன்னை இராமதூதன் என்று தெரிவித்தல் (5357-5358)

கண்டனன் அநுமனும் : கருத்தும் எண்ணினான் :
கொண்டனன் துணுக்கம் : மெய்தீண்டக் கூசுவான் :
'அண்டர் நாயகன் அருள்தூதன் யான்! 'எனாத்
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான். 5.5.23

அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன். 5.5.24

இராமன் வராமைக்குக் காரணம் கூறல்

ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ? 5.5.25

அநுமன் தான் இராமதூதனே, ஐயுறவேண்டா எனல்

'ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்
மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;
கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!
நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! 'என்றான். 5.5.26

பிராட்டி அநுமனைத் தெளிதல்

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
'நின்றவன் நிருதன் அல்லன் : நெறி நின்று பொறிகள் ஐந்தும்
வென்றவன் : அல்லன் ஆகில், விண்ணவன் ஆதல் வேண்டும் :
நன்று உணர்வு : உரையும் தூயன் : நவை இலன்போலும்! 'என்னா. 5.5.27

பிராட்டி மகிழ்தல்

அரக்கனே ஆக : வேறு ஓர் அமரனே ஆக : அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக : கொடுமை ஆக :
இரக்கமே ஆக : வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத், தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ? 5.5.28

பிராட்டி அநுமனை வினவுதல்

என நினைத்து எய்த நோக்கி, 'இரங்கும் என் உள்ளம் : கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் :
நினைவு உடைச் சொற்கள் கண்ணீர் நிலம்புகப் புலம்பா நின்றான் :
வினவுதற்கு உரியன் என்னா, 'வீர! நீ யாவன்? என்றாள். 5.5.29

அநுமன் தன்வரலாறு விரித்தல் (5364-5371)

ஆயசொல் தலைமேல் கொண்ட அம் கையன், 'அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு, தேடிய துணைவன், தொல்லைக்
காய்கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்று உளன், நவையில் தீர்ந்தான். ' 5.5.30

மற்றவன் முன்னோன் வாலி, இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன், தேவர் வேண்ட, வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய அமுது எழக் கடைந்த தோளான். 5.5.31

அன்னவன் தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன், நாமமும் அநுமன் என்பேன். 5.5.32

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன, உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப, வேலை தனித்தனி கடக்கும் தாள,
குழுவின, உம் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழு இல செய்தற்கு ஒத்த வானரம், வானின் நீண்ட. 5.5.33

துப்பு உறு பரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப்புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின், அண்டத்து
அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன. 5.5.34

புன்தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன் தன்னை வேறு கொண்டு இருந்து கூறித்
'தனெ்திசைச் சேறி! 'என்றான் : அவன் அருள் சிதைவது ஆமோ? 5.5.35

கொற்றவற்கு ஆண்டுக் காட்டிக் கொடுத்தபோது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தற் பாற்றோ? உயிர்நிலை பிறிதும் உண்டோ
இற்றைநாள் அளவும்? அன்னா! அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ! 5.5.36

'ஆயவன் தன்மை நிற்க அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தனெ்பால், வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயினன் படர்ந்து, தீர வினையவன் விடுத்தான் என்னைப்
பாய்திரை இலங்கை மூதூர்க்கு ' என்றனன் பழியை வென்றான். 5.5.37

இராமபிரான் திருமேனிநிலை கூறுக எனப் பிராட்டி அநுமனை வேண்டுதல்

எய்தின உரைத்தலோடும், எழுந்து பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
'உய்தல் வந்து உற்றதோ? 'என்று அருவிநீர் ஒழுகு கண்ணாள்,
'அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து? அறிவி! 'என்றாள். 5.5.38

இராமபிரான் திருமேனியழகை அடிமுதல் முடியீறாக அநுமன் கூறல் (5373-5393)

'படி எடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று : படிவம், பண்பின்
முடிவு உள உவமைக்கு எல்லாம் : இலக்கணம், உரைக்கின் முந்தா :
துடி இடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி! 'என்னா,
அடிமுதல் முடி ஈறாக அறிவுற அநுமன் சொல்வான். 5.5.39

திருவடிச் செவ்வி

சேயிதழ்த் தாமரை என்று சேண் உேளார்
ஏயினர்; அதன்துணை எளியது இல்லையால்
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய்திரைப் பவழமும் குவளைப் பண்பிற்றால். 5.5.40

திருவடி விரல் செவ்வி

தளம்கெழு கற்பக முகிழும் தண்துறை
இளம்கொடிப் பவழமும் கிடக்க : என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன்
இளம்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய்! 5.5.41

திருவடி விரல்களின் நகச் செவ்வி

சிறியவும் பெரியவும் ஆகித் திங்கேளா
மறு இல பத்து உள அல்ல மற்று இனி
எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்கு யான் உவமை ஆவன. 5.5.42

மீட்டும் திருவடிச் செவ்வி

பொருந்தின நிலனொடு போந்து கான் இடை
வருந்தின எனின் அது நூலை மாறுகொண்டு
இருந்தது; நின்றது புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர்வன; உணர்த்தற் பாலதோ? 5.5.43

கணைக்கால் செவ்வி

தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கும் நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங்கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது? அன்னையே! 5.5.44

தொடைகளின் செவ்வி

அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மதகரிக் கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இவ் உலகில் கூடுமோ? 5.5.45

திருவுந்தியின் செவ்வி

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழும் மணி உந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு அரோ. 5.5.46

திருமார்பின் செவ்வி

பொரு அரு மரகதப் பொலம் கொள் மால்வரை
வெரு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னில் பின்னை அத்
திருவினில் திரு உளார் யாவர்? தெய்வமே! 5.5.47

கைத்தலங்களின் செவ்வி

நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோள்துறு கரம் எனச் சிறிது கூறலாம்
தோடு உறும் மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள்துறு தடக்கை வேறு உவமை சாலுமோ? 5.5.48

கைந் நகங்களின் செவ்வி

பச்சிலைத் தாமரை பகல் கண்டால் அன
கைச்செறி முகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே. 5.5.49

திருப் புயங்களின் செவ்வி

திரண்டில ஒளியில திருவின் சேர்வில
முரண்தரு மேருவின் சிலையின் மூரிநாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்றுபோன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமை ஏற்குமோ? 5.5.50

திருமிடற்றின் செவ்வி

கடல்படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ? உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க, எங்களால். 5.5.51

திருமுகச் செவ்வி

அண்ணல்தன் திருமுகம் கமலம் ஆமெனில்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண்மதி ஆம் என உரைக்கத் தக்கதோ
வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால். 5.5.52

திருவாயின் செவ்வி

'ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டு அலர்ந்த செங்கேழ் நளினம் 'என்று உரைக்க நாணும்;
ஈரமுண்டு அமுதம் ஊறும் இன்னுரை இயம்பாதேனும்,
மூரல் வெண்முறுவல் பூவாப் பவழமோ மொழியற்பாற்றே? 5.5.53

பற்களின் செவ்வி

முத்தம் கொல்லோ? முழுநிலவின் முறியின் திறனோ? முறை அமுதத்
தொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்தின் முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம்முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்! 5.5.54

திருமூக்கின் செவ்வி

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழுமா நிழல்பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திருமூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ? 5.5.55

திருப்புருவச் சிறப்பு

பனிக் கல் சுரத்துக் கரன் முதலோர் கவந்தப் படையும், பல்பேயும்,
தனிக் கைச்சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறமும்,
'இனிக் கட்டு அழிந்தது அரக்கர்குலம்! ' என்று சுருதி ஈர் இரண்டும்
குனிக்கக் குனித்த புருவத்துக்கு உவமை நீயே கோடியால்! 5.5.56

திருநெற்றியின் பெற்றி

வரும் நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒருநாள் கவ்வும் உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவு உற்ற
இருநால் பகலின் இலங்குமதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்ப்
பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறும் மன்னோ! 5.5.57

திருக்குழலின் செவ்வி

நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும் நறும்குஞ்சி
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ? 5.5.58

நடையின் செவ்வி

புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்தப் புவி ஏழின்
எல்லை ஏற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி,
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவு ஆன
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்தயானை வருந்தாதோ? 5.5.59

இராமபிரான் கூறிய அடையாளங்களை அநுமன் உரைக்கத் தொடங்குதல்

என்ன மொழிய, அம் மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்னத்
தன்னை அறியாது அழிவாளைத் தரையின் வணங்கி, 'நாயகனார்
சொன்ன குறி உண்டு : அடையாளச் சொல்லும் உளவால் : தொழுதகைய
அன்னநடையாய்! கேட்க! 'என அறிவன் அறைவான் ஆயினான். 5.5.60

அநுமன் கூறிய அடையாள உரைகள் (5395-5397)

'நடத்தல் அரிது ஆகும் நெறி : நாள்கள் சில : தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி! 'என, அச்சுற்று,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய்! 5.5.61

நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
'யாண்டையது கான்? 'என இசைத்ததும் இசைப்பாய். 5.5.62

எள் அரிய தேர்தரு சுமந்திரன் 'இசைப்பாய்
வள்ளல் மொழி! வாசகம் 'எனத் துயர் மறந்தாள்
'கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள! 'என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும். 5.5.63

அநுமன் திருவாழி காட்டுதல்

'மீட்டும் உரை வேண்டுவன இல்லை 'என மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
'நீட்டு இது! 'என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 5.5.64

ஆழிகண்ட பிராட்டிநிலை (5399-5400)

இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல்? இந் நல் நுதலி செய்கை! 5.5.65

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்,
பழம் தனம் இழந்தன படைத்தவரும் ஒத்தாள்,
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்,
உழந்து விழி பெற்றது ஒர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 5.5.66

திருவாழி பெற்ற பிராட்டிநிலை (5401-5404)

வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? 5.5.67

மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீள
நோக்கும் நுவலக் கருதும் ஒன்றும் நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள். 5.5.68

நீண்ட விழி நேரிழை தன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் அம்மா!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ? 5.5.69

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது : அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது : வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி. 5.5.70

பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5405-5406)

இத்தகையள் ஆகி உயிர் ஏம் உற விளங்கும்
முத்த நகையாள் விழியின் ஆலி முலைமுன்றில்
தத்தி உக மென்குதலை தள்ள 'உயிர் தந்தாய்!
உத்தம! 'எனா இனைய வாசகம் உரைத்தாள். 5.5.71

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு 'என்றாள். 5.5.72

பிராட்டி அநுமனை வாழ்த்தல்

'பாழிய பணைத்தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும், இன்று என இருத்தி! 'என்றாள். 5.5.73

பிராட்டி அநுமனிடம் இராமபிரானைப் பற்றி வினவுதல்

மீண்டு உரை விளம்பல் உற்றாள், 'விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான் இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல அறிந்தது? 'என்றாள்;
தூண் திரண்டு அனைய தோளான் உற்றது சொல்லல் உற்றான். 5.5.74

அநுமன் இராமனது வரலாறு விரித்தல் (5409-5429)

உழைக் குலத்து இயையும் மாய உருவுகொண்டு உறுவல் செய்தான்,
மழைக் கருநிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்,
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்யப் போய், வையம் சேர்வான்,
அழைத்த வல் ஓசை உன்னை மயக்கியது; அரக்கன் சொல்லால். 5.5.75

'இக்குரல் இளவல் கேளாது ஒழிக! 'என இறைவன் இட்டான்
மெய்க்குரல் சாபம் : பின்னை, விளைந்தது விதியின் வெம்மை :
'பொய்க்குரல் இன்று! பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்! 'என்பான்,
கை குரல் வரிவில்லானும், இளையவன் வரவு கண்டான். 5.5.76

கண்டபின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும் உற்றது புகலக் கேட்டான் :
வண்டு உறை சாலை வந்தான், நின் திருவடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான் : இன்னல் உழத்தற்கே ஏது அன்றோ? 5.5.77

தேண்டி நேர் கண்டேன் வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே நீ! அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை : அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய், ஆண்டு அங்கு எவ் உயிர் விடும் இராமன்? 5.5.78

அந்நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன்னரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். 5.5.79

வந்து அவன்மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
'எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு! 'என, இலங்கைவேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெம் தீ. 5.5.80

சீறி, 'இவ் உலகம் மூன்றும் தீந்து உகச் சின வாய் அம்பால்
நூறுவென்! 'என்று கைவில் நோக்கிய காலை, 'வெய்தின்,
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி! 'என்று தாதை ஆற்றலில், சீற்றம் ஆறி. 5.5.81

'எவ்வழி ஏகிற்று அன்னான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய்! கூறுக! 'என்னச், செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்;
எவ்விய வரி வில் செங்கை இருவரும் இடரின் வீழ்ந்தார். 5.5.82

அயர்த்தவர் அரிதில் தேறி, ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்
செயத்தகு கடன்கள் யாவும் தேவரும் மருளச் செய்தார் :
'கயத்தொழில் அரக்கன்தன்னை நாடி நாம் காண்டும் 'என்னாப்
புயல் தொடு குடுமிக் குன்றும் கானமும் கடிது போனார். 5.5.83

அவ்வழி நின்னைக் காணாது அயர்பவன், அரிதில் தேறிச்
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல் என் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ்வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கல் உற்றான். 5.5.84

கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான், மயல்கொண்டு, புலன்கள் வேறு ஆய்,
நல் மத்தம் நாகம் தலைசூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான 5.5.85

'போது ஆயின போது உன தண்புனல் ஆடல் பொய்யோ?
சீதா, பவழக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா! தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! 'என்னாக்
கோதாவரியைச் சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான். 5.5.86

'குன்றே! கடிது ஓடினை கோமளக்கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி! காட்டலை என்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உன் உடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியாக் கரி ஆக்க 'என்றான். 5.5.87

'பொன்மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ,
என்மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண்? 'என்னா,
நல் மான்களை நோக்கி, 'நும் நாமமும் மாய்ப்பென் இன்றே,
வில் மான் கொலை வாளியின் 'என்று வெகுண்டு நின்றான். 5.5.88

வேறு உற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறு உற்ற நெஞ்சில் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர்பெற்று இயல்வும் சில தேறல் உற்றான். 5.5.89

வந்தான் இளையானொடும் வான் உயர் தேரின் வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம் குலநாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில்; தன் உயிர் காதலோனும்
செந்தாமரைக் கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய. 5.5.90

உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்டக்
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான். 5.5.91

தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை,
துணிகொண்டு இலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே, அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணிகண்டது : பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால். 5.5.92

அயர்வு உற்று, அரிதில் தெளிந்து, அம்மலைக்கு அப்புறத்து ஓர்
உயர் பொன்கிரி உற்றுளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்ற அவ் இராவணன் வால் இடை பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான். 5.5.93

ஆயானை ஒர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பில்
தூயான்வயின் அவ் அரசு ஈந்தவன் 'சுற்று சேனை
மேயான் வருவாய்! 'என விட்டனன் மேவுகாறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு இரண்டும். 5.5.94

'பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவித்,
தறெ்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை 'என்னா,
முன் கூடின கூறினன், காலம் ஒர் மூன்றும் வல்லான். 5.5.95

இராமனது துயர் நினைந்த பிராட்டிநிலை

அன்பினன் இவ் உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்புற உருகினள் இரங்கி ஏங்கினள்
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள். 5.5.96

சீதை அநுமனைக் கடல் கடந்தவாறு வினவுதல்

நையுறு சிந்தையள் நயன வாரியின்
தொய்யல் வெம் சுழி இடை சுரிக்கும் மேனியள்
'ஐய! நீ அளப்பு அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு? இயம்புவாய்! 'என்றாள். 5.5.97

அநுமன் கடல் கடந்தவாறு கூறுதல்

'சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூயதாள்
ஒருங்கு இடை உணர்வினோர் ஓய்வு இல் மாயையின்
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனென் காலினால் 'என்றான். 5.5.98

பிராட்டி அநுமனை மீண்டும் வினவுதல்

'இத்துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்! 'என்றாள்
முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள். 5.5.99

பிராட்டிக்கு அநுமன் தன் பேருருக் காட்டுதல்

சுட்டினன்; நின்றனன்; தொழுத கையினன்
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரும் நெடுமுகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான். 5.5.100

அநுமன் காட்டிய பேருருவின் நிலை (5435-5440)
செவ்வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான்,
வெவ்வழிப் பூதம் ஓர் ஐந்தின் மேலதோ?
அவ்வழித்து அன்று எனின், அநுமன்பாலதோ?
எவ்வழித்து ஆகும்? என்று எண்ணும் ஈட்டதே. 5.5.101

ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம் தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம். 5.5.102

கண் தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண் தலம் இருபுடை விளங்கும் மெய்ம்மைய
குண்டலம் இரண்டும் அக் கோளில் மாச்சுடர்
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே. 5.5.103

ஏண் இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை அநுமனை அமைய நோக்குவான்
'சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று! 'எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன். 5.5.104

எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல் இல் உயிரெலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன் தானும் தன் கமலக் கண்களால். 5.5.105

எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ்கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம் தாம் எலாம். 5.5.106

பேருருவை ஒடுக்கிக் கொள்ளும்படி அநுமனைப் பிராட்டி வேண்டுதல் (5441-5442)

வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்
'அஞ்சினென்! இவ் உரு அடக்குவாய்! 'என்றாள். 5.5.107

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழுவினது உலகு : இனிக் குறுகுவாய்! 'என்றாள்;
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினள் ஆமெனத் தளிர்க்கும் சிந்தையாள். 5.5.108

அநுமன் பேருரு ஒடுங்குதல்

ஆண்தகை அநுமனும் 'அருளதாம்! 'எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக்கு உரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டு அரு விளக்கு அனாள் இனைய சொல்லினாள். 5.5.109

பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5444-5448)

இடந்தாய் உலகை மலையோடும், இடித்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படந்தாழ் அரவை ஒருகரத்தால் பறித்தாய் எனினும் பயன் இன்றால் :
நடந்தாய் இடையே என்றாலும் நாணாம் நினக்கு : நளி கடலைக்
கடந்தாய் என்றால் என்னாகும்? காற்றாம் அன்ன கடுமையாய்! 5.5.110

ஆழி நெடும் கை ஆண்தகைதன் அருளும் புகழும் அழிவு இன்றி
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளையானாய்
பாழி நெடும் தோள் வீரா! நின் பெருமைக்கு ஏற்பப் பகை இலங்கை
ஏழு கடற்கும் அப்புறத்தது ஆகாது இருந்தது இழிவு அன்றோ? 5.5.111

அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே, ஐம்புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ? குணங்களால், விரிஞ்சன் முதலாம் மேலானோர். 5.5.112

மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன்; ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே! நிருதர் என் ஆவர்? நீயே எங்கோன் துணை ஆனால். 5.5.113

'மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்கேளாடும் வேர் அறுத்தேன்;
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும்; புகழே அன்றிப் புன்பழியும்
தீண்டேன்! 'என்று மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள். 5.5.114

அநுமன் பணிமொழி

அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான் : 'அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார் : யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன் : ஏவக்கடவ பணிசெய்வேன். ' 5.5.115

வானரர் பெருமையினை அநுமன் கூறுதல்

வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை! இவ் வேலைப்
பள்ளம் ஒருகை நீர் அள்ளிக் குடிக்கப் போதும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாது ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளதாவது; அறிந்த பின்னும் உளது ஆமோ? 5.5.116

வானரப் படைத்தலைவர் பெயர்

வாலி இளவல், அவன்மைந்தன், வசந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடும் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், கனகன், கவயன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்போன். 5.5.117

வானரப் படைத்தலைவர் பெருமை

தம்பன், தூமத் தனிப்பேரோன், ததியின்வதனன், சதவலி என்று
இம்பர் உலகோடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன்கை
அம்பின் உதவும் படைத்தலைவர், அவரை நோக்கின் இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறையிடவும் போதார் : கணக்கு வரம்பு உண்டோ? 5.5.118
--------------

Nachklang

Der Erzählweg setzt sich auf der nächsten Textseite fort. Nimm dir zuvor einen Augenblick für die Begegnungen dieses Abschnitts: Wo wurde Treue sichtbar, wo brauchte es Mitgefühl, wo blieb eine Frage offen? Auch eine kurze Zeit der Stille kann helfen, das Gelesene nachklingen zu lassen.

Video von Yoga Vidya als Begleitung zur Verehrung und Bedeutung Ramas:

Vorheriger Artikel: Kamba Ramayanam Tamilischer Text Teil 1.

Fortsetzung: Kamba Ramayanam Tamilischer Text Teil 3.

Die Artikel dieser Ausgabe

Übersicht zu Werk, Handlung und spiritueller Bedeutung

Textgrundlage und Lesehinweise

Die Ausgabe folgt Project Madurai. Die deutsche Fassung ist eine vorläufige Prosaübersetzung; die Umschrift ist eine regelbasierte, schriftnahe Übertragung. Quellenbedingte Schreibungen und Nummerierungsabweichungen sind nicht vollständig philologisch bereinigt. Der Gesamtbestand dieser Ausgabe umfasst 10.535 Verspositionen bis 6.39.38. Die tamilischen Zwischenüberschriften stammen teilweise von den Herausgebern.

Siehe auch

Yoga: Grundlagen und Praxis · Meditation bei Yoga Vidya

Seminare

Indische Schriften

26.12.2026 - 02.01.2027 Indische Rituale Ausbildung

Du interessierst dich für indische Rituale? Du hast die einzigartige Gelegenheit, in dieser Rituale Ausbildung bei Yoga Vidya die kleine Puja, große P…
Sukadev Bretz, Shankari Winkelbauer
01.01.2027 - 10.01.2027 Yogalehrer Weiterbildung Intensiv A1 - Jnana Yoga und Vedanta

Kompakte, vielseitige Weiterbildung für Yogalehrer rund um Jnana Yoga und Vedanta.
Tauche tief ein ins Jnana Yoga und Vedanta, studiere die indischen S…
Vedamurti Dr Olaf Schönert

Kundalini Yoga

06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen
13.11.2026 - 15.11.2026 Kundalini Yoga Mittelstufe

Intensives Kundalini Yoga Seminar zur Erweckung der inneren Kundalini Energie, Erweiterung des Bewusstseins und Entfaltung des vollen Potentials. Yoga A…
Manuel Hirning

Chakras

20.11.2026 - 22.11.2026 Heilreise durch die Chakren

Tauche ein in eine transformative Reise durch die sieben Hauptchakren und erfahre, wie du deine Energiezentren aktivieren, ausbalancieren und für dein …
Nese Niekrens, Gajendra Sebastian Niekrens
26.12.2026 - 01.01.2027 Kundalini Yoga Intensiv Praxis - Live Online

Intensives Praktizieren der im Mittelstufen-Seminar gelernten Übungen für noch tiefere Erfahrung und Erweiterung des Bewusstseins ohne viel Theorie. L…
Sukadev Bretz, Shaktipriya Vogt, Radharani Birkner

Energiearbeit

04.11.2026 - 04.11.2026 Einführung in die Chakratherapie - Online Workshop

Uhrzeit: 18 - 21 Uhr
Ein Chakra ist ein feinstoffliches Kraftzentrum des Körpers, welches wichtige Körperfunktionen steuert und bestimmten Organen zug…
Beate Menkarski
06.11.2026 - 08.11.2026 Kundalini Yoga Einführung

Gründliche Einführung in die Theorie und Praxis des Kundalini Yoga, Yoga der Energie. Die praktischen Übungen des Kundalini Yoga umfassen Pranayama (…
Arjuna Wingen