Nalayira Divya Prabandham Text in tamilischer Schrift Teil 2

Aus Yogawiki

Nalayira Divya Prabandham Text in tamilischer Schrift Teil 2: In tamilischer Schrift begegnen die Lieder der Alvars in ihrer überlieferten sprachlichen Gestalt. Wer eine Strophe betrachtet, liest oder singt, kann die Nähe von Klang, poetischem Bild und Hingabe erfahren. Die deutsche Übersetzung und die römische Umschrift helfen beim Zugang; die Besonderheiten der shrivaishnavischen Tradition bleiben maßgeblich.

Alle Ausgaben: Deutsche Übersetzung und Einführung · Römische Umschrift · Tamil 1–2031 · Tamil 2032–4000 und Begleitverse

Umfang: Gesamtzählung 2032–4000 sowie 44 gesonderte Begleitverse. Die Nummern 2711–2712 bezeichnen in der gewählten Gliederung keine eigenen Textblöcke; es wurden keine fehlenden Verse erfunden. Quellenstörungen und unsichere Lesarten bleiben erhalten.

Ramanuja, dem die letzten 108 Hauptstrophen gewidmet sind.

Tamilischer Text 2032–3419

Deutsche Übersetzung 2032–3419 · Werkhinweise und Quellen

Die vorgesetzten Gesamtzahlen sind redaktionell geordnet, die lokalen Strophenzahlen der Vorlage bleiben erhalten.

Tirumangai Alvar: Tirukkuruntandagam (2032–2051)

Deutsch · Umschrift 2032. நிதியினை பவளத் தூணை
நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாளக்
கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட
தொண்டனேன்-விடுகிலேனே (1)

2033. காற்றினை புனலை தீயை
கடிமதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய
எழில் மணித் திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை
அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை குணங்கொண்டு உள்ளம்
கூறு-நீ கூறுமாறே (2)

2034. பா இரும் பரவை-தன்னுள்
பரு வரை திரித்து வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட
அப்பனை எம் பிரானை
வேய் இருஞ் சோலை சூழ்ந்து
விரி கதிர் இரிய நின்ற
மா இருஞ் சோலை மேய
மைந்தனை-வணங்கினேனே (3)

2035. கேட்க யான் உற்றது உண்டு
கேழல் ஆய் உலகம் கொண்ட
பூக் கெழு வண்ணனாரைப்
போதரக் கனவில் கண்டு
வாக்கினால் கருமம்-தன்னால்
மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி
விழுங்கினேற்கு இனியவாறே (4)

2036. இரும்பு அனன்று உண்ட நீர்போல்
எம் பெருமானுக்கு என்-தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு
அடிமைபூண்டு உய்ந்து போனேன்
வரும் புயல் வண்ணனாரை
மருவி என் மனத்து வைத்து
கரும்பின் இன் சாறு போலப்
பருகினேற்கு இனியவாறே (5)

2037. மூவரில் முதல்வன் ஆய
ஒருவனை உலகம் கொண்ட
கோவினை குடந்தை மேய
குரு மணித் திரளை இன்பப்
பாவினை பச்சைத் தேனை
பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர்
என் சொல்லிப் புகழ்வர் தாமே? (6)

2038. இம்மையை மறுமை-தன்னை
எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திரு அரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை
திருமலை ஒருமையானை
தன்மையை நினைவார் என்-தன்
தலைமிசை மன்னுவாரே (7)

2039. வானிடைப் புயலை மாலை
வரையிடைப் பிரசம் ஈன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றை
திருவினை மருவி வாழார்-
மானிடப் பிறவி அந்தோ
மதிக்கிலர் கொள்க-தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு
உறுதியே வேண்டினாரே (8)

2040. உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
எழுமையும் துணை இலோமே (9)

2041. சித்தமும் செவ்வை நில்லாது
என் செய்கேன் தீவினையேன்?
பத்திமைக்கு அன்பு உடையேன்
ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே
முழங்கு ஒளி முகில் வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால்
யாதும் ஒன்று அறிகிலேனே (10)

2042. தொண்டு எல்லாம் பரவி நின்னைத்
தொழுது அடி பணியுமாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும்
ஆதி ஆய் நீதி ஆன
பண்டம் ஆம் பரம சோதி
நின்னையே பரவுவேனே (11)

2043. ஆவியை அரங்க மாலை
அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மை இல் தொண்டனேன் நான்
சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்தவாறு என்று
அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவிபோல் வண்ணர் வந்து என்
கண்ணுளே தோன்றினாரே (12)

2044. இரும்பு அனன்று உண்ட நீரும்
போதரும் கொள்க என்-தன்
அரும் பிணி பாவம் எல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டுகொண்டு என்
கண்-இணை களிக்குமாறே (13)

2045. காவியை வென்ற கண்ணார்
கலவியே கருதி நாளும்
பாவியேன் ஆக எண்ணி
அதனுள்ளே பழுத்தொழிந்தேன்
தூவி சேர் அன்னம் மன்னும்
சூழ் புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது
பாவியேன் ஆயினேனே (14)

2046. முன் பொலா இராவணன்-தன்
முது மதிள் இலங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி-இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு
என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு
ஆட்டுவன் அடியனேனே (15)

2047. மாய மான் மாயச் செற்று
மருது இற நடந்து வையம்
தாய் அமா பரவை பொங்கத்
தட வரை திரித்து வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு
என்னுடைச் சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு
சூட்டுவன் தொண்டனேனே (16)

2048. பேசினார் பிறவி நீத்தார்-
பேர் உளான் பெருமை பேசி
ஏசினார் உய்ந்து போனார்
என்பது இவ் உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க-
அலை கடல் வண்ணர்பாலே (17)

2049. இளைப்பினை இயக்கம் நீக்கி
இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி
அன்பு அவர்கண்ணே வைத்து
துளக்கம் இல் சிந்தைசெய்து
தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார்
மெய்ம்மையைக் காண்கிற்பாரே? (18)

2050. பிண்டி ஆர் மண்டை ஏந்தி
பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த
ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
மற்றையார்க்கு உய்யல் ஆமே? (19)

2051. வானவர்-தங்கள்-கோனும்
மலர்மிசை அயனும் நாளும்
தே மலர் தூவி ஏத்தும்
சேவடிச் செங் கண் மாலை
மான வேல் கலியன் சொன்ன
வண் தமிழ்-மாலை நாலைந்து
ஊனம்-அது இன்றி வல்லார்
ஒளி விசும்பு ஆள்வர் தாமே (20)

Tirumangai Alvar: Tiruneduntandagam (2052–2081)

2052. மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே (1)

2053. பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ
ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே (2)

2054. திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே? (3)

2055. இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி
திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே (4)

2056. ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி
தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே (5)

2057. அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன்
அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன்
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த
நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே (6)

2058. வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற
பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே (7)

2059. நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)

2060. வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே (9)

2061. பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி
திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே (10)

2062. பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!-
கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? (11)

2063. நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே (12)

2064. கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (13)

2065. முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே (14)

2066. கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே (15)

2067. கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே (16)

2068. பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே (17)

2069. கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே (18)

2070. முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே? (19)

2071. தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள
பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு
பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல்
பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? (20)

2072. மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்
கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே (21)

2073. நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா
நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி
எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு
இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே (22)

2074. உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்
ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்
சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்
கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்
என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே (23)

2075. இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!-
இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்
பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி
உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (24)

2076. மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே
தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்
என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு
பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே (25)

2077. தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்
தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த
அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை
ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே (26)

2078. செங் கால மட நாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (27)

2079. தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாளச்
சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால்
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
வரை உருவின் மா களிற்றை தோழீ என்-தன்
பொன் இலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே (28)

2080. அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாள
கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தைக் கிடந்த மாலை
நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (29)

2081. மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (30)

Poygai Alvar: Mudal Tiruvantadi (2082–2181)

2082. வையம் தகளியா வார் கடலே நெய் ஆக
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை-
இடர்-ஆழி நீங்குகவே என்று (1)

2083. என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?-
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது-
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)

2084. பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின்
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்-
நீ அளவு கண்ட நெறி (3)

2085. நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்-
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலம் அமர் கண்டத்து அரன் (4)

2086. அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று (5)

2087. ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்-
திருவரங்கம் மேயான் திசை (6)

2088. திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு (7)

2089. மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!-
போர் ஆழிக் கையால் பொருது? (8)

2090. பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று
உன்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் (9)

2091. மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)

2092. வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்-
காணா கண் கேளா செவி (11)

2093. செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே-
ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)

2094. இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் (13)

2095. அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் (14)

2096. முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும்
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது (15)

2097. பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண்
அடல் ஓத வண்ணர் அடி (16)

2098. அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால்
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)

2099. நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய்
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்-
மருது இடை போய் மண் அளந்த மால் (18)

Deutsch · Umschrift 2100. மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக்
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)

2101. பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய்
செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா-
மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)

2102. நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால்
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும்
படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம்
அடை ஆழி நெஞ்சே அறி (21)

2103. அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்-
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும்
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)

2104. தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த-
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல் (23)

2105. விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே?
ஓங்கு ஓத வண்ணா உரை (24)

2106. உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரைமேல் மரகதமே போலத் திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும் (25)

2107. எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை (26)

2108. மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்-
கார்க் கோடு பற்றியான் கை (27)

2109. கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை (28)

2110. இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி (29)

2111. தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத்
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே
போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)

2112. புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை? (31)

2113. இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் (32)

2114. நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)

2115. என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில்
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)

2116. ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து
முடியான் படைத்த முரண்? (35)

2117. முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம்
தரணி தனது ஆகத்தானே இரணியனைப்
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ
மண் இரந்து கொண்ட வகை? (36)

2118. வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)

2119. ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர்
எம் என்னும் மாலது இடம் (38)

2120. இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே-
பேர் ஓத வண்ணர் பெரிது (39)

2121. பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில்
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்-
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)

2122. குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான்
திறன் உரையே சிந்தித்திரு (41)

2123. திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல்
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மால் ஓத வண்ணர் மனம்? (42)

2124. மன மாசு தீரும் அரு வினையும் சாரா
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி
தம் தொழாநிற்பார் தமர் (43)

2125. தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)

2126. ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)

2127. பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம்
போகத்தால் பூமி ஆள்வார் (46)

2128. வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள
்கைந் நாகம் காத்தான் கழல் (47)

2129. கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)

2130. மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது (49)

2131. அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது (50)

2132. எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம்
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில்
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண் (51)

2133. எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலைக் கைதொழுவர் சென்று (52)

2134. சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு (53)

2135. அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய்
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் (54)

2136. அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)

2137. பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார்? அது நிற்க நேரே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன் (56)

2138. அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது (57)

2139. தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை (58)

2140. அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)

2141. சரணா மறை பயந்த தாமரையானோடு
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)

2142. உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு (61)

2143. புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ
ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும்
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)

2144. தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம் (63)

2145. நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வரும் ஆறு என் என்மேல் வினை? (64)

2146. வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால் (65)

2147. காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேர் ஆழி கொண்டான் பெயர் (66)

2148. பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு (67)

2149. உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)

2150. பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)

2151. சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு
செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)

2152. நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)

2153. அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)

2154. புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்
உடலும் உயிரும் ஏற்றான் (73)

2155. ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு (74)

2156. காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி (75)

2157. வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்
வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் (76)

2158. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர் (77)

2159. இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)

2160. கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து? (79)

2161. அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்? (80)

2162. ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்
சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்
பற்றிக் கடத்தும் படை (81)

2163. படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மான் மாய எய்தான் வரை (82)

2164. வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் (83)

2165. பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி? (84)

2166. படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி
நெறி நின்ற நெஞ்சமே நீ (85)

2167. நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்
பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்
கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்
இடைகழியே பற்றி இனி (86)

2168. இனி யார் புகுவார் எழு நரக வாசல்?
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)

2169. நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு
என் ஆகில் என்னே எனக்கு? (88)

2170. எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம்
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் (89)

2171. வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)

2172. ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)

2173. வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய்
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)

2174. வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால்
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்
சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)

2175. செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும்
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்
மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா (94)

2176. நா வாயில் உண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்
தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)

2177. திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கண் பிடி (96)

2178. பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)

2179. பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)

2180. உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)

2181. ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை (100)

Bhutam Alvar: Irandam Tiruvantadi (2182–2281)

2182. அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் (1)

2183. ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு (2)

2184. பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் துலங்கு ஒளி சேர் தோற்றத்து
நல் அமரர் கோமான் நகர் (3)

2185. நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி (4)

2186. அடி மூன்றில் இவ் உலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து? (5)

2187. அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன் தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
கார் ஓத வண்ணன் கழல் (6)

2188. கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே! உகந்து (7)

2189. உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து
முலை உண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று (8)

2190. அன்று அதுகண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து? (9)

2191. பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை (10)

2192. கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்? 11

2193. அவர் இவர் என்று இல்லை அரவு அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார்? எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து? (12)

2194. தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு? (13)

2195. பண்டிப் பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரைக் கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து (14)

2196. திரிந்தது வெம் சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு? (15)

2197. தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று? (16)

2198. மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றைப்
பிறை இருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு? (17)

2199. கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக்கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு (18)

Deutsch · Umschrift 2200. வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே!
பார் விளங்கச் செய்தாய் பழி (19)

2201. பழி பாவம் கையகற்றி பல் காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ வழு இன்றி
நாரணன் தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும்
காரணங்கள் தாம் உடையார் தாம் (20)

2202. தாம் உளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது (21)

2203. அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றிப்
பெருக முயல்வாரைப் பெற்றால் கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து? (22)

2204. தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங் கனிக்குக் கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம்
அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் (23)

2205. அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓதச்
சீற்றத் தீ ஆவானும் சென்று (24)

2206. சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது இராவணனை கூறுங்கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து (25)

2207. வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் உந்திப்
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி அமரர் வாழும் பதி (26)

2208. பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம் (27)

2209. மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனைப் பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன் (28)

2210. மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ (29)

2211. நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேர் ஓத மேனிப் பிரான் (30)

2212. பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர்
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து (31)

2213. மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும்
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து (32)

2214. துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம்
அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை (33)

2215. வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி (34)

2216. இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது (35)

2217. சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு (36)

2218. இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசைமுகனைத் தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு (37)

2219. எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து (38)

2220. ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் ஓத்து அதனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு (39)

2221. சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் (40)

2222. பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே! நினை (41)

2223. நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அத் தோள் (42)

2224. தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு (43)

2225. சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு (44)

2226. உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று (45)

2227. பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள்
பயின்றதுவும் வேங்கடமே பல்நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் (46)

2228. மாலை அரி உருவன் பாதமலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து (47)

2229. உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ்
மா இரும் சோலை மலை (48)

2230. மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என்நெஞ்சே அழை (49)

2231. அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து (50)

2232. மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை மதிக் கண்டாய்
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீர் ஆழி வண்ணன் நிறம் (51)

2233. நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி? (52)

2234. நெறியார் குழல் கற்றை முன்நின்று பின் தாழ்ந்து
அறியாது இளங் கிரி என்று எண்ணி பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு (53)

2235. வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்று (54)

2236. என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி
அடல் ஆழி கொண்ட அறிவனே! இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண் (55)

2237. காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்
நாணப்படும் என்றால் நாணுமே? பேணி
கரு மாலைப் பொன் மேனி காட்டாமுன் காட்டும்
திருமாலை நங்கள் திரு (56)

2238. திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந் தடக்கை எந்தை பேர்
நால் திசையும் கேட்டீரே? நாம் (57)

2239. நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று
அருள் நீர்மை தந்த அருள் (58)

2240. அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து (59)

2241. ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று (60)

2242. நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு (61)

2243. பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு (62)

2244. ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து
ஏறு ஏறி பட்ட இடுசாபம் பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை (63)

2245. கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி (64)

2246. பணிந்தேன் திருமேனி பைங் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது (65)

2247. இது கண்டாய் நல் நெஞ்சே இப் பிறவி ஆவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண் (66)

2248. கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி (67)

2249. வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ (68)

2250. கோ ஆகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங் கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் (69)

2251. தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால்
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம் (70)

2252. இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த போது (71)

2253. போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும்
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து (72)

2254. ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்படத் துணிந்த யான் (73)

2255. யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம் பெருமான் யானே
இருந் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெருந் தமிழன் நல்லேன் பெருகு (74)

2256. பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை (75)

2257. வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் (76)

2258. உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம் (77)

2259. தவம் செய்து நான் முகனே பெற்றான் தரணி
நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன்
கை அனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் (78)

2260. பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணைத் தோள்
முன் நின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் (79)

2261. நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என்கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல்? (80)

2262. பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு (81)

2263. வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ?
கோலத்தால் இல்லை குறை (82)

2264. குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன்கண் சென்ற வரம் (83)

2265. வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது (84)

2266. அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நல் மாலை ஏத்தி நவின்று (85)

2267. நவின்று உரைத்த நாவலர்கள் நாள் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பு அரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன்கொல் இன்று? (86)

2268. இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம் (87)

2269. திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் திறம்பாச்
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசல் கதவு (88)

2270. கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவி போர் யானை ஒசித்து பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை
மாணியாய்க் கொண்டிலையே மண்? (89)

2271. மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின் (90)

2272. பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ பல் நூல்
அளந்தானை கார்க் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி (91)

2273. அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடிமேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது (92)

2274. கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடாமுன்னம் வடி சங்கம்
கொண்டானை கூந்தல் வாய் கீண்டானை கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று (93)

2275. உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு (94)

2276. என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் (95)

2277. அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான் (96)

2278. எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடு மால் திருமார்பா பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பு அணைமேல் சேர்ந்தாய்
குடமூக்குக் கோயிலாக் கொண்டு (97)

2279. கொண்டு வளர்க்க குழவியாய்த் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை (98)

2280. இறை எம் பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய்ம் மலர்கள் தூவ அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால் (99)

2281. மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே! என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு (100)

Pey Alvar: Munram Tiruvantadi (2282–2381)

2282. திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று (1)

2283. இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று
திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை
மருக்கண்டுகொண்டு என் மனம் (2)

2284. மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து (3)

2285. மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி (4)

2286. அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன்
படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு (5)

2287. அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்?
அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல்? (6)

2288. கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப்
பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு
எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம் (7)

2289. நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் (8)

2290. கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன்
திரு மா மணி வண்ணன் தேசு (9)

2291. தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு (10)

2292. நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப்
பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார்
நூல் கடலான் நுண் அறிவினான் (11)

2293. அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும்
பைங்கோத வண்ணன் படி (12)

2294. படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே
மா காயமாய் நின்ற மாற்கு (13)

2295. மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பணிந்து (14)

2296. பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு
அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன்
மனம் தன் அணைக் கிடக்கும் வந்து (15)

2297. வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன்
திருவல்லிக்கேணியான் சென்று (16)

2298. சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் (17)

2299. வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க அருள் (18)

Deutsch · Umschrift 2300. அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன்? (19)

2301. முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
திருமாலே. செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே. நீயிதனைப் பேசு. 20

2302. பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு (21)

2303. வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு (22)

2304. விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர்
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே
மனம் துழாய் மாலாய் வரும் (23)

2305. வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும்
சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும்
தொடர் ஆழி நெஞ்சே தொழுது (24)

2306. தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம்
முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட
வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து? (25)

2307. சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே
தாம் கடவார் தண் துழாயார் (26)

2308. ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங் கடலை நேரே
கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? (27)

2309. அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப்
பேய்ச்சி பால் உண்ட பிரான் (28)

2310. பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த்
தெருளா மொழியானைச் சேர்ந்து (29)

2311. சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி
இறைபாடி ஆய இவை (30)

2312. இவை அவன் கோயில் இரணியனது ஆகம்
அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா
நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான் (31)

2313. பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் (32)

2314. பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே
மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று (33)

2315. அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்?
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண் (34)

2316. காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண்
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை (35)

2317. கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம்
அடி அளந்த மாயன் அவற்கு (36)

2318. அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம்
திகழும் திருமார்பன் தான் (37)

2319. தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும்
தானே தவ உருவும் தாரகையும் தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இறை (38)

2320. இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய்
மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன் (39)

2321. உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன் (40)

2322. மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம்
குடையாக ஆ காத்த கோ (41)

2323. கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம்
தெரி உகிரால் கீண்டான் சினம் (42)

2324. சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனம் மேய பூமி அதனைத் தனமாக
பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார்
ஓர் அகலத்து உள்ளது உலகு (43)

2325. உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி (44)

2326. புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர்
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் கோட்டுக் கொண்டான் மலை (45)

2327. மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான் (46)

2328. நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள்
நரக வாய் கீண்டாயும் நீ (47)

2329. நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்?
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய்
தேவாசுரம் பொருதாய் செற்று? (48)

2330. செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச்
சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து (49)

2331. சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால்
தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த
மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான்
அணி நீல வண்ணத்தவன் (50)

2332. அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்காபுரம் எரித்தான் எய்து (51)

2333. எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று (52)

2334. முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்
தண் அலங்கல் மாலையான் தாள் (53)

2335. தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி
கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப்
பெண் அகலம் காதல் பெரிது (54)

2336. பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம் (55)

2337. நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன்பொலிவு? (56)

2338. பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57

2339. தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58

2340. வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று 59

2341. பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக்
குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60

2342. பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை
இளங் குமரன் தன் விண்ணகர் 61

2343. விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம்
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62

2344. தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63

2345. இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில்
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64

2346. அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65

2347. காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மது கைடபரும் வயிறு உருகி மாண்டார்
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66

2348. ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகரும் மதி என்றும் பார்த்து 67

2349. பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த
களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68

2350. வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் 69

2351. புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு 70

2352. களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71

2353. குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங் குமரர் கோமான் இடம் 72

2354. இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத்தன்னால் உள்ள நலம் 73

2355. நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான்
வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான்
தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74

2356. சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய்
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு 75

2357. பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76

2358. ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த
முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப் போது நங்கட்கு அரண் 77

2359. அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல்
ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே
ஓது கதி மாயனையே ஓர்த்து 78

2360. ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று 79

2361. நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80

2362. நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
ஓராது நிற்பது உணர்வு? 81

2363. உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி? 82

2364. இனி அவன் மாயன் என உரைப்பரேலும்
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் 83

2365. உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே
கண்டார்? உகப்பர் கவி 84

2366. கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய்
செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய்
ஏற்று உயிரை அட்டான் எழில்? 85

2367. எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல
கார் வானம் காட்டும் கலந்து 86

2368. கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை
அந்தி வான் காட்டும் அது 87

2369. அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து 88

2370. முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள்
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89

2371. சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ
வண் துழாய் மால் அளந்த மண்? 90

2372. மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் 91

2373. மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச்
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறைசெய்து என் நெஞ்சே நினை 92

2374. நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்?
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93

2375. உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து (94)

2376. புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து (95)

2377. வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த
அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன்
அடித் தாமரை ஆம் அலர் (96)

2378. அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை? (97)

2379. இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு (98)

2380. தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு (99)

2381. சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண்
தேன் அமரும் பூமேல் திரு (100)

Tirumalisai Alvar: Nanmugan Tiruvantadi (2382–2477)

2382. நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து (1)

2383. தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்பால் (2)

2384. பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து
ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு? (3)

2385. ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே? வேறு ஒருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப் பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து (4)

2386. தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில்
ஒருநான்று நீ உயர்த்தி உள்வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி (5)

2387. அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே ஆதலால் இன்று (6)

2388. இன்று ஆக நாளையே ஆக இனிச் சிறிது
நின்று ஆக நின் அருள் என்பாலதே நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னை அன்றி இலை (7)

2389. இலை துணை மற்று என் நெஞ்சே! ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா குலை கொண்ட
ஈர் ஐந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை (8)

2390. குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு (9)

2391. ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும்
பூங் கார் அரவு அணையான் பொன் மேனி யாம் காண
வல்லமே அல்லமே? மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து (10)

2392. வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து (11)

2393. மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடுக் கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு (12)

2394. வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்திக்
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதற்பொருள் தான் விண்ணவர்க்கு
நற்பொருள் தான் நாராயணன (13)

2395. நாராயணன் என்னை ஆளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமயர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர (14)

2396. பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை (15)

2397. நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர்
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன்மாய பொழில் மறைய
தேர் ஆழியால் மறைத்தாரால் (16)

2398. ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன் ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானைத் தான் வணங்குமாறு (17)

2399. மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாகக் கீறிய கோளரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தியிருப்பார் தவம் (18)

Deutsch · Umschrift 2400. தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே? உவந்து எம்மைக்
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம்
ஈப்பாயும் எவ் உயிர்க்கும் ந (19)

2401. நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை (20)

2402. இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள் இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு (21)

2403. அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்
தான் ஏழ் உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து (22)

2404. வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து (23)

2405. நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை (24)

2406. வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே? வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று (25)

2407. மற்றுத் தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றைச் சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா! யான் உன்னைக்
கண்டுகொளகிற்குமாறு (26)

2408. மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள்! நீறாடி
தான் காண மாட்டாத தார் அகலச் சேவடியை
யான் காண வல்லேற்கு இது? (27)

2409. இது இலங்கை ஈடு அழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு (28)

2410. உகப்பு உருவன் தானே ஒளி உருவன் தானே
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன் (29)

2411. அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவு அணையின்மேல்? (30)

2412. மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை (31)

2413. கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதைப்பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி (32)

2414. அடிச் சகடம் சாடி அரவு ஆட்டி யானை
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடிப் பவள
வாய்ப் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு (33)

2415. குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்? (34)

2416. தாளால் உலகம் அளந்த அசைவேகொல்?
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்து அணை (35)

2417. நாகத்து அணைக் குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான் (36)

2418. வான் உலவு தீவளி மா கடல் மா பொருப்பு
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு (37)

2419. அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு (38)

2420. அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப் பேர்
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு (39)

2421. வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண் (40)

2422. காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று (41)

2423. சென்று வணங்குமினோ சேண் உயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடிக் கமல நான்முகனும் கண்மூன்றத்தானும்
அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு (42)

2424. மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும்
குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43)

2425. கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப்
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே
போம் குமரருள்ளீர்! புரிந்து (44)

2426. புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு (45)

2427. வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று (46)

2428. நன்மணி வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம் (47)

2429. வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் வேங்கடமே
தானவரை வீழத் தன் ஆழிப் படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை (48)

2430. மலை ஆமைமேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று (49)

2431. கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாராவகை அறிந்தேன் ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு (50)

2432. எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? எம் பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புனக் காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை? (51)

2433. விலைக்கு ஆட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலைக்கால்
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார்
கடம் உண்டார் கல்லாதவர் (52)

2434. கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு (53)

2435. தேவராய் நிற்கும் அத் தேவும் அத் தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை (54)

2436. கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்? (55)

2437. அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு (56)

2438. ஒருங்கு இருந்த நல் வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என்? (57)

2439. என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு (58)

2440. அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் (59)

2441. ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் (60)

2442. மனக் கேதம் சாரா மதுசூதன் தன்னைத்
தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் எனக்கே தான்
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு (61)

2443. திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்த்
தார் தன்னைச் சூடித் தரித்து (62)

2444. தரித்திருந்தேன் ஆகவே தாராகணப் போர்
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னைத் தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது (63)

2445. போதான இட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது (64)

2446. சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை
மாது ஆய மாலவனை மாதவனை யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்? (65)

2447. இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம் (66)

2448. வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
குலம் ஆக குற்றம் தான் ஆக நலம் ஆக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானை
சீரணனை ஏத்தும் திறம் (67)

2449. திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)

2450. செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையேதான் (69)

2451. தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன்
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் (70)

2452. சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)

2453. இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத் தவமும் நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)

2454. ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த
பேர் ஆழியான் தன் பெருமையை? கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி (73)

2455. பதிப் பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா (74)

2456. நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக
தீக் கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு (75)

2457. பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு (76)

2458. தற்பு என்னைத் தான் அறியானேலும் தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் என் கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு (77)

2459. கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து? (78)

2460. ஆய்ந்துகொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக விரும்புவரே தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து (79)

2461. விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம்
பாடின ஆடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு (80)

2462. கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழி ஆகிக் கலந்து (81)

2463. கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து (82)

2464. வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய்
மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத்
தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர் (83)

2465. பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில் (84)

2466. தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் (85)

2467. உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை (86)

2468. இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்? (87)

2469. உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது (88)

2470. பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக்
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு (89)

2471. வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர் (90)

2472. தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று (91)

2473. என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலாக் காப்பு (92)

2474. காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம் (93)

2475. மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று (94)

2476. ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி (95)

2477. இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் 96

Nammalvar: Tiruviruttam (2478–2577)

2478. பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 1

2479. செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ!
முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம்
தொழுநீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே 2

2480. குழல் கோவலர் மடப் பாவையும் மண்மகளும் திருவும்
நிழல்போல்வனர் கண்டு நிற்கும்கொல் மீளும்கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும்
தழல் போல் சினத்த அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே? 3

2481. தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே? 4

2482. பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இக் காலம் இவ் ஊர்ப்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் அம் தண்ணம் துழாய்ப்
பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம்
பனிப் புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே 5

2483. தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே 6

2484. ஞாலம் பனிப்பச் செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூங்
காலம் கொலோ? அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே 7

2485. காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே 8

2486. திண் பூஞ் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? இவையோ
கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூங் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே 9

2487. மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக்கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது
வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ? அடும் தொண்டையோ? அறையோ இது அறிவு அரிதே 10

2488. அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே 11

2489. பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே
ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே 12

2490. தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர்? எனை ஊழிகள் ஈர்வனவே 13

2491. ஈர்வன வேலும் அம் சேலும் உயிர்மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணைப் பேர் ஒளியே
சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர்
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே? 14

2492. கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை? கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே 15

2493. பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்!
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இப் பாய் இருளே 16

2494. இருள் விரிந்தால் அன்ன மா நீர்த் திரைகொண்டு வாழியரோ!
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு அணைமேல்
இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதிப் பெருமான் உறையும் எறி கடலே 17

2495. கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ?
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே 18

2496. காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ
சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே 19

2497. சில்மொழி நோயோ கழி பெருந் தெய்வம் இந் நோய் இனது என்று
இல் மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்று இது வேல நில் நீ
என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே 20

2498. சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி விண்ணோர்கள் நல் நீர்
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே 21

2499. கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர்
தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன
வம்பு ஆர் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே? 22

Deutsch · Umschrift 2500. புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன்
மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே? 23

2501. இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெரு நீர்க் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால்
புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க்
கொயல்வாய் மலர்மேல் மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே? 24

2502. எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே? 25

2503. நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது அம் பூந்
தேன் இளஞ் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே 26

2504. சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய்
யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த்
தாமம் புனைய அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே 27

2505. தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே? 28

2506. இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட
மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மைகொலோ? குடிச் சீர்மை இல் அன்னங்களே 29

2507. அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர்
இன்னம் செல்லீரோ? இதுவோ தகவு? என்று இசைமின்களே 30

2508. இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே? 31

2509. மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே? 32

2510. அருள் ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?
தெருளோம் அரவணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே 33

2511. சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி
தன் சீறடியால்உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது
தண் தார்ததைக்கின்ற தண் அம் துழாய்
அணிவான் அதுவே மனமாய்ப்பதைக்கின்ற
மாதின்திறத்து அறியேன் செயற்பாலதுவே 34

2512. பால் வாய்ப் பிறைப் பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகல் இழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே 35

2513. துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இக் காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே 36

2514. கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அரு வினையேன்
நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஒசியும் இடை இளமான் சென்ற சூழ் கடமே 37

2515. கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இதுகொல்
குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே? 38

2516. நீலத் தட வரைமேல் புண்டரீக நெடுந் தடங்கள்
போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணின் கோலங்களே 39

2517. கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்றுகொலோ? 40

2518. என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே 41

2519. வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்பால் எம் பிரான தடங் கண்களே 42

2520. கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே? 43

2521. நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான பெருமையையே 44

2522. பெருங் கேழலார் தம் பெருங் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல்
வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே 45

2523. மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப்பொன்பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட போய்
திட நெஞ்சம் ஆய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே 46

2524. திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம் கொல் என் மெல்லியற்கே? 47

2525. மெல்லியல் ஆக்கைக் கிருமிக் குருவில் மிளிர்தந்து ஆங்கே
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ உண்டு பண்டுபண்டே 48

2526. பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இப் பாய் இருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள வண்ண
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே 49

2527. ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே 50

2528. மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையா
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே 51

2529. அழைக்கும் கருங் கடல் வெண் திரைக் கைக்கொண்டு போய் அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற மண் மாதர் விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே 52

2530. வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம்
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வத் தண் அம் துழாய்த்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ்
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே 53

2531. வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
மாசு இல் மலர் அடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54

2532. வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே? 55

2533. வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே 56

2534. புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே 57

2535. கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறு அலர் தாமரைக் கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே? 58

2536. அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண்ணம் துழாய்க்கு
உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே 59

2537. முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூங் குழல் குறிய
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? 60

2538. வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும்
வேய் அகம் ஆயினும் சோராவகை இரண்டே அடியால்
தாயவன் ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே? 61

2539. இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே? 62

2540. வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே 63

2541. இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமச் சொல் கற்றனமே 64

2542. கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம்
உற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே 65

2543. உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான்
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண் ஆய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே 66

2544. காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரைச் செற்றமா
வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்
சேர்தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணைமலரே 67

2545. மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ்
தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே 68

2546. கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான்
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?
வார் ஏற்று இளமுலையாய் வருந்தேல் உன் வளைத்திறமே 69

2547. வாய்த் திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
வாய் நறுங் கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே 70

2548. ஊழிகள் ஆய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே 71

2549. சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே? 72

2550. வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்
சால்பின் தகைமைகொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே? 73

2551. தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங் கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே 74

2552. உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறிப்
புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே? 75

2553. இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே? 76

2554. திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்பால் இலங்கை
வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே 77

2555. நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல்
பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே 78

2556. தனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும்
பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே 79

2557. சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே 80

2558. உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார்கொல்? துழாய் குழல்வாய்த்
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே 81

2559. எரி கொள் செந் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே? 82

2560. விளரிக் குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரிக் குரம்பை இதுஇதுவாக முகில் வண்ணன் பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின் கொலோ அறியேன் உய்யல் ஆவது இத் தையலுக்கே? 83

2561. தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கு அங்கு எல்லாம்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே 84

2562. மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே 85

2563. அடைக் கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும்
முடைக் கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக்கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே? 86

2564. புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூங் கழி பாய்ந்து
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின்
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத் திருவினையே 87

2565. திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும்
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே? 88

2566. தீவினைக்கு ஆரு நஞ்சை நல் வினைக்கு இன் அமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால்
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே? 89

2567. தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால்
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும் மாயம் செவ்வே
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே 90

2568. சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும்
ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலிமாட்டு
இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற
பெருங் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே 91

2569. பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று
காணலும் ஆம்கொல் என்றே? வைகல் மாலையும் காலையுமே 92

2570. காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப் படியே 93

2571. மைப் படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்
எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே.? 94

2572. யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே 95

2573. வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே 96

2574. எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே? 97

2575. துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே 98

2576. ஈனச் சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும்
ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே 99

2577. நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப் பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே 100

Nammalvar: Tiruvasiriyam (2578–2584)

2578. செக்கர் மா முகில் உடுத்து மிக்க
செஞ் சுடர்ப் பரிதி சூடி
அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப்
பச்சை மேனி மிகப் பகைப்ப
நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை உந்தித் தனிப் பெரு நாயக
மூவுலகு அளந்த சேவடியோயே (1)

2579. உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு அவாவு
ஆர் உயிர் உருகி உக்க நேரிய
காதல் அன்பில் இன்பு ஈன் தேறல்
அமுத வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு
ஒரு பொருட்கு அசைவோர் அசைக
திருவொடு மருவிய
இயற்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினொடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? (2)

2580. குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய
தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம்
ஆளாகவே
இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே? (3)

2581. ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை
உலகமும் யாவரும் இல்லா மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூவுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே? (4)

2582. மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து
ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
வானவர் முறைமுறை வழிபட நெறீஇ
தாமரைக் காடு மலர்க் கண்ணொடு
கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு
ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக் காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே? (5)

2583. ஓஓ உலகினது இயல்வே!
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி
படைத்து இடந்து
உண்டு உமிழ்ந்து அளந்து தேஎர்ந்து உலகு அளிக்கும்
முதல் பெருங் கடவுள் நிற்ப புடைப் பல
தான் அறி தெய்வம் பேணுதல் தனாது
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே (6)

2584. நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? (7)

Nammalvar: Periya Tiruvantadi (2585–2671)

2585. முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய
நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப்
பூ ஈன்ற வண்ணன் புகழ் (1)

2586. புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை (2)

2587. இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என்? (3)

2588. என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று
எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று (4)

2589. பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த
நீ அம்மா காட்டும் நெறி? (5)

2590. நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா
முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய்
என் செய்தால் என் படோம் யாம்? (6)

2591. யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த
அம்மா! நின் பாதத்து அருகு (7)

2592. அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம்
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு (8)

2593. நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார்
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே
யாதானும் சிந்தித்து இரு (9)

2594. இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ் (10)

2595. நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை
வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத
பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ
நீரும் நீ ஆய் நின்ற நீ (11)

2596. நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய்
போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு (12)

2597. வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே?
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள்
தம்மால் காட்டு உன் மேனிச் சாய் (13)

2598. சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த்
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம்
பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து (14)

2599. பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம்
தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர் (15)

Deutsch · Umschrift 2600. சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப்
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே?
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து (16)

2601. சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம் (17)

2602. தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப்
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப்
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல் உருவை யார் அறிவார்? சொல்லு (18)

2603. சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண்
மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக்
காத்தானைக் காண்டும் நீ காண் (19)

2604. காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி
உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான்
திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று (20)

2605. சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப்
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக்
கார் உருவன் தான் நிமிர்த்த கால் (21)

2606. காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து (22)

2607. இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் (23)

2608. தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால்
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? (24)

2609. ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர்
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் (25)

2610. யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் தான் ஓர்
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த
அருள் என்னும் தண்டால் அடித்து (26)

2611. அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று (27)

2612. அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம்
இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ் உருவை நெஞ்சு என்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து (28)

2613. உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத்
தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால்
எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு (29)

2614. இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு? (30)

2615. அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத்
தடங் கடலை மேயார் தமக்கு (31)

2616. தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார்
தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? (32)

2617. யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
பாறுபாறு ஆக்கினான்பால்? (33)

2618. பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச்
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும்
நீதியாய் நின் சார்ந்து நின்று (34)

2619. நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை
வன் புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
அன்புடையன் அன்றே அவன்? (35)

2620. அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர்
அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம்
அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம் (36)

2621. ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே?
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை (37)

2622. அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள்
ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை (38)

2623. பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்?
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால்
போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு (39)

2624. வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே
போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால
பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி (40)

2625. வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே
பல் நாளும் நிற்கும் இப் பார் (41)

2626. பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை (42)

2627. அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை? (43)

2628. வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும்
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து
மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலைத் தாம் செய்யும் வினை? (44)

2629. வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன் அடிக்கள் நான் (45)

2630. நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும்
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதி ஆம் நெஞ்சே நினை (46)

2631. நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும்
எவ் அளவும் உண்டோ எமக்கு? (47)

2632. எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே
கொன்றானையே மனத்துக் கொண்டு (48)

2633. கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள்
கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேர் உரு என்று எம்மைப் பிரிந்து (49)

2634. பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல்
மா வாய் பிளந்தார் மனம்? (50)

2635. மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச்
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய
தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்க்கு மாண்பு? (51)

2636. மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம்
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? (52)

2637. ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்? (53)

2638. வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ஆன் ஈன்ற
கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆஆ மருங்கு (54)

2639. மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார்
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே
எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால்
மனக் கவலை தீர்ப்பார் வரவு (55)

2640. வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே!
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி (56)

2641. வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே!
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் (57)

2642. மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது
பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால்
பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு (58)

2643. மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப்
பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன்
பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? (59)

2644. பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய்
ஈர்ந் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லை காண் மற்றோர் இறை (60)

2645. இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள்
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீது இலகித் தான் கிடக்கும் மீன்? (61)

2646. மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான் ஓர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள்
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் (62)

2647. பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய்
வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும்
பருச் செவியும் ஈர்ந்த பரன் (63)

2648. பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில்
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கைதான் தொழாவே கலந்து? (64)

2649. கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு (65)

2650. சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது (66)

2651. அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில்
அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் (67)

2652. கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்து அகம் (68)

2653. அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? (69)

2654. அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும்
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே
யாது ஆகில் யாதே இனி? (70)

2655. இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே?
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர்
அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான் நின் உந்தி முதல் (71)

2656. முதல் ஆம் திரு உருவம் மூன்று அன்பர் ஒன்றே
முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ? (72)

2657. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண்தோறும் பாவியேன்
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று (73)

2658. என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி (74)

2659. புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்?
ஊன் பருகு நேமியாய் உள்ளு (75)

2660. உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம்
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்?
உலகு அளந்த மூர்த்தி உரை (76)

2661. உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே?
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை (77)

2662. துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக உண் (78)

2663. உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே?
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில்
ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப்
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு (79)

2664. பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்? (80)

2665. பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத்
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார்
செழும் பரவை மேயார் தெரிந்து (81)

2666. தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்
அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து (82)

2667. அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து (83)

2668. வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத்
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
தங்கத்தான் ஆமேலும் தங்கு (84)

2669. தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத்
தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய
கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? (85)

2670. கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது? (86)

2671. இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல் (87)

Tirumangai Alvar: Tiruvelukurrirukkai (2672)

2672. ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்
ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை
இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் (5)
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை (10)
ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள்
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் (15)
அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக் கண் நால் தோள்
ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் (20)
அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய
அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி (25)
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே (30)
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ் விடை அடங்கச் செற்றனை
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய் (35)
மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய்
ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா
மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த (40)
கற்போர் புரிசைக் கனக மாளிகை
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே (45)

Tirumangai Alvar: Siriya Tirumadal – vollständiges Langgedicht in 38 Quellenabschnitten (2673–2710)

2673. கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப்
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல்
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் (1)

2674. ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று (2)

2675. ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும்
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல்
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில் நின்றும் (3)

2676. வாராது ஒழிவது ஒன்று உண்டே? அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான்
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி கதிர் முலையை (4)

2677. வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான்
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன்
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழுந் தெருவே (5)

2678. ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு
ஏர் ஆர் இளமுலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான்
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து (6)

2679. தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச்
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு செங் குறிஞ்சித் (7)

2680. தார் ஆர் நறு மாலைச் சாத்தற்குத் தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் (8)

2681. தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார்
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல்
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு (9)

2682. கார் ஆர் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் (10)

2683. கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திருத் துழாயத் (11)

2684. தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகெனோ?
ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான்
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் (12)

2685. ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்மின்
ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும்
ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடிச் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய்
சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனைப்
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைந் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த (13)

2686. மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும்
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு (14)

2687. ஆர் ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியள் ஆய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் (15)

2688. நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு (16)

2689. நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் (17)

2690. சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய்
வார் ஆர் வனமுலையால் வைதேவி காரணமா
ஏர் ஆர் தடந் தோள் இராவணனை ஈர் ஐந்து (18)

2691. சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால்
போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை (19)

2692. சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி செங் குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் (20)

2693. பேர் வாமன் ஆகிய காலத்து மூவடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக
பேராமல் தாங்கிக் கடைந்தான் திருத் துழாய்த் (21)

2694. தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும்
போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு (22)

2695. தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக
ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளைத்
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று (23)

2696. ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனைக் (24)

2697. கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் (25)

2698. ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் (26)

2699. ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன்
வாராய் மட நெஞ்சே வந்து மணிவண்ணன் (27)

Deutsch · Umschrift 2700. சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் (28)

2701. ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு (29)

2702. ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல்
நீராய் உருகும் என் ஆவி நெடுங் கண்கள் (30)

2703. ஊரார் உறங்கிலும் தான் உறங்கா உத்தமன் தன்
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் (31)

2704. கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார்
ஆரே பொல்லாமை அறிவார்? அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர்
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் (32)

2705. பேர் ஆயம் எல்லாம் ஒழிய பெருந் தெருவே
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள்
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? மற்று எனக்கு இங்கு (33)

2706. ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான் அவனைக்
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய்
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவ
லூரே மதிள் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை (34)

2707. கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் (35)
பாரோர் புகழும் வதரி வடமதுரை

2708. ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அருஞ் சீர் (36)

2709. பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே (37)

2710. ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வார் ஆர் பூம் பெண்ணை மடல் (38)

Tirumangai Alvar: Periya Tirumadal – vollständiges Langgedicht (2713–2790)

2713. மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச 1

2714. துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை 2

2715. தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் 3

2716. என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட 4

2717. பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான் 5

2718. மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் 6

2719. என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து 7

2720. தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 8

2721. அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க 10

2722. முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர் 11

2723. மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் 12

2724. முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை 13

2725. இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின் 14

2726. மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் 15

2727. மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் 16

2728. துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் 17

2729. மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல் 18

2730. பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே 19

2731. அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல் 20

2732. மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின் 21

2733. அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய்
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல்
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு 22

2734. உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த்
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள்
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய 23

2735. பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் 24

2736. தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள்
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு 25

2737. கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால் 26

2738. மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் 27

2739. கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள்
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் 28

2740. பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை 29

2741. பன்னாகராயன் மடப் பாவை பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன்
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது 30

2742. நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள்
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் 31

2743. தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் 32

2744. என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் 33

2745. என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் 34

2746. பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் 35
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப 36

2747. மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே? 37

2748. பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு 38

2749. என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல் 39

2750. மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் 40

2751. இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் 41

2752. அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த 42

2753. இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் 43

2754. இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? 44

2755. கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் 45

2756. பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன்
கல் நவிலும் காட்டகத்து ஓர் வலலிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் 46

2757. என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி 47

2758. முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின்
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் 48

2759. தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த 49

2760. மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின்
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி 50

2761. மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண்
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் 51

2762. தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன்
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து 52

2763. தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க 53

2764. பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் 54

2765. தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும்
தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் 55

2766. மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன்
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் 56

2767. மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும்
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு 57

2768. ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை 58

2769. பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல்
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி 59

2770. என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை 60

2771. மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை 61

2772. மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம்
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை 62

2773. முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர்
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய்
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை 63

2774. தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் 64

2775. அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் 65

2776. உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம்
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை 66

2777. அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல்
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் 67

2778. மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும்
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை 68

2779. கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான்
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் 69

2780. தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள்
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் 70

2781. துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய்
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் 71

2782. அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை 72

2783. முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த் 73

2784. தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப 74

2785. கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் 75

2786. தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் 76

2787. துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் 77

2788. தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் 78

2789. தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் 79

2790. உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் 80

Nammalvar: Tiruvaymoli 1.1 (2791–2801)

2791. உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே (1)

2792. மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே (2)

2793. இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே (3)

2794. நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (4)

2795. அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே (5)

2796. நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே (6)

2797. திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே (7)

2798. சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே (8)

2799. உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே (9)

Deutsch · Umschrift 2800. பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே (10)

2801. கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே (11)

Nammalvar: Tiruvaymoli 1.2 (2802–2812)

2802. வீடுமின் முற்றவும்
வீடு செய்து உம் உயிர்
வீடு உடையானிடை
வீடு செய்ம்மினே (1)

2803. மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை
உன்னுமின் நீரே (2)

2804. நீர் நுமது என்று இவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன்
நேர் நிறை இல்லே (3)

2805. இல்லதும் உள்ளதும்
அல்லது அவன் உரு
எல்லை இல் அந் நலம்
புல்கு பற்று அற்றே (4)

2806. அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர்
செற்ற அது மன் உறில்
அற்று இறை பற்றே (5)

2807. பற்று இலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே (6)

2808. அடங்கு எழில் சம்பத்து
அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே (7)

2809. உள்ளம் உரை செயல்
உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே (8)

2810. ஒடுங்க அவன்கண்
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை
விடும்பொழுது எண்ணே (9)

2811. எண் பெருக்கு அந் நலத்து
ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன்
திண் கழல் சேரே (10)

2812. சேர்த்தடத் தென் குரு
கூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து
ஓர்த்த இப் பத்தே (11)

Nammalvar: Tiruvaymoli 1.3 (2813–2823)

2813. பத்து உடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்து உறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து
ஏங்கிய எளியவே (1)

2814. எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு
இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல
கேடு இல வீடு ஆம்
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்
முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன்
புறத்தனன் அமைந்தே (2)

2815. அமைவு உடை அறநெறி முழுவதும்
உயர்வு அற உயர்ந்து
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை
அற நிலம் அது ஆம்
அமைவு உடை அமரரும் யாவையும்
யாவரும் தான் ஆம்
அமைவு உடை நாரணன் மாயையை
அறிபவர் யாரே? (3)

2816. யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு
எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல
உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை
இலது இல்லை பிணக்கே (4)

2817. பிணக்கு அற அறு வகைச் சமயமும்
நெறி உள்ளி உரைத்த
கணக்கு அறு நலத்தனன் அந்தம் இல்
ஆதி அம் பகவன்
வணக்கு உடைத் தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு
உணக்குமின் பசை அற அவனுடை
உணர்வுகொண்டு உணர்ந்தே (5)

2818. உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு
வியந்த இந் நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை
உணர்வு அரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன்
அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்
மனப்பட்டது ஒன்றே (6)

2819. ஒன்று எனப் பல என அறிவு அரும்
வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன்
அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும்
இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை
நம்முடை நாளே (7)

2820. நாளும் நின்று அடு நம பழமை அம்
கொடுவினை உடனே
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம்
மலம் அறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம்
நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு
மாள்வது வலமே (8)

2821. வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்
உலகமும் தானும்
புலப்பட பின்னும் தன் உலகத்தில்
அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்று உள
இவை அவன் துயக்கே (9)

2822. துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
வணங்குவன் அமர்ந்தே (10)

2823. அமரர்கள் தொழுது எழ அலை கடல்
கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
பிறவி அம் சிறையே (11)

Nammalvar: Tiruvaymoli 1.4 (2824–2834)

2824. அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ? (1)

2825. என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள் நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே (2)

2826. விதியினால் பெடை மணக்கும் மென்நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல் வினையே மாளாதோ? என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே (3)

2827. என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ?
நன் நீர்மை இனி அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ? நல்கீரோ? (4)

2828. நல்கித் தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)

2829. அருளாத நீர் அருளி அவர் ஆவி துவராமுன்
அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒருநாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே? (6)

2830. என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்
என்பிழைக்கும்? இளங் கிளியே யான் வளர்த்த நீ அலையே? (7)

2831. நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே (8)

2832. நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே (9)

2833. உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே (10)

2834. அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே (11)

Nammalvar: Tiruvaymoli 1.5 (2835–2845)

2835. வள ஏழ் உலகின் முதலாய
வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட
கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்
வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய
எந்தாய் என்பன் நினைந்து நைந்தே (1)

2836. நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
மாசூணாதோ? மாயோனே (2)

2837. மா யோனிகளாய் நடை கற்ற
வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
தாயோன் தான் ஓர் உருவனே (3)

2838. தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
வைகுந்தன் எம் பெருமானே (4)

2839. மான் ஏய் நோக்கி மடவாளை
மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
சேருமாறு வினையேனே (5)

2840. வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
என்று நைவன் அடியேனே (6)

2841. அடியேன் சிறிய ஞானத்தன்
அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? (7)

2842. உண்டாய் உலகு ஏழ் முன்னமே
உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
நெய் ஊண் மருந்தோ? மாயோனே (8)

2843. மாயோம் தீய அலவலைப்
பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே (9)

2844. சார்ந்த இரு வல் வினைகளும்
சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
இவற்றின் உயிராம் நெடுமாலே (10)

2845. மாலே மாயப் பெருமானே
மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
வல்லார்க்கு இல்லை பரிவதே (11)

Nammalvar: Tiruvaymoli 1.6 (2846–2856)

2846. பரிவது இல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே (1)

2847. மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே (2)

2848. ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே (3)

2849. அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே (4)

2850. கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5)

2851. அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே (6)

2852. நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழிமின்னே (7)

2853. கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
தொழுமின் அவனை தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி ஆக்கம் தருமே (8)

2854. தரும அரும் பயன் ஆய
திருமகளார் தனிக் கேள்வன்
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே (9)

2855. கடிவார் தீய வினைகள்
நொடியாரும் அளவைக்கண்
கொடியா அடு புள் உயர்த்த
வடிவு ஆர் மாதவனாரே (10)

2856. மாதவன்பால் சடகோபன்
தீது அவம் இன்றி உரைத்த
ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து
ஓத வல்லார் பிறவாரே (11)

Nammalvar: Tiruvaymoli 1.7 (2857–2867)

2857. பிறவித்துயர் அற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர் விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை ஆழிப்படை அந்தணனை
மறவியை இன்றி மனத்து வைப்பாரே (1)

2858. வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே (2)

2859. ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய அமுதைப் பருகிப் பருகி என்
மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (3)

2860. மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை
உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வு இல் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ? (4)

2861. விடுவேனோ என் விளக்கை என் ஆவியை
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து விழிக்கும் பிரானையே? (5)

2862. பிரா அன் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விரா அய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ? (6)

2863. யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே? (7)

2864. என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடு உடை
முன்னை அமரர் முழுமுதல் தானே (8)

2865. அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலும்மோ? (9)

2866. அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர் இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே (10)

2867. குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப் பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 1.8 (2868–2878)

2868. ஓடும் புள் ஏறி
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை
ஆடும் அம்மானே (1)

2869. அம்மானாய்ப் பின்னும்
எம் மாண்பும் ஆனான்
வெம் மா வாய் கீண்ட
செம் மா கண்ணனே (2)

2870. கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு
தண் ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே (3)

2871. வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர்
கற்பன் வைகலே (4)

2872. வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே (5)

2873. கலந்து என் ஆவி
நலம் கொள் நாதன்
புலன் கொள் மாணாய்
நிலம் கொண்டானே (6)

2874. கொண்டான் ஏழ் விடை
உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே (7)

2875. ஆனான் ஆன் ஆயன்
மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே (8)

2876. சங்கு சக்கரம்
அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய
நங்கள் நாதனே (9)

2877. நாதன் ஞாலம் கொள்
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர்
வேத நீரனே (10)

2878. நீர்புரை வண்ணன்
சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து
ஓர்தல் இவையே (11)

Nammalvar: Tiruvaymoli 1.9 (2879–2889)

2879. இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
என்னுடைச் சூழல் உளானே (1)

2880. சூழல் பலபல வல்லான்
தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்று ஆகி இடந்த
கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
அவன் என் அருகவிலானே (2)

2881. அருகல் இலாய பெரும் சீர்
அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
ஒழிவு இலன் என்னோடு உடனே (3)

2882. உடன் அமர் காதல் மகளிர்
திருமகள் மண்மகள் ஆயர்
மட மகள் என்று இவர் மூவர்
ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான்
கண்ணன் என் ஒக்கலையானே (4)

2883. ஒக்கலை வைத்து முலைப் பால்
உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
மாயன் என் நெஞ்சின் உளானே (5)

2884. மாயன் என் நெஞ்சின் உள்ளான்
மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
என்னுடைத் தோளிணையானே (6)

2885. தோள் இணை மேலும் நன் மார்பின்
மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
என்னுடை நாவின் உளானே (7)

2886. நாவினுள் நின்று மலரும்
ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
அழிப்போடு அளிப்பவன் தானே
பூ இயல் நால் தடம் தோளன்
பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக்
கண்ணன் என் கண்ணின் உளானே (8)

2887. கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
ஆக்கி என் நெற்றி உளானே (9)

2888. நெற்றியுள் நின்று என்னை ஆளும்
நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
கற்றைத் துழாய் முடிக் கோலக்
கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும்
நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்
வந்து எனது உச்சியுளானே (10)

2889. உச்சியுள்ளே நிற்கும் தேவ
தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
நீள் கழல் சென்னி பொருமே (11)

Nammalvar: Tiruvaymoli 1.10 (2890–2900)

2890. பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே (1)

2891. கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே? (2)

2892. எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே (3)

2893. நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? இனி என்ன குறைவினம்?
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் (4)

2894. கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே (5)

2895. நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே (6)

2896. எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (7)

2897. செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே (8)

2898. நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ? (9)

2899. மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு
மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே? (10)

Deutsch · Umschrift 2900. மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே (11)

Nammalvar: Tiruvaymoli 2.1 (2901–2911)

2901. வாயும் திரை உகளும் கானல் மட நாராய்
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே? (1)

2902. கோள் பட்ட சிந்தையையாய்க் கூர்வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மேபோல் நீயும் அரவு அணையான்
தாள் பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே? (2)

2903. காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்றக் கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)

2904. கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழிதோறு ஊழியே? (4)

2905. ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)

2906. நைவாய எம்மேபோல் நாள் மதியே நீ இந் நாள்
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாய் அரவு அணைமேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)

2907. தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)

2908. இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே? (8)

2909. நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே? (9)

2910. வேவு ஆரா வேட்கை நோய் மெல் ஆவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே (10)

2911. சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே (11)

Nammalvar: Tiruvaymoli 2.2 (2912–2922)

2912. திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய்
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே (1)

2913. ஏ பாவம் பரமே ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரிஏறு அன்றியே? (2)

2914. ஏறனை பூவனை பூமகள் தன்னை
வேறுஇன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே? (3)

2915. தேவும் எப் பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே? (4)

2916. தகும் சீர்த் தன் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே? (5)

2917. எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வு இன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே (6)

2918. பள்ளி ஆல் இலை ஏழ் உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக்கருத்தே? (7)

2919. கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரான் அன்றி யாரே
திருத்தித் திண் நிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே? (8)

2920. காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே (9)

2921. கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே (10)

2922. ஏத்த ஏழ் உலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே (11)

Nammalvar: Tiruvaymoli 2.3 (2923–2933)

2923. ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே (1)

2924. ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய
ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய் என்னைப் பெற்ற
அத் தாய் ஆய் தந்தை ஆய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே (2)

2925. அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறள் ஆய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே (3)

2926. எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
எனது ஆவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே (4)

2927. இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே (5)

2928. சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே (6)

2929. முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின் அலால் இலேன்காண் என்னை நீ குறிக்கொள்ளே (7)

2930. குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக்கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே (8)

2931. கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேனே (9)

2932. களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே? (10)

2933. குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன்கூடிநின்று ஆடுமினே (11)

Nammalvar: Tiruvaymoli 2.4 (2934–2944)

2934. ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே (1)

2935. வாள் நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கம் இலீரே (2)

2936. இரக்க மனத்தோடு எரி அணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே? (3)

2937. இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே (4)

2938. இவள் இராப்பகல் வாய்வெரீ இத் தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே? (5)

2939. தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உக உருகிநின்று உள் உளே (6)

2940. உள் உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே (7)

2941. வஞ்சனே என்னும் கைதொழும் தன
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே (8)

2942. பட்ட போது எழு போது அறியாள் விரை
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே? (9)

2943. ஏழை பேதை இராப்பகல் தன
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே (10)

2944. வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப் பத்தால் அடி
சூட்டலாகும் அம் தாமமே (11)

Nammalvar: Tiruvaymoli 2.5 (2945–2955)

2945. அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள
செந்தாமரைத்தடம் கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே (1)

2946. திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே (2)

2947. என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே (3)

2948. எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே (4)

2949. ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே (5)

2950. பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு அணை மேலாற்கேயோ (6)

2951. பாம்பு அணைமேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி அம் போர் ஏறே (7)

2952. பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே (8)

2953. சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவிதனை
எல்லை இல் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய்
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே (9)

2954. ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம்
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதலே (10)

2955. கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே (11)

Nammalvar: Tiruvaymoli 2.6 (2956–2966)

2956. வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத்
திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே. (1)

2957. சிக்கெனச் சிறிது ஓர் இடமும் புறப்படாத்
தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்குஆய் துளக்கு
அற்று அமுதம் ஆய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே (2)

2958. தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை
துழாய் விரைப்
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன்மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம்
மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே (3)

2959. வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்
பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே? (4)

2960. உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை
நாசம் செய்து உனது
அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை ஆடு அரவு அணை மேவிப் பாற்கடல்
யோக நித்திரை
சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே? (5)

2961. உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடு மா மொழி இசை
பாடி ஆடி என்
முன்னைத் தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்
மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே? (6)

2962. முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும்
உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ்
மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே (7)

2963. மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து
உள்ளம் தேறி
ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறு எழ
பாய் பறவை ஒன்று
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் (8)

2964. எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை
செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா <
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை
என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்குப் போகின்றதே? (9)

2965. போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்
தாய் தந்தை உயிர்
ஆகின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ?
பாகின்ற தொல் புகழ் மூவுலகுக்கும் நாதனே
பரமா தண் வேங்கடம்
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே (10)

2966. கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
கண்ணனைப் புகழ்
நண்ணி தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும்
ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே (11)

Nammalvar: Tiruvaymoli 2.7 (2967–2979)

2967. கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா!
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே (1)

2968. நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே (2)

2969. மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரைக் கண் குன்றம்
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே (3)

2970. கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே (4)

2971. விட்டு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள
் விட்டு இலங்கு கருஞ்சுடர் மலையே திரு உடம்பு
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே (5)

2972. மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழிதொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே (6)

2973. திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லைகாண் என் வாமனனே (7)

2974. வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய்ப் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)

2975. சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே (9)

2976. இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே (10)

2977. பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே (11)

2978. தாமோதரனை தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு? என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)

2979. வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே (13)

Nammalvar: Tiruvaymoli 2.8 (2980–2990)

2980. அணைவது அரவு அணைமேல் பூம்பாவை ஆகம்
புணர்வது இருவர் அவர் முதலும் தானே
இணைவன் ஆம் எப் பொருட்கும் வீடு முதல் ஆம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே (1)

2981. நீந்தும் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம்
பூந் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த
பூந் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே (2)

2982. புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திருஆகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே (3)

2983. புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே (4)

2984. ஓவாத் துயர்ப் பிறவி உட்பட மற்று எவ் எவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மா ஆகி ஆமை ஆய் மீன் ஆகி மானிடம் ஆம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே (5)

2985. தீர்த்தன் உலகு அளந்த சேவடிமேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடிமேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே? (6)

2986. கிடந்து இருந்து நின்று அளந்து கேழல் ஆய் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெருந் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே? (7)

2987. காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா
சேண் பால வீடோ உயிரோ மற்று எப் பொருட்கும்
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே (8)

2988. எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே? (9)

2989. சீர்மை கொள் வீடு சுவர்க்கம் நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப் பொருட்கும்
வேர் முதல் ஆய் வித்து ஆய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே (10)

2990. கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன்
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே (11)

Nammalvar: Tiruvaymoli 2.9 (2991–3001)

2991. எம் மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்புத் தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே (1)

2992. ஈதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணிவண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யேலே (2)

2993. செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என்
கை ஆர் சக்கரக் கண்ண பிரானே
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே (3)

2994. எனக்கே ஆட்செய் எக் காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கே ஆக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (4)

2995. சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பு இல் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே (5)

2996. மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே (6)

2997. வாராய் உன் திருப் பாத மலர்க்கீழ்ப்
பேராதே யான் வந்து அடையும்படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே (7)

2998. எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே (8)

2999. யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே (9)

Deutsch · Umschrift 3000. ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ் சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே (10)

3001. விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர்ச் சடகோபன்
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 2.10 (3002–3012)

3002. கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே (1)

3003. சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப்
பதியது ஏத்தி எழுவது பயனே (2)

3004. பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல்மலை அடைவது அது கருமமே (3)

3005. கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்
திருமலை அதுவே அடைவது திறமே (4)

3006. திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப் போவது கிறியே (5)

3007. கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை
நெறி பட அதுவே நினைவது நலமே (6)

3008. நலம் என நினைமின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை
வலம் முறை எய்தி மருவுதல் வலமே (7)

3009. வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (8)

3010. வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெருங்கோயில்
மழக் களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே (9)

3011. சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலைப்
போது அவிழ் மலையே புகுவது பொருளே (10)

3012. பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே (11)

Nammalvar: Tiruvaymoli 3.1 (3013–3023)

3013. முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச் சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம் பொன்
கடிச் சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே (1)

3014. கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ (2)

3015. பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர்
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே (3)

3016. மாட்டாதே ஆகிலும் இம் மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே? (4)

3017. வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாத ஞானம் ஆய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலம் ஆய் உலகை
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே? (5)

3018. ஓதுவார் ஓத்து எல்லாம் எவ் உலகத்து எவ் எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின்மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே? (6)

3019. வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே? (7)

3020. மாசூணாச் சுடர் உடம்புஆய் மலராது குவியாது
மாசூணா ஞானம் ஆய் முழுதும் ஆய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே? (8)

3021. மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே? (9)

3022. மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ் உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே? (10)

3023. வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ் ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே (11)

Nammalvar: Tiruvaymoli 3.2 (3024–3034)

3024. முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந் நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே? (1)

3025. வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)

3026. கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப் போர்
எல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வது ஓர் சூழ்ச்சியே (3)

3027. சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே (4)

3028. வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில்
கொந்து ஆர் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே? (5)

3029. கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன்
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே? (6)

3030. எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ் ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே (7)

3031. மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? (8)

3032. கூவிக் கூவிக் கொடுவினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)

3033. தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் அல்லல் எல்லாம் அகல
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே (10)

3034. உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 3.3 (3035–3045)

3035. ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்யவேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே (1)

3036. எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல் புகழ்க் கார் எழில் அண்ணலே (2)

3037. அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெள் நிறை சுனை நீர்த் திருவேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே (3)

3038. ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்கண்
பாசம் வைத்த பரம் சுடர்ச் சோதிக்கே (4)

3039. சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர்த் திருவேங்கடத்தானையே? (5)

3040. வேம் கடங்கள் மெய்மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே (6)

3041. சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே (7)

3042. குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே (8)

3043. ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு:பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள் மலர் ஆம் அடித்தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே (9)

3044. வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந் தடந் தாழ்வரே (10)

3045. தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே (11)

Nammalvar: Tiruvaymoli 3.4 (3046–3056)

3046. புகழும் நல் ஒருவன் என்கோ?
பொரு இல் சீர்ப் பூமி என்கோ?
திகழும் தண் பரவை என்கோ?
தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ?
நீள் சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ?
கண்ணனைக் கூவும் ஆறே (1)

3047. கூவும் ஆறு அறியமாட்டேன்
குன்றங்கள் அனைத்தும் என்கோ?
மேவு சீர் மாரி என்கோ?
விளங்கு தாரகைகள் என்கோ?
நா இயல் கலைகள் என்கோ?
ஞான நல் ஆவி என்கோ?
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ணனையே (2)

3048. பங்கயக் கண்ணன் என்கோ?
பவளச் செவ்வாயன் என்கோ?
அம் கதிர் அடியன் என்கோ?
அஞ்சன வண்ணன் என்கோ?
செங்கதிர் முடியன் என்கோ?
திரு மறு மார்பன் என்கோ?
சங்கு சக்கரத்தன் என்கோ?
சாதி மாணிக்கத்தையே (3)

3049. சாதி மாணிக்கம் என்கோ?
சவி கொள் பொன் முத்தம் என்கோ?
சாதி நல் வயிரம் என்கோ?
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ?
ஆதி அம் சோதி என்கோ?
ஆதி அம் புருடன் என்கோ?
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே (4)

3050. அச்சுதன் அமலன் என்கோ?
அடியவர் வினை கெடுக்கும்
நச்சும் மா மருந்தம் என்கோ?
நலங் கடல் அமுதம் என்கோ?
அச் சுவைக் கட்டி என்கோ?
அறுசுவை அடிசில் என்கோ?
நெய்ச் சுவைத் தேறல் என்கோ?
கனி என்கோ? பால் என்கேனோ? (5)

3051. பால் என்கோ? நான்கு வேதப்
பயன் என்கோ? சமய நீதி
நூல் என்கோ? நுடங்கு கேள்வி
இசை என்கோ? இவற்றுள் நல்ல
மேல் என்கோ? வினையின் மிக்க
பயன் என்கோ? கண்ணன் என்கோ?
மால் என்கோ? மாயன் என்கோ?
வானவர் ஆதியையே (6)

3052. வானவர் ஆதி என்கோ?
வானவர் தெய்வம் என்கோ?
வானவர் போகம் என்கோ?
வானவர் முற்றும் என்கோ?
ஊனம் இல் செல்வம் என்கோ?
ஊனம் இல் சுவர்க்கம் என்கோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?
ஒளி மணி வண்ணனையே (7)

3053. ஒளி மணி வண்ணன் என்கோ?
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ?
நான்முகக் கடவுள் என்கோ?
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே (8)

3054. கண்ணனை மாயன் தன்னை
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சுதனை
அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணும் ஆறு அறியமாட்டேன்
யாவையும் எவரும் தானே (9)

3055. யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்
அவனையும் கூடலாமே (10)

3056. கூடி வண்டு அறையும் தண் தார்க்
கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர்
வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே (11)

Nammalvar: Tiruvaymoli 3.5 (3057–3067)

3057. மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மாம் கருமம் என்? சொல்லீர்
தண் கடல் வட்டத்து உள்ளீரே (1)

3058. தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழல் கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக்கொள்ளப் பாடி
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே (2)

3059. மலையை எடுத்து கல் மாரி
காத்து பசுநிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்டத்
தடுகுட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழைக்கின்ற வம்பரே (3)

3060. வம்பு அவிழ் கோதைபொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம்பவளத் திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி
கோகு உகட்டுண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்களிடையே? (4)

3061. சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே? (5)

3062. மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
தடங் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை
கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே (6)

3063. நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய்வாரே? (7)

3064. வார் புனல் அம் தண் அருவி
வட திருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றி
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே (8)

3065. அமரர் தொழப்படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து
அவன் தன்னோடு ஒன்று ஆக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே (9)

3066. கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை
திரு மணி வண்ணனை செங்கண்
மாலினை தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே (10)

3067. தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை
அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண்
வளங் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்து
அருவினை நீறு செய்யுமே (11)

Nammalvar: Tiruvaymoli 3.6 (3068–3078)

3068. செய்ய தாமரைக் கண்ணன் ஆய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே (1)

3069. மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை
தடங் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனை தென் இலங்கை
எரி எழச் செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ (2)

3070. பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனை குடக் கூத்தனை
அரவம் ஏறி அலை கடல்
அமரும் துயில்கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)

3071. வைம்மின் நும் மனத்து என்று யான்
உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க
நாள்தொறும் வானவர்
தம்மை ஆளும் அவனும் நான்முகனும்
சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே (4)

3072. திரியும் காற்றோடு அகல் விசும்பு
திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்
கரிய மேனியன் செய்ய தாமரைக்
கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங் குஞ்சி எங்கள்
சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)

3073. தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்
அவன் ஒரு மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்
ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை
யான் இலேன் எழுமைக்குமே (6)

3074. எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்
அமுதத்தினை எனது ஆர் உயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணி
வண்ணனை குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூய மனத்தர் ஆய்
இறையும் நில்லா துயரங்களே (7)

3075. துயரமே தரு துன்ப இன்ப
வினைகள் ஆய் அவை அல்லன் ஆய்
உயர நின்றது ஓர் சோதி ஆய் உலகு
ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு
நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தன்னை அன்றி
மற்று இலேன் தஞ்சமாகவே (8)

3076. தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு
தானும் ஆய் அவை அல்லன் ஆய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல்
மூவர் தம்முள்ளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்
அவன் இவன் என்று கூழேன்மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)

3077. கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக்கிடந்த
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அட வரும் படை மங்க ஐவர்கட்கு
ஆகி வெம் சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல்
காண்பது என்றுகொல் கண்களே (10)

3078. கண்கள் காண்டற்கு அரியன்
ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
அருள் செய்யும் வானவர் ஈசனை
பண் கொள் சோலை வழுதி நாடன்
குருகைக்கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)

Nammalvar: Tiruvaymoli 3.7 (3079–3089)

3079. பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கயக் கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மை ஆளும் பரமரே (1)

3080. ஆளும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
தாளும் தடக் கையும் கூப்பிப் பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை நாதரே (2)

3081. நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்ப்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான் தன்னை
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடையார்களே (3)

3082. உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திருநாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு எமக்கு எம் பெருமக்களே (4)

3083. பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே (5)

3084. அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் தூ மணி வண்ணன் எம்மான் தன்னை
ஒளிக் கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)

3085. சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டுபோய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே (7)

3086. நம்பனை ஞாலம் படைத்தவனை திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம் தாங்களே (8)

3087. குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே (9)

3088. அடி ஆர்ந்த வையம் உண்டு ஆல் இலை அன்னவசம் செய்யும
்படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே (10)

3089. அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே (11)

Nammalvar: Tiruvaymoli 3.8 (3090–3100)

3090. முடியானே மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானே ஆழ் கடலைக் கடைந்தாய் புள் ஊர்
கொடியானே கொண்டல் வண்ணா அண்டத்து உம்பரில்
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே (1)

3091. நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே (2)

3092. வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம்
நாயகனே நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர்
தாயவனே என்று தடவும் என் கைகளே (3)

3093. கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை
மெய்கொள்ளக் காண விரும்பும் என் கண்களே (4)

3094. கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே (5)

3095. செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும்
கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்று
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே (6)

3096. ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடைத்
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே (7)

3097. கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எந் நாள் கண்டுகொள்வனே? (8)

3098. கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே? (9)

3099. பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசகமாலை கொண்டு உன்னையே
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே? (10)

Deutsch · Umschrift 3100. புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன்சொல்
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே (11)

Nammalvar: Tiruvaymoli 3.9 (3101–3111)

3101. சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே (1)

3102. உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே? (2)

3103. ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப்போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3)

3104. என் ஆவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும் பொருள்?
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே (4)

3105. கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ளக் குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (5)

3106. வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
இம் மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்
நும் இன் கவி கொண்டு நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேருமே (6)

3107. சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7)

3108. வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன்
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8)

3109. வாய்கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே (9)

3110. நின்றுநின்று பல நாள் உய்க்கும் இவ் உடல் நீங்கிப்போய்
சென்று சென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே? (10)

3111. ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)

Nammalvar: Tiruvaymoli 3.10 (3112–3122)

3112. சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள்
தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை
மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற
நான் ஓர் குறைவு இலனே (1)

3113. குறைவு இல் தடங் கடல் கோள் அரவு ஏறி தன்
கோலச் செந்தாமரைக்கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி
வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி அசுரரைக்
காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யான் ஒரு முட்டு இலனே (2)

3114. முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்
மூவுலகுக்கு உரிய
கட்டியை தேனை அமுதை நன்பாலை
கனியை கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை
வணங்கி அவன் திறத்துப்
பட்ட பின்னை இறையாகிலும் யான் என்
மனத்துப் பரிவு இலனே (3)

3115. பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று
படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும்
அங்கியும் போர் தொலைய
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
ஆயனை பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான்
இறையேனும் இடர் இலனே (4)

3116. இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
ஒன்றும் துயர் இலனே (5)

3117. துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்
புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற
யான் ஓர் துன்பம் இலனே (6)

3118. துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
ஆய் உலகங்களும் ஆய்
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான்
சுவர்க்கங்களும் ஆய்
மன் பல் உயிர்களும் ஆகி பலபல
மாய மயக்குக்களால்
இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று
ஏதும் அல்லல் இலனே (7)

3119. அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்
அழகு அமர் சூழ் ஒளியன்
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்
ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு
எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி
யான் ஓர் துக்கம் இலனே (8)

3120. துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி
துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து
வேண்டும் உருவு கொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும்
எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று
ஒன்றும் தளர்வு இலனே (9)

3121. தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்
அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
ஐந்தை இரு சுடரை
கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள் பற்றி
யான் என்றும் கேடு இலனே (10)

3122. கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை
குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும்
பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும்
தரும் ஒரு நாயகமே (11)

Nammalvar: Tiruvaymoli 4.1 (3123–3133)

3123. ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ (1)

3124. உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ (2)

3125. அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ (3)

3126. நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத் தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ (4)

3127. பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ (5)

3128. வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ (6)

3129. ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே (7)

3130. குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு அணையான் திருநாமம் படிமினோ (8)

3131. படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ (9)

3132. குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடு அஃதே (10)

3133. அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே (11)

Nammalvar: Tiruvaymoli 4.2 (3134–3144)

3134. பாலன் ஆய் ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி
ஆல் இலை அன்னவசம் செய்யும் அண்ணலார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே (1)

3135. வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல் அடிமேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே (2)

3136. பா இயல் வேத நல் மாலை பல கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடிமேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே (3)

3137. கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந் தோளியே (4)

3138. தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார் கோவலனார் குடக் கூத்தனார்
தாள் இணைமேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே (5)

3139. மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனம் ஆய்
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என் தன் மடந்தையே (6)

3140. மடந்தையை வண் கமலத் திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர்! என் மடக்கொம்பே (7)

3141. கொம்பு போல் சீதைபொருட்டு இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணைமேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்? (8)

3142. நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப் பகல் என்செய்கேன்? (9)

3143. என் செய்கேன்? என்னுடைப் பேதை என் கோமளம்
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர்
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே (10)

3144. மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே (11)

Nammalvar: Tiruvaymoli 4.3 (3145–3155)

3145. கோவை வாயாள்பொருட்டு ஏற்றின்
எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்
குல நல் யானை மருப்பு ஒசித்தாய்
பூவை வீயா நீர் தூவிப்
போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்குப்
பூசும் சாந்து என் நெஞ்சமே (1)

3146. பூசும் சாந்து என் நெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே
வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும்
என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த
எந்தை ஏக மூர்த்திக்கே (2)

3147. ஏக மூர்த்தி இரு மூர்த்தி
மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதம் ஆய்
இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி
நாகம் ஏறி நடுக் கடலுள்
துயின்ற நாராயணனே உன்
ஆகம் முற்றும் அகத்து அடக்கி
ஆவி அல்லல் மாய்த்ததே (3)

3148. மாய்த்தல் எண்ணி வாய் முலை
தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே வாமனனே மாதவா
பூத் தண் மாலை கொண்டு உன்னைப்
போதால் வணங்கேனேலும் நின்
பூத் தண் மாலை நெடு முடிக்குப்
புனையும் கண்ணி எனது உயிரே (4)

3149. கண்ணி எனது உயிர் காதல்
கனகச் சோதி முடி முதலா
எண் இல் பல் கலன்களும்
ஏலும் ஆடையும் அஃதே
நண்ணி மூவுலகும்
நவிற்றும் கீர்த்தியும் அஃதே
கண்ணன் எம் பிரான் எம்மான்
கால சக்கரத்தானுக்கே (5)

3150. கால சக்கரத்தொடு வெண்
சங்கம் கை ஏந்தினாய்
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த
நாராயணனே என்று என்று
ஓலம் இட்டு நான் அழைத்தால்
ஒன்றும் வாராயாகிலும்
கோலம் ஆம் என் சென்னிக்கு உன்
கமலம் அன்ன குரைகழலே (6)

3151. குரை கழல்கள் நீட்டி மண்
கொண்ட கோல வாமனா
குரை கழல் கைகூப்புவார்கள்
கூட நின்ற மாயனே
விரை கொள் பூவும் நீரும் கொண்டு
ஏத்தமாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திரு உருவம்
என்னது ஆவி மேலதே (7)

3152. என்னது ஆவி மேலையாய்
ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகி நின்ற
சோதி ஞான மூர்த்தியாய்
உன்னது என்னது ஆவியும்
என்னது உன்னது ஆவியும்
இன்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லேனே? (8)

3153. உரைக்க வல்லேன் அல்லேன் உன்
உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
காதல் மையல் ஏறினேன்
புரைப்பு இலாத பரம்பரனே
பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன் (9)

3154. யானும் ஏத்தி ஏழ் உலகும்
முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை
ஏத்த ஏத்த எங்கு எய்தும்?
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்திப்ப
யானும் எம் பிரானையே
ஏத்தினேன் யான் உய்வானே (10)

3155. உய்வு உபாயம் மற்று இன்மை தேறி
கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரைப் பழனத்
தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய் இல் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே (11)

Nammalvar: Tiruvaymoli 4.4 (3156–3166)

3156. மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே? (1)

3157. பெய்வளைக் கைகளைக் கூப்பி
பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி
சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று
நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறுமான்
செய்கின்றது ஒன்று அறியேனே (2)

3158. அறியும் செந்தீயைத் தழுவி
அச்சுதன் என்னும் மெய் வேவாள்
எறியும் தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கைச் சிறுமான்
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? (3)

3159. ஒன்றிய திங்களைக் காட்டி
ஒளி மணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
நெடுமாலே வா என்று கூவும்
நன்று பெய்யும் மழை காணில்
நாரணன் வந்தான் என்று ஆலும்
என்று இன மையல்கள் செய்தான்
என்னுடைக் கோமளத்தையே? (4)

3160. கோமள வான் கன்றைப் புல்கி
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய்
அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன்
அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால் செய்து செய்கின்ற கூத்தே (5)

3161. கூத்தர் குடம் எடுத்து ஆடில்
கோவிந்தன் ஆம் எனா ஓடும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில்
மாயவன் என்று மையாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு
என் பெண்கொடி ஏறிய பித்தே (6)

3162. ஏறிய பித்தினோடு எல்லா
உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இடக் காணில்
நெடுமால் அடியார் என்று ஓடும்
நாறு துழாய் மலர் காணில்
நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத் திருவே (7)

3163. திரு உடை மன்னரைக் காணில்
திருமாலைக் கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில்
உலகு அளந்தான் என்று துள்ளும்
கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்
கடல் வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள்
கண்ணன் கழல்கள் விரும்புமே (8)

3164. விரும்பிப் பகவரைக் காணில்
வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என்று ஏறப் பறக்கும்
பெரும் புல ஆ நிரை காணில்
பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின்றானே (9)

3165. அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்
பெருமானே வா என்று கூவும்
மயல் பெருங் காதல் என் பேதைக்கு
என்செய்கேன் வல்வினையேனே? (10)

3166. வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையால் சொன்ன பாடல்
ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீர எல்லாரும்
தொழுது எழ வீற்றிருப்பாரே (11)

Nammalvar: Tiruvaymoli 4.5 (3167–3177)

3167. வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே? (1)

3168. மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன்
செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே (2)

3169. வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3)

3170. மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே (4)

3171. ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே (5)

3172. கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே (6)

3173. என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே? (7)

3174. நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8)

3175. வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை
கூனல் சங்கத் தடக்கையவனை குடம் ஆடியை
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டே? (9)

3176. உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (10)

3177. மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே 11

Nammalvar: Tiruvaymoli 4.6 (3178–3188)

3178. தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)

3179. திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெருந் தெய்வம்
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்மினே (2)

3180. இது காண்மின் அன்னைமீர் இக் கட்டுவிச்சி சொல் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின்
மது வார் துழாய் முடி மாயப் பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே (3)

3181. மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளைப் பெறுதிரே (4)

3182. இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)

3183. தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)

3184. அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே (7)

3185. வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய்த் தூய்
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)

3186. கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)

3187. உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும் தொழுது ஆடுமே (10)

3188. தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே (11)

Nammalvar: Tiruvaymoli 4.7 (3189–3199)

3189. சீலம் இல்லாச் சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்று என்று
காலந்தோறும் யான் இருந்து கைதலைபூசல் இட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே (1)

3190. கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே (2)

3191. ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்று என்று
கூவிக் கூவி நெஞ்சு உருகி கண்பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (3)

3192. காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்று என்று
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டாப் பீடு உடை அப்பனையே? (4)

3193. அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங்கொல்? என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே (5)

3194. நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே (6)

3195. அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்
நறுந் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னைக் கண்டுகொண்டே (7)

3196. கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே (8)

3197. இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலந்தோறும் பூப் பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன் எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே? (9)

3198. சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே (10)

3199. தழுவிநின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தன்னை
குழுவு மாடத் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே (11)

Nammalvar: Tiruvaymoli 4.8 (3200–3210)

Deutsch · Umschrift 3200. ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம் குலமா அசுரர்களை
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே (1)

3201. மணி மாமை குறைவு இல்லா மலர்மாதர் உறை மார்பன்
அணி மானத் தட வரைத்தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே (2)

3202. மட நெஞ்சால் குறைவு இல்லா மகள்தாய்செய்து ஒரு பேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே (3)

3203. நிறையினால் குறைவு இல்லா நெடும் பணைத் தோள் மடப் பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கைச்
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே (4)

3204. தளிர் நிறத்தால் குறைவு இல்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே (5)

3205. அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒருமூர்த்தி
குறிய மாண் உரு ஆகி கொடுங் கோளால் நிலம் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே (6)

3206. கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே (7)

3207. வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே (8)

3208. மேகலையால் குறைவு இல்லா மெலிவு உற்ற அகல் அல்குல்
போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே (9)

3209. உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடைமுடியன் தனி ஒருகூறு அமர்ந்து உறையும்
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே (10)

3210. உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே (11)

Nammalvar: Tiruvaymoli 4.9 (3211–3221)

3211. நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க
எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே (1)

3212. சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே (2)

3213. கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்
பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே (3)

3214. கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே (4)

3215. வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கு இதன்மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே (5)

3216. மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர்
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே (6)

3217. ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே (7)

3218. காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே? (8)

3219. கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
ஆட்டுதி நீ அரவு அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே (9)

3220. கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே (10)

3221. திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே (11)

Nammalvar: Tiruvaymoli 4.10 (3222–3232)

3222. ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? (1)

3223. நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும்
முன் படைத்தான்
வீடு இல் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன்
மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனைப்
பாடி ஆடி பரவிச் செல்மின்கள்
பல் உலகீர் பரந்தே (2)

3224. பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று
உடனே விழுங்கி
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது
கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும்
திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம்
மற்று இல்லை பேசுமினே (3)

3225. பேச நின்ற சிவனுக்கும் பிரமன்
தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்துக்
கண்டுகொண்மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனுள்
ஈசன்பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது
இலிங்கியர்க்கே? (4)

3226. இலிங்கத்து இட்ட புராணத்தீரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும்
தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும்
திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும்
பொய் இல்லை போற்றுமினே (5)

3227. போற்றி மற்று ஓர் தெய்வம் பேணப்
புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால்
உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது
அறிந்து அறிந்து ஓடுமினே (6)

3228. ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து
மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால்
வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற
திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு
அடிமைபுகுவதுவே (7)

3229. புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது
நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலித்
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத்
தெய்வம் விளம்புதிரே (8)

3230. விளம்பும் ஆறு சமயமும் அவைஆகியும்
மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய
திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை
உய்யக்கொண்டு போகுறிலே (9)

3231. உறுவது ஆவது எத் தேவும் எவ் உலகங்களும்
மற்றும் தன்பால்
மறு இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும்
நின்றவண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு
திருக்குருகூர் அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குடக்
கூத்தனுக்கு ஆள் செய்வதே (10)

3232. ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்
வண் குருகூர்நகரான்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்
மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள்
இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர்
மற்றது கையதுவே (11)

Nammalvar: Tiruvaymoli 5.1 (3233–3243)

3233. கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே (1)

3234. போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்துச் சொல்ல
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான்
வானே மா நிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே (2)

3235. உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்
வெள்ளத்து அணைக்கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3)

3236. என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன்
என்கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4)

3237. கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே (5)

3238. புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண்டொழிந்தேன்
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரைக்கண்
அறம் முயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே (6)

3239. அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலைபூசல் இட்டே
மெய்ம் மால் ஆயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே (7)

3240. மேலாத் தேவர்களும் நிலத் தேவரும் மேவித் தொழும்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே (8)

3241. ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க
தேவு ஆர் கோலத்தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே (9)

3242. ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள் செய்து என்னை முற்றவும் தான் ஆனான்
மீன் ஆய் ஆமையும் ஆய் நரசிங்கமும் ஆய் குறள் ஆய்
கான் ஆர் ஏனமும் ஆய் கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10)

3243. கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
ஏர் வள ஒண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர்வண்ணத்தால் உரைப்பார் அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)

Nammalvar: Tiruvaymoli 5.2 (3244–3254)

3244. பொலிக பொலிக பொலிக
போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழிதரக் கண்டோம் (1)

3245. கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டு ஆர் தண் அம் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண் தான் பாடி நின்று ஆடி
பரந்து திரிகின்றனவே (2)

3246. திரியும் கலியுகம் நீங்கி
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ணன் எம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே (3)

3247. இடம் கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே
தடம் கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களே ஆய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின்றனவே (4)

3248. செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது இவ் உலகத்து
வைகுந்தன் பூதங்களே ஆய்
மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர்
ஊழி பெயர்த்திடும் கொன்றே (5)

3249. கொன்று உயிர் உண்ணும் விசாதி
பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் உலகில் கடிவான்
நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே (6)

3250. நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்
மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி
யாயவர்க்கே இறுமினே (7)

3251. இறுக்கும் இறை இறுத்து உண்ண
எவ் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக
அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்
மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8)

3252. மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்
வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை
ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும்
பகவரும் மிக்கது உலகே (9)

3253. மிக்க உலகுகள் தோறும்
மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்கத் தொழ கிற்றிராகில்
கலியுகம் ஒன்றும் இல்லையே (10)

3254. கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்
அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி
மாயப் பிரான் கண்ணன் தன்னை
கலி வயல் தென் நன் குருகூர்க்
காரிமாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து
உள்ளத்தை மாசு அறுக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 5.3 (3255–3265)

3255. மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே? (1)

3256. என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை?
என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே (2)

3257. ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)

3258. ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே (4)

3259. கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே? (5)

3260. அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)

3261. வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே? (7)

3262. பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந் நாள்கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே? (8)

3263. நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே (9)

3264. யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஆம் மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே (10)

3265. இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)

Nammalvar: Tiruvaymoli 5.4 (3266–3276)

3266. ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள் இருள் ஆய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே? (1)

3267. ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரம் ஆய் ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே. (2)

3268. நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழி ஆய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே (3)

3269. பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார் ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே? (4)

3270. ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே (5)

3271. பின்நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் இடத்தே? (6)

3272. காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
சேண் பாலது ஊழி ஆய் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப் பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப் பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ? (7)

3273. தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே (8)

3274. வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளி ஆய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்
செஞ் சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே (9)

3275. நின்று உருகுகின்றேனே போல நெடு வானம்
சென்று உருகி நுண் துளி ஆய் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே (10)

3276. உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ? (11)

Nammalvar: Tiruvaymoli 5.5 (3277–3287)

3277. எங்ஙனேயோ அன்னைமீர்காள்
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே (1)

3278. என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும்
மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும்
வந்து எங்கும் நின்றிடுமே (2)

3279. நின்றிடும் திசைக்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும்
சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே (3)

3280. நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று
அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
பூந் தண் மாலைத் தண் துழாயும்
பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
பாவியேன் பக்கத்தவே (4)

3281. பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
ஆவியின் மேலனவே (5)

3282. மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று
அன்னை காணக்கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும்
என் நெஞ்சம் நிறைந்தனவே (6)

3283. நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று
அன்னை காணக்கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
நேமி அங்கை உளதே (7)

3284. கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று
அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன் நிற்குமே (8)

3285. முன் நின்றாய் என்று தோழிமார்களும்
அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள் முடி ஆதி ஆய
உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
நெஞ்சம் கழியானே (9)

3286. கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
அன்னை காணக்கொடாள்
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
ஆர்க்கும் அறிவு அரிதே (10)

3287. அறிவு அரிய பிரானை
ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
திருக்குறுங்குடி அதன்மேல்
அறியக் கற்று வல்லார்
வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே (11)

Nammalvar: Tiruvaymoli 5.6 (3288–3298)

3288. கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? (1)

3289. கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே? (2)

3290. காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே? (3)

3291. செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
செய்ய கனி வாய் இள மான் திறத்தே? (4)

3292. திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
திறம்பாது என் திருமகள் எய்தினவே? (5)

3293. இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இன ஆ நிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே? (6)

3294. உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே? (7)

3295. உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே? (8)

3296. கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள் உடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே? (9)

3297. கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும்
கோலம் கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே? (10)

3298. கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே (11)

Nammalvar: Tiruvaymoli 5.7 (3299–3309)

3299. நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும்
இனி உன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர்
சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே (1)

Deutsch · Umschrift 3300. அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக்
காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு
சிரீவரமங்கலநகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே (2)

3301. கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என்
கார்முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ்
சிரீவரமங்கலநகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே (3)

3302. மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய் அன்று
மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச்
சிரீவரமங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்தக் கூவுவனே? (4)

3303. எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ
தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச்
சிரீவரமங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே (5)

3304. ஏனம் ஆய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும்
என்னை ஆளுடை
வான நாயகனே மணி மாணிக்கச்சுடரே
தேன மாம்பொழில் தண் சிரீவரமங்கலத்தவர்
கைதொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே (6)

3305. வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
கொழுந்தே உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தையே முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்
சிரீவரமங்கலநகர்
அந்தம் இல் புகழாய் அடியேனை அகற்றேலே (7)

3306. அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை
வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே (8)

3307. புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய்
எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி
தண் சிரீவரமங்கை
யுள் இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே (9)

3308. ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய்
உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி
தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே (10)

3309. தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடி இணைமிசை
கொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண்
சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே (11)

Nammalvar: Tiruvaymoli 5.8 (3310–3320)

3310. ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே (1)

3311. எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே (2)

3312. என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள்
செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே (3)

3313. செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே (4)

3314. அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும்வகையே சூழ்கண்டாய் (5)

3315. சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்?
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே (6)

3316. அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே
எரி ஏய் பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே (7)

3317. களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே (8)

3318. இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே (9)

3319. வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? (10)

3320. உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 5.9 (3321–3331)

3321. மான் ஏய் நோக்கு நல்லீர் வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? (1)

3322. என்று கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)

3323. சூடு மலர்க்குழலீர் துயராட்டியேன் மெலிய
பாடும் நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)

3324. நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே (4)

3325. நல் நலத் தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம் தன்னை
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)

3326. காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே? (6)

3327. பாதங்கள்மேல் அணி பூந் தொழக் கூடுங்கொல் பாவை நல்லீர்
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ் ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)

3328. நாள்தொறும் வீடு இன்றியே தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்
ஆடு உறு தீங் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூந் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே? (8)

3329. கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல் அருளே? (9)

3330. தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே? (10)

3331. நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடிமேல்
சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)

Nammalvar: Tiruvaymoli 5.10 (3332–3342)

3332. பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம்
கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று
உருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)

3333. வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை
வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன்
செய்கை நைவிக்கும்
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே? (2)

3334. பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட பிள்ளைத் தேற்றமும்
பேர்ந்து ஓர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன்
தாமரைக் கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே (3)

3335. கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும்
கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை
விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே (4)

3336. உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும்
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து
மணந்த மாயங்கள்
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே (5)

3337. நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்
நினைப்பு அரியன
ஒன்று அலா உருவு ஆய் அருவு ஆய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம்
நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே (6)

3338. ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு
இன்மையாய் வந்து என்
கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
மாணிக்கமே என் கண்கட்குத்
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே (7)

3339. திரு உருவு கிடந்த ஆறும் கொப்பூழ்ச்
செந்தாமரைமேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்
என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே? (8)

3340. அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும்
மண்ணும் விண்ணும்
முடிய ஈர் அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
நின் தனக்கே கரைந்து உகும்
கொடிய வல்வினையேன் உன்னை என்றுகொல் கூடுவதே? (9)

3341. கூடி நீரைக் கடைந்த ஆறும் அமுதம் தேவர்
உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி
உண்டிடுகின்ற நின் தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு அணையானே (10)

3342. நாகு அணைமிசை நம் பிரான் சரணே சரண்
நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச்
சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து
மகிழ்வு எய்துவர் வைகலுமே (11)

Nammalvar: Tiruvaymoli 6.1 (3343–3353)

3343. வைகல் பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே (1)

3344. காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே (2)

3345. திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே (3)

3346. இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே (4)

3347. உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே (5)

3348. போற்றி யான் இரந்தேன் புன்னைமேல் உறை பூங் குயில்காள்
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒருவண்ணமே (6)

3349. ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே (7)

3350. திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்
பெரும் தண் தாமரைக்கண் பெரு நீள் முடி நால் தடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே (8)

3351. அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன் தன்னை கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே (9)

3352. வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே (10)

3353. மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடை யவர்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 6.2 (3354–3364)

3354. மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு
நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி
அதுகொண்டு செய்வது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ (1)

3355. போகு நம்பீ உன் தாமரைபுரை கண் இணையும்
செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார்
செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே (2)

3356. போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை
நம்பீ நின் செய்ய
வாய் இருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்
வேய் இரும் தடம் தோளினார் இத் திருவருள்
பெறுவார் எவர்கொல்
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே? (3)

3357. ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று நீ
கிடந்தாய் உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே?
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு
சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே (4)

3358. கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும்
நன்கு அறியும் திண் சக்கர
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார்
மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே (5)

3359. குழகி எங்கள் குழமணன்கொண்டு கோயின்மை செய்து
கன்மம் ஒன்று இல்லை
பழகி யாம் இருப்போம் பரமே இத் திரு அருள்கள்?
அழகியார் இவ் உலகம் மூன்றுக்கும் தேவிமை
ஈதகுவார் பலர் உளர்
கழகம் ஏறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே (6)

3360. கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது
கேட்கில் என் ஐம்மார்
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே (7)

3361. பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும்
பேதியாதது ஓர்
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய்
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப் போதுமின்
என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே? (8)

3362. உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரைத்
தடம் கண் விழிகளின்
அக வலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு
சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே (9)

3363. நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்
அரசு களைகட்ட
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய
கருமாணிக்கச் சுடர்
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே (10)

3364. ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இசை யொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே (11)

Nammalvar: Tiruvaymoli 6.3 (3365–3375)

3365. நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமும் ஆய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமும் ஆய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே (1)

3366. கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலும் ஆய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே (2)

3367. நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமும் ஆய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)

3368. புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
எண்ணம் ஆய் மறப்பு ஆய் உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)

3369. கைதவம் செம்மை கருமை வெளுமையும் ஆய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையும் ஆய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே (5)

3370. மூவுலகங்களும் ஆய் அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே (6)

3371. பரம் சுடர் உடம்பு ஆய் அழுக்குப் பதித்த உடம்பு ஆய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே (7)

3372. வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே (8)

3373. என் அப்பன் எனக்கு ஆய் இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே (9)

3374. நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையும் ஆய்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)

3375. காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே (11)

Nammalvar: Tiruvaymoli 6.4 (3376–3386)

3376. குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்
குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய
வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன்
என்ன குறை எனக்கே? (1)

3377. கேயத் தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும்
கெண்டை ஒண் கண்
வாசப் பூங் குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு
எவ் உலகம் நிகரே? (2)

3378. நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
நீள் நெடும் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை
போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை
நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு
என் இனி நோவதுவே? (3)

3379. நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்
வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும் ஊர் சகடம்
இறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து மனம் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு
என் இனி வேண்டுவதே? (4)

3380. வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும்
வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னைப் புலம்ப போய் அங்கு ஓர்
ஆய்க்குலம் புக்கதும்
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச
வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு
என்ன இகல் உளதே? (5)

3381. இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமில்
ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும்
உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என்
அப்பன் தன் மாயங்களே
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு
என்ன மனப் பரிப்பே? (6)

3382. மனப் பரிப்போடு அழுக்கு மானிட
சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன
சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்
அப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு
இனி யார் நிகர் நீள் நிலத்தே? (7)

3383. நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும்
உட்பட மற்றும் பல
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என்
அப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு
இனி என்ன கலக்கம் உண்டே? (8)

3384. கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்
கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்
உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம்
இவை உடை மால்வண்ணனை
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ
இம் மண்ணின் மிசையே? (9)

3385. மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர்
பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட
நூற்றிட்டுப் போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய
சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு
ஆர் பிறர் நாயகரே? (10)

3386. நாயகன் முழு ஏழ் உலகுக்கும்
ஆய் முழு ஏழ் உலகும் தன்
வாயகம் புக வைத்து உமிழ்ந்து
அவை ஆய் அவை அல்லனும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப் பத்தால்
பத்தர் ஆவர் துவள் இன்றியே (11)

Nammalvar: Tiruvaymoli 6.5 (3387–3397)

3387. துவள் இல் மா மணி மாடம் ஓங்கு
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்
தாமரைத் தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க
நின்று நின்று குமுறுமே (1)

3388. குமுறும் ஓசை விழவு ஒலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க
நெக்கு ஒசிந்து கரையுமே (2)

3389. கரை கொள் பைம் பொழில் தண் பணைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர்
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்
திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி
நெடும் கண் நீர் மல்க நிற்குமே (3)

3390. நிற்கும் நால்மறைவாணர் வாழ்
தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள்
கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கருங் கடல்
வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து
உள் மகிழ்ந்து குழையுமே (4)

3391. குழையும் வாள் முகத்து ஏழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு
அன்று தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும்
அத் திசை உற்று நோக்கியே (5)

3392. நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு
செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத் திசை அல்லால் மறு
நோக்கு இலள் வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
நாமமே இவள் அன்னைமீர்! (6)

3393. அன்னைமீர் அணி மா மயில் சிறுமான்
இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்
தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்
வண்ணன் மாயம் கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள்
வாயனகள் திருந்தவே (7)

3394. திருந்து வேதமும் வேள்வியும்
திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை
வண் தொலைவில்லிமங்கலம்
கருந் தடம் கண்ணி கைதொழுத அந் நாள்
தொடங்கி இந் நாள்தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன
என்று என்றே நைந்து இரங்குமே (8)

3395. இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை
மணிவண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தான் உறை
தொலைவில்லிமங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்
திருநாமம் கற்றதன் பின்னையே (9)

3396. பின்னைகொல் நில மா மகள்கொல்
திருமகள்கொல் பிறந்திட்டாள்?
என்ன மாயம்கொலோ இவள் நெடுமால்
என்றே நின்று கூவுமால்
முன்னி வந்து அவன் நின்று இருந்து
உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த்
திருநாமம் கேட்பது சிந்தையே. (10)

3397. சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்று அடைந்த
வண் குருகூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை
வில்லிமங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்
அடிமைசெய்வார் திருமாலுக்கே (11)

Nammalvar: Tiruvaymoli 6.6 (3398–3408)

3398. மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே (1)

3399. சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே (2)

Deutsch · Umschrift 3400. நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட
திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே (3)

3401. பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே (4)

3402. பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே (5)

3403. கற்பகக் கா அன நல் பல தோளற்கு
பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு
நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே (6)

3404. மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே (7)

3405. சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே (8)

3406. மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே (9)

3407. பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே (10)

3408. கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே (11)

Nammalvar: Tiruvaymoli 6.7 (3409–3419)

3409. உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே (1)

3410. ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே
போரும் கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே? (2)

3411. பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3)

3412. கொல்லை என்பர்கொலோ குணம் மிக்கனள் என்பர்கொலோ
சில்லை வாய்ப் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும்? எல்லே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே (4)

3413. மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5)

3414. இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்
தென் திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே (6)

3415. மல்கு நீர்க் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனிப் போய்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7)

3416. ஒசிந்த நுண் இடைமேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே? (8)

3417. காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய்
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே (9)

3418. நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே (10)

3419. வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)

Tamilischer Text 3420–4000

Deutsche Übersetzung 3420–4000 · Werkhinweise und Quellen

Nammalvar: Tiruvaymoli 6.8 (3420–3430)

Deutsch · Umschrift 3420. பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ
நல் நலப் புள்ளினங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன்
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே. (1)

3421. மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)

3422. ஓடிவந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்கு ஆய்
ஆடிய மா நெடும் தேர்ப்படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே (3)

3423. தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள்மேல் தும்பிகாள்
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே? (4)

3424. நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு? என்மினே (5)

3425. என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல்மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்
கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி
செல்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே (6)

3426. பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவரும் ஆய் நின்ற மாயன் என் ஆழிப் பிரான்
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே? (7)

3427. பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்
ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே அருள்செய்து ஒருநாள்
மாசு அறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)

3428. பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
நீர்த் திரைமேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே (9)

3429. வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே (10)

3430. மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே (11)

Nammalvar: Tiruvaymoli 6.9 (3431–3441)

3431. நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய் சிவன் ஆய் அயன் ஆனாய்
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்பால்
வாராய் ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)

3432. மண்ணும் விண்ணும் மகிழ குறள் ஆய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்தூடே நடவாயே (2)

3433. ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சாலப் பல நாள் உகம்தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ? (3)

3434. தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே (4)

3435. விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண்மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவி
யுள் மீது ஆடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)

3436. பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? (6)

3437. உலகில் திரியும் கரும கதி ஆய் உலகம் ஆய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே (7)

3438. அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே? (8)

3439. ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? (9)

3440. குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவு இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே? (10)

3441. தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே (11)

Nammalvar: Tiruvaymoli 6.10 (3442–3452)

3442. உலகம் உண்ட பெருவாயா
உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
கூடும் ஆறு கூறாயே (1)

3443. கூறு ஆய் நீறு ஆய் நிலன் ஆகி
கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி
வலவா தெய்வக் கோமானே
சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ
மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன்
அடிசேர் வண்ணம் அருளாயே (2)

3444. வண்ணம் மருள் கொள் அணி மேக
வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே இமையோர் அதிபதியே
தெள் நல் அருவி மணி பொன் முத்து
அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர
அடியேற்கு ஆஆ என்னாயே (3)

3445. ஆஆ என்னாது உலகத்தை
அலைக்கும் அசுரர் வாழ் நாள்மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த
சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன்
பொருந்துமாறு புணராயே (4)

3446. புணரா நின்ற மரம் ஏழ் அன்று
எய்த ஒரு வில் வலவா ஓ
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்
நடுவே போன முதல்வா ஓ
திணர் ஆர் மேகம் எனக் களிறு
சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்
சேர்வது அடியேன் எந்நாளே? (5)

3447. எந்நாளே நாம் மண் அளந்த
இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள்
ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ந் நான் எய்தி எந் நாள் உன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? (6)

3448. அடியேன் மேவி அமர்கின்ற
அமுதே இமையோர் அதிபதியே
கொடியா அடு புள் உடையானே
கோலக் கனிவாய்ப் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே
திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம்
காண நோலாது ஆற்றேனே (7)

3449. நோலாது ஆற்றேன் உன பாதம்
காண என்று நுண் உணர்வின்
நீல் ஆர் கண்டத்து அம்மானும்
நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ
விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்பால்
வந்தாய் போலே வாராயே (8)

3450. வந்தாய் போலே வாராதாய்
வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
அகலகில்லேன் இறையுமே (9)

3451. அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே. (10)

3452. அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்
வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே. (11)

Nammalvar: Tiruvaymoli 7.1 (3453–3463)

3453. உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை
உன் பாதபங்கயம்
நண்ணிலாவகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண் இலாப் பெறு மாயனே இமையோர்கள்
ஏத்தும் உலகம் மூன்று உடை
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே (1)

3454. என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து
இராப்பகல் மோதுவித்திட்டு
உன்னை நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
கன்னலே அமுதே கார் முகில் வண்ணனே
கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய் வினையேனுடை வேதியனே (2)

3455. வேதியாநிற்கும் ஐவரால் வினையேனை
மோதுவித்து உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து என் பெறுதி? அந்தோ!
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு
உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே (3)

3456. சூது நான் அறியாவகை சுழற்றி ஓர் ஐவரைக்
காட்டி உன் அடிப்
போது நான் அணுகாவகை செய்து போதிகண்டாய்
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி
ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே (4)

3457. தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டுத்
திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி
அசுரர் வன் குலம்
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே? ஓ (5)

3458. விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய்
பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே (6)

3459. ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத
ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலைகடல்
அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே (7)

3460. இன் அமுது எனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும்
மயக்க நீ வைத்த
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்திக்
கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே (8)

3461. குலம் முதல் அடும் தீவினைக் கொடு வன் குழியினில்
வீழ்க்கும் ஐவரை
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்தருள்கண்டாய்
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் நிற்பன
செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே (9)

3462. என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி
உன் இணைத் தாமரைகட்கு
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை
வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)

3463. கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து
அளித்து கெடுக்கும் அப்
புண்டரீகக் கொப்பூழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன்
சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே (11)

Nammalvar: Tiruvaymoli 7.2 (3464–3474)

3464. கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு? என்னும்
இரு நிலம் கை துழா இருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என் செய்கின்றாயே? (1)

3465. என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா?
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்?
என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ? என்னும்
முன் செய்து இவ் உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே? (2)

3466. வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட
ஒருவனே என்னும் உள் உருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா கண்ணனே என்னும்
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்திட்டாயே? (3)

3467. இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா கடியைகாண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும்
வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் சிந்தித்தாயே? (4)

3468. சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண் நீர் மல்க
வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடல் இடந்தானே
அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே (5)

3469. மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே
என்னும் மா மாயனே என்னும்
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்;
பை கொள் பாம்பு அணையாய் இவள்திறத்து அருளாய்
பாவியேன் செயற்பாலதுவே (6)

3470. பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட
கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே (7)

3471. கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி
கோ நிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என் செய்கேன் என் திருமகட்கே? (8)

3472. என் திருமகள் சேர் மார்வனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே (9)

3473. முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகு ஆளியே என்னும்
கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவு உடை வானோர் தலைவனே என்னும்
வண் திருவரங்கனே என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே (10)

3474. முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே (11)

Nammalvar: Tiruvaymoli 7.3 (3475–3485)

3475. வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்?
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழா ஒலியும்
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
அறா திருப்பேரெயில் சேர்வன் நானே (1)

3476. நானக் கருங் குழல் தோழிமீர்காள்
அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே (2)

3477. செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ
நாணும் நிறையும் இழந்ததுவே (3)

3478. இழந்த எம் மாமைத்திறத்துப் போன
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ?
ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள் என்னை என் முனிந்தே? (4)

3479. முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருது இடை போய்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்?
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே
காலம்பெற என்னைக் காட்டுமினே (5)

3480. காலம்பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம் பெருமான்
நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த
நான்மறையாளரும் வேள்வி ஓவா
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப்பேரெயிற்கே. (6)

3481. பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி
பேர்த்து வர எங்கும் காணமாட்டேன்
ஆரை இனி இங்கு உடையம் தோழீ?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே (7)

3482. கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் விசும்பும் கழியப் பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே (8)

3483. சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்
அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர் வள ஒண் கழனிப் பழன
தென் திருப்பேரெயில் மாநகரே. (9)

3484. நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
சிகர மணி நெடு மாடம் நீடு
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்றுவரை அன்று மங்க நூற்ற
நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என்
நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே? (10)

3485. ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத்திறத்து ஆழியாரே. (11)

Nammalvar: Tiruvaymoli 7.4 (3486–3496)

3486. ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே (1)

3487. ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2)

3488. நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3)

3489. நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4)

3490. ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5)

3491. போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6)

3492. மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலைபோல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே (7)

3493. நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8)

3494. அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே (9)

3495. மேய் நிரை கீழ் புக மா புரள சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10)

3496. குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 7.5 (3497–3507)

3497. கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)

3498. நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே? (2)

3499. கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும்
சேண்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே? (3)

Deutsch · Umschrift 3500. தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ
பன்மைப் படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே? (4)

3501. சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே? (5)

3502. கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டம்கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய
கோட்டு அங்கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)

3503. கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
வண்டு உண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே? (7)

3504. செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை
மல்லல் அரி உரு ஆய் செய்த மாயம் அறிந்துமே? (8)

3505. மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்கு ஆய்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)

3506. வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின்கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)

3507. தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூவுலகத்துள்ளே (11)

Nammalvar: Tiruvaymoli 7.6 (3508–3518)

3508. பா மரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ
பா மரு மூவுலகும் அளந்த பற்ப பாதா ஓ
தாமரைக் கண்ணா ஓ தனியேன் தனி ஆளா ஓ
தாமரைக் கையா ஓ உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)

3509. என்றுகொல் சேர்வது அந்தோ! அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண் உயிர்
என்று இவை தாம் முதலா முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ! (2)

3510. காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
பூத் தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆர் உயிர் நீ ஆனால்
ஏத்து அரும் கீர்த்தியினாய்! உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)

3511. எங்குத் தலைப்பெய்வன் நான் எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெம் கதிர் வச்சிரக் கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ;
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைக் கோவலனே? (4)

3512. என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கருமாணிக்கமே
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)

3513. வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே (6)

3514. என் திருமார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நாமகளை அகம்பால் கொண்ட நான்முகனை
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ? (7)

3515. ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளி அம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)

3516. காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரியேற்றினையே? (9)

3517. ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்கு ஆய் கொடும் சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே (10)

3518. புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே (11)

Nammalvar: Tiruvaymoli 7.7 (3519–3529)

3519. ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ? அறியேன்
ஆழி அம் கண்ண பிரான் திருக்கண்கள்கொலோ? அறியேன்
சூழவும் தாமரை நாள் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே? (1)

3520. ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ? கொழுந்தோ? அறியேன்?
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே (2)

3521. வாலியது ஓர் கனிகொல்? வினையாட்டியேன் வல்வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழும் துண்டம்கொலோ? அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே (3)

3522. இன் உயிர்க்கு ஏழையர்மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலைகொல் மதனன்
தன் உயிர்த் தாதை கண்ண பெருமான் புருவம்? அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே (4)

3523. என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்! எனக்கு உய்வு இடமே (5)

3524. உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல்
பை விடப் பாம்பு அணையான் திருக் குண்டலக் காதுகளே?
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே (6)

3525. காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலைகொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே (7)

3526. கோள் இழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோள் இழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம் கொல் கண்ணன்
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே? (8)

3527. கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின்
உள்கொண்ட நீல நல் நூல் தழைகொல்? அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்! கழறா நிற்றிரே (9)

3528. நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையர் ஆய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச் சோதி மணி நிறம் ஆய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே? (10)

3529. கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே (11)

Nammalvar: Tiruvaymoli 7.8 (3530–3540)

3530. மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் கால் ஆய்
தாய் ஆய் தந்தை ஆய் மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய்
நீ ஆய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே (1)

3531. அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறும் ஆய் செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்
பொங்கு பொழி மழை ஆய் புகழ் ஆய் பழி ஆய் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே (2)

3532. சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே (3)

3533. கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் வியவு ஆய்
வெள்ளத் தடம் கடலுள் விட நாகு அணைமேல் மருவி
உள்ளப் பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே (4)

3534. பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனும் ஆய் கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே (5)

3535. மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பு ஆய் தேற்றமும் ஆய் அழல் ஆய் குளிர் ஆய் வியவு ஆய்
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் வினை ஆய் பயன் ஆய் பின்னும் நீ
துயக்கு ஆய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே (6)

3536. துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்கள் ஆய் மதன் ஆகி உகவைகள் ஆய்
துயரம் செய் காமங்கள் ஆய் துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே (7)

3537. என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா?
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை
முன்னிய மூவுலகும் அவை ஆய் அவற்றைப் படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய்! இவை என்ன இயற்கைகளே (8)

3538. என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே (9)

3539. இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10)

3540. ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 7.9 (3541–3551)

3541. என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (1)

3542. என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே? (2)

3543. ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ? (3)

3544. அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றி தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீவினையேனை உய்யக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே? (4)

3545. சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன்கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே (5)

3546. இன் கவி பாடும் பரம் கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே (6)

3547. வைகுந்த நாதன் என வல்வினை மாய்ந்து அறச்
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை
வைகுந்தன் ஆகப் புகழ வண் தீம் கவி
செய் குந்தன் தன்னை எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)

3548. ஆர்வனோ ஆழி அங்கை எம் பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைச்
சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கே? (8)

3549. திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர்
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ
மறப்பு இலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
உறப் பல இன் கவி சொன்ன உதவிக்கே? (9)

3550. உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே (10)

3551. இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப் பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 7.10 (3552–3562)

3552. இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும்
இவ் ஏழ் உலகை
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து
ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில்
சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும்
நாள்களும் ஆகும்கொலோ? (1)

3553. ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்
முற்றவும் ஈர் அடியே
ஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்
அமர்ந்து உறையும்
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து
கைதொழக் கூடும்கொலோ? (2)

3554. கூடும் கொல் வைகலும்? கோவிந்தனை
மதுசூதனை கோளரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
அன்றி அவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து
ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திருவாறன்விளை தொழ
வாய்க்கும்கொல் நிச்சலுமே? (3)

3555. வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்
வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்
மலர் அடிப்போதுகளே? (4)

3556. மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்
இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு அணை அப்பன்
அமர்ந்து உறையும்
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு
மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம்மேல் வினை
ஒன்றும் நில்லா கெடுமே. (5)

3557. ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித்
தொழுமின் தொண்டீர்!
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை
அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப
உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும்
நீள் நகரம் அதுவே (6)

3558. நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள்
சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால்
கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய
வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண்
அன்றி மற்று ஒன்று இலமே (7)

3559. அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று
அகல் இரும் பொய்கையின்வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின்
நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில்
சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினை
உள்ளத்தின் சார்வு அல்லவே (8)

3560. தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி
தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த
தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில்
திருவாறன்விளை அதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்?
என்னும் என் சிந்தனையே (9)

3561. சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை
தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன
மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர்
குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை
தீர்த்தனுக்கு அற்ற பின்னே (10)

3562. தீர்த்தனுக்கு அற்றபின் மற்று ஓர் சரண்
இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகி செழுங்
குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி
உரைப்பர் தம் தேவியர்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 8.1 (3563–3573)

3563. தேவிமார் ஆவார் திருமகள் பூமி
ஏவ மற்று அமரர் ஆட்செய்வார்
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி
வேண்டு வேண்டு உருவம் நின் உருவம்
பாவியேன் தன்னை அடுகின்ற கமலக்
கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த
அப்பனே காணுமாறு அருளாய் (1)

3564. காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா
தொண்டனேன் கற்பகக் கனியே
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ்
பெரு நிலம் எடுத்த பேராளா (2)

3565. எடுத்த பேராளன் நந்தகோபன் தன்
இன் உயிர்ச் சிறுவனே அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல இளம் களிறே
அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக்
கைஉகிர் ஆண்ட எம் கடலே
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே? (3)

3566. உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம்
ஆகி உன் தனக்கு அன்பர் ஆனார்
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ்
அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
என்னுடை ஆர் உயிரேயோ (4)

3567. ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும்
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு
உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த
சீர் உயிரேயோ மனிசர்க்குத் தேவர்
போலத் தேவர்க்கும் தேவாவோ
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்!
உன்னை நான் எங்கு வந்து உறுகோ? (5)

3568. எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே?
ஏழ் உலகங்களும் நீயே
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே
அவற்று அவை கருமமும் நீயே
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும்
அவையுமோ நீ இன்னே ஆனால்
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே
வான் புலன் இறந்ததும் நீயே (6)

3569. இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோ நீ இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது இது உது என்று
அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே
கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே
பின்னை தோள் மணந்த பேர் ஆயா (7)

3570. மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும்
வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர்
கூற்றமே கொடிய புள் உயர்த்தாய்
பணங்கள் ஆயிரமும் உடைய பைந் நாகப்
பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும்
செய்கையும் யானும் நீ தானே (8)

3571. யானும் நீ தானே ஆவதோ மெய்யே
அரு நரகு அவையும் நீ ஆனால்
வான் உயர் இன்பம் எய்தில் என்? மற்றை
நரகமே எய்தில் என்? எனினும்
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய்!
அருளு நின் தாள்களை எனக்கே (9)

3572. தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்
தந்த பேர் உதவிக் கைம்மாறாத்
தோள்களை ஆரத் தழுவி என் உயிரை
அற விலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய்
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய்
தமியனேன் பெரிய அப்பனே (10)

3573. பெரிய அப்பனை பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை முனிவர்க்கு
உரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன்
பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால்
உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே (11)

Nammalvar: Tiruvaymoli 8.2 (3574–3584)

3574. நங்கள் வரிவளை ஆயங்காளோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தட முலை பொன் நிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கடவாணனை வேண்டிச் சென்றே (1)

3575. வேண்டிச் சென்று ஒன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே (2)

3576. காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன்
நல் நுதலீர் இனி நாணித் தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளையொடும் மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே? (3)

3577. கூடச் சென்றேன் இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார்முன் பரிசு அழிந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல் போர்
ஆழிவலவனை ஆதரித்தே (4)

3578. ஆழிவலவனை ஆதரிப்பும்
ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள் நம் உடையமேதான்?
சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழிதோறு ஊழி ஒருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகாச்
சூழல் உடைய சுடர் கொள் ஆதித்
தொல்லை அம் சோதி நினைக்குங்காலே? (5)

3579. தொல்லை அம் சோதி நினைக்குங்கால் என்
சொல் அளவு அன்று இமையோர் தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்புச் செய்யும்
அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல்? சொல்லீர்!
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே (6)

3580. மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன்
கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள்
என்னுடைத் தோழியர்காள் என் செய்கேன்?
காலம் பல சென்றும் காண்பது ஆணை
உங்களோடு எங்கள் இடை இல்லையே (7)

3581. இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள்
பூவைகள்காள் குயில்காள் மயில்காள்!
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற்கடலும்
அஞ்சன வெற்பும் அவை நணிய
கடையறப் பாசங்கள் விட்டபின்னை
அன்றி அவன் அவை காண்கொடானே (8)

3582. காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை
கைசெய் அப்பாலது ஓர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்? (9)

3583. என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்
யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னை
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி ஓர் கோல நீல
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான்
நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே (10)

3584. பாதம் அடைவதன் பாசத்தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு
கோது இல் புகழ்க் கண்ணன் தன் அடிமேல்
வண் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும்
அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே. (11)

Nammalvar: Tiruvaymoli 8.3 (3585–3595)

3585. அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே (1)

3586. சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே (2)

3587. ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே (3)

3588. ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே (4)

3589. கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே (5)

3590. பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே (6)

3591. வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே? (7)

3592. என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே (8)

3593. திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே (9)

3594. கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே? (10)

3595. உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை
வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே (11)

Nammalvar: Tiruvaymoli 8.4 (3596–3606)

3596. வார் கடா அருவி யானை மா மலையின்
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல்
போர் கடா அரசர் புறக்கிட மாடம்
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1)

3597. எங்கள் செல்சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம் அருவன்
செங்கயல் உகளும் தேம் பணை புடை சூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்று என் அமர் துணையே? (2)

3598. என் அமர் பெருமான் இமையவர் பெருமான்
இரு நிலம் இடந்த எம் பெருமான்
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள
என்னை ஆள்கின்ற எம் பெருமான்
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங்கரை மீபால்
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண்
நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே (3)

3599. பிறிது இல்லை எனக்கு பெரிய மூவுலகும்
நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ்
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான்
அடிஇணை அல்லது ஓர் அரணே (4)

Deutsch · Umschrift 3600. அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை
அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது
ஆதலால் அவன் உறைகின்ற
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5)

3601. எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை
தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6)

3602. திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட அத் திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல உந்தியும் செய்ய
கமலை மார்பும் செய்ய உடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ என் சிந்தையுளானே (7)

3603. திகழ என் சிந்தையுள் இருந்தானை
செழு நிலத்தேவர் நான்மறையோர்
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை
புகர் கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன் கையர் வெம் கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே (8)

3604. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே
புகழ்வு இல்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன் ஆனார்
கூரிய விச்சையோடு ஒழுக்கம்
நடைப் பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே (9)

3605. அமர்ந்த நாதனை அவர் அவர் ஆகி
அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாற்றங் கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்
தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை அமர்ந்தேனே (10)

3606. தேனை நன் பாலை கன்னலை அமுதை
திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
சொன்ன ஆயிரத்துள் இப் பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே (11)

Nammalvar: Tiruvaymoli 8.5 (3607–3617)

3607. மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம்போல் வருவானே
ஒருநாள் காண வாராயே (1)

3608. காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நல் நாட்டு அலமந்தால்
இரங்கி ஒருநாள் நீ அந்தோ
காண வாராய்! கரு நாயிறு
உதிக்கும் கரு மா மாணிக்க
நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி
முடி சேர் சென்னி அம்மானே! (2)

3609. முடிசேர் சென்னி அம்மா நின்
மொய் பூம் தாமத் தண் துழாய்க்
கடிசேர் கண்ணிப் பெருமானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால் தோளும்
துடி சேர் இடையும் அமைந்தது ஓர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே. (3)

3610. தூ நீர் முகில் போல் தோன்றும் நின்
சுடர் கொள் வடிவும் கனிவாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலைதன்மேல்
வண் கார் நீல முகில் போல
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய்! சொல்லமாட்டேனே (4)

3611. சொல்ல மாட்டேன் அடியேன் உன்
துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு
இரண்டுபோல் என் உள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுது உண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே? (5)

3612. கொண்டல் வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண்மேல் தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல்காண
ஒருநாள் வந்து தோன்றாயே (6)

3613. வந்து தோன்றாய் அன்றேல் உன்
வையம் தாய மலர் அடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாய் ஓர் கரு நாயிறு
அந்தம் இல்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே (7)

3614. ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள்
காணும்தோறும் தொலைவன் நான்
தக்க ஐவர் தமக்காய் அன்று
ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்
புக்க நல்தேர்த் தனிப்பாகா
வாராய் இதுவோ பொருத்தமே? (8)

3615. இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்
படையாய் ஏறும் இரும் சிறைப்புள்
அதுவே கொடியா உயர்த்தானே
என்று என்று ஏங்கி அழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மது வார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே? (9)

3616. பிறந்த மாயா பாரதம்
பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண்
பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்
இறந்து நின்ற பெரு மாயா
உன்னை எங்கே காண்கேனே? (10)

3617. எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே (11)

Nammalvar: Tiruvaymoli 8.6 (3618–3628)

3618. எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே (1)

3619. திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக் கெட வாளி பொழிந்த ஒருவனே (2)

3620. ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப் பிரானே (3)

3621. மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே (4)

3622. கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்;
கோயில்கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே (5)

3623. கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே (6)

3624. கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே (7)

3625. தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இந் நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே (8)

3626. தாயப் பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே (9)

3627. அற்புதன் நாராயணன் அரி வாமனன்
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்
கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே (10)

3628. சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே (11)

Nammalvar: Tiruvaymoli 8.7 (3629–3639)

3629. இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)

3630. இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும்
திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே (2)

3631. அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள்
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே? (3)

3632. மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான்
தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே (4)

3633. திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள்
திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)

3634. பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே? (6)

3635. செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே (7)

3636. அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார்
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே (8)

3637. வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே (9)

3638. வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால்
பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை நம் பரனையே (10)

3639. சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை
அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே (11)

Nammalvar: Tiruvaymoli 8.8 (3640–3650)

3640. கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்(கு) கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே. (1)

3641. அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன் பரம்பரன்
கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே (2)

3642. உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்
அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே. (3)

3643. யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே (4)

3644. நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே (5)

3645. நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே (6)

3646. அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
யாதும் இலிகள் ஆகிற்கில்
அதுவே வீடு வீடுபேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே (7)

3647. எய்த்தார் எய்த்தார் எய்த்தார்
என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம்
போகும்போது உன்மத்தர்போல்
பித்தே ஏறி அநுராகம்
பொழியும்போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல் உறைப்பே (8)

3648. கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை உயர் கொடி எம்
மாயன் ஆவது அது அதுவே
வீடைப் பண்ணி ஒரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே (9)

3649. உளரும் இல்லை அல்லராய்
உளராய் இல்லை ஆகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து என்
உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே (10)

3650. தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால்
அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே (11)

Nammalvar: Tiruvaymoli 8.9 (3651–3661)

3651. கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்
தாமரைக் காடுகள் போல்
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை
ஆடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர்!
இதற்கு என் செய்கேனோ? (1)

3652. அன்னைமீர் இதற்கு என் செய்கேன்? அணி
மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும்
பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான்
உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர்
புகழும் இவளே (2)

3653. புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப்புலியூர் வளமே (3)

3654. ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே (4)

3655. புனை இழைகள் அணிவும் ஆடை உடையும்
புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று
நினைக்கப்புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும்
தண் திருப்புலியூர்
முனைவன் மூவுலகு ஆளி அப்பன்
திரு அருள் மூழ்கினளே. (5)

3656. திரு அருள் மூழ்கி வைகலும் செழு நீர்
நிறக் கண்ண பிரான்
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திரு அருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப்புலியூர்
திரு அருள் கமுகு ஒண் பழத்தது
மெல்லியல் செவ்விதழே (6)

3657. மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கு இளம் தாள் கமுகின்
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து
மணம் கமழ்ந்து
புல் இலைத் தெங்கினூடு கால் உலவும்
தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே (7)

3658. மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன்?
மல்லைச் செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல்
வான் புகை போய்த்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப்புலியூர்
பட அரவு அணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே (8)

3659. பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர்
நிறக் கண்ண பிரான்
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின்
நின்று ஒலிப்ப
கரவு ஆர் தடம்தொறும் தாமரைக் கயம்
தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர்ப்
புகழ் அன்றி மற்றே (9)

3660. அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்
தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக்
குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட
நாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர்பட்டதே? (10)

3661. நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே (11)

Nammalvar: Tiruvaymoli 8.10 (3662–3672)

3662. நெடுமாற்கு அடிமை செய்வேன்போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும்
தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார்
அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ!
வியன் மூவுலகு பெறினுமே? (1)

3663. வியன் மூவுலகு பெறினும் போய்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம்போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக்கீழ்ச்
சயமே அடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே? (2)

3664. உறுமோ பாவியேனுக்கு இவ்
உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என்
செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறு மா விரை நாள் மலர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை
ஆண்டார் இங்கே திரியவே? (3)

3665. இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச்
செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன்கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழிபட்டு ஓட அருளிலே? (4)

3666. வழிபட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்ச்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவிஅமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே? (5)

3667. நுகர்ச்சி உறுமோ மூவுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே? (6)

3668. தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே (7)

3669. நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங் கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே. (8)

3670. தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள்
தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே (9)

3671. வாய்க்க தமியேற்கு ஊழிதோறு
ஊழி ஊழி மா காயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள்
பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம்
அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே (10)

3672. நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டீர் மக்களே 11

Nammalvar: Tiruvaymoli 9.1 (3673–3683)

3673. கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே (1)

3674. துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள்போல் சுவைப்பர்
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலைப்
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே (2)

3675. பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே (3)

3676. அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே
வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே (4)

3677. சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித்து இன்மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர்
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே (5)

3678. இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்யப் போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே (6)

3679. மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர்க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே (7)

3680. வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே (8)

3681. யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம்
மா துகிலின் கொடிக்கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே (9)

3682. கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே (10)

3683. ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே (11)

Nammalvar: Tiruvaymoli 9.2 (3684–3694)

3684. பண்டை நாளாலே நின் திரு அருளும்
பங்கயத்தாள் திரு அருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால்
குடிகுடி வழிவந்து ஆட்செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப்புளிங்குடிக் கிடந்தானே (1)

3685. குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த
அடிமைக் குற்றேவல்செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ ஒருநாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
பங்கயமே தலைக்கு அணியாய்
கொடிக்கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை
திருப்புளிங்குடிக் கிடந்தானே (2)

3686. கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திருஉடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன்
தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்
திருப்புளிங்குடிக் கிடந்தானே (3)

3687. புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்ப நீ காண வாராயே (4)

3688. பவளம்போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண்
தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர்க்கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய் சினப் பறவை ஊர்ந்தானே (5)

3689. காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
மீமிசைக் கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு
அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு
ஏந்தி எம் இடர் கடிவானே (6)

3690. எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலருந் தாமரைப் பழனத்
தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வைகண்டு உகந்து
நாம் களித்து உளம் நலம் கூர
இம் மட உலகர் காண நீ ஒருநாள்
இருந்திடாய் எங்கள் கண்முகப்பே (7)

3691. எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம்
இணை அடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால்
தலைத்தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்
திரு வைகுந்தத்துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒருநாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே (8)

3692. வீற்று இடம்கொண்டு வியன்கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி ஓவாதே கண் இணை குளிர
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும்
செழும் பனைத் திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த
கொடுவினைப் படைகள் வல்லானே (9)

3693. கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு
இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே
கலி வயல் திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்மகள் மற்றை
நிலமகள் பிடிக்கும் மெல் அடியைக்
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே (10)

3694. கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
அடி இணை உள்ளத்து ஓர்வாரே (11)

Nammalvar: Tiruvaymoli 9.3 (3695–3705)

3695. ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாரயணன் நங்கள் பிரான் அவனே (1)

3696. அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே (2)

3697. அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே (3)

3698. மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே (4)

3699. மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்!
புனம் மேவிய பூந் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே (5)

Deutsch · Umschrift 3700. அடைவதும் அணி ஆர் மலர் மங்கைதோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே (6)

3701. ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர்
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே (7)

3702. இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே (8)

3703. தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் என்னும் இது மிகை ஆதலின்
பழுது இல் தொல் புகழ்ப் பாம்பு அணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே (9)

3704. தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே? (10)

3705. சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே (11)

Nammalvar: Tiruvaymoli 9.4 (3706–3716)

3706. மை ஆர் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே (1)

3707. கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே (2)

3708. அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே (3)

3709. உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண்
பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே (4)

3710. அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானை பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே (5)

3711. கருத்தே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே (6)

3712. உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே (7)

3713. உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே (8)

3714. கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே (9)

3715. அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே (10)

3716. ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை
சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே (11)

Nammalvar: Tiruvaymoli 9.5 (3717–3727)

3717. இன் உயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடைகாள்
என் உயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ? (1)

3718. இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்?
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே (2)

3719. அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே?
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே? (3)

3720. கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேல் கிளை கொள்ளேல்மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே (4)

3721. அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் (5)

3722. நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் (6)

3723. கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன்போல்
கோட்டிய வில்லொடு மின்னும் மேகக் குழாங்கள்காள்
காட்டேல்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே (7)

3724. உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழஞ் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்! பண்பு உடையீரே (8)

3725. பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான் (9)

3726. எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள்காள் பயின்று என் இனி?
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (10)

3727. இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே (11)

Nammalvar: Tiruvaymoli 9.6 (3728–3738)

3728. உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே? (1)

3729. நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)

3730. நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் (3)

3731. அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு அருளே (4)

3732. திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே (5)

3733. என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே (6)

3734. காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறைபட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே (7)

3735. கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே (8)

3736. ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே? (9)

3737. வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே (10)

3738. கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)

Nammalvar: Tiruvaymoli 9.7 (3739–3749)

3739. எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே (1)

3740. நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு?
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே (2)

3741. தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும்
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக் கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே (3)

3742. திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள்
திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன்
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே? (4)

3743. தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு
தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே (5)

3744. தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே (6)

3745. சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே. (7)

3746. எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும்
புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே (8)

3747. பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே (9)

3748. தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே (10)

3749. ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை
ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்
வழு இல்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே (11)

Nammalvar: Tiruvaymoli 9.8 (3750–3760)

3750. அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும் வகை உண்டுகொலோ கொடியேற்கே? (1)

3751. கொடி ஏர் இடைக் கோகனகத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறும் நாள் எவைகொலோ? (2)

3752. எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே (3)

3753. நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன்
நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா (4)

3754. மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே? (5)

3755. கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே? (6)

3756. கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய்
தேவாசுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே (7)

3757. அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே (8)

3758. தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ (9)

3759. அந்தோ அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா. (10)

3760. வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே (11)

Nammalvar: Tiruvaymoli 9.9 (3761–3771)

3761. மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ (1)

3762. புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்? (2)

3763. இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்?
இணை முலை நமுக நுண் இடை நுடங்க
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ (3)

3764. பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ
வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ
தூவி அம் புள் உடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ (4)

3765. யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ
ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ
அவனுடைத் தீம் குழல் ஈரும் ஆலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாரும்
எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ
யாமுடை ஆர் உயிர் காக்குமாறு என்?
அவனுடை அருள்பெறும் போது அரிதே (5)

3766. அவனுடை அருள்பெறும் போது அரிதால்
அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை
சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம்? எவன் செய்கேனோ?
ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள் (6)

3767. ஆருக்கு என் சொல்லுகேன்? அன்னைமீர்காள்
ஆர் உயிர் அளவு அன்று இக் கூர் தண் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூப்
புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ (7)

3768. புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் (8)

3769. ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடை தன் செய் கோலத்
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி
தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி
பேதுறு முகம்செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான் (9)

3770. மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ
கொடியன குழல்களும் குழறும் ஆலோ
வால் ஒளி வளர் முல்லை கருமுகைகள்
மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே? (10)

3771. அவனைவிட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே (11)

Nammalvar: Tiruvaymoli 9.10 (3772–3782)

3772. மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே (1)

3773. கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)

3774. தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே (3)

3775. மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே (4)

3776. சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)

3777. அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)

3778. மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)

3779. அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே (8)

3780. பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)

3781. இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை?
அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே (10)

3782. பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர்
மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே (11)

Nammalvar: Tiruvaymoli 10.1 (3783–3793)

3783. தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்க்
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே (1)

3784. இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே (2)

3785. அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே (3)

3786. இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே (4)

3787. தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே (5)

3788. கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே (6)

3789. மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச்
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே (7)

3790. துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே (8)

3791. மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே (9)

3792. நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள் (10)

3793. ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே (11)

Nammalvar: Tiruvaymoli 10.2 (3794–3804)

3794. கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1)

3795. இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2)

3796. ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே (3)

3797. பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே (4)

3798. புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் (5)

3799. அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)

Deutsch · Umschrift 3800. துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே (7)

3801. கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம். (8)

3802. நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9)

3803. மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே (10)

3804. அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே (11)

Nammalvar: Tiruvaymoli 10.3 (3805–3815)

3805. வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)

3806. தகவிலை தகவிலையே நீ கண்ணா
தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)

3807. வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)

3808. தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் (4)

3809. பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ
பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ
மணி மிகு மார்பினில் முல்லைப்போது என்
வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ!
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)

3810. அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)

3811. வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோர
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல
வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)

3812. அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல்
கசிகையும் வேட்கையும் உள்கலந்து
கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக உடையும் காட்டி
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ
உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)

3813. உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன் தன்
திருவுள்ளம் இடர் கெடும்தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)

3814. அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழிதருவர்
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)

3815. செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத்
திருவடி திருவடிமேல் பொருநல்
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர்
வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை
அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே (11)

Nammalvar: Tiruvaymoli 10.4 (3816–3826)

3816. சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே (1)

3817. பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே (2)

3818. ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்?
மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே (3)

3819. தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே (4)

3820. நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப்படான் பிறர்க்கு மெய்போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே (5)

3821. நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே (6)

3822. பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே (7)

3823. ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய் (8)

3824. கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணிவகையே (9)

3825. வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே (10)

3826. பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே (11)

Nammalvar: Tiruvaymoli 10.5 (3827–3837)

3827. கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே (1)

3828. நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே (2)

3829. தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே ஆள்வானே (3)

3830. ஆள்வான் ஆழி நீர்க்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே (4)

3831. நாடீர் நாள்தோறும்
வாடா மலர்கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே (5)

3832. மேயான் வேங்கடம்
காயாமலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே (6)

3833. மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே (7)

3834. சாரா ஏதங்கள்
நீர் ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆரார் அமரரே (8)

3835. அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே (9)

3836. வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே (10)

3837. நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள்பேறே (11)

Nammalvar: Tiruvaymoli 10.6 (3838–3848)

3838. அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே (1)

3839. வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம் பெருமானைப்
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே (2)

3840. நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே (3)

3841. என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே (4)

3842. வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே!
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே (5)

3843. தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே (6)

3844. குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே (7)

3845. மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)

3846. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே (9)

3847. பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான்
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே (10)

3848. காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளங் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)

Nammalvar: Tiruvaymoli 10.7 (3849–3859)

3849. செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்மின் திருமாலிருஞ்சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியாவண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே (1)

3850. தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்
கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே (2)

3851. என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே? (3)

3852. என்கொல் அம்மான் திரு அருள்கள் உலகும் உயிரும் தானே ஆய்
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே? (4)

3853. நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே (5)

3854. திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூவுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே (6)

3855. அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலை மலையே (7)

3856. திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே (8)

3857. ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும்
ஆழிவண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே! கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே (9)

3858. மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே. (10)

3859. மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய்ப் புக்கு தானே தானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே. (11)

Nammalvar: Tiruvaymoli 10.8 (3860–3870)

3860. திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே (1)

3861. பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே (2)

3862. பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே (3)

3863. எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே (4)

3864. வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5)

3865. திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே (6)

3866. உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே? (7)

3867. கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே (8)

3868. இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே (9)

3869. உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே (10)

3870. நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11)

Nammalvar: Tiruvaymoli 10.9 (3871–3881)

3871. சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரைக் கை எடுத்து ஆடின:
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே (1)

3872. நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே (2)

3873. தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே (3)

3874. எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே (4)

3875. மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள்மடுத்தே (5)

3876. வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)

3877. மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே (7)

3878. குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே (8)

3879. வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே (9)

3880. விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே (10)

3881. வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே (11)

Nammalvar: Tiruvaymoli 10.10 (3882–3892)

3882. முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே (1)

3883. மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங் குழலாள் திரு ஆணை நின் ஆணைகண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! (2)

3884. கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே (3)

3885. உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே (4)

3886. போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே (5)

3887. எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா என் அன்பேயோ (6)

3888. கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ? (7)

3889. பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை?
உற்ற இருவினை ஆய் உயிர் ஆய் பயன் ஆயவை ஆய்
முற்ற இம் மூவுலகும் பெரும் தூறு ஆய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ (8)

3890. முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ! (9)

3891. சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே (10)

3892. அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே (11)

Tiruvarangattu Amudanar: Iramanuca Nurrantati – 108 Hymnen auf Ramanuja (3893–4000)

3893. பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (1)

3894. கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)

3895. பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே (3)

3896. என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே (4)

3897. எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே (5)

3898. இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே (6)

3899. மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே (7)

Deutsch · Umschrift 3900. வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே (8)

3901. இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே (9)

3902. மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே (10)

3903. சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே (11)

3904. இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே (12)

3905. செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே (13)

3906. கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே (14)

3907. சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே? (15)

3908. தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே (16)

3909. முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே (17)

3910. எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே (18)

3911. உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே (19)

3912. ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே (20)

3913. நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னைக் காத்தனனே (21)

3914. கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என் தன் சேம வைப்பே (22)

3915. வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே? (23)

3916. மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக்
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே (24)

3917. கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே (25)

3918. திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே (26)

3919. கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே (27)

3920. நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே (28)

3921. கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே? (29)

3922. இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே (30)

3923. ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே (31)

3924. பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அருந் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே (32)

3925. அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே (33)

3926. நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய
பெலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமாநுசன் தன் நயப் புகழே (34)

3927. நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)

3928. அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே (36)

3929. படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே (37)

3930. ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே (38)

3931. பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே? (39)

3932. சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல்
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே (40)

3933. மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே (41)

3934. ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)

3935. சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமினே (43)

3936. சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண் அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே (44)

3937. பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி என்று இப் பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே (45)

3938. கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே (46)

3939. இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ் உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)

3940. நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின்கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே? (48)

3941. ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூங் கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
தான் அதில் மன்னும் இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)

3942. உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே (50)

3943. அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே (51)

3944. பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே (52)

3945. அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே (53)

3946. நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே (54)

3947. கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)

3948. கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே (56)

3949. மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நல் தவர் போற்றும் இராமாநுசனை இந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)

3950. பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய்ம் மதிக்கடலே (58)

3951. கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே (59)

3952. உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குலக் கொழுந்தே (60)

3953. கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே (61)

3954. இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப்பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே (62)

3955. பிடியைத் தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப்
படியைத் தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே. (63)

3956. பண் தரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே (64)

3957. வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே (65)

3958. ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே (66)

3959. சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே? (67)

3960. ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே (68)

3961. சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)

3962. என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே? (70)

3963. சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அத் தாமரைத் தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே (71)

3964. கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே (72)

3965. வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே (73)

3966. தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே (74)

3967. செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திரு அரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே (75)

3968. நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொன்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள்
என் தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே (76)

3969. ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே? (77)

3970. கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே (78)

3971. பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே (79)

3972. நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே (80)

3973. சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே (81)

3974. தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவு உற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே? 82

3975. சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே (83)

3976. கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே (84)

3977. ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே (85)

3978. பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே (86)

3979. பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு
உரியசொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே (87)

3980. கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே (88)

3981. போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர் தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே (89)

3982. நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே (90)

3983. மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)

3984. புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக் காரணம் கட்டுரையே (92)

3985. கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே? (93)

3986. தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந் தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே (94)

3987. உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும்
விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே (95)

3988. வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே (96)

3989. தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே (97)

3990. இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகில் இட்டுச்
சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே? சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே (98)

3991. தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே (99)

3992. போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில்
ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே (100)

3993. மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே (101)

3994. நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? (102)

3995. வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என் தன் மெய்வினை நோய்
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே (103)

3996. கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே (104)

3997. செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே (105)

3998. இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே (106)

3999. இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே (107)

Deutsch · Umschrift 4000. அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்னத் தழைத்து நெஞ்சே நம் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)

44 Taniyans und Begleitverse

Deutsche Übersetzung und Einordnung der Begleitverse · Römische Umschrift

T01 – Periyalvar – Sanskrit-Lobvers, Nathamuni zugeschrieben

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக|
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி||

T02 – Periyalvar – erster tamilischer Lobvers

மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து

T03 – Periyalvar – zweiter tamilischer Lobvers

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.

T04 – Tiruppavai – erster Lobvers

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

T05 – Tiruppavai – zweiter Lobvers

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

T06 – Nachiyar Tirumoli – erster Lobvers

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

T07 – Nachiyar Tirumoli – zweiter Lobvers

கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

T08 – Kulasekhara – erster Lobvers

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு

T09 – Kulasekhara – zweiter Lobvers

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

T10 – Tiruccanda Viruttam – erster Lobvers

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்,
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.

T11 – Tiruccanda Viruttam – zweiter Lobvers

உலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

T12 – Tirumalai – Lobvers

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

T13 – Tiruppalli Elucci – Sanskrit-Lobvers

தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

T14 – Tiruppalli Elucci – tamilischer Lobvers

மண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த்
தொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்.

T15 – Amalanadipiran – Sanskrit-Lobvers

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.

T16 – Amalanadipiran – tamilischer Lobvers

காட்டவே கண்ட பாத
கமலம்நல் லாடை யுந்தி,
தேட்டரு முதர பந்தம்
திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டமில் கண்கள் மேனி
முனியேறித் தனிபு குந்து,
பாட்டினால் கண்டு வாழும்
பாணர்தாள் பரவி னோமே.

T17 – Kanninun Siruttambu – Sanskrit-Lobvers

அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவஸாத் ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

T18 – Kanninun Siruttambu – tamilischer Lobvers

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,
மாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்.

T19 – Mudal Tiruvantadi – Lobvers

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து

T20 – Irandam Tiruvantadi – Lobvers

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

T21 – Munram Tiruvantadi – Lobvers

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - ஓராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

T22 – Nanmugan Tiruvantadi – Lobvers

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

T23 – Tiruviruttam – Lobvers

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

T24 – Tiruvasiriyam – Lobvers

கானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே .

T25 – Periya Tiruvantadi – Lobvers

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

T26 – Tiruvelukurrirukkai – erster Lobvers

வாழிபரகாலன் வாழிகலிகன்றி,
வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.

T27 – Tiruvelukurrirukkai – zweiter Lobvers

சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.

T28 – Siriya Tirumadal – Lobvers

முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்

T29 – Periya Tirumadal – erster Lobvers

பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,
மன்னு மடலூர்வன் வந்து.

T30 – Periya Tirumadal – zusätzlicher Lobvers

மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
தாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே

T31 – Tiruvaymoli – Sanskrit-Lobvers

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

T32 – Tiruvaymoli – Lobvers Ishvaramunis

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.

T33 – Tiruvaymoli – Lobvers Cottai Nambis

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

T34 – Tiruvaymoli – Lobvers Anantalvans

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.

T35 – Tiruvaymoli – erster Lobvers Pattars

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.

T36 – Tiruvaymoli – zweiter Lobvers Pattars

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.

T37 – Iramanuca Nurrantati – erster Lobvers

முன்னை வினையகல மூங்கிற்குடியமுதன்*
பொன்னங்கழற்கமலப் போதிரண்டும் - என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன்* தென்புலத்தார்க்கு
என்னுக்கடவுடையேன் யான்.

T38 – Iramanuca Nurrantati – zweiter Lobvers

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்*
சயந்தருகீர்த்தி யிராமாங்சமுனிதாளிணைமேல்
உயர்ந்தகுணத்துத்திருவரங்கத்தமுது ஓங்குமன்பால்
இயம்பும் கலித்துறையந்தாதியோத விசைநெஞ்சமே.

T39 – Iramanuca Nurrantati – dritter Lobvers

சொல்லின் தொகை கொண்டுனதடிப் போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பரேத்து முன் நாமமெல்லாமென்றன் நாவினுள்ளே*
அல்லும் பகலும்மரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும்பரம் இராமாநுச இதென் விண்ணப்பமே.

T40 – Tiruppavai – Sanskrit-Lobvers Parashara Bhattars

நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

T41 – Periya Tirumoli – Sanskrit-Lobvers

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம்
யஸ்ய கோபி: ப்ரகாஸாபி ஆவித்யம் நிஹதம் தம:

T42 – Periya Tirumoli – Lobvers Kurattalvans

நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழநன்னூல் துறைகள்
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்
பஞ்சுக்கனலின்பொறி பரகாலன் பனுவல்களே!

T43 – Periya Tirumoli – Lobvers Embars

எங்கள் கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா ! – பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா!

T44 – Periya Tirumoli – Bitte an Tirumangai

மாலைத் தனியே வழி பறிக்க வேணுமென்று
கோலிப்பத விருந்த கொற்றவனே!
வேலை அணைத்து அருளும் கையால் அடியேன் வினையை
துணித் தருள வேணும் துணிந்து

Quellen und Lesehinweise

Diese Textausgabe übernimmt die redigierten Sprachabschnitte der vier Übersetzungsartikel einschließlich der dort dokumentierten Ergänzungen und Nummernkorrekturen. Die unbearbeiteten Quellenbeilagen im Gesamtpaket bewahren daneben die ursprünglichen digitalen Textzeugen. Die Lesefassung ist keine kritische Edition.

Vom Lesen zur inneren Sammlung

Wähle einen Vers und lies seine deutsche Bedeutung, bevor du dich seinem Klang zuwendest. Ein göttlicher Name kann zum Anker der Aufmerksamkeit werden. Die Verbindung von Bhakti, Japa und stillem Verweilen ist eine heutige Praxisanregung; die traditionelle Prabandham-Rezitation hat ihre eigenen Formen. Weitere Anregungen bieten Yoga und Meditation.

Ramanuja – Philosoph und Heiliger

Das Video ergänzt die Lektüre; es ist keine vollständige Rezitation des Prabandham.

Meditation

01.11.2026 - 08.11.2026 Meditationskursleiter Ausbildung Teil 1

Erfahre in dieser Ausbildung die Tiefen der Meditation. Meditation ist neben Yoga die wichtigste Übung aller spirituellen Wege. Wer täglich Yoga und M…
Jagadishvari Dörrer
01.11.2026 - 13.11.2026 Meditationskursleiter-Ausbildung Kompakt Teil 1+2

Erfahre in dieser Ausbildung die Tiefen der Meditation. Meditation ist neben Yoga die wichtigste Übung aller spirituellen Wege. Wer täglich Yoga und M…
Jagadishvari Dörrer

Siehe auch

Alvar · Andal · Nammalvar · Tirumangai Alvar · Ramanuja · Tiruppavai · Nachiyar Tirumoli · Tiruvaymoli · Vishnu · Narayana

Alle Ausgaben: Deutsche Übersetzung und Einführung · Römische Umschrift · Tamil 1–2031 · Tamil 2032–4000 und Begleitverse